ஆடி 18 பற்றி ஒரு நண்பர் "வெறும் மூட நம்பிக்கை" என்று கூறி எழுதியிருக்கிறார்.
தலைக் காவேரியில் மழை பொழிவதால் ஏற்படும் வெள்ளம் வழியில் இருக்கும் அணை மற்ற தடைகளைக் கடந்து தமிழ்நாடு வந்து சேர ஆடி 18 ஆகி விடுகிறது.
கோடையில் மண் எடுக்கும் பணிகளால் உடை பட்ட ஆற்றங்கரைகள் வெள்ளத்தால் மேலும் சேதமடைந்து ஊர் நீரால் சூழப்படும் அபாயம் அதிகம். கரையில் உடைப்பு என்றால் அது ஒருவரால் நிவர்த்தி செய்யக்கூடியது அல்ல என்பதைக் கருத்தில் கொண்டு நம் முன்னோர் ஆற்றங்கரை பரிசோதனையை ஒரு ஆண்டு விழாவாகக் கொண்டாடி அதில் வெற்றியும் பெற்றனர்.
இக்காலப் பரிசு வழங்கும் அல்லது பட்டம் வழங்கும் விழாக்களில் காலத்தில் வந்து கலந்து கொள்ளுவது என்பது ஒரு அரிய நிகழ்வு ஆகிவிட்டது. இம்மாதிரி கால தாமதங்கள் ஊரையும் நாட்டையும் சேதப் படுத்திவிடும் என்பதால் தான், 'நல்ல நேரம்', முஹூர்த்தம், பூஜை - அதன் பின் விழா என்றெல்லாம் ஏற்பட்டன. கோவில்களுக்கோ அல்லது இம்மாதிரி ஊர் கூடி தேர் இழுக்கும் விழாக்களுக்கோ போகாதவர்கள் அந்த நேரத்தை எப்படி செலவிடுகிறீர்கள் என்று சொல்லுங்களேன்.
இப்படி வந்து குழுமும் கூட்டத்துக்கு உணவு? அதற்கு என்றே வெகு நாட்கள் வரை கெடாது இருக்கும் வகைப்பட்ட உணவுகளையும், வத்தல், வறுவல், பணியாரங்களையும் தயார் செய்து எடுத்து செல்வது எந்த விதத்தில் மூட நம்பிக்கை?
எண்ணிப் பார்க்கையில் --
பதிலளிநீக்குஅரசமரத்தடிப் பிள்ளையார் கூட -
பூகம்பம் வருமா என்பதைப் பார்க்க
ஏற்படுத்தப் பட்ட ஒரு மணல்
குவியல் தானோ என்று தோன்றுகிறது.
அரச மரம்தான் அதிக ஆழம் வேர் ஊன்றாத
மரம் என்றும், பூகம்ப காலங்களில் அம்மரந்தான்
சுலபமாக விழும் என்றும் கூறுகிறார்களே !!
:மலைக் கோட்டை மம்புட்டியான்:
நம் ஊர் திருவிழாக்கள் பற்றி இரண்டு விஷயங்கள் சொல்லலாம்.
பதிலளிநீக்குஅவற்றில் எதாவது ஒரு விஞான பூர்வமான காரணம் இருக்கும்.
ஆனால், அதை ஒரு மத நம்பிக்கை சார்ந்த வழக்கமாக சொல்லியிருப்பார்கள் . (அப்படி சொன்னால் அந்தக் காலத்தில் தவறாமல் பின்பற்றும் வழக்கம் இருந்திருக்கலாம்.)
மேலும், ஆடிப்பெருக்கு போன்றவை மக்கள் சமூகம் சேர்ந்து கொண்டாடும் விழாக்கள். தனி மனித இறை வழிபாடு போன்றதன்று.
காலப் போக்கில் அடியில் இருக்கும் காரணத்தை விட்டு, மதம் சார்ந்த குணம் ஓங்கி இருக்கும் நிலை வந்திருக்கலாம்.
பகுத்தறிவு வாதிகளுக்கு தீனி
ஆடிப் பெருக்கு -
பதிலளிநீக்குஆற்றோரப் பெரும் கூட்டம்,
ஒரு சுயம்வர முயற்சியாகவும்
இருந்திருக்கலாமோ?
வயதானவர்கள் வாயை (எட்ட நின்று)
கிண்டினால் - ஏதேனும் கிடைக்கலாம்!