சனி, 15 ஆகஸ்ட், 2009

இன்னும் கொஞ்சம் ஆவி

இறந்தவர்களுடன் தொடர்பு கொள்ள எப்போது முயல்கிறோம்? சாவைப் பற்றி பயமோ அல்லது அதற்குப் பின் என்ன நடக்கும் என்ற ஆர்வமோ வரும் போதுதான் நமக்கு இந்த சந்தேகங்கள் வருகின்றன. சாகும்போது என்ன நடக்கிறது, நாம் வேறு ஒரு உலகம் செல்கிறோமா, அங்கு எப்படி இருக்கும், பயமானதா அல்லது கவலை இல்லாத சுகமானதா என்ற கேள்விகள் மனதை அரிப்பதாலேயே இந்த வகை ஆர்வங்கள் வருகின்றன.
இறந்தவர்களுடன் பேச ஓஜோ போர்ட் ஒரு வகை என்றால் இன்னொருவரை medium ஆக வைத்து இறந்தவர்களுடன் பேசுவது இன்னொரு முறை. மூன்றாவது முறையும் உண்டு. நாமே அந்த நிலைக்கு நம்மை உயர்த்திக் கொள்ளுதல். பூனைக் கண் உள்ளவர்களுடன் ஆவிகள் எளிதாக தொடர்பு கொள்ளும் என்பது போல வேறு சில தகுதிகளும் உள்ள சிலர் medium ஆக இருந்து நம் சார்பில் நம் உறவினர்களுடன் ஒரு agent போல பேசி பதில் தருவார்கள். இவை சில சமயம் எழுத்து மூலத்தில் எழுதியும் தருவார்கள்.
நாம் அந்த நிலைக்கு உயர்த்திக் கொள்ளுதல் என்பது சற்று சிக்கலான விஷயம். நாம் பேசுவது என்பது ஒரு சக்தியாக எடுத்துக் கொண்டு சத்த அலைகள் பயணம் செய்வதாக வைத்துக் கொண்டால் நம் எண்ணங்களும் ஒரு அலையாக மாறி காற்றில் பயணிக்கின்றன. நாம் விழிப்பு நிலையில் இருக்கும்போது உள்ள அதிர்வலை வரிசை வேறு.... கனவுலகில் இருக்கும்போது உள்ள அதிர்வலை வரிசை வேறு.... இந்த அதிர்வலை வரிசைகள் நீத்தார்கள் அதிர்வலை வரிசையுடன் ஒத்துப் போகும் போது நாம் அவர்கள் பேசுவதைக் கேட்க முடியும் என்பது சித்தாந்தம்.
நாம் தொடர்பு கிடைக்கும்வரை email அனுப்புவது போல அவர்களிடம் மனதிற்குள் இடைவிடாமல் கேள்விகள் கேட்டு அனுப்பிக் கொண்டே இருக்க வேண்டுமாம்.
medium ஆக இருப்பாவர்கள் யார் வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் தொடர்பு கொள்வது என்பது சிரமம். இறந்தவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களாக இருந்தால் தொடர்பு கிடைப்பது எளிது. அப்போது அந்த medium களிடம் இறந்தவர்களது மேனரிசங்கள் ஒட்டிக் கொண்டு அவர்களது செய்கையிலே வந்துள்ள நபர் தன் இறந்த உறவினரை அடையாளம் கண்டு கொள்வாராம்.
இதெல்லாம் நடப்பது மற்றும் சொல்லக் கேள்விதான்....எந்த அளவு நிஜம்? யாருக்குத் தெரியும்?

3 கருத்துகள்:

  1. உங்கள் இமெயில் அல்லது ATM password-ஐ எந்த ஜோசியராவது சரியாக சொல்லியிருக்கிறார்களா?

    பதிலளிநீக்கு
  2. தொடர்ந்து email அனுப்பினால் ஆவி எப்போ log in பண்ணுதோ அப்போதானே பார்க்கும்? அது என்ன net work வச்சிருக்கும்?

    பதிலளிநீக்கு
  3. அப்போ - நம் மக்கள்,
    வெள்ளாவி, இட்லி ஆவி -
    என்றெல்லாம்,
    நீராவியின் சக்தியை,
    ஜேம்ஸ் வாட்டுக்கு முன்பே
    கண்டறிந்திருக்கிறார்கள் என்று
    சொல்லுங்கள்!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!