ஒரு அம்மா அவருடைய உடன் பிறவா சகோ வுடன் காரம்போர்டு ஆடிகிட்டு இருக்கார். அப்பப்போ ஹாலுக்குப் போயிட்டு வந்துகிட்டு இருக்காரு.
ஒரு ஆட்டம் ஆடுவதற்குள் - ஐந்தாறு தடவை போயி போன் பேசிட்டு வராரு ...
சகோ: யாரு - போன்ல?
அ : எல்லாம் நமக்கு கடமைப் பட்டவங்கதான் ..
சகோ: ஏன் அடிக்கடிக் கூப்பிட்டு தொந்தரவு பண்ணறாங்க?
அ: அவங்க தொந்தரவு பண்ணல - நாந்தான் கூப்பிட்டேன்.
சகோ : ஏன்? என்ன?
அ: எனக்கு காரம்போர்டு போர் அடிக்கும் போது - அல்லது இங்கே காயின் பாக்கெட் பண்ணவில்லை என்றால் - போன் செய்து - ஏதாவது ஒரு ஊர் செயலாளரின் - பதவியைப் பறித்துவிடுவேன்.
சகோ: எந்த ஊரு ?
அ: அட - அதைச் சொல்ல மறந்துட்டேனே -- ஏ, பி சி டி -- இருபத்தாறு எழுத்துல - ஏதாவது ஒன்னு சொல்லு.
சகோ: K
அ: ஓகே - கே பார் காஞ்சிபுரம் -- இப்பவே போயி - காஞ்சிபுரம் செயலரை பதவி நீக்கம் செய்யச் சொல்லி வருகிறேன்.
சகோ: பெயர் தெரியுமா?
அ: அதெல்லாம் யாருக்கு வேணும்?
சகோ: இதுக்கு முன்னாடி நாலு தடவை என்ன போன் பண்ணினீங்க?
அ: அது எல்லாம் எந்த ஊரு ன்னு மறந்து போச்சு. நாளக்கி பேப்பர் பாத்தாதான் தெரியும்.
சகோ: சரி அவங்க பதவிகளை யாருக்குத் தரப் போறீங்க?
அ: அதை எல்லாம் உங்க சொந்தக் காரங்க பாத்துப் பாங்க ..
அடேடே....உங்க பேரும் சேகரா...
பதிலளிநீக்குநல்ல இருக்குகிறகு... இருக்கலாம்
பதிலளிநீக்குஅட ! அரசியல் கூட உண்டா ?
பதிலளிநீக்குஆனாலும் ரொம்பதான் கிண்டல் பண்ணுறீக! ஆட்டோ சத்தம் கேட்டால் உஷாரா இருங்க.
::ஆட்டோ சங்கர்::
sundar said...
பதிலளிநீக்குநல்ல இருக்குகிறகு... இருக்கலாம்
எது நல்லா இருக்கு? எது இருக்கலாம்?