வாஸ்து நிபுணர் (என்று சொல்லிக் கொள்பவர்) ஒருவர் என்னோடு சுமார் 9 ஆண்டுகளுக்கு முன் - நான் பயணம் செய்யும் அலுவலகப் பேருந்தில் என்னிடம் பேசிக்கொண்டு வந்தார்.
நி: உங்க வீட்டை வந்து நான் நேற்று பார்த்தேனே - உடனேயே உங்கள் கஷ்டத்துக்கு எல்லாம் என்ன காரணம்னு தெரிஞ்சிக்கிட்டேன்.
நான்: எனக்கு ஒரு கஷ்டமும் இல்லையே!
நி: அது சரி - நீங்கள் அப்படி நினைக்கலாம்; உங்களுக்கு வரவேண்டிய பிரமோஷன் இன்னும் வராமல் இருக்குமே?
நான் : இல்லை - ஆக்சுவலா, எனக்கு இந்த வருட ஆரம்பத்திலேயே - பிரமோஷன் தருகிறேன் என்றார்கள் - நாந்தான் - வேண்டாம், டிபார்ட்மென்டில் இருக்கும் சீனியர்களுக்கு முதலில் கொடுங்கள் என்று சொல்லிவிட்டேன்.
நி: உங்க பசங்க எல்லாம் ஸ்கூல்ல நிறைய பிரச்னைகள் வந்திருக்குமே!
நான் : இல்லையே! குழந்தைகள் எப்பொழுதும் போல் முதல் ரேங்க் வாங்கிகிட்டு இருக்காங்க!
நி : ஆனா - ரொம்பக் கஷ்டப் படுவாங்களே?
நான் : ஆமாம்!
நி: ஹாங், அதைத்தான் சொன்னேன்! உங்க குழந்தைங்க கஷ்டப் படாம இருக்கணும்னா .....
நான் : சார் நான் சொன்னது - என் குழந்தைங்களோட கஷ்டத்தை இல்லை; அவங்களோட படிக்கிற மற்ற குழந்தைகள் - இவங்களோட போட்டி போட - படற கஷ்டத்தைதான்!
நி: நான் என்ன சொல்றேன்னா - நீங்க உங்க வீட்டின் அமைப்பைக் கொஞ்சம் மாத்தி கட்டினா ....
நான் : அதுக்கு நான் ஏற்கெனவே ஒரு என்ஜினீயர் கிட்ட சொல்லி இருக்கேன் - அவர் கொடுத்த கொடேஷன் சரியா என்று தெரிஞ்சிக்கத்தான் உங்களை நேத்திக்கு வீட்டுக்குக் கூப்பிட்டேன்!
நி: அப்படியா? அவர் என்ன கேட்டார், என்னென்ன மாற்றம் செய்யனும்னார்?
நான் : 5 மாற்றங்கள் சொன்னார்; 10 லட்சம் கேட்டார்.
நி : சார் - அதுல 3 மாற்றங்கள் போதும்; 3 லட்சம் போதும்.
நான் : ஆஹா - இன்னொரு எஞ்சினியர் - அதே தான் சொன்னார்; அவர் ஆனா இரண்டரை லட்சம் தான் கேட்டார்.
நி : சார் நான் கூட உங்களுக்காக அதே இரண்டரை ...
நான் : அடடா - நான் என் நண்பர் வீரராகவனிடம் ஏற்கெனவே இன்று காலை இரண்டு லட்சத்துக்கு காண்ட்ராக்ட் கொடுத்துட்டேனே!
குழந்தை கீழே விழுந்து விட்டது. "அச்சு அச்சு " என்று தரையை அடித்து குழந்தையை சமாதானப் படுத்துவது உண்டு தானே!
பதிலளிநீக்குவாஸ்து உண்மையில் அக்கம் பக்கத்துடன் ஒத்துப் போதல் எப்படி என்பதைத் தான் சுற்றி வளைத்து சொல்கிறது. உதாரணத்துக்கு வாஸ்து புருஷன் clock work மாதிரி 45 நாட்களுக்கு ஒரு முறை புரண்டு படுப்பார். ஊரில் இருக்கும் அனைவருமே கடைகால் எடுத்தல், வாசல் வைத்தல் ஆகியவைகளை ஒரே முஹூர்த்தத்தில் வைத்துக்கொண்டால், ஊர் இரண்டென்ன நாலு கூட ஆகும். பரிகாரங்களும் அத்தகையவே!
interesting....
பதிலளிநீக்கு