திங்கள், 3 ஆகஸ்ட், 2009

நான் ஒரு .....

neenga muttaalaa, koomutttayaa, illa rendum serndha maangaayaa? 
நான் கண்ணாடி. என்னை எதுவாகப் பார்க்கிறீர்களோ, அதுவாக நீங்கள் உள்ளீர்கள்!

3 கருத்துகள்:

  1. முல்லா தன் நண்பர்களுடன் ஊருக்குள் வரும் வழியில் உள்ள மதகில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்.
    [அந்தக் காலத்திலும் மதகுகள் பாலங்கள் இவற்றிற்கு இப்பொழுது போல்தான் உபயோகம்! ஆனால் பெரியவர்களும்!]
    அவ்வழியே வந்த ஒருவர் உங்கள் ஊரில் மக்கள் எப்படி என்று வினவினார். முல்லா "உங்கள் ஊரில் எப்படி?" என்று கேட்க,
    வந்தவர் "மிகவும் நல்லவர்கள். வழிப் போக்கர்களுக்கு எல்லா உபசாரமும் செய்வர் " என்றார். முல்லா "எங்கள் ஊரிலும் அப்படித்தான்.
    போய்ப் பாருங்கள்" என்றார்.

    சற்று நேரம் கழித்து இன்னொருவர் வந்து மீண்டும் அதே மாதிரி கேட்க, முல்லா அதே கேள்வியை அவரிடமும் கேட்டார். வந்தவர்,
    " அதை ஏன் கேட்கிறீர்கள்! கொஞ்சம் அசந்தால் சட்டையைக்கூட கழட்டிக் கொண்டு விடுவர்" என்றதும், முல்லா "சரியாகச் சொன்னீர்கள்.
    எங்கள் ஊர் உங்கள் ஊருக்கு சற்றும் குறைவில்லை. எல்லாப் பொருள்களையும் கவனமாகப் பாதுகாத்து கொள்ளுங்கள். " என்றார்.

    கூட இருந்த நண்பர்கள் "என்னய்யா இப்படி சொல்லி விட்டீர்கள்?" என்றதும், "நாம் எப்படியோ அப்படித்தான் உலகமும் இருக்கும் " என்றார்!

    பதிலளிநீக்கு
  2. நெத்தியடி.

    இதுவரை வந்த பதில்கள் ஒரு seriousness இல்லாமல் jovial mood லயோ Escapism mode லயோ இருக்கும். முதல் முறை சரியான பதில்.

    பதிலளிநீக்கு
  3. மார்க் ட்வைன் என்ற அமெரிக்க நகைச்சுவை எழுத்தாளரிடம் ஒரு நிருபர் கேட்டார்:
    "ஷேக்ஸ்பியர் எழுதியதாகச் சொல்லப் படும் எல்லா நாடகங்களும் அவர் எழுதியவை தான அல்லது வேறு யாராவது..."

    "நான் சொர்கத்துக்குப் போகும்போது அவரையே விசாரிப்பதாக இருக்கிறேன்."

    "ஒரு வேளை ஷேக்ஸ்பியர் சொர்க்கத்தில் இல்லை என்றால்...? "

    " அப்போது நீங்கள் விசாரித்துத் தெரிந்துகொள்ளுங்கள்."

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!