சனி, 29 ஆகஸ்ட், 2009

அம்மாவும் நீயே, அப்பாவும் நீயே ... ஐம்பது கண்டாயே !

மல்ஹாசன் தன் ஐம்பதாவது ஆண்டை திரையுலகில் கொண்டாடுகிறார். இது ஒரு சாதனைதான். தமிழ்த் திரையுலகில் சிவாஜி கணேசனுக்குப் பிறகு நடிப்பில் கமல்தான் என்பார்கள்.
எந்த ஒரு மனிதனிடத்திலும் மிகப் பெரிய chef யார் என்று கேட்டால் நிச்சயமாய் அவரவர்கள் தங்கள் அம்மாதான் என்பார்கள். நாம் சந்திக்கும் முதல் சமையல் அம்மாவின் சமையல். First is the best always. அது போல நம்மை பாதித்த முதல் நடிகர், பாடகர், பாட்டு, படம்... Generally everything நம் ஆதர்சமாவது இயல்பு. எனவே அவரவர் விருப்பம் எல்லாவற்றிலும் மாறுபடும்.
Technology வசதி இல்லாத நாட்களிலேயே தன் நடிப்பால் மக்களைக் கவர்ந்தவர் சிவாஜி. அதையே Over acting என்று விமர்சனம் செய்பவரும் உண்டு. அது சரி; ஒரு நாணயத்துக்கு இரண்டு பக்கம் உண்டுதானே...!
எனவே, technology வசதிகள் கூடிய இந்த நாளில் கமல் இன்னும் நன்றாகவே செய்கிறார் என்று சொல்லலாம். சிவாஜிக்கு நடிப்பு மட்டும் தெரியும். கமலுக்கு தெரியாத துறையே இல்லை.
இந்தப் பதிவின் நோக்கம் கமல்தான் Best மிச்சப் பேர் எல்லாம் Waste என்று சொல்வது அல்ல. ஏனெனில், ஒருவரை உயர்த்திச் சொல்லும்போது அதே துறையிலுள்ள அடுத்தவரை ஒப்பிட்டுப் பார்ப்பது உலக இயல்பாகி விட்டது.
அப்படி இல்லாமல் ஐம்பது ஆண்டுகள் கலையுலகில் பூர்த்தி செய்யும் ஒரு கலைஞனை, 'ஆல் தி பெஸ்ட்' என்று Wish செய்யும் பதிவு இது. அவர் படங்களில் (அவரவர் ரசனைக்கேற்ப) குப்பைகளும் உண்டு, மாணிக்கங்களும் உண்டு.
ராஜபார்வை, சலங்கை ஒலி, நாயகன் போன்றவை ரத்தினங்கள். குப்பை பற்றி நீங்களே கோடிட்டு - பூர்த்தி செய்து கொள்ளுங்கள்! அன்பே சிவம் படத்தில் அவர் இறுதியாக சிரிப்புடன் சொல்லும் "பொழைச்சுப் போங்க" ஒரு 'நச்". :: ஸ்ரீராம் ::
ஐம்பது ஆண்டுகள் - ஒரு துறையில் அயராமல் ஓ(ட்)டிக் கொண்டிருப்பதே ஒரு சாதனைதான் - அதுவும் முன்னணியில். அதிலும் கமலின் தொப்பியில் எவ்வளவோ இறகுகள் -- !
மேலும் பல வண்ண மயமான இறகுகள் அவர் பெற "எங்கள்" வாழ்த்துக்கள்.

4 கருத்துகள்:

  1. குழுவில் இத்தனை நாளும் டுவெல்த் மேனாக இருந்த ஸ்ரீராம் பேட்டிங்கிற்கு வந்திருப்பதில் சந்தோஷம். நின்னு விளையாடராரா, ஏடாகூடமாக ஆடி கேட்ச் குடுக்கராரா, கிளீன் போல்ட் ஆகிறாரா என்று பார்க்க வேண்டும். எங்கள் ஆசை அவர் செஞ்சுரி அடிக்க வேண்டும் என்பதே.

    முதல் ஓவரில் ரன் எடுக்காவிட்டாலும் நல்ல ஸ்ட்ரோக்குகள் ஆடப்போகிற அறிகுறிகள் தெரிகின்றன. வாழ்த்துக்கள்.

    http://kgjawarlal.wordpress.com

    பதிலளிநீக்கு
  2. நன்றிஜவர்லால்! இதைப் பாராட்டகவே எடுத்துக் கொள்கிறேன்!

    பதிலளிநீக்கு
  3. அதானே ! கட்டுரை மடிசஞ்சியாக இல்லாமல் இருக்குதே - என்று நினைத்தேன் - வயதானவர்கள் உறங்கிக் கொண்டிருக்கும்போது - வாலிபர் எழுதியிருப்பார் என்று!
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  4. சிவாஜியை என்னைப் போன்றவர்கள் ரசிக்க வைத்தது கமலகாசன் தான். கமலகாசனின் திறமைப் பரப்பைப் பற்றி நீங்கள் சொல்லியிருப்பது உண்மை. அதனால் தானோ என்னவோ, இது தான் கமலகாசன் என்று நிறுத்திச் சொல்லும்படி எதுவும் தோன்றவில்லை. கமலகாசன் படங்களில் எனக்குப் பிடித்தவை பதினாறு வயதினிலே, நிழல் நிஜமாகிறது, பாக்யராஜ் இயக்கிய படம் ஒன்று. அவருடைய படங்கள் பெரும்பாலும் இறக்குமதி - அதை வெளிப்படையாகச் சொல்லாமல் தன்னுடைய சொந்தக்கதை (அன்பே சிவம்) என்பது உறுத்துகிறது. எப்படி இருந்தாலும் தமிழ்ச் சினிமாவின் தூண்களில் கமலகாசன் ஒருவர். சினிமாவில் ஐம்பது வருடங்களா? வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!