ஒவ்வொரு குடும்பத்திலும் எவ்வளவோ நிகழ்ச்சிகள். நூற்றுக்கணக்கான உறவினர்களும் நண்பர்களும் கூடுகின்றனர். " ஆசீர்வாதம் தர்றவா எல்லாம் தரலாம் " என்று கூவி அழைக்கிறார் புரோகிதர். இதற்குத் தயாராக வந்தவர்கள் அனைவரும் சின்னப் பொட்டலம், பெரிய பாக்கேஜ் என்று எடுத்துக் கொண்டு கிளம்புகிறோம். நடு நடுவே அழைப்பு வந்த கவர்களும், வாழை தோரணம் அச்சிட்ட மெல்லிசு கவர்களும் டி லக்ஸ் கிப்ட் என்வலப்களும் உள்ளே கரன்சி நோட்டுகளை அடக்கியவாறு இப்படியாக பலப் பல.
பரிசை தேர்வு செய்வது ஒரு கலை. நல்ல ஒரு பரிசைப் பார்த்தபின்பு "அட, நாம் கூட இந்த மாதிரி ஏதாவது வாங்கி இருக்கலாமே " என்று தோன்றும். ஆனால் வாங்கும் போது இப்படியான புத்திசாலித் தனம் நம்மிடையே அதாவது என்னிடம் இல்லவே இல்லை.
எல்லாரையும் போலவே நானும் பலப் பல முறை கண்ணாடி பழரச செட், எலேக்ட்ரோனிக் கடிகாரம், சுவாமி படம், இப்படியாக வாங்கிக் கொடுத்து பத்தோடு பதினொன்று அல்ல ஐம்பதோடு ஐம்பத் தொன்றாக விளங்கி இருக்கிறேன். எனது வீட்டு விசேஷங்களுக்கு மிக அபூர்வமான விஷயங்களை பரிசளித்தவர்களது வல்லமை கண்டு வியந்திருக்கிறேன்.
எல்லாவற்றையும் சிந்தித்துப் பார்க்கும் போது அன்பளிப்பாக பெறுபவர் விரும்பியபடி செலவழிக்க ஒரு தொகை தருவதே மேலோ என்று தோன்றுகிறது.
இதை மேலும் கவர்ச்சிகரமாகச் செய்ய ஒரு யோசனை. வெறும் கவரில் நம் பெயர் குறிப்பிடாமல் விரும்பிய தொகையைப் போட்டுத் தரலாமே. இதனால் எல்லாருக்கும் நிம்மதி அல்லவா? இது பற்றி நீங்கள் என்ன சொல்வீர்கள்?
பெருந்தொகை கொடுப்பவர்களது சந்தோஷத்தைக் கேடுக்கிறீர்களே.
பதிலளிநீக்குஇதை நான் முன்பே சொல்லி இருந்தால் மன்னிக்கவும்.
பதிலளிநீக்குவெளி நாடுகளில் ஒரு வழக்கம். ஒரு கல்யாணம் என்று வந்தால் தம்பதிகளுக்கு என்னென்ன தேவைப் படுகிறது என்று ஒரு பட்டியல் வைத்திருப்பார்களாம். அதில் ஒவ்வொன்றாக பார்க்கும் ஒவ்வொருவரும் அடித்து விட்டு தாம் அடித்ததை வாங்கி பரிசளிப்பர்கலாம். இது ஒரு நல்ல வழக்கம் தானே! ஆனாலும் நம் ஊர் குறும்பர்கள் இதில் விலை அதிகமான பொருள்களை அடித்து விட்டு அதை வாங்கித் தராமல் வேடிக்கை பார்த்து மகிழ்வார்கள் என்பதும் உண்மைதான். எனவே அடித்து விட்டு அதை வாங்க இருப்பவர் தம் பெயரை எழுத வேண்டி வரும். அப்போதும் என்பெயரை மாருதி காருக்கு எதிராக எழுதி வைக்க ஒரு எதிரி தோன்ற மாட்டார் என்பது என்ன நிச்சயம்?
I had many times thought on the subject of 'gifts'.
பதிலளிநீக்கு1) Those who are blessed with all things and have the purchasing power - normally do not expect anything from others. But others do not leave them at it.
2) Those who do not have anything - feel shy to ask - they do not get anything from others.
3) Many times - for the celebrations in my kingdom, i had thought of approaching an(y) orphanage around my residence - and asking them, just what are their requirements, listing that in the invitation, and asking the presenters, to buy anything from the list and etch / print on the gift wrap -- presented by " ....." (your name) -- to "......." orphanage -- on the occasion of the marriage of 'so&so' with 'so&so -- or the case may be...
4)But this has not been implemented so far, since i had to abide by some rules - laid down by sambandhis and or the others involved in the celebration.
5) I may get an opportunity to implement this in 2011. I have to see.
we go be tadition normally. inasmuch as gifts are considered as deferred loan we have very little choice in the matter.giving a gift desired by the reciient can at best be possible for the very close and dear one only.Others may just give cash/cheque as they will be evaluated on a reciprocal basis and if your gift is short of their expectations you are likely to be ignored in future invitation !
பதிலளிநீக்குஅறந்தாங்கி பட்டுக்கோட்டையில் வேலை செய்த என் நண்பர் ஒரு அழைப்பிதழைக் காட்டினார். அதில் கடைசியாக ஒரு வரி... "நான் பத்திரிகை கொடுத்துள்ள அனைவருக்கும் இருமுறைக்கும் மேலாக 'மொய்' எழுதி உள்ளேன் என்பது குறிப்பிடத் தக்கது"
பதிலளிநீக்குஇந்த நிலையில் பெயர் இல்லாமல் கவர் தந்தால் கணக்கில் வராவிட்டால் கஷ்டம் இல்லையா..
ery pitiable condition.he has become lot poorer by writting moippanam.exceptional cases has to be considered on merit.giving cash in the same invitation cover having our name and address may be one solution
பதிலளிநீக்கு