வியாழன், 31 டிசம்பர், 2009

எங்கள் வாழ்த்துக்கள்




புதிய ஆண்டு(கள்)  ஜனவரி ஒன்று முதல் ஏப்ரல் இறுதிவரை, மொழிவாரியாக, மாகாண வாரியாக - வெவ்வேறு நாடுகளில் - பிறந்துகொண்டே இருக்கும். ஆனால் என்ன - அவை யாவுமே ஓராண்டுதான் உயிர் வாழும். நாளை பிறக்கும் ஆண்டில் மட்டும் அல்ல, எப்பொழுதுமே  பிளாகர்களுக்கு வேண்டியவை என்ன என்று பார்த்தால் ---

பொறுமை
ஆர்வம்
உற்சாகம்
புதிய கற்பனைகள்
அதிக வால்பிடிகள் (பாலோயர்ஸ் - அதைத்தான் அப்பிடி சொல்றேன்!)
அதிக தமிழ் வாக்குகள்.
சக பிளாகர்களுக்கு மதிப்பு கொடுத்து - சகிப்புத்தன்மையுடன் கூடிய புரிந்துணர்வுகள்...
பட்டியல் நீளலாம் ---
எல்லோரும் நல்லவரே - எல்லோரும் வாழ்க - எல்லோரும் வளர்க 
என்றும் அன்புடன் 
எங்கள் Blog   

செவ்வாய், 29 டிசம்பர், 2009

Promising Talent.



இந்த இசை விழாவில் ஒரு புது முகம் கச்சேரி செய்து கவர்ந்தார்.  பார்கவி கணேஷ் என்ற இந்த சிறுமிக்கு மிஞ்சிப் போனால் 14 வயது இருக்குமோ என்னவோ!  ஆனால் நல்ல குரல் வளம். நல்ல பாடாந்திரம். காலப் பிரமாணம். கற்பனை.  என்ன பாடினார் என்று சொல்லி உங்களை அலுக்க வைக்க மாட்டேன்.  அனாலும் சாவேரி ஹேமவதி போன்ற ரகங்களை சிறப்பாகப் பாடினார் என்று சொல்லியே ஆகவேண்டும்.  அவளது சகோதரன்  வயலின் வாசித்து களை கட்டச் செய்தான்.


கொஞ்சம் மூக்கால் பாடுவதை சரி செய்து கொள்ளலாம்.


அமெரிக்காவில் இருந்து கொண்டு சங்கீதம் பயின்று கச்சேரிக்குப் பின் அமெரிக்காவுக்கு போவதாக பிற்பாடு தெரிந்து கொண்டேன்.  வெளிநாட்டில் இருந்து கொண்டு இவ்வளவு நேர்த்தியாக இசை பயின்ற இந்த பாடகிக்கு நம் பாராட்டுகள். 
(Interested people who want to hear one hour concert of Selvi Bhargavi Ganesh, may please send their mail id to engalblog@gmail.com to get the MP3 file from us.)

திங்கள், 28 டிசம்பர், 2009

ஆவலைத் தூண்டும் புதிர்க்கதை பாகம் 2


சிறந்த பக்தர் சிறந்த குருவிடம் கேட்டது:

"சாமி, இப்படியே போய்க்கிட்டு இருந்தா இந்த நாட்டுக்கு விமோசனமே கிடையாதா? சாமி இதைப் பாத்துக்கிட்டு சும்மா இருக்கிறாரே அது நியாயமா? நீங்களாவது அவருக்கு எடுத்துச் சொல்லக் கூடாதா?"
குரு புன்னகை செய்து தலையை அனுதாபமாக ஆட்டினார். " சாமிக்கு எல்லாம் தெரிந்துதான் இருக்கும். அததுக்கு தகுந்த படி காலக் கிரமத்தில் நடக்கும். "

" சாமி, நான் சாமி என்று ஆண்டவனை சொல்லலை. உங்களைத் தான் சொன்னேன். நீங்க இதை எல்லாம் கண்டுக்காமே இருந்தா எப்பிடி? நீங்களும் இதில் தலையிட்டா நாமே திசை மாறிடுவோம்னு பயப்படறீங்களா? "
குருவின் புன்னகை இடிச் சிரிப்பாக மாறியது. " ஐயா நீங்கள் நினைப்பது போல் நான் பெரிய மந்திரவாதி இல்லை. வேண்டுமானால் உங்களுக்காக ஆண்டவனிடம் பிரார்த்தனை செய்கிறேன். என்ன வேண்டும் என்று திட்டமாகச் சொல்லுங்கள். "
சாமியார் வேண்டிக் கொண்டால் ஆண்டவன் செய்து விடுவார் என்று பக்தர் திடமாக நம்பியதால் தீவிர யோசனை செய்யத் தொடங்கினார். இரண்டு மூன்று விஷயங்கள் வேண்டிக் கொள்ளலாம். ஒன்று நாயும் நரியும் நட்பாகி விடவேண்டும். இரண்டு நாய் அல்லது நரி அல்லது இரண்டுமே நல்லவர்களாகி விடவேண்டும். -- இது சாத்தியமா என்ற சந்தேகம் அப்போதே அவருக்கு வந்து விட்டது. ஆண்டவனே ஆனாலும் இதுங்களை நல்லதா மாத்தறதாவது என்ற அவநம்பிக்கை. -- மூன்றாவதாக நாயையும் நரியையும் ஒருசேர ஒழித்துக் கட்டி விடவேண்டும்.
இதில் எது சரியான தீர்ப்பு? பக்தர் யோசனை தீவிரமாகியது.
நாமும் யோசிப்போமே இதில் என்ன கேட்டால் நல்லது? உங்கள் எண்ணம் என்ன?

ஞாயிறு, 27 டிசம்பர், 2009

இன்ஸ்டன்ட் பூஜை





நேற்று காலையில் மாமா ஒரு கையில் காபியும் இன்னொரு கையில் பேப்பருமாக கையை ஆட்டி ஆட்டி என்னவோ சொல்லிக் கொண்டிருந்த பொழுது, அவர் கையில் இருந்த பேப்பரைப் படித்தவன் குழப்பத்தில் ஆழ்ந்தேன்.  "கண நேரத்தில் பூஜை"  என்று போட்டிருந்தது.  தினமலர் - ஆன்மிக மலர் தான் சாதாரணமாக சனிக் கிழமைகளில் அவர் விரும்பிப் படிப்பார்.  ஒரு முறை அது நம் வீட்டில் வழக்கமாக வாங்கும் தினசரி தானே என்று பார்த்தேன்.  சரி தான்.  சரி, திடீர் காப்பி, திடீர் டீ, கண நேர இடியாப்பம் வரிசையின் தாக்கம் இப்படி பக்தி மார்கத்திலும் புகுந்ததோ என்று பேப்பரை வாங்கிப் பார்த்தேன் - பார்த்தவன் சிரித்தேன். நீங்களும் தான் பாருங்களேன்:

ஞாயிறு 24 -- வல்லுநர் ரெடி; நீங்க ரெடியா?

ரி விசிட் ஞாயிறு 23 -- உளவியல் வல்லுநர் ரெடி; நீங்க ரெடியா?



 divya said...

I could see the face of JESUS.

 சி. கருணாகரசு said...

கார்டூனில் பேய் தெரியுதுங்க
Tunnelக்குள் போகும் காரின் பின்புறம். இரண்டு hearts on either side. Trunkலிருந்து வெளி வந்து பறந்து கொண்டிருக்கும் white robe? Just married couple?

Blogger ஹேமா said...

இருவர் கை கோர்த்த நடனம் !

அப்பாதுரை said...

ஏசு தாகூர் எல்லாம் எப்படிப் பாத்தாலும் தெரியலிங்களே..
ஏசு தெரியுதா காந்தி தெரியுதானு நானும் தினம் வந்து பார்க்கிறேன் - காரை விட்டா ஒண்ணும் தெரியலியே. இன்னிக்கு என்னவோ உருளைக்கிழங்கு தெரியுது. நாளைக்கு வந்து பார்க்கிறேன். தாகூர் தெரியுதா பாப்போம்.

Blogger அப்பாதுரை said...

பெயிந்ட் உதிர்ந்த ஆணி அடிச்ச சுவர் தெரியுது... இந்த ஏசு தாகூர் காணோமே... எங்கே தெரியுது?
பெயிந்ட் உதிர்ந்த ஆணி அடிச்ச சுவர் தெரியுது... இந்த ஏசு தாகூர் காணோமே... எங்கேயோ தெரியுதுனு சொன்னாங்களே?
(தமிழ் வாத்தியாரா இருந்தா 'மூடிக்க'னுவாரு - எங்க என்ன சொல்லுவாங்களோ?)

 ஹேமா துவாரகநாத் said...

இந்த வகை ஆய்வு உளவியலில் சகஜம் (பெரடொலியா). சித்திரங்கள், படங்கள், வாக்கியங்கள், மையைக் கொட்டிப் பரப்பிய உருக்கள் (ரொர்ஷேக் தேர்வு)... இவற்றைப் பார்த்தோ படித்தோ கருத்து சொன்னவரின் மனநிலை பற்றி அறிந்து கொள்ள முடியும் என்று உளவியல் நம்புகிறது. அப்பாதுரை, ஹேமா, divya, சி. கருணாகரசு, ... நீங்கள் சொல்வதை வைத்து உங்கள் மனநிலையைப் பற்றி சில கருத்துக்களைச் சொல்ல முடியும் - நீங்கள் விரும்பினால் :)

எங்கள் said...

வாங்க டாக்டர் வாங்க! உளவியல் உங்க ஏரியா - எங்களுக்குத் தெரிந்ததுதான்.
வாசகர்கள் படம் பார்த்து சொன்ன 'கதை' களுக்கு, நீங்க பலன் சொல்வது எங்கள் எல்லோருக்கும் மிக மிக விருப்பமானதே; பெரிதும் வரவேற்கிறோம். இந்தப் பதிவு (ஒரு வாரப்) பழைய பதிவாகிவிட்டதால், நீங்க குறிப்பிட்டிருக்கும் வாசகர்கள், இந்தப் பதிவுக்கு ரிவிசிட் செய்வார்களா என்பது சந்தேகமாக உள்ளது. எனவே உங்க கருத்தையும், எங்க வரவேற்பையும், புதிய பதிவாக போட்டுவிடுகிறோம். வாசகர்கள், தங்கள் உளவியல் கருத்துக்களை - இங்கே (வெளிப்படையாக) பெறுவதில் ஆட்சேபணை இருந்தால், தங்கள் மெயில் விலாசம் இங்கே பின்னூட்டத்தில் பதிந்துகொண்டு, உளவியல் நிபுணர் ஹேமா துவாரகாநாத் அவர்களின் உளவியல் கருத்துக்களை - தத்தம் உள்-பெட்டியில் வாங்கிக்கொள்வதாக இருந்தாலும் எங்களுக்கு ஒ கே. ( ஹே.து அவர்கள் இயன்றால் - ஒரு நகலை engalblog@gmail.com க்கு அனுப்பி எங்களையும் படத்தில் வைத்துக் கொள்ளலாம். (we mean, she can keep us also in picture !!)

வெள்ளி, 25 டிசம்பர், 2009

ஆவலைத் தூண்டும் புதிர்க் கதை?

 ஒரு ஊரில் நாய்க் கட்சி நரிக் கட்சி என்று இரண்டு அரசியல் கட்சிகள் இருந்தன.  நாய் அல்லது நரி மட்டும் தான் ஆட்சி செய்ய வேண்டும் என்ற அவல நிலை அந்த ஊரில் ஏற்பட்டு விட்டது. காரணம் முன்பு செல்வாக்காக இருந்த மாட்டுக் கட்சி ஒரு மடத் தனம் செய்து தன செல்வாக்கை முற்றிலும் இழந்தது.
 
நாயும் நரியும் சதா சண்டை போட்டுக் கொள்வதிலும் ஒருவரை ஒருவர் குறை சொல்லிக் கொள்வதிலும் காலம் கழித்துக் கொண்டிருந்ததால் நாடு குட்டிச் சுவர் ஆகிக் கொண்டு வந்தது. இப்படி சேற்றை வாரி இரைக்காத நேரங்களில் நாயும் நரியும் தமது செல்வத்தை வளர்த்துக் கொள்வதிலும், கண்டு பிடிக்க முடியாத திருட்டு புரட்டுகளிலும் சுறு சுறுப்பாக ஈடு பட்டிருந்தன.
 
இப்படி இருக்கும் போது ஒரு சிறந்த பக்தர் ஒரு சிறந்த குருவை அணுகினார். அவரிடம் ஒரு அரசியல் கேள்வி மற்றும் கோரிக்கை வைத்தார். 
 
அது என்ன?  நீங்கள் ஊக்குவித்தால் சொல்கிறேன். அதுவரை ஜூட்.  
 

வியாழன், 24 டிசம்பர், 2009

விவேகம் + ஆனந்தம் (அ) கேட்டதும் கிடைத்ததும்'

$$$

When I asked god for strength
He gave me difficult situations to face

When I asked God for brain and brawn
He gave me puzzles to solve

When I asked God for happiness
He showed me some unhappy people

When I asked God for wealth
He showed me how to work hard

When I asked God for favours
He showed me opportunities to work hard

When I asked God for peace
He showed me how to help others

God gave me nothing I wanted
He gave me everything I needed.

***************************

எனக்குச் சில வரங்களை நான்
இறைவனிடம் கேட்டேன் -

எது ஒன்றும் தரவில்லை - வேறு
'இவை உனக்கு' என்றான் -

'வலிமையைத் தா !' வென்று கேட்டதற்கு
'இன்னல்கள் இவை, ஏற்க !' என்று தந்தான்.

'அறிவாற்றல் கொடு' என்று அழுத்திக் கேட்டேன்
'அறியாத புதிர்கள் பல.... விடுவி' என்றான்.

'சந்தோஷம் தா !' என மெல்லக் கேட்டேன்
'சஞ்சலத்து மக்கள் இவர், நீ பார் !' என்றான்.

'நிதிக் குவியல் நிறையத் தா ' தயங்கிக் கேட்டேன்.
நெற்றியின் வியர்வை விழ உழை நீ' என்றான்.

'நல்வளங்கள் பல வேண்டும், அவை தா !' என்றேன்
கடினமாய் உழைப்பதற்குக் காட்டித் தந்தான்.-

'அமைதி மனமேனும் நீ தாயேன்' என்றேன்
'அடித்தட்டில் இவர்கள் பார் ! உதவு' என்றான் -

நான் கேட்டவற்றில் எதையும் அவன் தந்தானில்லை - நான்
கேளாத தேவை பல, எல்லாம் தந்தான்!

பெயரிலா...

பழைய எழுத்தாளர் அவர். விகடன், குமுதம், ராணி, தேன்கூடு போன்ற பத்திரிகைகளில் அவர் எழுதி உள்ளவை வெளி வந்துள்ளது. கம்ப்யூட்டர் பழக்கம் இல்லாதவர்.அவரிடம் நெட்டில் எழுதுவது பற்றி பேசிக் கொண்டிருந்த போது ஆர்வமாகக் கேட்டறிந்தார். நீங்களும் எழுதுங்களேன் என்று கேட்டபோது நிறையத் தயங்கியவர் இப்போது சில எழுதி அனுப்பி உள்ளார். அவர் பெயர் சொல்ல வேண்டாம் பெயர் இல்லாமலேயே வெளியாகட்டும் என்று சொல்லிவிட்டதால் பெயர் சொல்லவில்லை. இந்த Intro கூடக் கொடுக்க வேண்டாம் என்று சொல்லி இருந்தார். இனி அவர்....

"நீ சொல்லும் நெட் பிரதாபங்களைப் பார்த்து எனக்கும் அதற்கு எழுதி அனுப்பும் ஆசை வந்து விட்டது. ஆனால் எழுதுவதுதான் மகா அலுப்பான சமாச்சாரம். இதில் ஒரு 'Guilty" மனப்பான்மை கூட. நிறையப் படிக்கிறேன்...என்னிடம் பொழுதுபோக்குக்கான மின் கருவிகள் - ஒரு ரேடியோ கூட - இல்லாததால் வாசிப்பு என்பது தவிர்க்க முடியாத கட்டாயமாக உள்ளது. என்ன Guilty...? படிப்பது பலவற்றை எல்லோருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டும். அது இல்லாமல் நான் மட்டும் படித்தால் போதாது என்பதே..இதைச் சாதிக்க ஒரே வழி எழுதி அங்கே அனுப்பி விடுவதுதான்...உனக்குதான் Typing அதிகமாகும்...நீ மறுக்காதவரை அனுப்புகிறேன்..இதில் நான் அனுசரிக்க முயல்வது குட்டை குட்டையான வாக்கியங்கள்...பப்ளிக் இண்டரெஸ்ட் உள்ளவை மட்டும்...


இவற்றிற்கு வரும் reaction களை எனக்குத் தெரிவி...இதைத் தொடர்ந்து கவனிக்க - படிக்க - அறிய - ஆர்வம் எதிர் முனையில் இருந்தால் விட்டு விட்டு தொடர்கிறேன்... ஆரம்பமாக இத்துடன் எனக்குப் பிடித்த விவேகானந்தர் கவிதையை ஆங்கிலத்தில் அனுப்பி உள்ளேன்...எனக்குப் பிடித்த வகையில் தமிழிலும் எழுதிப் பார்த்துள்ளேன்..."

எனவே அவர் எழுதுபவற்றை அவ்வப்போது இங்கு தர உத்தேசம்

செவ்வாய், 22 டிசம்பர், 2009

வேட்டையாடு விளையாடு...

இரவு பத்தரையை நெருங்கிக் கொண்டிருந்தது.... பாடம் படித்துக் கொண்டிருந்தவன் ஏதோ அசைவை உணர்ந்து 'சட்'டெனத் திரும்பினான்...ஒன்றும் இல்லை என்று தோன்றியது...திரும்பப் புத்தகத்தைப் புரட்டத் திரும்பியவன் மறுபடி உடனே கவனம் கலைந்தான்....

இருக்கிறது...ஏதோ அசைவு தெரிகிறது....வெளிச்சத்திலிருந்து இருட்டைப் பார்ப்பது கஷ்டம்....கண்ணைப் பழக்கப் படுத்திக் கொண்டு பார்க்கும்போது இருட்டில் மின்னிய இரு கண்கள்.....

எழுந்து விட்டான்...

"அப்பா...அப்பா..." அதிக சத்தமில்லாமல் அலறினான்....சின்னவன் பயம் கலந்த ஆர்வத்துடன் பக்கத்தில் வந்து ஒண்டினான்.

அப்பாவும் அருகில் வந்து அதைப் பார்த்து விட, இப்போது அடுத்த கட்ட நடவடிக்கைகள் ஒரு மௌனப் புரிதலில் அரங்கேறத் தொடங்கின...

அடுத்திருந்த அறைக் கதவுகள் அடைக்கப் பட்டன. அதற்குள் மின்னிய கண்களைக் காணமல் தேடினால் ...அதோ.....சோஃபா பின்னால்....சட்டென மறைந்தது.

அதிகம் யோசிக்க நேரமில்லை...

அசைவு அதிகம் காட்டாமல் அப்பா மெல்ல அங்கிருந்த தண்ணீர்க் கேன்களை வரிசையாக இடைவெளி இல்லாமல் அமைத்தார். ஓரளவு இருந்த இடைவெளியில் கேஸ் சிலிண்டர் வைக்கப் பட்டது..

இளையவன் அங்கிருந்த கிரிக்கெட் ஸ்டம்பை கொண்டுவந்து கொடுத்தான். அம்மாவும், பெரியவனும் கட்டில் மேல் உட்கார்ந்து கால் கீழே படாமல் உஷாரானார்கள்.

மீண்டும் தேடினால் பழைய இடத்தில் காணோம். சுற்றுமுற்றும் தேடிய போது டிவிக்குப் பின்னே வால்பாகம் தெரிந்தது. அந்த ஏரியாவை ஒரு ஆட்டு ஆட்டிய உடன் அது நகர்ந்த வேகம் கண்டு அம்மா, பாட்டி, இவன் எல்லோரும் அலற...அப்பா ஒரு கடும் பார்வையால் அவர்களை அடக்கினார். "சத்தம் அதுக்கு கேக்குமாப்பா..." இளையவன். அப்பா பேசும் நிலையில் இல்லை.

இரவு இதை இப்படியே விட்டு விட்டுத் தூங்க முடியுமா என்ன? எங்காவது போய் ஒளிந்து கொண்டால் தேடிக் கண்டுபிடிப்பது கஷ்டம்...கொல்ல முடியுமா என்று தெரியவில்லை....

இப்போது குச்சியால் தட்டிய வேகத்தில் அது வெளியே ஓடிவந்தது...புகுவதற்கு இடமில்லாமல் அப்பாவினால் அமைக்கப் பட்ட வழியில் ஓடி, எதிர்பாராத் திருப்பமாக ஹால் கட்டிலின் கீழே உள்ள அடைசலில் காணாமல் போக...திரும்பவும் ஒரு அவசர வியூகம் போர்க்கால அடிப்படையில் அமைக்கப்பட்டது...நேரம் அதிகமில்லை...

கட்டிலின் திறந்தபக்கம் இளையவனை தைரியப் படுத்தி ஒரு குச்சியுடன் 'சேரி'ல் நிற்கவைத்து இந்தப் பக்கம் அது நகராதிருக்கும்படி 'டர்...டர்..' எனச் சத்தம் ஏற்படுத்தி எதிர் திசையில் தூண்டிவிடச் சொல்லி விட்டு, அவசர அவசரமாக தண்ணீர்க் கேன்களை மறுபடி கட்டிலின் தலை மாட்டில் வரிசையாக அமைத்து கொஞ்சம் இருந்த இடைவெளியை சற்றே தயக்கத்துடன் ப்ரிண்டரினால் மூடி, முதலமைச்சருக்கு ஏற்பாடு செய்யப் பட்ட கான்வாய் பாதை போல வாசல் கதவுக்கு வழி ஏற்படுத்தி விட்டு இளையவனுக்கு சைகை காட்டினார் அப்பா.

"அப்பா.. ஸ்டம்ப் கைல இருக்கு இல்லே..அடிச்சுக் கொல்ல முடியாதா..."பயத்துடன் இளையவன் நழுவ முயற்சி...

"முண்டம்...அடிவாங்கிட்டு சாகாம மேல பாய்ந்துட்டா...உள்ளே ஓடிட்டா...டைம் இல்லே சீக்கிரம்...."அடிக்குரலில் அப்பா உறுமினார். பையன் குச்சியால் கீறி முயசிக்கத் தொடங்கினான்...

அம்மா கட்டிலின் இந்த முனையை எட்டிப் பார்த்துகொண்டிருந்து விட்டு உதட்டைப் பிதுக்கி கொண்டிருந்தவள் திடீர் என மெல்லிய குரலில் கத்தினாள்..."இதோ...இதோ..முகம் தெரியுது....இன்னும் தட்டு..." என்றவள்

"அதோ...அதோ..." என்று கிரீச்சிட்டாள்

இந்த சத்தங்களாலும் தொடர்ந்த குச்சித் தொல்லைகளாலும் பீதியடைந்த அந்த பெரிய எலி தன்னைக் காப்பாற்றிக் கொள்ள, வெளியேவந்த வேகத்தில் நின்றிருந்த பெரியவன் கால்களைத் தூக்கி நடனமாடுவது போல இங்கும் அங்கும் தாவ, யார் யாரைத் துரத்துகிறார்கள் என்று குழம்பும் அளவு முன்பின்னாக ஓடி, நாங்கள் அமைத்த பாதை வழியே கதவை அடைந்து படியிறங்கி ஓடி மறைந்தது....

அப்பாடா...இனி நிம்மதியாகப் படுக்கலாம்....மணி பதினொன்றரையை நெருங்கிக் கொண்டிருந்தபோது படுக்கப் போனோம்.

திங்கள், 21 டிசம்பர், 2009

உள் பெட்டியிலிருந்து...4

இறந்தபிறகு சொர்க்கத்துக்குப் போக வேண்டும் என்று விரும்புவதை விட, வாழும்போது நாம் இருக்கும் இடத்தையே சொர்க்கமாக மாற்றுதல் நன்று.

உங்களை நேசியுங்கள் . புரிந்துகொள்ளும் உணர்வோடு வாழுங்கள். கனவுகளைக் காதலித்து, எளிமையை நிச்சயம் செய்து கொள்ளுங்கள்.உங்கள் பெருந்தன்மையை மணம் புரிந்து போலி கௌரவத்தை ரத்து செய்யுங்கள்.

கோபத்தில் பேசப்பட்ட ஒருவார்த்தை ஆயிரம் அன்பான வார்த்தைகளை அர்த்தமற்றதாக்கி விடும்.

வேகமாகச் செல்பவர்களை எனக்குப் பிடிப்பதில்லை. அதனால்தான் அவர்களை முந்த நினைக்கிறேன்!

மிகவும் விரும்புபவர்களைதான் புரிந்து கொள்ள மறுக்கிறோம். அவர்களை புரிந்து கொள்ள அதுவேயும் காரணமாகிறது.

ஆழமான உணர்வு மௌனமாகவும், ஆழமான அன்பு பொறாமையாகவும் வெளிப் படுகிறது. நாம் தொலைத்த பிறகுதான் அந்தப் பொருளின் மதிப்பு தெரிகிறது.

தோல்வி துரத்துகிறது என்றால் வெற்றியின் விளிம்பில் இருக்கிறோம் என்று அர்த்தம்.

மற்றவர்கள் எந்த விஷயத்துக்காகவாவது குறைகூறினால்,புண்படுத்தினால்,கவலை வேண்டாம். எல்லா ஆட்டத்திலும் பார்வையாளர்கள்தான் கூச்சலிடுவார்கள்...ஆட்டக்காரர்கள் அல்ல.

புத்திசாலித்தனம் என்பது பெரிய பெரிய விஷயங்களைப் பேசுவது அல்ல, சிறிய விஷயங்களைக் கூடப் புரிந்து கொள்வதுதான்.

வாழ்க்கை என்பது எளிதுதான். மற்றவர்களை நேசிப்பதும் எளிதுதான்...சிரிப்பது என்பதுகூட மிக எளிதுதான்...வெற்றி என்பதோ மிக மிக எளிதுதான்... எது கடினம்? எளிமையாக இருப்பதுதான்...!

நம் மகிழ்ச்சியை அடுத்தவர்களிடம் தேடினால் தனிமைப் படுத்தப் படுவோம். நம்முள்ளேயே இருக்கும் மகிழ்ச்சியை கண்டுகொண்டால் தனிமையிலும் மகிழ்ச்சிதான்... *****

தோல்வி என்பது முடிவல்ல. மறுபடி சரியாகத் தொடங்க ஒரு வாய்ப்பு

வெள்ளி, 18 டிசம்பர், 2009

அன்புள்ள அடுத்த இருக்கை ரசிகருக்கு ...

நான் கேட்கத் தீர்மானித்த கச்சேரியையே நீங்களும் கேட்கத் தீர்மானித்தது சந்தோஷமாக உள்ளது. அந்த சந்தோஷத்தை நீடிக்கச் செய்ய - உங்களிடம் சில வேண்டுகோள்கள்.

அ ) கச்சேரி ஆரம்பிக்கு முன் வந்து, இருக்கையில் சப்தமில்லாமல் அமருங்கள். கச்சேரி ஆரம்பித்த பின் வந்து என்னைக் கால்களை மடக்கி அடக்கி ஒடுக்கி - உங்களுக்கு வழிவிடும் நேரத்தில் - கச்சேரியின் சில இனிமையான கணங்களை நானும், நீங்களும் இழக்கவேண்டியதாகிறது. இது கச்சேரியை அமைதியாக - ஒரு தியானம் போல அனுபவித்துக் கேட்கும் என் போன்ற ரசிகர்களை இடைஞ்சல்படுத்தும்.

ஆ ) கச்சேரி கேட்க ஆர்வம் இல்லாத சிறுகுழந்தைகளை தயவு கூர்ந்து வீட்டிலோ அல்லது அவர்களின் ஆர்வம் அதிகம் உள்ள ஓரிடத்திலோ விட்டுவிட்டு வாருங்கள்.

இ) உறவினர் புடை சூழ வருகிறீர்களா? - எல்லோரும் மௌனவிரதம் தியானம் எல்லாம் செய்யத் தெரிந்துகொள்ளுங்கள். நண்பர்களோடு வருபவர்களும், சபாவுக்கு வெளியே பேசக்கூடிய விஷயங்களை வெளியிலேயே பேசலாமே! 

ஈ) உங்க மொபைல் ஃபோனை சைலண்ட் மோட்ல வையுங்க, அல்லது ஆப் செய்து வைத்துவிடல் உத்தமம்.

உ) பாடகர் என்ன ராகம் பாடுகிறார் என்பது உங்களைப் போலவே நானும் பாட்டைக் கேட்டு, இராகத்தைக் கேட்டு யூகிக்கவேண்டும்; அடுத்த சீட்டுக்காரர்களுடன் உரத்தக் குரலில் விவாதங்கள் வேண்டாம். பாடகர் ஒன்றும் எங்களைப்போல் சரியாக இராகம் கண்டுபிடித்துச் சொல்பவர்களுக்கு பாயிண்டுகள் கொடுக்கப்போவதில்லை.;-)

ஊ) ஐயா / அம்மா,  நீங்க பாட்டுத் தெரிந்தவர்கள்தான். அதற்காக - பாடகர் இராகம் இழுக்கும்பொழுதோ, பாடும்பொழுதோ, நீங்க இங்கே உடன் ஹம பண்ண வேண்டாமே!
வேண்டுமானால் சபா செகரட்டரியிடம் சொல்லி ஒரு பகல் நேரக் கச்சேரி ஏற்பாடு செய்துகொள்ளுங்கள். நானும் வேறு கச்சேரி எதுவும் வாகாக வாய்க்கவில்லை என்றால் உட்கார்ந்து அதைக் கேட்கத் தயார். ஆனால் காசு வாங்காமல், இந்த மாதிரி எல்லாம் 'உடன் பாடுதல்' அதுவும் அடுத்த இருக்கைக்காரர்களுக்கு கேட்கும் வால்யூமில் வேண்டாமே!

எ) கச்சேரி நடந்துகொண்டிருக்கும்பொழுது பர பரவென சிப்ஸ் பாக்கெட் திறப்பது - நற நற வென்று சப்தமாக சிப்ஸ் மெல்லுவது - ஐயோ - நினைத்தாலே உடம்பும் மனதும் சிலிர்க்கிறது - செய்யவே செய்யாதீங்க. டிஸ்டர்பன்ஸ் மட்டும் இல்லை, எனக்குக் கொடுக்காம நீங்க சாப்பிடறதுனால - உங்களுக்கு வயிற்று வலி வரும். (நீங்க கொடுத்து நான் சப்தமில்லாமல் சாப்பிட்டாலும் - எனக்கும்  வயிற்று வலி வரும்.)

ஏ) நல்லி கடையில் வாங்கிய கச்சேரி கையேடு - என்னிடமும் உள்ளது. உங்க கிட்டயும் இருக்கா? வெரி குட். ஆனால், அதைப் பரபரவென்று சப்தம் எழும் வகையில் பிரித்து, பாட்டைக் கண்டுபிடித்தால் - உரக்கப் படித்தும், காணவில்லை என்றால் - என்னடா புத்தகம் போட்டிருக்காங்க என்று முணுமுணுப்பதும் வேண்டாம். என் புத்தகத்தை நான் சப்தமில்லாமல் பிரித்து ரெஃபர் பண்ணும்பொழுது நீங்க என் தோள்பட்டை வழியாக அதை எட்டிப் பார்த்து என் மீது உஷ்ணமான மூச்சுக் காற்று விடாதீர்கள். 

ஐ) பாடகரின் கச்சேரியை நீங்க பத்து வருடங்களுக்கு மேலாகக் கேட்பவராக இருக்கலாம். அதற்காக அவருடைய முந்தைய கச்சேரிகளையும், இன்றைய கச்சேரியையும் ஆய்வு செய்து - விமரிசனங்கள் செய்துகொண்டு இருக்காதீர்கள். உங்களுக்குப் பிடித்திருக்கிறதா? மௌனமாகக் கேளுங்கள்; பிடிக்கவில்லையா - வேறு கச்சேரி - (பிடித்ததாக ஒன்று) கேட்கச் செல்லுங்கள்.

ஒ) இரசிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். பாடகர் அபூர்வமான சங்கதிகள் போடும்பொழுது (மட்டும்) ஆஹா / ஓஹோ / சபாஷ் கூறுவதில் தவறில்லை. ஒவ்வொரு ராகம் பாடிமுடித்தபிறகும், வயலின் வாசிப்பு, மிருதங்க ஆவர்த்தனம் முடிந்தபின்னும் - ஊக்கப்படுத்த கைதட்டுதலும் தவறு இல்லை. தனியாவர்த்தன நேரத்தில் எழுந்து போதல் எனக்கும் நாகராஜ் போன்ற என் ஆர்க்குட் நண்பர்களுக்கும் பிடிக்கவே பிடிக்காது.

ஓ) கச்சேரி நன்றாக இருந்தால், அப்படியே ஒன்றிப்போய், கண்ணயர்ந்துவிடுவது, சில சமயங்களில் எனக்கும் நேர்ந்தது உண்டு. நீங்க அப்படி கண்ணயர்ந்தால் - தயவு செய்து குறட்டைவிட்டு, என் அமைதியான தூக்கத்தைக் கெடுத்துவிடாதீர்கள்!

அவ்வ்வ்வவ்வ்வ்வ் --- வளவுதான்! இப்போதைக்கு (மீதி இருந்தால், நாளை துவங்கி உங்க நடவடிக்கைகளைப் பார்த்து, பிறகு எழுதுகின்றேன்)

வியாழன், 17 டிசம்பர், 2009

படைப்பாற்றல் படப் போட்டி !

ங்கே, நீங்க பார்க்கும் படத்தில் இருப்பவை எல்லாவற்றையும் இணைத்து, சம்பந்தப்படுத்தி, எங்கள்  வாசகர்கள் பின்னூட்டம் இடவேண்டும். படைப்பாற்றல் மிக்க கருத்துரைகள், கவிதைகள், வித்தியாசமான பார்வைகள், அதிக பொருட்கள் இணைத்து எழுதப்படும் இணைப்புரைகள் எல்லாவற்றிற்கும் பாயிண்டுகள் உண்டு. (க்ளூ : சக்கர இனிக்கிற சக்கர - அதுல, எங்களுக்கென்ன அக்கறை?) 



புதன், 16 டிசம்பர், 2009

ஒரு நாள் போட்டியும், ஒரு நாய்க்குட்டியும்...


நேற்று நடந்த ஒருநாள் போட்டியில் ரன் மழை. சேவாக்கை விட தில்ஷான் அதிக ரன் எடுத்திருந்தும் வெற்றி பெற்ற அணி என்ற ஒரே காரணத்திற்காக சேவாக்குக்கு மேன் ஆஃப் தி மேட்ச் அவார்ட் தந்தது என்ன நியாயமோ? ஆனால் இந்த அளவு நானூறு ரன்களைத் துரத்தி வந்த சாதனை ஒரு புறம் என்றால் எனது மேன் ஆஃப் தி மேட்ச் அவார்ட் நெஹ்ராவுக்குதான்... கடைசி ஓவரில் பதினோரு ரன் தேவை என்ற நிலையில்,  இன்றைய T20 காலத்தில் எதுவும் சாத்தியம் என்ற நிலையில்,  பதட்டமில்லாமல் பந்து வீசி,  நோ பால்,  வைட் பால் விட்டுத் தராமல்,  கடைசி பந்தில் நான்கு அடித்தால் கூட மேட்ச் 'டை' ஆகிவிடும் என்ற நிலையிலும் அழகாக வீசியதால்...தோனி Cool கேப்டன் பட்டம் பெற்றவர். ரவி சாஸ்திரி இப்போதும் அவர் அபபடி இருந்ததாகப் பாராட்டியது சரி என்று படவில்லை. சேஸ் செய்ய முடியாது என்று இறுமாந்திருந்த நானூத்தி பதினாலை அவர்கள் துரத்து துரத்து என்று துரத்தி மூன்று ரன்னில் கோட்டை விட்டார்கள் என்றாலும் அந்தக் கடைசி பத்து ஓவர்களிலும் கேட்ச்கள் மிஸ் ஆன போதும் தோனி முகத்தில் டென்ஷனை காண முடிந்தது. இவ்வளவு பெரிய இலக்கு எடுத்தும் மூன்றே ரன்னில்தான் ஜெயிக்க முடிந்தது என்பது ஒரு இறக்கம் (அதுதான் ஆட்டத்தின் விறுவிறுப்பு என்பார்கள்) என்றால், அதே நிலையில் அவ்வளவு பெரிய இலக்கை விரட்டி அதே மூன்று ரன்னில் வெற்றியைக் கோட்டை விட்ட இலங்கை அணிக்கு எப்படி இருந்திருக்கும்?
*** *** ***
நேற்று மாலை என்னால் ஒரு மரணம் நிகழ்ந்தது மனதை வெகுவாகப் பாதித்தது. 

மழை விடாமல் பெய்துகொண்டிருக்க வெளியில் கிளம்பாத என்னை விதி டியூப் லைட் வாங்க வெளியில் கிளம்ப வைத்தது. குடையுடன் கிளம்பி சென்ற பாதி வழியில் சிறிதும் பெரிதுமான முனகல்களுடன் ஒரு அழகான நாய்க் குட்டி என் காலைத் தஞ்சம் அடைந்தது. சாதாரணமாக நம்மைக் கண்டு தயங்கித் தயங்கி ஓடி, பின் நெருங்கி வந்து விளையாட்டு காட்டும் நாய்க் குட்டி மழையில் நனைந்து குளிரின் காரணமாக நடுங்கிக் கொண்டு ஆதரவுக்காக என்னிடம் வந்து நின்றது.
 
வெள்ளையும் பிரௌனும் கலந்த அந்த அழகான கொழு கொழு நாய்க் குட்டியைக் கையில் எடுத்துக் கொண்டு மழையில் நனையாத இடமாக அதை விடலாம் என்று இடம் தேடினேன். என்னுடன் ஒண்டிக் கொண்ட அந்த நாய்க் குட்டி பாதுகாப்பான இடம் கிடைத்து விட்டதாக நம்பி முனகல்களை நிறுத்தி ஒண்டிக் கொண்டது. எங்கள் ஏரியாவில் ஏற்கெனவே இரண்டு மூன்று நாய்கள் உண்டு. ஒன்றுக்கொன்று ஒற்றுமையுடன் இருக்கக் கூடியவை. அதில் ஒன்று போட்ட குட்டிகளை இரண்டுமாய் மற்ற வெளி நாய்களிடமிருந்து ட்ராஃபிக் கான்ஸ்டபிள்  போல பாதுகாத்து அழைத்துச் செல்லும். இந்த நம்பிக்கையில் இந்த நாய்க் குட்டியை இந்த ஏரியாவில் ஒரு ஒதுக்குப் புறமான இடத்தில் விடலாம் என்று பையனிடம் தந்து, கட்டிட ஓரமாக எங்காவது விடுமாறு சொல்லி விட்டு,  கடைக்கு சென்று திரும்பி வந்து பார்த்த போது அந்த கோரம் நடந்து முடிந்திருந்தது.


பையன் கையில் நாய்க் குட்டியைப் பார்த்ததுமே அருகில் வந்து குலைத்து பயமுறுத்தத் தொடங்கின இரண்டு நாய்களும்.  இவன் எங்கே தன்னை இவை குதறி விடுமோ என்று பயத்துடன் என்ன செய்வது என்று தெரியாமல் பயந்து குட்டியைக் கீழே விட, அந்த இரண்டும் பிறந்து முப்பது, அல்லது  நாற்பது நாட்களே ஆகியிருக்கக் கூடிய அந்தக் குட்டியை குதறி துவம்சம் செய்து போட்டு விட்டன. இதை நேரடியாகப் பார்த்த இரண்டு பையன்களும் மனைவியும் இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. என் மனமும் கனத்திலிருந்து இன்னும் விடுபடவில்லை. என்ன விதியோ அது என் கையில் வந்து தஞ்சம் கேட்டது? ஒரு குழந்தையின் மரணம் போல அது என்னை படுத்துகிறது...

செவ்வாய், 15 டிசம்பர், 2009

வலையாபதி பதில் அளிக்கிறார்!

அப்பப்போ வலையாபதியிடம் சில கேள்விகள், அலை, வலை, தொலைபேசியில் கேட்போம். அவர் சொல்லும் பதில்கள் சுவாரஸ்யமாக இருக்கும். வலையாபதிக்குத் தெரியாத விஷயங்களே கிடையாதோ என்று எங்கள் ஆசிரியர் குழுவுக்கு வியப்பாக இருக்கும். (சில டயத்துல பீலாவும் தாராளமாக விடுவார்.) இதோ இங்கே சில கேள்விகள், பதில்கள்.
எ கே : சமீபத்தில் வாய்விட்டுச் சிரித்தது எப்போது?
வ ப : இரண்டு மூணு நாளா நான் இதயம் பேத்துகிறது என்கிற வலைப்பதிவில், ஒரு பயணக் கட்டுரை படித்துவருகின்றேன். அதில் இயல்பாக உள்ள சில ஜோக்குகள் என்னை வாய்விட்டுச் சிரிக்க வைத்தன.  (click here)
எ கே : தெலுங்கானா பிரிவினை பற்றி நீங்க என்ன நினைகிறீங்க?
வ ப : இதி ஏமினும் பாக லேது - நேனு வேற ஒகட்டினும் சொப்பிந்துகு லேது.
எ. கே : அதையே தமிழ்ல சொல்லுங்க.
வ ப : 'அதையே தமிழ்ல'
எ கே : அட அதைச் சொல்லலீங்க!
வ ப : அதைத்தான் சொன்னேன் நான்; சொல்லலை அப்பிடீங்கறீஙகளே!
எ கே : நீங்க தெலுங்குல சொன்னத அப்பிடியே தமிழ்ல சொல்லுங்க.
வ ப : நீங்க தெலுங்குல சொன்னத அப்பிடியே தமிழ்ல.
எங்கள் : யோவ் வலை - அலையில, தொலையில எல்லாம் இப்பிடித்தான் வம்படிப்பே. நீ இப்போ எங்கே அலைஞ்சுகிட்டு இருந்தாலும் ஒரு நாள் இந்தப் பக்கம் வருவே இல்லே, அப்போ செய்யறேன் உன்னைக் கொலை!

ஞாயிறு, 13 டிசம்பர், 2009

இந்த சங்கீத சீசனில் ....

நண்பர்களே!
சென்னையில், இந்த சங்கீத சீசனில், நீங்களோ அல்லது உங்கள் நண்பரோ அல்லது சொந்த பந்தங்களோ வாய்ப்பாட்டோ அல்லது வாத்தியமோ வாசிப்பதாக இருந்தால், எங்கு, என்று, எப்பொழுது, யார் என்ற விவரங்களை, இதற்குப் பின்னூட்டமாக கூறுங்கள். எங்கள் இசை விமரிசனக் குழு உறுப்பினர்களில் யாராவது ஒருவர், அந்த நிகழ்ச்சியை கேட்டு, எங்கள் விமரிசனத்தை, இங்கு பதிவு செய்ய ஆவன செய்கிறோம்.
அன்புடன்
எங்கள் பிளாக்.

சனி, 12 டிசம்பர், 2009

ஏன்? ஏன்?? ஏன்???

விடை தெரிந்தவர்கள் கூறுங்கள்!

1) ஆடு புலி ஆட்டம் - கேள்விப் பட்டிருக்கிறோம்;
காடு புலி (சரியாகச் சொன்னால், ' புலி காடு' ஆங்கிலத்தில் ) ஓட்டம் ஏன்?

2) யாராவது தப்பு செய்துவிட்டால், கன்னத்தில் புத்தி புத்தி என்று போட்டுக் கொள்வதைப் பார்த்திருக்கிறோம்; Budhdhi செய்த தப்பு என்ன? அவரைப் போட்டுத் தள்ளியது ஏன்??


3) படத்தில் இருப்பவர் யார்? அவருக்கும், டிசம்பர் பன்னிரெண்டாம் தேதிக்கும் என்ன தொடர்பு? (க்ளூ: ஆண்டு ஆயிரத்துத் தொள்ளாயிரத்து ஒன்று) 

4) இன்று பிறந்தநாள் கொண்டாடும் ஒரு முக்கியமான நபர் யார்? - (சாய்ராம் - எப்பிடி இந்த ஜுஜுபி கேள்வி?)
(வழக்கம்போல - சரியான விடைகளுக்கு பாயிண்டுகள் உண்டு.) 

புதன், 9 டிசம்பர், 2009

M S V மூன்றெழுத்தில் என்றும் இசை இருக்கும் !


முன்னுரை

meenakshi said...on Nov 18th......,(in a comment)

90% சதவிகித விடையை நீங்களே கூறி விட்டீர்கள். அதனால் எனக்கு credit கொடுப்பது நியாயமே இல்லை. இருந்தாலும் மிக்க நன்றி. என்னை பற்றி பெருமையாக சொல்லிக்கொள்ள ஒன்றும் இல்லை. நான் முழுக்க முழுக்க சென்னை வாசி. திருமணத்திற்கு பின் சில வருடங்கள் பெங்களூரிலும், கடந்த ஐந்து வருடங்களாக அமெரிக்காவிலும் இருக்கிறேன். கணவர் Software துறையில் இருக்கிறார். இரண்டு ஆண் குழந்தைகள்.

உங்களிடம் ஒரு வேண்டுகோள். எனக்கு இசை என்றால் உயிர். கர்நாடக சங்கீதம், திரையிசை பாடல்கள் இரண்டையும் கேட்பேன். இருப்பினும், மெல்லிசை மன்னர் திரு. எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள் பாடல்களில் தான் நான் வாழ்வதே. ஒரு நாள் கூட நான் அவர் பாடல்களை கேட்காமல் இருந்ததில்லை. என்னை பொறுத்தவரை என் இசை கடவுள் அவர்தான். அதனால் நீங்கள் உங்கள் பதிவில், என் வேண்டுகோளை ஏற்று, திரு. எம்.எஸ். விஸ்வநாதன் அவர்களை பற்றி, அவர் புகைப்படத்துடன் எழுத வேண்டும் என்று விரும்புகிறேன். மிக்க நன்றி.


இனி எங்கள் உரை:




இந்தப் பின்னூட்டத்தைப் படித்தவுடனேயே - தினமும் பல வலைகளை, குறைந்தது ஐந்து நிமிடங்கள் - அதிக பட்சம் அரைமணி நேரம் என்று எங்கள் வலையாபதி எம் எஸ் வி பற்றி தேடி - அவற்றை எல்லாம் அப்பப்போ ஒரு ஃபோல்டரில் போட்டு, எங்கள் ஆசிரியர் குழுவுக்கு அனுப்பி இருந்தார். நாங்க படிச்சோம், படிச்சுக்கிட்டிருக்கோம், படிச்சுக்கிட்டு இருப்போம் - ஒரே மலைப்பா இருக்கு.


இந்தியா சுதந்திரம் அடைந்த ஆண்டிலும், அதற்குப் பிறகு சில மாதங்களிலும், மன்னர்களை எல்லாம் கண்டுபிடித்து, அவர்களை எல்லாம் ஒன்றுமில்லாதவர்கள் ஆக்கி, ச(ர்)தார்,  ச(ர்)தார் என்று அடித்து, படேல் என்று வெற்றி கண்ட ஓர் இரும்பு மனிதர் - அப்போ தலை எடுத்திருந்த இந்த மெல்லிசை மன்னரை மட்டும் (நல்ல வேளையாக) நெருங்கவில்லை! அப்படி நெருங்கி வந்திருந்தாலும், இவருடைய இசை கேட்டிருந்தால் உருகிப் போயிருப்பார். இயற்றுதல் ஒரு படைப்பாற்றல்; அப்படி இயற்றியவைகளுக்கு - இசை அமைப்பது என்பது, கலை நயம் மிகுந்த படைப்பாற்றல். இயற்றப்பட்டது  குழந்தை என்றால் - இசை அமைப்பது - அந்த குழந்தையை எல்லோரும் கொஞ்சும் வண்ணம் செய்வித்தல்.

திரு எம் எஸ் வி அவர்களுக்கும் - எங்கள் பிளாகுக்கும் இருக்கும் ஒரு தொடர்பு என்ன என்றால், நாங்கள் 'எங்கள்' என்ற பெயரில் ஒரு வலைப்பதிவு ஆரம்பிக்கலாம் என்று முடிவு செய்தது திரு எம் எஸ் வி அவர்களின் எண்பத்து ஓராம் வயது பூர்த்தியான நாளில்! அவர் பிறந்தது June 24, 1928. எங்கள் எண்ணத்தில் 'எங்கள்' பிறந்தது June 24 2009.


M S V = Manayangath Subramania Viswanathan - Mother's name: Narayanikkutty / Naanikkutty.


By strange coincidence - we thought of naming our blog "Manavaadu" initially and our anchor ancestor's name is Subramanian! Only thing is that there is no Viswanathan - connected with Engal.


திரு எம் எஸ் வி அவர்கள் இசையமைத்த ஆயிரக்கணக்கான - படங்களின் இசையிலிருந்து - எதை எடுப்பது, எதை தொடுப்பது, எதை விடுப்பது?


ஆயிரத்துத் தொள்ளாயிரத்து இருபத்தெட்டில் பிறந்த மெல்லிசை மன்னரைப் பற்றி - அதற்கு ரொம்ப வருடங்கள் கழித்துப் பிறந்த  சாதாரண இசை சேவகன் என்ன எழுத முடியும்? ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப்போல் உறங்கும் மாயக் கண்ணன் குழலோசையும், கலைமகள் கைப்பொருளும் கூட ஒன்றாகச் சேர்ந்தாலும் - நாளாம் நாளாம் மணநாளாம் போன்ற பாடல்களின் இனிமையை, நேர்த்தியை முழுவதும் சொல்லிவிட முடியுமா?


ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபதிலிருந்து, இன்று வரையிலும் - நான்  குளியலறையிலோ / கொள்ளிடக் கரையிலோ பாடும் (இசைக்கும்?) இரண்டு மூன்று வரிகள் - பெரும்பாலும் எம் எஸ் வி / விஸ்வநாதன் ராமமூர்த்தி - இசையமைப்பு என்பதை - திரு விஸ்வநாதன் இசையமைத்த ஐநூற்றுக்கு மேற்பட்ட - தமிழ்ப் படங்களின் பாடல்கள் பட்டியல் பார்த்து, நான் நேற்றுத்தான் தெரிந்துகொண்டேன். 'சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ' என்ற தேஷ் (?) ராகப் பாடல் ஓர் உதாரணம்.


மீனாக்ஷி - எங்களை மன்னியுங்கள். அகண்ட ஆழமான சமுத்திரத்திலிருந்து அஞ்சு மில்லி அளவு கூட எங்களால் எழுதமுடியவில்லை.


இதோ நீங்க கேட்ட சில படங்கள்.





நமது அறுபது ரசிகர் மன்ற உறுப்பினர்களும், மற்றும் எங்கள் பதிவுகளை தினமும் படிப்பவர்களும், அவர்களுக்குப் பிடித்த எம் எஸ் வி இசைப் பாடல்களை இங்கே பின்னூட்டத்தில் வந்து பதியும்படி அன்புடன் அழைப்பு விடுக்கின்றோம்.


எங்கள் வாசகர்களுக்கு, வழக்கம்போல் ஒரு கேள்வி : தமிழ்ப் படப் பெயர், ஆங்கிலத்தில் எழுதினால், F, Q, W, X, Z என்ற எழுத்துக்களில் தொடங்குகின்ற தமிழ்ப்படப் பெயர்கள் சொல்வோருக்கு - பாயிண்டுகள் கொடுக்க நாங்க ரெடி; பாயிண்டுகள் பெற நீங்க ரெடியா?

துள்ளித் திரிந்தது ஒரு காலம்....

சிறு வயதில் இருக்கும் நண்பர்கள் எண்ணிக்கை வளர்ந்த பிறகு இருக்கிறதா என்று எண்ணிப் பார்த்தால் பெரும்பாலும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். படிக்கும் காலத்தில் பெற்றோர்களின் ஊர் மாற்றம், பள்ளிப் படிப்பு முடிந்தபிறகு வேறு ஊரில் அல்லது அதே ஊரில் இருந்தாலும் வெவ்வேறு கல்லூரிகள் என்று மாறும் போது நண்பர்கள் வட்டம் பிரிந்து விடுகிறது, சுருங்கி விடுகிறது, அல்லது வெவ்வேறு வட்டங்களில் பழகும்போது முதலில் இருந்த நெருக்கமான நட்புகள் பிறகு வாய்ப்பதில்லை.  இன்னும் சில இடங்களில் திருமணம் ஒரு பிரிக்கும் புள்ளியாக வந்து விடுகிறது. இவற்றையும் தாண்டிப் புனிதமாக தொடரும் நட்புகள் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. (நாகை நண்பர்கள் வட்டம் இதற்கு விதிவிலக்கு)

ஆரம்பப் பள்ளி நாட்களில் தொடங்கும் கள்ளமில்லா நட்பு எச்சில் பார்க்காது...வித்யாசம் பார்க்காது...மறு உறவுகளாகத் தோற்றம் கொடுக்கும். அழுகையும் சிரிப்பும் கலந்த நட்பு நாட்கள் அவை. அந்த இடத்திலிருந்து உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி நிலை என்று மாறும்போது மனதில் சிறு கள்ளம் புகுந்து, உயர்ந்த நட்பு, தாழ்ந்த நட்பு என்றும் நெருங்கிய வட்டம், வெளி வட்டம் என்றும் மாறுபாடுகள் தெரியத் தொடங்கும் காலம். அதையும் தாண்டி கல்லூரிப் பருவம் வந்த பிறகு தேர்ந்தெடுத்த பாடத் திட்டங்களின் தகுதி காரணமாகவும், அந்தஸ்து புரியத் தொடங்கிய காலம் காரணமாகவும் நட்பு வட்டம் பெரிதாவதோ சுருங்குவதோ உண்டு. சில சமயங்களில் காதல் பிரச்னை நண்பர்களையும் காட்டும், கூட்டும். எதிரிகளையும் சேர்க்கும். பிரிந்து, சேர்ந்து சண்டை இட்டு, சமாதானமாகி ஒரு முடிவுக்கு வரும் காலம்...

படிப்பு முடிந்து, வேலை தேடும் வரை இருக்கும் நேரம் நண்பர்கள் வட்டம் பெரிய வரப்பிரசாதம். ஏதோ ஒரு வகையில் வீட்டுடன் ஒரு மௌனப்பகை நிலவும் நேரத்தில் நண்பர்கள் பெரிய ஆறுதலாகத் தெரிவார்கள்.வீட்டுடன் மௌனப் பகையாக தெரிவது வயதின் காரணமாக இருக்கலாம்...அல்லது ஒரு விதக் குற்ற உணர்வின் காரணமாக இருக்கலாம். குழுவில் முதலில் வேலை கிடைத்த நண்பர்கள் ஒன்று மற்றவர்களுக்கு உதவியாக, ஆறுதலாக இருப்பார்கள்...அல்லது மெல்ல மெல்ல விலக ஆரம்பிப்பார்கள். அவர்களே நமக்குப் பாடமாகவும் இருப்பார்கள்.     நமக்கும் வேலை கிடைத்தபின் மேலே சொன்ன இரண்டு வகையில் ஏதாவது ஒன்றில் நாமும் சேர்ந்து விடுவோம்...!

காதலித்தோ, வீட்டில் பெண் பார்த்தோ...திருமணம் செய்யும் வயது...நண்பர்களுடன் கலந்து பேசி சினிமா கடற்கரை பார்க் என்று நண்பர்களுடன் சுற்றி, பெண்களைப் பற்றி பேசி ஒருவழியாக திருமண நேரம் வரும்....நண்பர்களுடன் திட்டமிடுதல் நடக்கும். யாரை அழைப்பது...பழைய நண்பர்கள் பெயர்கள்...எப்படி புதுமையாக அழைப்பு அச்சடிக்கலாம்...வரவேற்பில் என்ன புதுசாகச் செய்யலாம்...நண்பர்கள் வட்டம் வேலைகளைப் பகிர்ந்து தலைமேல் போட்டுக் கொண்டு செய்து முடிக்கும். அன்ன ஆகாரம் இன்றி டிரஸ் பற்றி கவலை இன்றி கிடைத்த இடத்தில் தூங்கி கிடைத்ததைச் சாப்பிட்டு...ஒரு வழியாக திருமணமும் நடக்கும். மனைவியுடன் அறிமுகங்கள்...."சிஸ்டர் எங்காளை உங்க கிட்ட கண்ணுபோல ஒப்படைக்கிறோம் கண் கலங்காமப் பார்த்துக்கோங்க..." டைப் வசனங்கள்....க்ரூப் போட்டோ...

பிறகு ஒரு நீண்ட இடைவெளி...."மச்சான், சாரிடா...டயமே இல்லை...நான் யார் கூடவாவது பேசினாலே கோச்சுக்கரா...  பயங்கர பொசசிவ் தெரியுமா அவ..."

இதற்குப் பிறகு சில வருடங்கள் கழித்து ஒவ்வொரு நண்பனாக கல்யாணம் ஆகும் போது மற்ற நண்பர்கள் ஓடியாடி வேலை பார்க்க,  திருமணமான நண்பர்கள் மனைவியுடன் கெத்தாக வந்து பரிசு கொடுத்து விட்டு காணாமல் போவார்கள்...ஒரு நீண்ட இடைவெளியில் எல்லோரும் இந்த அனுபவங்களுக்கு ஆட்பட்டபின் பழைய நட்பை நினைவுக்குக் கொண்டு வந்து தொடரும் நேரம் வரும்...

வேலைகளிருந்து ஓய்வு பெற்றபின் ஒரு காலகட்டம்.  ஏதோ தனிமைப் படுத்த பட்டது போல ஒரு உணர்வு சிலருக்கு தோன்றும்.  அப்போது பெரும்பாலும் உறவுகளை விட நண்பர்களைதான் மனம் அதிகம் தேடும். இந்த கால கட்டத்தில் நினைத்துப் பார்க்கும்போது பல்வேறு கால கட்டத்தில் கிடைத்த பல்வேறு  நண்பர்கள் நினைவில் நிற்பார்கள். சிறுவயது முதல், கோலிகுண்டு விளையாடிய நாள் முதல் இந்த நாள் வரை எத்தனை நண்பர்கள் நம்முடன் இருக்கிறார்கள் என்று நினைத்துப் பார்த்தோமானால் சுவாரஸ்யமாக இருக்கும். இடையில் கல்லூரிக் காலத்திலும், வேலை செய்யுமிடத்து நண்பர்களும்.....

இதற்குப் பின் எத்தனை நண்பர்களுடன் நாம் இன்னும் தொடர்பு வைத்துள்ளோம்? இவர்களில் எத்தனை பேர் நம் பள்ளிப் பருவத்திலிருந்தே தொடர்பவர்கள்? பிறகு அறிமுகமானாலும் நெருங்கியவர்கள் எத்தனை பேர்? இந்த அனுபவங்கள் சற்றே முன்பின் மாறுபட்டாலும் எல்லோருக்கும் பொதுதானே...

நமக்கு எத்தனை நண்பர்கள் என்பதை வைத்து நம்மை எடை போடலாமா...?
நாம் எத்தனை பேருக்கு நண்பராக இருக்கிறோம் என்பது வித்யாசமான ஒன்றா?   

திங்கள், 7 டிசம்பர், 2009

பூமியில் தென்றல் பொன்னாடை போடுது...

  • இன்றைய செய்தித் தாளை மேய்ந்து கொண்டிருந்த போது படித்த இரண்டு விஷயங்கள் கவனத்தைக் கவர்ந்தன. முதலாவது, மேட்டூரில் மாநகராட்சி சரியாக குடி நீர் சப்ளை வழங்கவில்லை என்று கோபப் பட்ட மக்கள் போராடிய பிறகு ஊழியர்கள் அடைப்பு ஏதாவது இருக்கிறதா என்று ஆராய்ந்த போது, புங்கன் மரம் குடிநீர் சப்ளை செய்யும் குழாயில் நேரடியாகப் புகுந்து நீரை உறிஞ்சியதைக்.கண்டு பிடித்தார்களாம்.. பின்னர் அந்தப் பன்னிரண்டு அடி வேரை வெட்டி எடுத்தார்களாம்.
  • இரண்டு, ஓசோன் லேயரில் ஓட்டை. அதனால் புவி வெப்பம்...துருவப்ரதேசங்கள் உருகி நீர் மட்டங்கள் உயர்ந்து நிலப் பரப்பு சுருங்கி, மொத்தத்தில் புவி வெப்பமாகி.....என்று போகும் ஒரு விழிப்புணர்வுக் கட்டுரை. இதைப் பற்றி நண்பரிடம் பேசிக் கொண்டிருந்த போது அவர் முன்வைத்த கருத்துக்கள் இங்கே....
  • முதலாவது புங்கன் மர விஷயம்...
  • எந்த மரத்தின் வேரும் ஈரப்பதம் உள்ள இடங்களை நோக்கி நீண்டு வளர்ந்து ஈரம் உறிஞ்சும் தன்மை கொண்டது. தகுந்த தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படாவிட்டால் தென்னை மரத்தின் வேர் நீண்டு பக்கத்து வீடுகளின் கிணறுகளை நாடுவதைப் பார்த்துள்ளோம். வேப்ப மரத்தின் வேர்கள் நம் கட்டிட அஸ்திவாரத்தையே ஆட்டிப் பார்ப்பதையும் பார்த்துள்ளோம். கோவில் கோபுரங்கள் மீது பறவைகள் சாப்பிட்டு எச்சமிட்ட பழ விதைகள் காரணமாக ஆல, அரச வேம்பு மரக் கிளைகள் வளரத் தொடங்கி விரிசல் விட்டிருப்பதையும் பார்த்திருக்கிறோம்.
  • மரங்களின் இயல்பு அது. அந்தக் குழாய் எப்போதோ விரிசல் விட்டிருக்க வேண்டும். கவனிக்க வேண்டிய சம்பந்தப்பட்ட 'பொறுப்பான' நபர்கள் இதை கவனிக்காமலோ சோம்பேறித்தனத்தினாலோ விட்டிருக்க வேண்டும்.
  • புங்கனுக்கு ஒரு பொதுக் குணம் உண்டு. நோய்த்தொற்றுக் கிருமிகளை எதிர்த்து அழித்து நோய்களிருந்து காக்க வல்லது அது என்று சொல்வார்கள். சிலபல வருடங்களுக்கு முன்னால் உடை அணியாக் குழந்தைகள் அரையில் புங்கைக்காய் தடுப்பு (மறைப்பு) அணிந்திருப்பதை பார்த்த ஞாபகம் இருக்கும்! இன்னொரு உபயோகமும் புங்கைக்கு உண்டு என்று சொல்வார்கள்...'பேய் விரட்டும்' சக்தி இந்த மரத்துக்கு உண்டு என்பதுதான் அது... எனவே,
  • அந்த கிராம மக்கள் மீது கருணை கொண்ட இந்த மரம் நோய்களை தடுக்கவும், பேய்களை விரட்டவும் மக்கள் வீடுகளில் உள்ள தண்ணீரில் கலக்க முடிவு செய்து இந்த வழியை தேர்ந்தெடுத்திருக்கலாம்....!                                              
  • இரண்டாவது, ஓசோன் மேட்டர்.
  • ஓசோன் லேயர் ஓட்டை ஏன் உஷ்ணப் பிரதேசங்களை விட்டு விட்டு துருவங்களில் மட்டும் விழுகிறது? பூமியின் காந்த புலன்களுக்கும் அதற்கும் ஏதும் தொடர்பு உண்டா?
  • துருவங்களில் உறைபனி என்பது பூமியுடன் புதைந்து வேரூன்றி உள்ளதா அல்லது மிதக்கிறதா?
  • ஏன் இந்தக் கேள்வி என்று புரிகிறதா? மண்ணில் ஆழ்ந்துள்ளதோ, மிதக்கிறதோ, அதனது கன பரிமாணம், எடை ஆகியவை ஏற்கெனவே கடல் நீரில் ஏற்கப் பட்டுள்ளது. எனவே அது உருகிய பிறகு அது பரவ அதிகப் படியான இடம் தேவை இல்லை.
  • அது மண்ணில் ஆழ்ந்துள்ளதாக கொள்வோம். அதனது கன பரிமாணம் காரணமாக ஏற்கெனவே கடல் நீர் கரையை மீறி வழிந்திருக்கும். சுற்று சூழ் ஆர்வலர்கள் முன்மொழிவது போல காலநிலை மாற்றத்தால்தான் அது நடக்கும் என்பது சரி அல்ல. மக்களுக்கு பழைய ஞாபகங்கள் இருக்குமானால் கடற்கரைகளில் கடந்த பல வருடங்களில் நிகழ்ந்து கொண்டிருந்த மாற்றங்களை கவனித்திருப்பார்கள். (திருவல்லிக்கேணி, ராமேஸ்வர வாசிகள் இந்த விஷயத்தில் இன்னும் நிறையப் பேச முடியும்..)
  • இதை எளிதாகக் கணிக்க ஒரு கண்ணாடி குவளையை எடுத்துக் கொள்வோம். குளிர் சாதனப் பெட்டியிலிருந்து ஐஸ் கட்டிகள் எடுத்து அந்தக் குவளையில் இட்டு அதை ஒரு குச்சியால் அதை அடியிலேயே பிடித்துக் கொள்வோம். தண்ணீர் அளவை அப்போதும் ஐஸ் கரைந்த பிறகும் கவனித்துப் பார்ப்போம்
  • ஆதி காலத்தில் பூமியில் நிலப் பரப்பு இப்போது இருப்பதை விட அதிகமாக இருந்து படிப்படியாகக் குறைந்து கொண்டே வருவதை கணக்கீடுகளில் அறிகிறோம். இந்த சுருங்குதலினால் பூமிக்கடியில் உள்ள 'டெக்டானிக்' தட்டுகள் இடம் மாறுவதில் ஏற்படும் அழுத்தத்தில் எரிமலைகள் தோன்றுகின்றன.
  • பல்வேறு தாதுக்களை தோண்டி எடுத்து உலோகங்களை பூமியில் பயன்படுத்தும் போது அதன் ஆக்சைடுகள் அதிகமாகி பூமியில் புதைக்கப் படும்போது நிலப் பரப்பு இன்னும் அதிகமாகும் சாத்தியக் கூறுதான் அதிகம்..
  • உலகம் அழிகிறது என்று வைத்துக் கொள்வோம்...எந்தெந்த காரணங்களினால் அழியக் கூடிய சாத்தியங்கள்...?
  • ஒரு மகாப் பிரளயம் வந்தால் அழியும் என்றால் மேற்சொன்ன காரணங்களினால் பூமி முழுகும் சாத்தியம் குறைகிறது.
  • வெப்பம் அதிகமாகும்போது காற்றில் ஈரப்பதம் உறிஞ்சப்படும் என்றால் அதிகமாகும் வெப்பத்தின் காரணமாக கடல் நீரும் ஆவியாக உறிஞ்சப் படத்தானே வேண்டும்? அப்போது அதன் அளவும் குறையுமே...
  • சுற்றிக் கொண்டிருக்கும் பூமி நிற்க வேண்டும் என்றால்.........
  • கட்டிடங்களையும் மனிதர்கள், மற்றும் உயிரினங்களையும் பூமி விழுங்க வேண்டும் என்றால்.....!

கணவன் அலைவதெல்லாம்......!

நண்பி ஜெயகுமாரி சீனாவிலிருந்து அனுப்பிய 'முன்னேற்றப்பட்ட' (அதுதாங்க...Forwarded..!) மின்னஞ்சலில் இருந்தவற்றைக் கீழே தந்திருக்கிறேன். இதெல்லாம் வெளி நாட்டில்தாங்க....நம்ம ஊர்ல எல்லாம் இப்படி யாரும் சொல்ல மாட்டாங்க... ! நீங்களும் படித்திருக்கலாம்...இல்லன்னா இங்கே...இவை நகைச்சுவைக்காக மட்டும்...! (காசு சோபனா)
  • உங்கள் கணவனை ஒருவன் கடத்தி விட்டால் அவரை அவனிடமே விட்டு விடுவதுதான் உங்க சேமிப்புப் பணத்தை பாதுகாக்க சிறந்த வழி!
  • திருமணத்திற்குப் பிறகு கணவனும் மனைவியும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்களாகி விடுகின்றனர். ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க முடியாது. நாணயத்தின் இரண்டு பக்கங்கள்: மனைவி பக்கம் பூ; கணவன் பக்கம் (வழுக்கைத்) தலை!
  • திருமணம் செய்துகொள்வதில் தவறில்லை. நல்ல கணவன் கிடைத்தால் நீ சந்தோஷமாக இருக்கலாம். இல்லை என்றால் வேறொருத்தியை சோகத்தில் விழாமல் மீட்டுவிட்டோம் என்று சந்தோஷப்படலாம்!
  • ஆண்கள்..... பெரிய விஷயங்களுக்கு நம்மை ஈர்த்தாலும் சின்ன, அல்ப விஷயங்களில் தடுக்கி விழுபவர்களும் அவர்கள்தான்..!
  • என்னால் பதிலளிக்க முடியாத பெரிய கேள்வி..."ஒரு ஆண், பெண் உதவி இல்லாமல்  எதை சாதித்திருக்கிறான்?"
  • வார்த்தைகளில் கேட்டால், பாராக்களில் பதில் சொல்வான் கணவன், மனைவி தவிர மற்றப் பெண்களுக்கு!
  • நீண்ட வருடங்களாய் பிரியாமல் இருக்கும் ரகசியம் கேட்கிறார்கள்....வாரத்துக்கு இருமுறை நானும் கணவனும், வெளியில் எங்காவது ஹோட்டலில் சென்று சாப்பிடுகிறோம்....மெழுகுவர்த்தி வெளிச்சம், ரம்மியமான இசை, மெல்லிய பேச்சுக்கள்....அவர்   சனிக்கிழமைகளில் போவார் ...நான் ஞாயிறுகளில், என் நண்பர்களுடன்!
  • நம் கணக்கில் உள்ள பணத்தை e banking ஐ விட வேகமாக அவர் கணக்குக்கு Transfer செய்யும் முறைக்குத் திருமணம் என்று பெயர்!
  • திருமணத்தில் இரண்டுமுறையும் தோற்றவள்  நான். காதலரைத் திருமணம் செய்துகொண்டவுடன் கணவனாகிவிட்டதால் காதலனை இழந்தேன். கணவனுக்கு காதலனாக இருந்த நாட்கள் நிரந்தரமாக மறந்துபோய்விட்டது அதனால் என் வாழ்க்கையில் இரண்டாவது தோல்வி!
  • திருமண வாழ்வு வெற்றி பெற இரண்டு யோசனைகள்....1) கணவர் தவறு செய்யும் ஒவ்வொரு முறையும் உங்கள் கடந்த காலத் தவறுகளை ஒவ்வொன்றாக நீங்களே மன்னித்துக்கொள்ளுங்கள்;  2) உங்கள் பக்கம் நியாயம் இருக்கும்போது நிறைய வரம் வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்!
  • உங்கள் கணவரின் பிறந்த நாளை நினைவு வைத்துக் கொள்ள ஒரு வழி ....... வழி என்ன! ஒரு காரணம் கூட கிடையாது!
  • திருமணத்திற்கு முன் நான் என்ன செய்து கொண்டிருந்தேன் தெரியுமா? நான் நினைத்ததை எல்லாம்...!, என் கணவர் நினைக்காததை எல்லாம்!
  • நானும் என் கணவரும் இருபத்திரண்டு வருடங்கள் சந்தோஷமாக இருந்தோம்....பிறகு நாங்கள் மணந்துகொண்டோம்! 
  • ஒரு நல்ல கணவன் என்பவர்  எப்போதுமே அவர் மனைவியை மன்னித்து விடவேண்டும் ....அவள் அவரைத் திருத்தி மனிதனாகச் செய்யும்போதும் ....
  • தினசரியில் நல்ல கணவன் வேண்டும் என்பதற்காக விளம்பரம் செய்தவள் மறுநாளே சில நூறு கடிதங்கள் வரப் பெற்றாள் ...எல்லாவற்றிலும் ஒரே வரி..."அப்படி நிஜமாகவே ஏதானும் இருந்தால் எங்களுக்கும் சொல்லு"
  • அவள்: "என் கணவன் பக்கா ஜென்டில்மேன் ...ரொம்ப அடக்கமானவர்" இவள்: "நீ கொடுத்து வைத்தவள் ...என் கணவன் இன்னும் உயிருடன் இருக்கிறார்." 
  • (ஆஹா பழிக்குப் பழி!  ஸ்ரீராம் - இப்ப என்ன செய்வீங்க, இப்ப என்ன செய்வீங்க!)

சனி, 5 டிசம்பர், 2009

மனைவி அமைவதெல்லாம்...


நண்பர் மணிக்குமார் பூனாவிலிருந்து அனுப்பிய 'முன்னேற்றப்பட்ட' (அதுதாங்க...Forwarded..!) மின்னஞ்சலில் இருந்தவற்றைக் கீழே தந்திருக்கிறேன். இதெல்லாம் வெளி நாட்டில்தாங்க....நம்ம ஊர்ல எல்லாம் இப்படி யாரும் சொல்ல மாட்டாங்க... ! நீங்களும் படித்திருக்கலாம்...இல்லன்னா இங்கே...
இவை நகைச்சுவைக்காக மட்டும்...!

  • உங்கள் மனைவியை ஒருவன் கடத்தி விட்டால் அவளை அவனிடமே விட்டு விடுவதுதான் அவனைப் பழிவாங்குவதற்கு சிறந்த வழி!
  • திருமணத்திற்குப் பிறகு கணவனும் மனைவியும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்களாகி விடுகின்றனர். ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க முடியாது...ஆனால் சேர்ந்துதான் வாழ்கிறார்கள்!
  • திருமணம் செய்துகொள்வதில் தவறில்லை. நல்ல மனைவி கிடைத்தால் நீ சந்தோஷமாக இருக்கலாம். இல்லை என்றால் தத்துவ வாதி ஆகி விடலாம்!
  • பெண்கள்..... பெரிய விஷயங்களுக்கு நம்மை ஈர்த்தாலும் அதை சாதிக்க விடாமல் தடுப்பவர்களும் அவர்கள்தான்..!
  • என்னால் பதிலளிக்க முடியாத பெரிய கேள்வி..."ஒரு பெண் எதை விரும்புகிறாள்?"
  • வார்த்தைகளில் பேசினால் பாராக்களில் பதில் சொல்வாள் மனைவி..!
  • நீண்ட வருடங்களாய் பிரியாமல் இருக்கும் ரகசியம் கேட்கிறார்கள்....வாரத்துக்கு இருமுறை நானும் மனைவியும் வெளியில் எங்காவது ஹோட்டலில் சென்று சாப்பிடுகிறோம்....மெழுகுவர்த்தி வெளிச்சம், ரம்மியமான இசை, மெல்லிய பேச்சுக்கள்....அவள் சனிக்கிழமைகளில் போவாள்...நான் ஞாயிறுகளில்...!
  • நம் கணக்கில் உள்ள பணத்தை e banking ஐ விட வேகமாக Transfer செய்யும் முறைக்குத் திருமணம் என்று பெயர்!
  • திருமணத்தில் இரண்டுமுறையும் தோற்றவன் நான். ஒருத்தி என்னை விட்டு விட்டு சென்று விட்டாள்...இன்னொருத்தி போக மாட்டேன் என்கிறாள்..!
  • திருமண வாழ்வு வெற்றி பெற இரண்டு யோசனைகள்....1) நீங்கள் தவறு செய்யும்போது ஒத்துக் கொண்டு விடுங்கள். 2) உங்கள் பக்கம் நியாயம் இருக்கும்போது மெளனமாக இருந்து விடுங்கள்!
  • உங்கள் மனைவியின் பிறந்த நாளை நினைவு வைத்துக் கொள்ள ஒரு வழி அதை மறந்து விடுவதுதான்...
  • திருமணத்திற்கு முன் நான் என்ன செய்து கொண்டிருந்தேன் தெரியுமா? நான் நினைத்ததை எல்லாம்...!
  • நானும் என் மனைவியும் இருபத்திரண்டு வருடங்கள் சந்தோஷமாக இருந்தோம்....பிறகு நாங்கள் சந்தித்தோம்!
  • ஒரு நல்ல மனைவி என்பவள் எப்போதுமே அவள் கணவனை மன்னித்து விடுவாள்....அவள் தவறு செய்யும்போது...
  • தினசரியில் மனைவி வேண்டும் என்பதற்காக விளம்பரம் செய்தவன் மறுநாளே சில நூறு கடிதங்கள் வரப் பெற்றான்...எல்லாவற்றிலும் ஒரே வரி..."என்னுடையதை எடுத்துக் கொள்"
  • அவன் : "என் மனைவி தேவதை..." இவன் : "நீ கொடுத்து வைத்தவன்...என் மனைவி இன்னும் உயிருடன் இருக்கிறாள்..."