செவ்வாய், 25 மே, 2010

ஞாபகம் வருதே...ஞாபகம் வருதே...

சுசித்ரா, சங்கர், ராஜு, ரவி, சுஜாதா...என்றும் சுறுசுறுப்புடனே..ஆரோக்கியம் கொண்ட நல்ல குடும்பம் ..



இது ஒரு பழைய விளம்பரப் பாடல்...எந்தப் பொருளுக்கு என்று தெரிகிறதா? 


இருபது, முப்பது வருடங்களுக்கு முந்தைய கோக கோலா விளம்பரம் நினைவிருக்கிறதா? "இன்பமூட்டிடும் கோக கோலா..இன்பமூட்டிடும் ஜோக். பிகினிக்கி விருந்து பார்ட்டி..யாவருக்கும் மகிழ்வூட்டி..நேசக் கரம்தனை நீட்டி...இன்பமூட்டிடும் கோக கோலா..." ஞாபகம் வருதா?

007 பனாமா ப்ளேட் மற்றும் பினாகா (பின்னர் சிபாகா) டூத்பேஸ்ட்டும் ரேடியோவில் விளம்பதாரர் நிகழ்ச்சியாக நடத்திய கீத் மாலா ரொம்பப் பிரபலம். அதிலும் பினாகா கீத் மாலா வில் ரேட்டிங்கில் ஒலிபரப்பப்பட்ட ஹிந்திப் பாடல்கள் கேட்க இரவு காத்திருப்போம்...ஓரிரு வரிகள்தான் ஒலி பரப்புவார்கள்..ஆனாலும் கேட்போம்.
***
இந்த விளம்பதாரர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தவர் "உங்கள் நண்பன் L R நாராயணன்" குரல் இன்னும் நினைவில் ஒலிக்கிறது..!

சில விளம்பரங்களும், படங்களும் கீழே...நினைவிருக்கிறதா...இன்னும் விற்பனையில் இருக்கின்றனவா?

யார் வரைந்த ஓவியமோ...!


இப்போது(ம்) இவை வருகிறதா...


சபாஷ்...சரியான போட்டி..(அப்போது..!)



போட்டிக் குடும்பம்...!


வாசகர்கள், அவர்களுடைய மனம் கவர்ந்த பழைய, புதிய விளம்பரங்கள் குறித்து கருத்துகள் பதியலாம். 

36 கருத்துகள்:

  1. இதெல்லாம் எங்க தாத்தா பாட்டி காலத்து விளம்பரங்களா? இதென்னங்க.. எங்கிட்டே போய் இதப் பத்திக் கேட்டுகிட்டு.. ஹிஹி... எனக்கென்ன தெரியப்போகுது?

    பதிலளிநீக்கு
  2. 'யார் வரைந்த ஓவியமோ...!' மாருதி வரைந்த ஓவியங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும். லக்ஷ்மி அவர்கள் எழுதிய கதைகளில், முக்கால்வாசி கதைகளுக்கு இவர் படங்கள்தான். என்ன, ஹீரோவும் கொஞ்சம் ஹீரோயின் சாயலிலேயே இருப்பார்!
    சுசித்ராவின் 'ஹார்லிக்ஸ் குடும்பம்' தொடர் மதிய வேளையில் வரும். விடாமல் கேட்டிருக்கிறேன். பத்து, பனிரெண்டு போர்ஷன் கொண்ட வீட்டில், கிணற்றடியை ஒட்டி இருக்கும் பெரிய முற்றத்தில் டிரான்சிஸ்டரை முழு வால்யூம் வைத்து கொண்டு நிறைய பேர் சேர்ந்து கேட்போம். அது ஒரு கனா காலம்!
    Bournvita quiz contest! மறக்க முடியுமா? அப்போ முக்கால்வாசி கேள்விக்கு பதிலே தெரியாது. ஆமாம், இப்ப மட்டும் என்னவாம்!

    பதிவு என்னை நான் படித்த நாட்களுக்கு அழைத்து சென்றது, சந்தோஷமா இருந்தது. நன்றி!

    பதிலளிநீக்கு
  3. ஹ்ம்ம் இதுல நான் எந்த விளம்பரமும் பார்த்தது இல்ல

    பதிலளிநீக்கு
  4. எங்க இருந்து புடிச்சிங்க இந்த பேப்பர் எல்லாம் ..

    பதிலளிநீக்கு
  5. Meenakshi Said

    //சுசித்ராவின் 'ஹார்லிக்ஸ் குடும்பம்' தொடர் மதிய வேளையில் வரும்.//


    மதியம் ரேடியோ ? ஸ்கூல் பானாலா ?

    பதிலளிநீக்கு
  6. // மதியம் ரேடியோ ? ஸ்கூல் பானாலா ?//
    சாய் - LOL !! :)

    பதிலளிநீக்கு
  7. உங்களுக்கு மட்டும் எப்புடித்தேன் இதெல்லாம் கெடைக்குதோ....

    பதிலளிநீக்கு
  8. அந்தப் படத்தில் உள்ள பெண்ணின் முகமே சொல்கிறதே, ஓவியர் மாருதி வரைந்தது தானென்று! அவருடைய படங்கள் எல்லாவற்றிலுமே ஒரே முகச் சாயல் இருப்பதைக் கவனித்திருக்கிறீர்களா?

    உங்கள் நண்பன் எல் ஆர் நாராயணன்!?

    எனக்கு சிலோன் வானொலி கே எஸ் ராஜா குரல் தான் கம்பீரமாக இன்னும் நினைவில் நிற்கிறது!

    நீங்கள் கடைசியாகக் கேட்டிருந்த மாதிரி இப்போது இதே மாதிரியே விளம்பரங்களைத் தயாரித்தார்களானால், தயாரிப்பும் சரி, விளம்பரத்தைத் தயாரித்தவர்களும் சரி காணாமல் போக வேண்டியது தான்!

    இப்போதெல்லாம் axe எபெக்ட் தான்!

    பதிலளிநீக்கு
  9. போர்ன்வீட்டா விளம்பரத்தை தவிர வேறெந்த விளம்பரமும் பார்த்ததாக நினைவில்லை. ஆனால், எங்க வீட்டுல இதே புஷ் டேப் ரிக்காடர் தான் இருந்தது. ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பட்டங்களுடன், நீள ஹாண்டிலுடன், சங்கராபரணம்,குர்பானி, எம்.எஸ்ஸின் கஞ்சதளாயகாக்ஷி கேட்டதாக நினைவு. அருமையான நாட்கள்!

    பதிலளிநீக்கு
  10. பழைய நாவல்கள் ரெம்ப பைண்ட் பண்ணி வைச்சு இருக்கீங்க.

    பதிலளிநீக்கு
  11. நான் என்னுடைய‌ இள‌ம் வ‌ய‌தில் பார்த்த‌தாக‌ ஞாப‌க‌ம் தோழ‌ரே
    இவை அனைத்தும்

    ப‌ழைய‌ ஞாப‌க‌ம் எப்போதுமே இனிமையான‌து

    சென்தில்குமார்.அ.வெ

    பதிலளிநீக்கு
  12. பழைய விளம்பரங்கள்ன்னா விக்ஸ்மாத்திரை கிச் கிச் போக்கிடுமே, சர்ஃப் வாங்குவது தான் புத்திசாலித்தனம்ன்னு லலிதாஜி சொன்னது, சிறுகச்சிறுகச்சேமிக்கும் சிட்டுக்குருவியை பாருங்கள்ன்னு வரும் TNSC வங்கி, வாஷிங் பவுடர் நிர்மா, ஹேலோ ஷாம்பூ, பாமாலிவ் கா ஜாவாம் நஹின்னு கபில்தேவின் விளம்பரம், சகூரா - கோனிக்கா, டயனோரா, சாலிடைர், டீஜியானா டீவீக்கள், பிராமிஸ், விக்கோ வஜ்ரதந்தி பேஸ்டு மற்றும் கிரீம் (அரைமணி நேரம் ஓடும் இது, மணப்பெண்ணுக்கு சந்தனம் தேய்ச்சு குளுப்பாடி!ஸ்ஸ்ஸ்.. மெகா மொக்கையான ஆட், அதே மாதிரி டூத்பவுடருக்கு தாத்தாவில் ஆரம்பித்து நண்டு சிண்டு வரைக்கும் விதவிதமான கெட்டியான பதார்த்தங்களையும், அப்பாவித்தங்கமணியின் இட்லி, எல்.கே செஞ்ச மைசூர்பாகு இதெல்லாம் எப்படி கடிச்சு திங்கணும்ன்னு டெமோ குடுப்பாங்க.. )ஹிப்போலீன், ரஸ்னா, சன்சில்க், கிரவுனிங் க்ளோரி சோப், லாசா லம்சா டீத்தூள், நரசூஸ்காபி தேங்காய் (ஸ்ரீனிவாசன், மனோரமா) இப்படி நிறைய நினைவில நிழலாடுறது! நைஸ் மெமரீஸ்!

    பதிலளிநீக்கு
  13. //அந்தப் படத்தில் உள்ள பெண்ணின் முகமே சொல்கிறதே, ஓவியர் மாருதி வரைந்தது தானென்று! //

    I also feel the same.. (Maruthi)

    பதிலளிநீக்கு
  14. எனக்கே தும்மல் வந்துவிட்டது. தூசி தட்டி எடுத்து போட்டீங்களா அதான்.
    இதெல்லாம் எழுபதுகளில் வந்தா விளம்பரங்கள்.
    பினாக்கா கீத் மாலா...... வாவ்.... அதெல்லாம் கூட ஞாபகம் இருக்கா!!
    உங்க பிறந்த நாள் மாதம், வருடம் எல்லாம் எனக்கு தெரிந்து போய்விட்டது.
    ஒன்னும் வருத்தமில்லையே?!

    பதிலளிநீக்கு
  15. 'எந்த பொண்ணு பியர்ஸ் தேச்சி குளிகிராளோ அவ
    அழகா ஆயிடுவா."

    "உன்னப்போலதானேம்மா"

    "அப்புறம் அவள கட்டிக்க ராஜகுமாரனாட்டும் ஒருத்தன் வருவான்"

    "அப்பாவபோலத்தானே !! "

    பதிலளிநீக்கு
  16. சிபாக்கா கீத் மாலா தொண்ணூறுகள்லேயும் வந்திட்டு இருந்தது. அதுல சுமார் ஒரு வருஷம் டாப் டென்ல இருந்த (ஒரே) பாட்டு நாடோடித்தென்றல் மணியே மணிக்குயிலே! ஹாட்ஸ் ஆஃப் டு இளையராஜா!

    பதிலளிநீக்கு
  17. பழைய நாவல்கள் ரெம்ப பைண்ட் பண்ணி வைச்சு இருக்கீங்க.//
    :)))
    நல்ல ஞாபகங்களைக் கிளறி விட்டீர்கள். பினாகா கீத் மாலா அமீர்சயானி நாட்களிலிருந்து கேட்கிறேன்:0)
    சுசித்ராவின் குடும்பம் ஞாயிறு மதியம் ஒலி பரப்பாகும் இல்லையா.

    பதிலளிநீக்கு
  18. எண்பதுகள்தான் எனக்குத்தெரியும்... மேலே சொன்ன எதவும் நினைவில்லை...ஆனால் அருமையான படங்கள். எங்கள் வீட்டில் புஷ் ரேடியோ இருந்துச்ச...அதை தூக்கறதுக்கே பயில்வான் ரங்கநாதனத்தான் கூப்பிடனும்... ப்சே..அது ஒருகாலம்...

    பதிலளிநீக்கு
  19. அருமையான நினைவுகள், படம் மாருதி வரைந்தது தான். அருமையான நினைவுகளைக் கிளறியதற்கு நன்றி.சுசித்ராவின் குடும்பம் மறக்க முடியாத ஒன்று.

    பதிலளிநீக்கு
  20. வெங்கடரமணி25 மே, 2010 அன்று PM 6:14

    விவிதபாரதி தமிழ்ச் சேவை விளம்பரங்கள் ஆரம்பித்த புதிதில் ஒரு சிக்கனமான மனதில் அமர்ந்துகொண்ட விளம்பரம். பின்னணியில் நல்ல மிருதங்க சத்தம் (தனி ஆவர்த்தனம்) அந்த சப்தத்தை அடக்கி ஒரு ஆண் குரல் தெளிவான உச்சரிப்புடன்,நிறுத்தி அழகாக, "எங்கெல்லாம் வர்ணங்கள் தேவையோ, அங்கெல்லாம் ஆசியன் பெயிண்டஸ்" அவ்வளவுதான்.
    இன்னமும் மறக்கவில்லை.

    பதிலளிநீக்கு
  21. ரொம்ப நல்ல இருக்கு, பழங்கால ஞாபகங்கள்

    பதிலளிநீக்கு
  22. மாருதி வரைந்த ஓவியப் பெண்களின் கண்கள் கொள்ளை அழகு@

    பதிலளிநீக்கு
  23. மன்னிக்கவும். என் கொள்ளு தாத்தாவே பிறக்கவில்லை. நான் என் போன ஜென்மத்தக்கும் முந்தைய ஜென்மத்தில் இருந்தேன். சாரி.

    பதிலளிநீக்கு
  24. பின்னியின் " டபிள் ஒ க்விட்" யாவரும் ரசித்த ஒரு நிகழ்ச்சி

    பதிலளிநீக்கு
  25. அருமையான கலெக்ஷன்!
    மாருதியின் ஓவியங்கள் தவிர வேறெதுவும் அதிகம் பார்த்த நினைவில்லை.
    சொட்டு நீலம் டோய் ரீகல் சொட்டு நீலம் டோய் நினைவுக்கு வருகிறது.
    வாஷிங் பவுடர் நிர்மா...
    அப்புறம் தியேட்டர்களில் படம் ஆரம்பிக்கும் முன் போடும் நீயூஸ் ரீல்.. அதில் வரும்
    "இவர் சொல்லுகிறார்" எனும் கனத்தக் குரல்..
    ஸாலிடர் டிவி இப்படி கொஞ்சம் கமர்ஷியல்கள்..!
    வழக்கம்போல் அநன்யா விளையாடியிருக்காங்க பின்னூட்டத்தில்!
    உலகின் முதல் விளம்பரம் என்னவாக இருக்கும் என்று யோசிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  26. இதுல ஒண்ணு கூட நான் பாத்தது இல்லைங்க... நெஜமாவே... எனக்கு ஞாபகம் இருக்கற விளம்பரம் "I love you rasna" தான். அப்புறம் "ஆரோக்ய வாழ்வுக்கு lifebouy ... lifebouy ..." . எனக்கு ரெம்ப பிடிச்சது "வாஷிங் பவுடர் நிர்மா" தான்.. அதோட சேத்து "மாமா வீட்ல குருமா" எங்க மாமா ஒருவாட்டி பாடினதுல இருந்து அது ரெம்ப favourite ஆய்டுச்சு. நாங்களும் அப்படியே பாடுவோம்... பழைய விளம்பரங்கள் பற்றி எழுதியதற்கு நன்றி. இப்படி எல்லாம் இருந்ததான்னு நாங்களும் தெரிஞ்சுக்க ஒரு வாய்ப்பு

    பதிலளிநீக்கு
  27. //Ananya said - அப்பாவித்தங்கமணியின் இட்லி, எல்.கே செஞ்ச மைசூர்பாகு இதெல்லாம் எப்படி கடிச்சு திங்கணும்ன்னு டெமோ குடுப்பாங்க.. //
    சந்தேகமில்லாம இட்லி பார்சல் வீடு தேடி வரும் அனன்யா................................................... LK பொறுத்தது போதும் பொங்கி எழு அண்ணா....

    பதிலளிநீக்கு
  28. //யார் வரைந்த ஓவியமோ...!//

    அது மாருதி வரைந்த படம். மாருதியின் பெண்கள் அழகாக இருப்பார்கள். அவர் வரைகிற ஆண்களுக்கும் கொஞ்சம் ஃபெமினைன்னெஸ் இருப்பதுதான் சிரமம்.

    ரேடியோ விளம்பரத்தில் விஜய் காம்ப்ளெக்ஸ் உரத்துக்காக எஸ்பிபி பாடின இந்தா புள்ள நில்லு, ஒண்ணு கேக்கப் போறென் சொல்லு, கொழு கொழுன்னு பயிரு வளர கொடுப்பதென்ன சொல்லு என்கிற பாடல் என் ஃபேவரைட்.

    http://kgjawarlal.wordpress.com

    பதிலளிநீக்கு
  29. நன்றி. திரும்பவும் அந்த காலத்துக்கு கூட்டிக் கொண்டு போய் விட்டீர்கள். மம்மி..மம்மி..மாடர்ன் பிரட்..மபத்லாலா..இரவு வண்ணச்சுடர்..அந்தாக்‌ஷரி..பம்பாய்
    பஞ்சநதம்.. இரவு ஸ்டோரில் சாப்பிட்டு விட்டு மாடிக்கு வந்து படுத்தால்..தூக்கம் வரும் வரை விவித பாரதி ஆதிக்கம் தான்.ட்ரான்ஸிஸ்டர் தான எவ்வளவு நெருக்கமாய் இருந்தது, அந்த காலத்தில்!
    இப்போதும் தான் டி.வி.இருக்கிறதே..புதிதாய் கல்யாணம் ஆன பெண் கதவருகில் நிற்பது போல் நம் யாரிடமும் ஒட்டாமல் அதும் பாட்டுக்கு நிற்கிறது
    என்ன இருந்தாலும் ட்ரான்சிஸ்டர் ட்ரான்சிஸ்டர் தான்!! அது சரி ரொம்ப பாப்புலர் ஆன விளம்பரம் ஒன்று வருமே.. அது என்ன ?

    பதிலளிநீக்கு
  30. ம்...ஞாபகம் வந்து விட்டது..

    “ கொடுத்து வைச்சவங்க
    கேட்டு வாங்குவது..
    லாலா மசாலா..
    ஆ...ஆ....
    லாலா மசாலா...”

    பதிலளிநீக்கு
  31. ஓவியர் மாருதி என்று நினைக்கும் முன்பே அவரது படிந்த கேசச்சுருள்,
    அடர்த்தியான மீசை, கையெழுத்துக்குக் கீழே போடும் வேல் போன்ற அடிக்கோடு எல்லாம் ஞாபகத்திற்கு வந்தன.
    லேட்டா வந்தா இப்படித்தான். எத்தனை பேர் மாருதி என்று கரெக்டாகச் சொல்லி விட்டார்கள்!

    பதிலளிநீக்கு
  32. வாவ்... எல்லா படங்களும் சூப்பர் கலக்க்ஷன்.. பார்க்கவே அழகா இருக்கு.. :)

    பதிலளிநீக்கு
  33. எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச விளம்பரம், 'எந்த பொண்ணு பியர்ஸ் தேச்சு குளிக்கராளோ'....இதுதான். இதுல வர அந்த பெண் குழந்தை கொழு கொழுன்னு குண்டா அழகா இருக்கும்.

    பற்களை பாதுகாப்பது கோபால் பல்பொடி.
    பற்களை முத்துபோல் பிரகாசிக்க செய்வது கோபால் பல்பொடி.
    பற்சிதைவை தடுப்பது கோபால் பல்பொடி.
    இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கபூர் முதலிய நாடுகளிலும் மக்களின் பேராதரவை பெற்றது
    கோபால் பல்பொடி, கோபால் பல்பொடி, கோபால் பல்பொடி.

    ரொம்ப அவசர அவசரமா வந்துட்டு போய்டும் இந்த விளம்பரம்.

    பதிலளிநீக்கு
  34. டிங்குவைப் போல் ஒரு குழந்தை இருந்தால் ரீகல் அவசியம் தேவை. அம்மாவோட கால் மட்டும் தெரியும், கார்ட்டூன்ல. அப்புறம், சிரிச்சுகிட்டே இருக்குற ’க்ளோசப்’ விளம்பரம்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!