திங்கள், 26 ஜனவரி, 2015

'திங்க'க்கிழமை : காய்கறி கார புட்டு

   
90 களில் வந்த மங்கையர் மலர் இதழில் இந்த ரெசிப்பியை எழுதி, கடலூரிலிருந்து எஸ். ஜெயலட்சுமி என்பவர் 'இம்மாத இல்லத்தரசி' பகுதியில் முதல் பரிசு வென்றிருக்கிறார்.
      
அதை இங்கு பகிரலாம் என்று தோன்றுகிறது.
     
தேவையான பொருட்கள் :  
     
கோதுமை ரவை (சம்பா)  -  200 கிராம்.
பயத்தம் பருப்பு                   -  200 கிராம்.
உப்பு                                      -  தேவையான அளவு.
கடுகும் உ.பருப்பும்            -  ஒரு, ஒரு டீஸ்பூன்.

டால்டா அல்லது 

எண்ணெய்                           - 50 கிராம். (நான் டால்டாவுக்கு எதிரி!)


வேண்டிய காய்கறிகள் :  

கேரட் அல்லது பீட்ரூட்  -  200 கிராம்.
காலிஃபிளவர்                   -  சிறியது
பச்சைப்பட்டாணி            -  50 கிராம்.
(பெரிய) வெங்காயம்     -  2
உ.கிழங்கு                         -  2
கொத்துமல்லித் தழை  -  ஒரு கட்டு
பச்சை மிளகாய்              -  6
இஞ்சி                                -  சிறு துண்டு
தேங்காய்                         -  ஒரு மூடி
எலுமிச்சம்பழம்              -  1 

  



செய்முறை :
பயத்தம்பருப்பைத் தண்ணீரில் ஊற வைக்கவும். கோதுமை ரவையை வெறும் வாணலியில் சிவக்க வறுக்கவும்.  வறுத்த ரவையைத் தண்ணீரில் ஊற வைக்கவும்.  கேரட் அல்லது பீட்ரூட்டை பூப்போல் சீவி வைத்துக் கொள்ளவும்.  ஊறிய பயத்தம் பருப்பைத் தண்ணீர் விடாமல் நைஸாக அரைக்கவும்.  அரைத்த விழுதுடன் ஊற வைத்த கோதுமை ரவை, சீவிய துருவல், திட்டமாக உப்பு சேர்த்துக் கரைக்கவும்.  கரைத்த மாவை இட்லித் தட்டில் ஊற்றி வேக விடவும்.  வெந்தவுடன் எடுத்து, ஆறவைத்து, நன்றாக உதிர்த்து வைத்துக் கொள்ளவும். 
    
(உரித்த பச்சைப்) பட்டாணி, உருளைக்கிழங்கு, காலி ஃபிளவர் இவைகளைச் சிறிது உப்பு, மஞ்சள் பொடி போட்டு வேக விடவும்.  
     
காலிஃபிளவரை உப்புத் தண்ணீரில் போட்டு எடுத்தால் அதில் உள்ள புழுக்கள் வந்து விடும் (அதான் எனக்குத் தெரியுமே...)  
     
வெங்காயம், இஞ்சி, மிளகாயைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.  மல்லித் தழையையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தேங்காயைத் துருவிக் கொள்ளவும்.   
     
அடி கனமான பாத்திரத்தில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு, உளுத்தம்ப........   
      
ஐயையோ..... இந்த இடத்திலிருந்து கிழிந்து போயிருக்கிறதே....  என்ன செய்ய?  இவ்வளவு தூரம் டைப் செய்ததை எதற்கு வீண் செய்ய வேண்டும்?  கிட்டத்தட்ட முடிவுக்கு வந்திருக்க வேண்டும்.  மிச்சம் இருப்பதை என்ன செய்ய வேண்டும் என்று நமக்குத் தெரியாதா என்ன?
அன்புள்ள கடலூர் எஸ். ஜெயலட்சுமி......  எங்கே இருக்கிறீர்கள்?  நீங்கள் இதைப் படிக்கிறீர்களா?  அப்புறம் என்ன சொல்லுங்களேன்....!  



ஆ.... கிடைத்து விட்டது.  மிச்ச பாகமும் கிடைத்து விட்டது. இதோ...
 


அடி கனமான பாத்திரத்தில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும், கடுகு உளுத்தம் பருப்பு போட்டு வறுபட்டவுடன் நறுக்கிய வெங்காயம், இஞ்சி, மிளகாய் போட்டு வதக்கவும்.  வதங்கியவுடன் ஆவியில் வெந்த கோதுமைக் கலவையைக் கொட்டி நன்கு கிளறவும்.  ஆறியவுடன், எலுமிச்சம்பழத்தைப் பிழியவும்.
                 

24 கருத்துகள்:

  1. மிச்சம் இருப்பதை என்ன செய்ய வேண்டும் என்று நமக்கு தான் தெரியுமே!

    90 ல் வந்த மங்கைமலர் என்றால் என்னிடம் இருக்கிறது. தேட வேண்டுமே.

    அருமையான காய்கறி கார புட்டு.
    நன்றி.
    படங்கள் அழகு.

    பதிலளிநீக்கு
  2. அடடா...! நடுவுலே கொஞ்சம் பக்கத்தை காணாம்...!

    பதிலளிநீக்கு
  3. உடம்பில் சோப்பும் தலையில் ஷாம்புவும் தேய்த்து விட்டு நிற்கும் நேரம் ஷவரில் தண்ணி நின்றுபோன மாதிரி ஆகிவிட்டதே......?

    பதிலளிநீக்கு
  4. மாடிப்படி மாது கலக்கல். இந்த முறையில் எங்க அம்மா எப்போவோ எங்களுக்குச் செய்து தந்திருக்கார். ஏனெனில் நாங்க எல்லோருமே கோதுமை ரவை என்றால் முகத்தைச் சுளிப்போம். அதுக்காக இப்படி எல்லாம் பண்ணி தாஜா பண்ணிச் சாப்பிட வைப்பாங்க. :))) நானும் பண்ணி இருக்கேன். ரங்க்ஸைத் தாஜா பண்ண. எங்கே! ஒண்ணும் நடக்காது! :)

    பதிலளிநீக்கு
  5. என்ன ஒரு மாற்றம்னா நாங்க இதை உசிலி என்போம். அம்புடுதேன்.

    பதிலளிநீக்கு
  6. கோதுமை கிச்சடியை இவ்ளோ சுவாரஸ்யமா சொல்லமுடியுமா??? !!!!! சூப்பர் பாஸ்!! இதுக்குமேல எனக்கு தெரியும். but நான் சொல்றத விட உமையாள் மேடம் சொன்னால் இன்னும் சுவையா இருக்கும்னு நினைகிறேன்:)

    பதிலளிநீக்கு
  7. கோதுமை கிச்சடியை இவ்ளோ சுவாரஸ்யமா சொல்லமுடியுமா??? !!!!! சூப்பர் பாஸ்!! இதுக்குமேல எனக்கு தெரியும். but நான் சொல்றத விட உமையாள் மேடம் சொன்னால் இன்னும் சுவையா இருக்கும்னு நினைகிறேன்:)

    பதிலளிநீக்கு
  8. கோதுமை கிச்சடியை இவ்ளோ சுவாரஸ்யமா சொல்லமுடியுமா??? !!!!! சூப்பர் பாஸ்!! இதுக்குமேல எனக்கு தெரியும். but நான் சொல்றத விட உமையாள் மேடம் சொன்னால் இன்னும் சுவையா இருக்கும்னு நினைகிறேன்:)

    பதிலளிநீக்கு
  9. சொல்லி இருக்கும் முறையிலேயே ஜொள்ஸ் வந்திருச்சு.

    விடு ஜூட் போய் காரப் புட்டு செய்து சாப்பிட்டுட்டு வரேன் :)

    பதிலளிநீக்கு
  10. வணக்கம்
    சுவையான உணவு. செய்முறை விளக்கம் நன்று.. பகிர்வுக்கு நன்றி
    இனிய குடியரசு தினவாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  11. காணாமல் போனபகுதி இப்போது இணைத்து வெளியிடப்பட்டுள்ளது!

    பதிலளிநீக்கு
  12. காலிஃபிளவரை உப்புத் தண்ணீரில் போட்டு எடுத்தால் அதில் உள்ள புழுக்கள் வந்து விடும் இல்லை என்றால் வெஜ் ஐட்டம் நான்வெஜ்ஜாக மாறிவிடும் அபாயம் உண்டு என்று நீங்கள் வார்னிங்க் கொடுத்து இருக்க வேண்டும்

    பதிலளிநீக்கு
  13. வணக்கம்!

    "இனிய குடியரசு தின நல் வாழ்த்துக்கள்!"
    ஜெய் ஹிந்த்!

    நன்றியுடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com

    (இன்றைய எனது பதிவு "இந்திய குடியரசு தினம்" கவிதை காண வாருங்களேன்)

    பதிலளிநீக்கு
  14. குடியரசுதின வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  15. லேட்டா வந்து முழு குறிப்பினையும் படித்து விட்டேன்! :)

    பதிலளிநீக்கு
  16. தாமதமாக படித்ததால், முழுப் பகுதியையும் படிக்க முடிந்தது.

    பதிலளிநீக்கு
  17. நல்லதொரு குறிப்பைக் கொடுத்திருக்கிறீர்கள்! சுவையான கிச்சடி!
    நானும் இதைச் செய்வேன், அடிக்கடி காலை நேர உணவு இது தான். பயத்தம்பருப்பு மட்டும் குறைவாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
  18. தாமதமாக வந்ததும் நல்லதாயிற்று. முழு ரெசிப்பியும் படித்தாயிற்று.
    கோதுமை ரவையில் செய்து பார்க்க வேண்டும். சாதா உப்புமா செய்வேன். இந்த காய்கறிப் புட்டு செய்து பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
  19. புட்டுன்னதும் ஓடோடி வந்தால்..... பிட்டுப்பிட்டு வச்சுருக்கே:-)))

    பதிலளிநீக்கு
  20. அப்போ லேட்டா வர்ரதுலயும் ஒரு அட்வான்டேஜ் இருக்குனு சொல்லுங்க....அப்புறம் என்னாச்சுக்கு அப்புறமும் வாசிச்சு....கிட்டத்தட்ட ரவாகிச்சடி...ஆனா என்ன பாசிப்பருப்பு சேக்கச் சொல்லிருக்காங்க...கொஞ்சம் லெங்க்தி ப்ரொசீஜரோ"

    பதிலளிநீக்கு
  21. உப்புமாவுக்கு ரெண்டு விட்ட சகோதரி போலிருக்கு இந்த புட்டு :-)

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!