திங்கள், 24 ஆகஸ்ட், 2015

'திங்க'க்கிழமை 150824:: பூண்டின் மகத்துவம்.

                
பூண்டு பிடிக்காதவர்கள் கூட, ஒருமுறை படித்துப் பாருங்க. 
    
பூண்டு மகத்துவம். 
   


சமையல் அறையில் பயன்படுத்தும் முக்கியமான மூலிகைப் பொருட்களில் ஒன்று வெள்ளைப் பூண்டு. இதய வியாதி மற்றும் புற்றுநோய்க்கு எதிர்ப்பு ஆற்றல் தர வல்லது. கடுமையான மணமுடைய குமிழ் வடிவக் கிழங்கினையும் தட்டையான இலைகளையும் உடைய சிறுசெடி. பூண்டு செடியின் வேர்தான் உணவில் சேர்க்கப்படும் 
வெள்ளைப்பூண்டில் மரபு ரீதியாகவே நிறைய தாதுக்கள், வைட்டமின்கள், நோய் எதிர்ப்பொருட்கள் மற்றும் சத்துப் பொருள்கள் உள்ளன. பூண்டு 100 கிராமில் 5346 மைக்ரான் அளவு நோய் எதிர்ப்பொருட்கள் உள்ளன. தயோ சல்பினேட்’எனும் உயிர்ப் பொருள் பூண்டு வகையில் உள்ளது. இது பிற உயிர் மூலக்கூறுகளுடன் இணைந்து ‘ஆலிசின்’எனப்படும் நொதி செயற்பாட்டு காரணியை உருவாக்கும்.
கெட்ட கொழுப்பான ‘கொலஸ்டிரால்’ உற்பத்தியை தடுக்கும் ஆற்றல் ‘ஆலிசின்’ மூலக்கூறுகளுக்கு இருப்பதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கிறது.
கிழங்கு 10-12 பற்களாக உடையும் தன்மையுடையது. கிழங்குகளே மருத்துவப் பயனுடையவை. பசிதூண்டுதல், செரிமானம் மிகுத்தல், வயிற்று வாயு அகற்றல், சிறுநீர் பெருக்குதல், குடற்புழுக்கொல்லுதல், கோழையகற்றுதல், உடல் தேற்றுதல், உடலுரம் மிகுத்தல், வியர்வை பெருக்குதல், நோவு தணித்தல், அழுகலகற்றல், திசுக்களழித்தல், தாகமகற்றுதல், காய்ச்சல் தணித்தல், என்புருக்கி தணித்தல், காமம் பெருக்குதல் ஆகிய மருத்துவப் பண்புகளையுடையது.
ரத்தத் தட்டுக்கள் உறைந்துவிடாமல் பாதுகாப்பதிலும், ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைப்பதிலும் ‘ஆலிசின்’உதவுவதாக தெரிய வந்துள்ளது. ரத்தக்கட்டிகள் ஏற்படாமல் பாதுகாப்பதிலும், உருவான ரத்தக் கட்டிகளை நீக்குவதிலும் பங்கெடுக்கிறது. இச்செயலால் ‘கரோனரி’தமனி பாதுகாக்கப்படுகிறது. மேலும் இதய பாதிப்புகள், முடக்குவாதம், பி.வி.டி. போன்ற வியாதிகள் ஏற்படுவது தடுக்கப்படுகிறது.
இரப்பைப் புற்றுநோய் பாதிப்பை குறைக்கும் ஆற்றல் பூண்டிற்கு உண்டு என்பதும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
பாக்டீரியா, வைரஸ் மற்றும் பூஞ்சை போன்ற நோய்த் தொற்று நுண்கிருமிகளை ஒடுக்கும் ஆற்றலுடைய நோய் எதிர்ப்பொருட்கள் வெள்ளைப் பூண்டில் உள்ளது. ஆலிசின் சிறந்த நோய் எதிர்ப்பொருளாகும்.
பொட்டாசியம், இரும்பு, கால்சியம், மாங்கனீசு, மக்னீசியம், துத்தநாகம், செலீனியம் போன்ற அத்தியாவசிய தாது உப்புக்கள் உள்ளன. செலீனியம் இதயத்திற்கு ஆரோக்கியம் வழங்கும் தாதுவாகும். நோய் எதிர் நொதிகள் செயல்பட சிறந்த துணைக் காரணியாகவும் இது செயல்படும். மாங்கனீசு, நொதிகளின் துணைக் காரணியாகவும், சிவப்பு ரத்த அணுக்கள் உற்பத்தியில் இரும்புத் தாது பங்குபெறுகிறது.
பீட்டா கரோட்டின், ஸி-சான்தின் போன்ற நோய் எதிர்ப் பொருட்களும், ‘வைட்டமின்-சி’போன்ற வைட்டமின்களும் உள்ளன. ‘வைட்டமின்-சி, நோய்த் தொற்றை தடுக்கும், தீங்கு விளைவிக்கும் ஆக்சிஜன் பிரீரேடிக்கல்களை விரட்டியடிக்கும் தன்மையும் கொண்டது.  
பூண்டு மருத்துவம்.   

10 கிராம் உரித்த வெள்ளைப் பூண்டை பாலில் வேக வைத்துக் கடைந்து சாப்பிட வாயு, செரியாமை, சளி ஆகியவை தீரும். குடல் புழுக்கள் மடியும்.
வெள்ளைப்பூண்டு, மிளகு சேர்த்தரைத்து சாப்பிட வயிற்றுப்பிசம் தீரும்.
பூண்டை இழைத்துப் பருக்கட்டிகளில் பூச அவை உடைத்துக் கொள்ளும்.
வெள்ளைப் பூண்டின் சாற்றில் நவச்சாரத்தைக் குழைத்து வெண்மேகத்தில் தடவி வர வெண்ணிறம் மாறி இயல்பு நிறமாகும்.
10 கிராம் உரித்த வெள்ளைப் பூண்டை 50 மி.லி. நல்லெண்ணெயில் போட்டுக் காய்ச்சி இரண்டொரு துளிகள் காதில் விட்டுவரக் காது வலி, காது மந்தம் ஆகியவை தீரும்.
வண்டு, குளவி, பூச்சி ஆகியவை கடித்த இடத்தில் வெள்ளைப் பூண்டை அரைத்துக் கட்டி எரிச்சல் தாங்க முடியாத நிலையில் எடுத்து விட நஞ்சு அகலும்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
வெள்ளைப்பூண்டானது வியர்வையை பெருக்கும் உடற்சக்தியை அதிகப்படுத்தும், சிறுநீர் தாராளமாக பிரிய வகை செய்யும், சிறுநீர்ப்பை, ஈரல், ஆகியவற்றின் வேலையைத் தூண்டி விடும்.
உடல் பருமன், மூக்கடைப்பு, பீனிச தொல்லைகள் நீக்கும்.
Cholosterol-ஐ கட்டுப்படுத்தும். இருதய இரத்தக்குழாய்களில் கொழுப்பு படிவதைத் தடுக்கிறது
மூட்டுவலி, முடக்குவாதம், ஆகியவற்றை குறைக்கும்.
பூண்டு ,நெய், சர்க்கரை சேர்த்து பிசைந்து உண்ண சீதக்கழிச்சல் தீரும்.
இரைப்பை புற்று நோயை வளரவிடாமல் முளையிலேயே கிள்ளி எறியக்கூடியது.
புற்றை உண்டாக்கும் Nitrosamines என்ற பொருளை உடலில் உற்பத்தியாக விடாமல் பூண்டு தடுத்து உதவுகிறது. புற்று நோயை எதிர்க்கும் சக்தியும் உடலில் உருவாகிறது.
பூண்டுப்பால்: 
உரித்த பூண்டு 15 பற்கள்
பால் 1/4 லிட்டர்
பாலில் பூண்டை வேகவைத்து, இரவு உணவிற்கு பிறகு உண்ணலாம். வாயு நீங்கும், கபம் கரையும் Eosinophilia, BP நீங்கும்.
பூண்டுப்பால் , மஞ்சள் பொடி சேர்த்து கலந்து அருந்தும்போது Tropical Eosinophilia போன்ற ஈளை, இரைப்பு நோய்கள் கட்டுப்பட்டு குணமடைகிறது.   
நன்றி:  thamil.co.uk 
எங்கள் வழி: பூண்டை எளிதாக உரிக்க, பூண்டுப் பற்களை, மைக்ரோ வேவ் ஓவனில் பத்து நொடிகள் சுட்டு எடுத்தால் சுலபமாக உரிக்க முடியும். நகம் / விரல் வலிக்காமல் இருக்கும். பூண்டு சேதமடையாமல் முழுசாக இருக்கும். 
   

20 கருத்துகள்:

  1. பூண்டு உரி டிப்சுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  2. புல்லு,பூண்டு ஒன்றையும் காணோமே என்பதற்கிணங்க அருகம் புல்லையடுத்து பூண்டும் ஒரு முக்கிய விசேஷமான வகைத் தோன்றல். கர்பிணிப்பெண்களுக்கு நல்ல நாள் பார்த்து பூண்டுரஸம் வைத்துக் கொடுத்தல் ஒரு விசேஷதினமாகக் கருதப்படும். வட இந்தியச் சமையல்களில் பூண்டு அரியாஸனம் வகிக்கிறது. பூண்டைப்பற்றி எவ்வளவு விஷயங்கள். நல்ல விஷயம் யாவரும் அறிய வேண்டியது. அழகாக இருக்கிறது. பூண்டு இலைகள் கூட குழம்பு, ஸாலட் வகைகளில் நன்றாக இருக்கும். .நேபாளத்தில் லஸூன் கல்லி என்று சொல்லுவார்கள். நான் உபயோகித்து இருக்கிறேன். படிக்க நன்றாக இருந்தது. நன்றிஅன்புடன்

    பதிலளிநீக்கு
  3. மிக நன்றி ஸ்ரீராம். பூண்டு கண் கண்ட மருத்துவம்.

    பதிலளிநீக்கு
  4. எனக்கு உணவில் பூண்டு சேர்ப்பது பிடிக்கும்

    பதிலளிநீக்கு
  5. ரொம்ப லேட்! ஏற்கெனவே பூண்டு ஒத்துக்காது. இத்தனை நாழி கழிச்சுச் சாப்பிட்டால் ஒத்துக்க வேண்டாமா? பூண்டைப் பூண்டோடு ஒழிக்க முடியாது என்பதால் ஒரு பல், இரண்டு பல் எப்போதேனும் சேர்ப்பேன். ரசம் அல்லது சப்பாத்தி தாலில்

    பதிலளிநீக்கு
  6. பூண்டு உடல் நலனுக்கு நல்லது என்று தெரியும். அதில் உள்ள மருத்துவகுணங்கள் பலவற்றையும் இன்று அறிந்து கொண்டேன். குழந்தைக்குப் பால் அதிகமாகச் சுரக்க இளந்தாய்மார்களுக்குப் பூண்டைப் பாலில் வேகவைத்துக் கொடுப்பார்கள். எனக்குத் தெரிந்த ஆந்திரக்குடும்பத்தினர் பூண்டை உரிக்க அதன் மேல் கொஞ்சம் எண்ணெய் தடவி வெயிலில் காய வைத்துவிடுவார்கள். நன்கு காய்ந்தவுடன் எடுத்து மிகச் சுலபமாக உரிப்பார்கள். பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  7. பூண்டின் மகத்துவத்தைப் பகிர்ந்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  8. அப்படி எல்லாம் உரித்தால் டேஸ்ட் போய்விடும் என்று நகக்கண் எரிய எரிய அப்படியேதான் உரிப்போம். :(

    ஹாஹா இன்னிக்கு ஏதும் புது சாப்பாடு கிடைக்கும்னு வந்தேன். நாங்களே கொலஸ்ட்ரால் குறைக்கும்னு பால்லேர்ந்து குருமா பிரியாணி குழம்பு க்ரேவி சப்ஜி எல்லாத்துலயும் பூண்டு போட்டுட்டுத்தான் வர்றோம். அடுத்த வாரத்திலேருந்து ஏதும் டேஸ்டான ரெசிப்பியோட வாங்க சொல்லிட்டேன். இது மாதிரி காய் கனி எல்லாம் போட்டு ஏமாத்தாம. :)

    பதிலளிநீக்கு
  9. எங்கள் வீட்டில் பூண்டு வாடையே கிடையாது!

    பதிலளிநீக்கு
  10. பூண்டு பற்றிய பல தகவல்கள்!! காதில் எண்ணெய் விடத்தான் பயமாயிருக்கிறது

    பதிலளிநீக்கு
  11. பூன்டின் மகத்துவம் பற்றிய இந்தப் பதிவு மிகவும் சிறப்பாக இருக்கிறது! நிறைய பேருக்குப்பயன்படும்.

    பதிலளிநீக்கு
  12. பூண்டின் மகத்துவம் அளப்பற்கரியது....பூண்டு பூண்டுதான்....எங்கள் இருவரது வீட்டிலும் பூண்டு இல்லாமல் விடிவதில்லை....

    பதிலளிநீக்கு
  13. சிறந்த வழிகாட்டல்

    புதிய வலைப்பூவில் இணைய வாருங்கள்
    இவ்வலைப்பூவில் நான் இதுவரை பேணிவந்த ஆறு வலைப்பூக்களை ஒன்றாக்கிப் பேணுகின்றேன்.
    http://www.ypvnpubs.com/

    பதிலளிநீக்கு
  14. வெள்ளை பூண்டுக்கு வெள்ளை மனது ..அதனால் இவ்வளவு மகத்துவம் அதற்கு இருக்கிறது...

    பதிலளிநீக்கு
  15. வெள்ளை பூண்டுக்கு வெள்ளை மனது ..அதனால் இவ்வளவு மகத்துவம் அதற்கு இருக்கிறது...

    பதிலளிநீக்கு
  16. பூண்டை பூண்டோடு பிடிக்காது. இருந்தாலும் கேட்டுக்கொண்டதற்கிணங்க படித்தேன்

    பதிலளிநீக்கு
  17. பூண்டில் கூட சின்னது,பெரியது என்று இரண்டுவகை உண்டு. சின்ன வகைக்கு காரமும்,குணமும் அதிகம். அதேமாதிரி வாஸனையும் அதிகம். உரிப்பதற்கு பெரியவகை சுலபம். பூண்டு சாப்பிட்டால் வெற்றிலை போட்டுக் கொள்ள வேண்டும். வாயில் வாஸனை வருவதை மட்டுப்படுத்த என்று சொல்வார்கள். அது அந்தக்காலம். இப்போது அந்தமாதிரி வழக்கங்களுக்கு அவசியமில்லாது எல்லோரும் உபயோகிக்கும் வஸ்துவாக இருக்கிறது. பழக்கம்தான் காரணம்.

    பதிலளிநீக்கு
  18. இஞ்சி, பூண்டு இரண்டும் உடலுக்கு நல்லது.

    பதிலளிநீக்கு
  19. பூண்டு பற்றிய பயனுள்ள குறிப்பு . பூண்டு உரிப்பதற்கு யோசனை எல்லாம் அருமை.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!