திங்கள், 28 டிசம்பர், 2015

"திங்க"க்கிழமை 151228 :: வெங்காய சட்னி.




அப்பா உடல் நிலை சரியில்லாமல் இருப்பதால் அவரைப் பார்க்க வேண்டி, மதுரையில் சகோதரர் வீட்டுக்கு வந்திருக்கிறேன்.   

அங்குள்ள சமையல் செய்யும் பெண்மணி நேற்று தோசையும், அதற்கு வெங்காயக் கார சட்னியும் செய்து கொடுத்தார்.

"திங்க"கிழமைப் பதிவைப் பற்றிய எண்ணமே இருந்ததால் எதற்கும் இருக்கட்டும் என்று அதை இரண்டு புகைப்படங்கள் எடுத்துக் கொண்டேன்!

மொபைலிலிருந்து ப்ளாக்கில் எழுதுவது மகா இம்சை.  படங்கள் இணைப்பது அதை விட!  

எனவே சுருக்கமான பதிவாக எழுதி விடலாம் என்று எண்ணம்!  ஆனால் பாருங்கள் முன்னுரையே நீண்டு விட்டது!




தக்காளி வெங்காய சட்னியை மனத்தில் நினைத்துக் கொண்டு "தோசைக்கு என்ன சட்னி அரைக்கட்டும்?  தேங்காய்ச் சட்னி? " என்று கேட்டவரிடம் "அதான் நேத்து அரைச்சாச்சே... வெங்காய சட்னி செய்து விடுங்களேன்" என்று சொல்லி விட்டேன்.

[இவரிடம் ஓரிரண்டு ஐட்டங்கள் கேட்டுக் கொண்டிருக்கறேன்.  அடுத்ததடுத்த வாரங்களில் தருகிறேன்!]



அவர் பச்சை வெங்காயக் கார சட்னி செய்து கொடுத்து விட்டார்!  நன்றாகத்தான் இருந்தது.

நானும் இந்த வகை சட்னி செய்திருக்கிறேன்.  இதே போலத்தான்,  ஒன்றே ஒன்றைத் தவிர!  மிளகாயை வறுத்துக் கொண்டதில்லை.  மேலும் வெங்காயச் சட்னியிலும், தக்காளி வெங்காயச் சட்னியிலும் நிறைய மாதிரிகளில் முயற்சித்துச் சாப்பிட்டிருக்கிறோம் - உங்களை எல்லாம் போலவே!

ஏழெட்டு சின்ன வெங்காயம் எடுத்து உரித்து வைத்துக் கொண்டாராம்.  மூன்று பல் பூண்டு எடுத்துக் கொண்டாராம்.  உப்பு தேவையான அளவு சேர்த்துக் கொண்டாராம்.  ஏழெட்டு காய்ந்த மிளகாயை எடுத்து கருக வறுத்துக் கொண்டாராம்.  மிகக் கொஞ்சம் புளி சேர்த்துக் கொண்டாராம்.

சேர்த்து மிக்ஸியில் அரைத்து விட்டார்.



அவ்ளோதாங்க..  யாரும் செய்யாதது இல்லை.  சிறு சிறு மாறுதல்களுடன் எல்லோரும் செய்வதுதான்!  நேற்று எங்கள் வீட்டில் இது!  அவ்ளோதான்!  ஹிஹிஹி...

36 கருத்துகள்:

  1. வெந்தய தோசைக்கும் வெங்காயச் சட்னிக்கும் நல்ல பொருத்தம். ஆனால் நான் பூண்டு வைப்பதில்லை. :) மற்றபடி மி.வத்தலை வறுக்காமலேயே அரைத்துக் கொண்டு இரும்பு வாணலி (இது முக்கியம்)யில் நல்லெண்ணெய் ஊற்றிக் கடுகு தாளித்து அரைத்த சட்னியைக் கொட்டி நன்கு சுருள வதக்கி வைத்துவிட்டால் குளிர்சாதனப் பெட்டியில் வைக்காமலேயே வெளியேயே வைக்கலாம். கெட்டுப் போகாது. நல்லெண்ணெய் ஊற்றிய உதிர் உதிராக வடித்த சாதத்தில் போட்டுப் பிசைந்தும் சாப்பிடலாம். :)

    பதிலளிநீக்கு
  2. தக்காளி, வெங்காயம், மி.வத்தல் வதக்கிக்கொண்டு பச்சைக் கொத்துமல்லியோடு சேர்த்து அரைத்த சட்னியும் அருமையாக இருக்கும். கொ.மல்லிக்குப் பதிலாக புதினாவும் வைக்கலாம்.

    பதிலளிநீக்கு
  3. வெங்காய சட்னி எங்கள் வீட்டில் மிக பிரபலம். அதுவும் டையாபிடிஸ் கொடி கட்டிப் பறந்துக் கொண்டிருக்கும் நேரத்தில் இதற்கு மவுசு அதிகம்.
    நீங்கள் சொல்வது போல் மொபைலிலிருந்து எழுதுவதும், படங்கள் இணைப்பதும் மகா கொடுமை.
    எனக்கு மட்டும் தான் அந்த டெக்னிக் தெரியவில்லை என்று நினைத்திருந்தேன். என்னைப் போல் பலர் இருக்கிறார்கள் என்பது சற்று ஆறுதல். ஆனால் இந்த டெக்னிக் தெரிந்தவர்கள் சற்று விளக்கினால் நலம்.

    பதிலளிநீக்கு
  4. வீட்டில் நானும் செய்யச் !சொல்கிறேன்

    பதிலளிநீக்கு
  5. தங்கள் தந்தை நலமடைய பிரார்த்திக்கிறேன்!

    குறிப்பிற்கு நன்றி! இந்த வெங்காயச் சட்னி வெங்காயம் குறைவாகவும் அல்லது நிறைய சேர்த்தும் பூண்டு சேர்த்தும் சேர்க்காமலும் சிலர் புளி சேர்த்தும் செய்வது தான்! ஒவ்வொன்றும் ருசியாகவே இருக்கும். இட்லியை விட தோசைக்குத்தான் நிறைய காலியாகும்!

    பதிலளிநீக்கு
  6. நீங்க மகா பொறுமை சாலிதான் ,பதிவை மொபைல் மூலம் போட்டு விட்டீர்களே :)

    பதிலளிநீக்கு
  7. இதன் ஒரு மாதிரியை நாங்களும் செய்வோம் அதற்கு எங்கள் வீட்டில் காந்தி சட்னி என்று பெயர் தந்தையார் நலமா?

    பதிலளிநீக்கு
  8. எனக்கு புதுசு, முயற்சிக்கிறேன்.
    சட்னி நான் ஆகாமல் இருக்கனும் அதனைச் சாப்பிட்டபின்.
    தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  9. நான்கூட முன்பு இதேவகை சட்னி தெரிந்தவர்கள் சொல்லக்கேட்டுப் போட்டிருக்கிறேன். மிளகாய் வறுத்து , வெங்காயத்தையும் வதக்கிப் புளிசேர்த்து அரைத்தது. சிலசில மாறுதல்களுடன், அடுத்தவர்கள் கைப்பக்குவத்தில் அலாதி சுவை கூடும். எண்ணோயில் வதக்கி எடுத்துவிட்டால் தொக்காகிவிடும். உங்கள் தகப்பனார் உடல்நலம் குணமானதா? அன்புடன்

    பதிலளிநீக்கு
  10. எண்ணோயில் இல்லை. எண்ணெயில் தவறுகள் எப்படியாவது வந்து விடுகிறது. அன்புடன்

    பதிலளிநீக்கு
  11. தோசையும் வெங்காய சட்னியும் சூப்பர்.

    பதிலளிநீக்கு
  12. அந்தக் காலத்தில் 'அடாது மழை பெய்தாலும், விடாது நாடகம் நடக்கும்' என்று விளம்பரம் செய்வார்களாம். அதுபோல எதை விட்டாலும் 'திங்க'றதை விடாமல் போட்டுவிட்டீர்கள்!
    அப்பா எப்படி இருக்கிறார்?

    பதிலளிநீக்கு
  13. அப்பாவுக்கு எங்கள் பிரார்த்தனைகள். இப்போது எப்படி இருக்கின்றார்?

    கீதா: கொஞ்ச நாளாகவே முடியாமல் இருக்கின்றார் இல்லையா...

    தோசையும் வெங்காயச் சட்னியும் சூப்பர் காம்பினேஷன். சேம் ரிசிபி...வேறு மாதிரிகளும் உண்டு. பல காம்பினேஷனில். எண்ணையில் வதக்கித் தொக்கு செய்வதும் உண்டு. (தொக்கில் வெந்தயம் வறுத்துப் பொடி செய்து போடுவதுண்ணு வதக்கும் போது..)

    பதிலளிநீக்கு
  14. வாவ் !! யம்மி யம்மி அந்த பஞ்சு தோசை ரெசிப்பியும் கேட்டுக்கோங்க

    பதிலளிநீக்கு
  15. மொமைல் மூலம் இட்ட பதிவா
    ஆச்சரியமாக இருக்கிறது நண்பரே
    எனக்கெல்லாம் ஒரு எஸ் எம்.எஸ் அனுப்புவதற்குள்ளேயே
    போரடித்து விடுகிறது
    தங்களின் பதிவு ஆர்வம் பாராட்டுதலுக்கு உரியது
    தம +1

    பதிலளிநீக்கு
  16. சுவைக்கும் ஆசையை தூண்டியது!
    த ம 8

    பதிலளிநீக்கு
  17. வணக்கம்
    ஐயா
    சுவையான உணவு பற்றி சுவையாக சொல்லியுள்ளீர்கள்
    செய்திடுவோம்... சாப்பிடுவோம்...ஐயா.த.ம 9
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  18. நன்றி கீதா மேடம். வதக்கிச் செய்யும் முறைகளிலும் மற்ற முறைகளிலும் நாங்களும் செய்வோம். இது வதக்காத வெங்காயம்! வழக்கம் போல மேலதிக டிப்ஸ்களுக்கு நன்றி. :)))

    பதிலளிநீக்கு
  19. நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம் மேடம். மொபைலில் சேர்க்கத் தெரியும். ஆனால் சள்ளை பிடித்த வேலை. கணினியில் செய்யும் வேகத்தில் செய்ய முடியாது. இம்சை!

    பதிலளிநீக்கு
  20. வருகைக்கும் பிரார்த்தனைக்கும் நன்றி மனோ சாமிநாதன் மேடம். ஆம், தோசைக்குத்தான் அதிகப்படியாகச் செல்லும். இட்லிக்குப் பெரும்பாலும் சாம்பார்தான். நாங்கள் மிளகாய்ப்பொடியும் அதிகம் சேர்ப்போம்!

    பதிலளிநீக்கு
  21. நன்றி ஜி எம் பி ஸார். தந்தை நலம்.

    பதிலளிநீக்கு
  22. நன்றி பேராசிரியயை மகேஸ்வரி பாலச்சந்திரன்.

    பதிலளிநீக்கு
  23. நன்றி காமாட்சி அம்மா. அப்பாவுக்கு வயதாவதால் பிரச்னைகள்.

    பதிலளிநீக்கு
  24. நன்றி நண்பர் சொக்கன் சுப்பிரமணியன்.

    பதிலளிநீக்கு
  25. நன்றி ரஞ்சனி மேடம். அப்பா நலம் என்றுதான் சொல்ல வேண்டும்!

    பதிலளிநீக்கு
  26. நன்றி துளசிஜி, கீதா. அப்பாவுக்கு வயதாவதன் பிரச்னைகள்

    பதிலளிநீக்கு
  27. நன்றி ஏஞ்சலின். பஞ்சு தோசை ரெசிப்பி கேட்டுச் சொல்றேன்.

    பதிலளிநீக்கு
  28. நன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார்.

    பதிலளிநீக்கு
  29. நன்றி நண்பர் செந்தில்குமார்.

    பதிலளிநீக்கு
  30. நல்ல சட்னி. அப்பாவின் உடல் நலம் இப்போது எப்படி இருக்கிறது? நலமா?

    பதிலளிநீக்கு
  31. பின்னூட்டங்கள் மூலம் அப்பா நலம் என்று அறிந்தேன்.நலமாக இருப்பது அறிந்து மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!