வியாழன், 17 டிசம்பர், 2015

ஆனந்த விகடன் முத்திரைக் கதை - சந்திப்பு ஓயாது - எழுதியது யார்?


அறுபதுகளில் ஆனந்த விகடனில் முத்திரைக் கதைகள் என்று வாராவாரம் வெளியிட்டுக் கொண்டிருந்தார்கள்.  எல்லாமே சம்திங் ஸ்பெஷல் டைப்!  ஜெயகாந்தன், தி.ஜா உட்பட பெரிய, புகழ் பெற்ற எழுத்தாளர்கள் படைப்புகள் வெளியாகிக் கொண்டிருந்தன.


இனியவன் என்ற எழுத்தாளர் எழுதிய கதையில் அவர் போட்ட ஆடோக்ரஃ ப். அப்பாவின் நண்பர் போலும்!






கீழே நான் தந்திருப்பது அதில் வெளியான ஒரு பிரபல எழுத்தாளரின் படைப்பு இது.  யார் என்று கண்டு பிடிக்க முடிகிறதா என்று பாருங்கள். 

ஒவ்வொருவருக்கும் ஒரு நடை இருக்கிறது.  சில பிரத்யேக வார்த்தைகள்,  அமைப்பு இருக்கிறது.  அதை வைத்து ஆர்வ வாசகர்கள் எளிதாகக் கண்டு பிடிக்கலாம்.  குறிப்பாக  மேடம், கீதா சாம்பசிவம் மேடம், வல்லிசிம்ஹன், ஜீவி ஸார் போன்றவர்கள் எளிதாகக் கண்டு பிடிக்க முடியும்.  என் வாசக அனுபவத்தைப் பொறுத்து, நான் அண்டர்லைன் செய்திருக்கும் வார்த்தைகள் முத்திரை வார்த்தைகளாயிருக்கலாம்.  

======================================================================



     ன்றுதான் நான் வசந்தியை முதன் முதலில் சந்தித்தது.

     தேர்வுகள் நடந்து கொண்டிருந்தன.  'சர்ஜரி' இரண்டாவது நாள், கைப்பிடிக்குள் அடங்காத மூன்று புத்தகங்களை இரண்டு கைகளாலும் அனைத்துக் கொண்டு மேம்பாலத்தினின்று இறங்கி பிளாட்பாரத்துக்குள் ஓடினேன்.  கார்டின் இரண்டாவது குழலோசை கேட்டு மின்வண்டி நகரத் தொடங்கியது.  பழக்கத்தின் லாகவம் காரணமாகக் கால்கள் எப்படியோ வண்டிக்குள் ஏறிக் கொண்டன.  அத்தனை வேகத்தில் நான் அதில் தொத்திக் கொண்டதைக் கண்டு அந்தப் பெண் திடுக்கிட்டிருக்க வேண்டும்.  ஆனால் அதையெல்லாம் அப்போது கவனிக்க எனக்கு நேரமில்லை.  மணி எட்டு; இன்னும் சரியாக இரண்டு மணிநேரம்தான் இருக்கிறது.  எந்தப் புத்தகத்தில் எந்தப் பகுதியைப் படிப்பதென்றே எனக்கு விளங்கவில்லை.  என்ன செய்வதென்று தெரியாத நிலையில் கைகள் வேகமாகப் பக்கங்களைப் புரட்டிக் கொண்டிருந்தன.  மூளைக்கும் கண்களுக்கும் தொடர்பு இல்லாதொரு விசித்திரமான நிலை.  ஒருகணம் அவளை ஏறிட்டுப் பார்த்தேன்.  என்னையேதான் அவளும் பார்த்துக் கொண்டிருந்தாள்;  என் நிலை கண்டு இரங்குவது போன்ற ஒரு தோற்றம்.

     இதற்குள் குரோம்பேட்டை வந்து விட்டதா?  போயும் போயும் புத்தகங்களைக் கொண்டு வந்தோமே, வகுப்புகளில் எடுத்த குறிப்பு நோட்டைக் கொண்டு வந்திருக்கக் கூடாது?  அந்நிலையிலும் கூட இல்லாத ஒன்றிற்கான ஏக்கம்.  வருவது வரட்டும் என்று இந்த இரண்டு மணி நேரத்திற்கும் ஒரு புத்தகத்தையும் தொடாமல் இருந்து விட்டால் என்ன?  ...மூன்று வருட காலமாகப் படிக்காததை இந்த இரண்டு மணியில்தானா படித்து விடப் போகிறோம்?

     பரங்கிமலை கூட வந்து விட்டது ;  கூடவே டிக்கெட் பரிசோதகரும் எங்கள் பெட்டிக்குள் நுழைந்தார்.

     அவர் என்னிடம் வந்து கைநீட்டிய பொது பைகளைத் துழாவிய எனக்கு அதிர்ச்சி காத்திருந்தது ;  சிட்டுக்குருவியின் இயல்பான இதயத் துடிப்பின் எண்ணிக்கையை என் இதயம் அப்போது எட்டியது.  'பர்ஸு'ம் பணமும் கொண்டுவர வர மறந்து விட்டேன்.  

     விளக்கிச் சொன்னால் போகிறது - அலட்சியம் இழையோடியது.

     ஆனால் எவ்வளவு சொல்லியும் அவர் விடுவதாயில்லை.  என்னைக் காப்பாற்ற அந்தப் பெண்தான் முன் வந்தாள்.

     " நீங்கள் மட்டும் இல்லாமலிருந்தால் நான் தேர்வுக்கு நேரத்தில் சென்றிருக்க முடியாது."  என் நன்றி யுணர்வு தன் குரல் கொண்டு பேசியது.

     " என்ன தேர்வு?"

     " சர்ஜரி."

     " ஓ !  சரசரியா !  தேர்வு எங்கு நடக்கிறது?"

     " கான்வகேஷன் ஹாலில்."

     " இந்த மறதி நிச்சயம் உங்களுக்கு விடைத் தாளில் வராதென்று எனக்குத் தெரியும்."  குழந்தை போலச் சிரித்தாள்.

     இப்போது எனக்கு தன்னம்பிக்கைதான் வெகுவாகத் தேவைப்பட்டது.

     " எந்த ஸ்டேஷனில் நீங்கள் இறங்க வேண்டும்?"

     " பார்க்கில்."

     " அங்கிருந்து நீங்கள் எப்படிப் போவீர்கள்?"

     " பஸ்ஸில்."

     " பணம் ?"

     நான் விழித்தேன்.

     " இதை வைத்துக் கொள்ளுங்கள். " நான் துரும்பாகி விட்டது போன்று ஒரு பிரமை.

     " தயவு செய்து உங்கள் ' அட்ரஸ் ' வேண்டுமே ! "

     " பணத்தைத் திரும்பக் கொடுக்கத்தானே கேட்கிறீர்கள் ?  நான் சொல்ல மாட்டேன் ;  நீங்கள் என்றைக்குமே எனக்குக் கடன்பட்டவராகத்தான் இருங்களேன் ! " கபடமற்ற அதே மழலைச் சிரிப்பு.

     ' பார்க் ' வந்து விட்டது.  எப்படி நன்றி தெரிவிப்பது என்று தெரியாத நிலையில் நன்றி தெரிவித்துக் கொண்டு இறங்கினேன்.

     " வெரி பெஸ்ட் ஆப் லக் ! "

     " தேங்க் யூ ! "

     தாவர நூல் பேராசிரியர் ஒருவர் ;
ஒழுங்கும் கண்டிப்பும் நிறைந்தவர் ;  மாணவர்கள் நல்வாழ்வு வாழ ஒரு எடுத்துக் காட்டாக வாழ்பவர்;  அப்படிப்பட்டவரே ஒரு முறை நேர்மை தவறி தன் தரம் குன்றி அலைந்து பின் தன் பழைய நல்வாழ்வைத் தொடங்குவதாக அருமையான ஆங்கிலப் படம்.  அன்று பிற்பகல் காட்சிக்குச் சென்றிருந்தேன்.  படம் ஆரம்பமாகச் சில நிமிடங்களே இருந்தன.  வெள்ளித்திரை ஏதோ பாட்டுக்களைப் பாடிக் கொண்டிருந்தது.  உருவமில்லாத பாட்டுகள்.

     " கன்கிராஜ்லேஷன்ஸ் ! ":  பின் பக்கத்திலிருந்து குரல் வந்தது.  திரும்பிப் பார்த்தேன்.  அவளேதான் !

     அவளை மறுபடியும் ஒருமுறை காணமுடியும் என்று நான் எண்ணியதே இல்லை.  அவளைக் கண்டத்தில்தான் எத்தனை நிறைவு !  நிறைவின் அதிர்ச்சியில் இதயம் படபடத்தது.

     " தேறி விட்டேன் என்று உங்களுக்கு எப்படித் தெரியும் ? "

     " நிச்சயம் தேறி விடுவீர்கள் என்று எனக்கு முன்பே தெரியுமே ! "  காற்றில் மலர்ந்தாடும் தாமரையின் அழகை அப்போது கண்டேன்.  பெருமையில் கலவாத ஒரு பெருமை உணர்வு அதில் தேங்கி நின்றது.  

     " பணம் கொண்டு வந்திருக்கிறீர்களா ? "


     " திருப்பிக் கொடுக்கலாமென்றால் உங்களைக் காணவே இல்லை.  அதற்குப் பிகு இன்றுதான் உங்களைப் பார்க்கிறேன் " மன்னிப்புக் கேட்கும் பாவனையில் என் குரல் ஒலித்தது. 

     " ஐயோ, நான் அதைப் பற்றியே கேட்கவில்லை.  இன்று  படம் முடிந்ததும் திரும்பிப் போகப் பணம் இருக்கிறதா என்று கேட்டேன் ! " குறும்புத் தன்மையிற் சேராத ஒரு குறுநகை இழையோடியது.

     எத்தனை வற்புறுத்தியும் அவள் பணத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்ள மறுத்து விட்டாள்.  " நாம் எவ்வளவோ நாட்கள் இன்னும் இந்த உலகத்தில் வாழ வேண்டியிருக்கிறது.  அதற்குள் என்றாவது ஒரு நாள் இதற்குப் பிரதி உபகாரமாக ஒன்று பெற்றுக் கொள்ளாமலா போய்விடுவேன்?"  பெரிய வேதாந்தி போலப் பேசி விற்று, கள்ளமின்றிப் பெரிதாகச் சிரித்தாள்.

     " அன்று அந்த அவசரத்தில் உங்கள் பெயரைக் கூட கேட்டுத் தெரிந்து கொள்ள மறந்து விட்டேன். "

     "இப்போதாவது தெரிந்து கொள்ள வேண்டுமென்று நினைவு வந்ததே... வசந்தி."

     " நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று தெரிந்து கொள்ளலாமா?"

     " பெண்கள் கல்லூரியில் கெமிஸ்டிரி டியூட்டராக இருக்கிறேன். "

     விளக்குகள் அணைந்தன.  பேச்சு தடைப்பட்டது.  சின்னஞ்சிறு விளம்பரத் தொகுப்புகளும், ' டிரெய்லர் 'களும் ஓடி முடிந்து, மறுபடியும் விளக்குகள் எரிந்தன.  அவையே ஒரு பெரிய படம் பார்த்த சலிப்பை மனதில் விட்டுச் சென்றன. 

     திரும்பி அவளைப் பார்த்தேன்.  புன்னகை ஒன்று பதிலுக்குக் கிடைத்தது.  கேள்வி - பதில் தொடர்ந்தது.

     " சிவில் அஸிஸ்டென்ட் சர்ஜன் என்று சொல்வார்களே, அந்த வேலையில்தானே இப்போது இருக்கிறீர்கள்? "

     " அத்தனை சீக்கிரம் அந்த நிலைக்குப் போய்விட முடியுமா?  இப்போது இண்டர்னீ ;  அடுத்த ஆண்டு ஹவுஸ் சர்ஜன் ;  அதற்கும் அடுத்த ஆண்டு வேண்டுமானால் அப்படி ஆகலாம்."

     " மேலே என்ன செய்வதாக உத்தேசம் ? "

     " எம். எஸ் படிக்கலாம் என்று ஒரு சபலம். " 

     " சபலமா?... அப்படி யென்றால் ? "

     "நாளை என்ன நடக்கப் போகிறது என்று யார் சொல்ல முடியும் ? "  ஏதோ இப்போதுள்ள ஆசையைச் சொன்னேன்.  நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் ? "
     " ரிஸர்ச் எம். எஸ். ஸிக்கு முயற்சிக்கலாம் என்று ஒரு சபலம்."

     " சபலமா... ? "

     " பின் என்ன ?  நாளை என்ன நடக்கப் போகிறது என்று யார்... " பெரிதாகப் போகின் வந்த சிரிப்பு அவளைப் பேச வொட்டாமல் செய்தது.  அத்தனையும் குறும்பு.

     மறுபடியும் விளக்குகள் அணைந்தன.

     தாவர நூல் பேராசிரியரின் லட்சிய வாழ்வு கண்டு மகிழ்ந்தேன் ;  அவர் தாழ்ந்து வீழ்ச்சி கண்டபோது நானும் தாழ்ந்து வருந்தினேன் ;  பின் பழைய வாழ்வு திரும்பக் கண்டபோது நானும் மன அமைதி கொண்டேன் !

     எத்தனை எத்தனையோ உயரிய எண்ணங்களை மனத்தில் பூக்கச் செய்த அந்த மாயத்திரை பின் வெறும் வேந்திரையாகக் காட்சி தந்தது.  கனவினின்று விடுபட்டுக் கண்களைக் கசக்கிவிட்டுக்கொண்டு வசந்தியைத் திரும்பிப் பார்த்தேன்.

     " என்ன !  படத்தில் அப்படி ஒன்றிப் போய்விட்டீர்களே !  நாம் இருப்பது சென்னை !  ஜெர்மனி அல்ல... புரிகிறதா ? " சின்னஞ்சிறு உதடுகளைக் குவித்து அவள் சிரித்தது அழகின் சிரிப்பாக இருந்தது.

     தன் வீட்டு முகவரியை எழுதி என்னிடம் தந்தவாறே " நிச்சயம் வீட்டிற்கு ஒரு நல வரவேண்டும் " என்றாள், அன்பும் கண்டிப்பும் கலந்த குரலில்.
     வருவதாகத் தலையசைத்தேன்.

     " அந்த ஊமைச் செய்கைகளெல்லாம் வேண்டாம்.  வருகிறேன் என்று வாய் திறந்து சொல்லுங்களேன் ! " கட்டளையைச் சிரிப்பில் தோய்த்து இட்டாள். 
     வாய் திறந்து சொன்னேன்.

     " ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வேலையும் எதிர்பார்த்துக் கொண்டிருப்பேன் ! " மிதந்து செல்லும் பொன்னிற மேகம் போல் அவள் அதிர்வின்றி ஊர்ந்தாள்.  தென்றலில் மலர்ந்தாடும் மென்கொடி யொன்று கண்களின் வட்டத்தினின்றும் மறைந்தது. 


     தற்குப் பிறகு ஒரு வருட இடைவெளிக்குப் பின் தான் வசந்தியை ஒரு நாள் கடற்கரையில் சந்தித்தேன்.  ஏதோ மனத்தை அழுத்திக் கொண்டிருந்த சுமையை அந்த இனிய சூழ்நிலை குறைக்காதா என்று ஏங்கித்தான் அங்கு சென்றிருந்தேன்.

     வசந்தி தன் பெற்றோருடன் வந்திருந்தாள்.  என்னைப் பார்த்து விட்ட அவள், தந்தையிடம் ஏதோ சொல்லி விட்டு, என்னிடம் விரைந்து வந்தாள்.

     " அன்று எத்தனை முறை வருந்தியழைத்தேன்.  இந்த ஒரு வருடத்தில் என் வீட்டிற்கு வர உங்களுக்கு ஒரு நாளில் கூட நேரம் கிடைக்கவில்லை, இல்லை? " கடைசிச் சொல்லில் அவள் இட்ட அழுத்தம் உள்ளத்தில் ஒரு கண நேர நடுக்கத்தை விட்டுச் சென்றது.

     மன்னிப்புக் கேட்கும் பாவனையில் மணலையே நோக்கிக் கொண்டிருந்தேன்.  நெடுநேரம் அவளும் பேசவில்லை ;  நானும் பேசவில்லை.  என் நிலை கண்டு அவள் இரக்கம் கொண்டிருக்க வேண்டும்.

     " போனால் போகிறது ;  அதற்கெல்லாம் பிராயச்சித்தமாக நீங்கள் இன்று மாலை எங்களோடு வீட்டிற்கு வருகிறீர்கள் ; என்ன ? ...."  ஒவ்வொரு சொல்லும் கட்டளையிடும் பணிவு ஏற்றிருந்தது.

     அந்தத் தாக்குதலுக்கு ஒருவித எதிர்ப்புமின்றி நான் சரணடையக் கண்டு, அந்த முகத்தில் மற்ற உணர்வுகளெல்லாம் விடை பெற்று, மகிழ்வு ஒன்றுதான் நிறைந்திருந்தது.

     இத்தனை நாட்களுக்குப்பின் ஒருவரை ஒருவர் சந்தித்த மகிழ்வில் பூரணமாகத் திளைக்க இயலாதவாறு அந்த நினைவுகள் மனத்தை அழுத்திக் கொண்டிருந்தன.  அதை அவளும் கண்டுகொண்டிருக்க வேண்டும்.

     " ஏன்  என்னவோ போலிருக்கிறீர்கள் ? "

     வடிகால் ஒன்று கண்டதுதான் தாமதம், தேங்கி நின்றிருந்த உணர்வுகள் வடிந்தோடின.  " என்னவோ வேண்டாத நினைவுகள் விடாமல் சுற்றிச் சுற்றி வந்து துன்புருத்த்கின்றன.  எத்தனையோ முயற்சிக்கிறேன், அவற்றிலிருந்து தப்ப இயலவில்லை.  உலகில் புது உறவு கொண்டாடி வரும் புத்தம் புதிய உயிர்களையும் பிரிக்க முடியாத உறவுகள் என்று இறுமாந்திருந்த பிணைப்புகளை யெல்லாம் கடைசியில் நிர்தாட்சண்யமாக உதறி விட்டுச் செல்லும் உயிர்களையும் கண்டு... அப்பப்பா !   சொல்வதுபோல் உலகத்தில் நாம் காணும் உறவுகள் அனைத்தும் வெல்ல முடியாத மாயையின் வெவ்வேறு தோற்றங்கள்தான்.  இது எனக்கும் சில நேரம் புரிகிறது.  ஆனால் பரிதாபம் என்னவென்றால், அந்த உண்மையைப் பல வேளைகளில் அடியோடு மறந்து விடுகின்றேன்."

     " தயவு செய்து அந்த நினைவுகள் இப்போது வேண்டாம்.  எனக்காக சாவடி எல்லாம் உதறி எறிந்து விட்டு இன்று எங்களோடு மகிழ்ச்சியாக இருங்களேன் ! "
     ஒரே ஒரு நிமிஷம். எங்கள் வார்டில் நேற்று நடந்த ஒன்றை மட்டும் சொல்லி விடுகின்.  வயது பன்னிரண்டு இருக்கும்.  ஒரு ஊமைப் பையன்;  இருதய வியாதி உள்ள அவன் எங்கள் வார்டில் ஆறு மாதங்களாக இருக்கிறான்.  அழைத்து வந்து வார்டில் சேர்த்துச் சென்ற அவன் தந்தை அதற்குப் பிறகு ஒருமுறை கூட அவனைப் பார்க்க வந்ததில்லை.  அவர்கள் ஊர் வெகு தூரம்.  அடிக்கடி வந்து போகலாமென்றால் பண வசதி இல்லையாம்.  நேற்றுத்தான் அவனை வீட்டுக்கு அனுப்புவதாக இருந்தோம்.  பையனை வந்து அழைத்துப் போகச் சொல்லி ஒரு வாரத்திற்கு முன்பே தந்தைக்குக் கடிதம் எழுதியிருந்தோம்.  


தன் பெற்றோரைக் காணப்போகும் மகிழ்வில்  தினங்களாக அந்த ஊமையின் பேசும் உள்ளம் எத்தனைத் துள்ளியது தெரியுமா ? நேற்று காலை ஏதோ எழுதிக் கொண்டிருந்த என்னருகில் வந்து, மேஜையின் ஓரமாக நானிருந்த நாற்காலியின் மீது சாய்ந்தவாறு நின்று கொண்டிருந்தான்.  ஏறிட்டு அவனைப் பார்த்தேன்.  குழந்தையைப் போல்,  அர்த்தமுமின்றிச் சிரித்தான்.  நான்கணா நாணயம் ஒன்றை என்னிடம் நீட்டி, ஏதோ சைகை காட்டினான்.  ' அதை உண்டியலில் போட வேண்டுமாம். '  என் உள்ளம் நெகிழ்ந்து விட்டது.  மேஜையின் ஒரு மூலையில் பொருத்தி வைக்கப்பட்டிருந்த ஏழைகளுக்கான உண்டியலில் அதைப் போட்டேன்.  சிறிது நேரம்தான் சென்றிருக்கும்.  மேஜையின் அருகிலேயே சரிந்து விழுந்து விட்டான்;  கைகால்கள் ஓரிரு முறை வலித்தன ;  அவ்வளவுதான்.  மாலை ஊரிலிருந்து வந்த அவன் தந்தை பாவம்.... "

     " ஐயோ ! தயவு செய்து அதையெல்லாம் என்னிடம் சொல்லாதீர்களேன் ! " கெஞ்சினாள் வசந்தி.

     பிறகு பெற்றோரிடம் அழைத்துச் சென்றாள்.  முன்பே என்னைப் பற்றிச் சொல்லியிருந்திருக்கிறாள் ;  அவர்களுக்கு என்னைக் கண்டதில் மகிழ்ச்சி.

     மாலை மங்கியபோது அவர்களுடன் வீட்டிருகுச் சென்றேன்.  இரவு நீண்ட நேரம் நானும் வசந்தியின் தந்தையும் பேசிக் கொண்டிருந்தோம்.

     தன்பின் மாதம் ஒருமுறையாவது வசந்தியின் வீட்டிற்குச் சென்று வந்தேன்.  செல்வத்தின் வளர்மையில் ஒரே பெண்ணின் செல்லத்தோடு வளர்ந்து நின்ற அவளில், கள்ளமின்றி வளைய வரும் குழந்தையைக் கண்டேன்.  நிறைவும், மகிழ்வும் நிறைந்திருந்த அந்தச் சூழ்நிலையிலேயே காலத்துக்கும் இருந்து விடக் கூடாதா என்று உள்ளம் ஏங்கும்.

     அங்கு சென்று விட்டால் போதும்;   ஏதோ தனி உலகத்திற்கு வந்துவிட்டாற்போன்று ஒரு உணர்வு ;

     " செஸ் ஒரு கேம் வருகிறீர்களா ? " என்பாள்.

     "செஸ்" என்றால் அவளுக்கு மிகவும் விருப்பம் ; ஆடுவதை விட அதை ஆடித் தோற்பதில்தான் அதிக விருப்பம்.  தோல்வியின் எல்லையை நெருங்குகிறோம் என்று தெரிந்து விட்டால் போதும் - காய்களைத் தாறுமாறாகக் கலைத்து விட்டு ' போர்டை' விட்டு எழுந்து விடுவாள்.  " பெரிதாக ஜெயித்து விட்டீர்களா ?  நான் தொற்றதால்தானே உங்களால் ஜெயிக்க ?முடிந்தது  "


     

     தோல்வியில் வெற்றி கண்ட அந்த வளர்ந்து விட்ட குழந்தை கைகொட்டிச் சிரிக்கும்.

     எங்களில் வென்றவர் பிறகு தன்னோடு ஆட வேண்டும் என்று அவள் தந்தையின் நிபந்தனை.  ஆனால் அவரை ஒரு நாள் கூட என்னால் வெல்ல முடிந்ததில்லை.  ' அவர் வைத்த பொறி ' யில் என் ராணி நன்றாகச் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும்.  என்ன செய்வதென்று தெரியாமல் விழித்துக் கொண்டிருப்பேன்.  அப்போது எங்கிருந்தோ வந்து அவள் ஆட்டத்தில் ஒன்றுவாள்.  " உங்கள் ராணியின் உயிர்தான் விடை பெற்று விட்டதே !  ஏன் இன்னும் ' போர்டை ' முறைத்துக் கொண்டிருக்கிறீர்கள் ?  எழுந்து நின்று சொல்ல வேண்டியதுதானே ! " என்பாள்.  அவள் சொல்வது போலவே நானும் சொல்ல வேண்டுமாம்.  தன்னைப் போலவே என்னையும் குழந்தையாக்கிக் கொண்டு வந்தாள்.  நானும் எழுந்து நின்று, " பெரிதாக ஜெயித்து விட்டீர்களா ? நான் தொற்றதால்தானே உங்களால் ஜெயிக்க முடிந்தது ? " என்பேன்.  அவர் பெரிதாகச் சிரிப்பார்.

     நிறைவும் மகிழ்வும் கொண்ட தனி .உலகம் அது.

     முற்றிலும் மாறுபட்ட அந்தச் சூழ்நிலையில் ஒரு நாள் சந்திப்பேன் என்று எண்ணியதேயில்லை.

     அன்று இரவு அவசர கேஸ்கள் பார்க்குமிடத்தில் நான் இருந்தேன்.  

     முடிவின்றி நீண்ட நோயாளிகளின் எண்ணிக்கைச் சலிப்பூட்டியது.  ஓய்வாகச் சிறிது அமர்ந்திருக்க இரவு பதினொன்றுக்கு மேல் ஆகிவிட்டது.  கக்களிரன்டையும் மடித்து நெற்றிக்கு அனையிட்டவாறு முன்புறம் மேஜையில் சாய்ந்து கண்மூடிக் கிடந்தேன்.

     " கேஸ் ஒன்று ! " அருகில் ' சிஸ்டரி'ன் குரல் கேட்டுத் தலை நிமிர்ந்தேன்.  கண்களையே நம்ப இயவில்லை ; அங்கு வசந்தி தன் தந்தையுடன் நின்றிருந்தாள்.  சோர்வெல்லாம் மறைய, சந்திப்பின் மகிழ்வில் உள்ளம் துள்ளியது.

     வசந்தி நோயாளிகளில் ஒருத்தியாகத்தான் என்றறிந்தபோது - மனத்தில் திகில் சூழ்ந்தது.

     வசந்தியை ஏறிட்டுப் பார்த்தேன்.  " டாக்டர், வாயெல்லாம் ஒரே ரணமாக இருப்பது போலத் தோன்றுகிறது "  வேண்டுமென வருவித்துக் கொண்ட மரியாதையோடு பேசினாள்.

     அவள் மிகவும் வெளுத்து இளைத்துக் காணப்பட்டாள் ;  உடலில் இரத்தமே இலலதது போன்று கண்ணிமைகளின் உட்புறம் வெண்மை கண்டிருந்தது.  லேசான ஜுரம் காய்ந்து கொண்டிருந்தது.  இதென்ன என் வசந்தியின் உடல் முழுதும் ?  ஒரு கணம் இதயம் தன் வேலையைச் செய்ய மறந்து விட்டது போன்ற ஒரு உணர்வு.

     ' ஸ்பெஷல் வார்டில் ' தனி யறை ஒன்றிலிருந்த வசந்திக்கு இரவு பகல் எநேரமும், மாறி மாறி ஏதாவது ஒரு கையில்  இரத்தம் துளித்துளியாக உட்சென்றுக் கொண்டிருந்தது.  நானும், உயரே தொங்கும் இரத்த பாட்டிலும் அவளை இணை பிரியாது தான் இருந்தோம்.  மருத்துவ மேதைகள் தங்கள் தியாகத்தாலும் பெருழைப்பாலும் தந்து சென்ற எத்தனையோ மருந்துகளின் பயனை அவள் கண்டாள்.  இருந்தும் நாட்களும், உடலும் தேய்ந்துதான் வந்தன.

     இரத்தம் ஒரு நாள் கொடுக்கப்படாமலிருந்தால் கூட ஆபத்து என்ற நிலையில் அன்று ஒரு பெரும் சோதனை.  எங்கள் இரத்த சேமிப்பு நிலையத்தில் ' ஏ குரூப் ' இல்லை.  நகரிலுள்ள மற்ற நிலையங்களிலும் அது கிடைக்கவில்லை.

     தேர்வின்  கொள்ள விரையும் மாணவனின் படபடக்கும் உள்ளத்தோடு  நிலையத்திற்குள் விரைந்தேன்..

     கடவுள் எத்தனை கருணையுள்ளவர் !   நான் கூட ' ஏ குரூப்' தான்.  அன்று வசந்திக்கு ஒரு பாட்டில் இரத்தம் கிடைத்தது.  என் முழங்கையில் போட்டிருந்த சிறு 'பிளாஸ்டரை ' க்கண்டதும்.... வசந்தி அது என்னவென்று கேட்க, தவறிப்போய் நடந்ததைச் சொல்லி விட்டேன் ;  அவள் பெரிதாக வருந்த ஆரம்பித்து விட்டாள்.  

     " எனக்காக உங்கள் நலனைக் கெடுத்துக் கொள்கிறீர்களா ? "

     " இரத்தம் கொடுத்தால் உடல் நலம் கெடும் என்று யார் உங்களுக்குச் சொன்னது ? ... உண்மைகாச் சொல்லுகிறேன்; ஆரோக்கியமாக உள்ளவர்களுக்கு அதனால் நன்மையே யொழியத் தீமையில்லை " வசந்தியின் தவறான நம்பிக்கையை மாற்றுவதற்குள் போதுமென்றாகி விட்டது.

     இரத்தம் ஒவ்வொரு துளியாக மெல்ல விழுந்து கொண்டிருந்தது.  பாதி பாட்டிலுக்கு மேல் சென்றிருக்கும்... காரணமின்றி வசந்தி தனக்குத்தானே மெல்லச் சிரித்துக் கொண்டாள் ; வெளிறிய அந்த அழகிய உதடுகள் ஏதோவொரு உணர்ச்சியில் படபடத்தன .  " உடன் பிறப்பு, இரத்த பாசம் என்றெல்லாம் சொல்வார்களே... அந்த உரிமையெல்லாம் கொண்டாட எனக்கு எனக்கு ஒருவருமில்லையே என்று எப்போதாவது ஏங்குவதுண்டு ... அந்த ஏக்கம் இப்போதுதான் தீர்ந்தது."  கண்களில் அணைகட்டி, என் கண்களில் நோக்கினாள்.

     அன்று மாலை வசந்தி அதிகம் சோர்ந்துதென்பட்டாள்.  வருடங்களில் விரிந்து மலர வேண்டிய என் வசந்தியின் வாழ்வு கருகி வந்து நாட்களின் வட்டங்களில் சுற்றி வருவதை உணர்ந்தேன்.

     வெளியே இருள் மெள்ளக் கவியத் தொடங்கியிருந்தது.  கண்மூடிப் படுத்திருந்த வசந்தி கண்களை மலர்த்தி என்னை நோக்கினாள்.  சில நேரம் என்னைச் சுற்றிச் சுற்றி வந்த அந்தப் பெரிய விழிகளில் இனிய கனவு ஒன்று கண்டு மீண்ட ஒளி...

     அன்று வசந்தி மனம் திறந்து என்னிடம் ஏதேதோ பேசினாள் ;  அப்படி யெல்லாம் அவள் பெசுபவளே அல்ல ;  உடலில் ஏற்பட்டிருந்த பலவீனம் உள்ளத்திற்கும் பரவி இருக்க வேண்டும்.  

     " அன்று முதன் முதலாக உங்களைச் சந்தித்தது இன்று இனிய கனவு போன்றிருக்கிறது... அன்று அரும்பிய நட்பு இத்தனை வலுவான ஒரு உறவாக மலரும் என்று எண்ணியதேயில்லை.... "

     முழுதாக மலர்ந்திருந்த தாமரை கணத்தில் கூம்பியது.  " மலரும் என்றேனே, அப்போது .... வாடியும் விடுமோ ? "  கண்களின் ஒளியை நீர்ப்படலம் திரையிட்டது.

     " இந்த அன்பு, பிணைப்பு எல்லாம் கூட உங்களுக்கு மாயையின் ஒரு தோற்றம்தான், இல்லை ? "  விழிக்க கடைகளில் நீர் சோரச் சிரித்தாள். ;  உள்ளத்தை உடைத்தெறியும் சிரிப்பு.  '!ஐயோ, இல்லை ! இல்லை!' உள்ளம் அலறியது.

     " எனக்கென்னவோ இது வெல்ல முடியாத, முடியாத ஒன்றாகப் படுகிறது."  முகத்தை வேறுபுறம் திருப்பிக் கொண்டாள் ;  நெடுநேரம் அந்த மெலிந்த உடல் குலுங்கிக் கொண்டிருந்தது.  அழுகையும், ஆத்திரமும் இதயத்தைச் சிறகடித்து விடும் நிலை ;  சந்தடியற்ற வெளித் தாழ்வாரத்தின் கிறாதியைப் பிடித்துக் கொண்டு நின்றேன் ...  உடலின் சக்தியெல்லாம் ஓயும்  அழுதேன்.

     நான் திரும்பியபோது வசந்தி தன் தாயின் கரங்களை யெடுத்து நெஞ்சோடு அணைத்தவாறு உறங்கி விட்டிருந்தாள்.  

     அன்று இரவெல்லாம் என் வசந்தியின் ஒளி மங்கிக் கொண்டே வந்தது.  உடல் அவளருகில் இருந்தது.  உள்ளம் ஆண்டவனின் பாதங்களில் வீழ்ந்து கண்ணீர் விட்டுக் கதறியது.

     பொழுது புலரும் வேளை - வெல்ல முடியாத, தகர்க்க முடியாத பிணைப்புகளையெல்லாம் நிர்தாட்சண்யமாக உதறி எரிந்து விட்டு, என் வசந்தி .....


     தன் வீடு தேடி வரும் என்னை வாசலிலேயே வாச மலர்கள் சூழ நிற்கும் அவள், மாறாத தன் இளநகை  வரவேற்கிறாள்.

     சோகத்தின் சுமை தாங்காது தவிக்கும் அவளின் பெற்றோருக்கு என்னைக் கண்டு விட்டால், ஏதோ வெறுமையில் நிறைவு காண்பதாக ஒரு தோற்றம்.

     அவள் நினைவுகளில் வெறும் உள்ளத்து மூலையில் ஒரு நிரந்தர அவல ஒலி - 

     ஐயோ ! வசந்தி என்றோருத்தியை நான் சந்திக்காமலேயே இருந்திருக்கக் கூடாதா ? ....

28 கருத்துகள்:

  1. எழுத்து நடை பரிச்சயமா இருக்கு ஆனா யார்னு தெரிலயே.. ஹ்ம்ம்

    பதிலளிநீக்கு
  2. சிவசங்கரி ,சரியா ஸ்ரீ ராம்ஜி :)

    பதிலளிநீக்கு
  3. லக்ஷ்மி இல்லையென்றால் சிவசங்கரி சரியா ஜி?

    பதிலளிநீக்கு
  4. ஒரு இரண்டு எழுத்துக்காரர் கதை. ஆனால் அவர் நான அல்ல. :))

    அட! 'அவர் நான் அல்ல' இது கூட ஒரு ஒரு சிறுகதைக்கான நல்ல தலைப்பு தானே?.. ஸ்ரீராம்! முயற்சித்துப் பாருங்களேன்!..

    பதிலளிநீக்கு
  5. தெரிந்த எழுத்து நடையாக இருக்கிறது. ஆனால் யாரென்று தெரியவில்லையே!

    பதிலளிநீக்கு
  6. உங்கள் தயவால் அந்தக் காலத்துக் கதை ஒன்றை வாசிக்க முடிந்தது. பொதுவாகவே நான் வாசிப்பவன்தான் சுவாசிப்பவன் அல்ல. எழுத்து நடை வைத்து அடையாளம் காணும் அளவுக்கு கதைகளில் ஊன்றிப் போகிறவன் அல்ல

    பதிலளிநீக்கு
  7. சிறப்பான கதை நண்பரே நாநும் யோசித்துக் கொண்டுதான் இருக்கிறேன்...சுஜாதாவா ?

    பதிலளிநீக்கு
  8. இரண்டு எழுத்து எழுத்தாளர் என்று ஜீவி சொல்லியிருப்பதால் என் ஊகம் சாவி. இப்போதுதான் கணிணி சீரடைந்து இணையம் பக்கம் வர முடிந்தது! நண்பர்களின் பதிவுகளை பார்க்க வேண்டும். நேரம் கிடைக்கையில் பழைய பதிவுகளை வாசிக்கிறேன்! நன்றி!

    பதிலளிநீக்கு
  9. இது ஒரு பெண் எழுத்தாளர்னு மட்டும் தெரியுது ... பேர் நியாபகம் வரல

    பதிலளிநீக்கு
  10. இந்த முத்திரைக்கதைகளில் தி.ஜா எங்கே வந்தார்? வணிகப்பத்திரிகைகளில் /விகடனில் அவர் எழுதிய ஒரே தொடர்கதை உயிர்த்தேன் ஒன்று மட்டுமே. இந்த முத்திரைக்கதைகளில் ஒரு நல்ல விஷயம் சன்மானம் ரூ .150 என்பது. அந்த நாட்களில் மிக அதிகம் இன்னொரு விஷயம் முத்திரைக்கதைகளில் அதிகமாக எழுதியவர் மணியன்தான்

    பதிலளிநீக்கு
  11. விகடனின் முத்திரை பதித்த கதைகளுக்கு ஆரம்ப சன்மானம் ரூ.100/-தான். பிறகு ஜெயகாந்தனிடம் அவ்வவ்போது கதை கேட்டு வாங்கி அவற்றை முத்திரை கதைகளாகப் பிரசுரித்து அவரது சிறப்பு எழுத்துக்கு ரூ.100/- கொடுத்தால் குறைச்சலாக இருக்கும் என்று தீர்மானித்து முத்திரை கதை சன்மானத்தை ரு.500/- ஆக்கினார்கள். இதுவே ஆ.வி.யின் முத்திரைக் கதை வரலாறு.

    பதிலளிநீக்கு
  12. அன்று கதை படிக்க எமக்கு வாய்ப்பும் வழியும் இல்லை..அதனால் யார் என்று சொல்ல முடியவில்லை நண்பரே

    பதிலளிநீக்கு
  13. அன்று கதை படிக்க எமக்கு வாய்ப்பும் வழியும் இல்லை..அதனால் யார் என்று சொல்ல முடியவில்லை நண்பரே

    பதிலளிநீக்கு
  14. வணக்கம்
    ஐயா
    கதை அருமையாக உள்ளது த.ம 8
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  15. கதை அருமை. பரிச்சய நடை..ஆனால் யாரென்று சட்டென்றுத் தோன்றவில்லையே...

    பதிலளிநீக்கு
  16. எழுத்தாளர் மணியன் சிறுகதை மாதிரி இருக்கு ,எழுத்தாளர் சாவி மாதிரியும் இருக்கு !
    மூணாவது வாஸந்தியா இருப்பாங்களோன்னு ஒரு சின்ன சந்தேகம் :)

    பதிலளிநீக்கு
  17. ஐயோ வசந்தியைப் படிக்காமலேயே இருந்திருக்கலாமோ!

    யார் எழுதியது என்று தெரியவில்லை சகோ

    பதிலளிநீக்கு
  18. "தாவர நூல் பேராசிரியரின் லட்சிய வாழ்வு கண்டு மகிழ்ந்தேன்;
    அவர் தாழ்ந்து வீழ்ச்சி கண்டபோது நானும் தாழ்ந்து வருந்தினேன்;
    பின் பழைய வாழ்வு திரும்பக் கண்டபோது
    நானும் மன அமைதி கொண்டேன்!" என்ற அழகு நடையில அமைந்த
    இப்பதிவின் பகிர்வு நன்று.
    புதிதாக எழுதுவோர் இப்பதிவைப் படித்தால்
    தமக்கான எழுத்து நடையைத் தொடரலாமே!

    பதிலளிநீக்கு
  19. கதையின் நடை நன்றாக இருக்கிறது. கடைசியில் கதாநாயகியைக் கொன்றிருக்க வேண்டாம். தேவையில்லாமல் எதற்கு அவளை ஒரு வியாதிக்கு உட்படுத்தி, மனது நொந்துவிட்டது.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!