சனி, 5 டிசம்பர், 2015

இந்த வார பாசிடிவ்.

   

சென்னை: சென்னையில் சனிக்கிழமை (5.12.2015) தொடங்கி நான்கு நாட்களுக்கு மாநகர போக்குவரத்து கழகத்தால் இயக்கப்படும் அனைத்து பேருந்துகளிலும் பயணம் செய்யும் பயணிகளிடமிருந்து கட்டணம் எதுவும் வசூலிக்கப்படக் கூடாது என்று முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மக்களின் வசதிகளுக்காக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

சென்னை வெள்ள நீரில் சிக்கித் தவிப்போருக்கு, பலரும் உதவி செய்து வருகின்றனர். 


எந்த வகை உதவிகள் எங்கள் கண்ணுக்குப் பட்டவை என்பதை சுருக்கமாகக் கூறுகின்றோம். 

# சிலர், தங்களுடைய வீட்டில் எவ்வளவு பேர் தங்கலாம், என்ன விலாசம் என்பதுபோன்ற விவரங்களை முகநூலில் வெளியிட்டு உதவி வருகின்றனர். 

# வெளியூர், வெளிநாடுகளில் இருப்பவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் வெள்ளத்தில் சிக்கி, அலைபேசியில் டாக் டைம் இல்லாமல் இருந்தால், எஸ் எம் எஸ் மூலம் நம்பர் வாங்கி, நெட் மூலமாக ரீ சார்ஜ், டாப் அப் செய்து கொடுக்கின்றார்கள். 

# மாநிலத்தின் பல ஊர்களில், சப்பாத்தி செய்து அனுப்புகின்றார்கள். 

# உடை, போர்வை போன்ற விஷயங்களை பலரும் பெற்று, பாதிக்கப்பட்டவர்களுக்கு  வழங்குகிறார்கள். 

# (என்னைப் போன்ற) சிலர், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு அளிப்பவர்களுக்கு, நெட் மூலம் பணம் அனுப்பி வருகின்றனர். 

# சிலர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு இடர் அகலவேண்டும் என்று கூட்டுப் பிரார்த்தனைகள் செய்து வருகின்றார்கள். 

# சிலர் விலாசம் பெயர் போன்ற விவரங்கள் கொடுத்தால், அந்த நபர்களைத் தேடிப் போய் பார்த்து, அவர்களுக்கு வேண்டிய (உணவு / உடை / மருந்து) உதவிகள் செய்து, உறவினர்களுக்கு அவர்களின் நலம் குறித்து செய்திகள் அனுப்புகின்றனர். (சமூக வலைத்தளங்கள் மூலம்) .

# சிலர் பாதிக்கப்பட்டவர்களையும், உதவுபவர்களையும் இணைக்கின்ற பாலமாக, சமூக வலைத்தளங்கள் மூலமாக செய்திகளைப் பகிர்ந்து உதவி வருகின்றனர். 

பிரதிபலன் பாராமல் உதவும் உள்ளங்களுக்கு எங்கள் வணக்கம், வாழ்த்துகள்.  
     
 


21 கருத்துகள்:

 1. தொண்டுள்ளங்களின் இதுபோன்ற செயல்களைக் கேட்கவே மனதுக்குக் கொஞ்சம் ஆறுதலாக உள்ளது. வாழ்க ! பகிர்வுக்கு நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 2. நல்ல உள்ளங்கள் நீடூழி வாழ வேண்டுமென்று வாழ்த்துகிறேன்!!!

  பதிலளிநீக்கு
 3. எழ்ழளவு ஒத்தாசை. உதவும் உள்ளங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். அவர்களுக்கெல்லாம் நாம் நன்றியாவது சொல்ல வேண்டும். நன்றி மக்களே. கஷ்டங்களைப் படிக்கவே முடியவில்லை. உதவுபவர்கள் உதவிக்கொண்டே மக்கள் கஷ்டங்கள் நீங்க வேண்டும். அனைவரின் நலனை வேண்டுவதைத்தவிர வேறொன்றும் இயலாதவர்கள். நலம் தொடரட்டும். அன்புடன்

  பதிலளிநீக்கு
 4. உதவிய, உதவும் நல்ல உள்ளங்களுக்கு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 5. விரிவான விபரம் தந்தீர்கள் நன்று நல்ல மனம் படைத்தோர் இன்னும் இருக்கத்தான் செய்கின்றார்கள் என்பது சிறிது சந்தோஷமான விடயம்

  பதிலளிநீக்கு
 6. அவர்களுக்கு கோடானுகோடி நன்றி சொல்லவேண்டும் காலத்தில் செய்த உதவிக்கு.

  பதிலளிநீக்கு
 7. உதவி வரும் ஒவ்வொருவருக்கும் வணக்கங்கள்! மக்கள் மனபலத்துடன் மீண்டு வரப் பிரார்த்திப்போம்.

  பதிலளிநீக்கு
 8. தன்னார்வத் தொண்டர்களின் உழைப்புக்கு ஒரு சலாம் !

  பதிலளிநீக்கு
 9. தன்னார்வத் தொண்டர்களுக்கு ஒரு பெரிய சல்யூட்!

  பதிலளிநீக்கு
 10. அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுகள், வாழ்த்துகள், நன்றிகள் பல கோடி. இந்த மழை மனிதநேயத்தை வெளிப்படுத்தியிருக்கிறது என்பது மிகையல்ல.

  கீதா: ஸ்ரீராம், நான் இன்று சென்ற ரவுண்டில் தெரிந்துகொண்டது. மக்கள் பலருக்கும் உணவை விட, பெண்களுக்கு சானிட்டரி நாப்கின் மற்றும் கைக் குழந்தைகளுக்கு ஸ்னக்கி போன்றவையும், அதே போன்று வயதானவர்கள் சிலருக்கும் தேவையிருப்பதாக அறிய முடிந்தது. சிறு குழந்தைகளுக்குப் பால் பவுடர். முகாம்களில் இருப்பவர்களுக்கு சோப்பு, பேஸ்ட், ப்ரஷ் போன்றவையும், உடைகளும், செருப்புகளும் தேவையாக இருப்பதாக அறிய முடிந்தது. ஆனால் இதைச் செய்வதற்கு மொத்தமாக இல்லாமல், எந்தெந்த பகுதிகள் எவ்வளவு சைஸ் போன்றவை அறிந்து செய்ய வேண்டும். இதையும் சேவை செய்வோர் கணக்கில் எடுத்துக் கொள்ளலாம்.

  நான் அறிந்த மற்றொன்று, உதவிகள் பல மூலைகளிலிருந்தும் குவிந்துள்ளது. குறைவில்லை. ஆனால் பல இடங்களில் சேர்ந்தவர்களுக்கே சேருகின்றன பொருட்கள். குவிந்த உதவிகளை அழகாகச் செய்ய எல்லோருக்கும் தேவைகள் அடைய ஒரு நல்ல தலைமை இல்லாமல் திணருவதும் தெரிகின்றது. உணர்வு பூர்வமாகக் குவிந்தவை ஒரே இடத்திற்குச் சேருகின்றது ஒரே பொருள். அதனால், என் வட்டத்தில் உள்ள இளைஞர்கள் தெரிந்த வட்டாரங்களில் உள்ள இளைஞர்கள் ஏரியாவாகப் பிரித்துக் கொண்டு ஒருவருக்கொருவர் தொடர்பு கொண்டு ஆர்கனைஸ்டாக செய்யச் சொல்லப்பட்டது.

  நிசப்தம் வா மணிகண்டன் அவர்களும் இப்படித்தான் யோசித்து வருகின்றார். அவரது ட்ரஸ்டில் 8 லட்சம் வந்திருப்பதாகத் தெரிகின்றது இன்னும் வந்துகொண்டிருக்கின்றது. அவருக்கும் சிறு தடுமாற்றம் இருந்தது முதலில். உதவிகள் வழங்குவதில் பல சிக்கல்கள் இருப்பதையும் ஆராய்ந்து பதிவு எழுதியிருக்கின்றார். இப்போது அவரும் பலவகைகளில் யோசித்துவருகின்றார். அவரது வலைப்பக்கம் போனாலும் அறியலாம்.
  மனிதம் இன்னும் நிலைத்திருப்பதும் தெரிகின்றது


  பதிலளிநீக்கு
 11. 'மனிதம் இன்னும் நிலைத்திருப்பதும் தெரிகின்றது"
  ஆமாம் தங்கை கீதா சொன்னது நிஜம். கெட்டதிலும் ஒரு நல்லது என்பார்களே அதுதான் இது...நல்ல செய்திகளையே நாலுபேரறியப் பகிரும்உங்கள் தளம் உண்மையில் பாராட்டுக்குரியது..“உண்டால் அம்ம இவ்வுலகம்..“ என்றொரு புறநானூறு..“இவர்களெல்லாம் இருப்பதால்தான் இன்னும் இந்த உலகம் அழியாமல் இருக்கிறது”எனச் சொல்லும்! உண்மைதான். வாழ்க அவர்களும் நீங்களும் வாழ்க

  பதிலளிநீக்கு
 12. காலத்தால் செய்த நன்றி சிறிதெனினும்
  ஞாலத்தில் மாளப் பெரிது.... குறள்

  உதவிய நல் உள்ளங்களை வணங்குகிறேன்.

  பதிலளிநீக்கு
 13. தங்களுக்கு நன்றி தெரிவித்து, இதனை எனது வலைப்பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன். வணக்கம். - நா.முத்துநிலவன் http://valarumkavithai.blogspot.com/2015/12/blog-post_6.html

  பதிலளிநீக்கு
 14. மழை மனித நேயத்தை மீண்டும் மலர செய்திருக்கிறது. உண்மையில் உதவும் அன்பர்களை ஒருங்கிணைக்க ஆட்கள் இல்லை. அதனால் நிறைய உணவும் வீணாகியிருக்கிறது. இது எவ்வளவு பெரிய கொடுமை.
  த ம 7

  பதிலளிநீக்கு
 15. உங்களுடன் சேர்ந்து நல்ல உள்ளங்களை நமஸ்கரிக்கிறேன்

  பதிலளிநீக்கு
 16. உதவும் உள்ளங்களுக்குக் கோடானுகோடி நமஸ்காரங்கள்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!