செவ்வாய், 22 டிசம்பர், 2015

ஆனந்த விகடன் முத்திரைக்கதை - பல்பு வாங்கிய கதை.



          சுமார் ஒரு வருடத்துக்கு முன்னால் வீட்டிலுள்ள பைண்டிங் புத்தகத்தைப் புரட்டிக் கொண்டிருந்தபோது அந்தக் கதையும், எழுதியவர் பெயரும் கண்ணில் பட்டது.


          மகிழ்ந்து போனேன். அடேடே...  "நம்ம .... ஸாரோட கதை"


          அதை அவரிடமே சொல்லாமல் (சஸ்பென்ஸாக வைத்திருக்கிறேனாம்!) ஒரு வழியாக டைப் செய்து வெளியிட்டு விட்டு "அவர்" படித்து விட்டு என்ன சொல்வார் என்று ஆர்வத்துடன் காத்திருந்தேன்!


          வந்தார். சொன்னார்!

                                            
----------------------------------------------------------------------------------------------------------------------------
ஜீவி said...


ஒரு இரண்டு எழுத்துக்காரர் கதை. ஆனால் அவர் நான அல்ல. :))

அட!  'அவர் நான் அல்ல' இது கூட ஒரு ஒரு சிறுகதைக்கான நல்ல தலைப்பு தானே?.. ஸ்ரீராம்! முயற்சித்துப் பாருங்களேன்!..
          
-------------------------------------------------------------------------------------------------------------------------------


          நீங்கள் படித்த கதையை எழுதியவர் நீங்கள் எல்லாம் நினைத்த மாதிரி சிவசங்கரி இல்லை, லட்சுமி சுப்பிரமணியம் இல்லை, சாவி இல்லை, மணியன் இல்லை, வாஸந்தி இல்லை, சுஜாதா இல்லை, நா. பார்த்தசாரதி இல்லை,தி.ஜா இல்லை, லஷ்மி இல்லை...
           அட, நான் நினைத்தது போலவும் இல்லை.


           ஆம்.  "சந்திப்பு ஓயாது" என்கிற அந்த முத்திரைக்கதையை எழுதியது "ஜீவி" என்று போட்டிருந்ததால்தான் நானும் அப்படி நினைத்து வெளியிட்டேன்.

          இந்தப் பின்னூட்டம் கண்டதும் குழம்பிப் போனது உண்மை.  ஜீவி சாரிடமிருந்து அதைத் தொடர்ந்து மெயில் வந்தது.


---------------------------------------------------------------------------------------------------------------------------------------




அன்புள்ள   ஸ்ரீராம்,


          இன்று உங்கள்எங்கள் பிலாக்’’ வலைத்தளத்தைத்  திறந்த பொழுது ஒரு இனிமையான அனுபவம்.   ‘யார் எழுதிய கதை இது?’ என்று கேட்டு பல வருடங்களுக்கு முன்ஆனந்த விகடனில் முத்திரைக் கதையாய் பிரசுரமானசந்திப்பு ஓயாதுஎன்கிற சிறுகதையை வெளியிட்டுக் கேட்டிருந்தீர்கள்.


          ‘யார் எழுதிய கதை இது?’ என்கிற இதே கேள்வி, அந்தக் கதை விகடனில் வெளியான அந்த தினத்தில் என்னையும் வியப்பில் ஆழ்த்திய ஒன்றுகாரணம், அந்தக் கதையை எழுதிய கதாசிரியரின்  பெயர்ஜீவிஎன்று போட்டிருந்தது.   அதே காலகட்டத்தில்ஜீவிஎன்கிற பெயரில் பத்திரிகைகளில் நானும் எழுதிக் கொண்டிருந்ததால் நான் எழுதி அனுப்பியிராத ஒரு கதை, நான் கொண்டிருந்த புனைப்பெயரில் விகடனில் பிரசுரமாகியிருக்கிறதே என்கிற வியப்பில், இந்த இன்னொரு ஜீவி யாராயிருக்கும் என்று தெரிந்து கொள்கிற.ஆவலில் விகடனுக்கு எழுதிக் கேட்டிருந்தேன்.   அதனால் பெரிதாக எதுவும் தெரிந்து கொள்ளாத நிலையிலேயே சஸ்பென்ஸ் நீடித்தது


          அந்த காலக்கட்ட்த்தில் வேறு எந்தப் பத்திரிகையிலும் இந்த இன்னொரு ஜீவியை நான் பார்க்கக் கொடுத்து வைக்காது போனதையும் சொல்ல வேண்டும்.   ‘விகடன்’, ‘குமுதம்பத்திரிகையில்ஜீவிஎன்கிற என் புனைப் பெயரிலேயே அதற்குப்  பின்னாலும் என் கதைகள் பிரசுரமாகியிருப்பதையும் குறிப்பிட வேண்டும்..


          இப்படியாகஅந்த’ ‘ஜீவியின் இந்தசந்திப்பு ஒயாதுசிறுகதைத் தலைப்பு என் மனசில் விதையூன்றிய சரிதம் இது  தான்..   இப்பொழுது மறுபடியும் அதே கதையை மாயா ஓவியங்கங்களோடுஎங்கள் பிலாக்கில் நீங்கள் பிரசுரித்துஎழுதியது யார், கண்டுபிடிக்க முடியுமா?’ என்று கேட்டிருந்த பொழுது, பசுமை மாறாத பழைய  நினைவுகள் என்னில்  கிளர்ந்தெழுந்தன.   ‘யார் எழுதிய கதை இது?’— ஒரு காலத்தில் என்னில் எழுந்த கேள்வி இப்பொழுதும் மீண்டும் புதுப்பிக்கப்பட்டது.   

          நீங்களோநான் எழுதிய கதை தான் அது என்கிற எண்ணத்திலேயே இவ்வளவு ஆர்வத்துடன் அந்த முழுக்கதையை மிகுந்த அக்கறையுடன் ஈடுப்பாட்டுடன்  டைப் செய்து பிரசுரம் செய்து அதற்கான கேள்வியையும் கேட்டிருக்கிறீர்கள் என்று தெளிவாகத் தெரிந்த உணர்வில்  சிலிர்த்தேன்சில வரிகளை அடிக்கோடிட்டு நான் தான் என்று உங்களில் விளைந்த யூகத்திற்கான நியாய பூர்வமான நேர்த்தியையும் ரசித்தேன்.  


          எத்தனை வருடங்கள் கழித்து, தத்ரூபமாக அதே பிரசுர கோலத்தில் அந்தக் கதையை மீண்டும் பார்க்கிறேன்?’ என்பதான கால ஓட்டத்தின் விசித்திரம் என்னை ஆச்சரியப்படுத்தியது.   நிறைய தமிழ் எழுத்தாளர்களுடன் நேரிடையாகவும், அவர்கள் எழுத்தின்  மூலமும் அறிமுகம் கொண்டவனுக்கு இத்தனை ஆண்டுகள் ஆகியும் அந்த ஜீவியை இன்னும் தெரிந்திருக்கவில்லை என்பதே இப்பொழுதிய பதிலாகவும் மிஞ்சுகிறது.


          அந்த  ஜீவி யார்?—என்பதே இப்பொழுதும் என்னில் கேள்வியாகிப்  போகிறது.

          இதை வாசிக்கும் யாராவது அந்த ஜீவி யார் என்று சொன்னாலும் சொல்லலாம். 

          கீதா சாம்பசிவம் அவர்களுக்கு இன்னொரு கவிஞர் ஜீவியைத் தெரியும். அவரும் இல்லை இவர் என்று எனக்குத் தெரியும்.
தங்கள் அன்புக்கும் ஆர்வத்திற்கும் மிக்க நன்றி.


மிக்க அன்புடன்,
ஜீவி.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

          அசடு வழிந்து, நான் பதில் போட்டதைத் தொடர்ந்து இரண்டாவது மெயிலும் வந்தது.

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------



2.  ஸ்ரீராம்,

காலத்தின் முத்திரை


          சில பத்திரிகைகள் சிறந்த கதைகள் என்று சில பிரசுரக் கதைகளுக்கு  முத்திரை குத்தலாம்.  சில பத்திரிகைகள் சில கதைகளுக்கு  நட்சத்திர அந்தஸ்து கொடுக்கலாம்.

          ஆனால் எழுத்தாளனுக்கு அவனைப்  பொருத்த மட்டில் அவனது ஒவ்வொரு படைப்பும் அந்தந்த காலத்திற்கான சிறப்பு கொண்டு அமைந்து விடுகின்றன.  சிறப்பு என்பது  காலத்தை ஒட்டியது. எக்காலத்துக்கும் ஏற்புடையதான சிறப்பு என்று எதுவுமில்லை.  ஒரு காலத்தில் சிறப்பாக அமைந்த எந்தப் படைப்பும் அதற்குப் பின்னான இன்னொரு காலத்தில் அந்தக் காலத்தை  ஒட்டியதான  மேலான சிறப்புக்கும் செழுமைக்கும் மேன்மைக்கும் ஏங்கும்.  காலம்  கைப்பட்டு வார்ப்புப் பெறும் எல்லா செயல்களிலும் இந்த மேன்மைக்கான ஏக்கம் இருக்கும்.  இந்த ஏக்கமே அந்தந்த செயல்பாடுகளின் சிறப்புகளை மென்மேலும் கூட்டுகின்றன.

          எழுத்தாளனுக்கும் தன் படைப்புகளின்  மீதான இப்படியான ஆத்மார்த்தமான பார்வை ஒன்று உண்டு.  அப்படியான படைப்புகள் காலத்தின் செழுமைக்கான முத்திரைக்காக காத்திருப்பதாக அவனுள் உணர்வு உண்டு.

                                                                                                                                           --  ஜீவி

-------------------------------------------------------------------------------------------------------------------------------------
          

          எனவே நண்பர்களே,


          அந்தக் கதையை எழுதியது "ஜீவி" தான்.  ஆனால் நம் ஜீவி ஸார் இல்லை.  நான் பெருமையாக ஆரம்பித்த விஷயம் அசடு வழிதலில் முடிந்துள்ளது.

         (இப்போ நீங்க எல்
லோரும் "அதெல்லாம் இல்லை ஸ்ரீராம்...  நீங்க என்ன பண்ணுவீங்க, பாவம்?  எப்படியோ ஒரு பழைய, நல்ல கதையைப் படிக்கக் கொடுத்தீர்களே" என்று ஆறுதல் சொல்லணும்!)

          ஜீவி ஸார் சொல்லியிருந்த - கீதா சாம்பசிவம் மேடம் சொல்லும்  - கவிஞர் ஜீவி படம் யதேச்சையாக கடந்த சனிக்கிழமை 'தி இந்து' (தமிழ்) வில் வந்திருந்தது. அந்தப் படம் கீழே..



          ஜீவி ஸார்..  நான் உங்களுக்கான முத்திரை வரிகள் என்று அடிக்கோடிட்டிருந்த வரிகளை நீங்களும் ஒத்துக்கொண்டு சான்றளித்துள்ளது மகிழ்ச்சியையும், சிறிது ஆறுதலையும் அளித்துள்ளது.


          ஜீவி ஸார்..


          உங்கள் இரண்டாவது மெயிலில் சொல்லியிருப்பது போல நீங்கள் எழுதி காலத்தின் முத்திரை செழுமைக்காகக் காத்திருக்கும்,  பிரசுரமான சிறுகதை ஒன்றை 'எங்கள் பிலாக்'கில் பிரசுரிக்க அனுப்பி வைக்க முடியுமா?

54 கருத்துகள்:

  1. ஒரே குழப்பம்!என்னால் எதையும் தீர்மானிக்க இயலாது!

    பதிலளிநீக்கு
  2. "அதெல்லாம் இல்லை நண்பரே... நீங்க என்ன பண்ணுவீங்க, பாவம்? எப்படியோ ஒரு பழைய, நல்ல கதையைப் படிக்கக் கொடுத்தீர்களே"
    அதற்கு நன்றி சொல்கிறேன் போதுமா ? 6தல்
    தொடரட்டுமே இவ்வகை பதிவுகளும்....

    பதிலளிநீக்கு
  3. இப்படி கூட நடக்குமா? தான் எழுதாததையே தாம் எழுதியது போல் பதிவு செய்து புகழ் தேடும் இக்காலத்தில் யார் எழுதியது என தெரியாமலேயே ஒரு கதை? ---ஆச்சரியம் தான்

    ஒரு வகையில் உங்கள் முயற்சியும் நல்லது தான். இனியேனும் யார் எழுதிய கதை என்பது வெளிப்படட்டுமே!

    பதிலளிநீக்கு
  4. புனைப் பெயர்களால் வரும் வினை. எனக்கென்னவோ அவரவர் பெயரில் இல்லாமல் வேறு பெயரில் எழுதுவது உடன்பாடில்லை. முதலில் கதை நன்றாயிருக்கிறதா என்றுதான் பார்ப்பேன் யார் எழுதியது என்பதெல்லாம் இரண்டாம் அல்லது மூன்றாம் பட்சம் என் சுபாவப் படி அந்தக் கதை அவ்வளவாக ரசிக்க வில்லை என்று எழுத நினைத்தேன் ஆனால்அந்தக்காலத்தின் முத்திரைக்கதை என்று பரிசு பெற்றகதையினை அவ்வாறு கூறினால் பலருக்கும் ரசிக்காது என்று தெரியும். இந்தப் பதிவின் பின்னூட்டங்களிலும் உங்களுக்கு ஜீவி அனுப்பிய மெயிலிலும் நான் ஓரளவு சரியாகத்தான் சிந்தித்தேன் என்பதும் விளங்குகிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா!! நானும் அப்படியே நினைத்தேன் ஐயா. கதை ரொம்ப இழுத்திருந்தது போல் தோன்றியது எனக்கு.

      நீக்கு
  5. ஜூவி என்றால் எனக்கு தெரிந்தது ஜூனியர் விகடன் தான் :)

    பதிலளிநீக்கு
  6. பெயர்க் குழப்பம்; ஒரே பெயரில் மூன்று பேர்!
    விடை கிடைக்குமா விகடனிடம்?

    பதிலளிநீக்கு
  7. ஜீவி என்ற இரண்டு எழுத்துக்களில் இப்போ மூவர் இருப்பதாக நம்மால் அறிய முடிகிறது. இதில் இருவரைக் கண்டுபிடித்து நானும் நீங்களுமாக நம் பதிவினில் படமும் போட்டுவிட்டோம். அந்த மற்றொருவர் அதாவது ’சந்திப்பு ஓயாது’ எழுதியவர் யாரோ எனக்கண்டுபிடித்துவிட்டால் குழப்பங்கள் விலகலாம். யார் கண்டுபிடித்துச் சொல்வார்கள் என்ற ஆவலுடன் நானும் காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  8. ஆச்.....சச்.......சரியம்தான்...... நண்பரே.......

    பதிலளிநீக்கு
  9. ஆச்.....சச்.......சரியம்தான்...... நண்பரே.......

    பதிலளிநீக்கு
  10. சரி சரி விடுங்க சார்.. பல்பு வாங்கியதிலும் ஒரு சுவாரஸ்யம். நேற்று ஜூவி சாருக்கு நடந்தது நாளைக்கு ஆவிக்கும் நடக்கலாம்.. ;)

    பதிலளிநீக்கு
  11. ஆஹா சூப்பரா பல்பு வாங்கியிருக்கீங்க. நீங்க வாங்கியது பத்தாமல் எங்களையும் வங்க வைத்து விட்டீர்கள்

    பதிலளிநீக்கு
  12. நல்லா அசடு வழிந்தீர்களா?

    ஆனால் நல்ல கதை பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  13. கதையை நான் படிக்கவில்லை சகோ. ஆனா இந்த பதிவு அந்த கதையை விட சுவாரஸ்யமானது என்றே நினைக்கிறேன்:)

    பதிலளிநீக்கு
  14. தான் எழுதாத கதையை தன பெயரில் வந்தாலும் எழுதியது தான் அல்ல என்று ஒப்புகொள்ளும் நேர்மை எல்லோருக்கும் இருக்குமா என்பது ஐயமே.தான் எழுதியாதாக நினைத்துவிட்டுப் போகட்டுமே என்று விட்டும் இருக்கலாம். ஒரு உண்மையான படைப்பாளி இன்னொருவரின் படைப்பை தனது என்று சொந்தம் கொண்டாடமாட்டன் என்பதை உணர்த்தி விட்டார் ஜீவி. கிரேட் சார் .

    பதிலளிநீக்கு
  15. கதையை விட இப்பதிவு மிகவும் சுவாரசியமாக இருக்கின்றது. தம் புனை பெயரில் எழுதிய அந்த ஜீவி யார் என்று ஜீவி சார் அப்போதே விசாரித்ததும் அதே கதையை நீங்கள் இவர் தான் எழுதியிருக்கிறார் என்று நம்பி வெளியிட்டதும் மிகவும் வியப்பாய் இருக்கிறது. நன்றி!

    பதிலளிநீக்கு
  16. அடடே.. நான் எழுதின கதைங்க அது!

    பதிலளிநீக்கு
  17. என் மனதை நெகிழ வைத்த பின்னூட்டம். படைப்பாளியின் மன உணர்வை அழகாக வெளிப்படுத்திய டி.என். முரளிதரன் சாருக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  18. //உங்கள் இரண்டாவது மெயிலில் சொல்லியிருப்பது போல நீங்கள் எழுதி காலத்தின் முத்திரை செழுமைக்காகக் காத்திருக்கும், பிரசுரமான சிறுகதை ஒன்றை 'எங்கள் பிலாக்'கில் பிரசுரிக்க அனுப்பி வைக்க முடியுமா?//

    தங்கள் அன்புக்கு நன்றி. நிச்சயம் அனுப்பி வைக்கிறேன், ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  19. // ’ஒரு உண்மையான படைப்பாளி இன்னொருவரின் படைப்பை தனது என்று சொந்தம் கொண்டாடமாட்டான்’ என்பதை உணர்த்தி விட்டார் ஜீவி. கிரேட் சார்.//

    :) மிகவும் நியாயமான, அழகான, உண்மையான கருத்தாக இது உள்ளது :) பாராட்டுகள்.

    //Durai A said...
    அடடே.. நான் எழுதின கதைங்க அது!//

    இப்போ இவர் இதுபோலச் சொல்லியிருப்பதால், இவர் உண்மையான படைப்பாளியா இல்லையா என்ற சந்தேகம் அல்லவா வருகிறது. :)

    அப்பாதுரை சார்,

    சூப்பர் ! சூப்பர் என நான் சொல்லியுள்ளது அந்தக் கதையை அல்ல.

    (ஏனெனில் நான் அந்தக்கதையையே இன்னும் படிக்கவில்லை.)

    சூப்பர் என நான் சொல்லியுள்ளது தாங்கள் இங்கு வந்து கதை விட்டுள்ளதை மட்டுமே :))))))))

    அன்புடன் VGK

    பதிலளிநீக்கு
  20. "எழுத்தாளனுக்கு அவனைப் பொருத்த மட்டில் அவனது ஒவ்வொரு படைப்பும் அந்தந்த காலத்திற்கான சிறப்பு கொண்டு அமைந்து விடுகின்றன. சிறப்பு என்பது காலத்தை ஒட்டியது. எக்காலத்துக்கும் ஏற்புடையதான சிறப்பு என்று எதுவுமில்லை." என்ற கருத்தை வரவேற்கிறேன்.
    ஆயினும்
    சிறந்த படைப்பு எக்காலத்திலும் சுவைக்கக்கூடியதாக இருக்கும்!

    பதிலளிநீக்கு
  21. 'ஜீவீ, நாகை' என்ற பெயரில் ஒருவர் உள்ளார்....
    அனால், அவர் ஓர் ஓவியர்!
    (K.A.S. சேகர்,
    K.A.S. ராமதாஸ் என்கிற பெயர்கள் ஞாபகம் வருகின்றனவா?)

    பதிலளிநீக்கு
  22. நன்றி புலவர் ஐயா... நான்தான் தெளிவாகச் சொல்லி இருக்கிறேனே! :)))

    பதிலளிநீக்கு
  23. இதை யார் படித்து, யார் அந்த மர்மத்தை விடுவிக்கப் போகிறார்கள்?!! நன்றி நிஷா.

    பதிலளிநீக்கு
  24. நன்றி ஜி எம் பி ஸார்.. என்ன சொல்கிறீகள் என்று புரியவில்லை!

    பதிலளிநீக்கு
  25. ஜி எம் பி ஸார்..

    //புனைப் பெயர்களால் வரும் வினை. எனக்கென்னவோ அவரவர் பெயரில் இல்லாமல் வேறு பெயரில் எழுதுவது உடன்பாடில்லை.//

    ரங்கராஜன் சுஜாதா என்ற பெயரில் எழுதினாலோ, வேணுகோபாலன் புஷ்பா தங்கதுரை என்ற பெயரில் எழுதியதோ புனைப்பெயர். ஜீவி அவர் பெயரின் முதல் எழுத்துகளைத்தானே வைத்துக் கொண்டிருக்கிறார்?

    //ஆனால்அந்தக்காலத்தின் முத்திரைக்கதை என்று பரிசு பெற்றகதையினை அவ்வாறு கூறினால் பலருக்கும் ரசிக்காது என்று தெரியும்.//


    உண்மைதான். இந்த காரணத்தினால்தான் பல சமயங்களில் பல பதிவுகளில் ஒன்றும் சொல்லாமல் வந்து விடுவது! :)))

    பதிலளிநீக்கு
  26. என்ன குழப்பம் கீதா மேடம்? தெளிவாக எனக்கு சொல்லத் தெரியவில்லையோ!

    பதிலளிநீக்கு
  27. உங்களுக்கும் எதில், என்ன குழப்பம் என்று தெரியவில்லை நண்பர் செந்தில் குமார். வாக்குக்கும், வரவுக்கும் நன்றி. :))

    பதிலளிநீக்கு
  28. நன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார்.

    பதிலளிநீக்கு
  29. நன்றி சகோதரி கிரேஸ். எனக்கும் அப்படித் தோன்றியது. ஹிஹிஹி...

    பதிலளிநீக்கு
  30. நன்றி பகவான்ஜி. ஆனால் இவர் ஜூவி இல்லை ஜீவி!!!

    பதிலளிநீக்கு
  31. நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா..

    பதிலளிநீக்கு
  32. ஹா.... ஹா.....ஹா... நல்ல ரைமிங். நன்றி ஆவி!

    பதிலளிநீக்கு
  33. ஆமாம் நண்பர் சொக்கன் சுப்பிரமணியம். நன்றி!

    பதிலளிநீக்கு
  34. நன்றி பேராசிரியர் மகேஸ்வரி பாலச்சந்திரன்.

    பதிலளிநீக்கு
  35. நன்றி சகோதரி மைதிலி கஸ்தூரிரங்கன்.

    பதிலளிநீக்கு
  36. சரியாகச் சொன்னீர்கள் டி என் முரளிதரன். நன்றி.

    பதிலளிநீக்கு
  37. மீள்வருகைக்கு நன்றி வைகோ ஸார்.

    பதிலளிநீக்கு
  38. நன்றி நண்பர் ஜீவலிங்கம் யார்பாவாணன் காசிராஜலிங்கம்

    பதிலளிநீக்கு
  39. முதல் வருகைக்கு நன்றி நண்பர் முஹம்மது நிஜாமுத்தீன்.

    பதிலளிநீக்கு
  40. "அதெல்லாம் இல்லை நண்பரே... நீங்க என்ன பண்ணுவீங்க, பாவம்? எப்படியோ ஒரு பழைய, நல்ல கதையைப் படிக்கக் கொடுத்தீர்களே"//

    யெஸ் அதே அதே! பரவால்ல நீங்க பல்பு வாங்கினாலும் நல்ல கதை. அந்தக் காலத்துக் கதை. மூன்று ஜிவிக்கள் என்று அறியவும் முடிந்தது. உங்கள் இரு பதிவுகளுமே சுவாரஸ்யம்தான்...ஆச்சரியம்தான்..சரி அந்த 3 வது ஜிவி யாரோ???!!!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!