திங்கள், 14 டிசம்பர், 2015

"திங்க"க்கிழமை 151214 :: வெங்காயம் பூண்டுக் குழம்பும், வெங்காய-உருளைக் கிழங்குக் கறியும்!



     திங்கக் கிழமை சென்ற வாரம் சும்மாவே போய்விட்டது! இந்த வாரம் அப்படி விடக் கூடாது பாருங்கள்....  அதனால் நேற்று எங்கள் வீட்டின் சமையலான வெங்காயம்-பூண்டுக் குழம்பு, உருளைக்கிழங்கு பொடிமாஸ் பற்றிச் சொல்லலாம் என்று நினைக்கிறேன்.

     நான் ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன்.  எங்கள் வீட்டில் வெங்கயம், பூண்டு போன்றவை கிட்டத்தட்ட சைவச் சமையல் பண்டங்கள் போல!  அதுவும் குறிப்பாகப் பூண்டு!  எனக்கு இஷ்டம் என்பதால் ஆரோக்கியத்தைக் காரணம் காட்டி அவ்வப்போது வெற்றி பெறுவேன்!


     நேற்று அது மாதிரி ஒருநாள்!  வீட்டின் மிக வயதான மெம்பர் வயிற்றுக் கோளாறால் கஞ்சி,  மோர்சாத டயட்டுக்குப் போக,  தடை நீங்கியது!

     கொஞ்சமாக புளி எடுத்து (புளி அளவு கம்மியானால் கூடப் பரவாயில்லை, அதிகமானால் புளிப்பு சாப்பிடத் தோன்றாது!  நமக்குத்தான் நாக்கு நாலு முழம் ஆச்சே!) கரைத்துக் கொண்டு, சாம்பார்ப்பொடி, உப்பு சேர்த்துக் கரைத்து வைத்துக் கொண்டோம்.




               Image result for garlic images                                     Image result for onion images


     உரித்த சின்ன வெங்காயமும் உரித்த பூண்டும் எடுத்து இரண்டாய், நான்காய் நறுக்கிக் கொண்டோம்.  (முழுதாகப் போடுவதும் உண்டு.  ஆனால் அப்போது வெங்காயம் பூண்டின் சுவை குழம்பில் இறங்காது என்பது என் மனப்ப்ரமை!)

     வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி, கடுகு, வெந்தயம், கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய்த் தாளித்துக் கொண்டு அதில் கரிவேப்பிலை போட்டுப் புரட்டிக் கொண்டு, நறுக்கி வைத்திருந்த வெங்காயம், பூண்டையும் போட்டு கொஞ்ச நேரம் வதக்கிக் கொண்டோம்.  கலக்கி வைத்திருக்கும் புளித் தண்ணீரைப் போட்டு, நன்றாய்க் கொதிக்க வைத்து இறக்கினோம். (சிலபேர் கொதிக்கும்போது அதில் துளி வெல்லம் சேர்ப்பார்கள் - புளியின் காட்டத்தைக் குறைக்க)




            Image result for potato images   Image result for onion images


     வேக வைத்திருந்த உருளைக்கிழங்கைத் தோலுரித்து எடுத்துக் கொண்டு  நறுக்கிய (கொஞ்சமாக) வெங்காயம், நறுக்கிய அல்லது நசுக்கப்பட்ட ஓரிரண்டு பூண்டுப் பல் (இதிலுமா!!) சேர்த்து வதக்கி (தாளிக்கிற பிசினஸ் எல்லாம் கிடையாது!) வாணலியிலிட்டு வதக்கி, வதங்கியதும் உருளைக்கிழங்கைப் போட்டுத் திருப்பிக் கொண்டு, உப்பு, காரப்பொடி (அல்லது சாம்பார்ப்பொடி) போட்டுத் திருப்பிக் கொண்டோம்.  இறக்கும் நேரத்தில் லேசாக மிளகுப் பொடி தூவி, பொடியாக நறுக்கி வைத்திருக்கும் கொத்து மல்லித் தழைகளைத் தூவி இறக்கி விட்டோம்.







     (படத்தில் இருக்கும் குழம்பு, உ.கி கறி பழைய படம்!  இதில் உ.கி கொஞ்சம் மாவாய்ப் போய்விட்டது)

     ரசித்துச் சாப்பிட்டோம்.

     வேடிக்கை என்னவென்றால் எதிர்பாராமல் வீட்டுக்கு வந்திருந்த ஒரு நண்பர் இவை இரண்டையும் சாப்பிட்டு விட்டு, மிகவும் பாராட்டினார்!  ஏதோ புதுவகைச் சமையல் போல 'எப்படிச் செய்தீர்கள்?' என்று கேட்டுக் கொண்டதும்,  'என்ன, இதைப்போய்ப் புதுசாகக் கேட்கிறாரே என்று தோன்றிய கணமே, இதைத் திங்கட்கிழமைக்குப் பதிவாக்கி விடலாம் என்ற ஐடியாவும் வந்து விட்டது!


     ஹிஹிஹிஹி...

47 கருத்துகள்:

  1. ஆசையைத் தூண்டிவிட்டீங்க.. இப்போதே போகிறேன் சமையலறைக்கு... இன்றிரவு வெங்காயம் பூண்டுகுழம்புதான் எங்கள் வீட்டில்.

    பதிலளிநீக்கு
  2. எனக்கும் பூண்டு ஆகாது, பிடிக்காது. உங்களை ஃபார்மில் படிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது

    பதிலளிநீக்கு
  3. சுவைக்கத் தூண்டிய பதிவு.
    த ம 3

    பதிலளிநீக்கு
  4. நான் ஆசை மட்டுமே படமுடியும் ஊருக்கு வந்து பார்ப்போம் எனக்கு பூண்டு பிடிக்கும்

    பதிலளிநீக்கு
  5. டிட்டோ டிட்டோ! எதுக்கு ரெண்டு டிட்டோ? ரெண்டுமே இப்படித்தான் அப்படினு சொல்லுவதற்குத்தான். எனக்கும் மகனுக்கும் பூண்டு வெங்காயம் வேண்டும் வேண்டும்....

    கீதா

    பதிலளிநீக்கு
  6. வணக்கம்
    ஐயா
    ஒவ்வொன்றையும் பற்றிஅற்புதமாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் த.ம 6
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  7. /கரைத்து வைத்துக் கொண்டோம்.//
    //நறுக்கிக் கொண்டோம்.//
    /வதக்கிக் கொண்டோம்//
    //இறக்கினோம்.//
    //திருப்பிக் கொண்டோம்.//
    // இறக்கி விட்டோம்.//

    உங்க டீமில் சுமாராக எத்தனை பேர் இருப்பீங்க? அத்தனை பேருக்கும் இந்தப் பாத்திரத்தில் இருக்கும் இத்துணூண்டு பூண்டுக்குழம்பு போதுமா?

    பதிலளிநீக்கு
  8. புதுவகைச் சமையல் போல 'எப்படிச் செய்தீர்கள்?என்று நண்பர் கேட்கா விட்டாலும் இன்றைய பதிவு இதுதானே :)

    பதிலளிநீக்கு
  9. பீட்சா பர்கர் ஃப்ரைடு ரைஸ் என்று சாப்பிடுபவர்களுக்கு இதெல்லாம் புதுவகையான சமையலாகத்தான் தெரியும்.

    உங்களின் சமையல் எனது பேவரிட் சமையல்/ இப்படி புளிப்பு உரப்பு இல்லாத சமையலை நினைத்து பார்க்க கூட என்னால் இயலாது

    பதிலளிநீக்கு
  10. பூண்டு வாரம் ஒரு முறை சேர்த்துக்கொள்வது நல்லது. பகிர்விற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  11. நீரிழிவைப் போக்கும்
    இன்சுலினைக் கொண்டது
    வெங்காயம்!
    நிறைய வெங்காயம் உண்டு
    நீரிழிவைப் போக்கலாம்
    மருத்துவக் குணம் நிறைந்த
    சமையல்!

    பதிலளிநீக்கு
  12. பூண்டுக்குழம்பின் செயல் முறையே அசத்தலாய் இருக்கின்றதே!

    பதிலளிநீக்கு
  13. நல்ல காம்பினேஷன்.....

    எனக்கும் பிடிக்கும்!

    பதிலளிநீக்கு
  14. பூண்டுக்குழம்பும், பொடிமாஸும் சூப்பர் தான்.

    பதிலளிநீக்கு
  15. சமைத்து ருசிக்கத்தான் வழியில்லை..படித்து ருசித்துக் கொள்கிறேன் நண்பரே....

    பதிலளிநீக்கு
  16. சமைத்து ருசிக்கத்தான் வழியில்லை..படித்து ருசித்துக் கொள்கிறேன் நண்பரே....

    பதிலளிநீக்கு
  17. நல்லாருக்கு. சொன்ன செய்முறைக்குள்ள படம் போட்டாத்தானே எப்படி வரும்னு தெரியும். நீங்கள் உருளை பொடிமாஸ் படத்தைப் போட்டிருக்கிறீர்களே..

    பதிலளிநீக்கு
  18. இன்னைக்கு கீதா அவர்களிடமிருந்து விமரிசனம் வரவில்லை? அவர்கள் இந்தச் செய்முறையோட, பலவிதங்களையும் சொல்லி எழுதுவார்.

    பதிலளிநீக்கு
  19. இன்று காலை தான் செய்தேன் குழம்பு, ஆனால் உ.கி இல்லை,

    நான் அப்படி தான் சாப்பிட்டு விட்டு ஏதாவது பேசனுமே என்று நல்லா இருக்கு எப்படி செய்வது என்று கேட்பேன். சும்மா,,,,,

    பதிலளிநீக்கு
  20. நன்றி சகோதரி கீதமஞ்சரி. இந்நேரம் செய்து சாப்பிட்டிருப்பீர்கள்!!

    பதிலளிநீக்கு
  21. நன்றி நண்பர் செந்தில் குமார்.

    பதிலளிநீக்கு
  22. நன்றி நண்பர் நாகேந்திர பாரதி.

    பதிலளிநீக்கு
  23. நன்றி ஹுசைனம்மா. எங்கள் "டீம்" (குடும்பம்) 6 பேர்! தயார் செய்வது பாஸ். எழுதுவது நான் என்பதான் "நாங்கள்"!!

    பதிலளிநீக்கு
  24. நன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார்.

    பதிலளிநீக்கு
  25. நன்றி ஜீவலிங்கம் யாழ்பாவாணன் காசிராஜலிங்கம்

    பதிலளிநீக்கு
  26. நன்றி நண்பர் சொக்கன் சுப்பிரமணியன்.

    பதிலளிநீக்கு
  27. நன்றி நெல்லைத் தமிழன். இதைப் பதிவிடுவதாகவே எண்ணம் இல்லை. எனவே படம் எடுக்கவில்லை. வேறு ஒன்றும் சிக்காததால் இந்தப் பதிவு. கீதா சாம்பசிவம் மேடம் வெளியூர் சென்றிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்!

    பதிலளிநீக்கு
  28. நன்றி பேராசிரியர் மகேஸ்வரி பாலச்சந்திரன்.

    பதிலளிநீக்கு
  29. //தயார் செய்வது பாஸ். எழுதுவது நான் //

    ஆஆஆஆ!! ஒரு ஆளை மட்டும் எல்லா வேலையையும் செய்யவிட்டுட்டு, சாப்பிடுற மீதி அஞ்சு பேரையும் சேத்து “தோம், -னோம், றோம்” என்றெல்லாம் எழுதுவது என்ன நியாயம்!!

    பதிலளிநீக்கு
  30. திரு நெல்லைத் தமிழன், நினைவு கூர்ந்தமைக்கு நன்றி. பத்து நாட்களுக்கும் மேல் ஊரில் இல்லை! நேற்றுத் தான் வந்தேன். நாளை மீண்டும் ஒரு சிறு ஆனால் அவசியமான முக்கியமான பயணம்! என்றாலும் இன்னும் சில நாட்கள் கொஞ்சம் இப்படியும், அப்படியுமாகத் தான் இருக்கும் போல! :(

    பதிலளிநீக்கு
  31. இந்த உருளைக்கிழங்கு செய்முறையை நாங்க காரக்கறி என்றே சொல்வோம். தாளிதம் உண்டு. நோ பூண்டு! நோ மிளகு பொடி! பொடிமாஸ் எனில் அது வேறு! அது தனி! உ.கியைக் கொஞ்சம் முக்கால் வேக்காட்டில் வேக வைத்துக் கொண்டு தோலுரித்துக் கொண்டு கையால் அல்லது துருவலில் துருவிக் கொள்ள வேண்டும். வாணலியில் தே.எ. ஊற்றிக் கொண்டு(தே. எண்ணை இல்லை எனில் ஏதேனும் சமையல் எண்ணெய்) கடுகு, உ.ப, க.ப, ப.மி.,இஞ்சி, கருகப்பிலை, பெருங்காயம் வரிசையாகத் தாளித்துக் கொண்டு துருவிய உ.கியைக் கொட்டி உப்புச் சேர்த்துத் தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறி இறக்கிக் கொண்டு, எலுமிச்சம்பழம் பிழிந்து கொள்ள வேண்டும். பின்னர் பச்சைக் கொத்துமல்லி சேர்த்துப் பரிமாறலாம். :) இதான் எங்க வீட்டு மொழியில் பொடிமாஸ்! :)

    பதிலளிநீக்கு
  32. வெங்காயம், பூண்டுக் குழம்பு செய்வதில்லை என்றாலும் செய்தால் கொஞ்சம் போல் குழம்புப் பொடியும் சேர்ப்போம். :)

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!