செவ்வாய், 8 டிசம்பர், 2015

சென்னை வெள்ளம் - சில கண்கலங்க வைக்கும் செய்திகள், சில பாடங்கள்.



பேரிடர் பாதித்தபோது, மற்ற மாநிலங்களை விட  தங்களுக்குள்ளேயே ஒன்று பட்டு, உதவிக்கரம் கோர்த்த உள்ளூர், மற்றும் வெளியூர் மக்களைப் பற்றி,  உதவ வந்த பேரிடர் உதவிக் குழு சொன்னதாக வந்த செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
 
 
கவலைகள், பீதிகள், பயங்கள்.. எல்லாவற்றையும் மீறி எழுந்து நிற்கின்றது மனிதம்.   இந்தச் செய்தியைப் பாருங்கள்.
 
 
இந்து என்றும், முஸ்லீம் என்றும், கிறிஸ்துவர் என்றும் யாரும் பார்க்கவில்லை.  உன் ஜாதி என்ன, என் ஜாதி என்ன என்று யாரும் கேட்கவில்லை.  அவர்களை அப்படிக் கேட்க விடாமல் அடித்தது இயற்கை.  பொறுத்துப் பொறுத்துப் பார்த்த இயற்கைக் கற்றுக் கொடுத்த பயங்கரப் பாடம்.



1)  ஸ்டெபியை என்ன சொல்லிப் பாராட்ட? கண்கலங்க வைக்கும் முதல் செய்தி.
 

2)  செம்பரம்பாக்கம் ஏரி பற்றி எவ்வளவோ பயமுறுத்தல்கள்.. வதந்திகள்..  உண்மை நிலை பற்றி தி இந்து நிருபர் சொல்லும் செய்திகள் கண்கலங்க வைக்கும் இரண்டாம் செய்தி.  "அவங்க பயந்த மாதிரியே டிசம்பர் 1-ம் தேதி பேய் மழை பெஞ்சுது. சென்னையில எல்லாரும் வீடு வாசலை விட்டுட்டு ஓடிக்கிட்டு இருக்கும்போதும், இவங்க பொட்டுத் தூக்கம் இல்லாம மதகுப் பக்கமே நின்னுக்கிட்டு இருந்தாங்க. 
 
 
அந்த நேரத்துல அவங்க குடும்பமும் தண்ணீரில் தத்தளித்தது. அவங்க வீடுகளையும் வெள்ளம் சூழ்ந்தது. வீட்டில் இருந்தவங்க எல்லாம் மேல் மாடிகளுக்கும், உறவினர்கள், நண்பர்கள் வீடுகளுக்கும் இடம் பெயர்ந்திருக்காங்க. எல்லாம் தெரிஞ்சும் இந்தப் பணியாளர்கள் மட்டும் ஏரியை விட்டு அகலவில்லை” என்றார்கள் ஊர் மக்கள்.
 
 
 

 
 
3)  இது போன்ற சோகச் செய்திகளும் உண்டு.   நவம்பர் முப்பதாம் தேதி (?) மறைந்த பழம்பெரும் எழுத்தாளர் விக்ரமன் அவர்களின் பூத உடல் பட்ட பாடு ஒரு வலிதரும் செய்தி.

 




4)  ஆறுதல் தருவதற்கு .இப்படிப்பட்ட பதிவுகளும் உண்டு.  




"பிரிட்டன் வானிலை மையத்திலிருந்து கணிப்புகள் ஒவ்வொரு 12 மணி நேரங்களுக்கும் வெளியிடப்படுகிறது. இதில் ஒரு கணிப்பில் மழை பெய்யும் என்றும், அடுத்த கணிப்பில் மழை இல்லை என்றும் காண்பிக்கப்படுகிறது. ஒரு பதிவில் கனமழை என்பார்கள்; அடுத்த பதிவில் மிதமான மழை என்பார்கள். 



இப்படியாக வரும் புதன்கிழமை முதல் கனமழை (கடைசியாக சென்னையை அடித்து விளாசியதுபோல்) என்று காண்பித்தது; ஆனால் தற்போது மிதமான மழை என்றே காண்பிக்கிறது. எனவே நாம் ஏன் பீதி கிளப்பும் முடிவுகளுக்கு வர வேண்டும். இந்நிலையில் இவர்கள் தேவையில்லாமல் ட்விட்டரில் வானிலை எச்சரிக்கைகளை விடுத்து வருகின்றனர். அனுபவமற்ற இவர்கள் லண்டனில் உட்கார்ந்து கொண்டு நம் உள்ளூர் வானிலை நிலவரம், வெள்ளத்துக்குப் பிறகான மக்களின் மனநிலை என்று எதுவும் அறியாமல் வானிலை முன்னெச்சரிக்கைகளை விடுத்து வருகின்றனர். 


அக்குவெதர் குறித்து நாம் பேசினால், அவர்கள் காட்டும் காரணங்கள் சரியானதே. ஆனால், அது சென்னைக்கு மட்டும் உரித்தான முன்னெச்சரிக்கை அல்ல. அவர்களால் மிதமான மழையை கணிக்க முடியவில்லை. 17மிமீ மழை என்று கூறுகின்றனர். ஆனால் இது அச்சுறுத்தும் மழையா? என்ற கேள்வி எழுகிறது. 


சென்னையைப் பொறுத்தவரை, மேலடுக்கு ஆதரவின்றி அதிக அளவில் வறண்ட காற்று நிலவி வருகிறது. எனவே மேலடுக்கு சுழற்சி காரணமாக புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் மிதமான மழை பெய்யவே வாய்ப்புள்ளது. 


நாம் மோசமானதைப் பார்த்துவிட்டோம், எனவே பிபிசி அல்லது அக்குவெதர் முன்னெச்சரிக்கைகள் பற்றி கவலைப்படாமல் நாம் நம் வேலையை கவனிப்போம். 


நம்மூர் ஊடகங்களும் இதற்கு பொறுப்பு. பிபிசி எச்சரிக்கைகளை இவர்கள் உடனடியாக வெளியிட்டு அப்பாவி மக்களை பீதியில் ஆழ்த்தி வருகின்றனர்"



சென்னை மறுபடி இன்னும் சுத்தத்துடன், வீரத்துடன், ஒற்றுமையுடன் எழுந்து நிற்கும்.



49 கருத்துகள்:

  1. இந்த போலி யான் செய்திகளை அனுப்பி, பயமுறுத்தும் வாட்ச் அப் மெசேஜ்களை அதை அனுப்பும் நபர்களை கண்காணிக்கவேண்டும். இது அரசின் பொறுப்பாகும்.

    அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை 250 செண்டி மீட்டர் மழை பொழியும் சென்னையே முழுகிவிடும் என்று பயமுறுத்தும் வாட்ச் அப் செய்திகள் நேற்று முதல் வெளி நாட்டில் வாழும் இந்தியர்களுக்கு அனுப்பி அவர்களை பயமுறுத்துவது எதற்காக என்றே புரியவில்லை.

    அடுத்து, விருகம்பாக்கம்,வளசரவாக்கம், போரூர் இங்கே உள்ள வீதிகளில் இன்னமும் சாக்கடை நீர் கலந்த மழை நீர் அகற்றப்பட வில்லை. மெகா மார்ட், வெம்புலி அம்மன் வீதி, இவற்றில் சென்னை கார்ப்பொரேஷன் உடனடி கவனம் செலுத்தி, தூய்மைப் படுத்த வேண்டுகிறேன்.
    subbu thatha

    பதிலளிநீக்கு
  2. சுப்பு தாத்தாவை இங்கே பார்த்ததில் சந்தோஷம் ..தேடினேன் உங்களை .

    பதிலளிநீக்கு
  3. பல செய்திகள் மனதை பாரமாக்கின ஸ்ரீராம் ..இறைவன் மீண்டும் எல்லாவற்றை சரியாக்கணும் பிராத்திக்கிறேன் அனைவருக்கும் .டேக் கேர்

    பதிலளிநீக்கு
  4. உதவிய உதவும் கரங்களுக்கு கோடா கோடி நன்றி .

    பதிலளிநீக்கு
  5. கலங்கவும், நெகிழவும் வைக்கிற செய்திகள், அனுபவங்கள்.

    பதிலளிநீக்கு
  6. மனிதாபிமானத்துடன் செயல்பட்டவர்களை அடையாளம் காட்டும் தகுதி உங்களுக்கு நிச்சயம் உண்டு இடர்களை அனுபவித்தவர் ஆயிற்றே. இயற்கையின் சீற்றம் ஏற்ற தாழ்வு பார்ப்பதில்லை. பெயர் பெற்றவர் புகழ் பெற்றவர் என்று ஏதும் பார்ப்பதில்லை.இந்த நேரத்தில் என் தந்தையார் கூறும் அறிவுரை நினைவுக்கு வருகிறது. HOPE FOR THE BEST BUT BE PREPARED FOR THE WORST எங்கள் ப்லாகில் உங்கள் பதிவு ஆறுதல் தருகிறதுஉதவும் கரங்கள் கொண்ட அனைவருக்கும் நன்றிகள்

    பதிலளிநீக்கு
  7. மறைந்த பழம்பெரும் எழுத்தாளர் விக்ரமன் அவர்களின் பூத உடல் பட்ட பாடு படிக்க இன்னும் வலிதரும் செய்தியாகவே உள்ளது. எவ்வளவு கஷ்டங்களை அவரின் குடும்பத்தார் சந்தித்துள்ளனர் .... கேட்கவே மிகவும் வேதனையாக உள்ளது. :(

    இவரை ஒருமுறை நான் திருச்சியில் நேரில் சந்தித்துள்ளேன்.

    பதிலளிநீக்கு
  8. உங்கள் வேதனை புரிந்து கொள்ள முடிந்தது. தொலைபேசியில் பேசும்போதே மனம் வேதனையில் ஆழ்ந்தது. நீங்கள் எல்லாம் மின்சாரம் இல்லாமல், தண்ணீருக்கு நடுவே தவித்தால், உங்கள் நிலையை எண்ணி எண்ணி இங்கே நாங்கள் தவித்தோம், வேதனைப்பட்டோம். கையாலாகாமல் துடித்தோம்.:( வேறென்ன செய்வது?

    பதிலளிநீக்கு
  9. எத்தனை அன்பு! எத்தனை அர்ப்பணிப்பு! எத்தனை எத்தனை பேர்! “சென்னை மறுபடி இன்னும் சுத்தத்துடன், வீரத்துடன், ஒற்றுமையுடன் எழுந்து நிற்கும்“ எனும் உங்கள் ஒருவாசகமே திருவாசகம்! அரிய பதிவு.

    பதிலளிநீக்கு
  10. //சென்னை மறுபடி இன்னும் சுத்தத்துடன், வீரத்துடன், ஒற்றுமையுடன் எழுந்து நிற்கும்//
    எல்லா விபரமும் தந்து முடிவில் தந்தவை சந்தோஷமான செய்தி இணைப்புகளுக்கு சென்று வந்தேன் நண்பரே..

    பதிலளிநீக்கு
  11. 'சென்னை மறுபடி இன்னும் சுத்தத்துடன், வீரத்துடன், ஒற்றுமையுடன் எழுந்து நிற்கும்.' ததாஸ்து!! ஆமென்!!

    பதிலளிநீக்கு
  12. உண்மைதான் நண்பரே
    சென்னை மறுபடி இன்னும் சுத்தத்துடன், வீரத்துடன், ஒற்றுமையுடன் எழுந்து நிற்கும்.

    தம =1

    பதிலளிநீக்கு
  13. செய்திகள் துண்டு துண்டாக இருந்தாலும் அவற்றைக் கோர்த்திருக்கும் ஒரு நூல்சரடு உண்டு. அந்த நூல் சரடு தான் மனிதாபிமானம். எல்லாக் காலங்களிலும் மனிதனின் உணர்வுகளில் இதற்கு சிறப்பான தலைமை தாங்கும் தகுதி உண்டென்றாலும் பிறர் துன்பம் காண பொறுக்காத நேரங்களில் மற்ற உணர்வுகளை அமுக்கிக் கொண்டு பீறிட்டெழும் வல்லமை கொண்டது இது. மனிதாபிமானம் ஒருவனின் செத்து விடுவது அவனே இறந்து விட்டதற்கு சமம்.

    பழம் பெரும் எழுத்தாளர் விக்கிரமன் சாரின் இயற்பெயர் வேம்பு. ஏறத்தாழ அரை நூற்றாண்டுக்கு மேலாக தமிழின் இலக்கிய ஏடான 'அமுதசுரபி'க்கு ஆசிரியராக இருந்து அந்தப் பத்திரிகையின் சிறப்புக்கு சிறப்பு கூட்டியவர். இறுதிக் காலம் வரை தமிழிலக்கிய தொண்டாற்றியவர். பழந்தமிழ் பத்திரிகை உலகையும் இவரையும் பிரித்துப் பார்க்க முடியாத அளவுக்கு நெருக்கம் கொண்டவர். அன்னாரின் மறைவோடு பழந்தமிழ் எழுத்தாளர்களின் ஒரு சகாப்தமே முடிந்து விட்ட உணர்வே ஏற்படுகிறது.

    பதிலளிநீக்கு
  14. ஹ்ம்ம் என்னது இன்னும் வேம்புலி அம்மன் கோயில் வீதில தண்ணீர் வடியலையா. அப்போ சென்னைக்கு போலாம்னு இருந்தேனே ட்ரிப்பை கான்சல் பண்ணிடவா..

    பதிலளிநீக்கு
  15. துன்பங்களையும் துயரங்களையும் தந்த இந்த மழை மனிதத்தை வளர்த்திருக்கிறது.
    த ம 8

    பதிலளிநீக்கு
  16. ஒவ்வொரு தகவலும் சென்னையும் தமிழகத்தின் மற்ற பகுதிகளும் சந்தித்த பிரச்சனைகளையும், நல்லுள்ளங்களின் அர்ப்பணிப்பினையும் சொல்கின்றன.

    சென்னை நண்பர்கள் ஒவ்வொருவரைப் பற்றியும் கவலை எங்களையும் கலங்கடித்தது. என்னிடம் இருந்த அனைத்து நண்பர்களின் அலைபேசியிலும் அழைத்துப் பார்த்து திருமதி கீதா அவர்களிடம் மட்டும் தான் பேச முடிந்தது.

    சோதனைகள் விரைவில் அகன்று பழைய நிலைக்கு நிச்சயம் திரும்புவோம்....

    //சென்னை மறுபடி இன்னும் சுத்தத்துடன், வீரத்துடன், ஒற்றுமையுடன் எழுந்து நிற்கும்.// Be Positive.... Definitely this will happen.

    பதிலளிநீக்கு
  17. ஸ்டெபியை கையெடுத்து வணங்க வேண்டும்.

    //அருகில் இருக்கும் ஏரியின் பெயர் என்ன? அதற்கு எங்கிருந்து தண்ணீர் வருகிறது? அதைத் திறந்துவிட்டால் தண்ணீர் எங்கே செல்லும்? அந்தப் பாதையில் ஆக்கிரமிப்பு இருக்கிறதா என்பதை அறிந்துகொள்ளும் கடமை நமக்கும் இருக்கிறதுதானே!//

    சரியாக சொன்னார்கள்.

    திரு. விக்கிரமன்அவர்களின் பூத உடல் பட்ட பாடு ஒரு வலிதரும் செய்தி என்பது உண்மை. அவர்கள் குடும்பத்தினர் மனநிலமையை நினைத்துப்பார்க்கவே முடியவில்லை.

    சென்னை மறுபடி இன்னும் சுத்தத்துடன், வீரத்துடன், ஒற்றுமையுடன் எழுந்து நிற்கும் என்பது உண்மைதான்.




































    .






    பதிலளிநீக்கு
  18. தொகுப்புக்கு நன்றி. இயல்பு நிலை சீராகத் திரும்பும் நாளை எதிர்பார்ப்போம்.

    பதிலளிநீக்கு
  19. முதலில் ஸ்டெஃபி மெய்சிலிர்க்க வைத்தவர்....கண்ணில் நீர் சத்தியமாக வரவழைத்தவர். அவரைப் பாதுகாத்தக் காவலர்களையும் வணங்குகின்றோம். ஸ்டெஃபிக்கு எங்கள் மனமார்ந்த சிரம் தாழ்ந்த வணக்கங்கள் எத்தனை உரைத்தாலும் தகும். அவர் நீடுழி வாழ வேண்டும். அவரை இந்தத் தமிழகமே கொண்டாட வேண்டும். இதை எழுதும் போது கூட மனம் கரைகின்றது. உணர்ச்சிவசப்படுகின்றோம்...நன்றி ஸ்ரீராம் இவரை அறிமுகப்படுத்தியதற்கு.

    அடுத்து ஏரி காத்த ராமர் என்பது போல இப்போதும் ஏரியைக் கண்காணித்த வீரர்கள் தங்கள் வீட்டைக் கூட மறந்து.... அவர்களுக்கும் எங்கள் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

    நீங்கள் சொல்லுவது போல் சென்னை மட்டுமல்ல தமிழகமே வீறு கொண்டு சுத்தமாக, ஒற்றுமையுடன் தலைநிமிர்ந்து நிற்கும். சமீபத்தில் கூட சாதி ஒழிப்பு மாநாடு நடந்ததாக ஏதோ ஒரு செய்தித்தாள் தொங்கியது. ஆனால் இயற்கைக் கற்றுக் கொடுத்துவிட்டதே சாதி மதம் இல்லை என்று எல்லோரும் ஒற்றுமையாகச்க் செயல்பட்டு மனிதம் வெளிப்பட்ட தருணங்கள். !!!!!

    துளசி: அந்தச் செய்தி வானிலை அறிக்கைச் செய்தி முதலில் வந்தது நிஜமாகவே பய முறுத்தியதுதான். நானும் முகநூலில் பகிர்ந்து கொண்டேன். ஆனால் அடுத்த செய்தி ஆறுதல் தாங்கள் சொல்லியிருப்பது. அந்த மழை கீழே தென் பகுதிகளுக்குச் சென்றுவிட்டது அங்கும் மக்கள் அவதிப்படுகின்றார்கள். திருநெல்வேலி, கன்னியாகுமரி, நாகப்பட்டினம் என்று......ஆம் நீங்கள் சொல்லுவது போல் பயமுறுத்தல்கள் வேண்டாம் தான்..

    கீதா: ஸ்ரீராம் தங்களின் இந்தக் குறிப்புகளை நான் எங்களின் ஒரு பதிவிற்கு எடுத்துக் கொள்கின்றேன் தங்கள் அனுமதியுடன். மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
  20. மனிதம் சொல்லும் செய்திகள்.
    நன்றி ஸ்ரீ.

    பதிலளிநீக்கு
  21. நடுத்தர மக்கள் நடுத் தெருவுக்கு வந்துவிட்டார்கள்!என்பதுதான் இன்றைய உண்மை!

    பதிலளிநீக்கு
  22. நன்றி சுப்பு தாத்தா... இந்நேரமாவது உங்கள் ஏரியா கிளீன் ஆனதா இல்லையா? ஃபேஸ்புக்கிலும் பகிர்ந்திருந்தேன்.

    பதிலளிநீக்கு
  23. நன்றி நண்பர் நாகேந்திர பாரதி.

    பதிலளிநீக்கு
  24. நன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார்.

    பதிலளிநீக்கு
  25. நன்றி ஜீவி ஸார். விக்ரமன் அவர்களின் செய்தி மனதை மிகவும் வேதனைப் படுத்திய செய்தி. நான் கொடுத்துள்ள கடைசிச் செய்திக்கு லிங்க் கொடுக்க மறந்திருக்கிறேன்!

    பதிலளிநீக்கு
  26. இதுக்கெல்லாம் பார்த்தா முடியுமா? பயப்படாம வாங்க தேனம்மை!

    பதிலளிநீக்கு
  27. நன்றி நண்பர் செந்தில் குமார்.

    பதிலளிநீக்கு
  28. நன்றி வெங்கட். டெல்லியில் புகை மறைந்ததா?

    பதிலளிநீக்கு
  29. நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

    பதிலளிநீக்கு
  30. நன்றி 'நான் ஒன்று சொல்வேன்' (ரமேஷ் குமார்?)

    பதிலளிநீக்கு
  31. கலங்க வைத்த செய்திகள். எழுத்தாளர் விக்கிரமனின் உடலை அடக்கம் செய்ய முடியாமல் பட்ட அவஸ்தைகள் வேதனை தருகின்றன. ஸ்டெபி, சீனிவாசனின் இறப்பு என அனைத்துமே மனதைக் கலங்கலடித்தன.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!