திங்கள், 1 பிப்ரவரி, 2016

"திங்க"க்கிழமை 160201 :: ஃப்ரைட் ரைஸ்!



நேற்று மதியம்.  நீண்ட நாட்கள் ஆயிற்றே என்று செய்யப்பட்டது!



முட்டைகோஸ், 2 குடைமிளகாய், 3 கேரட், நான்கு பெரிய வெங்காயம், ஐந்தாறு பீன்ஸ் (
மகனின் விருப்பத்துக்காக பீன்ஸ் சேர்த்ததை மறந்து விட்டேன்.  நினைவூட்டிய நெல்லைத் தமிழனுக்கு நன்றி!)


முட்டைக்கோஸை சீவலாக சீவிக் கொண்டு, கேரட்டைத் துருவிக்கொண்டு, குடைமிளகாயை நீளவாக்கில் நறுக்கிக்கொண்டு,  பீன்ஸ் நறுக்கிக்கொண்டு, வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொண்டு..




வாணலியில் இட்டு அரை வதக்கல் வதக்கிக் கொண்டு,




பொலபொலவென வடித்து வைத்திருக்கும் சாதத்தை அதில் கலந்து (பாஸ்மதி அரிசியாய் இருந்தால் விசேஷம்.  ஆனால் நாங்கள் எங்கள் வீட்டில் நித்தம் வடிக்கும் பச்சரிசியை வைத்துதான் வடித்தோம்),
தேவையான அளவு உப்பு சேர்த்து, புரட்டிக் கொண்டு,

இறக்கும்போது மிளகுப்பொடி தூவி, (வெள்ளை மிளகு வாங்கிப் பொடி செய்து போடுங்கள் என்று சொல்வார்கள்.  ஆனால் நாங்கள் வீட்டில் இருந்த க.மி தான் போட்டோம்.  சிலர் இதில் ரெடிமேடாக விற்கும் செஸ்வான் ரைஸ் பொடி சேர்த்துத் தூவுவார்கள்.  நாங்கள் சேர்க்கவில்லை. அதைச் சேர்த்தால் அசட்டுத்தனமான புளிப்பு கலந்த ஒரு சுவையாக இருக்கும்),





இறக்கி பங்கு பிரித்துச்....


இருங்கள்...  இருங்கள்... ரைத்தா தயார் செய்ததைச் சொல்ல மறந்து விட்டேன்!  



வழக்கமாக வெங்காயம் மட்டும் நறுக்கித் தயிரில் சேர்க்கும் ரைத்தாவில் அதனுடன் கூட கொஞ்சம் குடைமிளகாய்த் துருவல், கேரட் துருவலையும் சேர்த்து இலேஸாக உப்பு தூவி கலந்து வைத்துக் கொண்டோம்.



...சாப்பிட்டு விடலாம்!

36 கருத்துகள்:

  1. We used to make Raitha in Carrot, Beetroot, Kakadi, Papaya, Muli, and bell pepper also. My type of making fried rice is a little different. Will come afterwards. :)

    பதிலளிநீக்கு
  2. பதில்கள்
    1. ரைத்தாவில் தக்காளி! எங்கள் வீட்டில் எல்லோரும் இதற்கு எதிர்ப்பு! நன்றி கீதா மேடம்.

      நீக்கு
  3. காய்கறிக் கலவையுடன் சோயா சாஸ் கொஞ்சம் சேர்த்துக் கோள்வேன். மிளகு சீரகப் பொடி சேர்ப்பேன். பின் சாதத்தை கலந்து விடுவேன். சாதத்தின் நிறம் சாப்பிடத்தூண்டுகிறது.
    ரைதா இப்படியும் செய்வதுண்டு...
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி சகோதரி உமையாள் காயத்ரி. சீரக வாசனை இதில் நாங்கள் இதுவரை சேர்த்ததில்லை. அடுத்தமுறை முயற்சித்துப் பார்த்து விடுவோம்.

      நீக்கு
  4. செய்முறையில் இல்லாத பீன்ஸ் எங்கிருந்து வந்தது? அதையும் கட் பண்ணி வைத்துள்ளீர்களே... மசாலா எதுவும் கிடையாதா? வெறும் காய்கறிகளை வதக்கி, மிளகு மட்டும் சாதத்தில் கலந்தால் ப்ரைடு ரைஸ் ஆகிவிடுமா? கீதா அவர்கள் இன்னும் நிறைய எழுதியிருப்பார் என்று நினைத்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நெல்லைத் தமிழன்.நீங்கள் வெஜிடபிள் புலாவோடு இதைக் குழப்பிக்கொள்ளக்கூடாது கொள்கிறீர்கள் என்று நினைக்கிறேன். இதில் மசாலா எல்லாம் கிடையாது. :)))

      நீக்கு
  5. நல்ல குறிப்பு ...முயற்சிக்க வேண்டும் ..

    பதிலளிநீக்கு
  6. நல்ல குறிப்பு.....

    ராய்த்தா விதம் விதமாகச் செய்வதுண்டு........

    நன்றி.

    பதிலளிநீக்கு
  7. நான் பண்ணும் ஃப்ரைட் ரைஸுக்கு முக்கியமா செலரியும்,shallods ம் வேணும். ஷாலட்ஸ் என்பது வெங்காயக் கீரை! அதோடு சில்லி சாஸ், டொமொட்டோ ப்யூரி போன்றவையும் தேவை! சில்லி சாஸ் வீட்டிலேயே சிவப்பு மிளகாயை ஊற வைச்சுத் தயார் செய்துடலாம். ப்யூரியும் அப்படித் தான். தக்காளியை blanching முறையில் தோலுரித்துக் கொண்டு சாறை எடுத்துக்கலாம். எல்லாம் போட்டு வதக்கினதும் அதில் உள்ள நீர் சுண்டும் வரை வதக்கிக் கொண்டு பின் வேகவைத்துப் பொலபொலவென இருக்கும் அரிசிச் சாதத்தைப் போட்டு உடையாமல் கலக்கணும். பின்னர் மேலே பச்சைக்கொத்துமல்லி, புதினா போன்றவை தூவிக் கொண்டு தயிர்ப் பச்சடியுடன் சாப்பிடலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மீள் வருகைக்கு நன்றி கீதா மேடம். சில்லி சாஸாவது ஓகே. ஃப்ரைட் ரைஸில் தக்காளியா? மூச்! எங்கள் வீட்டில் யாரும் சாப்பிட மாட்டார்கள்! ஃப்ரைட் ரைஸ் ஐட்டங்களில் கடைகளில் கூட தக்காளி சேர்த்து பார்த்ததில்லை. ஆனால் இப்படியும் ஒருமுறை செய்து பார்க்க முயற்சிக்கிறேன்.

      நீக்கு
  8. அருமை. சாதத்துக்கு பதில் நூடுல்ஸுக்கு இந்த முறையில் செய்வதுண்டு.

    பதிலளிநீக்கு
  9. //கீதா அவர்கள் இன்னும் நிறைய எழுதியிருப்பார் என்று நினைத்தேன்.//

    நெல்லைத் தமிழன், காலையில் அவசரமாகப் படித்தது. உடனே கருத்துச் சொல்லணும்னு சொன்னேன். :)


    பதிலளிநீக்கு
  10. பார்க்க பிரியாணி மா3யே இருக்கே...

    பதிலளிநீக்கு
  11. இதுதான் ரைத்தாவா ,ரைட் ரைட் :)

    பதிலளிநீக்கு
  12. கடந்த நான்கு நாட்களாக
    இணைய இணைப்பு ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டு விட்டது
    அதனால் தங்களின் சில பதிவுகளைப் பார்க்காமல் விட்டிருப்பேன்
    இனி தொடர்வேன்
    தம +1

    பதிலளிநீக்கு
  13. இதேதான் ஸ்ரீராம்...நானும் செய்வது. வெ.மி.பொ சேர்த்தும் செய்வதுண்டு. அது இல்லை என்றால் க.மி.பொ. சேர்த்துச் செய்வது. வெண்ணையில் காய்களை அரை வேக்காடாக வதக்கிக் கொள்வேன். வெங்காயத் தாள் (ஸ்ப்ரிங்க் ஆனியன்) இறுதியில் சேர்ப்பதுண்டு. இது இந்தியன் ஃப்ரைட் ரைஸ். சைனீஸ் என்றால் சோயா சாஸ், சில்லி சாஸ் சேர்ப்பதுண்டு. எந்த அரிசியானாலும் ரொம்பவே உதிர் உதிராக வடித்துவிட்டு (குக்கரில் அல்ல. டைரக்டாக கொதிக்க விட்டுக் கஞ்சியை வடித்துவிட்டு) கொஞ்ச நேரம் அப்படியே ஆற வைத்துப் பின் அதை காயுடன் சேர்த்துக் கலந்தால் ஹோட்டல் போல வரும். ஹோட்டலில் காய்கள் ஆங்காங்கே வீட்டில் நீங்கள் காட்டியிருப்பது போல் ...உங்கள் ஃப்ரைட் ரைஸ் செமையா இருக்கு. நாக்குல தண்ணீர் ஊருது...ராய்தா இதுவும், இன்னும் பல வரைட்டிகளில் செய்வதுண்டு...

    கீதா

    பதிலளிநீக்கு
  14. கீதா சாம்பசிவம் அக்கா...ஃப்ரைட் ரைசில் தக்காளி???? புதினா? கொத்தமல்லி???? ரைட் ரெசிப்பியில் சேர்ப்பது இல்லை...

    ஸ்ரீராம் ஃப்ரைட் ரைசிற்கு காய்களை வாணலியில் கொஞ்சம் வெண்ணை, எண்ணை போட்டு அதிக தீயில் அதி வேகமாக வதக்கிவிட்டால் சைனீஸ் ஃப்ரைட் ரைஸ் டேஸ்ட் கிடைக்குது...

    கீதா

    பதிலளிநீக்கு
  15. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், தக்காளிக்கு இவ்வளவு எதிர்ப்பா? இதை நான் வன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்மையாகக் கண்டிக்கிறேன். :)))))))))சைனீஸ் ஃப்ரைட் ரைஸ் மாதிரிச் செய்தால் தக்காளி வேண்டாம். நாம தான் கீதா'ஸ் ஃப்ரைட் ரைஸ் தானே செய்வோம்! :))))))

    பதிலளிநீக்கு
  16. ரைத்தாவில் தாங்கள் சொன்னதோடு கொஞ்சம் தேங்காய் துருவல் போட்டு தாளித்துகொட்டுவோம்.
    சாதம் சூப்பர்,,,

    பதிலளிநீக்கு
  17. பச்சை மிளகாயை கண்டதும் பயமாய் இருக்கிறது..

    பதிலளிநீக்கு
  18. பச்சை மிளகாயை கண்டதும் பயமாய் இருக்கிறது..

    பதிலளிநீக்கு
  19. நன்றி கில்லர்ஜி. பிரியாணியிலிருந்து முற்றிலும் மாறுபட்டது!

    பதிலளிநீக்கு
  20. நன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார்.

    பதிலளிநீக்கு
  21. நன்றி தில்லையகத்து கீதா. வெண்ணெய் வீட்டில் இருப்பதில்லை. அதனால் எண்ணெய்தான்! சோயா சாஸும் வீட்டில் இருப்பதில்லை என்பதால் அதுவும் கிடையாது. ஆனாலும் நன்றாகவே இருந்தது.

    பதிலளிநீக்கு
  22. மீள் வருகைக்கு நன்றி கீதா மேடம்.

    பதிலளிநீக்கு
  23. நன்றி பேராசிரியை மகேஸ்வரி பாலச்சந்திரன். தேங்காய்த் துருவல்? அப்புறம் ஒருமுறை முயற்சி செய்து பார்த்து விடுகிறோம்.

    பதிலளிநீக்கு
  24. நன்றி வலிப்போக்கன். பச்சை மிளகாய் இல்லை, குடைமிளகாய். காரம் தெரியாது.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!