நம்ம வூடுதான்! உள்ள வாங்க! படிங்க! படிங்க!! படிச்சுகிட்டே...இருங்க! வலை உலகிலே "எங்கள்" புதிய பாணி!
சனி, 31 டிசம்பர், 2016
மரங்களைக் காக்கவில்லை அவர். மனிதர்களைக் காக்கிறார்
வெள்ளி, 30 டிசம்பர், 2016
வெள்ளிக்கிழமை வீடியோ :: 161230 :: ஒரு ராகத்தில் இரு பாடல்கள்
எதிலிருந்து எது?
ஆனால் இரண்டு மொழிகளிலுமே இனிமையான பாடல்... ஹிந்தியில் சற்று வேகமாக இருந்ததது, தமிழில் ஹரிஹரன் மெதுவாக குழைவுக் குரலில் பாடி மெலடியாக்கி இருக்கிறார். ஹிந்தியில் ரிஷியின் நடனம் ரசிக்கத்தக்கது.
புதன், 28 டிசம்பர், 2016
செண்டுவெளிக் களியாட்டம்
செண்டுவெளிக் களியாட்டம் என்றால் என்ன? செண்டு என்பதை விளக்குக.
விடை :
பழந்தமிழ் மக்களின் வீர விளையாட்டுகளில் செண்டு வெளிக் களியாட்டம் மிகச் சிறந்ததென்பதைக் காப்பியங்கள் எடுத்துக் காட்டுகின்றன. அந்தக் களியாட்டம் வீரனை நிர்ணயித்தது. அக்காலத் தமிழ் மன்னர்களுடைய அரண்மனை ஒவ்வொன்றுக்குள்ளும் செண்டுவெளியென்ற பெரும் பயிற்சி அரங்கமொன்று இருந்து வந்தது. ஆயிரக்கணக்கான மக்கள் வட்டமாகச் சுற்றி நின்று வேடிக்கை பார்க்க அந்த வெளியில் வசதியிருந்ததன்றி, மன்னரும் மற்றப் பெருங்குடி மக்களும் அமருவதற்குப் பெரும் மேடைகளும் அமைக்கப்பட்டிருந்தன. செண்டு வெளியில் சமதரை சாதாரண நாட்களில்கூடப் பழுதுபார்க்கப்பட்டு வந்ததால், புரவிகள் வெகு வேகமாகச் செல்வதற்கும் அவற்றில் கால்கள் இடறாமலும் வழுக்காமலும் இருப்பதற்கும், எப்பொழுதும் வெகு சீராக வைக்கப் பட்டிருந்தது. அந்தத் தரையின் அழகை ஒட்டியும், குதிரைகளைப் பழக்குவதற்குக் கூட அது உபயோகப்படுத்தப்பட்ட காரணத்தாலும் அதை வையாளி வீதியென்றும் மக்கள் அழைத்து வந்தார்கள். அரண்மனையின் அந்தச் சிறப்பு வெளிமுற்றத்தில் சாதாரண நாட்களிலும் வீரர்கள் குதிரையேற்றப் பயிற்சியில் ஈடுபடுவார்கள். செண்டாயுதப் பயிற்சியும் அங்கு தினந்தோறும் நடக்கும். ஆனால் மக்களுக்கு முரசு அறிவித்து நடத்தப்படும் செண்டுவெளிக் களியாட்டம் பெரும் பிரமை அளிக்கவல்லது. கவிஞன் நாவுக்கு வலு அளிப்பது, நாட்டுக்குக் கவிதை அளிப்பது வரலாற்று வித்தாக விளங்கியது.

செவ்வாய், 27 டிசம்பர், 2016
கேட்டு வாங்கிப் போடும் கதை :: ராஜாவும் தொழிலதிபர்தான்
இந்த வார "கேட்டு வாங்கிப் போடும் கதை" பகுதியில் பதிவர் ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்களின் படைப்பு இடம் பெறுகிறது.
அவரின் தளம் Arattai.
சுவாரஸ்யமான எழுத்துகளுக்குச் சொந்தக்காரர். விஷ்ணு - ராசி கேரக்டர்களை உருவாக்கி, நகைச்சுவை எழுத்தில் மிளிர்பவர். பலரை அவரவர் வாழ்க்கையில் மேலே ஏற்றிவிடும் ஏணி வேலையைச் செய்து ஓய்வு பெற்றவர். ஆசிரியர்!
======================================================================
திரு. ஸ்ரீராம் அவர்களுக்கு,
வணக்கம்.
உங்கள் தளத்தில் என் கதை வெளியாவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. என் எழுத்துப் பலரின் பார்வைக்கு, சென்றடைய உதவும் உங்களுக்கு என் நன்றிகள் பல.
கதையைப் பற்றிய ஒரு சிறு முன்னுரை:
'ராஜாவும் தொழிலதிபர் தான் ' ஒரு உண்மை நிகழ்வை மையமாக வைத்து புனையப்பட்ட கதை .சென்னை அடையாறிலுள்ள புற்றுநோய் சேவை மையத்திற்கு ஒரு முறை சென்றிருந்தேன். அங்கே 'ராஜா ' போன்ற ஒருவரை சந்திக்க நேர்ந்தது. அவர் என்னை ஆச்சர்யப்படுத்தினார். ஆச்சர்யத்தை கதையாக்கி விட்டேன். ராஜாவை வெளிச்சம் போட்டுக் காட்டுவதற்கான , கற்பனைக் கதாபாத்திரமே 'கைலாசம்'.

'Joy of Giving' மாதத்தையொட்டி எழுதப்பட்டது இக்கதை.
கதையைப் படித்து உங்கள் மேலான கருத்தை சொல்லுங்கள்.
வெளியிடும் ஸ்ரீராம் அவர்களுக்கும், படிக்கும்,கருத்திடும் நண்பர்கள் அனைவருக்கும் என் அட்வான்ஸ் நன்றிகள்.
இப்படிக்கு,
ராஜலஷ்மிபரமசிவம்.
http://rajalakshmiparamasivam.வெளியிடும் ஸ்ரீராம் அவர்களுக்கும், படிக்கும்,கருத்திடும் நண்பர்கள் அனைவருக்கும் என் அட்வான்ஸ் நன்றிகள்.
இப்படிக்கு,
ராஜலஷ்மிபரமசிவம்.
=====================================================================
கைலாசம்
தன் பெரிய படகு போன்ற 'டோயோடா' காரை அந்த சேவை மையத்தின் முன் நிறுத்தி விட்டு,
கார் கதவைத் திறந்து
கொண்டு மையத்தின் உள்ளே சென்றார். மிக உயர்ந்த பிராண்டட் பேண்டும், சட்டையும், படகுக் காரும் அவர் மிகப் பெரிய பணக்காரர் என்பதை பறை சாற்றியது.
திருப்பூரில் தொழிலதிபரான கைலாசம், கம்பீர நடையுடன் உள்ளே காப்பாளர் அறைக்கு சென்றார்.
புற்று நோய் சேவை மையத்தின் காப்பாளர், கிருஷ்ணன், கண்ணைக் கூசும், பளீர் வேட்டி, சட்டையுடன், அன்றைய காலை அலுவல்களை கவனித்துக் கொண்டிருந்தார். பின்புலத்தில் சூலமங்கல சகோதரிகள் மெல்லியக் குரலில் " காக்க காக்க கனகவேல் காக்க " என்று பாடிக் கொண்டிருந்தார்கள்.
" டொக் ,டொக் " கதவு தட்டும் சத்தம்.
ஃபைலைப் பார்த்துக் கொண்டிருந்த கிருஷ்ணன் தலையை நிமிர்த்தாமலே , "எஸ் கம் இன் " சொல்லவும், கதவைத் திறந்து கொண்டு கைலாசம் உள்ளே நுழைந்தார். கைலாசம் போட்டிருந்த உயர் ரக செண்டின் மணம் கிருஷ்ணனை நிமிர வைத்தது.
" வாங்க! எப்படி இருக்கிறீர்கள் கைலாசம் சார்? வருடத்திற்கு ஒரு முறை அத்திப் பூத்தாற் போல் வருகிறீர்கள்"
" நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் ? தொழிற்சாலை வேலை விஷயமாக அவ்வப்போது சென்னை வருகிறேன். ஆனால் நேரமே கிடைக்கவில்லை. மையத்தை விரிவு படுத்தும் வேலை மும்மரமாக நடக்கிறது போல் இருக்கிறதே" என்று ஜன்னல் வழியாகப் பார்த்துக் கொண்டே சொன்னார் கைலாசம்.
" உங்களைப் போன்றவர்களின் நல்ல மனசு தான் இதற்குக் காரணம்" என்று சொல்லிக் கொண்டே மணியைத் தட்டி, பியுனை வரவழைத்து, 'ஜில்'லென்று எலுமிச்சை ஜுஸ் கொண்டு வரச் சொன்னார் கிருஷ்ணன்
புற்று நோய் சேவை மையம் விஸ்தாரமாக எட்டு ஏக்கர் பரப்பளவில் இயங்கிக் கொண்டிருந்தது. பல ஏழைப் புற்று நோயாளிகளுக்குத் தஞ்சம் அளித்துக் கொண்டு அமைதியாக இருந்தது. மையத்திலேயே காய்கறிகள், கீரை, தேங்காய், எலுமிச்சை என்று எல்லாம் விளைந்து கொண்டிருந்தது. அவை மையத்தில் நோயாளிகளுக்கு உணவிற்கு உபயோகமானது. இதற்கெல்லாம் கிருஷ்ணனின் திறமையான தன்னலமற்ற நிர்வாகம் தான் காரணம்.
இது எல்லோருக்கும் தெரியும்.
அதை மனதில் கொண்டு கைலாசம் ," என்னைப் போன்றவர்களால் அல்ல, உங்களைப் போன்றவர்களால் தான், சேவை மையம் நல்லபடியாக நடந்து கொண்டிருக்கிறது கிருஷ்ணன் சார் " என்று சொல்லிக் கொண்டே தன் சட்டைப் பையில் வைத்திருந்த " பத்து லக்ஷத்திற்கான " செக் ஒன்றை டேபிளில் வைத்தார் .
"எங்களால் என்ன பணம் மட்டுமே கொடுக்க முடிகிறது. நீங்கள் தான் அதைத் திறமையாக செயல் படுத்துகிறீர்கள் "என்று அவர் சொன்னாலும் , ' நான் கொடுக்கும் பணம் தான் முக்கியக் காரணம்' என்ற தொனி இருந்தது அவர் பேச்சில்..
கிருஷ்ணன் மனதிற்குள் சிரித்துக் கொண்டார் .' பணக்காரர்களுக்கே உரிய கர்வம்' என்று அவர் மனம் சொல்லியது. அதனால் என்ன? மையத்திற்குப் பணம் வருகிறதே என்று சகித்துக் கொள்ள வேண்டியது தான் என்று சிரித்து வைத்தார்.
பியூன் அப்போது ஜுஸ் கொண்டு வந்து வைக்கவும், இருவரும் ஜுஸ் குடித்துக்கொண்டே, சொந்த வாழ்க்கைப் பக்கம் பேச்சுத் திரும்பியது. கைலாசத்திற்கு உற்சாகம் பிய்த்துக் கொண்டுப் போனது.
" மகனும் மகளும் அமெரிக்காவில் டாலரில் லட்சம் லட்சமாக சம்பாதிக்கிறார்கள். என் தொழிற்சாலையிலும் ஓரளவு லாபம் வருகிறது. வருமானவரி எக்கச்சக்கமாக கட்ட வேண்டியிருக்கிறது. அதை ஓரளவிற்காவது குறைக்கலாம் என்று தான் ஒவ்வொரு வருடமும், லட்சம் லட்சமாக இங்கே தானம் கொடுக்க வேண்டியிருக்கிறது. அதை என் அம்மாவின் நினைவு தினத்தை ஒட்டி கொடுக்கிறேன்." என்று அலுத்துக் கொண்டார். கைலாசத்தின் தாய் கேன்சரில் தான் இறந்து போனார்.
மனக் கசப்புடன் தான் பணம் கொடுக்கிறார் கைலாசம் என்று புரிந்தது கிருஷ்ணனுக்கு. அரசாங்கத்திற்கு நன்றி சொல்லிக் கொண்டார் மனதுள். 'வருமானவரிக்காகத் தான் இவரைப் போன்றவர்கள் மனதில் , சேவை மையங்கள் நினைவிற்கு வருகிறது.' என்று கிருஷ்ணனின் மனம் சொல்லியது.
பிறகு சிரித்துக் கொண்டே, " கொஞ்சம் பொறுங்கள் கைலாசம். உங்களுக்கு ரசீது தருகிறேன்" என்று தன் முன்னால் இருந்த கணினியை, கிருஷ்ணன் தட்ட ஆரம்பிக்கவும், கதவு மீண்டும்
" டொக், டொக்."
" கம் இன் "
உள்ளே நுழைந்த மனிதனைப் பார்த்ததும் கைலாசத்திற்கு கண்மண் தெரியாமல் கோபம் வந்தது.
" என் காரைப் பார்த்து இங்கே வந்தாயா? நீயாக வந்து என் காரில் மேல் விழுந்து விட்டு, இப்போது ஒரு தரித்திரக் கூட்டத்தையே அழைத்துக் கொண்டு வந்திருக்கிறாயா? எவ்வளவு பணம் பறிப்பதாக உத்தேசம்?" என்று சகட்டு மேனிக்குக் கத்த ஆரம்பிக்கவும்,
கிருஷ்ணன் இடை மறித்து ," சார், சார் கோபப்படாதீர்கள். ராஜா என்னைப் பார்க்க வந்திருக்கிறார். " என்றார்.
'ராஜாவாம் ராஜா . பேர் தான் ராஜா . தொழில் என்னவோ செருப்புத் தைப்பது. பேர் மட்டும் ராஜாவாக இருந்தால் ஆச்சா? இதிலொன்னும் குறைச்சலில்லை' என்று கைலாசம் நினைத்துக் கொண்டிருக்கும் போதே
" முதலில் உட்கார் ராஜா. என்ன ஆச்சு ? ஏன் சார் உன் மேல் கோபப் படுகிறார்? " என்று கிருஷ்ணன் கேட்கவும், கிழிந்த லுங்கியும், அழுக்கு முண்டா பனியனும் அணிந்திருந்த ராஜா உட்கார மறுத்து நின்று கொண்டேயிருந்தார்.
" ஒண்ணுமில்லே சார். சார் காரில் வரும் போது, நான் தான் தெரியாமல் அவர் கார் மேல் விழப் பார்த்தேன். நல்ல வேளை, சார் காரை நிறுத்தி விட்டார். பசி மயக்கம் சார்.அதான் விழப் போனேன். நேற்றிலிருந்து ஒண்ணுமே சாப்பிடவில்லை. இப்போ தான் என்னிடம் நூற்றிஐம்பது ருபாய் கடன் வாங்கிப் போன கபாலி பணத்தைக் கொடுத்தான். என் நாஷ்டாவை முடிச்சிட்டு எப்பவும் கொடுக்கிற நூறு ரூபாயைக் கொடுத்துட்டுப் போலாம்னு வந்தேன் சார் ." என்று கிருஷ்ணனிடம் அழுக்கான நூறு ரூபாயை நீட்டினார் ராஜா
திரும்பி கைலாசத்தைப் பார்த்து ," சார், நான் ஏழை தான் சார். ஆனால் பணம் பறிப்பவன் இல்லை சார். என் அம்மா கேன்சரில் தான் செத்துப் போச்சு. காசு இருந்திருந்தா அம்மாவைக் காப்பாத்தியிருக்கலாமோ என்னமோ .. வேற யாரும் காசில்லாமல் செத்துப் போயிடக் கூடாது. அதனால் மாசாமாசம், நூறு ருபாய் சாரிடம் மையத்தின் செல்விற்காகக் கொடுத்துடுவேன். என்னால் முடிஞ்சது, அவ்வளவு தான். அதுக்குத் தான் வந்தேன் சார். நீதான் என்னை தப்பா நினைச்சுட்டே. மன்னிச்சிக்கோ." சொல்லி விட்டு பதிலுக்குக் காத்திருக்காமல், கிருஷ்ணனுக்கு ஒரு வணக்கம் வைத்து விட்டு ராஜா போய் விட்டார்.
கைலாசத்தின் மனதில் இருந்த 'தான் பணக்காரன், தொழிலதிபர்' என்கிற அகங்காரம் போன இடம் தெரியாமல் போனது. " நான் கொடுத்த பத்து லட்சத்தை விட சாப்பாட்டுக்குக் கஷ்டப்பட்டாலும் உதவ வேண்டும் என்று ராஜா கொடுத்த நூறு ரூபாய் விஸ்வருபம் எடுத்தது கைலாசத்தின் மனதில் "ராஜாவும் தொழிலதிபர் தான் . என்ன என்னுடையது அவர் தொழிற்சாலையை விடவும் சற்றே பெரிது அவ்வளவு தான் " என்று நினைத்துக் கொண்டே ராஜா சென்ற திசையையே பார்த்துக் கொண்டிருந்தார் கைலாசம்.
கைலாசம் தானாக தன்னிலைக்கு வரட்டும் என்று கிருஷ்ணன் அமைதியாக அமர்ந்திருந்தார்.
------------------------------ ------------------------------ ------------------

------------------------------
திங்கள், 26 டிசம்பர், 2016
"திங்க"க் கிழமை 161226 – அரிசி உப்புமா கொழுக்கட்டை - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி
பொதுவா
விரதம் அல்லது சாதம் சாப்பிடமுடியாத வேளைகளில், இட்லி, தோசை அல்லது குருணை
உப்புமா செய்வது எங்கள் வீட்டில் (முந்தைய தலைமுறை) வழக்கம். பொதுவாக
சனிக்கிழமை இரவு மாத்திரம்தான்
இந்தமாதிரி டிஃபன் உண்டு. முந்தைய தலைமுறைகளில் வெளியில் process செய்யும்
பொருட்களை (ரவை, சேமியா, ஜவ்வரிசி, அப்பளாம் போன்றவற்றை) வீட்டில்
உபயோகிக்கமாட்டார்கள். சுகாதாரம்தான் இதற்கு அடிப்படை என்றாலும், வீட்டுப்
பெண்களுக்கு பயங்கர வேலை (பெண்டு கழண்டுவிடும் என்று
சொல்லுவோம்). அரிசியைக் குருணையாக ஆக்குவதால், அது சாதம் வகையில் வராது.
அப்படித்தான் அரிசி உப்புமா குருணை உப்புமா என்றாகிவிட்டது. இதை ருசியோட
சாப்பிடணும்னா, வெங்கலப் பானை அல்லது உருளி தேவை (அதெல்லாம் இனி எங்க
பாக்கறது). அதிலும் நல்லா மிதமான தீயில் வெந்தபிறகு
(நல்லா எண்ணெய் விடணும். தேங்காய் எண்ணெய்னா இன்னும் நல்லா மணமா
இருக்கும்), வெங்கலப் பானையில் தீய்ந்து (கருகி இல்லை)
ஒட்டிக்கொண்டிருப்பது தனி ருசி. எழுதும்போதே ருசி நாக்குக்குத் தெரிகிறது.
இப்போ
நான் சொல்லப்போறது, எப்படி அரிசி உப்புமா குழக்கட்டை பண்ணறது என்று.
அரிசி உப்புமாவுக்கு, 1 தம்ளர் அரிசி, ஒரு பிடி கடலைப் பருப்பு, ஒரு பிடி
துவரம்பருப்பு, 10-20 மிளகு தேவை.
இதைக் கொஞ்சம் வெறும் வாணலியில் வறுத்துவிட்டு மிக்சியில் ஒரு சுத்து
சுத்தலாம். இல்லைனா, அரிசி தனியாகவும், மற்றதைத் தனியாகவும் ஒரு சுத்து
சுத்தலாம். நான் ஊருக்கு வரும் சமயத்தில், கடைகளில், அரிசி உப்புமா மிக்ஸ்
என்று 3-4 பாக்கெட் வாங்கிவருவேன். 5-6 மாதம் தாங்கும்.
இரண்டும் ஒன்றுதான் என்றாலும், நாமே தயார் பண்ணுவதுபோல் இருக்காது.
வாணலியில்
3 ஸ்பூன் தேங்காய் எண்ணெயில், கடுகு, சிறிதாக கட் செய்த 2 பச்சை மிளகாய், 1
ஸ்பூன் உளுத்தம்பருப்பு,, 1 ஸ்பூன் கடலைப் பருப்பு, பெருங்காயப்பொடி,
கருவேப்பிலை போட்டு தாளித்துக்கொள்ளவும்.
ஒரு கப் அரிசி உப்புமா மிக்ஸுக்கு 2 ¼ கப் தண்ணீர் என்பது கணக்கு.
தாளித்தவுடன், அதிலேயே, 2 ¼ கப் தண்ணீர் விட்டுத், தேவையான உப்பையும்
சேர்த்து கொதிக்கவிடவும். இதில் 3-4 ஸ்பூன் தேங்காய் துருவலையும்
சேர்க்கலாம். (பயணத்துக்குக் கொண்டுபோவதாக இருந்தால், தேங்காய்
சேர்க்கக்கூடாது.
உப்புமா கெட்டுப்போய்விடும். நான் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யும்போது, 1
பாக்கெட் மிளகாய்ப்பொடி தடவின இட்லி, ஒரு பாக்கெட் அரிசி உப்புமா
கொண்டுசெல்வேன். போய்ச்சேர்ந்த அன்னிக்கே அடுத்தவேளை சாப்பாட்டுக்கு எங்க
போக என்று கவலைப்படக்கூடாது என்பதால்). தண்ணீர் நன்றாகக்
கொதித்தவுடன், அதில் அரிசி உப்புமா மிக்ஸ் ஒரு கப்பை பரவலாகச்
சேர்க்கவும். அரிசி உப்புமா கொதிக்கும்போது மேலே தெறிக்கும். நான் கைக்கு
துணி கிளவுஸ் வைத்திருக்கிறேன். நல்லா கொதித்து தண்ணீர் எல்லாம் போனபின்,
அடுப்பை அணைக்கவும்.
வெறும்ன
அரிசி உப்புமா மட்டும் வேணும்னா, அடுப்பை அணைத்தபின், உப்புமாவை குக்கரில்
வைத்து, இட்லி வேகவைப்பதுபோல் 10 நிமிடம் வேகவைக்கலாம். (Gas அடுப்பில்
சாதாரண வாணலியில் கிண்டி
அரிசி உப்புமாவை வேகவைப்பது கடினம்). ஆனால், இப்போ நான் சொல்லப்போறது,
உப்புமா குழக்கட்டை செய்வதைப் பற்றி.
அரிசி
உப்புமாவை, கை பொறுக்கிற சூடு வந்ததும், குழக்கட்டை மாதிரிப் பிடித்து,
இட்லி தட்டில் வைத்து, இட்லியை வேகவைப்பதுபோல் வேகவைத்துவிடவேண்டியதுதான்.
இதற்கு
தொட்டுக்க ஒண்ணும் வேண்டாம். நான் வெந்தயக் குழம்பு கொஞ்சம்
தொட்டுக்கொண்டு சாப்பிட்டேன். இட்லி மிளகாய்ப்பொடியும் நல்லா இருக்கும்.
என் குழந்தைகளுக்கு அரிசி உப்புமாவுக்கு
தேங்காய்த் தொகையல் ரொம்ப இஷ்டம். (சிவப்பு மிளகாய், உ.பருப்பு,
பெருங்காயம் கொஞ்சம் எண்ணெயில் வறுத்துக்கொண்டு, தேங்காயும், சிறிது
புளியும் சேர்த்து மிக்ஸியில் அரைத்தால் தேங்காய்த் தொகையல் ரெடி).
(எனக்கும் ரொம்பப் பிடிக்கும் நெல்லைத்தமிழன்.. சுட்ட கத்தரிக்காய் கொத்ஸு தொட்டுச் சாப்பிட பரம சுகம்!)
ஞாயிறு, 25 டிசம்பர், 2016
சனி, 24 டிசம்பர், 2016
அஜித்தைக் காப்பாற்றிய செபாஸ்டியன் பி
1) சிறந்த அஞ்சலி. இலவச உணவு வழங்கி பசி போக்கிய அம்மா உணவகங்கள்.
2) இந்த மாதிரி ஒரு நிகழ்வில் இப்படி ஒரு ஜனவெள்ளத்தில் எந்தக் கலவரமும், அசம்பாவிதமும் நடக்காமல் அமைதியாக இருந்த நம் மக்களையும், அதற்குத் துணை நின்ற காவல்துறையையும் நாம் பாராட்டாமல் யார் பாராட்டுவார்கள்?
3) நடக்கவேண்டும் அனைத்து இடங்களிலும் இது...
4) அபிஜித்தைக் காப்பாற்றிய செபாஸ்டியன்.
5) எங்கள் சென்னை.
7) திரிவேணி ஆச்சார்யாவின் விடா முயற்சியால் காப்பாற்றப்பட்ட இரண்டு சகோதரிகள். இடைவிடாத சேவை.
8) சபாஷ் (நடிகர்) லாரன்ஸ்.
9) கேரளப்படகில் சூர்யா.
10) தங்கத்தை மிஞ்சிய தங்கம் செல்வகுமாரி.
வெள்ளி, 23 டிசம்பர், 2016
வியாழன், 22 டிசம்பர், 2016
பிறமொழிக்கதைகள் :: ராவி நதியில் - உருது - குல்ஸார்
இந்த வருட தினமணி தீபாவளி மலர் ஒரு விஷயத்தில் மிகவும் ரசிக்க வைத்தது.
தீபாவளிக் கதைகள் என்ற தலைப்பில் சில பொக்கிஷக் கதைகளை
பிரசுரித்திருக்கிறார்கள். துமிலன் (நவீன தீபாவளி), 'சித்ராலயா' கோபு
(தீபாவளி எப்படி), பெ நா அப்புஸ்வாமி (தீபாவளி பட்சணம்).
அடுத்த பொக்கிஷம் பிறமொழிக் கதைகள். இதில் தகழி சிவசங்கரன்பிள்ளை -
மலையாளம் (வெள்ளம்), சுனில் கங்கோபாத்தியாய - வங்காளம் (கதாநாயகி),
திருபென் படேல் - குஜராத்தி (மகாத்மாவின் மனிதர்கள்), குல்ஸார் - உருது
(ராவி நதியில்). சிவசங்கரி அந்தந்த எழுத்தாளர்களை நேர்கண்டு அந்த
உரையாடல்களுடன் தொகுத்திருக்கும் புத்தகம் "இலக்கியத்தின் மூலம் இந்திய
ஒருங்கிணைப்பு" (வானதி பதிப்பகம்).
இது
தவிர அசோகமித்திரன், சா. கந்தசாமி, பொன்னீலன், ஸிந்துஜா, இரா.
சோமசுந்தரம், பா. முத்துக்குமரன், எஸ். சங்கரநாராயணன், ஜேஎஸ் ராகவன்
ஆகியோரின் சிறுகதைகளும் உண்டு.
தகழி
எழுதியிருக்கும் 'வெள்ளம்' கதை கண்களை நிறைத்தது. என்போன்ற நாலுகால்
ஜீவன்களை நேசிக்கும் எல்லோருக்கும் அந்தக் கதை பிடிக்கும்.
இதில் குல்ஸார் எழுதி இருக்கும் கதை படித்ததும் மனம் ஒரு கணம் ஆடி
நின்றது. குல்ஸாரை நேர்கண்டு எழுதி இருக்கும் சிவசங்கரி அவரிடம் இதை
பற்றிக் குறிப்பிடும்போது "அக்கதையில் நீங்கள் எழுதி இருந்த கடைசிப்
பகுதியைப் படிக்கும்போது உடம்பு உதறிப் போட்டது!" என்கிறார்.
அதற்கு அவர் பதில் "என் சிறுகதைகள் ஒரு வகையில் கவிதைகள் போன்றவைதாம்.
மேலெழுந்தவாரியாகப் படித்தால் ஒரு சிறுகதை போலத் தோன்றும். ஆனால் அதற்கு
கீழே ஒரு அடுக்கு உள்ளது. அதற்குள் புகுந்து பார்க்கும்பொழுது
முழுக்கதையையும் வேறொரு கோணத்திலிருந்து பார்ப்பது சாத்தியமாகும்.
பாகிஸ்தானில் பிறந்து பிரிவினையின்போது இந்தியாவுக்கு வந்த நான்தான் அந்த
இரட்டைக் குழந்தைகள். இது ஒரு கண்ணோட்டம். இரட்டைக் குழந்தைகள் இரண்டு
நாடுகளைக் குறிக்கின்றன என்பது இன்னொரு கோணம். வெறும் ஒரு நிகழ்வை மட்டும்
அந்தக் கதை சொல்ல வரவில்லை. அதையும் தாண்டி பல்வேறு நடப்புகளை
உள்ளடக்கியது என்பதை புரிந்து கொள்ளவேண்டும். இப்படி ஒவ்வொரு கதையின்
கீழும் பல அடுக்குகள் உள்ளதால்தான் அவை கவிதைகள் போன்றவை என்றேன்".
குல்ஸார் ஹிந்தியில் எழுதி இருக்கும் பல திரைப் பாடல்கள் எவ்வளவு உயர்ந்த
தரம் என்பதை என் அரைகுறை ஹிந்தி அறிவிலேயே புரிந்து கொள்ள
முடிந்திருக்கிறது. படித்து முடித்ததும் இந்தக் கதை என்னையும் உலுக்கிப்
போட்டது. இதே போன்றதொரு கதையை எழுத்தாளர் சுப்ரஜா ஸ்ரீதரன் எழுதி
இருக்கிறார். அம்மா பற்றிய அந்தக் கதை அப்போது என்னை திடுக்கிட வைத்தது.
குல்ஸார்