வியாழன், 29 நவம்பர், 2018

வில்லங்கக் கேள்விகள்!


எச்சரிக்கை! 

இது ஒரு வி(யாழ)ல்லங்கப் பதிவு. 


எல்லோரும் களத்தில் குதித்து, பதில்கள், பாடல்கள், பகடி, பாராட்டு எல்லாவற்றையும் பயங்காமல் பகிருங்கள்! 

ஆசிரியர்கள், பதிவர்கள், எங்கள் வாசகர்கள் எல்லோரும் கமெண்ட் அடித்து விளையாடலாம். 

இப்போதெல்லாம் எங்கள் ப்ளாக் பதிவுகளில், ஆறு நாட்கள் வரை, comment moderation கிடையாது. உடனுக்குடன் வெளியிடப்படும்! 




Image result for cartoon controversy
செரினா ! இது செரிதானா! 

ஸ்டார்ட் மூஸிக் !!! 

இதோ சில வில்லங்கக் கேள்விகள் "


1. தேர்தல் சமயத்தில் ஒரு அணி மிக விரும்பத் தக்கதாகவும் எதிர் அணி மிக  மோசமானதாகவும் நாம் எண்ணக் காரணம் என்ன ?

2. சினிமா அல்லது சிறுகதை காரணமாக உங்கள் நடத்தை மாறி இருக்கிறதா ?

3. இன்றைய மல்டி ஸ்பெஷாலிட்டி மனைகளில் "நிபுணர்" தரும் மருந்து குறித்து எப்போதாவது அவநம்பிக்கை தோன்றியிருக்கிறதா ? இது வரை எத்தனை முறை செகண்ட் ஒப்பினியன் நாடியிருக்கிறீர்கள் ?

4. நீங்கள் அப்பட்டமாக நம்பிக்கை வைத்துள்ள புனிதர் யார் - ஏன் ?

5. உங்கள் எண்ணப்படி, இதே நிலையில் இந்தியா/தமிழ்நாடு  போனால் முழு சீரழிவு வர இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும் ?

6. ""இதுவும் கடந்து போகும்" எனும் நிலை முகநூல், வாட்ஸப்புக்கு வருமா ?

===> கருத்துரைப்பவர்கள் அந்தந்த கேள்வி சம்பந்தப்பட்ட எண்ணை முதலில் எழுதி, அப்புறம் அதைப் பற்றிய உங்கள் கல், சோடா புட்டி, முள், மலர் எல்லாவற்றையும் அள்ளி வீசுங்கள்! 

==========================================

67 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. 01. தமிழக மக்களுக்கு இலவம் பஞ்சு போன்ற மனசு, தலைவன் திடீர்னு இறந்து விட்டால் பரிதாபப்பட்டு அந்தக் கட்சிக்கு குத்திடுவாங்க... (தலைவன்தான் இறந்துட்டானே ? என்ற சிந்தை வராது)

      02. ஒருக்காலமும் எனக்கு மாறாது ஆனால் தமிழகத்தில் வீட்டில் வளர்க்கும் விட்டில் பூச்சிகள் அதிகம் ஆகவே இதை நம்பி (ஏ)மாறும் ஜடங்கள் அதிகம். மகாநதி படத்தில் நாயகனின் மாமியாரைக் கண்டு வியந்தது உண்டு ஆனால் தமிழ்நாட்டில் இப்படி ஒரு மாமியாரும் கிடையாது. இப்படி மாமியார்கள் வேண்டும் என்பதே எமது பிரார்த்தனைகள்.

      நீக்கு
    2. 03. எப்படியாயினும் வியாபாரமே மருத்துவர்கள் இறைவனுக்கு சமம் என்பது பொய்.

      04. அபுதாபி நண்பர் திரு. எம்.சோலைராஜ் காரணம் உதவி கேட்கும்முன் நிலையறிந்து தானாக உதவுபவர் (மனிதம் இன்னும் வாழ்கிறது என்பதை இவரால் உணர்கிறேன்)

      நீக்கு
    3. 05. அடுத்த தலைமுறைகள் இன்னும் அல்லல்படும் சுயகௌரவம் இழக்கும் நிலை வரும்.

      06. எல்லாம் மாறும் ஆனால் வலைப்பு நிலைத்து நிற்கும் அதுவும் கௌரவமான கருத்துரைகளால் அலங்கரிக்கப்பட்டால் மட்டுமே...

      (செல்வழி ஆகவே சிறிய கருத்துகள்)

      நீக்கு
  2. ஸ்ரீராம் லீவில் போயிருக்காரா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லை ஸ்ரீராம் வீட்டு மின் இணைப்பு லீவுல போயிடுச்சு!

      நீக்கு
  3. 1.இப்போதைக்கு எந்தக் கட்சியும் யோக்கியம் இல்லை. ஆகவே தேர்தலில் போட்டிக்கு நிற்பவர்களில் யார் பரவாயில்லை என்று பார்த்தே ஓட்டளிக்கும் பழக்கம் எப்போவும் உண்டு.

    பதிலளிநீக்கு
  4. 2. அநியாயமா இல்லையோ, சினிமாவும், சிறுகதையும் கற்பனைனு தெரிஞ்சும் அதைப் பார்த்து புத்தி வருமா? அதுவும் எனக்கு? படிச்சுட்டுப் பார்த்துட்டுப் போயிட்டே இருப்பேன்! அம்புட்டு சீக்கிரம் திருந்திடுவோமா என்ன? இஃகி இஃகி இஃகி!

    பதிலளிநீக்கு
  5. இரண்டாவது கேள்விக்குக் கொஞ்சம் சீரியஸா பதில் சொன்னல! சினிமாவோ, சிறுகதைகளோ நன்றாக இருந்தால் மனதைத் தாக்கும். அதன் பாதிப்பு மனதின் அடி ஆழத்தில் இருக்கும். கொஞ்ச நாட்கள் அல்ல சமயத்தில் வருடங்கள் ஆனாலும் மறக்காது. அப்படி நான் நினைக்கும் நாவல் நீல.பத்மநாபனின் "தலைமுறைகள்" சினிமானு பார்த்தால் பொதுவா எதுவும் இல்லைனாலும் மஹாநதியில் கமல் பெண்ணை ஏமாற்றி விபசாரியாக மாற்றி அங்கேயே கமலும் போய்ச் சேர்வது! மனசு துடிச்சிருக்கு!

    பதிலளிநீக்கு
  6. நான் பொதுவாகவே கூட்டம் அதிகம் இருக்கும் இடங்களை எப்போதுமே தவிர்ப்பேன். தீபாவளித் துணி வாங்கவோ அல்லது அவசரம், அவசியம் காரணமா நகைக்கடைகளுக்குப் போனாலும் கூட்டமான இடங்களுக்குப் போக மாட்டேன். நம் தேவைக்கு ஏற்பத் தேர்ந்தெடுக்க முடியாமல் அவசரம் அவசரமா ஏதேனும் ஒண்ணை எடுக்கறாப்போல் ஆயிடும். :) அப்படி இருக்கிறச்சே உடம்பைப் பார்த்துக்க மல்டி ஸ்பெஷாலிடி மருத்துவமனைக்குப் போவதா? இல்லை! வாய்ப்பே இல்லை! கூடியவரை குடும்ப மருத்துவரிடமே போவேன். அவர் பரிந்துரையின் பேரில் சிறப்பு மருத்துவரிடம் போனது உண்டு. அதுவும் எந்த மல்டி ஸ்பெஷாலிடி மருத்துவமனையிஅலும் அல்ல! அவர் மட்டும் தனியாக வைத்தியம் பார்க்கும் க்ளினிக்குகளில்.

    பதிலளிநீக்கு
  7. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம், துரை அண்ணா, கீதாக்கா பானுக்கா நெல்லை அனைவருக்கும்


    நோ நோ நோ இது அடுக்காது

    6 மணிக்கு முன்னரே பதிவு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    கீதா

    பதிலளிநீக்கு
  8. ஆஹா கௌ அண்ணாவா!! அதான் எபி டைம் எல்லாம் கன்னா பின்னான்னு மாறுது ஹா ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  9. அதே சமயம் எங்க வீட்டில் புக்ககத்தினர் அனைவருக்கும் இத்தகைய பிரபலமான மருத்துவமனைகள் தான் பிடிக்கும். அங்கே அவங்களுக்கு நடக்கும்/நடந்த சிகிச்சையைப் பார்த்ததாலேயே எங்களுக்கு வேண்டாம்னு தோணி இருக்கோ என்னமோ!

    பதிலளிநீக்கு
  10. கௌ அண்ணா இனிய காலை வணக்கம்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம், வணக்கம், வணக்கம் எங்கள் வணக்கம்! எல்லா வருகையர்களுக்கும்!

      நீக்கு
  11. 4. இதில் மாற்றுக்கருத்தே இல்லை. நம்ம ரங்க்ஸ் தான்! அவர் என்மேலேயும் நான் அவர் மேலேயும் நம்பிக்கை வைச்சிருக்கோம்! மத்தவங்களை நம்பணும்னா அதுக்குக் காரண, காரியம் இருக்கணுமே!

    பதிலளிநீக்கு
  12. அன்பின் Kgg, ஸ்ரீராம், கீதா/ கீதா மற்றும் அனைவருக்கும் வணக்கம்....


    வாழ்க நலம்!....

    பதிலளிநீக்கு
  13. 5. இன்னும் சீரழியணுமா என்ன? இப்போவே தாங்கலை!

    பதிலளிநீக்கு
  14. நேரங்கெட்ட நேரத்தில் சின்ன பிள்ளைகள் விளையாடினால்

    காத்து கருப்பு அடித்து விடும் என்பார்கள்!...

    புரிந்து கொண்டால் சரி!?....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்கள் தள அரங்கில், நீங்க காத்தா, கருப்பா! (இராகம் : என் சமையலறையில் ....)

      நீக்கு
    2. >>> எங்கள் தள அரங்கில், நீங்க காத்தா, கருப்பா!.. <<<

      காத்தும் இல்லை..
      கருப்பும் இல்லை..
      கலத்தோடு ஊடாடும்
      சின்னஞ்சிறு துடுப்பு!...

      இப்படிக்கு
      எளியேன் சின்னத்தம்பி..

      நீக்கு
  15. என்னா ஆச்சு ஸ்ரீராமுக்கு?!!!!!

    அண்ணே கமென்ட் மாடரேஷனே கிடையாதே எபி ல சமீப காலமா...ஹா ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  16. 6. கேள்வியின் தாத்பரியம் புரியலை. ஆனாலும் இத்தகையவை திடீர்னு காணாமல் போகவும் வாய்ப்பு இருக்கு. அப்போ மாற்றாக வேறொன்று வரத்தானே செய்யும். ஆகவே இத்தகைய தொழில்நுட்ப விஷயங்களில் மாற்றங்களை எப்போவுமே எதிர்பார்க்க வேண்டியது தான்.

    பதிலளிநீக்கு
  17. அதற்குள் 19 பின்னூட்டங்களா என்று பார்த்தால் ஓபனிங் பாட்ஸ்மேன் அடடித்தவை... நான் வழக்கம் போல் மெதுவாக வருகிறேன்.

    பதிலளிநீக்கு
  18. ஏற்கனவே எனக்கு நாள் தேதி குழப்பம் உண்டு...நார்மலா எபி பார்த்துதான் இன்னிக்கு தி செ பு வி ந்னு என்னான்னு தெரிஞ்சுக்குவேன்....இன்னிக்கு வந்ததும் புதனா வியாழனான்னு ஒரே குயப்பம் கெள்வியா கீதே ....ஹிஹிஹிஹி....

    கீதா

    பதிலளிநீக்கு
  19. கீதாக்கா, பானு அக்கா, துரை செல்வராஜு ஸார், கீதா ரெங்கன்...

    அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

    பதிலளிநீக்கு
  20. 1. கூவத்துல எந்தக் கூவம் நல்ல கூவம்???? (கில்லர்ஜி கமான்....ஹா ஹா ஹா)

    2. நெவர்! அதெப்படி....அதெல்லாம் சும்மா கற்பனை...அல்லது சில அதீதமானவை யதார்த்தம் வேறு ...படிச்சாலோ பார்த்தாலோ கடந்து போதல் தான்.... நமக்குன்னு சுயசிந்தனை உண்டல்லோ...அப்படி மாறின்னால் அதுக்குப் பெயர் வேறு..ஹிஹிஹிஹி

    (அந்த சினிமா பார்ட்டுக்கு....திருடனையே ஹீரோவா காட்டுற சினிமா பார்த்து கெடறதுக்கு கூட்டம் இருக்கத்தான் செய்யுது...குறிப்பா தமிழ்நாட்டுல...ஹீரோ நேர்மையான ஆபீஸரா எல்லாரையும் துவைத்து எடுப்பது போல நாம செய்யத்தான் முடியுமா என்ன....கில்லர்ஜி கமான்!!!! ஹிஹிஹி)

    கில்லர்ஜி இந்த ரெண்டுலயும் அடிச்சு விளையாடுவாரே!!!!ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  21. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  22. கேள்விகளுக்கு விடை அளிப்பவர்களின் பதில்களை படிக்க ஆவல்.

    பதிலளிநீக்கு
  23. திருஷ்டிப் பரிகாரம் மாதிரி இந்தப் படம் எதற்கு? ஒருவேளை அனுஷ்கா டூ சொரீனா என்று இளமை ஊஞ்சலாடுகிறதோ?!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாங்க திருஷ்டிப் பூசணி உடைக்கிற படம்தான்!

      நீக்கு
  24. காலை வணக்கம் 🙏.

    ஆஹா கேள்விகள் இன்றைக்கும் தொடர்கிறது.... நல்ல கேள்விகள். மாலை வருகிறேன் மீண்டும்.

    பதிலளிநீக்கு
  25. வில்லங்கக் கேள்விகளுக்கு விடலையின் பதில்கள்...

    1). ஒரே ஒரு எண்ணம் தான்..
    எரிகிற கொள்ளியில் எந்த கொள்ளி நல்ல கொள்ளி?...
    ( கிராமங்களில் வேறு விதமாகவும் சொல்வார்கள்.. சின்ன பையன்கள் வீட்டுப் பெரியவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளவும்!..)

    2). சிறுகதைகளை விடுங்கள்... ராஜாஜி அவர்களின் வியாசர் விருந்து, சக்ரவர்த்தித் திருமகன் - இவற்றை நான் வாசித்து உணர்ந்தபோது என்னுடைய வயது பதினான்கு... பட்டினத்தார் பாடல்களைப் படித்த போது பதினேழு...

    பண்பு /பாசம்/தேசபக்தி உணர்வுகளை நெஞ்சில் பதித்தது சினிமா... எப்போதுமே நல்ல பையன் நான்... வெளி காரணிகள் என்னை பாதித்தது இல்லை... எனவே சிறுகதை/ சினிமா இவற்றுக்கு என் நடத்தையை மாற்ற வேண்டிய அவசியம் இல்லாமல் போயிற்று...

    3). எந்த மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவ மனையிலும் ஏறி இறங்கியதில்லை.. சமீபத்தில் சர்க்கரை குறைபாடு ஏற்பட்டபின் கூட அலோபதியை நாடியதில்லை..

    அவநம்பிக்கைக்கு அப்பாற்பட்டவைகள் -
    நாவற்பழம், ஆவாரம்பூ, வேப்பம் பூ, கருவேலம்பட்டை, கருப்பட்டி, நல்ல எண்ணெய் - இவற்றோடு - இறைவனின் அருள்!...

    4). அப்பட்டமாக நம்பிக்கை வைத்துள்ள புனிதர் - அப்படியெல்லாம் கிடையாது... ஆறுதலுக்கும் தேறுதலுக்கும் தேவாரத் திருப்பாடல்கள்...
    அவை காட்டும் வழியே வழி!...

    5). இந்தியா எப்படியாவது போகட்டும்... பாரதத்தின் பண்பாட்டை உருக்குலைக்கும்படிக்கு தமிழக அரசின் அறிவிப்பு ஒன்று வெளியாகி இருக்கின்றதே...

    அரசுப் பள்ளிகளின் மாணவியர்க்கு பூச்சூட, கொலுசு அணிய, மருதாணி இட்டுக் கொள்ள - தடை விதிக்கப்பட்டுள்ளதே.. அறிய வில்லையா!...

    தலைவாரிப் பூச்சூட்டி உன்னை
    பாட சாலைக்குப் போ என்று
    சொன்னாள் உன் அன்னை!...

    - என்றார் பாவேந்தர்...

    அவர் இப்போது இருந்தால் என்ன சொல்வாரோ தெரியவில்லை...

    மற்றபடிக்கு -
    நெற்றித் திலகம், வளையல், சடை - இவை பற்றி தினமலர் ஒன்றும் சொல்லவில்லை...

    தமிழ்த் தாய் வாழ்த்தில் - தக்கசிறு பிறைநுதலும் தரித்த நறுந்திலகமும் - என்று வருகின்றது...

    பாரத// தமிழ்க் கலாச்சாரத்தில் திலகத்துக்கு மிகுந்த மரியாதை...

    அடுத்து மத சார்பற்ற நாட்டில் பொட்டு உறுத்துகிறது என்று எவனும் கோர்ட்டுக்குள் போய் ஜெயித்தால் பொட்டு தேவையற்றதாகி விடும்...

    தமிழ்த்தாய் வாழ்த்திலுள்ள அந்த வரியும் அர்த்தமற்றுப் போய்விடும்...

    இப்போதே நாகரிக யுவதிகள் உள்பட எவரும் திலகம் தரிப்பதில்லை..
    ஒட்டும் பொட்டுத் தான்.. இனி அதற்கும் வேட்டு வைக்கப்படும்...

    நீறில்லா நெற்றி பாழ் என்றாள் தமிழ் மூதாட்டி...

    கிறிஸ்தவ கல்வி நிலையங்கள் பலவற்றிலும்
    திருநீறு, சந்தனம், குங்குமம், விரத உடை - இவற்றுக்கு ஏற்கனவே தடை...

    நட்சத்திர ஹோட்டல்களில் வேஷ்டிக்குத் தடை...

    இப்போதே ஆண்கள் பெர்முடாவிலும்
    பெண்கள் நைட்டி/லெக்கின்ஸ் இவற்றிலும் வெளிப்படையாக உலா வர ஆரம்பித்து விட்டார்கள்...

    இனியும் கலாச்சாரம் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்றா நினைக்கின்றீர்கள்..

    இருந்தாலும் -

    சென்ற வருடம் தீபாவளிக்கு வெடி வெடித்ததற்காக மாணவர்களைத் தண்டித்தது கிறிஸ்தவ கல்வி நிலையம்... திருச்சியில் நடந்ததாக நாளிதழ்களில் செய்தி வெளியானது...

    அரசு அலுவலகங்களில் சரஸ்வதி பூஜைக்குத் தடை!...

    பகுத்தறிவுப் பாசறையில் பயின்ற கலைஞர் கூட தனது ஆட்சியில்
    இப்படியெல்லாம் செய்ததில்லை...

    அடிமைப்பட்டுக் கிடந்தபோது நடக்காத விஷயங்கள் எல்லாம்
    சுதந்திரமாகத் திரிகின்றபோது எளிதாக நடந்து விடுகின்றன...

    6. வருது.. வராமப் போவுது!.. அதப்பத்தி நமக்கென்ன!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி, சவுக்கடி பதில்கள் அருமை.

      நீக்கு
    2. துரை செல்வராஜு சார்.. “காட்டும் வழியே வழி”- இதைப் படித்தால் “எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு” குறள்தான் நினைவுக்கு வந்தது. அந்த இன்ஸ்ப்பிரேஷனா?

      நீக்கு
  26. துரை செல்வராஜு சாரின் பதில்களில் சுவாரஸ்யம், தகவல் மற்றும் கே.5.க்கான பதிலில் ஏகப்பட்ட அதிர்ச்சிகள்!

    //..மாணவியர்க்கு பூச்சூட, கொலுசு அணிய, மருதாணி இட்டுக் கொள்ள - தடை விதிக்கப்பட்டுள்ளதே..//

    அடுத்ததும் வரவிருக்கிறது: மாணவ, மாணவிகள் கோவிலுக்குப் போய்விட்டு வந்தது தெரியவந்தால் ‘பள்ளி நீக்கம் செய்யப்படுவார்கள். அல்லது அப்படி ஒருவேளை தனியாகப் படித்துத் தொலைத்துவிட்டால் (private study, correspondence course etc), அரசு வேலைவாய்ப்புகள் மறுக்கப்படும்.

    தமிழ்நாட்டின் பொற்காலமய்யா இது! இந்தக்காலத்தில் வாழ புண்ணியம் மிகச்செய்திருக்கிறோம் நாம்..

    பதிலளிநீக்கு
  27. @ ஏகாந்தன்...

    >>> அடுத்ததும் வரவிருக்கிறது: மாணவ, மாணவிகள் கோயிலுக்குப் போய்விட்டு வந்தது தெரிய வந்தால் ‘பள்ளி நீக்கம் செய்யப்படுவார்கள்... <<<

    அன்பின் ஏகாந்தன் அவர்களே..
    இப்படியும் ஒரு காலம் வந்தால் ஆச்சர்யப்படுவதற்கில்லை!...

    நம்மை நம்மிலிருந்து நாமே நீக்கிக் கொள்வதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன..

    இல்லையேல் - Ash WednesDay - திருநீற்றுப் புதன் என்று மொழி பெயர்க்கப்படுமா?...

    சாம்பலும் திருநீறும் ஒன்றா!...

    பதிலளிநீக்கு
  28. ஆஆஆ என்ன இன்று கெள அண்ணனின் அதிரடி ஆட்டமோ? அதனால தலைப்பில்லாத போஸ்ட்டாஆஆஆ?:)...

    ////பயங்காமல் பகிருங்கள்! ///
    ஆஆஆ ஸ்பெல்லிங் மிசுரேக்கூஊஊ:) அதிரா கண்ணுக்கு எல்லாம் தெரியுமெல்லோ பிக்கோஸ் மீக்கு டமில்ல ட் ஆக்கும்:)..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பயங்காமல் என்றால், பயம் கொள்ளாமல் என்று அர்த்தம். என்னுடைய கண்டுபிடிப்பு. நான் தமிழ்ல D+ !!

      நீக்கு
    2. // பதில்கள், பாடல்கள், பகடி, பாராட்டு எல்லாவற்றையும் பயங்காமல் பகிருங்கள்! // எல்லா வார்த்தைகளும் 'ப' வரவேண்டும் என்பதற்காக புது வார்த்தை!

      நீக்கு
    3. ஆஆஆ டி ஸ்ரார் தெரியும்:) இது என்ன டி பிளஸ் ஹையோ ஹையோ:)))...

      ஒஹ்ஹ்ஹ்ஹ்ஹ் புது டமில். வார்த்தை இது எங்கட டிக்ஸனறியில மட்டும் இருக்கட்டும் பவ் அண்ணன்:)....

      அதாவது எல்லாமே ப ல வரட்டும் என்பதால பவ்:)... எப்பூடீஈஈஈ:)

      பஞ்சு
      பாதா
      பாமதி அக்கா..
      பல்லர்ஜி
      பாசாக்கா
      பல்லைத் தமிழன்:)..
      பரை அண்ணன்
      பராம்:)....
      ஹையோ முடியல்ல:)...

      நீக்கு
    4. பாதிரா ! பது பன்ன பழப்பம்!

      நீக்கு
    5. பவ் அண்ணன் பங்கட பமெண்ட் பார்த்து பலை பத்துது பனக்கு:) பாஆஅ பாஆஆஆஆஅ பாஆஆஆ பக்பக்பாஆஆஆ:)

      நீக்கு
    6. பாஹா, பானி பதிரா, பங்களோட பதில் பல்லாம் பூப்பரு! பல்லா பழுதி பருக்கீங்க!

      நீக்கு
  29. வாசகர்களின் பதில்கள் அனைத்தும் அம்சமாய் இருக்கிறது...

    பதிலளிநீக்கு
  30. நிறையக் கும்மி அடிக்க முடியல்ல இப்போதெல்லாம் எட்டிப் பார்த்தாலே பெரிய விசயமா இருக்கு... விரைவில் நிலைமை வழமைக்கு திரும்பும்....

    2. இதுக்கு மட்டும் இன்று பதில்....
    நிறையவே மாத்தி இருக்கு, அப்பா சின்ன வயதிலிருந்தே சொல்லித் தந்தவர் அன்னம் போல வாழ பழகோணும் என...அதனால எங்கு எது பார்த்தாலும் அதில் கிடைக்கும் நல்ல விசயங்களைப் பொறுக்கி. என்னைக் கொஞ்சம் செதுக்குவேன், அதேபோல எனக்குப் பிடிக்காத விசயத்தைப் பார்த்தால் நினைச்சுக் கொள்வேன்... இப்படி நான் இருக்கக்கூடாது என.

    அதனால, பார்க்கக்கூடாது படிக்கக்கூடாது என எதையும் ஒதுக்குவது குறைவு...

    பதிலளிநீக்கு
  31. @ ஞானி!athira: //..பிக்கோஸ் மீக்கு டமில்ல ட் ஆக்கும்:)..//

    சரிதான். ‘ட்’-லதானே ஆரம்பிக்குது ’ட்டமிள்’ !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதுக்கு பதில் டி பிளஸ் எடுத்தவருக்கு தெரிஞ்சிருக்கலாம் ஏ அண்ணன்:) ஹா ஹா ஹா

      நீக்கு
  32. @ துரை செல்வராஜு: //.. திருநீற்றுப் புதன் என்று..//

    திருநீற்றுப் புதனா? சிவனே.. !
    பொன் ஆப்ட்டாலும் புதன் ஆப்டாதுன்னு சொன்னாங்களே.. இவிங்கள்ட்டபோயி இப்படி மாட்டிருச்சே ?

    கொஞ்சம் சீரியசாக: இந்திய நாடு என்பது, இவ்வுலகில் பத்தோடு பதினொன்று, அத்தோடு இதுவொன்று எனப் பார்க்கப்படும் வெறும் நிலப்பகுதியல்ல.(இதனை இஸ்ரேலியர்களும், ஜெர்மானியர்களும், ரஷ்யர்களும் மற்றவர்களைவிட அதிகமாகவே தெரிந்துவைத்திருக்கிறார்கள்-நமது புராதன மொழிகளான சமஸ்க்ருத, தமிழ்ச் செல்வங்களான தொன்னூல்களை, ஆர, அமரப் பயின்றதின் விளைவு). இந்தியக் கலாச்சாரம், இந்துமதம் ஆகியவையும் முந்தாநாள் மழையில் நேற்று முளைத்து, குட்டையாக நிற்கும் சங்கதிகள் அல்ல. இந்த மண்ணிலிருந்து இந்த உன்னதங்களை, மண்ணின் சாரத்தை யாரும் உறிஞ்சிவிட முடியாது. வெளியேற்ற முடியாது. என்ன, கொஞ்சம் முயற்சித்துப் பார்ப்பார்கள். விளைவாக, விசித்திரக் காட்சிகள், வன்மக்காட்சிகள் சில அவ்வப்போது அரங்கேறும். சிதைக்க முனைபவர்கள், நாளடைவில் சிதைந்து போவார்கள். அவர்களின் விதி.

    ஃப்ரான்ஸ் நாட்டின் 16-ஆம் நூற்றாண்டு மெய்ஞானியான நோஸ்ட்ராடமஸ் தன் கவிதை வரிகளில், இனிவரும் உலகின் பெருநிகழ்வுகளை, காலப்பகுதிகளை மேலும்கீழுமாக வேண்டுமென்றே மாற்றி, பூடகமாக, கொத்துக்கொத்தாகக் கொஞ்சம் சொல்லியிருக்கிறார். அதிலேயே பயங்கரம் சிதறிக்கிடக்கிறது.. சரி, இங்கு இத்தோடு நிறுத்திடுவோம்.


    பதிலளிநீக்கு
  33. 4. நான் நம்புவர்கள் நிறைய இருக்கிறார்கள் ஆனால் புனிதர் என்ற வார்த்தையை தவிர்த்தால். சாமிஜிக்கள் (புனிதர்????) யாரையும் தொடர்வதுமில்ல...நம்புவது இல்லை. ஆனால் யாரிடம் நல்லது இருந்தாலும் அதை எடுத்துக் கொள்வேன். கெட்டது இருந்தால் அதுவும் பாடமாகிப் போகும். செய்யக் கூடாது என்று.

    அப்பட்டமாக நம்பும் புனிதர் என்றால் நம் யார் கண்ணுக்கும் புலப்படாமல் ஆனால் பல விதங்களில் பல ரூபங்களில் தன்னைப் புலப்படுத்தும் இறைவனை. (இந்த பதில் உங்கள் கேள்விக்குப் பொருந்துமா என்று தெரியலை...இருந்தாலும் என் மனதில் பட்டதை எழுதியிருக்கேன்...)

    கீதா

    பதிலளிநீக்கு
  34. 5. முழுச் சீரழிவு வரும் என்று சொல்வதற்கில்லை என்றே தொன்றுகிறது. ஏனென்றால் இப்போது நடக்கும் நிக்ழ்வுகள் சீரழிவுகள் முன்பும் இருந்தது. அரசர் காலம் அதற்கும் முன்பு தொட்டே இருக்கத்தான் செய்தது. ஆனால் அப்போது மக்கள் தொகை, ஊடகங்கள் டெக்னாலஜி வளர்ச்சி என்று வெளியில் பரவலாக அறியப்படாதவை இப்போது அறியப்படுகிறது என்றே தோன்றுகிறது.

    நான் படித்த காலத்திலேயே டேட்டிங்க், கற்பழிப்பு, உடை மாற்றங்கள் எல்லாம் இருந்தன. என் கல்லூரியில் அதற்காகவே பல கலந்தாய்வுகள், செமினார், கரு கலைப்பு எவ்வலவு ஆபத்து என்று படம் போட்டு காட்டி அறிவியல் ரீதியாக விளக்கி என்று பல நடவடிக்கைகள் எடுத்தார்கள்...டேய்ஸ் ஸ்காலரும் உண்டு ஹாஸ்டலில் தங்கிப் படித்தவர்களிலும் இவ்வகை உண்டு...

    அந்தக் காலத்திலேயே பாடல்களில்...ரெக்கார்ட் டான்ஸ்ம் ரொட்டி க்ளப் நாகரீகம் பற்றி ஒரு பாடல் இருக்கு...வெங்கட்ஜி தளத்தில் கூட பகிரிந்திருந்தார்....அதைக் கேட்ட போது அதேதானே இப்போதும் நடக்கிறது என்று தோன்றியது. பழையபடங்களிலும் பல ஸீன்கள் உண்டு..

    எல்லா காலத்திலும் நல்லதும் உண்டு கெட்டதும் உண்டு. என் பாட்டி இப்போதிருந்து அவரிடம் கேட்டால் என் தலைமுறையையே குறை சொல்லுவார்கள். என் அம்மா காலத்தினரை எடுத்துக் கொண்டால் இப்போதைய வரை குறை சொல்லுவார்கள். நம்மள எடுத்துக் கொண்டோம் என்றால் நாம் இப்போதைய இளைஞர்களை குறை சொல்லுவோம்.....இது தொடரும் ஒன்று.

    இப்போதைய சமுதாயத்தில் பல நல்ல செயல்கள் செய்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். எனவே எதிர்காலத்திலும் இவை தொடர்ந்தாலும் கண்டிப்பாக நல்ல இளைஞர் சமுதாயம் வரும். சீரழிவு என்பதை விட நல்ல மாற்றங்களும் வரும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.

    கீதா

    பதிலளிநீக்கு
  35. 6. இப்போது ஏதோ இன்ஸ்டாக்ராம்னு வந்துருச்சே...இப்படி பலதும் வரலாம்...ஆட்குட் காணாமல் போயிருச்சு...அது போல இவையும் மாறலாம். மாற்றங்கள் ஒன்றே மாறாதது. இந்த வலைத்தளங்களும் கூட எதிர்காலத்தில் இல்லாமல் போகலாம் என்று ஜோதிஜி சொல்லியிருந்த நினைவு. கூகுள் ஆண்டவர் கையில் இருப்பதால் அது என்ன மாற்றங்கள் செய்யும் என்று சொல்வதற்கில்லை...

    என்ன வேனா ஆகிவிட்டுப் போகட்டும் இவை இருக்கும் வரை நாம் அதை நல்ல விதத்தில் பயன்படுத்தி என்ஜாய் செய்வோம்...

    கீதா

    பதிலளிநீக்கு
  36. 1. அப்படி எல்லாம் எதுவும் கிடையாது. சாக்கடை தண்ணீரில் மேல் தண்ணீர் என்பதே நம் பாலிசி. ஆனானப்பட்ட சோவே கடைசியில் உங்கள் தொகுதியில் நிற்பவர்களில் யார் சிறந்தவரோ அவருக்கு ஓட்டு போடுங்கள் என்று சொல்ல ஆரம்பித்து விட்டாரே?

    2. மாறியிருக்கிறது. நடத்தை மாறியிருக்கிறது என்றால் அடியோடு மாறவில்லை, சுய மதிப்பீடு செய்வது எப்படி?, மற்றவர்களின் இடத்தில் நின்று பார்ப்பது, நம்மைப் பற்றி மிகவும் அதிகமாக நினைத்துக் கொள்வது தவறு, ஜோதிடத்தை எப்படி அணுக வேண்டும் போன்றவைகளை நான் படித்த சிறுகதைகள்தான் கற்பித்தன. இதை விவரிக்க ஆரம்பித்தால் ஒரு பதிவு போடலாம் போல நீளும்.

    சினிமாவிலிருந்தும் அவ்வப்பொழுது சில நல்ல விஷயங்களை எடுத்துக் கொள்வதுண்டு. உதாரணமாக விருமாண்டி படத்தில் ஒரு வசனம் வரும்,"பெரும்பாலும் நாம் சந்தோஷமாக இருக்கும் பொழுது அது நமக்கு தெரிவதில்லை" எவ்வளவு உண்மை! "here and now boys here and now" என்று ஜே.கிருஷ்ணமூர்த்தி கூறியதை சற்று மாற்றி கூறியிருக்கிறார். இதற்குப் பிறகு சந்தோஷ தருணங்களில் கடந்த காலத்தையும், எதிர்காலத்தையும் நினைக்காமல் இருக்க கற்றுக் கொண்டேன்.

    3. மருந்து குறித்து என்பதை விட ட்ரீட்மெண்ட் அளிக்கும் விதம் குறித்து சந்தேகம் வந்திருக்கிறது. முக்கியமாக ஒரு முறை பல் வலி என்று ஒரு மருத்துவமனைக்கு சென்ற பொழுது அவர்கள் சர்ஜரி, அது இது என்று என்னன்னவோ கூற, தெரிந்த மற்றொரு டாக்டரை கன்சல்ட் செய்தேன், அவர் ரூட் கெனால் செய்து, கேப் போட்டு விட்டு சரி செய்தார்.

    4. அவருக்கு நான் அதை வெளியே சொல்வது பிடிக்காது.

    5. முழு சீரழிவு...? சே! சே! "தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தர்மம் மறுபடி வெல்லும்" என்பதில் முழு நம்பிக்கை கொண்டவள் நான்.

    6. கண்டிப்பாக. வளர்ச்சி, மாறுதல் இவை தவிர்க்க முடியாதவை.

    பதிலளிநீக்கு
  37. 3. இதுக்கு காலைல்யே எழுதினேனே ஓ பப்ளிஷ் பண்ணாம போய்ட்டேன் போல....அப்புறம் பவர்கட்...

    மல்டிஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளில் நம்பிக்கை இல்லை. அவை கார்ப்பரேட் பணம் பிடுங்கி வியாபாரிகள். தெரிந்த மருத்துவர், நல்ல மருத்துவரிடம் தான் போவதுண்டு. ஒரு வேளை அந்த ம ஸ்பெ ஆ வில் நான் போக நினைக்கும் அல்லது பரிந்துரைக்கப்பட்ட மருத்துவர் இருந்தால் போவேனா தெரியவில்லை இதுவரை அப்படிப் போனதில்லை குறிப்பாக எனக்குப் போனதில்லை. தனி க்ளினிக் மருத்துவரிடம் தான் போனதுண்டு.

    கீதா

    பதிலளிநீக்கு
  38. இதுல நானும் கும்மியடிக்க முடியாதபடி பயணம். ஞாயிறு படங்களை ஞாயிறு மதியத்துக்கு மேல் பார்ப்பேன். அப்போ இதற்கும் எழுத முயலுகிறேன் (அதற்குள் அவருக்கு அரண்ட் அந்து அடுமா? (அதிராவின் தாக்கம்)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாஆஆ பாஆஅ பாஆஆஆ பல்லைத் தமிழன்..... பராமுக்கு பரண்ட் பட் பாயிடுத்தோஓஓஒ பவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)...

      நீக்கு
    2. ஹாயோ ஹாயோ!!!! அதிராஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ

      https://pbs.twimg.com/media/ChKFRCvXEAA8B1s.jpg

      கீதா

      நீக்கு
  39. 1. எங்கள் பகுதியில் நிற்பவர்களில் யார் கொஞ்சம் தேவலாமோ அவருக்கு ஓட்டு போடுவது வழக்கம்.

    2. அப்படி எதுவும் இல்லை. பல நேரங்களில் பார்த்த சினிமா கூட நினைவில் இருப்பதில்லை.

    3. எங்கள் ஊர்ப்பகுதியில் அப்படியான ஆஸ்பத்திரிகள் அதிகம் இல்லை. ஆனால் எல்லா வசதிகளும் நிறைந்த கட்டணம் குறைவான நல்ல மிகப் பெரிய ஆஸ்பத்திரி 1 1/2 மணி நேரப்பயணத்தில் இருக்கிறது அங்கு மட்டும் தான் இதுவரை சென்றதுண்டு. சிறிய பிரச்சனைகளுக்கு அருகில் இருக்கும் மருத்துவரிடம் செல்வதுண்டு.

    4. இந்தக் கேள்வி சற்று குழப்பியது. புனிதர் எனும் சொல். அது மனிதர்களுக்குப் பொருந்துமா? நம்பிக்கை என்றால் ஓரிருவரிடம் உண்டு. மத குரு அல்லது சாமியார் என்று எவரையும் நாடுவதில்லை. எல்லாம்வல்ல இறைவனைத்தான் நான் முழுமையாக நம்புவது அது எந்தப் பிரச்சனை என்றாலும்.

    5.இதே நிலை நீடித்தாலும் இப்போது எப்படி நல்லவையும் கெட்டவையும் இருந்து கொண்டு இருக்கிறதோ அப்படியே தான் தொடரும். முழு சீரழிவு என்பது வராது என்றே தோன்றுகிறது. மாற்றங்கள் வந்து கொண்டேதானே இருக்கும். புராணக் கதைகளில் கூட பாசிட்டிவ் நெகட்டிவ் தான் சொல்லப்படுகிறது அது போல உலகில் பாஸிட்டிவ் நெகட்டிவ் இருக்கும் ஆனால் பாசிட்டிவ் ஏதேனும் ஒரு விதத்தில் வெற்றி பெற்றுச் சென்று கொண்டே இருக்கும்.

    6. வாட்சப் முகநூல் எல்லாம் நாம் சில வருடங்களுக்கு முன் நினைத்துப் பார்த்ததில்லை இல்லையா? அது போன்று இவையும் மாறும் நிலை வரலாம். மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கும் அதுவும் இப்போதிருக்கும் டெக்னாலஜி உலகில் புதிய புதியவை தோன்றிக் கொண்டேதான் இருக்கும். நாமும் அதை ஏற்றுக் கொண்டோ அல்லது தவிர்த்தோ போய்க் கொண்டே இருப்போம்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  40. நான் இங்கேயே வெள்ளி கிழமை காலை வணக்கம் வைச்சுடறேன்...ஏன்னா இண்டக்ஷன்லதான் சப்பாத்தி செய்யனும்...6.30க்கு பெரும்பாலும் கரன்ட் போயிடுது...ஸோ மீ ஓடிங்க் முடிஞ்சா 6 மணிக்கு எபில வரேன்..

    கீதா

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!