செவ்வாய், 5 பிப்ரவரி, 2019

கேட்டு வாங்கிப் போடும் கதை : குழலோசை : ஏகாந்தன்




:  
குழலோசை
ஏகாந்தன்

‘இன்னிக்கும் இட்லியா?’ கேட்டுக்கொண்டே பாத்ரூமிலிருந்து சமையலறை வழியாகத் தன் ரூமுக்குள் போன சுந்தர், அவசர அவசரமாக ட்ரெஸ் பண்ணிக்கொண்டு திரும்பி சமையலறைப் பக்கமே வந்தான். விமலாமாமி -அவன் அம்மா- தோசை வார்த்துக்கொண்டிருந்தாள். ’சொய்..’ என்று சீறிய கல்லில் தோசையைச் சுற்றி நல்லெண்ணெயை லாவகமாக ஊற்றினாள். குப்பென்று எழுந்த வாசனை அவன் வயிற்றில் பசியைக் கிளறியது.

’ஜல்தி பண்ணும்மா. நான் போகணும்’ என்றான் அவளது ஒரே மகன்.

’என்னடா, காலையிலேயே குதிக்கிற.. எட்டுகூட இன்னும் ஆகலியே. எங்கே ஓடணும் இப்ப?’ என்றாள் அலட்சியமாக ஜுவாலையைப் பெரிசுபண்ணிகொண்டே.

’கோபால் வந்துடுவான். எட்டே காலுக்கு வர்றேன்ருக்கான்..’

’அவனும் வீட்ல தின்னுட்டுதானே வருவான். வரட்டுமே..’

’9 1/2 மணிக்கு அங்கே இருக்கணும்மா.. இன்னிக்கு முக்கியமான இண்டர்வியூ அவனுக்கு.’

’நீயும் கூடப் போறியா?’

’பின்னே, என்ன சொல்லிண்டிருக்கேன் நான். .அவன்தான் ’வாடா.. நீ இருந்தா எனக்குக் கான்ஃபிடென்ஸா இருக்கும்’னான்.

’கிழிச்சான். இது மூணாவது இண்டர்வியூதானே..’ என்றாள் அம்மா.

’அப்படிச்சொல்லாதே. அவன் ஸ்மார்ட்மா.. க்ளியர் செஞ்சிருவான்.’

’பண்ணா சரி. மீனாட்சிதான் ஒரேயடியாக் கவலப்படறா.. அவனோட அப்பாவேற, வீட்ல ஒக்காந்துண்டு ‘வேலவெட்டியில்லாத பய’ன்னு சதா முணுமுணுக்கறாராம்..’ என்ற அம்மா, ‘தட்டை சரியாப் புடி.’.என்று அதட்டி, இரண்டு தோசைகளைப் போட்டாள்.

’வெள்ளையா வார்த்திருக்கியே....முறுகலா வார்க்கத் தெரியாதா.. எத்தன தடவ சொல்றது!’ கோபப்பட்டான் சுந்தர்.

’அடுத்தது முறுகலாப் போட்றேன். சண்டித்தனம் பண்ணாம சாப்டு! அவசரத்துல அப்பாவுக்கு வார்க்கற மாதிரி வந்துடுத்து.. சட்னி போட்டுக்கறயா..இல்ல, மொளகாப் பொடியா?’ என்றாள் விமலாமாமி.

’சட்னி. கொஞ்சமா.. நாட்டுச்சக்கர இருந்தாப் போடு! வயறு கடாபுடாங்கறது..’ என்றவன், புதிதாக அதைக் கவனித்தவனாக,  ‘அப்பாக்கு வெள்ளையாதான் இருக்கணுமா தோசை? இதுல்லாம்கூட ஒனக்குத் தெரியறதே.. பரவாயில்ல நீ!’ என்றான்.

தோசைக்கரண்டியை வேகமாக அவன்பக்கம் ஓங்கியவள், ’சரியா ஒக்காந்து சாப்ட்றா முட்டாள்.. பேசவந்துட்டான் காலைல!’ என்றாள்.

’வீட்ல.. அப்பா பாவம், எந்த மூலயில போய் ஒக்காந்திருக்கார்னு கூட ஒனக்குத் தெரியாதே.. அவருக்கு தோச வெள்ளையா இருக்கணும்கிறயே.. அதான் பார்த்தேன். ம்.. இன்னிக்கு எல்லாமே ஒரு மாதிரியாத்தான் தோண்றது. காலைலேர்ந்து வானம் வேற கருத்துண்டு வருது!’ என்று நீட்டியவன், அம்மாவின் முறைப்பை ரசித்துக்கொண்டே, ஒரு பெரிய விள்ளலை சர்க்கரையில் அமுக்கி வாயில் திணித்துக்கொண்டான்.

’அடச்சுக்காதே. தீர்த்தம் வெச்சுருக்கேன் பாரு. மெதுவா சாப்பிடு. அவன் வந்தா ஒக்காருவான். இல்லன்னா அவனயும் தோச சாப்டச்சொல்லு.’ என்றாள்.

’அவன் நிதானமா ஒருநாள் வரும்போது தோச, இட்லியெல்லாம் பண்ணிப் போடு. இன்னிக்கு உபசரிச்சுராதே. காரியம் கெட்டுரும்!’ என்று சொல்லி கை அலம்பப் போனவனைத் தடுத்து ‘முறுகலா வந்துருக்கு பாரு!’ என்று தட்டில் போட்டாள்.

‘வெல்லச்சர்க்கரைக் கொஞ்சம் போடவா?’

’என்னம்மா இது!’ என்று இரைந்தவனை அலட்சியம் செய்து, ஒரு ஸ்பூன் வெல்லச்சர்க்கரையைத் தட்டில் போட்டாள்.

’பதறாமச் சாப்ட்றா!’ என்றவள், என்ன புள்ளயோ, என்ன அவசரமோ.. கிருஷ்ணா..! என்று நினைத்துக்கொண்டாள் விமலாமாமி. அவசர அவசரமாகச் சாப்பிட்டுவிட்டு, ரூமிலிருந்து ஹெல்மெட்டை எடுத்துக்கொண்டு  வெளியே வந்தவன், ஜன்னல் வழியே வெளியே எட்டிப் பார்த்தான். 

கோபால் வேகமாக வந்துகொண்டிருந்தான். அவனுக்குப் பின்னால் வருவது யாரென்றும் கண்ணில் பட்டது. ‘ம்மா.. விசா!’ என்று சத்தமாக சொல்லிவிட்டு பைக்கை நகர்த்தினான் சுந்தர்.

விமலாமாமி சிரித்துக்கொண்டே வாசலை நோக்கினாள். அவளது தோழியான பக்கத்துத் தெரு விசாலாட்சி  உள்ளே நுழைந்துகொண்டிருந்தாள்.

ஹாலுக்குள் வந்தவள் ’எங்கே பறக்கறார் ஒங்க பையன்!’ என்று விமலாமாமியைக் கிண்ட ஆரம்பித்தாள்.

’அவனோட ஃப்ரெண்டுக்கு ஏதோ இண்டர்வியூவாம். இவனுக்குக் காலைலேர்ந்து கையும் காலும் ஒரு எடத்துல நிக்கமாட்டெங்கிறது. தனக்கு வேல கெடச்ச நாளிலேர்ந்து தன் கூட்டாளிக்கு இன்னும் கெடக்கலியேன்னு ஒரே கவலை.. இந்தக் காலத்துப் பிள்ளைகள் இருக்குகளே....’ சிரித்தாள் விமலாமாமி.

’எங்க வீட்டுதும் அப்படித்தான். அவ ஃப்ரண்ட் வந்துட்டாப்போறும்.. அவசர அவசரமாக அடச்சிண்டு, தட்டத் தூக்கி சிங்க்ல எறிஞ்சிட்டு அவ பின்னாடியே ஓடிடுவா!’

கடைசி வருடம் டிகிரி படிக்கும் தன் பெண் சங்கீதாவின் பெருமை அவ்வபோது பொங்கி வரும் விசாலாட்சிக்கு. தினமும் காலையில் ஒரு பத்து பதினைந்து நிமிஷமாவது விமலாமாமியை வந்து பார்த்து ஏதாவது கதையடிக்காவிட்டால் பொழுதும் போகாது. 

அவளால் வரமுடியாத நாட்களில், மத்தியானம் சாப்பாடு முடித்தபின் விசாலாட்சியின் வீட்டில் இருப்பாள் விமலாமாமி. ’என்ன சமையல், ஏதோ விசேஷமா வாசனை வர்றதே!’ என்பாள். அவளும் ’கூட்டு, கொழம்பு எல்லாமே சங்கீதாதான் இன்னிக்கு.. என்னய எதுவுமே பண்ணவிடலே!’ என்று அடித்துவிடுவதை ரகசியமாக ரசிப்பாள் விமலாமாமி. அவளுக்கும் சங்கீதா கதை பிடித்திருக்கிறது. விமலாமாமியும் லேசுப்பட்டவளல்ல.  

அவ்வப்போது விசாவின் வீட்டுக்குப்போய் அவளுடைய பெண்ணை- எப்படிப் பேசுகிறாள், பழகுகிறாள்- என்று நோட்டம் விடுவதுண்டு. நல்ல செவப்பா, ஒடிசலா, நன்னாத்தான் இருக்கா துறுதுறுன்னு.  பெரியவாகிட்டயும் ஒரு மரியாதை..  சமையல்லயும் கெட்டியாமே... இந்தக்காலத்து அதிசயமாச்சே இது !’ இப்படி ஆரம்பத்திலிருந்தே மனதில்  கோடு போட்டுவைத்தவள், பிறகு அதைக் கட்டம், வட்டமென மாற்றி, ஒருவழியாக அருமைப் பிள்ளைக்காக டிக் அடித்துவைத்திருக்கிறாள்.

அன்று மாலையில்தான் வீடு திரும்பினான் சுந்தர். அப்பாவின் ரூமுக்குச் சென்றுவிட்டு, சற்று நேரத்தில் அம்மாவிடம் வந்தான். அவனைப் பார்த்ததும் உற்சாகமான விமலாமாமி ’என்னடா சுந்தர்! இவ்வளவு நேரமாயிடுத்து? லஞ்சு ஏதாவது சாப்பிட்டியா, இல்ல, அந்த மொட்டயோடு வெயில்ல அலைஞ்சதுதான் மிச்சமா?” என்றாள். 

கோபால் சமீபகாலமாகப் பளபளவென மொட்டை போட்டுக்கொண்டு, கூடவே குறுந்தாடியும் வைத்திருக்கிறான்.  அவனும் சுந்தரும் சத்தமாக சிரித்துப் பேசிக்கொண்டு, ஒருவரை ஒருவர் விளையாட்டாக இடித்துக்கொண்டு உள்ளே வரும்போதெல்லாம் ‘என் பிள்ளக்கின்னு கெடச்சிருக்கு பாரு.. ஒரு விசித்திரம்!’ என்று நினைத்துக்கொள்வாள் விமலாமாமி. பட்டைகளை நம்புகிற அளவுக்கு மொட்டைகளை நம்புபவள் அல்ல அவள். சுந்தர், இண்டர்வியூ முடிந்து, பிடித்தமான ரெஸ்ட்டாரண்ட்டில் லஞ்ச் சாப்பிட்டு வந்ததைச் சொன்னான்.

’காபி சாப்டறயா? அப்பாவுக்கும் போடப்போறேன்’ என்றாள்.

’அப்பாவுக்கு இன்னுமா காபி கொடுக்கலை? ஏம்மா இப்படிப் பண்றே! மணி அஞ்சாகப் போறது!’ என்று கடிந்துகொள்ளும் குரலில் சொன்னான் சுந்தர்.

’இப்ப என்ன லேட்டாயிடுத்து ஒங்கப்பாவுக்கு. ஒரேயடியா கண்ணுல ஜலம் வருது ஒனக்கு. நீ வந்துடுவேன்னு கொஞ்சம் வெயிட் பண்ணேன்’ என்றுவிட்டு சமையலறைக்குள் நுழைந்தாள் விமலாமாமி.

’வந்ததும் வராததுமா அப்பா ரூமுக்குள்ள போயி என்ன பேசிட்டு வர்றான்? இப்பிடி அப்பாப்பிள்ளையா பெத்துவச்சிருக்கேனே நான்!’ என்கிற சிந்தனையில் லேசாக சிரிப்புவர, காபி கலந்தாள். 

தன் ரூமில் ஏதோ புத்தகங்களைப் பரப்பி வைத்துக்கொண்டு பார்த்துக்கொண்டிருந்த கணவரிடம் காபியைக் கொடுத்தாள். ஹாலில் இருந்த டீப்பாயில் பையனுக்காகவும் தனக்காகவும் காபிக் கப்புகளை வைத்துவிட்டு சோஃபாவில் உட்கார்ந்தாள். பக்கத்தில்  உட்கார்ந்த சுந்தர், காபியை எடுத்து உறிஞ்சினான். ’சும்மா சொல்லக்கூடாது.. அம்மா கைமணமே அலாதிதான்’ என்று நினைத்துக்கொண்டான். சொல்லவில்லை.

’சுந்தர், என்ன கெடச்சுருமா வேலை, எப்படிப் பண்ணியிருக்கானாம்?’ கோபாலைப்பற்றி மீண்டும் ஆரம்பித்தாள் பையனிடம். ’நன்னா பண்ணியிருக்கேன்னுதான் சொல்றான். அனேகமாக் கெடச்சிடும். நெறய வேகன்சி இருக்குன்னு அவனோட ப்ரெண்ட் ஸ்ரீனிவாஸ் – ஹெச்.ஆர்.ல வேல பாக்கறவன் - சொன்னான் என்றான் சுந்தர். ’நல்லபடியா வேல கிடைக்கட்டும்..பாவம்!’ என்றாள் விமலாமாமி.

காபியை வழக்கத்தைவிட மெதுவாகக் குடித்துக்கொண்டிருந்தவன் ஏதோ சிந்தனையிலிருப்பதாகத் தோன்றவே, ’காபி குடிக்கையிலகூட என்னடா யோசிப்பே?’ என்றாள் பிள்ளையைப் பார்த்துக்கொண்டே.

’ஒண்ணுமில்லமா, இண்டர்வியூ முடிந்தவுடன் கோபால் தன்னுடைய ஃப்ரெண்ட் ஸ்ரீ-யைப் பார்த்தான். என்னயும் அவனுக்கு இண்ட்ரொடியூஸ் பண்ணினான்…’

‘ஹெச்.ஆர்-ல இருக்கான்னியே அவனா?’ என்று கேட்டாள்

‘அவந்தான்மா. நாங்க மூணு பேரும் ஒக்காந்து பேசிண்டிருக்கும்போது.. அவ வந்தா..’

விமலாமாமி கூர்மையானாள். ’ஹ்ம்..? காபி கப்பைக் கீழே வைத்தாள். 

’பொண்ணா? யாரு..!’

’ஒனக்குத் தெரிஞ்சவதான் போலருக்கு..!’

’எனக்குத் தெரிஞ்சவளா? என்னடா, புதிர் போடறே!’

’ஒன்னோட அருமைத்தோழியோட பொண்ணு. பின்ன, தெரியாமலா இருக்கும்?’

’ஏய்! தோழி சோழின்னு என்னடா எங்கெங்கையோ போற?’

’எல்லாம் அந்த விசா தான்!’

’போடா அசடு.. அவ பொண்ணு காலேஜ்ல படிக்கிறாடா. அவள எங்கே கம்பெனியில நீ பாத்திருக்கமுடியும்? ஒளறாதே.. ஒரு நாளைக்கு விசாவைக் கூட்டிண்டு வரச்சொல்றேன் பாரு.. சங்கீதான்னு பேரு.. பாக்கறதுக்கு தங்கக் கிளி. பேசினா.. குயில் தோத்துடும். அப்பிடி ஒரு...’

’அம்மா.. அம்ம்ம்மா..! கொஞ்சம் நிறுத்தறியா? நா சொல்றது வேற. ஐ மீன்.. வேற ஒருத்தின்னு நெனக்கிறேன்..’

’வேற ஒருத்தின்னா, யாருடா? அந்தக் கம்பெனில வேல பாக்கறாளாமா?’

’ஆமாம்மா.. அந்த ஸ்ரீதான் அறிமுகப்படுத்தினான். கொஞ்சம் பேச ஆரம்பிச்சா..  கோபால் வேற, என்னயப்பத்தி,  நம்ப குடியிருக்கிற தெரு, வீடுன்னு அளக்க ஆரம்பிச்சுட்டான். அப்போதான் ஒன்னயத் தெரியும்னு அவளும் சொன்னா..  எனக்கும் கொஞ்சம் புடிபட ஆரம்பிச்சது!’

என்னத் தெரியுமாமா!

’நீயும்தானே அவங்க வீட்டுக்குப் போறே, வர்றே.. இவ்வளவு பெரிய்ய உருவத்த அவ  பாக்காம இருந்திருக்கமுடியுமா!’ –என்று அம்மாவைப் பார்த்து மேலும் கீழுமாகக் கையைக் காட்டி சிரித்தான் சுந்தர்.

’சொல்றதச் சரியாச் சொல்லேண்டா முட்டாள்.. யாரு வீட்டுக்கு நான் போயிண்டுருக்கேன். விசாலாட்சி வீட்டுக்குத்தான் எப்பயாவது....?

’அதான் விசா ஆண்ட்டின்னேன் ..நீ இல்லங்கற.. சரி விடு!’ என்று எழுந்தான்.

’டேய்! கொஞ்சம் இரு. ஒரு பொண்ணக் கொண்டுவந்து பாதில நிறுத்திப்பிட்டு எங்கடா ஓடறே? அப்போ, விசாவோட பொண் சங்கீதாவை நீ பாத்தேங்கிறியா! அவ என்ன பண்ணவந்தா அந்தக் கம்பெனில? படிப்பையே இன்னும் முடிக்கலையே? ஓ, ஏதாவது இண்டர்ன்ஷிப்..!’ என்று புரிந்தவள்போல் மாமி தொடர, சுந்தர் குறுக்கிட்டான்

’ஐயோ..அம்மா! இவ வேறங்கிறேனே.. புரியலயா? இரு.. என்னமோ பேர் சொன்னாளே? சாரதாவோ.. என்னவோ.. ஞாபகம் வரலியே!’

’என்ன! சாரதாவா? அவ அங்கயா வேல பாக்கறா? ஏதோ கம்பெனில ஜாய்ன் பண்ணியிருக்கான்னுதான் விசாலாட்சி சொன்னா.. சரியாச் சொல்லலியே?’

’இப்ப புரியறதாக்கும்? என்னமோ விசா ஆண்ட்டியோட சம்பந்தமே இல்லேங்கிற மாதிரிப் பேசினே. இவ்வளவு சொன்னவுடன் அவ, மாமியோட பொண்ணாயிட்டாளா?’ – எழுந்திருக்க முற்பட்டவனை கையமர்த்தினாள் அம்மா.

’கொஞ்சம் புரிஞ்சுக்கோடா சுந்தர்.. அவ விசாவோட பொண் இல்ல. அவளோட மச்சினர் பொண். இங்கேதான் இருக்கா விசாலாட்சியின் வீட்டில. அவளுக்கு எல்லாம் இவாதான். பாவம், தாயில்லாப் பொண்ணு.. தகப்பனாரும் பொசுக்குன்னு போயிட்டாராம் போன வருஷம்..’ என்றவளை அதிர்ச்சியோடு பார்த்தான் சுந்தர்.

’என்னம்மா சொல்றே? அப்பா, அம்மா ரெண்டு பேருமே இல்லயா அவளுக்கு.. அதான் பாக்கவே பாவமா இருக்கா. நல்ல பொண்ணு மாதிரித் தெரிஞ்சது...’ என்றவாறே எங்கோ பார்த்து சிந்தனை வசப்பட்டவனை, சந்தேகத்தோடு உற்றுப் பார்த்தாள் விமலாமாமி.

’சரி, விடு! இதெல்லாம் நமக்கெதுக்கு? விசாவோட பொண் சங்கீதாவை அவசியம் நீ பாக்கணும். அசந்துடுவே! அவளோ எப்பவாவதுதான் தன் அம்மாவோட இங்க வருவா.. நீ வீட்ல இருந்தாத்தானடா காமிக்கறதுக்கு? நான் என்ன பண்ணுவேன்!’

’நீ யாரயும் காமிக்கவேணாம். ஹ்ம்.. நா சொல்றது என்னிக்கு ஒனக்கு புரிஞ்சிருக்கு!’ என்று எழ முயன்றவனை கையைப் பிடித்து உட்காரவைத்தாள் விமலாமாமி.

இவர்கள் பேச்சு சுவாரஸ்யத்தில் இருக்கையில், மெல்ல வந்து பக்கத்து நாற்காலியில் உட்கார்ந்து கதை கேட்டுக்கொண்டிருந்தார் சுந்தரின் அப்பா.

கணவர்பக்கம் இப்போது திரும்பினாள் விமலாமாமி.   ’நா என்ன சொல்ல வர்றேன்.. ஒங்க பிள்ளைக்கும் இந்த ஐப்பசி வந்தா, இருபத்தியேழு முடியப்போறது. காதுகொடுத்தாவது கேக்கறானா பாத்தீங்களா .. எல்லாத்தயும் பாத்துண்டு நீங்க இடிச்சபுளி மாதிரி இப்பிடி ஒக்காந்திருந்தா எப்படி?’ என்றவள் ஒரு கணம் அவர் முகத்தை ஆராய்வதுபோல் பார்த்தாள். ‘நாங்க இப்ப பேசிண்டிருந்தது ஏதாவது புரிஞ்சுதா ஒங்களுக்கு.. இல்ல, பாதியில விட்டுட்டு வந்த அந்த புஸ்தகம் மனசை ஒரேயடியா படுத்தறதா?’  என்று சீறினாள்..

அவர் சுதாரித்துக்கொண்டு ‘விமலா! என்னாச்சு இப்போ? ஏன் இப்பிடிப் படபடக்கிறே.. அவன் என்ன நெனக்கிறான்னு நீயும்தான் கொஞ்சம்..’ என்று ஆரம்பித்தவரை இடைமறித்தாள் மாமி.

’ஒங்களப்போய்க் கேட்டேனே.  நா ஒரு அசமழிஞ்சம்..’ என்று சுயகண்டிப்பில் ஒருகணம் இறங்கியவள், தன்  பையன் பக்கம் திரும்பி குழைவான குரலில், ’தோ பார்றா கண்ணா! உன் நல்லதுக்குத்தானே அம்மா சொல்வா.  மனச அங்கயும் இங்கயுமா அலய விட்றாதடா! சொல்றபடி கொஞ்சம் கேளேன்.. அந்த சங்கீதாவை ஒரு தடவை பாத்துட்டு..’

சீறினான் அவளது பிள்ளை. ‘போறும் இந்தப் பேச்சு! நா வர்றேன்.. வேலயிருக்கு! ’ விருட்டென எழுந்து தன் ரூமுக்குள் போனான்.

அங்கிருந்து ஹெல்மெட்டைத் தலையில் மாட்டியவாறே வந்தவன், வாசல்நோக்கிப் பாய்ந்தான்.

’இப்ப என்ன சொல்லிட்டேன்னு இந்தப் பிள்ளைக்கு இப்படிக் கோபம் வர்றது? கிருஷ்ணா.. ஒண்ணும் புரியமாட்டேங்கிறதேப்பா..’ விக்கித்து உட்கார்ந்து விட்டாள் விமலாமாமி.

அவளது கணவர் மெதுவாக எழுந்து தன் ரூமுக்குள் போய்விட்டதைப் பார்த்தாள். ‘இவர் இந்த ஒலகத்துலேயே இல்ல.. இந்தப் பிள்ளைக்கோ வீட்டில இருக்கப் பிடிக்கல.. நான் ஒருத்திதான் லூசுமாதிரி சுத்திண்டிருக்கேன் இங்கே..’ தனக்குள் முணுமுணுத்தவாறு உள்ளே சென்றாள். ஏதேதோ காரியம். இருந்தும், ஏதும் செய்யப் பிடிக்கவில்லை.

‘எப்பப் பாத்தாலும் முணுக் முணுக்குனு கோச்சிண்டு.. ஹ்ம்… சொன்னபடி கேட்காது போலருக்கே இது..’ என்கிற சிந்தனை மனதில் துரத்த,  கொல்லைக்கும் கூடத்துக்குமாக உலாத்திக்கொண்டிருந்தாள்.

சாயந்தரம் இருட்டிப்போக ஆரம்பித்திருந்தது. வழக்கம்போல் பூஜை ரூமில் விளக்கேற்றி ஊதுபத்தி ஏற்றிவைத்தாள் விமலாமாமி. கையைக்கூப்பி, வெள்ளிக் குத்துவிளக்கின் வெளிச்சத்தில் ஸ்வாமி படங்களை ஒவ்வொன்றாய்ப் பார்த்தாள். நடுவில் சற்று பெரிதான படம். ராதை தன்பக்கம் சாய்ந்திருக்க, நீலக்கண்ணனின் மந்தகாசச் சிரிப்பில் விஷமம் இன்று சற்றுக் கூடுதலாகவே தட்டுப்பட்டது அவளுக்கு. ‘நீ மட்டும் அழகா ஒருத்தியப் பிடிச்சு வச்சுண்டு ஜாலியா சுத்திண்டு இரு! எம்புள்ளைக்கும் பொருத்தமா  ஒருத்திய சேத்துவைக்கப்படாதா?  ஏந்தான் இப்படிப் படுத்தறயோ?’ என்று கேட்டு –இப்போதைய கேள்வி, பிரார்த்தனை இதுதான்- கண்களை மூடி நின்றாள். 

மூடிய கண்களுக்குள் திடீரென ஒரு காட்சி. பழைய சுடிதாரில், எண்ணெய்வடியும் முகத்தோடு, சுமார்நிற சாரதா நின்றிருக்க, சுந்தர் சாரதாவிடம் ஒட்டிக்கொண்டு, அவள் பக்கம் தலைசாய்த்து அம்மாவைப் பார்த்துப் புன்னகைத்தான். திடுக்கிட்டவளாகப் படக்கென்று கண்ணைத் திறந்தாள். 

எதிரே, கையில் புல்லாங்குழலுடன் ஒய்யாரமாக நின்று புன்னகைக்கும் கிருஷ்ணனை, உரசிக்கொண்டு நிற்கிறாள் அழகுராதை. கிருஷ்ணனின் முகத்தில் சில கணங்கள் ஆழ்ந்திருந்தவள் மெல்லச்சொல்லிக்கொண்டாள்:

’ ஹ்ம்… அப்பாவிபோல முகம்.. அடங்காத விஷமம்!’ பின் சட்டென்று நினைவுக்கு வந்தவளாகக் குரலைத் தாழ்த்திச் சொன்னாள்: ’கிருஷ்ணா.. எல்லாத்தயும் நீ பாத்துண்டிருக்கேதானே! கோபத்துல பைக்கை எடுத்துண்டு அது எங்கயோ பறந்திருக்கு. நா இருப்புக்கொள்ளாம இங்க படபடத்துண்டிருக்கேன். அந்தப் பிள்ளைய மொதல்ல இந்தப்பக்கமா திருப்பிவிட்டுட்டு, அப்புறமா வாசி உன் புல்லாங்குழலை. நான் கேக்கறேன். புரியறதா!’ என்று கிருஷ்ணனை முறைத்துவிட்டு, கிச்சனுக்குத் திரும்பினாள் விமலாமாமி. அவள் மனம் ஒவ்வொன்றாகக் கோர்த்துக்கொண்டே போக, கைகள் தன்னிச்சையாக  எதெதையோ உருட்ட ஆரம்பித்தன.

73 கருத்துகள்:

  1. இனிய மகிழ்வான காலை வணக்கம்! தொடரும் அனைவருக்கும்..
    வல்லிமாவுக்கு குட் ஈவினிங்க்!!!
    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய காலை வணக்கம் கீதா ரெங்கன்.

      நீக்கு
    2. இனிய காலை வணக்கம் கீதா அண்ட் ஸ்ரீராம். கதை முடியாத மாதிரி இருக்கே.

      நீக்கு
    3. வல்லிம்மா முடிஞ்சுருச்சு கதை....விமலா மாமிக்குத்தான் கதை முடியலை ஹா ஹா ஹா ஹா ஹா....கிச்சா சொல்லியாச்சே அப்புறம் அதுக்கு மறு அப்பீல் உண்டா என்ன?!!!!

      கீதா

      நீக்கு
    4. துரை அண்ணா எங்கே?!!!! காணோம்?!!!! என்னாச்சு?

      கீதா

      நீக்கு
  2. ஏகாந்த அண்ணா கதையா வரேன்...இப்பத்தான் ஒரு ரவுண்ட் அடிச்சேன்...இனி கொஞ்சம் வேலை முடிச்சுட்டு வரேன்..

    நாளையிலிருந்து வெள்ளி மாலை வரை வலையில் சுற்ற முடியாது. பயணம்....வெள்ளி மதியம் தான் மீண்டும் பங்களூர் வரேன்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா.. இரண்டு நாட்கள் உங்களை வலைப்பக்கம் பார்க்க முடியாதோ!

      நீக்கு
    2. ஆமாம் ஸ்ரீராம்...

      முறுகல் தோசை போட்டது வரை வந்தாச்சு....ஹையோ செம உரையாடல்!! அப்படியே யதார்த்தம்...ரொம்ப ரசிக்கிறேன்... அம்மா பிள்ளை உரையாடலை வீட்டுல நடக்கறத அப்படியே விஷுவலைஸ் பண்ணறா மாதிரி இருக்கு...லிட்ரலி....யதார்த்த நடை செம....

      மீதியும் படிச்சுட்டு வரேன்...

      கீதா

      நீக்கு
    3. @ கீதா: ஸ்டெப்-பை-ஸ்டெப்பா போறீங்க.. சரி!

      நீக்கு
  3. அனைவருக்கும் காலை வணக்கம். ஏகாந்தன் சார் கதையா? பின்னர் வருகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் பானு அக்கா... வாங்க... மெதுவா வாங்க...

      நீக்கு
  4. மாமிகள் ஒருவருக்கொருவர் ரசித்துக் கொண்டு அடிச்சுவிடுவதைப் பார்க்கும் போதே தோன்றியது எதுக்கோ அடி வைத்து புள்ளி வைக்கிறாங்க போலருக்கேன்னு....விமலா மாமி கோலமே மனசுக்குள் போட்டுவிட்டாங்க...ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதா ரங்கன்... அப்படீன்னா, இரண்டு பெண்கள் ஒருவருக்கொருவர் புகழ்ந்து பேசறாங்கன்னா அதில் சுயநலம்தான் இருக்கும், ஆண்கள் அப்படிக் கிடையாதுன்னு சொல்லவர்றீங்களா?

      அதை நான் ஏற்றுக்கொள்கிறேன். (ஹா ஹா)

      நீக்கு
    2. ஹா ஹா ஹா ஹா நெல்லை நெல்லை கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்......என்னை இப்படு உசுப்பேத்தறீங்களே!!!!!!!!!!!!!!!!!!!!. நிறைய கதைக்கனும் போல இருக்கு ஆனா நோ டயம்...//அதை நான் ஏற்றுக்கொள்கிறேன். (ஹா ஹா)// கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.....இங்க ஏகாந்தன் அண்ணா கதைல சொல்லிருக்கறதுக்குத்தான் சென்னேனாக்கும்...ஹூக்கும்....சுயநலம் என்று சொல்ல முடியாது ஒரு சின்ன கோடுதான் வித்தியாசம்...பெண்ணுக்கு நல்ல வாழ்க்கை அமையனுன்னுதான்....

      ஆண்களும் தங்க பெண்களைப் பற்றியும், பையன்களைப் பற்றியும் அடிச்சுவிடுறவங்க இருக்காங்களாக்கும்...குறிப்பா மகள் களைப் பற்றி...சரி சரி இப்ப சொல்ல முடியலை....

      கீதா

      நீக்கு
  5. அனைவருக்கும் வணக்கம்/நல்வரவு. முடிவை நம் கையில் விட்டு விட்டாரா ஏகாந்தன்? சரளமான நடை! முடிவை ஒரு கோடி காட்டி இருக்கலாம். ஆனால் உம்மாச்சி கிட்டே விமலாமாமி வேண்டிக் கொண்டதே போதும்னு நினைச்சுட்டார் போல!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதாக்கா அதான் கிச்சா உம்மாச்சி விமலா மாமி மனசுக்குள்ள கட்டம் போட்டுவிட்டாரே!!! மாமிக்குத்தான் புரியலை இன்னும்...இல்லை சங்கீதா மனசுக்குள் இருப்பதால் பெற்றோர் இல்லாத எண்ணை வழியும் சாரதா மனதிற்குள் புகுவதில் தயக்கம் இருக்கலாம்....ஆனால் கிச்சா நினைத்தால் அதை மாற்ற முடியுமோ?!!! ஸோ எனக்கு கிச்சாவின் முடிவே இங்கு என்று தோன்றுது

      கீதா

      நீக்கு
    2. @ கீதா சாம்பசிவம்:

      ரசித்ததற்கு நன்றி. கீதா ஜூனியர் அடுத்தாற்போல் சொல்லியிருப்பதைப் பாருங்கள்.On the dot!

      நீக்கு
  6. காலை வணக்கம் சகோதரரே

    இன்றைய கதை அருமையாக உள்ளது. நல்ல உரையாடல்களுடன் விறுவிறுப்பாக சென்ற கதையை ஒரே மூச்சில் படித்து விட்டேன்.நாம் ஒன்று நினைத்தால் "அவன்" வேறொன்றைதானே நினைப்பான். யதார்த்தத்தை கதையின் முடிவு விளக்கியது. கதையாயினும், நல்லபடியாக திருமணம் நடந்து மணமக்கள் மனமொத்து வாழ வேண்டுமென மனது ஆசை படுகிறது. கதையை நன்றாக நகர்த்திச்சென்று சுபமாக முடித்த சகோதரர் ஏகாந்தன் அவர்களுக்கு மனம் நிறைந்த பாராட்டுகளுடன் நன்றிகளும். பகிர்வுக்கும் மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  7. ஏகாந்தன் அண்ணா கிச்சா மூலம் முடிவியைக் கோடிட்டுக் காட்டிவிட்டார்....அதான் ராதை உரசிக்கொண்டு நிற்பதைப் பார்த்து விமலா மாமி கிச்சாவிடம் பேசும் போது விமலா மாமியின் கண்ணுக்குள் சாரதாவை பிம்பம் போட்டுக் காட்டிவிட்டாரே....அவர் அப்படி நினைத்துவிட்டால் மாற்ற முடியுமா என்ன?!!! விமலா மாமியால் புரிந்து கொள்ள முடியலையோ....சங்கீதா மனதுள் இருப்பதால்....என்றே தோன்றுது

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுந்தர் அத்தனை ஃப்ராங்காக உரிமையோடு அம்மாவிடம் கோபப்படுபவன் டக்கென்று தனக்கு சாரதாவைப் பாருன்னு சொன்னா என்னவாம்? ஹூம்....

      எனக்கென்னவோ ஒரு டவுட்டு அந்த விசா தன் பெண்ணைப் பத்தி அடித்துவிடுவது கூட சாரதா செய்யும் வேலைகளைப் புகுத்தியோன்னு...அப்படியே மெதுவா விமலாவுக்கு சங்கீதா மேல் நல்ல அபிப்ராயம் வர வைத்து விமலா தன் வீட்டுக்குள் என்ட்ரி ஆக சங்கீதாவுக்கு விசா கொடுத்துவிடமாட்டாளான்னு ஒரு கணக்கு போட்டு பாஸ்போர்ட் ரெடி பண்ணிட்டா போல ....விமலாவும் விசா கொடுக்க ரெடியாகும் போது கிச்சா சாரதாவுக்கு விசா கொடுக்க கட்டம் போட்டுக் காட்டிட்டார் விமலாவுக்கு....விமலா மாமிக்குத்தான் புரியனும்...என்ன செய்வாள்?!!! வெளியே போயிருக்கும் அந்தப் பிள்ளை ராத்திரி வந்து டக்குனு மனசை சொல்லுமோ?!!

      கதையை ரசித்தேன் உரையாடல்கள் ரொம்ப அழகு! ஏகாந்தன் அண்ணா...

      கீதா

      நீக்கு
    2. கீதா ரங்கன்... எனக்குத் தோன்றியதை நீங்க எழுதியிருக்கீங்க. சரளமான இயல்பான நடை. கதையின் முடிவையும் கோடிகண்பித்திருக்கிறார்.

      கதாசிரியர்கள் தங்கள் விருப்பத்தைக் கதையில் புகுத்திடறாங்களோ? (தோசை.. சர்க்கரை.. இறைவா... என்ன காம்பினேஷன் இது... கடவுளே)

      நீக்கு
    3. நெல்லை நினைச்சேன்...நமக்குத்தான் இந்த திங்க வந்துருச்சுனா இடம் பொருள் ஏவல் எதுவும் கிடையாதே... எங்கு பார்த்தாலும் அதைப் பத்திப் பேசாம போக முடியுமோ சொல்லுங்க ஹா ஹா ஹா நானும் அடுத்து அதைத்தான் சொல்ல நினைச்சு வந்தேன்.....அதுக்குள்ள உங்க கமென்ட் வந்துருச்சு...
      ஹா ஹா ஹா

      கீதா

      நீக்கு
    4. /// தோசை+ சர்க்கரை என்ன காம்பினேஷன்?../// தோசை+

      சர்க்கரைப் பாகு எத்தனை எத்தனை சுவை தெரியுமா!...//

      சுவையான தருணங்கள்....கருப்பஞ்சாற்றைக் காய்ச்சி பாகு பதத்தில் இறக்கி அதனுடன் இட்லி, தோசை ... ஆகா.. ஆகா!...

      கடைந்தெடுத்த வெண்ணெய் + சர்க்கரை....
      பாலாடை + சர்க்கரை...
      வெள்ளரிப் பழம் + சர்க்கரை...
      தென்னம்பூ + சர்க்கரை..
      தேங்காய்த்துருவல் + சர்க்கரை..
      ஊறிய அவல் + சர்க்கரை...

      இதெல்லாம் சுவையோ சுவை..

      நீக்கு
    5. ஆமாம் துரை அண்ணா முன்னமே இதை சொல்லியிருக்கீங்க இப்ப பார்த்ததும் நினைவுக்கு வந்துருச்சு..கரும்பு பாகு....இது இப்படி சாப்பிட்டது இல்லை அண்ணா...

      ஆனால்.....அடுத்தாப்புல நீங்க சொல்லிருக்கறது //கடைந்தெடுத்த வெண்ணெய் + சர்க்கரை....
      பாலாடை + சர்க்கரை...
      வெள்ளரிப் பழம் + சர்க்கரை...
      தென்னம்பூ + சர்க்கரை..
      தேங்காய்த்துருவல் + சர்க்கரை..
      ஊறிய அவல் + சர்க்கரை...

      இதெல்லாம் சுவையோ சுவை..//

      இதெல்லாம் நல்லா அப்பப்ப வாய்ப்பு கிடைக்கும் போது சாப்பிடறது. பகக்த்துல இருக்கற விநாயகர் கோயில் அழகு கோயில் சின்ன கோயில் அங்க அவல் + வெல்லம் + தேங்கா பூ போட்டு பிரசாதம்...எள்ளும் கூட போட்டுருப்பாங்க ஹையோ செமையா இருக்கும்...அதுவும் பிரசாதம்னா விடுவமா....நான் இதெல்லாம் ரொம்ப ரசித்து சாப்பிடுவேன்...

      கீதா

      நீக்கு
    6. சுடச் சுட இட்லிக்கு நெய், சர்க்கரை தொட்டுக்கொண்டு சின்ன வயசில் விபரம் தெரியும்வரை சாப்பிட்டிருக்கேன். பின்னால் அப்பா அந்தப் பழக்கத்தை நிறுத்திட்டார். :) மி.பொ. முதல் முதல் தொட்டுக்கும்போது அலறிய அலறல்! இப்போவும் மி.பொ.என்றால் அலர்ஜி தான்.:))))

      நீக்கு
    7. துரை செல்வராஜு சார்.. நீங்க ஏற்கனவே தோசை, கருப்பஞ்சாறுன்னு (பாகு) சொல்லியிருக்கீங்க.

      ஆனா எனக்கென்னவோ தோசை/இட்லிக்கு சர்க்கரை - என்னால கற்பனை செய்யவே முடியலை. சப்பாத்திக்கு ஓகே.

      இட்லியோட நேச்சுரல் காம்பினேஷன் மிளகாய்ப்பொடிதான்.

      நீக்கு
    8. @ நெல்லைத் தமிழன்:

      கருத்துக்கு நன்றி.

      //..கதாசிரியர்கள் தங்கள் விருப்பத்தைக் கதையில் புகுத்திடறாங்களோ? (தோசை.. சர்க்கரை..//

      இங்கே அப்படியில்லை. எனக்கு அடைக்குத்தான் சர்க்கரைப் பிடிக்கும். இது அந்த சுந்தர் சாப்பிடும் லட்சணம்!
      அதற்காக சப்பாத்திக்கு சர்க்கரை கொண்டுவந்தால், சப்பாத்தி சாப்பிடுவதையே நிறுத்திவிடுவேன்! சப்பாத்தி என்றால் - சப்பாத்தி-குருமா (சௌத்-இண்டியன் ஸ்டைல்). அல்லது சப்பாத்தி/ரொட்டி/ஃபுல்கா -இதற்கு நார்த் இண்டியன் ஸப்ஜி தான். (நம்ப கத்திரிக்கா வதக்கல், புடலங்கா கூட்டு இத்யாதி தொட்டுக்கொண்டு சாப்பிடமாட்டேன்!)


      நீக்கு
    9. @ துரை செல்வராஜு:

      வெண்ணெய்+சர்க்கரை, வெள்ளரிப்பழம்+ சர்க்கரை ருசித்ததுண்டு கிராம வாழ்க்கையில்..

      நீக்கு
    10. சுடச் சுட இட்லிக்கு நெய், சர்க்கரை தொட்டுக்கொண்டு சின்ன வயசில் விபரம் தெரியும்வரை சாப்பிட்டிருக்கேன்//

      அதே அதே அக்கா தோசைக்கும் சாப்பிட்டதுண்டுதான்....

      கீதா

      நீக்கு
  8. அப்பாடி, காலை நேர அவசரம், பிள்ளை அம்மா பாசம் எல்லாம் சூப்பார்.
    அம்மா கோலம் போட்டால் மகன் தடுக்கில பாய ரெடியாலகிறார்.
    கிருஷ்ணா ,அந்த சாரதாவையே இவனுக்குத் திருமணம் செய்து வை,.
    நன்றாக இருக்கட்டும். மனம் நிறை பாராட்டுகள் ஏகாந்தன் அவர்களுக்கு.

    பதிலளிநீக்கு
  9. ஏகாந்தன் அண்ணா குழலோசை கேட்டாச்சு..சாரதாவுக்கு அப்படியேனும் நல்ல வாழ்க்கை அமையட்டும் பாவம்....சீக்கிரம் மண்டபம் புக் செய்யுங்க!!!ஹா ஹா ஹா ஹா....

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @ கீதா:
      காலைப்பரபரப்புக்கிடையே படித்துவிட்டீர்களா? குழலோசை கேட்டுவிட்டதா! மங்களம்! நன்றி.
      ஆனால் நெல்லைத் தமிழன் தோசை-சர்க்கரையிலிருந்து சப்பாத்தி-சர்க்கரைக்குள் நுழைந்துவிட்டதாக அல்லவா தெரிகிறது!

      நீக்கு
    2. @ வல்லிசிம்ஹன்:

      பாராட்டுக்கு நன்றி.

      நீக்கு
  10. கதையின் நிதானமான நகர்வு மனதைக் கவர்ந்தது.

    பதிலளிநீக்கு
  11. அந்தக் காலத்துக் கதை. 'சிக்'கென்று எடுப்பாத் தெரியற மாதிரி வெட்டி ஒட்டி சுருக்கியிருக்கலாம்.

    பதிலளிநீக்கு
  12. பக்கத்து வீட்டில் நடக்கும் உரையாடலை ஒட்டுக்கேட்டது போன்று உள்ளது நடை.

    இந்தக்காலத்து பெண்களுக்கு சமையல் தெரிந்து இருப்பது அதிசயம்தான்...
    அருமை ஏகாந்தன் ஸார்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தக்காலத்து பெண்களுக்கு சமையல் தெரிந்து இருப்பது அதிசயம்தான்...//

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் கில்லர்ஜிக்கு இப்படிச் சொல்லுவதே பொழுதா போச்சு ஹா ஹா அஹா ஹா ஹா ஹா ஹா....

      கில்லர்ஜி இக்காலத்துப் பெண்களுக்கும் சமையல் எல்லாம் தெரியுமாக்கும்…..ஆனால் என்ன நம் அம்மாக்கள் செஞ்சத செய்யமாட்டாங்க வேறு வகையா செய்வாங்க. ஜி....சும்மா குத்தம் சொல்லக் கூடாதாக்கும் ஹா ஹா ஹா ஹா ஹா..

      அப்படிப் பார்த்தா எனக்கும் தினப்படி சமையல் எதுவும் தெரியாது கல்யாணம் சமயத்தில். அவசர அவசரமா என் பாட்டிகிட்ட கேட்டு ஒரு நோட்புக்ல வீட்டுப்பாடம் எழுதறாப்புல உக்காந்து எழுதினேன். ஒரு மாசத்துக்கு வீட்டுக்கு என்ன வாங்கனும் எவ்வளவு வாங்கனும்? விசேஷ நாட்கள் ல என்ன செய்யனும் எல்லாம். பாட்டி அட்வைஸ் கூடவே…இது நம்ம வீட்டு சமையல்….…ஆனா நீ அங்க போனப்புறம் அவங்க வீட்டுல என்ன செய்யறாங்கனு பார்த்து அது தான் சமைக்கனும்னு அது ஒரு பெரிய கட்டுரை....அளவு அட்வைஸ்...

      என் காலக்கட்டத்தில் புதுசு ந்னு சொல்லப்பட்ட குறிப்புகள் செய்வேனாக்கும் வீட்டுல பாட்டிக்குத் தெரியாம...ஹா ஹா ஹா ஹா ஆனா குழம்பு, ரசம் எல்லாம் தெரியாது....ஹிஹிஹி ஏன்னா கூட்டுக் குடும்பம்..எடுபிடி வேலைகள் எல்லாம்க் செய்து பழக்கம் உண்டு...ஆனால் பாட்டிகள் ராஜ்ஜியம் என்பதால் கிச்சனுக்குள்ள எதையும் தொடவோ சமைக்கவோ விட மாட்டாங்க. என் அம்மாவுக்கே அனுமதி கிடையாதுனா பார்த்துக்கங்க…

      அதே போல இந்தக் காலத்துப் பெண்கள் இப்போதைய டிஷஸ் செய்யறாங்கதான்……நான் எப்படி கத்துக்கிட்டேனோ அப்படி அவங்களும் கத்துக்கப் போறாங்க……………அதனால குத்தம் எல்லாம் சொல்லப்டாதாக்கும் கேட்டீங்களா ஜி!! இப்போதையை வாழ்க்கை முறையே மாறியிருக்கு கில்லர்ஜி...அதனால பெண்களிடம் இருக்கும் ப்ளஸ்ஸை பார்த்துப் போகனுமாக்கும்....ஹா ஹா ஹா ஹா ஹா

      அப்படி பார்த்தா நான் இன்னொன்னும் சொல்லுவேன்...நெல்லை, ஸ்ரீராம், வெங்கட்ஜி, மதுரை தமிழன், துரை அண்ணா போல ஆண்களும் சமைக்கனுமாக்கும்....இது எப்பூடி?!!!!!!! சரி சரி ஓடிப் போயிடறேன் ....கோடரி கம்பு எல்லாம் வரதுக்குள்ள!!!!!!!!!!!!!!!!!!!!

      கீதா

      நீக்கு
    2. @ கில்லர்ஜி:

      ஒட்டுக்கேட்டது போன்றா! அட!
      கருத்துக்கு நன்றி.

      @ கீதா: சமையல் மகாத்மியம் அருமை..

      நீக்கு
  13. அந்த குடும்பத்தில் கூடவே இருந்த ஃபீல். சரளம். இயல்பான கதை.

    பதிலளிநீக்கு
  14. கிருஷ்ணா... நல்லபடியா முடித்து வையப்பா...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @ திண்டுக்கல் தனபாலன்:

      அவர்கிட்ட ஃபைல் போயிருச்சு..கவலைப்படாதீங்க!

      நீக்கு
  15. குழல் இனிமை.. இசை இனிமை..ராதை இனிமை கண்ணனும் இனிமை...

    எல்லாவற்றையும் ஒன்றாய்ச் சேர்த்து பின்னப்பட்ட கதை அருமையோ அருமை...

    பதிலளிநீக்கு
  16. சங்கீதாவா சாரதவா யாராயிருந்தால் என்ன ஒருவனி மனைவியை இன்னொருவன் அபகரிக்க முடியுமா ஏகாந்தனின் கதை முதன் முதலில் வாசிக்கிறேன்

    பதிலளிநீக்கு
  17. @ ஸ்ரீராம்:

    கதைப் பதிவிற்கு மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
  18. இன்றைக்கு இப்போதுதான் நேரம் கிடைத்தது.
    உரையாடலிலேயே கதையை நகர்த்தியிருக்கும் விதம் ரசிக்கும்படி இருக்கிறது. சொல்லாமல் சொல்வது ஒரு கலை, அது நன்றாகவே கை வந்திருக்கிறது. வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @ Bhanumathy Venkateswaran:

      நேரம் சில சமயம் நம்மை சோதிக்கும். உங்களின் கடந்த கதைக்கும் இரவு 10 1/2 -11 -க்குத்தான் நான் பின்னூட்டமிட்டேன்!

      வாழ்த்துக்கு மிக்க நன்றி

      நீக்கு
  19. நல்ல கதை வாழ்த்துக்கள்.கதை சொல்வதும் கதையை
    உரையாடவிடும் உத்தியும் நன்கு கை வந்திருக்கிறது ஆசிரியருக்கு/

    பதிலளிநீக்கு
  20. ஏகாந்தன் சார் கதை மிக மிக நன்றாக இருக்கிறது. இயல்பான சரளமான உரையாடல்கள். டக் டக்கென்று உரையாடல்கள் தொடருவது நன்றாக இருக்கிறது.

    முடிவும் இறைவன் கோடிட்டுக் காட்டிவிட்டான்...அப்புறம் என்ன விமலா மாமியின் மனமும் மாறிவிடும்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @ Thulasidharan V Thillaikathu :


      //..அப்புறம் என்ன விமலா மாமியின் மனமும் மாறிவிடும். //

      மாறியது நெஞ்சம்..
      மாற்றியது யாரோ..!

      எனப் பாட ஆரம்பித்துவிடுவாரோ விமலா மாமி!

      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  21. கதை நன்று பாராட்டுகள் முடிவு தொக்கி நிற்பது போல தோன்றுகிறது

    பதிலளிநீக்கு
  22. கால் வாசிக் கதை ஓசை:) சுடுவதிலேயே நகருதே என நினைச்சேன்ன்.. பின்புதான் சூடு பிடிச்சது.. ஹா ஹா ஹா அழகிய உரையாடல்.. அருமையாக இருக்கு கதை. என்னால பகல் எங்கும் எட்டிப் பார்க்க முடியவில்லை..

    பதிலளிநீக்கு
  23. @ கவிஅமுதம்(!) அதிரா:

    கால்வாசிக் கதை ஓசையா! மிச்சமெல்லாம் ஆசையா? நன்னாருக்கு கருத்து!

    பதிலளிநீக்கு
  24. நேற்று இந்தக் கதைக்கு பின்னூட்டம் இட முடியவில்லை. பெரிய டவுன்களை ஒட்டிய அபார்ட்மென்ட் கதைபோலத் தோன்றியது. டில்லி மயூர் விஹார் ஞாபகத்திற்கு வந்தது. விமலா மாமி முதல்லெ கொஞ்சம் பிள்ளையை மாற்ற யோசிப்பாள். போதும் இந்த வரையிலாவது நல்ல குடும்பம் என்று யோசனை வந்து விடும் படியான அக்கம்,பக்கம் கதைகளைப் பார்த்து தானாகவே முன்வந்து ஜாம்ஜாம் என்று கல்யாணத்தை நடத்திவிடுவாள் என்று தோன்றியது. அன்புடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @ காமாட்சி:

      நன்றி. நடக்கட்டும் கல்யாணம் ஜாம் ஜாமென்று!

      நீக்கு
  25. யசோதாவிற்கு திறந்த வாயில் உலகத்தை காட்டிய கண்ணன், விசாலம் மாமிக்கு அவர் மகனுக்கு பொருத்தமான துணையை காட்டி விட்டார். மாமியின் மூடியகண்களுக்குள்.

    அருமையான கதை.
    நேரில் பார்த்த மாதிரி இருந்தது, காட்சிகள் கண்ணில் விரிந்தது,
    எழுத்து நடை அருமை.

    பதிலளிநீக்கு
  26. தேங்காய்த்துருவல் + சர்க்கரை.. எனக்கு மிகவும் பிடித்தது.
    என் அம்மா மெத் மெத்தென்று சுட்ட தோசைக்கு சீனி தொட்டு சாப்பிடுவார்.
    என் மகன் சுட சுட பால், சீனி போட்டு தோசை
    சிறு வயதில் விரும்பி சாப்பிடுவான்.

    பதிலளிநீக்கு
  27. Kan munne kadhaapaathirangalai niruthum Eliya Nadai. Rasithen. Bandit

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @ Unknown:

      Unknown -ஆக இருக்காமல், known-ஆக ஆகிவிடுங்களேன்!

      கருத்திற்கு நன்றி.

      நீக்கு
  28. Whatsapp-ல் இன்று எனக்கு இந்தக் கதைக்காக வந்த நண்பரின் பின்னூட்டத்தை இங்கே இடுகிறேன்:

    ராமானுஜம், காங்கோ:

    வணக்கம். குழலோசை படித்தேன், ரசித்தேன். நான் உங்கள் எழுத்துக்கள் அனைத்தையும் உடனே படித்து ஒரு மன நிறைவு அடைவேன். கதாபாத்திரங்கள் கண்முன் நடமாடினர்.

    விமலா மாமி ராத்திரி சமையல் என்ன செஞ்சாளோ !

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!