புதன், 13 மார்ச், 2019

புதன் 190313 : பல்பு


சென்ற வாரக் கேள்வி - நூறு ரூபாய் செலவழிப்பது பற்றி நான் ஒன்றும் சொல்லப்போவதில்லை. மேலும், அந்தப் பதிவின் பின்னூட்டங்களிலேயே ஒவ்வொருவரின் கருத்துக்கும் மறுமொழி இட்டுவிட்டேன். அப்புறம் ...... ஓ ஓ பி திங்கிங் பற்றி நான் ஏதாவது சொல்லப்போய், அப்புறம் எனக்கு 'த'(ர்ம) அடி கொடுக்க நண்பர்கள் கியூவில் நிற்க ஆரம்பித்து விடுவார்கள்! எனக்கேன் வம்பு! 



வழக்கம்போல் சென்ற பதிவில் எங்களைக் கேள்வி கேட்க நீங்க எல்லோரும் மறந்துட்டீங்க! இந்த வாரமாவது கேளுங்க.

வாட்ஸ் அப் கேள்விகள்: 

நெல்லைத்தமிழன்: 
1. அம்மா கையால இதைச் சாப்பிடணும்னு தோன்றும் உணவு எது?

# அரிசி மாவு உப்புமா, அடை, வற்றல் குழம்பு.

2. நம்ம பசங்கள்ட இருக்கும் அன்பு நம்மைப் பெற்றவர்களிடம் இருக்கா?

#  அதே அளவு இல்லாதிருத்தல் இயல்பு. அவமரியாதை, அலட்சியம் இல்லாதவரை சரிதானே.

3. மனைவிக்கு பொதுவா குழந்தைகள் முக்கியமா கணவனா? (உல்டாவாவும் கேட்கலாம்)

# மனைவிக்கு கணவர் நெருக்கம் குழந்தைகள் முக்கியம். குழந்தைகள் வளர்ச்சி அம்மா பொறுப்பு. மனைவியின் மகிழ்ச்சிக்கு கணவன் பொறுப்பு.

4. பாவம் பார்த்து ஏமாத்திருக்கீங்களா?

# பாவம் பார்த்து ஏமாந்ததில்லை. காரணம், ரொம்ப மீன மேஷம் பார்த்து தான் உதவுவேன்.

5. எபி வாசகர்களை சந்திக்கணும் இல்லை வீட்டு விசேஷத்துக்கு அழைக்கணும்னு தோணியிருக்கா?

# ஒரு சந்திப்பு ஏற்பாடு செய்து நேரில் பார்த்தால் நன்றாக இருக்கும். ஆனால் வீட்டு விசேஷங்களில் சரியாக பார்த்துப்பேசக்கூட நேரம் இராது. அவர்களும் சற்றே தனிமையாக உணரக் கூடும். நிறைய நாம் அறியாத நபர்களுக்கிடையில் அதிக நேரம் இருப்பதில் சில சங்கடங்கள் சகஜம்.
  
 6. கடவுள், உங்க அப்பாவையோ இல்லை அம்மாவையோ ஒரு வாரம் உயிர்ப்பித்து உங்க வீட்டுக்கு அனுப்பறேன். கெடுவிற்குப்பின் அவர் மறைந்துடுவார் என்று சொன்னா யாரை அனுப்பச் சொல்லுவீர்கள்? ஏன்?

# அப்பாவை.
மரணத்துக்குப் பின் என்ன என்பதில் அவருக்கு அனுபவம், கூர்நோக்கு, விவரிக்கும் திறன் மேன்மையாக இருக்கும்.


$ அப்பாவை.  27 வருடங்களில் எங்கள் முன்னேற்றம் அவரை மகிழ்விக்கலாம்.
அம்மா 2017 வரை பார்த்ததனால் முன்னேற்றங்கள் impressive ஆக இருக்காது.


7. எபி நண்பர்களை சந்திக்கணும்னு ஆசிரியர்களுக்கு தோணியிருக்கா? யாருக்கு என்ன பிடிக்கும்னாவது தெரியுமா?

# சந்திக்க வேண்டும் எனும் எண்ணம் இல்லாதிருக்குமா ?  ஆனால் அவர்கள் ஒவ்வொருவருக்கும் என்ன பிடிக்கும் என்பது கண்ணில் பட்டிருப்பினும் நினைவில் இல்லை. தப்புதான். என்ன செய்ய ? Old is cold.
     


$ சந்திக்கும் எண்ணம் எப்போதும் உண்டு. ஒரிருவரை சந்தித்ததும் உண்டு  பெயர்கள் நினைவிருந்தாலும், பகிர்ந்து போட்டிக்கு இடம் கொடுக்கப் போவதில்லை. 

8. நதியில் மூழ்கி எழுந்தால் பாவம் தொலைந்துவிடும் என்றெல்லாம் சொல்லப்படுகிற பல்வேறு ஐதீகங்களில் நம்பிக்கை உண்டா?

# நம்பிக்கை என்னவோ இல்லைதான். ஆனால் ஆயிரமாயிரம் பேரின் நம்பிக்கைக்குரிய நதியில் குளிக்கிறோம் என்ற சிலிர்ப்பு இருக்கிறது.
     


$ நதி, குளம் இதில் எதில் குளித்தாலும் குளித்த பலன் இருக்கும் ஆனால் புண்ணியம் சேரும் என்பது அவரவர் மனத்திருப்தி மட்டுமே

9. வாழ்ந்த வாழ்க்கை போதும்னு எப்போதேனும் மனதில் நிழலாடியிருக்கா? இல்லை, வாழ்க்கைல என்ன அர்த்தம் இருக்குன்னு தோணுயிருக்கா?


# போதுமெனும் துணிவு இல்லை. 
வாழ்க்கையின் பொருள் இயன்றவரை அதிகம் பேருக்கு மகிழ்ச்சி தரும்படி வாழ்தல் என்று அவ்வப்போது நினைப்பதுண்டு.

$ வாழ்க்கையில் எல்லாவற்றிலும் also ran என்று வாழ்ந்தவர் போகும் போது எதுவும் எடுத்துப்போகப்போவதில்லை என்ற பின் இருக்கும் வரை தனக்கும் பிறருக்கும் இடரின்றி இருக்கவேண்டும்.

10. பெங்களூர் போயிட்டு, அடடா இந்த உணவை மிஸ் பண்ணறோமே என்னும், அப்பா.. இது பெட்டர் என்று தோன்றுவதும் என்ன என்ன? 
              


# பங்களூரு ஓட்டல்களில் அப்படி எதுவும் கிடையாது. வித்யார்த்தி பவன் போனதில்லை. ஒரிஜினல் கன்னடக் கல்யாணங்களில் பிஸி பேளே, சிரோட்டி, உப்பி(b)ட்டு எனும் போளி நன்றாக இருக்கும்.
   
$ wrong அட்ரஸ் எப்போதும் உறவினர் வீட்டில் மட்டும். 

'மிஸ்டர் &' நீங்க ஏன் நெ த கேள்விகளுக்கு பதில் சொல்லலை? 

& : ந மா ஒ சூ !


பானுமதி வெங்கடேஸ்வரன் : 

சிவாஜியின் ஓவர் ஆக்டிங், லக்ஷ்மி யின் ஓவர் ஆக்டிங், பிரகாஷ் ராஜின் ஓவர் ஆக்டிங் என்ன வித்தியாசம்? Which one is more tolerable?

லட்சுமி ஓவர் ஆக்டிங் அல்ல என்று எனக்குத் தோன்றும்.  பிரகாஷ் ராஜ் சில சமயம் செயற்கை யான நடிப்பு.

சிவாஜி ஓவர் இல்லாமல் செய்த இரும்புத்திரை மோட்டார் சுந்தரம் பிள்ளை வெற்றி பெறாததால் அழுத்தம் கொடுப்பதை வழக்கம் செய்து விட்டார். "எல்லாம் இங்கு இருக்கிறது. அவரவர் தேவையானதை எடுத்துக் கொள்கிறார்கள்" என்று ஒரு சமயம் அவர் சொன்னதுண்டு.


& ஆக்டிங் என்று வந்துவிட்ட பின், ஓவர் ஆக்டிங் / அண்டர் ஆக்டிங் என்பதெல்லாம் அர்த்தமில்லாத விஷயங்கள். ஒவ்வொரு நடிப்பும் அவரவர் பாணி. அதை இரசிக்க ஒரு கூட்டம் - (பெரியதோ/ சிறியதோ) எப்பொழுதும் இருக்கும். எனக்கு சிவாஜி, லட்சுமி, பிரகாஷ்ராஜ் எல்லோருடைய நடிப்பும் பிடிக்கும். 

இந்த வாரக் கேள்வி:  பல்பு !

ஒரு மூடப்பட்ட அறை. ஜன்னல்கள் கிடையாது. உள்ளே பல்ப் எரிகிறதா இல்லையா என்பதை வெளியிலிருந்து கண்டுபிடிக்கமுடியாது. 
அறையின் நான்கு பக்கச் சுவர்களிலும் பக்கத்துக்கு ஒன்றாக  நான்கு பல்புகள். N E W S (அதாவது, நார்த், ஈஸ்ட், வெஸ்ட், சௌத் பக்கத்து பல்புகள்.)  அனைத்தும் பால் வெண்மை பல்புகள். உள்ளே இருக்கும் டங்க்ஸ்டன் இழைகள் அல்லது எல் இ டி வெளியில் தெரியாது. வெளிப்பார்வை கொண்டு அது எரியக்கூடிய  பல்பா அல்லது ஃப்யூஸ் ஆன பல்பா  என்று கண்டுபிடிக்க இயலாது. எல்லா பல்புகளும் கைக்கு எட்டுகின்ற உயரத்தில்தான் பொருத்தப்பட்டுள்ளன. 

அறைக்கு வெளியே நான்கு சுவிட்சுகள். எந்த ஸ்விட்ச், எந்த பல்புக்கானது என்று தெரியாது. 


உங்களுக்கு இடப்பட்ட கேள்வி: 

அறையில் உள்ள நான்கு பல்புகளில் ஏதோ ஒன்று ஃப்யூஸ் ஆகிவிட்டது. எது என்று தெரியாது. 

நீங்க அறைக்குள் நுழைந்த நேரத்திலிருந்து, குறைந்த நேரத்தில்  ஃப்யூஸ் ஆன பல்பை வெளியேக் கொண்டுவரவேண்டும். 

நிபந்தனைகள் : 

ஏதாவது ஒரு சுவிட்சை மட்டுமே ஒரு நேரத்தில் ஆன் செய்து வைக்க முடியும். 

எந்த பல்பையாவது கழற்றினால், மறுபடி அதே பல்பை அங்கே மாட்டக்கூடாது. 

அறைக்குள் ஒருமுறை மட்டுமே நுழைந்து வெளியேற முடியும். 

உங்களால் இந்த சவாலை ஏற்று, நிபந்தனைகளுக்குட்பட்டு, ஃப்யூஸ் ஆன பல்பை குறைந்த நேரத்தில் வெளியே கொண்டுவர  முடியுமா? என்ன யுக்திகளைக் கையாள்வீர்கள்? What is your step by step procedure?

                     

135 கருத்துகள்:

  1. போன வாரம் 100 ரூபாய் செலழிக்கறதுலேயே போய்டுச்சே அதனால கேள்வி கேட்க மறந்தே போச்சு...(இல்லாட்டா மட்டும் கேள்வி கேட்டுருவியானு மைன்ட் வாய்ஸ் சொல்லுது கேட்குது ஹிஹிஹிஹி)

    இந்த வாரம் கேட்டுருவோம்...

    காலை வணக்கம் கௌ அண்ணா

    கீதா

    பதிலளிநீக்கு
  2. என் அம்மா கையால் சாப்பிட நினைத்து இப்ப ரொம்பவெ மிஸ்ஸிங்க் அவங்களை தினமும் நினைத்துக் கொள்கிறேன்.

    பாவம் பார்த்து ஏமாந்திருக்கிறேனே....ஆனாலும் புத்திக்கு எட்டாது ஹிஹிஹிஹி...

    இன்னும் வாசித்துவிட்டு வரேன்...

    கீதா

    பதிலளிநீக்கு
  3. வாழ்க நலம்..

    திரு. KGG. அவர்களுக்கு அன்பின் வணக்கம்.

    பதிலளிநீக்கு
  4. அன்பின் ஸ்ரீராம், கீதாக்கா/ கீதா , நெ.த மற்றும் அனைவருக்கும் நல்வரவு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எப்போ வருவாரோ? ஸ்ரீ கீ கீ நெ த !!!!

      நீக்கு
    2. வந்துடுவாங்க... வந்துடுவாங்க... வரவேண்டிய நேரத்துல வந்துடுவாங்க....

      நீக்கு
    3. வந்துட்டேன்! காலை, மதிய, மாலை வணக்கம். நல்லிரவுக்குப் பிரார்த்தனையும், வாழ்த்தும். :)

      நீக்கு
    4. உங்க ஊர்லதான் அலைந்துகொண்டிருக்கிறேன் கேஜிஜி சார்.. நாளை கிளம்பிவிடுவேன்

      நீக்கு
    5. அடேடே அப்படியா! இங்கே வந்திருக்கலாமே!

      நீக்கு
    6. //நாளை கிளம்பிவிடுவேன்//

      இதைப் படிச்ச தைரியத்திலதான் கெள அண்ணன்..

      //அடேடே அப்படியா! இங்கே வந்திருக்கலாமே!//
      இதை எழுதினாராம் ஹா ஹா ஹா:)

      நீக்கு
    7. ஆஹா - தீர்க்கதரிசி சரியாக் கண்டுபிடிச்சுட்டாங்களே!

      நீக்கு
  5. புதனும் வாழ்க...
    புதனன்று பூத்து வரும் பதிவும் வாழ்க...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏ பி நாகராஜன் வசனம் போல் இருக்கே!

      நீக்கு
    2. இல்லீங்கோ.... மண்டபத்துல யாருக்கிட்டேயும் எழுதி வாங்காம நானே... சொந்தமா எழுத்தாணிய எடுத்து எழுதுனதுங்கோ!...

      நீக்கு
  6. தலைப்பு பல்பு என்று பார்த்ததும் சரி சரி வாசகர்களிடம் இருந்து ஆசிரியர்கள் பல்பு (இந்த பல்பின் அர்த்தம் வேறு!!!!!!!!) வாங்கியிருக்காங்க போலன்னு நினைச்சேன் ஹா ஹா ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  7. அனைவருக்கும் காலை வணக்கம், வாழ்க வளமுடன்!

    பதிலளிநீக்கு
  8. அனைவருக்கும். காலை வணக்கம். கேள்வி பதில்கள். நன்றாக இருந்தது. யார் பதில் சொல்கிறார்கள் என்று தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதானே எனக்கும் தெரியலை!

      நீக்கு
    2. அம்மா கையால் பிசைந்து கொடுத்த குழம்பு சாதம். ரேஷன் அரிசியிலும் மணந்து கைவந்து சேரும். ஏமாறுவது வழக்கமாகவே இருந்திருக்கிறது. இப்போது
      பணத்தைக் கையாள்வது நின்றிருப்பதால் கவலை இல்லை.

      நீக்கு
    3. ஆமாம். ஆன் லைன் பரிவர்த்தனைகள் வந்ததிலிருந்து பணம் கொடுத்து ஏமாறும் நிலை இல்லைதான். மற்றும் ஒரு அட்வான்டேஜ் - கிழிசல் நோட்டுகளை யாரும் என் தலையில் கட்டுவதில்லை. பெங்களூரில் எல்லாவற்றுக்கும் காஷ்லெஸ் டிரான்சாக்ஷன் என்பதால் பல நன்மைகள் கண்கூடாக உள்ளன.

      நீக்கு
  9. //அதே அளவு இல்லாதிருத்தல் இயல்பு. அவமரியாதை, அலட்சியம் இல்லாதவரை சரிதானே.//

    நல்ல பதில்.

    // மனைவிக்கு கணவர் நெருக்கம் குழந்தைகள் முக்கியம். குழந்தைகள் வளர்ச்சி அம்மா பொறுப்பு. மனைவியின் மகிழ்ச்சிக்கு கணவன் பொறுப்பு.//

    அருமை.

    பதிலளிநீக்கு
  10. $ அப்பாவை. 27 வருடங்களில் எங்கள் முன்னேற்றம் அவரை மகிழ்விக்கலாம்.
    அம்மா 2017 வரை பார்த்ததனால் முன்னேற்றங்கள் impressive ஆக இருக்காது.//

    இதே தான் ஆனால் நான் என் அம்மாவைக் கேட்டிருப்பேன். அப்பா இருப்பதால் அவருக்கு என் மகன் என்ன செய்கிறான் என்பதெல்லாம் அப்டேட்...அம்மாதான் என் மகனைக் குறித்து வருந்தியிருந்தார் இன்று மகனைக் கண்டு மிகவும் மகிழ்ந்திருப்பார்.....

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அம்மாவாவது பேரன்களின் திருமணம் வரை இருந்தார்.
      அப்பா அத்தனை உழைப்பையும் கொடுத்து விட்டு குடும்ப வளர்ச்சியைக் காணாமல்
      மறைந்தார். அது வருத்தம் தான்.
      தந்தையைப் போல் உலகிலே தெய்வம் உண்டோ.

      நீக்கு
    2. தந்தை போல் தெய்வம் இல்லைதான்.

      நீக்கு
  11. பல்பு. மாற்றி வழக்கம் டஃப் கேள்வி சார் :)சில படங்களில் சிவாஜி, லக்ஷ்மி இருவரும் ஓவர் ஆகடிங்க். செய்ததுண்டு. அந்த வயதில் தெரியவில்லை. இப்போது தோன்றுகிறது .ஆனால் தங்கப்பதக்கம் சிவாஜியை மறுக்கவே முடியாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. த ப சி மறுக்கவே முடியாது --- ஓ ஆ விலா ?

      நீக்கு
    2. அச்சோ இல்லை.அச்சு அசல் ட்ரேட் மார்க் அருமை சிவாஜி நடிப்பு. ஓஆ இல்லை ஜி.

      நீக்கு
    3. ஹ ஹ சும்மாத்தான் கேட்டேன்!

      நீக்கு
  12. நான் பல்பு வாங்கிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  13. அறையை திறந்தால் வெளிச்சம் வருமா என்று தெரியவில்லை... அதைப் பற்றி கேள்வியில் குறிப்பிட்டிருக்கலாம்... சரி பரவாயில்லை... ஏனென்றால் கீழே பதிலில் விசயம் இருக்கு...

    அறைக்கு நுழைவதற்கு முன் ஒவ்வொரு சுவிட்சையும் சிறிது நேரம் ஆன் செய்து வைப்பேன்... பிறகு ஏதேனும் சுவிட்சை ஆன் செய்து, உள்ளே நுழைந்து, சூடாகாத பல்பை கழட்டுவேன்...

    பதிலளிநீக்கு
  14. ரொம்ப பிசி! ஹிஹிஹி, எல்லோரும் சொல்லும்போது நாம மட்டும்சொல்லுவதில்லையேனு நினைப்பேன்.இப்போ என்னடான்னா நிஜம்மாவே பிசியோ பிசி! நாளைக்கும் பிசியோ பிசி!

    பதிலளிநீக்கு
  15. இன்னிக்குக் கணினியையே இப்போத் தான் திறந்தேன். காலையில் ஒரு வேலை இருந்த்தால் சற்று நேரம் திறந்துட்டு மூடியாச்சு! பின்னர் நேரமே இல்லை! இப்போத் தான் மசால் வடை, கேசரி, காஃபி சாப்பிட்டுட்டு வந்து கணினியைத் திறக்கிறேன். :))))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆ ஆ ஹா கீதாக்கா...கேசரிய விடுங்க... மசால்வடை, காஃபி....இப்படி நாக்குல தண்ணி வர வைச்சுட்டீங்களே...!!!!!

      கீதா

      நீக்கு
    2. என்னது... பெண் பார்க்கும் வைபவத்துக்புப் போனீங்களா?

      நீக்கு
    3. ஹாஹா, நெ.த. இதை இப்போத் தான் கவனிச்சேன். பெண் பார்க்கையில் கேசரியோடு பஜ்ஜி இல்லையோ கொடுப்பாங்க! இங்கே மசால் வடை மொறுமொறுனு! :))))

      நீக்கு
  16. இன்னிக்கு ஜிவாஜி பற்றிய கேள்வி தவிர்த்து மற்றதில் பானுமதியோட ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் கௌதமன் பதில் வந்திருக்கு. மற்றதுக்கு வரலை. பல்பு பற்றிக் கேள்வி கேட்டிருக்கார். அறையைத் திறந்து எல்லா பல்பையுமே கழட்டிடலாமே! எதுக்கு வீணா ஒவ்வொரு ஸ்விட்சாப் போட்டுப் பார்த்துட்டு! இருந்தாலும் டிடியோட பதில் அசத்தல்! அதான் சரியான பதிலும் கூட!

    பதிலளிநீக்கு
  17. ஜிவாஜி எந்தப் படத்தில் ஓவர் ஆக்டிங் செய்யலைனு கேட்டிருந்தால் பதில் வந்திருக்குமோ? லக்ஷ்மி ஓவர் ஆக்டிங் என்பதை விட ஓவர் அலட்டல். பிரகாஷ் ராஜ் "காஞ்சிபுரம்"படத்தில் சுமாராக நடிச்சிருப்பார். பரவாயில்லை ரகம்! மற்றப் படங்களில் எல்லாம் தன் அதீத புத்திசாலித் தனத்தைக்காட்டிக்கிறாப்போல் தெரியும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிவாஜி, வசூல் ராஜா எம் பி பி எஸ், பதினாறு வயதினிலே மாதிரி படங்கள்ல ஒவர் ஆக்ட் பண்ணலை. (ஏன்னா அதுல அவர் நடிக்கலை)

      நீக்கு
  18. பாவம் பார்த்து ஏமாந்த கதையை எழுதினால் சுமார் நூறு பதிவுகள் வரும். வீட்டிலேயே அப்படி ஏமாந்திருக்கேன்.முதுகுக்குப் பின்னாடி சிரிப்பார்கள்.அந்த அனுபவமும் உண்டு.

    பதிலளிநீக்கு
  19. அம்மா கையால் மோர் சாதம் போட்டால் கூடப் போதுமே! அம்மா மட்டும் இருந்தாலே போதும்!

    பதிலளிநீக்கு
  20. நிச்சயமா நாம் குழந்தைகளிடம் காட்டும் அன்பை நம்பெற்றோரிடம்காட்ட முடியாது! சின்னக் குழந்தைக்குப் புரியறாப்போல் அன்பைக்காட்டுவோம்.பெற்றோர் வயதானவர்கள்.அவர்கள் தேவையைக் கவனித்துக் கொண்டு ஆறுதலாக ஓரிரு வார்த்தை பேசிச் சாப்பிட்டீங்களா என விசாரித்தாலே போதும்! ஆனால் நம் குழந்தைகளை விட நம் பேரக் குழந்தைகளை நாம் அதிகம் நேசிப்போம். அவர்களுக்கு என விட்டுக் கொடுப்போம்.பொறுத்துப் போவோம். நம் குழந்தைகளிடம் காட்டிய/காட்டும் கண்டிப்பைப் பேரக்குழந்தைகளிடம் காட்ட மாட்டோம்.

    பதிலளிநீக்கு
  21. மனைவி,கணவன் உறவு முறையில் உள்ள நெருக்கத்தைக் குழந்தைகளுடனான நெருக்கத்துடனோ பாசத்துடனோ போட்டி போடக் கூடாது என்பது என் கருத்து. ஆனால் பெரும்பாலான குடும்பங்களில் கணவன்மார் குழந்தை பிறந்த பின்னர் மனைவி தன்னை அலட்சியம் செய்வதாகச் சொல்லுவார்கள். குழந்தைக்கு அதிக கவனம் தேவை. அதனால் தாய் அதிகம் கவனிக்கிறாள். கணவன் அப்போது அதைப் புரிந்து கொண்டு மனைவிக்கு உதவினால் இருவருமாகச் சேர்ந்து குழந்தையை கவனித்துக் கொண்டால் போல் ஆகும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருத்துக் குவியலுக்கு மிக்க நன்றி கீ சா அவர்களே!

      நீக்கு
    2. //ஆனால் பெரும்பாலான குடும்பங்களில் கணவன்மார் குழந்தை பிறந்த பின்னர் மனைவி தன்னை அலட்சியம் செய்வதாகச் சொல்லுவார்கள். //

      இது உண்மைதான் கீசாக்கா.. நம்நாடுகளில் 90 வீதம் அம்மாக்களும், குழந்தை பிறக்கும்வரை தான் இளமையானவ என நினைப்பதும், குழந்தை கிடைத்ததும் வயதாகிவிச்ட்டது எனவும், அதிலும் பெண் குழந்தை எனில் அது வயதுக்கு வந்திட்டால், கணவனோடு அருகில் இருக்கவே கூச்சப்படுவதும் நடக்குது.. அது மட்டுமில்லை, தன்னை ஒரு வயதானவ போல மேக்கப் இல்லாமல் .. எதிலும் பற்று இல்லாமல் ஆகிவிடுகிறார்கள். அது தப்புத்தானே.. வெளிநாட்டில் இந்நிலைமை இல்லையே...

      நம் நாட்டில் பொதுவா இப்போ 40 வயசுக்காரரைப் பாருங்கோ 60 வயசுபோல இருப்பார்கள்..

      நீக்கு
    3. கீசா மேடம்.... யூ ஆர் ராங். //குழந்தை பிறந்தபின் அலட்சியம்// - இது பெரிய சப்ஜெக்ட். பெண்கள் செய்யும் பெரிய மன்னிக்க முடியாத தவறு இது

      நீக்கு
    4. //பெரும்பாலான குடும்பங்களில் கணவன்மார் குழந்தை பிறந்த பின்னர் மனைவி தன்னை அலட்சியம் செய்வதாகச் சொல்லுவார்கள்./கணவன்மார் சொல்லுவது தான் இது! இதிலே தப்பெல்லாம் இல்லை. எங்க வீடுகளிலேயே பார்த்திருக்கேன், பார்க்கிறேன். சின்னக் குழந்தைக்குத் தரும் முக்கியத்துவத்தைக் கணவனுக்குக் கொடுக்க முடியுமா? கொஞ்சம் யோசிக்க வேண்டாமோ?

      நீக்கு
    5. ///சின்னக் குழந்தைக்குத் தரும் முக்கியத்துவத்தைக் கணவனுக்குக் கொடுக்க முடியுமா? கொஞ்சம் யோசிக்க வேண்டாமோ?///

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் கீசாக்கா, குழந்தைகளோடும் கணவனோடும் நடுநிலையாக இருக்கவேண்டியதுதான் ஒரு மனைவியின் உண்மையான கடமை.. அன்பு பாசம் அனைத்துமே.. நான் எப்பவும் குழந்தைகள் ஒரு கண் எனில் கணவன் மறு கண் எனத்தான் நினைப்பேன்..

      நீங்க சொல்வதைப் பார்த்தால் கணவன்மாருக்கு குழந்தையில் அக்கறையே இல்லையா.. மனைவி மட்டும்தான் குழந்தையைப் பார்க்கிறாவோ கர்:)).. உங்களுக்கு எப்போ ஆண்களுக்கு சப்போர்ட் பண்ணோனும் , எப்போ பெண்களுக்கு சப்பொர்ட் பண்ணோனும் எனப் புரியுதே இல்லை:)).. ஹையோ என் வாய்தேன் நேக்கு எடிரி:).. மீ நாட்டில் இல்லை:).. என்னை ஆரும் தேடாதீங்கோ:)...

      நீக்கு
    6. அதிரடி,புத்தம்புதுப் பிஞ்சுக்கு அம்மாவின் அரவணைப்புத் தான் தேவை! முகநூலில் ஒருத்தர் எழுதி இருந்தது. இரட்டைக்குழந்தைகளில் ஒன்று உயிருக்குப் போராடுகையில் தாயும், தந்தையும் என்னசெய்வது எனத் தெரியாமல் தவித்தார்களாம்.அப்போது ஒரு மருத்துவர் அந்தத் தாயிடம் குழந்தையைத் தூக்கித் தாயின் நெஞ்சோடு அணைத்துக் கொள்ளச்சொல்லிப் பின்னர் அந்தக் கணவனிடம்மனைவியையும் குழந்தையையும் சேர்த்து அணைத்தவாறு இருக்கச் சொன்னாராம். அரைமணியில் குழந்தையின் நாடித்துடிப்பு மெல்ல மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பி இருந்திருக்கிறது. தாய் குழந்தையை அணைத்தவாறே இருக்க, குழந்தைக்குச்சிகிச்சை செய்து மருத்துவர்கள் காப்பாற்றி விட்டனர். இதைப் படிக்கையில் எங்க பேரன் 2010 ஆம் ஆண்டில் எட்டு மாசத்தில் போய்விட்டானே என்னும் நினைவு வந்ததை என்னால் தவிர்க்க முடியவில்லை. இப்போதும் அந்த வருத்தம் எங்கள் குடும்பத்தில் ஆறாத வருத்தம்! விடுங்க! எங்கே இருந்தோ எங்கேயோ போயிட்டேன்.

      நான் சொல்ல வந்தது என்னன்னா குழந்தைக்குத் தாயின் அரவணைப்புக்குப் பின்னரே மற்றவை எல்லாம். கணவன் வளர்ந்த பிள்ளை. இருவருக்கும் இடையில் கவனிப்பில் கட்டாயம் வித்தியாசம் இருக்கும்,இருக்கணும். இது இயல்பு! மாறாகக் கணவன் அப்போது தனக்கும் மனைவி கவனிக்கலை எனஎதிர்பார்த்தால்! அது சரியில்லை. மற்றபடி குழந்தை வளர்ப்பில் இருவருக்கும் சம பங்கு இருக்கு! அதில் எனக்கு எவ்விதமான சந்தேகமும் இல்லை! தாய் இல்லை எனில் அந்தக் குழந்தை வாடி விடாதா? குழந்தை வளர்ந்த பின்னர் சொல்லிப் புரிய வைக்கலாம்.

      நீக்கு
  22. யஸ்ய பிரம்மணி ரமதே சித்தாம் நந்ததி நந்ததி நந்ததி ஏவ தத் யேவhttp://dindiguldhanabalan.blogspot.com/2019/02/Regime-and-Government-Part-1.html

    மேலே உள்ள பதிவை பதிவை நீங்கள் வாசித்தீர்களா kg gouthaman ஐயா...

    அதில் உள்ளதை இங்கே மறுபடியும்...

    ஈவு இரக்கம் இல்லாமல் நாட்டு மக்களிடம் கொள்ளை அடிப்பவர்களை, கேவலம் - பணத்திற்காக கொலை செய்பவர்களை, காமக்கொடூரர்களை... சுருக்கமாக நாட்டைக் கெடுக்கும் நயவஞ்சக செயல் செய்யும் சில கொடியவர்களை தண்டித்து, அவர்களிடமிருந்து நல்லவர்களை காப்பாற்ற வேண்டியது ஒரு அரசின் பொறுப்பு... தகுந்த தண்டனை கொடுத்தும் மாறவில்லையெனில், மரண தண்டனையே சரி... அது ஒரு விவசாயி களையைக் களைந்து, பசுமையான பயிரைக் காப்பதற்குச் சமம்...

    தகுந்த தண்டனை சரி தான்... களைகள் முளைக்க ஆரம்பித்தவுடன் கண்டறிந்து வேரோடு எடுக்க வேண்டியது அவசியம் தான்... ஆனா ஒரு அரசாங்கமே களைகளாக மாறி விட்டால்...? மக்களுக்கு நல்லது செய்யலேன்னா எப்படி...? தொடர்ந்து மக்களை துன்புறுத்துற செயல்களை செய்றது, கொலையே தொழிலா செய்ற கொலைகாரனை விட கொடியது... அவர்களுக்கெல்லாம் தண்டனை என்ன...?

    ஒரு ஆட்சியாளனின் தொழில் என்னவென்றால், குற்றம் செய்து விட்டால் அது யாராக இருந்தாலும், அதற்கு சரியான தண்டனை வழங்குவது தான்... அதோடு, குற்றம் இல்லா நாட்டை உருவாக்கி விட்டால் ஆட்சியாளன் மீது குற்றமில்லை...

    யாராக இருந்தாலும்...? ஏம்பா எரிச்சலை கிளப்புறே... நீதிங்கிறது எல்லோருக்கும் சமமாயிருக்கா...? சரி அதை விடு... இப்போ நடக்குற தொழில் வேறே... பல வகையிலே பல விதத்திலே 'வரி'ங்கிற பெயரிலே(யும்), மக்களிடம் பணம் / பொருள் வசூல் செய்யும் தொழில்...! இது எப்படி இருக்கு தெரியுமா, மக்கள் போற வழியிலே, திருடன் கத்தியை காட்டி "எல்லா பணத்தையும் எடு"-ன்னு மிரட்டுற மாதிரி...!

    பதிவின் முடிவில் உள்ள கேள்வி... "உங்களுக்கு ஞாபகம் வருகிற அரசியல் நிகழ்வு என்ன...?" அதை விட்டுவிடுங்கள்... because நவதுவாரங்களையும் மூடிக் கொண்டு இருக்கும் வாசகர்களை விட்டுவிடுங்கள்... பிறகு அதை பற்றி பேசுகிறேன்...

    இந்த கருத்துரை உள்ள "highlight" செய்துள்ள கேள்விற்கு எங்கள் Blog- ன் பதில் என்ன...? அடுத்த வாரம் தங்களின் பதிலை ஆவலுடன் காண காத்திருக்கிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்க குறிப்பிட்டுருக்கின்ற உங்கள் பதிவை, தற்சமயம் சென்று வாசித்தேன்! வாவ்! என்ன அருமையான பதிவு! பிரமாதம்! அற்புதம்! உங்களை மாதிரி எழுதவோ, அல்லது நீங்கள் ஹைலைட் செய்துள்ள கேள்விகளுக்கு விடை அளிக்கவோ எனக்கு ஞானம் கிடையாது. நீங்கள் சித்தர்; நான் வெறும் ஜோக்கர் !!

      நீக்கு
    2. இந்த கதையை fb-ல் சொல்லலாம்... இது வலைத்தளம்... இதற்கென்று, கருத்துரை சொல்வதற்கு என்று ஒரு மாண்பு உள்ளது ஐயா...

      வருக... வாழ்க நலம்... இன்னும் பல மரியாதைகள், வணக்கங்கள் எல்லாம் வாட்ஸ்'அப்பு'ல் பலரை திருந்த வைத்தால், இங்கே தினமும்... சே...

      உங்களுக்கென்று வாட்ஸ்'அப்பு' உள்ளது... அங்கு சொல்வதெல்லாம் இங்கே மறுபடியுமா...?

      உங்களை சொல்லவில்லை... சிலருக்கு புரிந்தால் போதும்... அவர்களுக்கு சொல்வதெல்லாம் ஒன்றே ஒன்று : பல பதிவர்கள் சின்ன ஒரு கருத்துரைக்காக ஏங்கிக் கொண்டு இருக்கிறார்கள்...

      மீண்டும் வருவேன்...

      நன்றி...

      நீக்கு
    3. தி-த ... உங்க பாயின்டான "காலை வணக்கம்" சரியானதுதான். இருந்தாலும் இணையத்துல தளத்துக்கு வரும்போது "நலமா" என்று கேட்பது போன்ற முகமன்தான். வாட்சப்லயே இதைச் சொல்றதில்லை. ஆனால் தளத்துக்கு வந்துட்டேன் என்று சொல்வது மாதிரிதான். அப்புறம் எப்போ நேரம் கிடைக்கிறதோ அப்போ பின்னூட்டம் போடணும்.

      பெர்சனலா நான், மறுமொழி கிடைக்காத பின்னூட்டங்கள் எழுதுவதில்லை. அந்தமாதிரி தளங்களைப் படித்தாலும் பின்னூட்டம் அபூர்வமாகத்தான் போடுவேன்.

      நீக்கு
    4. ///பல பதிவர்கள் சின்ன ஒரு கருத்துரைக்காக ஏங்கிக் கொண்டு இருக்கிறார்கள்.../

      ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் மனதில தோன்றுவதை சொல்லிடோணும் என நினைச்சுக் களம் இறங்கிட்டேன்ன்.. ஆனா என்னை ஆராவது திட்டப்போறீங்க எனில் பிளீஸ்ஸ்ஸ்ஸ் கோபமாகத் திட்டிடாமல் சிரிச்சுச் சிரிச்சுத் திட்டுங்கோ ஹா ஹா ஹா:)).

      இந்த கொமெண்ட் பிரச்சனை என்னவெனில்.. நாம் பந்தைச் சுவரில எறிவதைப்போலதான்.. “நாம் எறிவதுதான் திரும்ப நமக்கு கிடைக்கும்”..

      அப்போ பலர் தனக்கு கொமெண்ட்ஸ் கிடைக்கல்லியே எனச் சொன்னால்.. அது அவர்கள்தான் எங்கேயோ தப்புச் செய்கிறார்கள்.. நாம் போய்க் கொமெண்ட்ஸ் போட்டால்தான் நமக்கு திரும்ப ஆட்கள் வருவார்கள்.

      மற்றையோரைப்பற்றி எனக்கு சொல்லும் உரிமை இல்லை, ஆனா அஞ்சுவை என்னைப் பற்றிச் சொல்கிறேன், நம்மிடம் வருவோரிடம் நாம் போகாமல் விட்டதில்லை, நம்மோடு கும்மி போட்டால் நாமும் ஓடிப்போய்க் கும்மி போடுகிறோம்.. இதை மீறி, சிலர் தாம் புளொக் எழுதாட்டிலும் நம்மிடம் வந்து போய்க்கொண்டிருக்கிறார்கள் , என்பக்கத்தில் சொன்னால்[பிரியசகி, சீராளன்.. இப்படி].. இவர்கள் வருடத்துக்கு ஒரு போஸ்ட் போடுவதே அபூர்வமாக இருக்கு. பழகிய நட்பென்பதால் மறக்காமல் வருகிறார்கள்.

      மற்றும்படி தெரியாதோரிடம் யாரும் போக மாட்டோம் தானே, சிலர் இருக்கிறார்கள், ஒரு தடவை வந்து சொறிஞ்சுபோட்டு, பின்பு ஒவ்வொரு போஸ்ட்டுக்கும் நாம் வரோணும் என எதிர்பார்க்கிறார்கள், ஆனா நம்மிடம் திரும்ப வர மாட்டினம்.

      அவர்கள் வராமல் எப்பவும் நாமே போய்க் கொண்டிருக்கோணும் எனச் சொல்றீங்களோ.. வயதானோருக்கு மட்டும் நான் அப்படி நடக்கிறேன், முன்பு புலவர் ஐயாவுக்கும் பதிலை எதிர்பார்க்காமல் போவேன், இப்போ காமாட்சி அம்மாவுக்கும் அப்படித்தான் செய்கிறேன்/றோம்.

      மற்றும் படி சிலபேரிடம் போவதில்லை ஏனெனில், சிலபேர், செலக்ட் பண்ணிச் சிலரின் புளொக்குக்கு மட்டும் போய்விட்டு, எல்லோரும் தம்மிடம் வரொணும் என எதிர்பார்க்கிறார்கள்.. அதுவும் நமக்கு மனவருத்தத்தைக் கொடுக்குமெல்லோ.. எங்குமே அவர்கள் போகவில்லை எனினும் பறவாயில்லை ஓரளவு மனம் ஏற்றுக் கொள்ளும், பழகியதுக்க்காகப் போவோம்.

      எனக்கு கொமெண்ட்ஸ் போட நேரமில்லை, எனக்கு எங்கும் போக நேரமில்லை என மூக்கால அழுதுகொண்டு, தன்பக்கம் மட்டும் ஒழுங்கா போஸ்ட் போட்டு, தன்னிடம் வருகிறார்கள் இல்லையே என சொல்வொரும் உண்டு.. கடந்த பத்து வருட புளொக் அனுபவத்தை வைச்சே இதனை எல்லாம் சொல்கிறேன்.

      இதைக்கூட ஏன் சொல்கிறேன் எனில், இதைப் படிச்ச பின்பாவது, புளொக் எழுதுவோர், ஏனையோரிடமும் போய்க் கொமெண்ட்ஸ் போட்டால், அவர்களுக்கும் நிறையப்பேர் வருவார்கள் என சொல்வதற்காகவே, மற்றும்படி இதில ஒரு வில்வித்தையும் இல்லை:).

      நான் எதுக்கும் ரெடியா தேம்ஸ் அக்ரையில நிக்கபோறேன்:)) ஆராவது கலைச்சால் குதிச்சிடுவேன் டமார் என:).

      நீக்கு
    5. ஹலோ மியாவ் தேம்ஸ் கரையிலா இருக்கீங்க :) இருங்க வரேன் தள்ளி விடத்தான் :)

      நீக்கு
    6. பாவமுங்க தீர்க்கதரிசி - அவங்களை அப்படி எல்லாம் தள்ளிவிட்டுடாதீங்க!

      நீக்கு
    7. //பாவமுங்க தீர்க்கதரிசி - அவங்களை அப்படி எல்லாம் தள்ளிவிட்டுடாதீங்க!//

      ஆமா ஆமா மீ பாவம்ம்ம்ம்:) மீ ஒரு அப்பாஆஆஆஆஆவி:)) ஹா ஹா ஹா:))

      நீக்கு
  23. ஆனால் எனக்கு ஒரு விஷயம் மட்டும் புரியவே புரியாது! பெரும்பாலான பெண்கள் கணவனிடம் எல்லாமும் வாங்கி அனுபவித்திருப்பார்கள்/ அனுபவிப்பார்கள். கேட்டு வாங்கிக் கொள்வார்கள். ஆனால் தங்கள் பிள்ளை சம்பாதிக்க ஆரம்பித்த பின்னர் கணவனிடம் ஓர் அலட்சியம் காட்டுவார்கள்/ காட்டுகின்றனர்/கண்கூடாகப் பார்த்திருக்கேன். அது ஏன்?

    அதே பிள்ளை கல்யாணம் ஆனதும் மாறி விடுவதையும் பெண்கள் கண்கூடாகக் கண்டிருப்பார்கள்.ஆனாலும் பிள்ளையைக் குற்றம் சொல்லாமல் வந்த மருமகளைக் குற்றம் சொல்லுவது ஏன்? இதையே தங்கள் வாழ்க்கையில் தங்கள் கல்யாணம் ஆன சமயம் பார்த்திருப்பார்களே! அப்புறமும் ஏன் இப்படி நடந்து கொள்ள வேண்டும்?

    அப்பாடா! தலையைச் சுற்ற வைக்கும் கேள்விகளாய்க் கேட்டாச்சு! கௌதமன் இனிமேல் கேள்வி கேளுங்கனு சொல்ல மாட்டேன் என து.கா. து.கா என ஓடப் போகிறார். :))))))))))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அய்யகோ ---- இதெல்லாம் கேள்விங்களா? நீங்க ஏதோ வியாசம் எழுதியிருக்கீங்க என்று நினைத்தேன்.

      நீக்கு
    2. என்னுடைய சாதாரண கேள்விற்கே பதில் :-

      ஞே!

      ம்... ஸ்ரீராம் சார் எப்படியோ...?!

      நீக்கு
    3. கீசா மேடம். உங்க கேள்விலயே பதில் இருக்கு. ஆண்கள், குடும்பத்தில் பிறர் தங்களைக் குற்றம் சொல்ல முடியாமல் வாழ்கிறார்கள். பெண்கள் ஒவ்வொரு வேடத்திலும் (குழந்தை, காதலி, மனைவி, மாமியார்) நியாயமில்லாமல், பிறர் குறை சொல்லும்படி நடக்கிறார்கள் என்று சொல்றீங்க.

      உங்களை மாதிரி பெரியவங்க சொன்னால் அது பெருமாள் சொன்ன மாதிரி. ஏற்றுக்கொள்கிறேன்.

      நீக்கு
    4. @ நெ.தமிழன்
      ///பெண்கள் ஒவ்வொரு வேடத்திலும் (குழந்தை, காதலி, மனைவி, மாமியார்) நியாயமில்லாமல், பிறர் குறை சொல்லும்படி நடக்கிறார்கள் என்று சொல்றீங்க.

      உங்களை மாதிரி பெரியவங்க சொன்னால் அது பெருமாள் சொன்ன மாதிரி. ஏற்றுக்கொள்கிறேன்.///

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) என்னா ஸ்பீட்டா ஓடிவந்து ஜந்தொசபடுறார்ர் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா.. பெண்கள் கெட்ட பேர் எடுப்பதற்குக் காரணமே ஆண்கள்தான்:) ஏன் தெரியுமோ.. தாம் பேசாமல் இருந்துகொண்டு மனைவியைத் தூண்டி விடுவது:).. பெண்கள்தான் இந்த விசயத்தில வீக் ஆச்சே.. அதாவது கொஞ்சம் உசுப்பேத்தினால் போதும்.. குடுத்த காசுக்கு மேலால நடிச்சிட்டு வரும் ஆட்களாச்சே:)) ஹா ஹா ஹா:)).. இதனால தான் கெட்டபெயர்:))

      நீக்கு
  24. எதற்கு அடுத்தவாரம்? ஏன், இந்தவாரமே KG பதில் சொல்ல மாட்டாரா DD? ;)))

    இந்த கலாட்டாவில் திங்களன்று பிடி பருப்பு கொழக்கட்டை , செவ்வாயன்று சிறுகதை, புதனன்று கேள்விகள் என்று நெல்லைத்தமிழன் ஹாட்ரிக் அடித்திருக்கிறாரே, அதை மறந்துவிடலாமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதானே...! நாட்டில் என்ன நடந்தாலும்... எத்தகைய கொடுமை நடந்தாலும், எங்கள் Blog-ல் schedule செய்தபடி பதிவுகள் தொடர்ந்தே தீரும்...

      நீக்கு
    2. பலரும் இணையத்தில் பங்கெடுப்பதே தங்கள் மனதை ஒரு நிலைப்படுத்திக் கொள்ளவும் அவரவர் கவலைகளை மறக்கவும் தான். எல்லோர் வாழ்க்கையிலும் அவரவருக்கு என உரிய பிரச்னைகள் உள்ளன. நம் யாருக்கும் இன்னொருவர் வாழ்க்கையின் பிரச்னைகளின் வீரியம் தெரியாது! என்றாலும் இம்மாதிரியான விளையாட்டுத் தனமான கேலிப் பேச்சுக்களால் இன்னொருவர் மனதை ஒத்தடம் கொடுக்கிறோம். சற்று நேரத்திற்காவது அவரவர் பிரச்னைகளை மறந்து சிரித்துப் பேச ஒரு வாய்ப்புக் கிட்டுகிறது. உலகின் ஒவ்வொரு மூலையிலும் விரும்பத் தகாத சம்பவங்கள் நடந்து கொண்டே இருக்கின்றன. அதே போல் நம் நாட்டிலும் நடக்கின்றன. ஊடகங்கள் மூலமே இவற்றை அறிய நேர்கிறது. இவற்றிற்காக நாம் வருந்துவதையும் கவலைப்படுவதையும் தவிர்த்து வேறே என்ன செய்ய முடியும்? இத்தகைய சம்பவங்களுக்கு நாம் எவ்வகையிலும் காரணம் இல்லையே! நீதி தாமதம் ஆகிறது என்பதையும் நீங்களே சொல்லி விட்டீர்கள்! பல வருடங்களாக நீதி தாமதம் ஆகிக் கொண்டு தானே இருந்து வருகிறது! எந்தப் பிரச்னையில் உடனடித் தீர்வு அல்லது தீர்ப்பு வந்திருக்கிறது? சாதாரணக் குடிமக்கள் நாம். நம் கைகளில் இருப்பது ஓட்டு என்னும் ஆயுதம் மட்டுமே! அதைத் தான் தக்கபடி பயன்படுத்த வேண்டும். மற்றபடி அரசியல் நிகழ்வுகளுக்கெல்லாம் நாம் என்ன செய்ய முடியும்? அல்லது சொல்ல முடியும்? நாட்டின் கொடுமைகள் எங்கள் ப்ளாகின் பதிவுகளின் போக்கு மாறினால் மாறி விடுமா?

      தப்பாய் நினைக்காதீங்க டிடி. உங்க மனம் பொங்கி இருக்கிறது. வருத்தத்திலும் ஆற்றாமையிலும். ஆனாலும் நம்மால் இயன்றதைத் தானே நாம் செய்ய முடியும். கொடுமைகள் இருக்கத் தான் செய்கின்றன! எதை நிறுத்தி இருக்கோம்! இங்கே வருவதே நம் மனத்தின் காயங்களை வெளிக்காட்டிக்கொள்ளாமல் இயன்றவரை நாமும் சந்தோஷமாகப் பேசிப் பிறரையும் சந்தோஷப் படுத்துவதற்கே!

      நீக்கு
    3. உங்கள் ஆதங்கம் புரிகிறது. அதற்கு என்ன செய்ய முடியுமோ நம்மால் என்ன இயலுமோ அதைத் தான் செய்ய முடியும்! பொள்ளாச்சி போன்ற கொடுமைகளுக்கு நாம் என்ன செய்ய முடியும்? விட்டில் பூச்சிகள் போலப் பெண்கள் விழுகின்றனர். மக்களின் மனமாற்றத்துக்குத் தான் முயற்சி செய்ய வேண்டும். ஒழுக்கமும், நற்குணமும் கொண்டுப் பிள்ளைகளை வளர்க்கப் பெற்றோரை வற்புறுத்தலாம். நல்லதொரு சமூகம், சமுதாயம் உருவாகப் பிரார்த்திக்கலாம்.

      நீக்கு
    4. கிருஷ்ணமூர்த்தி சார்.... பதினாறு வயதினிலே ரஜினி வசனம் ஞாபகம் வருது. இன்று நானும் கேள்வி கேட்டிருக்கேன்.

      நீக்கு
    5. சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள். பள்ளியிலோ அல்லது கல்லூரியிலோ பயிலும் பெண்கள், அவரவர்களின் பெற்றோரின் சொல்லைக் கேட்டு அதன்படி நடந்தாலே போதும் - பிரச்னைகள் வராமல் தடுத்துக்கொள்ளலாம்.

      நீக்கு
    6. நன்றி அம்மா...

      // எங்கள் ப்ளாகின் பதிவுகளின் போக்கு மாறினால் மாறி விடுமா? //

      அப்படியே தொடரட்டும்... நாடு நாசமா(க்)கி போகட்டும்...

      சமூக அக்கறை என்பது சுத்தமாக இங்கு கிடையாதா...?

      வருங்காலத்தில் தமிழகமே பற்றிக் எரிந்து கொண்டு இருக்கிறது... ஆனால்..

      // பள்ளியிலோ அல்லது கல்லூரியிலோ பயிலும் பெண்கள், அவரவர்களின் பெற்றோரின் சொல்லைக் கேட்டு அதன்படி நடந்தாலே போதும் - பிரச்னைகள் வராமல் தடுத்துக்கொள்ளலாம். //

      இப்படி ஒரு சால்ஜாப்பு வேறு... இதற்கு என்ன பதிவுகள் இங்கு உண்டு...? தினமும் ஒரு பதிவு அவ்வளவே... புரிந்து கொண்டால் நன்றி அம்மா...

      நீக்கு
    7. பதிவுகள் போடுவதால் பிரச்னைகள் தீருமா என்ன? நேற்றுப் பொள்ளாச்சி நிகழ்வு பற்றிய பாலிமர் செய்திகளில் காவல் துறை அதிகாரியே செய்த தவறைச் சுட்டிக்காட்டினார்கள். நீதிமன்றமும் சொல்லி இருக்கிறது. இத்தனைக்கும் நிர்பயா வழக்குக்குப் பின்னர் கடுமையான தண்டனைச் சட்டம் அமலுக்கு வந்திருக்கிறது. பாதிக்கப்பட்ட பெண்ணின் விபரங்கள் வெளியே சொல்லக் கூடாது என்று சட்டம்! ஆனால் காவல் துறை அதிகாரி அந்தப் பெண்ணின் பெயரோடு சேர்த்துப் பெற்றோர் பெயர், மற்ற விபரங்கள் எல்லாமும் சொல்லி விட்டுச் சர்வ சாதாரணமாக மன்னிப்புனு சொல்லிட்டுப் போயிட்டார்! இதன் தாக்கம் அவருக்குத் தெரியுமா? சட்டத்தைக் காவல் துறை அதிகாரியே மீறினால்! என்னசெய்ய முடியும்! இப்படி ஒவ்வொன்றிலும் பல ஓட்டைகள் இருக்கின்றன.இங்கேமற்றவர் மேல் பழி சுமத்திட்டுத் தப்பிக்கத் தான் பார்க்கின்றனர். யாரும் பொறுப்பு ஏற்பதில்லை.

      நீக்கு
  25. ஒரு வாரம் ஒரேவொரு வாரம் எங்கள்ஸ் உள்ள அட்மின்கள் பதிவுகள் வருமா...? இது அடுத்த வாரத்திற்கான கேள்வி...!

    நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திங்கள், செவ்வாய் தவிர, மீதி எல்லா நாட்களிலும் எங்கள் பதிவுகள்தான். இந்த எல்லா நாட்களிலும் எங்கள் பங்களிப்பு இல்லாத பதிவுகள் இல்லை. முன்பு 'திங்க'கிழமைப் பதிவுகள் கூட நாங்கள்தான் எழுதிக்கொண்டிருந்தோம். எங்களை விட சுவையான சமையல் பகிர ஆட்கள் இருக்கிறார்கள் என்று தெரிந்தவுடன் பின் சீட்டுக்கு சென்றுவிட்டோம். எங்களைப் பொறுத்தவரையில், வாசகர்கள் பங்கேற்பு என்பது நாங்கள் மிகவும் விரும்பும் சமாச்சாரம். அதனால்தான் அவர்களின் சமையல் குறிப்புகள், கதைகள், கேள்விகளுக்கு முக்கியத்துவம் தருகின்றோம். வாரம் முழுவதும் நாங்களே எழுதுவது என்பது ஒரு வகையில் monotonous ஆகிவிடும் என்பதால் அதைத் தவிர்க்கிறோம். மேலும், நாங்கள் அரசியல், மத சம்பந்தப்பட்ட இடுகைகளை இந்தத் தளத்தில் தவிர்க்கிறோம். எல்லோரும் வாழ்க, எல்லோரும் இன்புற்றிக்க நினைப்பதுவேயல்லாமல் ....... வேறொன்றறியோம் பராபரமே!

      நீக்கு
    2. வலைச்சரம் போல் ஆகிவிடாமல் இருந்தால் நல்லது... அதுவே என் விருப்பம்...

      நீக்கு
    3. வலைச்சரம் போல நிச்சயம் நாங்கள் ஆகமாட்டோம். கடந்தகால குமுதம் பத்திரிக்கை வாரம் ஒரு சிறப்பாசிரியர் என்று வைத்து, பல துறைகளிலும் இருந்த பிரபலங்களை விட்டு இதழ்கள் தயாரித்தார்கள். அந்தந்த துறையில் பிரபலமாக இருந்தவர்களின் கருத்துகளை அறிய ஒரு வாய்ப்பாக வாசகர்களுக்கு அமைந்தது. வலைச்சரமும் அந்த யுக்தியை மேற்கொண்டார்கள். ஆனால், வலைச்சரம் போட்ட நிபந்தனைகள் - பங்கேற்ற ஆசிரியர்களின் சுதந்திரத்தை பாதித்தது. அதனால்தான் போகப்போக வலைச்சரம் stale ஆகிவிட்டது என்று நினைக்கின்றேன். எங்களைப் பொறுத்தவரை, சகபதிவர்களின் பங்கேற்பு, repetition இல்லாத சுவாரஸ்யப் பரிமாற்றங்கள் இவைகளைத்தான் நாங்கள் முன் நிறுத்துகிறோம். இதை நம் வாசகர்கள் உணர்ந்திருக்கிறார்கள் என்றே நம்புகிறோம்.

      நீக்கு
    4. யார் வாசகர்கள்...? (4 பேர்கள் தவிர)

      அழிவின் விளிம்பில் இன்றைய வலைத்தளங்கள்...

      4 ஆண்டுகளுக்கு முன் புதுக்கோட்டையில் 40 வலைத்தளங்கள் உருவாக்கின... அதில் எத்தனை என்பதாவது தங்களுக்கு தெரியுமா...?

      [தங்களுக்கு என்பது "தங்களின் அட்மின்களுக்கு" சே... இந்த சமயம் எச்ச ராஜா வேறு ஞாபகம் வருகிறார்... கேவலம் சே...]

      அதில் எத்தனை வலைத்தளங்களில் எங்கள் blog கருத்துரை உள்ளது...?

      யோசியுங்கள்... யோசித்தால் விடை கிடைக்கும்... (லாம்)

      நீக்கு
    5. என்னோடு வலைத்தளம் ஆரம்பித்த பலர் இன்று எழுதுவதில்லை. எனக்கு முன்னால் ஆரம்பித்தவர்களில் துளசி கோபால் தவிர்த்து மற்ற யாரும் எழுதுவதில்லை. கம்யூனிஸ்ட் தங்கமணி, அம்மாஞ்சி அம்பி, கைப்புள்ள, நாகைசிவா,மு.கார்த்திக், ச்யாம், பொற்கொடி, வேதா, தி.ரா.ச. கோவை எழுத்தாளர் தமிழ்ப்பயணி சிவா, விவசாயி என அழைக்கப்பட்ட இளவஞ்சி, நான் ஆசான் என அழைக்கும் ஜீவ்ஸ், கல்வெட்டு என்ற பலூன் மாமா, சந்திரமௌலி கணபதி என்ற மதுரையம்பதி, பாசமலர், மதுரையைச் சேர்ந்த ராம், வடுவூர் குமார், சீனா ஐயா, சிவமுருகன், குமரன் மல்லி இப்படிப்பலர்! இப்போது எழுதுவது இல்லை. சிலர் மட்டும் முகநூலில் இருக்கின்றனர். இது அவரவருக்கு இருக்கும் வேலைகளைப் பொறுத்து என்பது என் கணிப்பு! ஆகவே வலைப்பதிவர்கள் குறைய யாரையும் காரணம் சொல்ல முடியாது! அவரவர் சொந்த விருப்பு, வெறுப்பு மற்றும் வேலைப்பளு ஆகியவற்றைப்பொறுத்து எழுதுகின்றனர்.அல்லது விட்டு விடுகின்றனர். திருமணம் ஆனதுமே வலையை விட்டு வெளியேறிய இளைஞர்கள் பலர் கடந்த பத்தாண்டுகளில் உண்டு! அதோடு எல்லோராலும் எல்லா வலைத்தளங்களுக்கும் சென்று கருத்திட முடியாது! நான் தொடர்ந்து வருவது இங்கே தான் என்பதை ஒத்துக்கொள்கிறேன் .ஏனெனில் இங்குள்ள சைட் பார் மூலம் மற்றவர்கள் எழுதும் புதிய பதிவுகள் தெரிய வரும்.நேரமிருக்கும்போது சென்று வரலாம். அப்படி வரும்போது எனக்கு நேரம் இருக்கையில் காலையிலேயே இங்கேயும் கருத்துப் பதிந்து மற்றவர்கள் வலைத்தளங்களுக்கும் செல்லுவேன். இது என்னோட நேரத்தைப் பொறுத்து அமையும். ஒரு காலத்தில் அதிரா, அஞ்சு ஆகியோரின் வலைப்பக்கமே சென்றதில்லை.இங்கே வந்த பின்னர் தான் பழக்கம் ஆகிச் சென்று வருகிறேன்.ஆகவேஇங்கே வருவதால் பல புதிய பதிவர்களையும் நட்புக்களையும் உருவாக்கிக் கொண்டேன் என்பதே உண்மை!

      நீக்கு
  26. வணக்கம் சகோதரரே

    இந்த வார கேள்வி பதில்கள் நன்றாக உள்ளது. கேள்விகளை திறம்பட தொகுக்கும் அனைவருக்கும், அதற்கான பொருத்தமான சுவையான பதில்களை தரும் எ.பி ஆசிரியர்களுக்கும் மனமுவந்த பாராட்டுக்களுடன் நன்றிகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  27. // மனைவிக்கு கணவர் நெருக்கம் குழந்தைகள் முக்கியம். குழந்தைகள் வளர்ச்சி அம்மா பொறுப்பு. மனைவியின் மகிழ்ச்சிக்கு கணவன் பொறுப்பு.//

    எனக்கு இந்தப் பதில் ரொம்பப் பிடிச்சிருக்கு.. இதையேதான் நானும் சொல்வேன், ஒரு கணவர், தன் மனைவியை மகிழ்ச்சியாக வச்சிருந்தால் போதும் வேறு எந்த உதவியும் செய்யத்தெவையில்லை[அதுக்காக ஓடிப்போய் வேலையை ரிசைன் பண்ணிடாதீங்கோ ஆரும் ஹா ஹா ஹா கர்ர்ர்:) அதை நான் சொல்லவில்லை:))].. வீட்டில் எந்த உதவியும் செய்யாவிட்டாலும், அமனிவியை மகிழ்ச்சியாக வச்சிருந்தால் போதும் .. மனைவி வீட்டை குழந்தைகளை சொந்த பந்தங்களை எல்லாம்.. மிகவும் ஹப்பியாக வச்சிருப்பா.. மொத்தத்தில க்டும்ப மகிழ்ச்சி என்பது கணவனின் கையிலேயே இருக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரி... அப்படியே நீங்க சொல்றதுபோலவே செய்யறேன் ஆன்டீ. அப்புறம் எங்க மகிழ்ச்சிக்கு என்ன உத்திரவாதம்?

      நீக்கு
    2. //நெல்லைத் தமிழன்13 மார்ச், 2019 ’அன்று’ பிற்பகல் 7:58
      சரி... அப்படியே நீங்க சொல்றதுபோலவே செய்யறேன் ஆன்டீ. அப்புறம் எங்க மகிழ்ச்சிக்கு என்ன உத்திரவாதம்?///

      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. அதைக் கல்யாணம் பண்ண முன்பெல்லோ ஓசிச்சிருக்கோணும்:))..

      அதுசரி, அதிராவுக்கு கொமெண்ட் எழுதும்போது அஞ்சுவை ஏன் நினைச்சீங்க?:)).. இல்ல ஆன்ரி எனக் கூப்பிட்டீங்களே அஞ்சுவை:) அதுக்குச் சொன்னேன்:))...

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் கொழுக்கட்டைக்கு ஊறப்போட்ட அரிசியையும் பருப்பையும் இப்பவே எடுத்து வெயிலில காய விடப்போறேன்:).. நோ கொலு:)க்கட்டை:)) பூஸோ கொக்கோ:)) ஹா ஹா ஹா:)

      நீக்கு
    3. அதிரா.. வெயில்ல காயப்போட்டீங்களா? வெயிலா? அங்கயா? இதுவும் வியாழன் பதிவு மாதிரி கனவா? புதன்லயே கனவு வந்துடுச்சூ

      நீக்கு
  28. /# மனைவிக்கு கணவர் நெருக்கம் குழந்தைகள் முக்கியம். குழந்தைகள் வளர்ச்சி அம்மா பொறுப்பு. மனைவியின் மகிழ்ச்சிக்கு கணவன் பொறுப்பு.//
    நல்ல பதில்.

    பதிலளிநீக்கு
  29. // உங்களால் இந்த சவாலை ஏற்று, நிபந்தனைகளுக்குட்பட்டு, ஃப்யூஸ் ஆன பல்பை குறைந்த நேரத்தில் வெளியே கொண்டுவர முடியுமா? என்ன யுக்திகளைக் கையாள்வீர்கள்? What is your step by step procedure?//
    என்னது சவாலா?? அதுவும் கரன்ட் விஷயத்திலயா ?? நோ நான் இந்த மாதிரி விளையாட்டுக்கெல்லாம் போகவே மாட்டேன் .குறைந்த நேரத்தில் நான் வேணும்னா அந்த ரூமைவிட்டு வெளியே ஓடிடுவேன் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அட! பல்பு மாற்றக் கூடத் தெரியாதா!

      நீக்கு
    2. உண்மையா நான் ஊரில் இருந்த வரையிலும் பிறகு இப்போ வெளிநாட்டிலும் இந்த எலெக்ட்ரிக் விஷயங்களில் பெரிதும் கை வைப்பதில்லை :)
      இங்கே fuse போவதுமில்லை :) பல்ப் மாற்றியது கிடையவே கிடையாது

      நீக்கு
    3. இந்த விசயத்தில் என் கணவரை விட மீ தான் முன்னிலையில் நிற்பேன், என்னால முடியாதபோதுதான் அவரைச் செய்யச் சொல்வேன்.. முந்தின கொம்பியூட்டர் கழட்டி தூசு தட்டிப் போடுவது, பழைய டெக்கைக் கழட்டி ரிப்பெயா பண்ணிப்பார்ப்பது.. பல்ப்புக்கள் மாத்துவது.. இதிலெல்லாம் மீ யூப்பரா பண்ணுவேன்னாக்கும் ஆனா இப்போ கெள அண்ணனின் பல்ப் மாத்துவதுக்குள் தலையை விடவில்லை.. அதுக்கு மேல நிறைய வேர்க் இருக்குதுதாக்கும் இங்கு இன்று எனக்கு:)).. ஸ்ஸ்ஸ்ஸ் என்னா ஒரு எஸ்...:)

      நீக்கு
    4. ஓஹோ! இப்படிக் கூட சொல்லி சமாளிக்கலாமா !

      நீக்கு
  30. //6. கடவுள், உங்க அப்பாவையோ இல்லை அம்மாவையோ ஒரு வாரம் உயிர்ப்பித்து உங்க வீட்டுக்கு அனுப்பறேன். கெடுவிற்குப்பின் அவர் மறைந்துடுவார் என்று சொன்னா யாரை அனுப்பச் சொல்லுவீர்கள்? ஏன்?//

    அப்பாவைதான் கேட்பேன் காரணம் அப்பா மறைந்து 10 வருஷம் அம்மா மறைந்து 7 வருஷம்தான்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதே! யார் மறைந்து பல வருடங்கள் ஆயிற்றோ அவர்கள் நம் முன்னேற்றத்தைக் காண வேண்டும் என்றுதான் நினைப்போம்.

      நீக்கு
    2. நான் இந்தக் கேள்வியைக் கேட்டதற்குக் காரணம் இருக்கு

      நீக்கு
    3. வரேன் கொஞ்சம் நேரத்தில்

      நீக்கு
    4. நான் அப்பாவை சொன்னதுக்கு ரீஸன் கொஞ்சம் கீதா ரெங்கன் பதில்தான் .
      எங்க மகள் பாடுவதை அவர் ரெக்கார்ட் செஞ்சி அனுப்ப சொன்னார் அது நான் செய்யலை .இப்போ ஒரு வாரத்தில் அவரை உக்கரவச்சி மகள் பாடி வயலினும் வாசிக்கணும் அதோட அவர் செய்யும் சில உணவுகளை நான் எக்காலமும் தொட்டதில்லை அவரை செய்ய வைச்சி சாப்பிடணும் இப்படி நிறைய இருக்கு எல்லாம் கில்ட்டி feelings தான் நிறைய சாரி கேக்கணும் .
      ஆனா ஒன் வீக்கில் மூன்றரை நாள் அப்பா அம்மா இருவருக்கும் கொடுத்தாலும் ஓகேதான்

      நீக்கு
  31. 1, free will மற்றும் தேர்வு /தெரிவு செய்தல் இதை மனிதர்கள் தவறான வழியில் பயன்படுத்துகிறார்களா ?

    2, தார்மீக அமைப்பு அறநெறிகள் இவற்றை குறித்த பாடங்கள் பள்ளிகளில் கட்டாயமாக்க வேண்டுமா ?

    3, நம்முடைய ஒவ்வொரு செயலையும் கட்டுப்படுத்துவது எது ?
    ஏற்கனவே எப்பவோ வாங்கிய அடியா இல்லைன்னா நமது உள்ளுணர்வுகளா ?

    4, நாம் நினைப்பதையெல்லாம் செய்வதுதான் சுதந்திரமா ?

    5, மட்டற்ற எல்லையில்லா மகிழ்ச்சி அடைதல் என்று சொல்வது ஏன் மனிதருக்கு மனிதர் வேறுபடுது ?

    6, இந்த பரந்த அகண்ட அறிவுக்கும் ஆழமான அறிவுக்கும் என்ன வித்யாசம்னு ? எக்சாம்பிளோட சொல்லுங்க ?

    7, சேவியர் சிப்லிங்ஸ் // savior siblings மருத்துவ முறை நம் நாட்டில் நடைமுறைக்கு வந்தாச்சா ? இதைப்பற்றி உங்கள் கருது என்ன ?

    8, பொறாமை குணம் நெகட்டிவா இல்லை பாஸிட்டிவா ? பொறாமை மனுஷ இயல்பை குணத்தை மேம்படுத்துமா இல்லைன்னா கவிழ்த்துப்போடுமா ?

    9, பிறர் நலம் பேணுதல் பொதுநலம் காத்தல் இது நூற்றுக்குநூறு நடைமுறை வாழ்க்கையில் பொருந்தி வருமா ?


    10, எது ரொம்ப சுலபம் ? ஒருவரை சந்தோஷப்படுத்துவதா ? அல்லது ஒரே வார்த்தையில் அவரை சுருண்டு விழ வைப்பதா ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா ஏஞ்சல் back to normalcy! Very good. Our appreciations!

      நீக்கு
    2. ஹாஹா :) நன்றி கௌதமன் சார் :)

      நீக்கு
    3. ஒரு மாறுதலுக்காக இன்று வாசகர் கேள்விக்கு வாசகர் பதிலாக இருந்துவிட்டுப் போகட்டுமே! நான் ஆரம்பித்து வைக்கட்டுமா?

      1, free will மற்றும் தேர்வு /தெரிவு செய்தல் இதை மனிதர்கள் தவறான வழியில் பயன்படுத்துகிறார்களா ?

      முதலில் இந்த free will என்பதென்ன? இதில் தெளிவு வந்தால் இந்தக் கேள்விக்கே அவசியம் இருந்திருக்காது.



      2, தார்மீக அமைப்பு அறநெறிகள் இவற்றை குறித்த பாடங்கள் பள்ளிகளில் கட்டாயமாக்க வேண்டுமா ?



      கல்வி என்பதே சகமனிதர்களுடன் இயைந்து வாழ்வதற்கான பயிற்சிதான் என்ற கருத்தில் உடன்பாடு இருந்தால் பள்ளிக்கல்வியில் கட்டாயமாகச் சேர்ப்பதில் தவறொன்றுமில்லை.



      3, நம்முடைய ஒவ்வொரு செயலையும் கட்டுப்படுத்துவது எது ? ஏற்கனவே எப்பவோ வாங்கிய அடியா இல்லைன்னா நமது உள்ளுணர்வுகளா ?



      உள்ளுணர்வு என்பதே முன் அனுபவங்களின் தொகுப்புதானே! செயல்களைக் கட்டுப்படுத்துவது நீங்கள் சொன்ன இரண்டுமில்லை. தோற்று விடுவோமோ/ கேலிக்குள்ளாவோமோ என்கிற பயம் தான் காரணம்



      4, நாம் நினைப்பதையெல்லாம் செய்வதுதான் சுதந்திரமா ?



      இல்லை. செய்வதற்கு வாய்ப்பிருந்தும் ஒரு எல்லை மீறாமல் இருப்பதே சுதந்திரம். சுதந்திரம் என்பது கட்டற்றதல்ல, சில கடமைகளோடு வருவது என்று AG Gardiner, On the Rule of the Road கட்டுரையில் சொல்கிறார்.


      5, மட்டற்ற எல்லையில்லா மகிழ்ச்சி அடைதல் என்று சொல்வது ஏன் மனிதருக்கு மனிதர் வேறுபடுது ?



      அந்த மட்டு என்கிற limitation ஒவ்வொரு மனிதருக்கும் வேறுவேறாக இருப்பதால்!


      6, இந்த பரந்த அகண்ட அறிவுக்கும் ஆழமான அறிவுக்கும் என்ன வித்யாசம்னு ? எக்சாம்பிளோட சொல்லுங்க ?



      நம்முடைய அறிவுக்கும் நம்மைப் படைத்தாளும் பரம்பொருளுடைய அறிவுக்கும் உள்ள வித்தியாசம் தான்!



      7, சேவியர் சிப்லிங்ஸ் // savior siblings மருத்துவ முறை நம் நாட்டில் நடைமுறைக்கு வந்தாச்சா ? இதைப்பற்றி உங்கள் கருத்து என்ன ?



      இன்னும் இங்கு வரவில்லை. https://www.huffingtonpost.com/maura-dickey/who-will-save-the-savior-_b_7276688.html இங்கே இதைப்பற்றியவிவரம், கேள்விகள் இருக்கின்றன. மருத்துவ முறைகளில் புதிய சிந்தனை வரவுகள் இதுமாதிரி வந்துகொண்டே தான் இருக்கும் என்பதற்குமேல் வேறு கருத்து இல்லை.


      8, பொறாமை குணம் நெகட்டிவா இல்லை பாஸிட்டிவா ? பொறாமை மனுஷ இயல்பை குணத்தை மேம்படுத்துமா இல்லைன்னா கவிழ்த்துப்போடுமா ?



      பொறாமை ஒரு எல்லைக்குட்பட்டதாக இருக்குமானால் அது ஒரு ஆரோக்கியமான போட்டிக்கு வழிவகுக்கும். எதுவானாலும் அளவுக்கு மிஞ்சினால் நஞ்சுதான், இல்லையா!


      9, பிறர் நலம் பேணுதல் பொதுநலம் காத்தல் இது நூற்றுக்குநூறு நடைமுறை வாழ்க்கையில் பொருந்தி வருமா ?



      முதலில் பொதுநலத்தில் கலந்த சுயநலவாதிகளாக இருக்க முயல்வோம்! அப்புறம் உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என்று தானே வந்து சேரும்.




      10, எது ரொம்ப சுலபம் ? ஒருவரை சந்தோஷப் படுத்துவதா ? அல்லது ஒரே வார்த்தையில் அவரை சுருண்டு விழ வைப்பதா ?



      சந்தோஷமோ சுருண்டுவிடுவதோ ஒருவருடைய மனப்பக்குவத்தில் தான் இருக்கிறதே தவிர எதிராளியிடம் இல்லை.

      நீக்கு
    4. மிக்க நன்றி :) இந்த சேவியர் சிப்லிங்ஸ் எனது மகள் தோழிக்கு சிக்கிள் செல் வியதயை குணப்படுத்த இன்னொரு குழந்தை பெற மருத்துவர்கள் கூறினார்கள் இறுதியில் அந்த சேவியர் சிபிலிங்கான குட்டி புது வரவுக்கும் அதே சிக்கில் செல் நோய் .இதனால் அக்குடும்பம் பலவிதத்தில் கஷ்டப்படறாங்க .ப்ரோஸ் கொன்ஸ் எல்லாத்திலும் இருக்கு இவங்க விஷயத்தில் எதிர்பதம்

      நீக்கு
    5. என் பொண்ணு அடிக்கடி இந்த FREE வில் அப்புறம் மேக்கிங் CHOICES பத்தி பேசுவா :) அது இங்கே கேட்டுட்டேன்

      நீக்கு
    6. எங்கள் பதில்கள் அடுத்த புதன் அன்று சொல்வோம்.

      நீக்கு
    7. வெயிட்டிங் .என்னுடைய பதில்கள் கருத்துக்கள் யார்யாரோட ஒத்து போகுதுன்னு அறிய ஆவல் :)

      நீக்கு
    8. @அஞ்சு
      //3, நம்முடைய ஒவ்வொரு செயலையும் கட்டுப்படுத்துவது எது ?
      ஏற்கனவே எப்பவோ வாங்கிய அடியா இல்லைன்னா நமது உள்ளுணர்வுகளா ?//

      ஹா ஹா ஹா இதிலென்ன சந்தேகம்.. அடி உதவுவதுபோல அண்ணன் தம்பிகூட உதவமாட்டர்களாமே:)) [இது வேற அடி:)] ஹா ஹா ஹா.. எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்:))

      ஹ்

      நீக்கு
    9. https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcTowdD8OMpD66IVaGU2DnrY2G3rNtXGfU0EgDo1C7ZRx-bCmPev

      @miyaaaw

      நீக்கு
    10. // எங்கள் பதில்கள் அடுத்த புதன் அன்று சொல்வோம். // விளக்கமா சொல்லிட்டாலும்... கேள்வி கேட்பேன்... கவனம் வைத்துக் கொண்டு பதில் சொல்ல வேண்டுகிறேன்...!

      ஏம்மா Angel... தங்களின் கேள்விகளுக்கு இங்கேயே ஒவ்வொரு குறள் சொல்ல முடியும்... தினம் ஒரு குறள் படியுங்கள்... தெளிவு பிறக்கும்... அதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால், இங்கு கேள்வி கேட்கலாம்... ஆனால் சரியான பதில் இங்கே கிடைக்குமா என்பது 100% சந்தேகம்... நன்றிம்மா...






      அதிரா தளம் மாதிரி இது ஒரு ஜாலி தளம் என்பதை கவனத்தில் கொள்ளவும்... நன்றி சகோதரி...

      நீக்கு
    11. கிருஷ்ண மூர்த்தி S ஐயா... தங்களின் சில பதிலை சிந்தித்து தான் எனக்கு பல குர(ள்)ல்கள் ஞாபகம் வந்தன... பார்ப்போம்... அடுத்த வாரம் விளையாட்டை...!

      நீக்கு
    12. ///ஏம்மா Angel... தங்களின் கேள்விகளுக்கு இங்கேயே ஒவ்வொரு குறள் சொல்ல முடியும்... தினம் ஒரு குறள் படியுங்கள்... தெளிவு பிறக்கும்..///

      ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ் அஞ்சூஊஊஊஊ ஓடுங்கோ ஓடுங்கோ ஓடிப்போய்க் கட்டிலுக்குக் கீழ ஒளியுங்கோ:)) ஹா ஹா ஹா நான் ரெண்டாவது அடி எனக்குத்தான் எண்டெல்லோ நினைச்சுக்கொண்டிருந்தேன்:)).. அஞ்சுவுக்கு விழுந்திருக்கூஊஊஊ.. ஜந்தோசம் பொயிங்குதே ஜந்தொசம் பொயிங்குதே:))..

      ஹா ஹா ஹா டிடி, கேள்விகள் நாங்க கேட்பது ஒன்றும் சீரியசாக இல்லை, இதுவும் ஒரு பொழுதுபோக்குப் போலத்தானே.. இதில சீரியசாக எடுக்க எதுவுமில்லையே..

      உண்மையைச் சொல்லப்போனால் சீரியசான பதிவு எனில் நாங்க பயப்பிடுவோம் போக, அப்படி இல்லை எனப் போனாலும்.. மிகவும் அடக்கொடுக்கமான பெண்ணாக ஒரு கொமெண்ட் போட்டு விட்டு வந்து விடுவது வழக்கம்.. பல சமயப் பதிவுகளிலும் அப்படித்தான், நாம் ஏதும் சொல்லி அது தவறாகிடுமோ எனப் பயமாக இருக்கும்.

      ஆனா இங்கு கேள்வி கேட்பதென்பது புத்தி சம்பந்தமான விசயமாக நினைக்கல்ல மனசு சம்பந்தமான விசயமாகவே நினைச்சு கேள்வி கேட்கிறோம்ம்.. மற்றும்படி நிங்க இதில் தவறேதும் எடுக்காதீங்கோ பிளீஸ்.

      இன்னொன்று, டிடி நீங்க ஒரு நல்ல வலையுலக சகோதரமாக, நமக்கு பல நல்ல விசயங்கள் சொல்லித் தந்திருக்கிறீங்க, அதேபோல நிறைய ஊக்குவிச்சு மகிழ்விச்சிருக்கிறீங்க.. அதனால நீங்க திட்டினாலும் நம்மோடு கோபப்பட்டாலும் அதையும் மகிழ்ச்சியாகவே நாங்க ஏற்றுக் கொள்வோம்..

      நீங்கள் மட்டுமில்லை, வலையுலகில் நம்மோடு ஒட்டி உறவாடும் அனைவருக்கும் நம்மை திட்டும் உரிமையும் இருக்கிறது எனத்தான் நான் நினைக்கிறேன்ன்.. எல்லாம் நம் நன்மைக்காகத்தானே..

      ஆனா பிளீஸ்ஸ் கோபிக்காமல் சிரிச்சு சிரிச்சு திட்டுங்கோ:)) ஹா ஹா ஹா..

      //அதிரா தளம் மாதிரி இது ஒரு ஜாலி தளம் என்பதை கவனத்தில் கொள்ளவும்... நன்றி சகோதரி...//

      ஹா ஹா ஹா உண்மையில நான் ஜாலிக்காகத்தான் எழுதுகிறேன்ன்.. நன்றி.

      நீக்கு
  32. நான் சொல்ல நினைத்ததை கீதாக்கா ,.அடுத்து..அதிராவும் விரிவாகவே சொல்லிவிட்டார்கள். வழி மொழியும் அத்துடன் கூடவே ஒன்றும் தாழ்மையுடன் சொல்ல நினைக்கிறேன்....(அதிரா உங்களுடன் நானும் தேம்ஸில் நிற்கிறேன் ஹா ஹா ஹா ஹா) சில பதிவுகளில் தகாத வார்த்தைகளும், திட்டல்களும் ஒருவரை ஒருவர் சாடிக் கொள்வதும் இருக்கும் போது ஜனரஞ்சகமான பதிவுகள் தகாத வார்த்தைகள் இல்லாத, ஒருவரை ஒருவர் சாடிக் கொள்ளாத பதிவுகள்தானே.

    ஒரு சிலருக்கு, எங்கள் பதிவுகள் சீரிய இலக்கியப் பதிவுகளாகவோ, அல்லது ஸ்டாண்டர்ட், தரம் வாய்ந்த பதிவுகளாக இல்லை, மொக்கை அலல்து அவர்களின் எண்ண அலைகளுடன் ஒத்துப் போவது போல் இல்லை என்பதால் கருத்திட முடிவதில்லை என்ற எண்ணம் இருப்பது போல் (நான் கேட்டதால்...) நமக்கும் சில பதிவுகள் தோன்றலாம் இல்லையா? வைஸ் வெர்சா தானே...அப்படியிருந்தும் கூட நாங்கள் அவ்வப்போது செல்வதுண்டு....அப்படியான பதிவுகளில் ஒரு வரியிலேனும் கருத்திடுவதுண்டு...

    எங்கள் வீட்டில் செய்தித்தாள்கள், பத்திரிகைகள் வாங்குவதில்லை. ஏன் டிவி கூடக் கிடையாது. பல செய்திகளும் இங்கு வலைக்கு வரும் போதுதான் தெரிந்து கொள்வது. சில சமயம் வெகு தாமதமாக.....இருக்கும் பல தனிப்பட்ட பிரச்சனைகளுக்கு நடுவே இங்கு வந்தால் கொஞ்சம் நட்புகளுடன் சிரித்துவ்ட்டுப் போவது நம் தனிப்பட்ட பிரச்சனைகளுக்கு ஒரு ரிலாக்ஸேஷன் அவ்வளவே..

    இலக்கியமான பதிவுகளுக்குச் சென்று பதில் சொல்லும் அளவு என் அறிவும் இல்லையே....என் அறிவு அவ்வளவுதான் ஹிஹிஹிஹிஹி இதைச் சொல்லுவதில் மீக்கு வெட்கமோ தயக்கமோ இல்லை...

    கீதா

    பதிலளிநீக்கு
  33. //நீங்கள் மட்டுமில்லை, வலையுலகில் நம்மோடு ஒட்டி உறவாடும் அனைவருக்கும் நம்மை திட்டும் உரிமையும் இருக்கிறது எனத்தான் நான் நினைக்கிறேன்ன்.. எல்லாம் நம் நன்மைக்காகத்தானே..//

    அதே அதே தான் சகோ டிடி .நிறைய இடங்களில் அமைதியா பார்த்துட்டு ஒதுங்கிடுவேன் .அதிரா மாதிரி தெளிவா அழகா எழுத எனக்கு வராது :) இப்பவும் இங்கே வலைப்பக்கம் தொடர்ந்து வரக்காரணம் எங்கள் பிளாக் அதிரா மற்றும் உங்களைப்போன்ற நட்புக்கள்தான்

    பதிலளிநீக்கு
  34. எனக்கு இன்னொரு ஆசையும் உண்டு நான் சிந்திப்பதை எனது கருத்து எத்தனை பேருடன் ஒத்துப்போகிறதுன்னு தெரிஞ்சிக்கவும் ஆசை .அதே போல் பல செய்தி விஷயங்கள் இங்கே தான் அறிந்துகொண்டதும்

    பதிலளிநீக்கு
  35. ஆம். கேள்வி கேட்பதில் அதுவும் ஒரு கோணம்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!