திங்கள், 1 ஏப்ரல், 2019

"திங்க"க்கிழமை : என்னாத்தச் சொல்வேனுங்கோ - - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி


மாவடு என்றவுடன் நாக்கில் எச்சில் ஊறாமல் இருக்குமா? மோர் சாதத்துக்கான நல்ல துணைவன் மாவடுதானே. 
சின்ன வயதில் கதைப் புத்தகம் படிக்கும்போது வாயில் அடக்கிக்கொண்டே மாவடுவைச் சாப்பிடுவது எனக்கு ரொம்பப் பிடிக்கும். அப்போல்லாம் கிளிமூக்கு மாங்காய் வடுவை, மாவடுவாகப் போட்டிருப்பார்கள். கொஞ்சம் பெரிய சைசில் இருக்கும். அதை வாங்கி, தண்ணீரில் கழுவிவிட்டு (உப்பு ஜாஸ்தி என்பதால்) கடித்துச் சாப்பிடுவேன். மாவடுக்கு வயசானால், அதாவது ரொம்பவும் ஊறிவிட்டால், நொசநொசப்பா ஆகிவிடும். அப்போ அதனை உபயோகப்படுத்தி மோர்க்குழம்பு செய்வார்கள். அது ரொம்ப நல்லா இருக்கும்.

சில நாட்களுக்கு முன்பு அருகில் இருந்த கடையில் காலையில் புது மாவடு விற்பனைக்கு  வைத்திருந்ததைப்பார்த்தேன். உருண்டை மாவடு. அது.  நானே மாவடு தயார் செய்யணும் என்ற ஆசையில் புதிதாக வந்த வடுவில், கொஞ்சம் பெரியதாக இருந்தவைகளாகப் பொறுக்கி வாங்கிக்கொண்டுவந்தேன்.

மாவடு தயார் செய்வது சுலபமானதுதான். அதுக்காக இதை வாசிக்கும் இணையதள உணவுப் புலிகள்,  ‘ம்…காக்கைக்கும் த கு பொ கு’ என்ற பழமொழியை எழுதினால் ‘கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்’.

தேவையானவை

நல்ல மாவடு – 8 கப்
கல் உப்பு – 1 கப்
மிளகாய்த் தூள் – 1 கப்
மஞ்சள் பொடி – 1 ஸ்பூன்
வெந்தயப் பொடி 1 ஸ்பூன்
கடுகு – ½  கப்
நல்லெண்ணெய் 2 ஸ்பூன்

அளவு ப்ரொபோர்ஷனேட்டா மாற்றிக்கொள்ளலாம்.

செய்முறை

மாவடுவை நன்றாக அலம்பிக்கொண்டுவிட்டு, காம்பை கட் பண்ணிடுங்க.





நல்ல காட்டன் துணியில் நன்றாக ஈரம் போகத் துடைத்துவைக்கணும். அப்படியே காற்றில் கொஞ்ச நேரம் உலரட்டும். ஈரமே இருக்கக்கூடாது.



எவ்வளவு மாவடு இருக்கு என்று அளந்துகொள்ளுங்கள். எனக்கு 4 கப் இருந்தது (இந்த கப் பிஸினெஸ் ஒரு அளவுக்குத்தான். டம்ளர், சிறிய பாத்திரம் எதுனாலும் ஓகே). எனக்கு 4 கப் இருந்ததால் அதற்கான அளவுகளைத்தான் இனிமேல் சொல்லுவேன்.



பிறகு மாவடுவை பாத்திரத்தில் போட்டு, 2 ஸ்பூன் நல்லெண்ணையை விட்டு நன்றாக பிசிறிக்கொள்ளுங்கள். எல்லா மாவடுமேலயும் எண்ணெய்ப் பூச்சு இருக்கணும்.



கடுகு, கால் கப் எடுத்துக்கொண்டு, அதனை மிக்ஸியில் நன்றாக பொடித்துக்கொள்ளுங்க.



இப்போ, மாவடுவை ஒரு கண்ணாடிப் பாத்திரத்தில் இட்டு (பொதுவா கண்ணாடி ஜாடி அல்லது பீங்கான் ஜாடி ரொம்பவும் சரியாக இருக்கும். ஆனால் இவை இரண்டும் என்னிடம் இல்லாததால், அவனில் உபயோகப்படுத்தும் கண்ணாடிப் பாத்திரத்தை உபயோகித்தேன்), அதன் மீது ½ கப் கல் உப்பைப் போட்டுவிடுங்கள்.



பிறகு, அத்துடன் ½  கப் மிளகாய்த்தூள், 1/4 கப் கடுகைப் பொடியாக்கியது இவற்றைச்சேருங்கள். 1 தேக்கரண்டி மஞ்சள் தூளும், வெந்தயப் பொடியும் இப்போது சேர்க்கலாம்.



இவற்றை மெதுவாக கலந்து (மாவடுவுடன்) நல்ல மூடி போட்டு மூடிவிடுங்கள். நான்கு நாட்களுக்கு தினமும் ஒரு முறை அதனைக் கிளறிக்கொடுங்கள். 



பிறகு காற்றுப்புகா ஜாடியில் போட்டுவிடுங்கள். அப்புறம் அதன் மீது மெல்லிய துணியைப் பரப்பி தினமும் கொஞ்ச நேரம் வெயிலில் வைத்துவிட்டு எடுத்தால் போதும்.



நாட்கள் செல்லச் செல்ல நன்றாக ஊறி மாவடு ரெடியாயிடும்.





சிலர், காரப்பொடி சேர்க்காமலும் செய்யறாங்க. நல்லெண்ணெய்க்குப் பதில் முன்பு விளக்கெண்ணெய் உபயோகப்படுத்துவார்கள் என்று தெரிந்துகொண்டேன்.

நான் வடு நன்றாக ஊறியபிறகு படம் எடுத்து இடுகை அனுப்பலாம்னு நினைத்தேன். பிறகு, அதுக்குள்ள மாவடு சீசன் முடிந்துவிடும் என்பதால் உடனே அனுப்பிவிட்டேன். இன்று (நேற்று காலை மாவடு போட்டபிறகு) இரவு, தயிர் சாதமும், நேற்றைக்கு ரெடி பண்ணின மாவடுவும் சாப்பிட்டேன். அடடா… வெடுக் வெடுக் என்று மிக அருமையாக இருந்தது. நான் வாங்கிய மாவடு கொஞ்சம் பெரிய சைஸ் என்பதால், புளிப்பு உப்பு காரம்லாம் சேர்ந்து அட்டஹாசமா இருந்தது. 

சென்ற வருடம் ஆவக்காய் ஊறுகாய் போட்டபோது, முதல் ஓரிரு வாரங்கள், தினமும் அனேகமா தயிர்/மோர் சாதம் + ஆவக்காய் ஊறுகாய் சாப்பிட்டேன். வெடுக் வெடுக் என்று ரொம்ப நல்லா இருந்தது. பிறகு நன்றாக ஊறியபிறகு சாப்பிடவே இல்லை. அதனால், அனேகமா, நல்லா ஊறும்வரை காத்திராமல், இந்தத் தடவை போட்ட வடுமாங்காயில் பெரும்பகுதி விரைவிலேயே காலிபண்ணிடுவேன்னு நினைக்கிறேன்.

லண்டன், ஸ்காட்லண்ட்லலாம் இது எங்க கிடைக்கப்போகுது. அவங்க பிராண்டட் வடுமாங்காய் வாங்கினால்தான் உண்டு. பிராண்டட் ஊறுகாய்ல, தங்கம் பிராண்ட் (கோவை, பாலக்காட்டில் கிடைக்கும்) எலுமிச்சை கார ஊறுகாய், மாவடு போன்றவை ரொம்ப நன்றாக இருக்கின்றன.

பின்குறிப்பு: இடுகைல நான் ஏதும் நடிகை படத்தைச் சேர்க்கவில்லை. தலைப்பைப் பார்த்து எங்கள் பிளாக் ஆசிரியர்களில் யாரேனும் அசின் படத்தைச் சேர்த்தால் அதுக்கு நான் பொறுப்பில்லை.




அன்புடன்

நெல்லைத்தமிழன்

193 கருத்துகள்:

  1. காலை வணக்கம். இந்தப் படம் யாருடையது? அசின் போலவும் இல்லை. மிசின் போலவும் இல்லை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நெல்லை. காலை வணக்கம். நீங்களாவது வந்தீர்களே!!!!! அது பிசின்!

      நீக்கு
    2. ஆமாம்....படத்தில் உள்ள இந்தப் பெண் யார்? உங்கள் தொடர்கதையை எழுதும் ஆசிரியரா?

      நீக்கு
    3. நெல்லைத்தமிழன் இப்போ தமனாக்காவை விட்டிட்டாரோஓஓஓஓஒ. இது நாட்டுக்கு நல்லதில்லையே:) விடமாட்டேன்ன்ன்ன் இதுகொரு வழக்குப் போட்டே ஆகோணும்.. சிவனே என தன் பாட்டில ஒதுங்கி இருக்கிற பிசினை சே சே அசினை எதுக்கு இப்போ எங்க?ள் புளொக் கூட்டி வந்து , நல்லா இருக்கிற ஸ்ரீராமின் மனசும் கொஞ்சம் ஆஆஆஆஆஆஆஆடிடப்போகுத்7ஏ க்8அர்ர்ர்ர்:))[ரைப் அடிக்கும்போது டெய்சிப்பிள்ளை கீ போர்ட்டில் நடக்கிறா:))]

      நீக்கு
    4. அதிரா... என்னை குற்றம் சொல்லிடாதீங்க. நானெல்லாம் தமன்னா கட்சியிலிருந்து மாறவே மாட்டேன் (அவர் ஒல்லியா, திருமணமாகம இருக்கறவரைக்கும் ஹாஹா)

      நீக்கு
    5. grrrrrrr...... பதிவில் அவர் இணைத்த படத்தை அவரே குறை சொல்கிறார். நான் வேணும்னா வேற படம் மாற்றவா?

      நீக்கு
    6. //grrrrrrr...... பதிவில் அவர் இணைத்த படத்தை அவரே குறை சொல்கிறார். //

      இது எங்களுக்குத் தெரியாதோ ஸ்ரீராம்:)) சும்மா போட்டு வாங்குவதுதானே என் வேலை:))..

      ///நான் வேணும்னா வேற படம் மாற்றவா?//
      ஓஓஒ ஒரு கார்த்திக் படம் இல்ல ஜெயம்ரவி படம் போட....லாமே:)) ஹா ஹா ஹா எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்ஸ்:))

      நீக்கு
    7. இறைவா... இது அடுக்குமா? ஸ்ரீராம் - அடுத்து என்ன இடுகை அனுப்பினாலும், சம்பந்தமே இல்லாம, நல்லஅசின் படத்தையும் அனுப்பறேன். (நீங்க நான் கட்சி மாறிட்டேனோ என்று நினைத்துக்கொண்டாலும்)..

      நீக்கு
    8. அதிரா.... இது என்ன ஆசை... கார்த்திக்குக்கு இப்போ 55 வயசுக்கு மேல ஆச்சு. அவர் படத்தை நீங்க ஏன் கேட்கறீங்க? ஜெயம் ரவிக்கு கல்யாணம் ஆகி கனகாலம் ஆச்சு.... உங்க வயசுக்கு, இப்போ, விஜய் பையன் படம் (சஞ்சய் 14 வயசு) மாதிரி கேட்பீங்களா... தாத்தா படங்கள்லாம் கேட்கறீங்களே

      நீக்கு
    9. ஹா ஹா ஹா இல்ல வயசு வித்தியாசம் அதிகம் இருந்தாத்தான் நல்லதாம் விட்டுக் கொடுப்புக்கள் அதிகமாக இருக்கும் என அம்மம்மா ஜொள்ளுறவ அது டப்பா?.. ஹையோ எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்:))

      நான் உங்களைப்போல உருவத்தைப் பார்த்துக் கட்சி மாறிட மாட்டேனாக்கும் கர்ர்ர்ர்ர்ர்:))

      நீக்கு
  2. சே... தொடர்கதை இன்று வராது என்று தெரிந்தவுடன் யாரையும் காணோமே...!

    நேற்று அதிரா வேறு பிசுபிசுதோசை என்று பேய்க்காட்டி ஏப்ரல் முதல் தேதியைக் கொண்டாடி இருக்கிறார்! நேற்றே சந்தேகப்பட்டேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய காலை வணக்கம் எல்லோருக்கும். நேற்று தூங்க லேட்டு அதான் எழவும் கொஞ்சம் லேட்..5.30 ஆனதால் சமையல் வேலை.

      ஸ்ரீராம் நேற்றே அவங்க பிசு பிசு தோசைனு இங்க போட்டதும் "எச்சரிக்கை" நு ஒரு வார்த்தை கொடுத்திருந்தேன்!!!! அதுக்குத்தான்...ஹா ஹா ஹா

      அப்புறமா வரேன் உலா...

      கீதா

      நீக்கு
    2. ஹா ஹா ஹா ஸ்ரீராம், அதிரா ஜம்ப் பண்ணுவேன் என நினைச்சு கீதாவும் துரை அண்ணனும் ஓடி வரேல்லைப்பொலும்:)) நான் தான் பிசுக்கு ஓசை ஜாப்பிட்ட மயக்கத்தில இருந்தனே:))

      நீக்கு
    3. //பிசுக்கு ஓசை ஜாப்பிட்ட மயக்கத்தில// - காரணம் 1 - அட இவ்வளவு நல்லா வந்திருக்கே... நானா இப்படி அருமையாப் பண்ணினது என்ற மயக்கத்தில்... காரணம் 2 - பீர்க்கங்காய் தானே போட்டோம். மறந்துபோய் பெருங்காயம் போடறேன்னு மறதில ஏதேனும் மாத்திரை மாவுல விழுந்துச்சா? ஏன் மயக்கமாவே வருது>

      இப்போ எந்தக் காரணம்னு செலெக்ட் பண்ணுங்க.

      நீக்கு
    4. தோசை வாலி யாவது புரிகிறது... அது என்ன பிராக்கெட்டில் HD? High Defnition?

      நீக்கு
    5. ஹா ஹா ஹா அது நெல்லைத்தமிழன் இவ்ளோ இனிமையாக இருக்கே அஞ்சுவுக்கு எப்பூடி இந்த ஐட்யா வந்துது எனும் மயக்கம் தேன்ன்ன்ன்:)).

      ஆவ்வ்வ்வ்வ் ஸ்ரீராம் அது ஹிந்தி வாலி:)) நொட் டமில் வாலியாக்கும்:)).. பிரக்கெட்.. ஹிந்தியிலும் டி எனச் சொல்றேனாக்கும்:)) ஹையோ நேக்கு டற்பெருமை பிடிக்காது பாருங்கோ:))

      நீக்கு
    6. //ஸ்ரீராம் அது ஹிந்தி வாலி:)) //

      அது புரிந்தது. அபுரியானது HD தான்! இப்போ புரிகிறது!

      நீக்கு
  3. காலை வணக்கம்.

    ஆஹா வடுமாங்காய் இங்கே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வெங்கட்... காலை வணக்கம்.. ஆமாம் வெடுக் வெடுக் வடுமாங்காய்... நானும் வீட்டிலும் போட்டிருக்கிறேன். இன்று எனக்கு எல்கேயும் கொண்டு வந்து தருவார். அவர் போட்டிருக்கிறார். கால் கிலோ 90 ரூபாயென்று சொன்னார். முன்னரே ஆர்டர் கொடுத்திருந்தேன்.

      நீக்கு
    2. எல்கே மேற்கு மாம்பலம் வரை கொண்டு வந்து தருவாரா? மாவடு இல்லை. சாப்பாடு, டிஃபன் போன்றவை! அப்படி இருந்தால் என் தம்பிக்கு அறிமுகம் செய்து வைக்கலாம்.

      நீக்கு
    3. எல் கே யைக் கேட்டுப் பார்க்கலாம். நிச்சயம் தருவார். அவர் எல்லையில்தான் இருக்கிறது மே மா!

      நீக்கு
    4. சாப்பாடு, டிபன்.... ஓ இந்த செர்வீஸ் வேறயா?

      ஸ்ரீராம்... வடுமாங்காய் சாப்பிட்டுப்பார்த்துச் சொல்லுங்க (எல்.கே). நல்லா இருந்துச்சுன்னா நமக்குத் தெரிஞ்சவங்களுக்கும் சொல்லலாம்.

      நீக்கு
    5. OK...

      இதுவரை டெலிவரி ஆகவில்லை! நான் மாவடுவைச் சொல்கிறேன்.

      நீக்கு
  4. நல்லெண்ணை என படித்த போது விளக்கெண்ணை தான் பயன்படுத்துவார்கள் எனச் சொல்ல வந்தேன் - ஆனால் நீங்களே சொல்லி விட்டீர்கள்.

    திருச்சியில் வடு சீசன் ஆரம்பித்து விட்டது! பல வீடுகளில் இப்போது தான் மாவடு போட்டு வைப்பார்கள். போன வருடம் போட்டதே இன்னும் இருக்கிறது என்பதால் இந்த வருடம் போடப் போவதில்லை என சொல்லி இருக்கிறார் இல்லத்தரசி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாங்கள் எந்த எண்ணெயும் தடவாமல்தான் போடுகிறோம்! இந்த சீசனில் குடைமிளகாயும் வாங்கிப் போட்டாச்சு... மாவடுவும் ஆச்சு. எல்கே மாவடு எப்படி இருக்கு என்று பார்க்க வேண்டியதுதான் பாக்கி!

      நீக்கு
    2. இங்கே எல்லாம் வாங்கிடுவார். சாப்பிடத் தான் ஆளில்லை. 3 ஆம் வருஷம் போட்ட தஞ்சாவூர்க்குடைமிளகாயில் போட்ட மோர் மிளகாயை இந்த வருஷம் தான் வேலை செய்யும் பெண்ணிடம் கொடுத்தேன். அதுக்குள்ளே இந்த வருஷம் வேறே வாங்கி மோரில், ஸ்ரீராம் போடும் முறையில் புளியில் எனப் போட்டுக் காய வைச்சு எடுத்து வைச்சாச்சு. இனி சாப்பிட யாரையானும் தேடணும்! :))))))

      நீக்கு
    3. நாங்கள் புளி மிளகாய் போடவில்லை அக்கா. ஆனால் ஆசையாய் இருக்கிறது.

      நீக்கு
    4. //இனி சாப்பிட யாரையானும் தேடணும்! // - எதுக்கு சாப்பிட ஆள் தேடணும்? எல்லோரும் வாங்க வாங்க என்று கூப்பிட்டால் வந்துவிட்டுப் போகிறார்கள். எ.பில உள்ள நண்பர்களையே (நான் உள்பட) இன்னும் சாப்பிடக் கூப்பிட்ட மாதிரி தெரியலையே

      நீக்கு
    5. வெங்கட்... நான் மேட்டூர்ல இருந்தபோது, சேலத்துக்கு வார இறுதியில் வருவேன்... அங்கெல்லாம் நிறைய இடங்களில், 'மோர்' விற்பார்கள். அந்தப் பானைக்குப் பக்கத்தில் அம்பாரமாக மாங்காய் ஊறுகாயைக் குவித்திருப்பார்கள் (நீள நீளமா மாங்காயை கட் பண்ணி, ஊறுகாய் பண்ணுவதுபோல் பொடி, எண்ணெய்லாம் விட்டு குவித்து வைத்திருப்பார்கள்).காசு, மோருக்கு. கூடவே 2 துண்டு மாங்காய் தருவார்கள் (ஊறுகாய் மாதிரி இருக்கும்). திருச்சியில் இது உண்டா?

      நீக்கு
    6. கீசா மேடம் - நீங்க சொல்லியிருப்பதும் வெங்கட் சொல்லியிருப்பதும் சரிதான். மாவடு போட்டால் 1 கிலோவாவது போடணும். எப்போதும் மோர் சாதத்துக்கு வடு தொட்டுக்கொண்டு சாப்பிடுவது அவ்வளவு நல்லா இருக்காது. அதுனால ஆசைக்குப் போட்டாலும் மிஞ்சத்தான் செய்யும்.

      அது சரி... மாவடு தண்ணீரை என்ன பண்ணுவீங்க? நானாவது காரப்பொடியும் சேர்த்திருக்கேன். கொஞ்சம் குழம்பு செய்யும்போது விடலாம்.

      நீக்கு
    7. நெல்லைத் தமிழரே, எங்க அம்மா வீட்டில் எல்லாம் மாவடு போடும் ஜாடின்னே இருந்தது! அது சுமார் ஏழு எட்டு படி (பெரிய படி, இந்தத் தஞ்சை, திருச்சிக்காரங்க சொல்லும் சின்னப்படி இல்லை) மாவடு அம்மா போடுவா! ஒரு வருஷத்துக்கும் அதான் ஊறுகாய்! எங்க அப்பா வீட்டிலே வேறே ஊறுகாய் போட்டே நான் இருந்தவரை பார்த்தது இல்லை. மாங்காய் வாங்கினால் கூட உப்பு, பச்சை மிளகாய் தாளித்துத் தான்! இல்லைனா காரட், மாங்காய், இஞ்சி(அப்பாவுக்கு இஞ்சி இல்லாமல்) கடுகு மட்டும் தாளித்து!

      நீக்கு
    8. மாவடு ஜலத்தில் நான் சுண்டைக்காய் வற்றல், மிதுக்க வற்றல் (இது மதுரைப்பக்கம் தான் தெரியும், சுண்டைக்காய் போல இருக்கும், ஆனால் சுண்டைக்காய் கிடையாது) போடுவேன். பாகற்காய், வெண்டைக்காய் போன்றவை போட்டால் அவ்வளவு நன்றாக வருவதில்லை. மிச்சம் ஜலம் என் அப்பா வீட்டில் மோர்சாதத்துக்கு அதான் தொட்டுக்க! ஜலம் தீரும்வரை குழம்பே பண்ண மாட்டாங்க! ரசம் மட்டும் தான்! :)))))

      நீக்கு
    9. அப்புறம் இன்னொரு விஷயம் எனக்கு நினைவு தெரிஞ்சதில் இருந்து மாவடுவுக்கு அம்மா மி.வத்தல், கடுகு, மஞ்சள் அரைச்சு விட்டுத் தான் செய்வார். உப்புக்கல்லாகப் போடுவார். நானும் அப்படியே போட்டுக்கொண்டு வருகிறேன். மாவடு இரண்டு வருஷம் ஆனாலுன் வீணாவது இல்லை. என் மாமியார் வீட்டில் உப்பு, மஞ்சள் பொடி போட்டுக் கடுகு மட்டும் அரைத்து விடுவார்கள். அதோடு அவங்க மாவடு சுருங்கக் கூடாது என்பார்கள். என் நாத்தனார் எல்லாம் ஐஸ் வாங்கி மாவடுவை அதில் வைத்து அதோடு அப்படியே குளிர்சாதனப் பெட்டியிலும் வைப்பாங்க! மாவடு சுருங்காமல் இருக்கும் என்பார்கள். எங்க வீடுகளில் எல்லாம் எத்தனைக்கு எத்தனை சுருங்குதோஅவ்வளவுக்கு உப்பு, காரம் பிடிச்சு மாவடு ஊறி இருக்குனு அர்த்தம். கடைசி வடு வரை வெடுக்கென்றே இருக்கும். நான் அதற்கெனக் கண்ணாடி பாட்டில்வைச்சிருக்கேன்.அதில் தான் போட்டு வெளியே தான் வைப்பேன்.

      நீக்கு
    10. https://geetha-sambasivam.blogspot.com/2012/02/blog-post_16.html

      https://geetha-sambasivam.blogspot.com/2017/07/2.html

      நீக்கு
    11. //ஒரு வருஷத்துக்கும் அதான் ஊறுகாய்! // - நான் மாங்காய் ஊறுகாய் (துண்டமா திருத்தி உப்பு சேர்த்து வெயிலில் காயவைத்து அப்புறம் ஊறுகாய் போடுவது), எலுமிச்சை கார ஊறுகாய், நார்த்தங்காய் ஊறுகாய் இல்லாத வீடுகளை சின்ன வயதில் பார்த்ததில்லை. நீங்களானா, உங்க அம்மா வீட்டுல மாவடு மட்டும்தான்னு சொல்றீங்க.

      நீக்கு
    12. //ஜலம் தீரும்வரை குழம்பே பண்ண மாட்டாங்க!// - கீசா மேடம்.... எளிமையான வீடுகள்ல, நான் வளர்ந்த வீடும் ஒன்று. மாங்காய் ஊறுகாய் (புதிய) செய்தாலும், 1/4 ஸ்பூனுக்கு மேல என் தட்டுல போடமாட்டாங்க. எனக்கோ, 10 ஸ்பூன் போட்டாலும் சாப்பிடும் ஆர்வம்... இப்போ தோணுது... எல்லாம் நல்லதுக்கே என்று.

      நீக்கு
    13. //மாவடு சுருங்கக் கூடாது என்பார்கள்.// - போட்டு பத்து நாள்கூட ஆகலை... இப்போவே சுருங்கியிருக்கு. காரமும் கொஞ்சம் இறங்கியிருக்கு. ரொம்ப நல்லாவே இருக்கு. விரைவில், இதுல மூணு வடுவை எடுத்து நன்றாக அலம்பி, மனைவியை மாவடு புளிசேரி பண்ணச்சொல்லணும்....

      நான் இதுவரை, சுருங்காத மாவடு பார்த்ததே இல்லை.....

      நீக்கு
    14. ஆமாம் கீதாக்கா நம் வீட்டிலும் சுருங்கனும். உப்பு காரம் உரைக்கும்...என்னோடது 2 வருஷம் ஆன பிறகும் கூட கடுக் என்றுதான் இருந்தது.

      இப்பத்தான் தீர்ந்தது. கண்ணாடி பாட்டில் தான் நானும் இப்ப வைச்சுருக்கென் முன்னாடி பெரிய ஜாடி!

      இப்ப செலவு கம்மி. வெளியேதான் இருக்கிறது எங்க வீட்டிலயும். இங்கு குளிர்சாதப்பெட்டியும் இல்லை...இருந்தாலும் வெளியேதான் இருக்கும்..

      கீதா

      நீக்கு
    15. நெல்லைத் தமிழரே, அநேகமாக் கும்பகோணம், தஞ்சைப்பக்கம் மாவடுவைச் சுருங்க விடுவதில்லை. அதோடு ஐஸ் வேறே வாங்கிவைக்கிறாங்க. இப்போ முகநூலிலும் ஒரு பெண்மணி மாவடுவை ஐஸில் வைக்கச் சொல்லிச் செய்முறை கொடுத்திருக்கார். மாவடு சுருங்காமல் அப்படியே இருக்கணும்னும் சொல்லுகிறார். நான் கல்யாணம் ஆன புதுசில் மதுரையிலிருந்து மாவடு வந்தால் என் புக்ககத்தில் அதைப் பார்த்துச் சிரிப்பார்கள், மாவடுவே போடத் தெரியலை உங்க வீட்டிலே என்பார்கள். எனக்கு அதான் தேவாமிர்தமாய் இருக்கும்! எலுமிச்சை கார ஊறுகாய், மாங்காய்த் துண்டம் போட்டது, வெந்தய மாங்காய் எல்லாம் என் அம்மாவழிப் பாட்டிப் பிரமாதமாப் போடுவார். ஊறுகாயை வேடு கட்டி வெயிலில் காய வைப்பார். வெயில் வாசமே வராது! ஊறுகாய் அவ்வளவு நன்றாக இருக்கும். இங்கே யாரோ ஒருத்தர் மாவடுவை எண்ணெய், உப்புக்காரத்தால் பிசறி வேடு கட்டி வெயிலில் காய வைக்கச் சொல்லி இருந்தார். மாவடுவைக் காய வைக்கவே வேண்டாம். சம்பிரதாய முறை இப்போல்லாம் பலருக்கும் தெரிவதில்லை.

      நீக்கு
    16. நெல்லை எங்க வீட்டுல பிறந்த வீட்டுல அடைமாங்காய் போடுவாங்க....ஆனா இப்ப எங்க வீட்டுல செலவு இல்லாததால போட்டு ரெசிப்பி அனுப்ப முடியாதே...

      கீதா

      நீக்கு
    17. ஒரு கண்ணியில் எவ்வளவு ரிப்ளை?

      நான் மாவடு ஜலத்தை மாவடுவுடன் சேர்த்தே மோர் சாதத்துக்குப் போட்டுக் கொள்வேன். இரண்டும் செலவாகும். தயிர் சாதத்திலும் மாவடு நீர் சேர்ந்து கொள்ளும்.

      மேலும் எனக்கு மோர் சாதத்தைவிட, குழம்பு சாதத்துக்கு மாவடு தொட்டுக்கொள்வதும் பிடிக்கும்.

      நீக்கு
    18. மாவடுவை வெயிலில் வைக்கும் வழக்கம் எங்களிடம் இல்லை. அதேபோல சுருங்கினால்தான் மாவடு. பொடிவடுவாய் இருந்தால்தான் எனக்குப் பிடிக்கும். பொடிவடு சுருங்கி உப்பு காரம் ஏற்று எங்கே உன் நாக்கு எங்கே உன் நாக்கு என்று என் நாவைத் தேடினால்... ஆஹா...

      நீக்கு
    19. ஆஆஆஆஆஆ கிடைச்ச பிளேன் ஹப் ல கீசாக்கா தன் புளொக்கை அட்வெரைஸ் பண்ணுகிறாஆஆஆஆஆஆஆஆஅ.. விடாதிங்கோ அட் க்கு காசு வாங்குங்கோ ஸ்ரீராம்:)..

      நீக்கு
    20. அதுவும் நம்ம பிளாக்தான் அதிரா... பரவாயில்லை!

      கீதாக்கா... அந்தப் புளிமிளகாய் பார்சல் ப்ளீஸ்....

      நீக்கு
    21. @அதிரா - //கிடைச்ச பிளேன் ஹப் ல கீசாக்கா தன் புளொக்கை அட்வெரைஸ் // - கீசா மேடத்திடம் நான் பார்க்கும் நல்ல குணங்களில் இதுவும் ஒன்று. நம்ம ரெஃபரென்ஸுக்கு உடனே அந்த இடுகைகளைப் போய்ப் பார்க்கலாம் இல்லையா. அவங்க கொடுக்கலைனா, நாம தேடிக் கண்டுபிடிக்கணும். பொதுவா எழுதறவங்க, தொடர்ந்து ஒரு தலைப்பை எழுதி முடிச்சுடுவாங்க. கீசா மேடம், 'மாவடு பார்ட்1' ஜனவரில வந்ததுனா 'பார்ட் 2' இன்னும் சில வருடங்கள் கழித்து டிசம்பர்ல வெளியிடுவாங்க. அவ்வளவு வேகமா எழுதுவாங்க... (ஒரே மறுமொழில ஒருத்தரை தூக்கிவச்சு எழுதறதுக்கும் அதுலயே டமால்லு போடறதுக்கும் திறமை உனக்குத்தாண்டா வருது நெல்லைத்தமிழா)

      நீக்கு
    22. //மேலும் எனக்கு மோர் சாதத்தைவிட, குழம்பு சாதத்துக்கு மாவடு தொட்டுக்கொள்வதும் பிடிக்கும்.//
      அதே அதே ஸ்ரீராம்!. அதுவும் கீரை மிளகூட்டலோடு வடுமாங்காய்.. ஆஹ்ஹா!(இது ஸ்பெல்லிங் மிஸ்டேக் அல்ல. ஆஹா என்பதை அவ்வளவு ரசிப்போடு சொல்கிறேன்.)

      நீக்கு
    23. தோசைவாலி, இது வரைக்கும் தூங்கிட்டே எல்லாப் பதிவுகளும் படிச்சுட்டு வந்திருக்கீங்க! எல்லோரோட பதிவுகளிலும் அது சம்பந்தப்பட்ட என்னோட பதிவின் சுட்டி கொடுப்பேனே! இலவச விளம்பரம் யாருக்குத் தான் பிடிக்காது? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஶ்ரீராம் நீங்க சொல்லுவதையோ, நெல்லை சொல்லுவதையோ கேட்க மாட்டார். தொடர்ந்து பதிவுகளை எழுதிட்டே இருக்க எனக்கு வேறே வேலையே இல்லையா என்ன? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் வேலைகளுக்கு அப்புறமா மிகுந்திருக்கும் நேரம் தான் முடிஞ்ச பதிவுகள் படிப்பதோ, எழுதுவதோ எல்லாம்! நெல்லை இதுக்காக என்னை என்ன சொன்னாலும் அசைஞ்சு கொடுக்கும் ரகமெல்லாம் இல்லை நான்! :)

      நீக்கு
    24. https://tinyurl.com/y29tdg93 மாவடுவை வெயிலில் வைக்கச் சொன்ன பதிவு! :) முகநூலில் யாரோ சுனிதா!

      நீக்கு
    25. ////ஸ்ரீராம்.1 ஏப்ரல், 2019 ’அன்று’ பிற்பகல் 3:28
      அதுவும் நம்ம பிளாக்தான் அதிரா... பரவாயில்லை!///

      ஆஆஆஆஆஆஆஆஆ தாங்க முடியல்ல ஜாமீஈஈஈஈஈஈ:) ஓஓஓஓஓஒவரா நல்லவராக இருக்கிறாரே:)) ஹா ஹா ஹா... ஊருலகில இருக்கிற புளொக் எல்லாம் தன்னுடையது என்பதுபோல பேசுறாரே:)) ஹையோ ஆண்டவா.. எங்கே என் அநாமிகா சே சே அநஸ்:)).. பூஸ்ட் குடுத்து தூங்க விடாமல் பாதுகாக்கச் சொல்லப்போறேன் என் புளொக்கை:))... ஹா ஹா ஹா..

      கீசாக்காவில எனக்கு பிடிச்ச மிக மிக விசயங்களில் ஒன்று.. நான் என்ன பெயர் மாற்றினாலும் சட்டுப்புட்டென அப்பெயருக்கு தான் மாறிக் கூப்பிடுவா ஹா ஹா ஹா:)..

      எல்லோராலும் இன்று வாய் மட்டும் தான் ஊற வைக்க முடியும்.. வடுமாங்காய் சாப்பிடுவதென்னமோ நெல்லைத் தமிழன் மட்டுமே கர்ர்ர்:))

      நீக்கு
  5. இன்னிக்கு என்ன ஆச்சு.... யாரையும் காணோம்.... எல்லாரும் பிசி போல!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை ஜிமெயிலும் பேஸ்புக்கும் என்னை ஏப்ரல் பூல் செய்தன. முதலில் திரைக்கவே இல்லை. உன் கணக்கைத் திருடி விட்டார்கள் என்றெல்லாம் சொல்லின. ரீஸ்டார்ட் செய்ததும் திறந்து விட்டது! எல்லோரையும் இப்படிப் படுத்துகிறதோ என்கிற சந்தேகம் எனக்கு! ஆனால் பிளாக் முதல்முறையிலேயே திறந்து விட்டது.

      நீக்கு
    2. ஜிமெயில் என்னைப் பேய்க்காட்டவில்லையேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! நல்லபிள்ளையாகத் திறந்துவிட்டது...

      உங்களைப் பேய்க்காட்டிப் பார்க்கலாம்னு நினைச்சிருச்சு போல!! ஹா ஹா

      கீதா

      நீக்கு
  6. மாவடு ரொம்பப் பெரிசா இருந்தா நாங்கல்லாம் மாங்காய்னு சொல்லுவோம். நெ.த.வுக்கு அது மாவடுவா? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! அதுசரி, வெந்தயப் பொடியோ, நல்லெண்ணெயோ மாவடுவுக்கு வேண்டாம். விளக்கெண்ணை தான் நான் இன்னி வரை விட்டுக் கொண்டு இருக்கேன். கடுகு, மஞ்சள், மி.வத்தலை மிக்சியில் அரைத்து அல்லது பொடித்துச் சேர்ப்பேன். மி.பொடியெல்லாம் போட்டதில்லை. மேற்கு மாம்பலத்தில் மாவடுப் பொடின்னே தனியா விற்கிறாங்க கொள்ளை விலையில்! !!!!!!!!!!!!!!!!! பச்சை மஞ்சள் பருவத்திலேயே பச்சை மஞ்சள் மாவடு போடனு எடுத்து வைச்சுடுவேன். அதோடு மிவத்தல், கடுகு சேர்த்து அரைப்பேன். அல்லது பொடிப்பேன். பொடித்தாலே போதும். ஜலம் எல்லாம் வேண்டாம். அதுவே ஜலம் விட்டுக்கும். இந்த வருஷம் கொஞ்சம் வாங்கிப் போட்டாச்சு! இனிமேல் இந்த வருஷத்துக்கு நோ மாவடுனு சொல்லிட்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா... ஹா... ஹா... நாங்களும் மாங்காய் என்றுதான் சொல்வோம்! பொடிவடு கிடைப்பது ரொம்பக் கஷ்டம். நாமே மரம் வைத்துப் பறித்தால் உண்டு! கடியில் பொறுக்க விடமாட்டார்கள். அல்லது வாங்கும் மாவடுவில் பொறுக்கி தனியாய்ப் போடவேண்டும்!

      நீக்கு
    2. என்னைப் பொறுத்தவரையில் சிறிய எலுமிச்சை சைசில் இருக்கணும். ரொம்பப் பொடியா இருந்தால் எனக்குப் பிடிப்பதில்லை. சென்னையில் இரண்டு சைசிலும் நிறைய கிடைக்கிறது. நங்கைநல்லூரில் பார்த்த தெருக்களில் எல்லாம் மாவடு வியாபாரம். கிலோ 120லிருந்து 180 வரை.

      என் தம்பி, ருமானி மரத்திலிருந்து சிறிய சிறிய வடுக்களாக பறித்து மாவடு போட்டிருந்தான். ரொம்ப நல்லா இருந்தது (வெடுக் வெடுக்னு). வெறும் உப்பில்தான் வடு போட்டிருந்தான்.

      நீக்கு
    3. //மாவடுப் பொடின்னே தனியா விற்கிறாங்க கொள்ளை விலையில்!// - சாதாரணமா நான், நல்ல குவாலிட்டி வடுக்களாகப் பொறுக்கி, மாவடு போட்டதில், 1 கிலோ மாவடு (சாறுலாம் சேர்ந்து) அடக்கவிலை 150-160 ரூபாய். இதுக்கு எஃபர்ட்னு ஒண்ணுமே இல்லை. அதிலும் வியாபாரத்துக்கு என்று மாவடு போட்டால், இன்னும் அடக்கவிலை குறையும். கடைகளில் கிலோ 400 ரூபாய்னு விற்கிறார்கள். பேசாம மாவடு வியாபாரம் செய்து சென்னையில் நாலு வீடு வாங்கிடலாம் போலிருக்கு... ஹாஹா.

      நீக்கு
    4. //நாங்களும் மாங்காய் என்றுதான் சொல்வோம்! // கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.... நல்ல ரெண்டு வடு எடுத்துக்கிட்டு, நன்றாக அலம்பி (உப்பு இருக்கக்கூடாது), வாயில அதக்கிக்கொண்டு, புத்தகம் படித்துப் பாருங்கள் ஸ்ரீராம். (ஆனா எனக்கு இப்போ தோணுது... மாவடு ஜாஸ்தி சாப்பிட்டால் ப்ரெஷர் அதிகமாகுமோன்னு... என்னதான் அலம்பினாலும் உப்பு ஜாஸ்தி இல்லையா?)

      நீக்கு
    5. நெல்லை நாங்களும் பெரிய மாவடு என்றால் மாங்காய் என்போமே!! ஹெ ஹெ ஹெ ஹெ

      கீதா

      நீக்கு
    6. @கீதா ரங்கன் - அப்போ மாங்காயை என்னன்னு சொல்லுவீங்க... அநியாயமான்னா இருக்கு.

      அது இருக்கட்டும்... கீதா ரங்கனுக்கு 'அடை மாங்காய்'னா என்னன்னு தெரியுமா? எப்படிப் பண்ணறதுன்னு எழுதுங்க.. அப்புறம் நீங்க எந்த ஊர்க்காரர்னு நான் சொல்றேன்.

      நீக்கு
    7. அது என்னமோ தெரியாது, இந்த மாங்காய்,மாவடுவை வெறும் வாயில் போட்டு ருசி பார்க்கக் கூட எனக்குப் பிடிக்காது. எல்லோரும் மசக்கைக்காரிக்கு மாங்காய்னா இஷ்டம்னு நான் இரு குழந்தைகளையும் வயிற்றில் தாங்கியப்போ கொண்டு வந்து தள்ளுவாங்க! எல்லாம் ஊறுகாய் தான்! பச்சை மாங்காய்! ம்ஹூம்!

      நீக்கு
    8. அடை மாங்காய் எண்ணெயைக் கொதிக்க வைச்சுப் போடுவதால் எங்க வீட்டில் அதைப் "பத்து!" என்பார்கள்.போடுவதில்லை. ஆனால் சாப்பிட்டிருக்கேன். இங்கே இன்னும் எதிலோ பார்த்தது மாவடுவைக் கூட வெயிலில் வைக்கணும் என! !!!!!!!!!!!!!!!!!!!!!!!! ஆச்சரியமா இருந்தது. அப்படி எல்லாம் வைக்கவே வேண்டாம். இப்போத் தான் பார்த்தேன்.ஆனால் எங்கேனு நினைவில் வரவில்லை!!!!!!!!!!!!!!!!!!!! அவங்க சொல்லி இருப்பது எண்ணெயில் மாவடுவில் உப்பு, காரம் மஞ்சள் பொடி, வெந்தயப்பொடி, கடுகுப்பொடி போட்டுப் பிரட்டி வெயிலில் வைக்கணும் என! எங்கே பார்த்தேன்??????????????????? இதிலே தான் யாரோ சொன்ன கருத்தா?? ம்ம்ம்ம்ம்ம்ம்????????

      நீக்கு
    9. கீசா மேடம்... சிலர், மாவடுவை எண்ணெய் தடவி, உப்பு போட்டப்பறம் அப்படியே 4-5 நாட்கள் வச்சுடணும்... தண்ணீர் விட்டதும் (உப்பு ஏறி), அதில் நான் சொன்னவைகளை கலந்து வைக்கணும் என்றும் சொல்றாங்க. ஆனா நான் எல்லாவற்றையும் முதல் நாளே போட்டுட்டேன். வெயில்ல வைக்கறது, பத்து நாளுக்கு அப்புறம்தான் (அதுவும் மெல்லிய துணியால மூடி). நீங்க சொல்றமாதிரி நான் கேள்விப்படலை...

      நீக்கு
    10. நெல்லைத்தமிழரே மாவடுவில் மட்டும் உப்பு, காரம், மஞ்சள் பொடி, கடுகுப்பொடி எல்லாம் சேர்த்து ஒரே நாளில் போடணும். அப்போத் தான் காரம் மாவடுவில் ஏறும். வெயிலில் வைக்கணும் எனச் சொன்னதை எங்கே பார்த்தேன்னு யோசிக்கிறேன், நினைவில் வரலை! :(

      நீக்கு
    11. நெல்லை நான் போடுவது இப்படி இதைச் சொல்லிருக்கேனே கொஞ்சம் ஊறின பிறகு அரைத்துவிடுவது...

      கீதா

      நீக்கு
    12. LK உருண்டை வடு, நீட்ட வடு இரண்டும் இணைத்துதான் போட்டிருப்பதாய்ச் சொன்னார்.

      அப்போதே கேட்டேன், ஏப்ரல் 1 என்கிறீர்களே, ஏப்ரல் ஃபூல் செய்து விடுவீர்களா என்று!!!! இன்னும் வரவில்லை!​!!

      நாங்கள் முதல் நாள் மாலை கல்லு உப்பு போட்டால் மறுநாள்தான் அரைத்துவிடுவோம்.

      நீக்கு
    13. /@ஸ்ரீராம் - /இன்னும் வரவில்லை!​!!// - நீங்கள் எழுதியிருப்பதைப் பார்த்தால், தயிர் சாதம் ரெடியா வச்சுக்கிட்டு, மாவடுக்கு வெயிட் பண்ணறமாதிரி இருக்கே..... வடுவை எப்படித்தான் குழம்புசாதத்துக்குத் தொட்டுப்பீங்களோ... (இப்படி எழுதும்போதே... நான் புது மாங்காய் ஊறுகாயை குழம்புசாதத்துக்குத் தொட்டுக்கொள்வது நினைவுக்கு வருகிறது)

      நீக்கு
    14. கீசா மேடம்.... கீதா ரங்கன் இன்னும் சொல்லாததால் எழுதறேன். நான் 'அடை மாங்காய்' என்று பார்த்திருப்பது,

      கமலா ஆரஞ்சு அல்லது அதைவிட கொஞ்சம் பெரிய சைஸ் புளிப்பு மாங்காய்களை வாங்கி (20-30), அதன் கதுப்பை மொத்தமாக வெட்டிடாம திருத்தணும். அப்புறம் மிளகாய்பொடி/பெருங்காயம்/உப்பு/வெந்தயப்பொடி, மஞ்சப்பொடி கலவையை இரண்டு கதுப்பையும் தூக்கி அதுல அடைக்கணும். (இன்னும் வேற என்ன சேர்க்கணும்னு ஞாபகம் வரலை). அப்புறம் பரணில வைக்கணும். இதுபோலவே எல்லா மாங்காய்களையும் பொடி அடைத்து வச்சுடணும். ஊறினபிறகு- இரண்டு நாட்களிலேயே.. சாப்பிட மிக அருமையா இருக்கும்.

      நீக்கு
  7. தி/கீதா, நேத்து ராத்திரி தூங்க நேரமாகி இருக்கும். பாவம். அதான் வரலை. துரைக்கு வேலை அதிகமோ? ஞாயிறு அன்று அங்கெல்லாம் விடுமுறை இல்லையே! பூசார் தோசை தின்ன அலுப்பு! ஏஞ்சல் தான் ஈஸ்டர் வேலைகளில் மும்முரமாய் இருப்பாங்கனு நினைக்கிறேன். அநேகமாய் அதுக்கப்புறமாத் தான் வருவாங்க போல!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் கீதாக்கா 12 மணி ஆகிடுச்சு. அதான் காலைல வழக்கம் போல 4 மணிக்கு முழிப்பு கொடுத்தாலும் கண் சொக்கி எழ முடியலை. எழ 5.30 ஆகிடுச்சு. சமையல் வேலை...அதான் லேட்டு.

      எனக்கு இந்த ராத்திரி தூக்கம் மட்டும் மிஸ் ஆனா அடுத்த நாள் கஷ்டப்படுவேன்.

      இந்தப் பழக்கம் சின்ன வயசுலருந்தே பழகிடுச்சு..மிஞ்சிப் போனா 10 மணி அதுக்கு மேல தாக்குப் பிடிப்பது ரொம்பக் கஷ்டம். சனியும் எனக்கு சரியா தூக்கம் இல்லை நேற்றும்...

      கீதா

      நீக்கு
  8. வந்திருக்கும் நபர்களுக்கும் இனி வரப்போகும் நண்பர்களுக்கும் வணக்கமும், நல்வரவும் சொல்லிக்கிறேன். இப்போப் போயிட்டு அப்புறமா வரேன்.

    பதிலளிநீக்கு
  9. சொல்லிய விதம் அருமை படங்களைப் பார்க்கும்போது செய்து சாப்பிடும் ஆசை பிறக்கிறது.

    கடைசிப் படத்தை மிகவும் ரசித்தேன் (அசினை அல்ல) பீங்கான் பாத்திரத்தில் பிசின் போலிருந்த வடுமாங்காயை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கில்லர்ஜி.... இதெல்லாம் நாம் ரெகுலரா சாப்பிடுவதுதானே... இது நானே செய்ததால், இன்னும் கொஞ்சம் மகிழ்ச்சி...

      ஸ்ரீராமுக்கு அடுத்தவங்க மகிழ்ச்சியா இருக்கறது பிடிக்கலையா இல்லை 'அனுஷ்கா' ரசிகர்மன்றம் மட்டும்தான் அதிக மெம்பரோட இருக்கணும்னு நினைக்கறாரான்னு தெரியலை. இங்க 'அசின்' படம் என்று ஏதோ வயதான ஆன்'டி படம் போட்டிருக்கிறார்... எங்க 'அசின்' கட்சிக்கு 'அனுஷ்கா'லேர்ந்து ஆட்கள் போயிடுமோன்னு... பேசாம நானே ஒரு 'ந ல் ல, க வ ர் ச் சி யா ன' படத்தை இணைத்திருக்கலாம்.

      நீக்கு
    2. அசினோட ஒரிஜினல் படத்தைஇணைத்து விட்டார் நெல்லை! இப்போ வருத்தப்பட்டு என்மேல் பழியைப் போடுகிறார்!

      நீக்கு
  10. பதில்கள்
    1. வாங்க கரந்தை ஜெயக்குமார் சார்... என் பழைய மெயில் ஐடி போனதுக்கப்பறம் உங்க இடுகை லிங்க் கிடைப்பதில்லை. விரைவில் புது மெயில் ஐடியை இணைக்கிறேன்.

      நீக்கு
  11. என்னத்தை சொல்வேன் அசின் பாட்டுதான். நெ.தமிழன்.
    அங்கே சென்னையில் மாவடு ,எங்க வீட்டில வந்து மாங்காயும் வந்ததாகச் சொன்னார்கள்.

    உங்கள் வடு பார்க்கவே அழகா இருக்கிறது. என் பாட்டி பெரிய வடுதான் போடுவார்.
    நான் எங்க வீட்டு மாவடுவைப் போட்டுக் குழந்தைகளுக்கு அனுப்புவேன்.


    கோடைக்குத் தயிர்சாதமும் மாவடுவும் சூப்பர் தான்.
    அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வல்லிம்மா.... இனிய மாமரம் இருக்கும் வீட்டில், சீசன் சமயத்தில் நீங்க இல்லையே.... நான் இருக்கும் இடத்தில் ஏகப்பட்ட மாமரங்களைப் பார்கிறேன். காய்த்திருக்கிறது... அனேகமா எல்லாமே வீணாகும்னுதான் தோணுது (ஒவ்வொரு காம்பவுண்டிலயும் ஒரு மாமரம்).

      உங்கள் மாவடு நினைவுகளைக் கிளறியதில் மகிழ்ச்சி....... இப்போல்லாம் குளிர்ந்த தயிர் சாதமே பார்க்க முடிவதில்லை....

      நீக்கு
  12. அனைவருக்கும் வணக்கம்...
    வாழ்க நலம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க துரை செல்வராஜு சார்... இன்னைக்கு லேட் மாதிரி தெரியுதே

      நீக்கு
    2. வணக்கம் துரை செல்வராஜூ ஸார்... தா.... மதம்!!

      நீக்கு
  13. இப்போது இங்கேயும் மாவடு வந்து விட்டது..

    ஏராளமாக கொட்டி வைத்திருக்கிறார்கள்..

    வாங்கி இப்படிச் செய்வதற்கு ஆசைதான்...

    ஆனாலும் ஒற்றை ஆளுக்கு எதற்கு இவ்வளவு?..

    எனவே மாவடு புராணத்தின்படி கொஞ்சமாக வாங்கி நறுக்கி உப்பு போட்டு வைத்துள்ளேன்.. வர்ற வெள்ளிக் கிழமை தாளிதம்....

    அனைவருக்கும் விருந்து -
    தயிர் சாதத்தோடு!...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்க ஊர்ல மாவடுவா (குவைத்ல)... ஆச்சர்யமா இருக்கே... நான் அங்க இருந்தபோது பார்த்தமாதிரி இல்லை.

      நானும் கோயமுத்தூரிலிருந்து (பாலக்காட்டிலிருந்து) தங்கம் பிராண் வடு, எலுமிச்சை ஊறுகாய், காணக்கொறைக்கு சக்கவரட்டிலாம் வாங்கிக்கொண்டு போயிருந்தேன். ஒருத்தனுக்கு எதுக்கு இவ்வளவுன்னு தோணலை. நிறைய வேஸ்ட் ஆகிவிட்டது.

      நீக்கு
    2. LuLu Mall மற்றும் சில Hyper mart களில் கிடைக்கிறது....

      நீக்கு
    3. மனசுல லுலு ஹைபர்மார்கெட்னு தோன்றியது... அங்கயும் மே மாசத்துல 'மாம்பழத் திருவிழா' லுலுல நடக்குதா? எங்க ஊர்ல எல்லா வருடமும் நடக்கும். முன்னெல்லாம் 60-70 வெரைட்டி மாம்பழங்களை விற்பாங்க. படங்கள்லாம் எடுத்து வைத்திருக்கிறேன். ஏதாவது இடுகைல அதை நுழைத்துவிடுகிறேன்...

      நீக்கு
    4. நெல்லைத்தமிழன் நீங்க அந்த இடங்களை இப்போ மிஸ் பண்ணுறீங்களோ? இல்லை எனில் அப்பாடா ஊரோடு வந்திட்டேன் என்பதுபோல இருக்கோ?

      நீக்கு
    5. அதிரா... மனசுல நான் சென்னைக்காரன் என்ற எண்ணம் இன்னும் வரலை. 25 வருடங்கள் வெளிநாட்டிலேயே இருந்திருக்கிறேன். இங்க, விசேஷங்களுக்குப் போகமுடியுது, கோவிலுக்குப் போகிறேன். புத்தம்புதிய காய்கறி வாங்கறேன். ஆனால் சவுகரியம்னு பார்த்தா வெளிநாடுதான்.

      மிஸ் பண்ணுறீங்களான்னு கேட்டா, அதுக்கு என்னிடம் பதில் இல்லை. கடந்த ஸ்டேஷன் மீண்டும் வருவது கடினம் அல்லவா?

      நீக்கு
  14. அருமை நான் சொன்னது மாவடுவைத்தான் அசினை அல்ல..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்க சொன்னது சரிதான் மதுரைத் தமிழன். போட்டிருக்கும் படங்களில் மாவடுதான் நல்லா இருக்கு. அசின் படம் அசிங்கமாத்தான் இருக்கு.

      நீக்கு
    2. ///போட்டிருக்கும் படங்களில் மாவடுதான் நல்லா இருக்கு. அசின் படம் அசிங்கமாத்தான் இருக்கு//

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்* கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அவ கேட்டாவோ கேட்டாவோ.. என் படத்தைக் காவிப்போய் எங்கள் புளொக்கில் போடுங்கோ என:)) தானே எடுத்து வந்து போட்டுவிட்டுத் தானே குறை சொல்றாரே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. இப்பூடித்தான் நம் பாலாரை மானபங்கப் படுத்துகிறார்கள் யுவர் ஆனர்ர்ர்ர்ர்ர்:)) இப்போ மாவடுவோ முக்கியம்.. வாங்கோ எல்லோரும் போராடுவோம் தேம்ஸ் கரையில:)).. மிச்ச பிசுக்கு ஓசையை நாளைக்குச் சுட்டிடலாம்ம்.. மி உண்ணாவிரதத்துக்கு ரெடீஈஈஈஈஈஈஈஈஈஈ:)..

      ஹா ஹா ஹா மா வடுவே நெல்லைத்தமிழனுக்குப் பெரிய வடுவை உருவாக்கிடும் போல இருக்கே:))

      நீக்கு
    3. அசின் ரசிகர் மன்றத்திலுருந்து எங்கள் அலுவலகத்துக்கு கண்டனக் கடிதம் வந்திருக்கிறது.

      நீக்கு
    4. @அதிரா - //மி உண்ணாவிரதத்துக்கு ரெடீஈஈஈஈஈஈஈஈஈஈ:)// - நினைத்தேன்... தட்டு நிறைய பீர்க்கங்காய் தோசை செய்து பாக்கெட்டில் பாக் பண்ணும்போதே தெரியும்... உண்ணாவிரதத்துக்கு ரெடியாயிட்டிருக்கீங்கன்னு....

      அந்தக் காலத்துல 'சலங்கை ஒலி' படத்துல நடித்த ஜெயப்ரதா அழகா இருப்பார். இரு நாட்களுக்கு முன்பு வேட்புமனு தாக்கல் செய்த (எம்.பி. எலெக்‌ஷனுக்கு) ஜெயப்ரதா படத்தைப் பார்த்தேன்....ம்ம்ம்ம்.. இதுதான் ராதா, அம்பிகா, மீனா.... போன்ற நடிகைகளின் கதை...

      ஆனா பாருங்க... அமிதாப்பச்சன்... வயது ஏற ஏற மெஜெஸ்டிக் ஏறிக்கிட்டே போகுதே... இது ஆண்கள் வாங்கிவந்த வரமா?

      நீக்கு
    5. ஸ்ரீராம் //ரசிகர் மன்றத்திலிருந்து எங்கள் அலுவலகத்துக்கு// - நான் அனுப்பலை அதை... எனக்குத் தெரியாது..

      நீக்கு
    6. //நான் அனுப்பலை அதை... எனக்குத் தெரியாது..//

      இந்தப் பேச்சுக்கெலாம் காரணம் ஸ்ரீராமும் கெள அண்ணனும் தான்:).. அவர்கள்தானே ஓசிச்சு.. எழுத்தாளரை வெளியே சொல்லிடாதீங்க நீங்க எழுதாதமாதிரியேஏஏஏஏஏஏஏஏஏஏஏ ஆக்ட் பண்ணுங்கோ என ட்ரெயின் குடுத்ததால பாருங்கோ.. நெல்லைத்தமிழன், தன் கதை.. அதாவது பாகம் மூணு:)) ஹா ஹா ஹா வெளிவந்தபோது:), தான் எழுதாததுபோல என்னா ஒரு அழகா ஆக்ட் பண்ணினாரோ அதையே இப்பவும் தொடர்றார்ர்:))..
      இப்போ ஸ்ரீராமின் நிலைமை
      1.பொல்லுக்குடுத்தே.... அல்லது
      2.ஜொந்தச் செலவிலேயே..
      எதை வேணும்னாலும் வச்சுக்கோங்ங்ங்ங்ங்க:)) ஹா ஹா ஹா

      நீக்கு
  15. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  16. நெல்லைத்தமிழன், மாவடு ஊறுகாய் படித்துக் கொண்டு இருக்கும் போது நல்லெண்ணெய் 2 ஸ்பூன் என்று போட்டு இருக்கே!

    விளக்கெண்ணெய் அல்லவா நமக்கு சொன்னவர்கள் சொன்னார்கள் என்று நினைத்தேன், நீங்கள் கீழே சொல்லி விட்டீர்கள்.

    படங்களுடன் மிக அருமையாக இருக்கிறது. எங்கள் சாரும் ஊறும் முன் சாப்பிட்டு விடுவார்கள்.

    திருவெண்காட்டில் எங்கள் வீட்டுக்கு அருகில் மாந்தோப்பு இருந்தது அங்கு போய் வாங்கி வருவோம், நானும் எனக்கு மாவடு ஊறுகாய் போட சொல்லிக் கொடுத்த திருவெண்காடு கோவில் குருக்கள் பெண்ணும். (வித்யா) இன்னும் மறக்க முடியாத பசுமையான நினைவுகள்.

    உப்பை பாதி இடித்தும், பாதி அப்படியே போட சொன்னார்கள் கல் உப்பை அப்படியே போட்டால் நிறைய நீர் விட்டு விடும் என்பார்கள். மிளகாய், கடுகு, பச்சை மஞ்சள் நல்ல விழுதாக அரைத்து (கட்டியாக) பிசறி விட வேண்டும்.

    மாயவரத்தில் வடுமாங்காய் கிடைக்கும் ஆனால் நீங்கள் சொன்னது போல் பொறுக்கி எல்லாம் எடுக்க முடியாது.அவர் போடுவதை வாங்க வேண்டும். அழுகல் இருந்தால் எடுத்து கொடுங்க வேறு தருகிறேன் என்பார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோமதிக்கா நானும் உப்பை பாதி பொடித்துப் போடுவேன்.

      அப்புறம் மாவடு உப்பில் கொஞ்சம் ஊறிய பிறகு அந்த நீரைக் கொண்டே கடுகு, மிளகாய் வற்றல் மஞ்சள் எல்லலாம் முதலில் பொடித்துக் கொண்டு அந்த நீரை விட்டு மையாக அரைத்துப் போடுவது...அம்மா பாட்டி, மாமியார் போடுவதில் கற்றது.

      கீதா

      நீக்கு
    2. கோமதி அரசு மேடம்... வாங்க.

      திருவெண்காடு, கோவில், மாயவரம் ம்ம்ம்ம்ம்ம் நல்ல நல்ல இடங்களில் எல்லாம் வாழ்ந்திருக்கீங்க. உங்கள் மெதடைக் குறித்துக்கொண்டேன்.

      பழமுதிர்ச்சோலை, அப்புறம் நான் வாங்கும் கடை இவற்றில், பொறுக்கி எடுத்தால் ஒன்றும் சொல்லமாட்டாங்க. பஹ்ரைனிலும் நான் காய் வாங்கும்போது பொறுக்கி எடுப்பேன் (வெண்டை.. வெங்காயம் எது வென்றாலும்). ஆனால் சென்னையில் தொட விடமாட்டார்கள். பொறுக்கக்கூடாது பொறுக்கினா, இரண்டு மடங்கு காசு தரணும்னு சொல்லிடறாங்க.

      நீக்கு
  17. விளக்கெண்ணெயை மாவடு முழுவதும் தடவ சொன்ன காரணம் மாவடு சூட்டைத் தரும் . விளக்கெண்ணெய் குளர்ச்சி. அதுதான் காரணம் என்றார்கள். அப்புறம் உரைப்பும் நிறைய மாவடுக்குள் இறங்காது என்றும் காரணம் சொன்னார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்க சொல்றது சரி கோமதி அரசு மேடம்... நல்லெண்ணெயும் நல்லாத்தான் இருந்தது.

      நீக்கு
  18. பதில்கள்
    1. வாங்க திண்டுக்கல் தனபாலன். இது, 'எச்சிலூறும்' 'ஸ்ஸ்ஸ்ஸ்'ஆ இல்லை சீறும் 'ஸ்ஸ்ஸ்'ஆ?

      நீக்கு
  19. நெல்லை அட்டகாசமா இருக்கு மாவடு பார்க்கவே!

    என் அம்மா, பாட்டியின் அளவும் இதேதான்...8 ற்கு 1 உப்பு.

    கிலோ கணக்கில் தெரிய வேண்டும் என்றால் ஒரு கிலோ மாவடுவிற்கு 200 கிராம் கல் உப்பு. இது நான் அளந்து கற்றுக் கொண்டது என் தங்கைகளுக்குச் சொல்ல வேண்டி வந்த போது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கீதா ரங்கன்... எனக்குத் தோணுது... 8க்கு 1 உப்பு அதிகம்னு. 1/2 உப்பு போட்டாலே போதும்னு நினைக்கறேன்.

      நீக்கு
  20. நானும் போட்டாச்சு மாவடு. இங்கு பங்களூரில் காந்தி பஜார் போனப்ப நிறைய வைத்திருந்தார்கள் நடைபாதையில். ஒரு கிலோ மாவடு 150 ரூபாய். நன்றாக இருந்தது. ஒரே சைசாகப்ப் பொறுக்கி விற்பனைக்கு வைத்துக் கொண்டிருந்தார். இரு வகையும் கலந்து இருந்தது. உருண்டையும், கிளிமூக்கு போல இருப்பதும்...என்றாலும் எனக்கு வந்தது கிளிமூக்கு வடிவம் தான்.. 120 க்குக் கொடுத்தார்.

    நெல்லை நான் எண்ணெய் சேர்க்காமலும் செய்வேன். சேர்த்தால் விளக்கெண்ணெய்தான். கொஞ்சமே கொஞ்சமாக.

    வெந்தயப்பொடி சேர்ப்பதில்லை. மிளகாய் வற்றல், கடுகை வெயிலில் காய வைத்துவிட்டு மஞ்சள் கிழங்கோடு (சின்னதாய் தட்டிக் கொண்டு) மிக்ஸியில் பொடித்துப் போடுவதுதான்..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதா ரங்கன்... கிளிமூக்கு வடு-கொஞ்சம் பெரியதாக இருந்தால்தான் (அதாவது, வெறும்ன கடித்துச் சாப்பிட்டால் கொஞ்சம் புளிப்பு இருக்கணும்) நன்றாக இருக்கும். இல்லைனா கைக்கும்.

      நங்கை நல்லூரில் நிறைய வடு பார்த்தேன்... 120-130ரூ இருக்கலாம் (ஆனால் பொறுக்கவிட மாட்டார்கள்). இங்க கடையில் அவர்கள் ஒன்றும் சொல்லவில்லை. புதுசா அப்போ வந்தது, உடனே பெரிய சைசெல்லாம் பொறுக்கிஎடுத்துக்கொண்டேன்.

      நீங்கள் போட்ட மாவடு படத்தைப் பகிர்ந்துகொள்ளவில்லையே...

      நீக்கு
  21. இங்கு திருவனந்தபுரத்தில் மாவடு இரண்டு சைஸ்களாக பிரித்து கொஞ்சம் பெரியஸைஸை கன்னி மாங்கா என்றும், சிறிய சைஸ் கடு மாங்கா என்றும் ஊறுகாய்க்கு அச்சார் என்றும் கூறுவார்கள்.
    புளிசேரி அன்னமும் உப்பு மாங்காயும் தான் குருவாயூரப்பனுக்கு நைவேத்தியம். அதே போன்று பத்மநாப சாமி கோயிலில் ஒரு கண் துளையுள்ள தங்க தேங்காய் சிரட்டையில் (ஓடு) மாங்காய் அல்லது உப்பு மாங்காய் நெய்வேத்தியம் செய்யப்படும்.
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னாத்தச் சொல்வேனுங்கவா? அதான் எதையும் விடாம அழகா சொல்லுரேங்களே!!!!!! கார வடுமாங்காயிது. பாலக்காட்டு பக்கத்தில் இந்தமுறைதான் ஜாஸ்தி. நல்ல காரஸாரமாயிருக்கும்.சின்னபசங்களுக்கு வேணுமானால், தொட்டுக்கொள்ள கத்தியால் நறுக்கி ஒருதுண்டு போடுவார்கள். தங்கம்மார்க் வடுவும் நல்ல காரமாகத்தான் இருக்கும். வடுமாங்காய்க்குக் காரம் போட மிளகாய் விதைகளை நீக்கிவிட்டு பொடிசெய்து போடவேண்டும் என்பார்கள். அதுவும் வஸ்த்ரகாயம் என்பார்கள்.மிகவும் நைஸான பொடிக்கு அந்த பெயர். துணிமாதிரி கண்ணுள்ள சல்லடையில் சலித்ததோ என்னவோ? நான் மும்பையிலும் வடுமாங்காய் கிடைத்துப் போடுவதுண்டு. பரித்த வடுபோல நீண்ட காம்புகளைக் கொண்டது. அதையும் சேர்த்து நிறுத்திக் கொடுப்பார்கள். காம்புகளே பாதி எடையில் நாம் நீக்கும்போது போய்விடும். கடுகு,மஞ்சள் மிளகாய்இவைகள் அரைத்துப் போடுவதே வழக்கம். விளக்கெண்ணெய் வழக்கம். ஆனால் வாங்குவதில்லை. துளி நல்லெண்ணெய்தான். இப்போது நான்கு வருஷமாக வடுமாங்காய் நினைவில் வந்து போகிறது.
      படங்களும்,பதமும் அசத்தலாக இருக்கிறது. வடுக்கென கடுகு மாங்காய்,சுண்டகீரை வடாப்யாம்,பழகின புளியிஞ்சி,பாக்யவந்தோல வந்தே என்று பாட்டி சொல்லுவார். பழயது தஹி மிச்ரம்.பழையசாதம், தயிருடன் சாப்பிடுபவர்களுக்கு என்று அர்த்தம் கொள்ள வேண்டும். மனம்கவர் வடுமாங்காயாக உங்களின் பதிவு. வழக்கம் போல என் பின்னூட்டம் என்று பதிலிடுவீர்கள்.அன்புடன்

      நீக்கு
    2. வாங்க ஜெயக்குமார் சார்... புளிசேரி அன்னம் - எனக்குப் புரியலை. மாங்காய் நெய்வேத்தியம் - படித்த மாதிரி இருக்கு. உங்கள் கருத்தைப் படித்ததும் சில வருடங்களுக்கு முன்னால் திருவனந்தபுரம் வந்து, பத்மநாபசுவாமி ஆலயத்துக்குப் போயும் நிறைவான தரிசனம் கிட்டாதது நினைவுக்கு வந்தது...

      நீக்கு
    3. வாங்க காமாட்சி அம்மா... இப்போல்லாம் நீங்க எல்லா இடுகைக்கும் வரணும்னு தோணும்.... ஆனா உங்க சவுகரியம் எப்படியோன்னும் தோணும். நீங்க வந்து நீண்ட கருத்துரை எழுதினதில் மிக்க மகிழ்ச்சி.

      //பாலக்காட்டு பக்கத்தில்// - ஆமாம்... அதுதான் எனக்கு இன்ஸ்பிரேஷன். நீங்க பாலக்காடு போயிருக்கீங்களோ? நான் இருமுறை போயிருக்கேன்... அங்கேயே வீடு வாங்கிக்கொண்டு வாழ்ந்துடலாமான்னும் நினைத்திருக்கேன்.

      /காம்புகளே பாதி எடையில்// - இங்கயும் கடையில் அப்படித்தான் இருந்தது. நான் பாதிக்குமேல் காம்பை ஒடித்துவிட்டுத்தான் பாத்திரத்தில் போட்டேன் (எடைபோட்டு வாங்க). நம்ம சிக்கனபுத்தி போயிடுமா? ஹாஹா.

      /பழயது தஹி மிச்ரம்.//-உண்மைதான்... ஆனால் இதெல்லாம் எங்க கிடைக்குது இப்போ.. அப்படியே ஒருவேளை ஆசையில் சாதத்தை நீர்விட்டு வைக்கச்சொன்னால், கொச கொசவென்றிருக்கிறது.

      நீக்கு
  22. மாவடு ரெசிபி பிரமாதம்.. நானும் விளக்கெண்ய் தான் விடுவேன்..மிளகாய், கடுகு, உப்பு அரைத்து விடுவேன்..சென்ற வருடம் ஏறக்குறைய 5 கி வாங்கிப் போட்டு உறவுகளுக்கும், நட்புகளுக்கும் கொடுத்தும் மீதமிருக்கிறது...அதனால் இந்த வருடம் போடவில்லை..சிவகங்கையிலுள்ள என் தாய்மாமா சென்ற வருடம் போல் இந்த வருடமும் போட்டுத் தர சொல்லியிருக்கிறார்..:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஆதி வெங்கட். என் பெண்ணெல்லாம், வாரத்தில் ஒரு ஐட்டம் ஒரு முறைக்கு மேல் வந்தாலே, போரடிக்குது.. இப்போதைக்கு வேண்டாம் என்று சொல்லிடுவா. அப்புறம் எங்க மாவடு செலவழியறது?

      நான் இரண்டு முறை மாவடு செய்துவிட்டேன். முதலில் செய்ததில் (இந்தப் படம்) இன்னும் 20 மிஞ்சி இருக்கு. புதுசா ஒரு 30 வடு போட்டிருக்கேன்.

      5 கிலோ வாங்கும்போது, வாடின, ரொம்பச் சிறிய மாவடுலாம் தள்ளிவிட்டுட மாட்டாங்களா?

      நீக்கு
  23. அசினுக்கும் மாவடுக்கும் என்னங்க சம்பந்தம்???

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சொக்கன் சுப்ரமணியம் சார்... நீங்க இவ்வளவு அப்பாவின்னு எனக்குத் தெரியாமப் போயிடுச்சே. (எபி ஆசிரியர் ஸ்ரீராமும் அப்படித்தான். அவருக்கு அனுஷ்காவை விட்டால் வேறு யாரும் தெரியாது போலிருக்கு. அசினுக்குப் பதில் பிசின் படத்தைப் போட்டிருக்கிறார்)

      நீக்கு
    2. அசின் வடுமாங்காய் போல இருக்கிறார் என்று நெல்லை சொல்ல விரும்புகிறார்!!!

      நீக்கு
    3. ஸ்ரீராம்... நீங்கள் செய்ய முயல்வது 'மத மாற்றம்'. நான் என்னுடைய 'தமன்னா மத'த்தை விட்டு வெளியே வரமாட்டேன்... அதிலும் திருமணமான அசினா? ஐயகோ....

      நீக்கு
  24. //வெடுக் வெடுக் என்று மிக அருமையாக இருந்தது.//

    ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்:) வெடுக் வெடுக்கெனக் கோபம்தான் வரும் என்பினம் இது என்ன சுவையோ:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்க நேற்று செய்த தோசையைவிட, உங்கள் புதுப் பட்டம்தான் ரொம்ப பயமுறுத்துது. ஒருவேளை, வாளி நிறைய தோசை சாப்பிடுவதால், "தோசை வாளி" என்ற பட்டம் வைத்துக்கொண்டீர்களோ, எழுத்துப் பிழையுடன்?

      நீக்கு
    2. அது நெல்லைத்தமிழன் தோசை வாலா வின் பெண் பதம் தோசை வாலி டாக்சி வாலா , டப்பா வாலா சோன் பப்டி வாலா மாதிரி

      நீக்கு
    3. சே...சே.... இங்கின எல்லோருக்கும் டமில் படிப்பிச்சதுபோல இனி ஹிந்தியும் நானே ஜொள்ளிக்குடுக்கோணும் போல இருக்கே:) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இது என்ன ஸ்கொட்லாந்துக்கு வந்த ஓதனை வைரவா:)).. அது டமில்+ஹிந்தி:) ஆக்கும் அதாவது “தோசை ஸ்பெஷலிஸ்ட் அதிரா” என அர்த்தம்:)).. ஆங்ங்ங்ங் மீ இப்போ தேம்ஸ் கரையில உண்ணாவிரதம் ஆரம்பிக்கிறேன்ன்ன்ன்ன்ன்ன்:))..

      நீக்கு
    4. @ஏஞ்சலின் - //தோசை வாலா வின் பெண்// - தெரியும்... இப்போதானே இந்த वाला லாம் படித்தேன்.

      "எழுத்தில் குற்றமில்லை. இருந்தாலும் மன்னிக்கப்படலாம். ஆனால் பொருட் குற்றம் உண்டு."
      "என்ன குற்றம் கண்டீர்..கூறும்..கூறும்..கூறிப்பாரும்"
      "வாழ்க்கைல ஒரு தடவையாவது தோசை செய்து அதைப் படமெடுத்துப்போட்டிருந்தால், அப்போது ஒத்துக்கொண்டிருக்கலாம். தோசை படம்கூட கூகிளிட்டு காவி வந்து போடுபவர், 'தோசை வாலி' என்று வைத்துக்கொண்டால் அதை எப்படி மன்னிப்பது?"
      "நக்கீரரே... நீர் சொல்வது சரி... அதிராவுக்கு இப்போதே அட்வைஸ் பண்ண யாம் கிளம்பிவிட்டோம்"

      நீக்கு
    5. ///அப்போது ஒத்துக்கொண்டிருக்கலாம். தோசை படம்கூட கூகிளிட்டு காவி வந்து போடுபவர், 'தோசை வாலி' என்று வைத்துக்கொண்டால் அதை எப்படி மன்னிப்பது?"///

      https://www.youtube.com/watch?v=sCexB6qID_A

      நீக்கு
  25. //மோர் சாதத்துக்கான நல்ல துணைவன் மாவடுதானே. //

    எனக்கொரு டவுட்டூஊஊஊஉ அப்போ மோர்ச் சாதம் பெண்ணோ?:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @அதிரா - இல்லை... மோர் சாதம் ஆண். மாவடு பெண். கொஞ்சமா கடிச்சிக்கிட்டு மோர் சாதம் சாப்பிட்டோம்னா நிறைய சாப்பிடலாம். நிறைய கடிச்சுக்கிட்டோம்னா, அவ்வளவு சாப்பிடமுடியாது.

      பெண்களையும், கொஞ்சமா ஊறுகாய் மாதிரி லைஃபில் வச்சிருந்தோம்னா, வாழ்க்கை இனிமையா இருக்கும். ரொம்ப அவங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தா வாழ்க்கை சரிவராது

      இந்தத் தத்துவத்தை புலாலியூர் பூசானந்தாவிடமிருந்து காவி வந்திருப்பவர் - "நான் அவனில்லை"

      நீக்கு
    2. ஹா ஹா ஹா அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும்....:))).

      ///ரொம்ப அவங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தா வாழ்க்கை சரிவராது/
      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்*கர்ர்ர்ர்ர்ர்ர்:))

      நீக்கு
  26. //இணையதள உணவுப் புலிகள்//

    உங்களை நீங்களே ரொம்ம்ம்ம்ம்ம்பப் புகழக்கூடாதூஊஊஊ:)).. உணவுப்புலிகள் எனில் இப்போதைக்கு நீங்களும் ஸ்ரீராமும் தேன்ன்ன் வேணுமெண்டால் கோபு அண்ணனை இணைக்கலாம்:))..

    ஆனா சமையல் புலிகள் எனில்.. அதுக்குள்ள நாங்க முதலில் வருவமாக்கும்:)) ஹா ஹா ஹா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்க என்னைத் திட்டுங்க அதிரா... அதைக்கூட தாங்கிக்கொள்வேன். ஆனால் 'உணவுப் புலியில்', கோபு சாரோடு என்னை கம்பேர் பண்ணாதீங்க.

      அவரை, அவர் வீட்டில் பார்க்கப்போனபோது, ஏகப்பட்ட மிக்சர், பொரி, காராசேவு, வடை, தேன்குழல், இனிப்பு வகைகள் கொண்ட பாக்கெட்டுகளுக்கு நடுவில் சட்னு கண்டுபிடிக்க முடியாதபடி ஒளிந்துகொண்டிருந்தார் (இதை எங்க கோபு சார் வந்தா மறுக்கப் போகிறார்... அடிச்சுவிடவேண்டியதுதான்)

      நீக்கு
    2. ஹா ஹா ஹா இல்ல அவரே சொல்லியிருக்கிறார்ர் அவர் கட்டில் சட்டமெல்லாம்.. குழந்தைகள் பிராமில் பொம்மைகள் தொங்குவதைப்போல, இவருக்கு நொறுக்குத் தீனி தொங்குமாமே ஹையோ ஹையோ:))

      நீக்கு
    3. எப்படியோ எங்கட அதிரடி அதிராவும், கிட்சன் கிங் நெல்லைத்தமிழன் ஸ்வாமியுமாக கூட்டு சதி செய்து, ஸ்பெஷல் தகவல் கொடுத்து என்னை இங்கு வரவழைத்து விட்டீர்கள். மிக்க மகிழ்ச்சி.

      இந்த மாங்காய்ப் பதிவினை தலையோடு கால் படித்து முடித்து விட்டேன். மற்றவர்களின் பின்னூட்டங்களை இன்னும் விரிவாகப் படிக்கவில்லை. அது கிடக்கட்டும். அவையெல்லாம் ஒன்றும் முக்கியம் இல்லை. முக்கியமான விஷயத்திற்கு நேரிடையாக வருகிறேன்.


      //செய்முறை: மாவடுவை நன்றாக அலம்பிக்கொண்டுவிட்டு, காம்பை கட் பண்ணிடுங்க.//

      காம்புப் பகுதியைத் தொட்டாலே பிஸின் போல இருக்குமே. அதனால் நன்றாக அலம்பி விடத்தான் வேண்டும் எனச் சொல்லியிருக்கேள். சபாஷ்.

      காம்பை கட் செய்தால் மாங்காய்க்கு வலிக்காதோ?

      மேலும் காம்பைத் திருகினாலோ, கட் செய்தாலோ அங்கிருந்து குபுகுபுன்னு பால் வருமே. அதை என்ன செய்வது எனச் சொல்லவே இல்லையே, ஸ்வாமீ.

      நீக்கு
    4. வாங்க வாங்க கோபு சார்.... உங்கள் வருகை அடுத்த ஆறு மாதங்களுக்குத் தொடருமா? ஏனென்றால் சென்ற ஆறு மாதங்கள் தாங்கள் ரெஸ்ட் எடுத்துக்கொண்டிருந்ததுபோல் தோன்றியது... எந்தத் தளத்திலும் தங்கள் எழுத்தைப் பார்க்கமுடியாததால்.

      'கிட்சன் கிங்' என்று எனக்கு புதிதாக ஒரு 'அடைமொழி' (இந்த அடை வேற... உங்க 50 கிராம் பால் பெருங்காயம் சேர்த்த 'அடடா அடை' இல்லை) சேர்த்திருக்கீங்க. நல்லவேளை உங்கள் வீட்டில் இதைப் படிக்கமாட்டார்கள். படித்தால், 'இத்தனை நாள் 50 கிலோவிலிருந்து 85 கிலோவாக ஆக்கியிருக்கேன்..கிட்சன் குயின் என்று ஒரு நாளும் பட்டம் தரலை..இது யாரோ ஊர் பேர் தெரியாத ஆளுக்கெல்லாம் பட்டம் வழங்கறீங்க' என்று சொல்லி இரவு உணவு கட் ஆகிவிடப்போகிறது... பார்த்து..

      நானும் 'தலைப்புப் பாடலைப் பாடியது நடிகை அசின்' என்பதால் அவரது படம் வந்தால் நல்லது என நினைத்தேன். இப்போ மாங்காய் 'பிஸின்' இருப்பதால் 'அசின்' படம் கண்டிப்பா இருக்கணும்னு நினைக்கிறேன்.

      //காம்பை கட் செய்தால்// - நான் ரொம்ப ஜாக்கிரதையான ஆளு கோபு சார். ஒவ்வொரு மாவடுவின் காம்பையும் கட் செய்வதற்கு முன் அந்த மாவடுட்ட அனுமதி வாங்கிக்கிட்டேன். கட் பண்ணின பிறகு, வலிக்குதா என்று கேட்டபோது அது ஒன்றும் சொல்லலை. அதுனால வலிச்சிருக்காது.

      வருகைக்கு நன்றி. தொடர்ந்து வாருங்கள்.

      நீக்கு
  27. மாவடு பார்க்க ஆசையாக இருக்கு. சூப்பராக செய்திருக்கிறீங்க.. முடிச்சிட்டீங்களோ இல்ல இன்னும் இருக்கோ?:)..

    நான் யூ ரியூப்பில் பலதடவை பார்த்து வச்சிருக்கிறேன், ஆனா இதுவரை செய்ததுமில்லை சாப்பிட்டதுமில்லை, இங்கு எப்போதாவது மாவடு பார்த்திருக்கிறேன்.. இனிக் கிடைச்சால் வாங்கிச் செய்யலாம். எனக்குப் பயம் அதெப்படி அப்படி மாங்காய் ஊறி மெலிஞ்சு குட்டியாக ஊறுகாயாக வரும் என நினைச்சு.. உள்ளே எப்படி உப்பு உறைப்பு ஊறும்? நீங்க அடையாளப்படுத்தவில்லையே...

    ////நான் வடு நன்றாக ஊறியபிறகு படம் எடுத்து இடுகை அனுப்பலாம்னு நினைத்தேன்//
    அப்போ படத்தில இருப்பது இன்னும் ஊற வேண்டுமோ?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //மாங்காய் ஊறி மெலிஞ்சு குட்டியாக ஊறுகாயாக வரும் என நினைச்சு..//

      சாமீ கடவுளே :) அது பிஞ்சு குட்டி பிஞ்சுங்க குட்டியாத்தான் இருக்கும் .பிக்கிள் என்றால் osmosis ப்ராஸஸ்னு அதான் உப்பு ஊறுது

      நீக்கு
    2. என்னதான் குட்டி எனினும் தோல் மிகத் தடிப்பெல்லோ அஞ்சு., அப்போ எப்பூடி உள்ளே ஊறும்?.... நான் ஆரம்பம் அது என்னெண்டே தெரியாமல் வாங்கி வந்தேன்.. எனக்கு வரும்போதே பாதி காரில சாப்பிட்டு முடிச்சிடுவேன்:)).. உப்போடு சாப்பிடவே வாங்கி வருவேன்... எங்கள் வீட்டில் ஆரும் மாங்காய் தொட மாட்டினம்.. ஊறுகாய் எனில் மட்டும் மூத்தவருக்கு பிடிக்கும்.

      நீக்கு
    3. அதிரா... தைரியமா, நான் சொல்லியிருக்கிற மெதட்ல, 10 மாவடு மட்டும் போடுங்க (அளவை அதுபோல குறைச்சுக்கோங்க. உப்பு நான் சொன்னதைவிட குறைவாக போடுங்க). நல்லாவே இருக்கும் உங்களுக்கு.

      நீக்கு
  28. //லண்டன், ஸ்காட்லண்ட்லலாம் இது எங்க கிடைக்கப்போகுது. //

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) இங்கு கிடைக்கும், அடிக்கடி போய்ப் பார்க்கோணும்.. ஆனா கடையில மாங்காய் ஊறுகாய்தான் கிடைக்கிறது.. மாவடு என பார்த்ததில்லை, இனிப்போனால் பொறுமையாக தேட வேண்டும்.

    சனிக்கிழமை போய் வந்தோம், மாங்காய் இருந்ததே..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதிரா.. நல்லா இந்தியன் மாங்காயா இருந்ததுனா, அதுல ஒருமுறை மாங்காய் சாதம் செய்துபாருங்க.... நல்லா இருக்கும். எபிலதான் செய்முறை இருக்கு.

      நீக்கு
  29. ///பின்குறிப்பு: இடுகைல நான் ஏதும் நடிகை படத்தைச் சேர்க்கவில்லை. தலைப்பைப் பார்த்து எங்கள் பிளாக் ஆசிரியர்களில் யாரேனும் அசின் படத்தைச் சேர்த்தால் அதுக்கு நான் பொறுப்பில்லை//

    வர வர எங்கள் புளொக்கில ஏதோ மர்மம் நடக்குது:)) ஆர் கதை எழுதுவோர் என்பதையே இன்னும் கண்டு பிடிக்க முடியல்ல:)).. போகிற போக்கைப் பார்த்தால் ஸ்ரீராம் , கெள அண்ணனின் மருமகன் அல்ல .. மருமகள் எனச் சொன்னாலும் சொல்லிடப்போகினமோ எனப் பயம்ம்ம்ம்ம்ம்ம்மாக்கிடக்கூஊஊஊஊஉ:) ஒரு பாதிப்படம் கூடப் பார்க்கலியே:)) ஹா ஹா ஹா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதிரா... கதை எழுதறதுக்கு, அதுவும் இந்த டாபிக்குக்கு கொஞ்சமாவது கர்நாடிக் பாடல், ராகம் தெரியணும். எனக்கு என்னவோ 'குரோம்பேட்டை குறும்பன்' கைவண்ணம் கதைல இருக்கறமாதிரித்தான் தெரியுது.

      ஆனா பாருங்க... ஸ்ரீராம், விரதத்தில் இருக்கார் ("உண்மையே பேசுவதில்லை" என்ற விரதம்). அதனால உண்மை இப்போதைக்கு வராது.

      நீக்கு
  30. //என்னாத்தச் சொல்வேனுங்கோ - - நெல்லைத்தமிழன் //
    தலைப்பு அசினுக்கானதோ இல்ல மாவடுவுக்கானதோ:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது அசினுக்கானதேதான்!!! நெல்லையின் மாவடுவுக்கு அசின் அம்பாசிடராம்!! பாருங்க தோசைவாலி தமனாக்காவை விட்டுப் போட்டு அசினை அம்பாசிடர் ஆக்கியிருக்கிறார் நெல்லை!

      நல்ல காலம் அனுஷ் படம் போடலை!

      கீதா

      நீக்கு
    2. தமனாக்கா மாவடு அம்பாசிடரா வரமாட்டேனுட்டாங்களாம்...

      அதான்!!

      கீதா

      நீக்கு
    3. //நல்ல காலம் அனுஷ் படம் போடலை! // - நான் மாத்திரம் 'என்னாத்தைச் சொல்லுவேங்கோ' என்பதற்குப் பதில் 'ஒரே ஓர் ஊரில் ஒரே ஓர் ராஜா' (பாஹுபலி 2) என்று தலைப்பை வச்சிருந்தேன்னா, விதவிதமா அனுஷ்கா படமே போட்டு, திங்கள் வரை வெயிட் பண்ணாமல், அனுப்பின மறுநாளே ஸ்ரீராம் வெளியிட்டிருப்பாரே... நான் 'அசின் பாடல்' தலைப்பு வச்சதுல அவருக்குக் கோபம்னு நினைக்கிறேன். பாருங்க... படம் செலெக்‌ஷனில் காண்பிச்சுட்டார்.

      நீக்கு
    4. @கீதா ரங்கன் - /தமனாக்கா / - நான் 'நெல்லைத் தம்பி'... அவுங்க 'தமனாக்கா'வா? இந்தப் பெண்களையே புரிஞ்சுக்க முடியலை... ஸ்ஸ்ஸ்ஸ்.. அப்ப்பாடா....

      நீக்கு
    5. இது சரிவராது கீதா:) அடிக்கடி கட்சி மாறித்தாவுகினம்:)) நாங்க உண்னாவிரதம் ஆரம்பிப்பதுதான் நல்லது:))..

      ///இந்தப் பெண்களையே புரிஞ்சுக்க முடியலை... ஸ்ஸ்ஸ்ஸ்.. அப்ப்பாடா....//

      ஹா ஹா ஹா..
      பெண்ணோடு தோன்றி..
      பெண்ணோடு வாழ்ந்தும்...
      பெண்மனம் என்னவென்று புரியவில்லையேஏஏஏஏஏஏஏ:))..

      சிட்டுவேஷன் சோங் போகுது பிபிசி ல:))

      ஹா ஹா ஹா

      நீக்கு
    6. // தமனாக்கா மாவடு அம்பாசிடரா வரமாட்டேனுட்டாங்களாம்... //

      தமன்னா 'கம்னு இருங்கண்ணா' என்று விட்டாராம்!

      நீக்கு
    7. அதிரா நான் எங்க கட்சி தாவினேன்...மீ ஸ்வீட் அனுஷ்க்கு சப்போர்ட்டாக்கும்...தமன்னாவே வரலை அப்புறம் எதுக்கு அனுஷ் மாவடுக்கு!!!??? அவங்க ஸ்லாட் ஸ்பெஷல் விசாலக் கிழமையாக்கும்!!!

      கீதா

      நீக்கு
    8. @அதிரா - //பெண்ணோடு தோன்றி.. பெண்ணோடு வாழ்ந்தும்...// - இதைவிட

      பெண் மனசு ஆழமென்று ஆம்பளைக்கு தெரியும்
      அது பொம்பளைக்கும் தெரியும்
      அந்த ஆழத்திலே என்ன உண்டு யாருக்குத் தான் தெரியும்
      அது யாருக்குத் தான் தெரியும்
      அதில் முத்திருக்கா முள்ளுக் கொத்திருக்கா
      அது யாருக்குத் தான் தெரியும் ...அது யாருக்குத் தான் தெரியும் (என் ராசாவின் மனசிலே படப் பாடல்..இளையராஜா)

      நீக்கு
    9. தமன்னா 'கம்னு இருங்கண்ணா' என்று விட்டாராம்!//

      ஹா ஹா ஹா ஹா அப்படிப் போடுங்க!! ஸ்ரீராம்!!

      நெல்லை .நீங்க சிலப்போ தம்பி சிலப்போ அண்ணே...அப்பப்ப சிச்சுவேஷங்கு ஏத்தாப்புல!!

      கீதா

      நீக்கு
    10. கீதா, கட்சி மாறித்தாவுறது எனச் சொன்னது நெல்லைத்தமிழனையாக்கும்:) அவசரப்பட்ட்டிட்டீங்களே. அம்பிகாபதியைப்போல:)) ஹா ஹா ஹா:)). இதில ஆரு ஆண்?.. அம்பிகாபதியோ அமராபதியோ எனக்கு எப்பவும் உள்ள டவுட் இது???

      நீக்கு
    11. @அதிரா - அம்பிகாபதி, அமராவதி .... நீங்க எல்லாருக்கும் 'பதி'ன்னு போட்டு குழப்பிக்கிட்டீங்க. அம்பிகாபதி கம்பரின் பையன். அமராவதி, அரசனான மூன்றாம் குலோத்துங்கச் சோழனின் பெண். இத்தோட சந்தேகம் தீர்ந்ததா?

      நீக்கு
    12. ஓ எங்கட கம்பராமாயணக் கம்பர் மாமாவின் மகனோ அம்பி... ஆஆஆஆஆஆ இனி மறக்க மாட்டேனே:)..

      நீக்கு
  31. ஆகா! மாவடு!..ஸ்ஸ்ஸ்ஸ்! எப்போதும் நானே வீட்டில் போடுவேன். சென்ற வருடம் வேட்டை காலி செய்ய வேண்டியிருந்ததால் திருமதி சௌமியா கார்த்திக் அவர்களிடம் வாங்கி கொண்டேன். அது இன்று வரை நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  32. மன்னிக்கவும் வீட்டை காலி செய்ய வேண்டியிருந்ததால் என்று படிக்கவும்.

    பதிலளிநீக்கு
  33. நான் மாவடுவிற்கு மட்டுமல்ல, எல்லா ஊறுகாய்களுக்குமே கல் உப்புதான் போடுவேன். நோ மிளகாய்ப்பொடி. மிளகாய், கடுகு எல்லாவற்றையும் வெய்யிலில் வைத்து எடுத்து பொடி பண்ணி சேர்ப்பேன். அதே போல் ஒன்லி நல்லெண்ணெய்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க பானுமதி வெங்கடேச்வரன் மேடம்... நமக்கு மிளகாயை வெயிலில் வைத்து, பொடி பண்ணி - இதெல்லாம் கட்டுப்படியாகாது. அதுனால மிளகாய்ப்பொடிதான். நான் எதுக்கும் நல்லெண்ணெய்தான் உபயோகப்படுத்துவேன்.

      நீக்கு
  34. //லண்டன், ஸ்காட்லண்ட்லலாம் இது எங்க கிடைக்கப்போகுது. அவங்க பிராண்டட் வடுமாங்காய் வாங்கினால்தான் உண்டு. //
    https://kaagidhapookal.blogspot.com/2012/08/aka.html

    ஹாஹா :) நாங்க அதாவது லண்டனில் 2012 லேயே செஞ்சுட்டேன் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அட... இந்தப் பதிவை நான் பார்த்ததே இல்லையே..... அதுலயும் ஆகஸ்டுல, அங்க 'சின்ன வடு மாங்காய்' வந்ததுன்னு சொல்லியிருக்கீங்க. இந்தியாவுல ஃபெப்ருவரி-மார்ச்தானே வடுமாங்காய் சீசன். நல்லாவே செய்திருக்கீங்க. ஆனா நீங்கதான் செய்தீங்களா? ஹாஹா

      நீக்கு
    2. @நெ.டமிலன்:)
      //நல்லாவே செய்திருக்கீங்க. ஆனா நீங்கதான் செய்தீங்களா? ஹாஹா//
      குட் கொஸ்ஸன்ன்ன் இந்தக் கொஸ்ஸன் கேட்டதற்காகவே என் உண்ணாவிரதத்தைக் கான்சல் பண்ணுறேன்ன்ன்ன்ன்ன்ன்ன்:))

      நீக்கு
    3. மாதா ஊட்டாத சோற்றை மாவடு ஊட்டும்! எனவே உண்ணாவிரதத்தைக்கேன்சல் செய்தது பொருத்தம்தான்!

      நீக்கு
    4. கர்ர்ர் :) போஸ்ட்டுங்களை லேபிள்ஸ் சரி பண்ண டிராஃப்டில் வச்சிருந்தேன் அதில் இதுவும் ஒண்ணு :)
      அது இங்கே மாவடுபிஞ்சு மாங்கா எல்லாம் ஜமைக்கா மற்றும் பல்வேறு நாடுகளில் இருந்து வருது அதான் ஆகஸ்ட் கிடைச்சிருக்கு .
      இங்கே மாம்பழ சீசன் ஜூலை ஆகஸ்டில் கூட வரும் அது தாய்லாந்து வியட்நாம் எல்லா இடத்திலும் இருந்து வரும்

      நீக்கு
    5. //அதான் ஆகஸ்ட் கிடைச்சிருக்கு .// - ஏஞ்சலின்... எனக்கு எல்லா ஊர்லயும் எப்போ மாங்காய் சீசன், அந்த ஊர் மாம்பழம் எப்படி இருக்கும்னு நல்லாவே தெரியும். நான் அங்க இருந்தபோது, வருடம் முழுதும் மாங்காய்கள் வந்தாலும், மார்ச்-மே வரை நல்ல மாங்காய்கள் இந்தியாவிலிருந்து வரும். மே மாசத்துல பழம் வர ஆரம்பிக்கும். அதுக்கு முன்னால நார் மாம்பழம் (அதுவும் ரொம்ப நல்லா இருக்கும்) ஈரான்/மிஸ்ரி போன்ற இடங்களில் இருந்து வரும். நம்ம ஊர் பழங்கள்ல, அல்போன்சா, ராஜ்பூரி, பங்கனப்பள்ளி வரும். சீசன் ஜூலை/ஆகஸ்டுல முடியும்போது பாகிஸ்தான் பழங்களோட மாம்பழ சீசன் முடியும். பாகிஸ்தான் 'பங்கனப்பள்ளி' (பாதாமின்னு சொல்றாங்க) பழம் வருதுன்னா மாம்பழ சீசன் ஓவர்.

      ஆனால் மாங்காய், இந்திய மாங்காய், அதிலும் தமிழக மாங்காய்தான் நல்லா இருக்கும். வடு பார்த்த ஞாபகம் இல்லை.

      நீக்கு
    6. நெல்லை மாங்காய், மாவடு, மாம்பழம் நாலே இந்தியாதான். வெரைட்டிஸ் சுவை எல்லாத்துலயும். வேறேந்த நாடும் கிடையாது.

      கீதா

      நீக்கு
    7. கீதா ரங்கன் - பாகிஸ்தானின் ஸ்டாண்டர்டு மாம்பழம் இருக்கு. அது பொதுவா குறைந்த விலை. பெரியதாக இருக்கும். தோல் மிக மெல்லியது, கசக்கும். அந்த வெரைட்டி ரொம்ப நல்லா இருக்கும். இன்னொன்று மிஸ்ரியா என்ன ஊர்னு ஞாபகம் இல்லை..மாம்பழ சீசன் ஆரம்பத்துல வரும். உள்ள நார் இருக்கும். அந்த மாம்பழமும் ரொம்ப நல்லா இருக்கும். மாங்காய், மாவடுல இந்தியாதான் பெஸ்ட் என்பதை ஒத்துக்கொள்கிறேன். நம்ம பங்கனப்பள்ளி மாதிரி பிலிப்பைன்சில் விற்ற மாங்காயைச் சுவைத்திருக்கிறேன், டேஸ்டா இருக்காது.

      நீக்கு
  35. இந்த மாவடுவை பார்த்ததும் எனக்குள்ளே தூங்கிட்டிருந்த சமையல் புலி எழும்பிடுச்சி :) நேத்துகூட கடையில் மாங்காய் பார்த்தேன் ஆனா பிஞ்சு வரலை களாக்காய் மட்டும் முந்தாநேத்தும் செஞ்சி வச்சேன் .
    நீங்க செஞ்ச மாவடு சூப்பரா இருக்கு ..என் பொண்ணுக்கும் ரொம்ப பிடிக்கும் ஹோம் மேட் ஊறுகாய்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹை ஏஞ்சல் வாங்க!! தேம்ஸ் கிச்சன்ல தோசை வாலி, தேவதைக் கிச்சனுக்கு இன்னிக்கு க்ரெடிட்ஸ் கொடுத்துருக்காங்க!! போல இதுல ஏதோ மேட்டர் இருக்கு!! ஹா ஹா ஹா!!

      கீதா

      நீக்கு
    2. ஏஞ்சல் தேவதைக் கிச்சன ஆக்டிவேட் பண்ணுங்க சீக்கிரம்...தேம்ஸ் கிச்சனுக்கு போட்டியா போட வேண்டாமோ?!!!!

      கீதா

      நீக்கு
    3. //தூங்கிட்டிருந்த சமையல் புலி எழும்பிடுச்சி // - அபூர்வமா தமிழ் எழுத்து மிஸ்டேக் விட்டிருக்ஈங்க ஏஞ்சலின். நீங்க சொல்ல நினைத்தது, 'தூங்கிக்கிட்டிருந்த புளி எழும்பிடுச்சு' என்பதுதானே.....

      எதைச் செய்தாலும் சில நாட்கள் கழித்து டேவ்டை கிச்சன்ல போடுங்க. இப்போ முதல்ல 'கோந்து தோசை'யை கலாய்ச்சு முடியணும் (பிசுக்கு தோசை)

      நீக்கு
    4. ///'தூங்கிக்கிட்டிருந்த புளி எழும்பிடுச்சு' என்பதுதானே.....//

      ஹா ஹா ஹா புவஹாஆஆஆஆஆ புவஹாஆஆஆஆஆஆஆ:))

      https://www.youtube.com/watch?v=Z-JW-bE4PTc

      நீக்கு
    5. நெல்லை உங்களை யாரு அதை காட்டச் சொன்னது. நான் பார்த்துட்டுப் பேசாம போனது டமில்ல டி வந்துருவாங்களேன்னுதான்!! ஹா ஹாஹ் ஹா ஹா

      கீதா

      நீக்கு
    6. நன்றி ஏஞ்சலின் //எல்லோருக்கும் மாவடு பிடிக்கும்னு சொன்னதுக்கு// - மாவடு நல்லாவே வந்திருக்கு. இது 'நோ அலர்ஜி' உணவில் சேரும்....

      நீக்கு
    7. நெல்லைத்தமிழனுக்குப் பயம் வந்திட்டுதூஊஊஊ:) அஞ்சு ரென்ஷனாகிட்டாவோ என:) அதனால டக்குப் பக்கெனக் கட்சி மாறி நல்லவிதமாச் சொல்றார்ர் அஞ்சுவை:)) ஹா ஹா ஹா அஞ்சு நீங்க டென்ஷனாவே இருங்கோ.. விடமாட்டமில்ல எங்கிட்டயேவா:)) ஹா ஹா ஹா..

      நீக்கு
  36. மாவடுஎல்லாம் மரத்திலிருந்து விழும் பிஞ்சு காய்களிலிருந்தே செய்ய வேண்டும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஜி.எம்.பி சார்... ஆனா அதுக்குன்னே பறிச்சுக்கிட்டு வர்றாங்க போலிருக்கு. பக்கத்துத் தெருல உள்ள கடைல தினமும் புது மாவடு வரும் (அது ஒரு 3 வாரமா வந்துக்கிட்டிருந்தது. இன்றைக்கு வரலை. சீசன் ஓவரோன்னு தோணுது). காம்பே ரொம்ப பெருசா இருக்கும். அதுல பாதியை கட் பண்ணிட்டுத்தான் செய்தேன்.

      ஆரம்ப காலத்துல, மரத்துலேர்ந்து விழும் பிஞ்சுகளை வீணாக்காமல் இதனைச் செய்திருப்பாங்க.

      நீக்கு
  37. வரும் புதன்கிழமைத் தொடருக்கான கதையை, துரை அண்ணன் எழுதி முடிச்சு அனுப்பிட்டாரோ ஸ்ரீராம்:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. துரை அண்ணன் அப்படியா சொன்னார்?

      நீக்கு
    2. நாம இதுவரை செய்யாததைச் செய்துவிடவேண்டியதுதான். அவரையும் கலாய்த்துவிடவேண்டியதுதான்.

      @அதிரா - துரை செல்வராஜு சார் இந்தக் கதையைத் தொடர மாட்டார். அவர் எழுதணும்னா, 'கனிமொழி', 'அன்புச் செல்வி' அப்படீல்லாம் பெயர் இருக்கணும், கதை கிராமத்துல நடக்கணும், ஸ்ருதிக்கு (அவர் எழுதும்போது பெயரை சுருள்மொழி ன்னு மாத்திடுவார்), ஷ்ராவண் (நடராசன்னு பெயர் மாற்றிடுவார்) அத்தை மகனாக மாற்றிடுவார். ஹாஹா.. அவர் எழுதினார்னா, குடும்பத்துல புயல் வீச விட மாட்டார்... தென்றல் வீசும்படித்தான் எழுதுவார்...

      நீக்கு
    3. ஹா ஹா ஹா நெல்லை நான் சொல்ல நினைச்சு வந்தேன் பெயர்கள் அப்புறம் ஊர் பத்தி!! துரை அண்ணான் யூஸ் செய்வது...கிராமம்..பூதங்கள் விட்டுப் போட்டீங்களே!! அப்புறம் அவர் கதைல சண்டை எல்லாம் வராது...அப்புறம் நாட்டுப் புற இசை அவரே கூட எழுதிய பாடல் எல்லாம் வந்திரும்மும்!! .இதையும் சொல்ல நினைத்தேன்

      நீங்க சொன்ன இத வாசிச்சு சிரிச்சுட்டேன்..

      //ஸ்ருதிக்கு (அவர் எழுதும்போது பெயரை சுருள்மொழி ன்னு மாத்திடுவார்), ஷ்ராவண் (நடராசன்னு பெயர் மாற்றிடுவார்) அத்தை மகனாக மாற்றிடுவார். ஹாஹா.. அவர் எழுதினார்னா, குடும்பத்துல புயல் வீச விட மாட்டார்... தென்றல் வீசும்படித்தான் எழுதுவார்...//

      துரை அண்ணனை என்ன கலாய்ச்சாலும் அவர் கதைல அவரெ கூட கவிதை எல்லாம் எழுதுவாரே அது!! செமையா இருக்கும். அது ஒரு தனித் திறமை!!

      அவர் எழுதின கடித கதை அதுல கவிதை எல்லாம் செமையா இருந்துச்சுல...இப்ப அதுவும் நினைவுக்கு வந்துச்சு

      கீதா

      நீக்கு
    4. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் உப்பூடி எல்லாம் சொல்லி என்னை டைவேர்ட் பண்ணப்பார்க்கிறீங்க:)).. நான் ஸ்ரெடியா நிக்கிறேன்ன்:) துரை அண்ணனுக்கு டவுண்:) கதையும் எழுத வருமாக்கும்.. அவர் தொடர்ந்தால்ல் ஸ்ருதியை இல்ல இல்ல சுருதியை:)) [பெயரை இப்படிப்ப்போட்டு]தற்காலிக கச்சேரிக்கென பாரைன் கூட்டி வந்திடுவார்ர் ஹா ஹா ஹா:))...

      உங்கட மெயிலுக்கு துரை அண்ணன் எழுதி அனுப்பியிருப்பார் செக் பண்ணுங்கோ ஸ்ரீராம்:).

      நீக்கு
    5. //அது ஒரு தனித் திறமை!! // - துரை செல்வராஜு சார் நிறைய திறமைகள் உள்ளவர். ஒரு முறைதான் பேசியிருக்கிறேன். நிறைய உழைப்பு, நிறைய சத்சங்கம் என்று சொல்லும்படியான நல்ல விஷயங்களிலேயே மனதை வைத்திருப்பவர்.. I respect him a lot.

      நீக்கு
  38. நம்ம ஏரியாவுல என்னைப் போல் ஒருவன்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படித்தேன்... ஓரிரு வருடங்களுக்கு முன்பு பார்த்த படத்தை ஞாபகப்படுத்தியது. (எம்.எஸ்.பாஸ்கர்ட நாடிஜோதிடம் அல்லது ஜோதிடம் பார்க்கவருவாங்க... அவர் அதுல ஒருத்தன் ஏற்கனவே செத்தவன் என்று சொல்ல நினைப்பார்...)

      நீக்கு
    2. ஓஒ நம்ம ஏரியா.... அட அப்படியும் ஒன்றிருக்குதெல்லோ ஹா ஹா ஹா எனைக் கெள அண்ணன் தேம்ஸ்ல தள்ளாமல் விட மாட்டார்ர்.. இது ஏப்புறில்:) பூல்ல்ல்ல்ல்ல்ல்ல் இல்லையே கீதா?:)

      நீக்கு
  39. மாவடு பிடிக்கும் ஆனா, இதுவரை செய்ததில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ராஜி.... மாவடு ரொம்ப ஈஸி... பண்ணிப்பாருங்க...சீசன் முடியப்போகுது...

      நீக்கு
  40. வணக்கம் சகோதரரே

    நல்ல பகிர்வு. "என்னாத்தச் சொல்வேனுங்கோ" என்ற தலைப்பில் ஆரம்பித்த தாங்கள் "மா"மரங்களே பெருமை கொள்ளும் அளவிற்கு பதிவிட்டு விட்டீர்கள். இன்றைய அந்த மாமரங்களில் புளகாங்கித சிலிர்ப்பில் அனைத்து மாவடுக்களும் ஒட்டு மொத்தமாக உதிர்ந்திருக்கும்.

    அழகான படங்களுடன் அருமையாக செய்முறைகளும் தந்து அசத்தி விட்டீர்கள். பாராட்டுக்கள்.

    "வெடுக். கடுக்கென்று" சத்தம் கேட்டும் என்னால் "வெடுக்கென" வரமுடியாத தாமத வருகை அனைத்து மா"வடு"கருத்துரைகளும் ருசிகரமாக இருந்தன. ஆமாம்,! காலையிலிருந்து "வெடுக் வெடுககென" கடித்துக் கொண்டேயிருந்தால்,"வடு" விழாமல் இருக்குமா? ஹா ஹா ஹா.

    அம்மா வீட்டிலிருந்த வரைதான் இந்த மாவடு கதையெல்லாம்..ருசித்தாகி விட்டது. பாட்டி (அம்மாவின் அம்மா) அந்தந்த சீசனில் வடுமாங்காய், ஊறுகாய்கள், அப்பளம்,வடாமென்று தயார் செய்து, வைத்துக் கொண்டேயிருப்பார்கள். எனக்கு திருமணமான பின்னும், அவர்கள் தயவில் இதுவெல்லாம் கிடைத்த வண்ணமிருந்தது. இப்போது இந்த மாவடுவெல்லாம் போடவும் முடியலே. ஊறுகாய்களும் எப்போதோதான். சாப்பிட்டாலும் ஒத்துக்கவும் மாட்டேன் என இரண்டும் அடம் பிடிக்கிறது. எனவே இன்று தங்கள் பதிவில் கண் குளிர, மனம் சுவைக்க தரிசித்துக்கொண்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா ஹரிஹரன் மேடம்... எங்க அம்மா எப்போதும் சொல்லுவாங்க,

      "சிரிப்பும் புளிப்பும் சில காலம்'னு.

      'வெடுக் வெடுக்'என்று கடித்தாலும் பரவாயில்லை...இன்று 4-5 மாவடுக்கள் சாப்பிட்டுட்டேன். உப்பு ஜாஸ்தி சேர்ந்துவிட்டதே என்று கவலையாவும் இருக்கு. ஹாஹா.

      நானே ஊறுகாய்லாம் சாப்பிடுவது அபூர்வம் (புது மாங்காய் ஊறுகாய் தவிர..அதுவுமே முன்னைப்போல் அவ்வளவு ஆர்வத்தைத் தூண்டுவதில்லை).

      வருகைக்கு நன்றி...விரைவில் நீங்க இங்க ஒரு செய்முறை எழுதணும்.... ஒரு இனிப்பைத்தான் செய்யுங்களேன். செய்த நேரத்தில் இனிப்புச் செய்தி வரட்டும். நன்றி..

      நீக்கு
  41. வணக்கம் சகோதரரே

    தங்கள பதிலுக்கு நன்றி. எங்கள் பாட்டியும் இப்படித்தான் சொல்வார்கள்.

    "சிரிப்பும், புளிப்பும் சிறிதுள" வென்று.

    அவர்களிடமிருந்துதான் தன்னம்பிக்கை, பொறுமை என்ற நற்குணங்களை கற்றுக் கொண்டேன்.

    "இனிப்பைத்தான் செய்யுங்களேன். செய்த நேரத்தில் இனிப்புச் செய்தி வரட்டும். நன்றி../

    தங்களின் தன்னம்பிக்கை வார்த்தைகள் அவர்களை நினைவுபடுத்துகிறது. தங்களின் அன்பான வாக்கு பலிக்கட்டும். மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  42. வெயில் காலத்திற்கு மாவடுவும் மாங்காய் ஊறுகாயும் தயிர் சாத த்திற்கு மிக அருமையாக இருக்கும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அசோகன்... கொஞ்ச காலம் கழித்து தளத்துக்கு வருகிறீர்களோ? இயற்கை, காலத்துக்கு ஏற்றவாறுதான் காய், கனி வகைகளைக் கொடுக்கிறது. வெயில் காலம் துவங்கிஙிட்டது. இப்போ, மா, பலா, நுங்கு சீசன்.

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!