நான் சின்னத்தம்பி இல்லீங்க....
கூண்டுல அடைக்க நினைச்சா காண்டாயிடுவேன்!
இன்று எனது நாள்!
பயம் இல்லைன்னு நிரூபிக்க அருகிலிருந்து ஒரு படம்.
"ஹா..... ஹா....ஹா... நான்தான் பயப்படணும்!"
ஆராம்ஸே
அங்கிருந்து இங்கே...
வாலின் சுழற்சியைப் பார்த்தால் கோபம் போல இருக்கு!
"ம்ம்ம்ம்... இதை பாஸ்போர்ட் சைஸ் போட்டோல சேர்க்க முடியாது..."
அட விடுங்கப்பு... என்னையே ஃபோட்டோ புடிச்சுகிட்டு.....
"வேணாம்... கோபம் வருது... கண்ணு மஞ்சளாகுது பாருங்க...!"
நீங்க போகமாட்டீங்க... நான் கிளம்பறேன்...
:
மகிழ்வான காலை வணக்கம்! எல்லாருக்கும்! ..
பதிலளிநீக்குகீதா
என்னாச்சு மீண்டும் யானை வந்திருச்சு!!! ஓ அவருக்கு தன்னைக் காட்டியதில் திருப்தி இல்லையோ போன வாரம்...அதான் இன்றும் போஸ் கொடுக்க வந்துவிட்டார் யானைத் தம்பி.....இல்ல ஆனை அண்ணா....நான் அவர் முன்னாடி நின்னா ஒழக்கு மாதிரி இருப்பேன்...ஹா ஹா ஹா
நீக்குகீதா
கீதாக்கா மகிழ்வான காலை வணக்கம்.... நம்ம ஏரியாவுல அல்லேக் ல கௌ அண்ணா ஒரு கணக்கு சொல்லிருக்கார்...விடை உங்களுக்குன்னு விட்டு வைச்சுருக்கேன்!! (ஹிஹிஹி நேக்கு கணக்கு காத தூரம்!!!) டிடி போய் சொல்றதுக்குள்ள முந்திக்கோங்க ஹா ஹா ஹா ஹா ஹா
நீக்குகீதா
காலை வணக்கம் கீதா ரெங்கன்.
நீக்குஆமாம் ஆமாம் இன்று ஆனை அண்ணன் டே!!!
பதிலளிநீக்குஅந்தக் கண்ணு என்ன அழகு!!
ஆனையார் வாலை அசைத்தல் சந்தோஷத்திலும் உண்டு எல்லா செல்லங்களுக்கும் இது பொருந்தும்...அந்த வாலின் அசைவிலேயே அவர்கள் மூடு கண்டு பிடித்துவிடலாம்...என்று சொல்லுவாங்க
கீதா
ஆஹா, ஆஹா, நம்ம நண்பரைப் பார்த்து ரசிக்க இரண்டு கண்களும் போதவில்லை. அதோடு கொடுத்திருக்கும் தலைப்புகள்! (ம்ஹூம்! சரியா இல்லையே? ) ம்ம்ம்ம்ம்ம்? சரி! தலைப்புனே வைச்சுக்கலாம். எல்லாம் ரசனையோடு அமைந்திருக்கு. பயப்படாமல் உட்கார்ந்திருந்தவங்க ஆனையாரோடு ஏற்கெனவே பழகினவங்களோ?
பதிலளிநீக்குஅனைவருக்கும் வணக்கமும் நல்வரவும்.
பதிலளிநீக்குகாலை வணக்கம் கீதா அக்கா.
நீக்குயானைகள் சரணாலயத்தில் எடுத்த படங்களோ ?
பதிலளிநீக்குகுவஹாட்டி ஜூ ஜி!
நீக்குஆனை அண்ணன் அழகுதான்!! அவர் அழகை சொல்லனுமோ...கேப்ஷன்ஸும் ரொம்ப நல்லாருக்கு...
பதிலளிநீக்குகீதா
"வேணாம்... கோபம் வருது... கண்ணு மஞ்சளாகுது பாருங்க...!"//
பதிலளிநீக்குஹா ஹா ஹா ஹா
கீதா
ஸ்ரீராமுக்கு வேலைத் தொந்திரவு/வேலை பளு அதிகமோ? அவரைப் பார்க்கவே முடிவதில்லை.
பதிலளிநீக்குஅக்கா... இது நியாயமா? நேற்று பதிவுக்கு கூட வந்து பதில் சொல்லி இருந்தேன். "நீங்கள் பதிவு போடுங்கள், சற்றே தாமதமாக வந்தாலும் வந்து விடுவேன் கட்டாயமாக" என்று வேறு சொல்லி இருந்தேன்.
நீக்குஎன் வேலைத்தொந்தரவையும் வேறு சில கஷ்டங்களையும் சொல்லி முடியாது...
நினைவெல்லாம் இருக்கு. இருந்தாலும் அதிகம் பார்க்க முடியறதில்லை என்பதால் கேட்டேன். மற்றபடி வேறே ஒன்றும் இல்லை! :))))) உங்கள் பிரச்னைகள் நல்லபடி தீர்வு காணப் பிரார்த்தனைகள். அடுத்த பதிவும் போட்டுவிட்டேன் நேற்றே!
நீக்கு//என் வேலைத்தொந்தரவையும் வேறு சில கஷ்டங்களையும் சொல்லி முடியாது.// :(((((((
நீக்குயானைப் படங்கள் அத்தனையும் அழகு. அவருக்கு கோபமே வராதே. மேலே இருப்பவர்
பதிலளிநீக்குகுத்தினால் அலுப்பு வந்து ஒரு பிளிறல் போட்டால் ஆச்சு.
நடுங்கி ஓடிவிட மாட்டார்களா.
@கீதா சாம்பசிவம். ஸ்ரீராம் விடுப்பில் இருக்காரோ என்னவோ.
அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
பதிலளிநீக்குஆஹா இன்றைக்கு யானையார் படங்கள்...... அழகாக இருக்கிறார்.
பதிலளிநீக்குபடங்கள் அழகு
பதிலளிநீக்குஆனை படங்கள் மற்றும் கேப்ஷன்கள் மிக நன்று.
பதிலளிநீக்கு"ஆனை ஆனை அழகர் ஆனை" பாடல் எனக்கு மட்டும்தான் மனதில் தோன்றியதா?
'ஆனை வரும் முன்னே.. மணியோசை வரும் பின்னே!’ என்ற ருஷ்யத் தமிளனின் புதுமொளிதான் ஞாபகத்துக்கு வருகிறது.
நீக்குவாழ்க நலம்..
பதிலளிநீக்குபடங்கள் யாவும் அருமை. வாசகங்கள் சுவாரஸ்யம்.
பதிலளிநீக்குசித்தானை சிறப்புப் பதிவு!...
பதிலளிநீக்குஆனையின் அழகு.. என்றும் மாறாத கம்பீரம்.... ஆகா.. மா முகம் என்ற சிறப்பினை உடையதல்லவா!..
படங்கள் அனைத்தும் அழகு...
பதிலளிநீக்கு//பயம் இல்லைன்னு நிரூபிக்க அருகிலிருந்து ஒரு படம்.// - நம்பிட்டோம்
பதிலளிநீக்குகடைசியில யானையோட பொறுமையையே சோதிச்சுட்டீங்களே
ஆனை படங்கள் அனைத்தும் அருமை, அழகு.
பதிலளிநீக்குயானை வெளிநடப்பு செய்யும் வரை படம்பிடித்து விரட்டிவிட்டீர்கள்.
ஆனை பாத்தியா ஆனைன்னுட்டு கமென்ட் போட ஜீவி சார் ஏன் இன்னும் வரலே? சண்டே ரொம்ப பிசியாயிட்டாரோ? :)))
பதிலளிநீக்குகுவாஹாதி ஜூல வேறு விலங்குகள் இல்லையா யானையைப் பார்த்தால் அலுப்பேவராது
பதிலளிநீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குதாமதம்.. மிகத்தாமதம்..
படங்கள் அழகு. அதற்கு தக்கவாறு வரிகளின் அமைப்பையும் மிக மிக ரசித்தேன். யானை பார்க்க பிரமாண்ட உருவமெனினும், சமர்த்தாக எடுக்கும் படங்களுக்குள் அடங்கி இருக்கிறது. வளைச்சி வளைச்சி எடுத்ததில், கடைசியில் அதன் பொறுமை இழந்து போயிட்டு வர்றேனப்பா.... என்று முடிவெடுத்து போகிற இடம் நன்றாக உள்ளது.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.