வியாழன், 21 நவம்பர், 2019

விதித்தவன் கடவுளா? விதியே கடவுளா?



ப்...பூ !  
-  பிலஹரி -
----------------------------------

நிறைவுப்பகுதி 


ஒரு சிறுவன், அவனைவிட இரண்டு மூன்று வயது குறைவாக இருக்கலாம்.  ஆனால், அகத்துச் செழுமை அச்சிறுவனின் மேனியெங்கும் பிரதிபலித்தது. பாலில் தோய்த்தெடுத்தது போன்ற வெண்மை மினுமினுப்பு.  சுருண்டு நெளியும் கேசச் சுருள்.    அழகே வடிவான முகம்.  மழு மழுவென்று கால், கைகள்.  அரையில்பட்டு வேட்டியும், கைகளில் தங்கக் காப்பும் அவ்வீட்டுக்கு வருங்கால உடமைக்காரன் என்பதைப் பறைசாற்றின. 

இரண்டு சிறுவர்களும் சற்றுநேரம் ஒருவரையொருவர் பார்த்தபடியே நின்றனர்.

"உனக்கு என்ன வேணும்?..."  பணக்காரப்பையன் கேட்டான்.  பரட்டைத் தலைவனுக்கு ஏனோ பதில் சொல்ல நா எழவில்லை.  

"கையிலே என்ன அது..." பட்டு வேட்டிக் கேட்டது. 

கிழிந்த ஆடை மலங்க மலங்கப் பார்த்தது.

பிச்சையெடுக்க வந்தவன்தான் அப்பஞ்சைப் பையன்.  தாசில் செய்ய வரவில்லை.  அவன் உடம்பும், தலையும், அரைக் கந்தலும், கையிலுள்ள குவளையும் அவனை உலகுக்கு அறிமுகப்படுத்தப் போதுமான சான்றுகள்தான்.  ஆனாலும் எத்தனை எத்தனையோ வீடுகளில் கைநீட்டி அதாவது குவளையை நீட்டியிருந்தவன்தான்.  இருந்தாலும், தன் வயதையொத்த - ஏன், தன்னை விடச் சிறிய ஒரு பொடியனிடம் வாய் திறந்து இறைஞ்சுவது என்பது மிக மிகக் கசப்பா யிருக்கும் போலிருந்தது அவனுக்கு.

"நான் பாட்டுக்கு கேட்டுண்டே இருக்கேன்.  நீ பதிலே சொல்ல மாட்டேங்கறியே........  உனக்குச் சோறுதானே வேணும்?....  நீ 'அம்மா தாயே!' தானே?..... என்று கேட்டது செல்வக் குழந்தை.

மௌனமாகத் தலையசைத்து வைத்தான் குவளை சிறுவன்.

"உனக்கு ரொம்ப ரொம்பப் பசிக்கிறதோ இல்லையோ!"

அதற்கும் தலையாட்டால்தான்.  உள்ளம் வெட்கியது உண்மைதான்.

"பயப்படாதே!  நான் வேணுங்கற சோறு போடறேன்!  இன்னிக்கு எங்க வீட்டிலே என்ன கல்யாணம் தெரியுமோ?"

"தெரியாது!" என்று மெல்லிய குரலில் பதிலளித்தான் அப்பையன்.

"இன்னிக்கு எனக்கு ஏழு வயசு பிறக்கப்போறது.  எங்க அப்பா, மாமா, அம்மா...    எல்லோரும் சொன்னா !  உம்!"

பெருமைபொங்கக் கூறினான் சின்னப் பையன்.

பரட்டைத் தலையன் விழித்தான்.   பிறந்த நாளாவது.. ஒன்றாவது?  அதுவும் இத்தனை வயசுப் பயலுக்கு பிறந்த நாள் யாராவது கொண்டாடுவார்களா?  அப்படியொரு கிழமையும் நாளும்  அவனுடைய ஆயியும் அப்பனும் அவனுக்கு கொண்டாடினதே கிடையாதே.  ஒருவேளை இந்த மாதிரி பங்களாவும், காம்பவுண்டும், 'கேட்'டும், இந்த வேப்ப மரமும் இருந்தால், இதெல்லாம் கொண்டாடலாம் போலிருக்கிறது.

"சரி! சரி!   இங்கேயே இரு!  நான் போய் உனக்குச் சாதம், சாம்பார், கறி, பட்சணமெல்லாம் கொண்டு வர்றேன்!" என்று கூறி விட்டு உள்ளே ஓடினான் வீட்டுக்காரப் பையன்.

அந்த உருவம் கண்ணிலிருந்து மறைந்ததும், தானும் அவ்விடத்தை விட்டு நகர்ந்து விடலாமா என்று தோன்றியது பிச்சைக்காரச் சிறுவனுக்கு.  அவனைவிட வயதானவர்கள் 'டேய்! இந்தாடா!' என்று அலட்சியமாக அழைத்து பிச்சை இட்ட போதெல்லாம், அவன் வெட்கப்பட்டதோ, கவலைப்பட்டதோ கிடையாது.  அப்படிப்பட்ட உணர்ச்சிகளெல்லாம் அவனுக்குக் கிடையவே கிடையாதுதான்.   'கழுதை!.....  பிச்சையா கேட்கறே?  எடு செரு....' என்று அர்ச்சனைகள் கிடைக்கும்போதுங்கூட, அவன் அதைத் துடைத்துப் போட்டுப் பழகியவன்.  இதெல்லாம், தன்னை விடப் பெரிய, உயரமான மனிதர்கள் செய்தபோது பொருத்தமாகவே இருந்தது.  

 இப்போது அவனை விட  சிறிய வயதுக்காரன், அவனிடம் காட்டும் கருணை, பேசும் வார்த்தைகளின் பரிவு, அவன் ஏழ்மையைச் சுட்டிக் காட்டாமல் சுட்டிக்காட்டும் விதம் எலலாமே அவனுக்குப் புதிய அனுபவங்களாக இருந்தன.   இரக்கப்பட்டு அந்தப் பொடியன்  போடும் பிச்சையை வாங்காமல் சென்று விடலாம் என்றால், வயிற்றுப் பெருச்சாளி விட மாட்டேன் என்கிறதே!

வயிறாவது ஒண்ணாவது!  அப்படி ஒருநாள் வயிற்றைக் காயப்போட்டால் உயிரா பிரிந்து விடும்?  தன்னைவிடச் சிறிய அந்தப் பொடியன் பெரிய மனிதன் ஸ்தானத்தில் இருந்து, அவன் கை சோற்றை எடுத்து இறைக்க, இவன் கை நீட்டி அதைப் பெற்றுக்கொள்வதா?  வேண்டாம்.   வேண்டவே வேண்டாம் !  அந்தப் பையன் உள்ளே யிருந்து திரும்புவதற்குள் மறுபுறத்தின் வழியாகச் சென்றுவிட  வேண்டும்.

சடாரென்று திரும்பி, அத் தெருவின் மறுபக்கத்தை நோக்கி அவன் நடக்கத் தொடங்குகையில் -



"டேய் !  எங்கே போறே ?" என்ற குரல் பின்னாலிருந்து எழுந்தது.  நடந்த வேகத்தால் பிச்சைக்காரப் பையன் திரும்பிப் பார்த்தான்.

அந்தச் சிறுவன் நின்று கொண்டிருந்தான்.  அவன் கையில் பெரிய தாம்பாளம் - வெள்ளித் தாம்பாளம்.  அதிலே  காய்கறி வகைகள்.  நிறைய அன்னம்.  பௌர்ணமிச் சந்திரனைப் போன்று அப்பளம்.  மற்றும் பலகாரங்கள் வேறு!

நாக்கில் நீர் சுரக்க, தன்னையுமறியாமல் அச்சிறுவனை நோக்கி நடந்தான் பரட்டைத் தலையன். 

இன்று கண்விழித்த வேளை பொன் வேளையாகத்தான் இருக்கவேண்டும்.  ரசம், சாம்பார், கூட்டு எல்லாம் சேர்ந்த கதம்ப ஆகாரத்திற்கே அவன் லாட்டரி முடிக்கையில், இப்படியொரு விருந்தா அவனுக்கு?

"ஏன் அப்படியே நிக்கறே?   நாக்கிலே ஜலம் கொட்டறதா,  பாவம்!  இது  சாப்பிட்டிருக்கியோ?  உள்ளே பாரு, கூடம் பூராவும் எத்தனை பேர் உட்கார்ந்து சாப்பிடறா தெரியுமா?  சரி, சரி ! உள்ளே இந்தப் பக்கம் வா ! சாப்பிடலாம் !"

கருணையில் தோய்த்தெடுத்த வார்த்தைகளை அவனையுமறியாமல் கணைகளாக்கிப் பேசினான் சீமானின் பிள்ளை.

பிச்சைக்காரச் சிறுவனுக்கு ஒரு பக்கம் ஆசை.  மறுபக்கம் வெட்கம்.  உள்ளே போவதா, வேண்டாமா என்ற தயக்கம்.

"ஏன் பயப்படறே?   சும்மா வா!  இந்த மரத்தடியிலே உட்கார்ந்துக்கோ எங்கப்பா வந்து கோபிச்சுப்பார்னு  நினைக்கறியா?  ஊ..ஹூம்! ஒண்ணும் சொல்ல மாட்டார் ! நான் எது செஞ்சாலும் அவர் சந்தோஷப் படுவார்! உம்! வா!"

சிறுவன்  தைரியம், அவன் தட்டு,  அதில் இருந்த பதார்த்தங்கள்- எல்லாவற்றுக்கும் மேலாக அவன் வயிற்றின் பிறாண்டல்,  அந்தப் பிச்சைக்காரப் பையனுடைய  தயக்கத்தைப் போக்கி விட்டன போலும்.  'கேட்'டை நெருங்கி, உள்பக்கம்  காலடி எடுத்து வைத்தான் அவன்.

"டேய் ! என்னடா பண்ணிண்டு இருக்கே அங்கே ?  கையிலே தட்டு வேற வைச்சுண்டு, உம்?"  என்று கம்பீரக் குரல் ஒன்று எழுந்தது.

உள்ளே இருந்து அச்சிறுவனின் தந்தையும், விசேஷத்திற்கு வந்திருந்த விருந்தாளி ஒருவரும் வாசற்புறம் வந்து கொண்டிருந்தனர்.  வந்தவர்கள் சிறுவனின் கையிலுள்ள தட்டையும், எதிரில் பயத்துடன் நின்று கொண்டிருந்த பரட்டைத் தலையையும் பார்த்தனர்.  விஷயம் விளங்க வெகுநேரம் ஆகவில்லை.  

"என்னடா பயலே !  தர்மம் பண்றயா?" என்று சிரித்தபடியே சிறுவனின் தலையைக் கோதினார் விருந்தாளி.  வெட்கத்துடன் தலையைக் குனிந்து கொண்டான் பையன்.

"பாருங்க சார் உங்க பிள்ளையை..  இப்போ பிடிச்ச உங்களைப்போல இருக்கப் பழகிண்டிருக்கான்!  'வளரும் பயிர் முளையிலே' என்பார்கள்.  குழந்தை அமோகமாய், தீர்க்காயுசாய் இருக்கணும் !" என்று வாழ்த்தினார் நண்பர்.

பெற்றவரின் முகத்தில் பெருமை பொங்கியது.

"ஏதோ உங்களை போல பெரியவர்கள் ஆசீர்வாதம், சார் !  எப்படியோ இந்த ஒரு குழந்தையாவது நன்றாய் இருந்தால் சரிதான் !  மூன்றைப் பறிகொடுத்துட்டு கறிவேப்பிலைக் கன்று மாதிரி இவன் ஒருத்தனை வைச்சிண்டிருக்கேன் !"என்றார் பெற்றவர் நாத் தழதழக்க.

"பையனுக்கு என்ன சார் பேர்?" என்று விசாரித்தார் நண்பர்.

"பேர் எப்படி இருந்தால் என்ன சார்?  'பிச்சை'ன்னு கூப்பிடறோம்.  அதுவேதான் அவன் பெயரும்.  நம்ம குழந்தையாயில்லாமல் ஊரார் பிச்சையாக வளரட்டுமேன்னுதான் "

"உண்மைதான்!  உண்மைதான்! " என்று தலையாட்டிய விருந்தாளி "அப்போ நான் போயிட்டு வரட்டுமா?  வெற்றிலை பாக்கு எல்லாம் வாங்கிண்டாச்சு...  டேய் ...  பயலே...   பிச்சை...   நான் வரேண்டா!"

விடை பெற்றுக்கொண்டு வீதியில் இறங்கிவிட்டார் விருந்துக்கு வந்தவர்.  

பிள்ளையைக் குனிந்து பார்த்தார் தந்தை.  முகத்தில் இரக்கத்துடன் தட்டு நிறைய ஆகார வகைகளை ஏந்திக்கொண்டு நின்றிருந்த தனயனின் தோற்றம் அவரைப் புல்லரிக்கச் செய்தது. 

"பிச்சை.!  எல்லாத்தையும் மடமடன்னு அந்தப் பையன் குவளையிலே போட்டுவிட்டு, தட்டை எடுத்துண்டு உள்ளே வா !  பத்திரம்!"  என்று கூறிவிட்டு உட்புறம் நகர்ந்துகொண்டார் அவர்.

இரு பொடியன்களும் ஒருவரை யொருவர் பார்த்தபடியே சற்றுநேரம் நின்று கொண்டிருந்தனர்.

"கிட்டே வா!  குவளையைக் காட்டு !"  என்றழைத்தான் சிறுவன்.

இருந்த இடத்தை விட்டு நகரவில்லை பிச்சைக்காரப் பையன்.  

"கிட்டே வாயேன் !..."  மறுபடியும் அழைப்பு.

"நான் வர்றது இருக்கட்டும்.. உன் பேரு என்ன சொன்னாங்க ?" என்று கேள்வி போட்டான் பரட்டைத் தலை.

"ஏன் அதைப்பற்றி உனக்கென்னவாம்?"

"பிச்சைன்னுதானே சொன்னாங்க?  அதுதானே உன் பெயர்?"

"ஆமாம்"

பரட்டைத்தலை சிரித்தான்.

"உன் பேரே பிச்சை ! இன்னொருத்தருக்கு நீ பிச்சை போடறியா?...  எனக்கு உன் சோறு வேணாம் !"

"வேண்டாமா?  ஏன் வேண்டாம்?..."  என்று வருத்தத்துடன் வினவினான் சீமானின் பிள்ளை.  அதற்குள் அவனுக்கு அழுகை வந்துவிடும் போலிருந்தது. 

"அதுதான் சொன்னேனே?...பிச்சை கிட்ட நான் பிச்சை வாங்கலாமா? உங்கிட்டே பட்டு வேட்டி, தங்கக் காப்பு எல்லாம் இருக்கு.   பங்களா, கேட்டு, மரம் எல்லாம் இருக்கு.  எங்கிட்டே இந்தக் குவளை ஒண்ணுதான் இருக்கு.  ஆனா என் பேரு என்ன தெரியுமா?   ராஜா! ...   உன் பேரு என்ன?  பிச்சை !  தெரிஞ்சிக்கோ...பிச்சை கிட்ட ராஜா போய் பிச்சை கேட்கலாமா?  பிச்சை வாங்கலாமா?  எங்காவது நாலு இலை பொறுக்கித் துன்னுவேனே தவிர, உன் பிச்சை எனக்கு வேண்டாம்...   ப்..... பூ !...."

அறுசுவை உண்டியை அலட்சியமாக உதறித் தள்ளி விட்டு, கம்பீரமாக நடை போட்டான் ராஜா - அந்தப் பரட்டைத் தலை.

பிச்சையின் கண்களிலிருந்து வழிந்த நீர், அவன் பிச்சையிடக் கொண்டு வந்திருந்த பதார்த்தங்களின் மீது விழுந்தது.

-  நிறைவு -  

(நிறைவுதானா?!!)

====================================================================================================

இரண்டும் ஒன்றோடு ஒன்று சேர்ந்தது....!

சென்ற வாரம் சொன்னது போலவே ஏதோ ஒரு கணத்தின் அனுபவத்தில், அல்லது படித்த பாதிப்பில் எழுதியதுதான் இதுவும்.  பெரிய அர்த்தம் என்று இல்லா விட்டாலும், அவரவர் அனுபவத்தோடு சேரும்போது ஏதாவது தோன்றலாம்!  எந்த அனுபவத்தில் எழுதினோம் என்பது எனக்கே மறந்து விடுகிறது.  இப்போது படிக்கும்போது வேறொன்று நினைவுக்கு வருகிறது!

எப்படி 
என்பது எளிதான கேள்வி.
ஏன் 
என்பதற்குதான் பதில் தெரிவதில்லை.  
தெரிந்தாலும் 
சொல்ல முடிவதில்லை.

விதிப்படி நடக்கும்

விதித்தவன் கடவுளா?
விதியே கடவுளா?


உண்மையில் தனித்தனியாய் எழுதி வைத்திருந்த இரண்டை ஒன்றாக்கி விட்டேன்!

====================================================================================================

கீதா அக்கா என்று நினைவு,  அவர் சென்ற மாதம் இந்த சப்ஜெக்ட் பற்றி அவர் பதிவில் எழுதியிருந்தார் என்று ஞாபகம்.படம் பார்க்கும் முன் நாம் கதை படித்து விட்டோம் என்றால் நம் மனதில் பிம்பங்களாகும் உருவங்களுடன் திரையில் வரும் உருவங்கள் ஒத்தே போகாது!

அதில் "புகழ் பெற்ற நினைக்கையில்" என்கிற வரி வருகிறது...புகழ்பெற்ற என்னும் வார்த்தைக்கு அப்புறம் நாவல்களை என்கிற வார்த்தை விடுபட்டிருக்கிறது!




================================================================================================


அதிகமாய் பகிரப்படாத ஒரு மதன் ஜோக்!




==============================================================================================


2015 சென்னை வெள்ளம் நினைவிருக்கும்!  சென்னை மக்கள் நினைவிலிருந்து நிச்சயம் வாழ்நாள் முழுவதும் மறையாது அது.  அந்த வருடம் வெள்ளம் வந்தது டிஸம்பர் ஒன்றாம் தேதி.  ஆனால் அதற்குமுன் தீபாவளி சமயம் நவம்பர் பதிமூன்று தேதியிலேயே சென்னை ஒரு பெருமழையைச் சந்தித்தது.    அப்போது நான் ஃபேஸ்புக்கில் போட்ட ஒரு ஸ்டேட்டஸ் இப்படி என் ஃபேஸ்புக் வரலாற்றில் சாதனை படைக்கும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை!   தினமலரில் வெளியானது அது.   சீனு, கோவை ஆவி ஸ்டேட்டஸ்களும் அப்போது தினமலர் நாளிதழில் வந்தன.  கீழுள்ள படத்தில் லைக் எண்ணிக்கையும், ஷேர் செய்யப்பட எண்ணிக்கையும் நான் எதிர்பாராதது!









=========================================================================================

128 கருத்துகள்:

  1. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். இன்னிக்கு பிலஹரியின் கதைத் தொடர்ச்சி வந்திருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா அக்கா...  வாங்க... நல்வரவு, நன்றி.

      நீக்கு
    2. பிலஹரியின் கதை இன்றுடன் நிறைவு பெறுகிறது!

      நீக்கு
  2. எனைத்தானும் நல்லவை கேட்க..

    வாழ்க நலம்....

    பதிலளிநீக்கு
  3. நாம் வேறு..
    அரசாங்கம் வேறு...

    எந்தப் படிப்பினையும்
    கொள்ள மாட்டோம்..

    அதுவும் வேறு...

    பதிலளிநீக்கு
  4. விதித்தவன் கடவுளா?..
    விதியே கடவுளா!..

    Rules and Regulations
    எப்படி நீதிபதி ஆவதில்லையோ
    அப்படித்தான் இதுவும்!...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான்.  பரம்பொருளை அடைய படிப்பபடியாக வழிகள் உண்டாம்.  

      உருவ வழிபாடு,  அருவ வழிபாடு,  விரும்பும் வடிவங்களில் கடவுளைக்காண்பது ஒருவகை.  எல்லை இல்லாத சக்தி என்று மனதால் தொழுவது ஒருவகை.  

      ஆனால் பாருங்கள்...    இது தலைப்பின் கவர்ச்சிக்காக வைத்தது!

      நீக்கு
  5. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்தநாள் இனிமை நிறைந்ததாக இருக்கவும் ஆண்டவனை மனப்பூரவமாக பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா...    காலை வணக்கம்.  இனிய பிரார்த்தனைகளுக்கு நன்றி.

      நீக்கு
  6. அறுசுவை உண்டி... - என்று வந்திருக்க வேண்டும்...

    சரியா!...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், அதைத் தவிரவும் நிறைய இடங்களில் பிழைகள் மலிந்து கிடக்கின்றன. அறுசுவை உண்டியைத் தவிர்த்தால் இன்னொன்று இங்கே மேலே ! பெருமை பொங்க என வரவேண்டும்.

      நீக்கு
    2. //அச்சிறவனை நோக்கி நடந்தான் பாட்டைத் தலையன்.// //குழைந்தை// //அந்தப்பிச்சைக்காரப்பையனுடைய விட்டன போலும்.//

      நீக்கு
    3. //கேசச்ச் சுருள்.// //அரைக் காத்தலும்//அரைக் கந்தல். அந்தச் சிறுவனை நோக்கி நடந்தான்பரட்டைத் தலையன். குழந்தை .

      நீக்கு
    4. கேஜிஜி திருத்தியதைத்தவிர மிச்சமிருந்த பிழைகளையும் திருத்தி விட்டேன் (என்றுதான் நினைக்கிறேன்)   பிழைபொறுப்பீர்!  நன்றி.

      நீக்கு
  7. வணக்கம் சகோதரரே

    கதம்பம் அருமை. பிலஹரி அவர்கள் எழுதிய கதை அதற்குள் நிறைவுப் பகுதிக்கு வந்து விட்டதே! கதை நிறைவாகவும் உள்ளது."பசி வந்திட பத்தும் பறக்கும்" என்பது பழமொழி. பசியின் கொடுமை தாங்காது இருந்த நேரத்திலும் சிறுவன் தன் எண்ணத்தை சிதற விடாது, தங்கள் பெயர் மாற்றத்தை சுட்டிக் காட்டி பசியை நிராகரித்து சென்றது எதிர்பார்க்காத முடிவு. கதை நன்றாக உள்ளது.அருமையான கதையை படிக்கத் தந்த தங்களுக்கு நன்றிகள்.

    தங்கள் கவிதை அருமை. உண்மைதான்! "ஏன்" என்ற கேள்விகளுக்கு நேற்று விடை கிடைத்தது. படிக்க ஸ்வாரஸ்யமாக இருந்தது. ஆனால் விதியை விதித்தவனிடம், அக்கேள்விக்கு பதில் வராது. விதியெனும் மாய வலைக்குள் நம்மை பிணைத்து வைத்தவனே அவனல்லவா! கேள்விகள் "வலை" தாண்டாது.

    /விதித்தவன் கடவுளா?
    விதியே கடவுளா?/

    அருமையான வார்த்தைகள். நானும் பல நேரங்களில் இப்படித்தான் யோசித்துக் கொண்டேயிருக்கிறேன். விடை சொல்ல எவருமில்லை.
    மிகுதியையும் படித்து விட்டு வருகிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா...     அடுத்த கதையையாவது இவ்வளவு பிழைகள் இல்லாமல் தர முயற்சிக்கிறேன்.  ஒருவரது படைப்பை காபி செய்யும்போது அதில் எப்படி இருக்கிறதோ அப்படியே கொண்டுவர முயற்சித்ததன் விளைவு.  அப்புறம் மறுபடிப் படித்துப் பார்த்திருக்க வேண்டும்.  நேரமில்லாமல் போயிற்று.

      நீக்கு
    2. நான் ஏதும் பிழைகளை சுட்டிக் காட்டவே இல்லையே! தட்டச்சு பிழைகள் இயல்பாக ஏற்படுவதுதானே!அதற்கு ஏன் இவ்வளவு வருத்தம்.? நான் கதையையும், தங்கள் கவிதையையும்
      மிகவும் அழகாக அருமையாக உள்ளதென கூறியுள்ளேன். மிகுதியையும் படித்து வருகிறேன். எனக்கும் கைப்பேசியில் அடிப்பதற்குள் ஒவ்வொன்றின்கும் ஆயிரம் பிழைகள் வருகின்றன. இதெல்லாம் சகஜந்தானே!

      நீக்கு
    3. சேச்சே...   நீங்கள் சொன்னீர்கள் என்று நான் சொல்லவில்லையே...  பிழைகள் இருப்பது படிக்க இடைஞ்சல்.  அது என் தவறு!  அதைதான் சொன்னேன்.  அதை உங்கள் கமெண்ட்டில் பதிலாகச் சொல்லி விட்டேன்!  கோச்சுக்காதீங்க!!

      நீக்கு
    4. வணக்கம் சகோதரரே

      காலை அவசரத்தில் நிறைய பிழைகள் இருந்தன. இப்போது எல்லாம் சரியாகி விட்டது. நன்றாக இடைஞ்சல் இல்லாமல் இப்போதும் ஒருமுறை படித்தேன். இதில் கோபித்துக் கொள்ள என்ன இருக்கிறது? இதற்கெல்லாம் கோபப்பட்டால், பிறகு அந்த "கோபமே" என் மீது கோபப்படும். ஹா. ஹா. ஹா. நன்றி..

      நீக்கு
  8. என்னவோ இந்தக் கதையின் முடிவு மனதைக் காயப்படுத்துகிறது....

    ஆனாலும் பிச்சையிடம் பிச்சை ஏற்காமல் சென்ற அந்தச் சிறுவனின் ஆளுமை...

    அடடா!...

    இளகிய மனங்கொண்ட சிறுவனின் மனம் எப்படி வேதனை அடைந்திருக்கும்...

    இனி அவன் யார்க்கும் பிச்சை இடுவானா!..

    இடுவான்.. இடுவான்...

    நல்ல மனங்கள் சோர்ந்து போனாலும்
    சுருண்டு போவதில்லை...
    வீணாக இருண்டு போவதில்லை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்.   கதாசிரியரின் திறமையை கவனித்தீர்களா?  சாதாரணமாக இந்தக் கதையில் யாசகம் கேட்கும் சிறுவன் மேல்தான் இரக்கம் வரவேண்டும்.  அப்படிதான் தொடங்கினார்.  ஆனால் முடிக்கும்போது இரக்கத்தை மடைமாற்றிவிட்டார்.  என்னதான் ராஜாவின் கம்பீரம் மனதில் நின்றாலும்,  நல்ல மனம் கொண்ட பிச்சையின் வாடிய முகம் நினைவில் நிற்கிறது பாருங்கள்.

      நீக்கு
    2. பிலஹரி என் அப்பாவுக்குப் பிடித்த, தெரிந்த எழுத்தாளர். ஆனால் வேறே தகவல்கள் இப்போ நினைவில் இல்லை. அவர் நடுத்தரக்குடும்பத்து வாழ்க்கை முறையை வாழும் குடும்பக்கதைகளையே அதிகம் எழுதுவார். ஆனாலும் இப்படியான ஒரு சில கதைகளும் உண்டு. இந்தக் கதையில் அந்தப் பிச்சைக்காரச் சிறுவன் மேல் வெள்ளித்தட்டைக் கேட்டான் எனப் பழி வருமோ என்று நினைக்க வைத்துப் பின்னர் கதையின் முடிவே மாறி விட்டது. எல்லோரும் சொன்னது போல் கதை மனதுக்கு நிறைவாக இல்லை. நேற்றே சொல்ல நினைத்துத் தயக்கம்! :(

      நீக்கு
    3. கேஜிஜி சில விவரங்கள் கொடுத்தார்.  அது இணையத்தில் கிடைக்கிறது.

      நீக்கு
  9. கதம்பத்தின் மற்ற மலர்களும் அருமையான வாசம். கெட்டிக் கதம்பம் தான். ஒரு சில ஆங்காங்கே பழைய பூக்கள் தலைகாட்டினாலும்! :))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பழைய பூக்கள் என்றால் பழசு என்று அர்த்தமா?  இல்லை பிழைகளை சொல்கிறீர்களா?  நன்றி.

      நீக்கு
  10. ஆங்காங்கே தலை காட்டிச் சிரித்துக்கொண்டிருந்த எழுத்துப் பிழைகளை சரிசெய்துவிட்டேன். சுட்டிக்காட்டிய எல்லோருக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கேஜிஜி...    கண்ணில் பட்ட விடுபட்ட பிழைகளையும் இப்போது சரி செய்திருக்கிறேன்.

      நீக்கு
  11. இந்த வாரக் கவிதை பற்றி ..... நான் ஒன்றும் சொல்லமாட்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // நான் ஒன்றும்
      சொல்ல மாட்டேன்.. //

      இதுவே கவிதை மாதிரி இருக்குது...

      நீக்கு
    2. இப்பவும் நான் ஒன்றும் சொல்லமாட்டேன். :)

      நீக்கு
    3. அடிச்சுக் கேட்டாலும் நீங்கள் ஒண்ணும் சொல்ல மாட்டீர்கள் என்று தெரியுமே!

      நீக்கு
  12. அந்தக் காலத்து நகைச்சுவைத் துணுக்குகளும் அதற்கென வரையப்படும் ஓவியங்களும் அனைத்துமே காலம் கடந்து நிற்பவை. அந்த வகையில் இவ்வார துணுக்கும் சூப்பர்.

    பதிலளிநீக்கு
  13. ராஜாவும், பிச்சையும் சேர்ந்த கட்டம் நெகிழ்ச்சி.
    ஆம் பேருக்காகவாவது ராஜநடையோடு வாழணும் போல...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த கணம் வாழ்ந்த வாழ்க்கையை ராஜா வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டான்.  நன்றி ஜி.

      நீக்கு
    2. அழகிரி சாமி அவர்களின் "ராஜாவந்தார்' கதை நினைவுக்கு வருது. அனாதை பையனின் பெயர் ராஜா.
      நல்லமனம் கொண்ட ஏழைவீட்டுக்கு தீபாவளி அனறு வருவான் அந்த சிறுவன். அவனை அந்த வீட்டில் உள்ளவர்கள் எல்லோரும் பாசமாய் நடத்துவார்கள் அதுவும் அந்த தாய் மிக கருணை உள்ளவர். தன் குழந்தைகளை எண்ணெய் தேய்த்து குளிக்க வைப்பது போல் அந்த குழந்தைக்கும் எல்லாம் செய்வார் புத்தாடைக்கு தன் கண்வரின் புது துண்டை கட்டி விடுவார்.
      ஏழை வீட்டு குழந்தைகளிடம் ஏளனம் செய்து மட்டம் தட்டும் பக்கத்து வீட்டு பணக்கார பெருமை பேசி பையனிடம் எங்கவீட்டுக்கும் ராஜா வந்தார் தீபாவளிக்கு என்று குழந்தைகள் பெருமை பேசும் . நம் கண்களில் நீர் திரையிடும் படித்து முடிக்கும் போது.

      நீக்கு
    3. கு அ கதை ஒன்று கூட படித்ததில்லை கோமதி அக்கா.

      நீக்கு
    4. நிறையப் படிச்சிருக்கேன் இந்தக் கதை உட்பட. இந்தக்கதை இணையத்தில் கிடைக்கிறது என நினைக்கிறேன்.

      நீக்கு
  14. `அனைவருக்கும் காலை வணக்கம்.
    பிலஹரி சாரின் கதையா.

    ஏதோ ஒன்று சரிப்படவில்லை. அந்தக் குழந்தையின் புண்படாமல் ,அவன் பெயருக்காக்வாவது
    இரங்கி இருக்கலாம். ராஜா. முந்திய பகுதிகளைப் படித்தால்
    புரியும்.

    சென்னை வெள்ளத்துக்குக் காரணமான குப்பைகளை அப்பொழுதே குறிப்பிட்டிருப்பது
    அருமை ஸ்ரீராம். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வல்லிம்மா...    வாங்க...

      //ஏதோ ஒன்று சரிப்படவில்லை.//

      அதுதான் நிறைவுதானா என்று சின்ன எழுத்தில் கேட்டிருக்கிறேன்மா! முதல் பகுதிக்கு சுட்டி இப்போது சேர்த்திருக்கிறேன்மா.

      நீக்கு
    2. வல்லிம்மா.. முன் பகுதியைப் படிக்காமலேயே இவ்வளவு சரியாகச் சொல்லி விட்டீர்களே!.. பிலஹரி சறுக்கியது அங்கே தான். வாழ்க்கையின் ஏற்ற தாழ்வை பெயரில் சரிக்கட்டியிருக்கிறார்.

      இதே மாதிரி இன்னொரு கதை. கண்ணதாசன் இதழில் வந்தது. என் நினைவிலிருந்து சொல்கிறேன்.

      இரண்டு சிறுவர்கள். எலிமெண்டரி ஸ்கூலில் ஒன்றாகப் படிக்கும் சிறுவர்கள். ஒருவன் வசதிப் படைத்தவர் வீட்டு பிள்ளை என்றால் இன்னொருவன் துணி இஸ்திரி போடுபவர் பிள்ளை. ஒருநாள் இஸ்திரி போடுபவருக்கு உடல் சுகமில்லாமல் இருக்க அவர் தன் மகனை முதல் நாள் இஸ்திரி போட்டத் துணிகளை ஒரு வீட்டில் கொண்டு போய்க் கொடுக்க தன் மகனிடம் சொல்கிறார்.
      அவனும் துணிகளைச் சுமந்து கொண்டு தந்தை சொன்ன விலாசத்திற்குச் சென்றால், அந்த வீடு இந்தப் பையனோடு கூடப் படிக்கும் சிறுவன் வீடாக இருக்கிறது.

      வசதி படைத்த வீட்டுப் பையனுக்கு இஸ்திரி போட்ட துணிகளைச் சுமந்து வரும் தன் வகுப்புப் பையனைப் பார்த்து அதிர்ச்சி. அவனைக் கண்டு இரக்கம் காட்டுகிறான். ஆனால் இஸ்திரி துணி சுமந்து வரும் பையனோ 'இதில் எல்லாம் ஒன்றுமில்லை' என்கிற மாதிரி துணிகளைக் கொடுத்து விட்டு அந்தப் பையனின் தந்தையிடம் கூலி வாங்கிப் போகிறான்.

      அவ்வளவு தான் கதை.


      நீக்கு
    3. அந்தக் கதையும் கிட்டத்தட்ட இதே போல இருக்கிறதே ஜீவி ஸார்...

      நீக்கு
    4. அந்தக் கதையில் நிறைவு இருக்கிறது.அதுதான் யதார்த்தம். நன்றி ஜீவி சார்.

      நீக்கு
    5. நன்றி ஸ்ரீராம். முன்பு வந்த பகுதிகளைப் படிக்கிறேன்.

      நீக்கு
    6. இதற்கு முன் ஒரே பகுதிதான் அம்மா.

      நீக்கு
    7. அந்தக் கதையில் பகவத் கீதையின் ஒரு தத்துவம் ஒளிந்து இருக்கிறது. சொல்லப் போனால் அதைச் சொல்வதற்காகத் தான் அந்தக் கதையே. மற்றவை உங்கள் யோசனைக்கு.

      நீக்கு
    8. அந்தக் கதையை வைத்துக் கொண்டு ஒரு காலத்தில் நேர் - எதிர் என்று நிறைய விவாதித்திருக்கிறோம். அதனால் தான் இவ்வளவு ஆண்டுகளுக்குப் பிறகும் கதை நினைவில் இருக்கிறதோ என்னவோ. என்.ஆர். தாசன் என்றோரு எழுத்தாளர் இருந்தார். இது அவர் எழுதிய கதையோ என்று நிச்சயப்படுத்த முடியாத நினைவு எனக்கு.

      பாலசந்தரின் அபூர்வ ராகங்கள் இவர் எழுதிய கதையைத் தழுவித் தான் திரைப்படமாக எடுக்கப்பட்டது என்பது அக்காலத்தில் பேசப்பட்ட செய்தி.

      நீக்கு
    9. இது செய்தி எனக்கு ஜீவி ஸார்.   நன்றி.

      நீக்கு
  15. //அதற்கும் தலையீட்டால்தான் // தலையாட்டால்தான் என்றிருக்க வேண்டும்.
    //பெருமைபொண்கள் // பெருமை பொங்க 
    பிறந்த நாலாவது// நாளாவது //
    இந்த மாத்தடியிலே உட்கார்ந்துக்கோ// இந்த // மரத்தடியிலே..//
    அது  பதார்த்தங்கள்-// அந்த பதார்த்தத்தங்கள்
    இவைகள் என் கண்ணிலே பட்ட பிழைகள். ஏற்கனவே திருத்தப்பட்டிருந்தால் இதை இக்னோர் பண்ணி விடலாம். 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போது திருத்தி விட்டேன்.   திருத்தப்பட்ட புத்தம்புதிய பதிப்பு!

      நீக்கு
  16. கதையைக் குறித்து வல்லி அக்காவின் கருத்துதான் எனக்கும். ஏதோ ஒன்று சரிப்படவில்லை. முடிவில் அந்த கதாபாத்திரத்தின் மீது கதாசிரியர் ஏறி உட்கார்ந்து கொண்டு விட்டார். 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இயற்கையாக இந்தப் பக்கம் இரக்கம் திரும்புமோ, அதைத் திறமையாக இந்தப் பக்கம் திருப்பி விட்டிருக்கிறார்.

      நீக்கு
  17. மதன் கார்ட்டூன்களில் முக பாவங்கள் அசாத்தியமாக இருக்கும். இதில் கூட அப்பாவி அரசியல்வாதி, அவர் மனைவியின் ஆத்திரம், பின்னால் நிற்கும் பொடியனின் பாவம்... ஆஹா!

    பதிலளிநீக்கு
  18. பிச்சையெடுப்பவனுக்கு ராஜா என்ற பெயரும், ராஜ போகத்தில் வாழ்பனுக்கு பிச்சை என்ற பெயரும்... என்னவொரு முரண்!"பிச்சையெடுக்கும் சிறுவர்களுக்கு பிச்சை போட்டு விட்டு அவர்களிடம் பெயர் கேட்பேன், பெரும்பாலும் "ராஜா" என்று கூறுவார்கள்." என்று சுஜாதா ஒரு முறை எழுதியிருந்தார். இதைப்போல வீட்டு வேலைக்கு வரும் பல பெண்மணிகள் லக்ஷ்மி என்ற பெயர் கொண்டவர்களாக இருப்பார்கள். 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கண்ணாயிரம், சுந்தரம் என்று இந்த முரண்கள் நிறைய இருக்கின்றன!!

      நீக்கு
  19. //ஏன் என்பதற்குதான் பதில் தெரிவதில்லை.  
    தெரிந்தாலும் சொல்ல முடிவதில்லை.//
    அதைச்சொன்னாலும் கேட்பவருக்கு புரிவதில்லை.

    பதிலளிநீக்கு
  20. வயிறு காய்கிறவனுக்கும் வலிமை மிக உண்டு மனதில் எனக் காட்டும் கதை. பிலஹரியின் சிறுகதைகள் புத்தகமாக வந்திருக்கிறதா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுஜாதா ஒரு கதை எழுதியிருப்பார்.  தனது பணக்கார உறவினரிடம் மிக அவசியமான ஒரு காரணத்துக்காக, வேறு வழியின்றி கடன்கேட்கச் செல்வான் ராஜாராமன்.  அந்தப் பணக்காரரின் குத்தல் வார்த்தைகள், எகத்தாளம், அவர் மகனின் அலட்டல் பேச்சு ஆகியவை ராஜாராமனை எரிச்சலுற வைத்து, கடைசியில் அவர் பணம் தரும் நேரம் மறுத்து விட்டு வந்து விடுவான்.  "அந்த ஒரு கணம் முழுமையாக வாழ்ந்தேன் நான்"என்று ராஜாராமன் நினைப்பதாக முடித்திருப்பார்!

      பிலஹரி பற்றிய தகவல்களே திரட்ட முடையவில்லை.  புத்தகம் வெளிவந்திருக்கிறதா, தெரியவில்லை. 

      கதைக்கான ஓவியம் பற்றி யாருமே சொல்லவில்லை!!!   

      நீக்கு
    2. படித்திருக்கிறேன். அந்தக் கதை டெல்லியில் நிகழ்வதாக வரும். சுஜாதாவின் டெல்லி நாட்கள்..

      நீக்கு
    3. நானும் படித்திருக்கிறேன். சுஜாதாவின் 'கதை எழுதுவது எப்படி' என்னும் சிறுகதை தொகுதியில் முதல் கதை என்று நினைக்கிறேன். தலைப்பால் கவரப்பட்டு அந்த புத்தகத்தை வாங்கினேன். 

      நீக்கு
    4. //கதைக்கான ஓவியம் பற்றி யாருமே சொல்லவில்லை!!! //

      கதைக்கான ஓவியம் அருமை.

      //உன் பேரே பிச்சை ! இன்னொருத்தருக்கு நீ பிச்சை போடறியா?... எனக்கு உன் சோறு வேணாம் !"//

      இந்த வரிகளுக்கு ஏற்ப ராஜாவின் ஓவியம்

      பண்க்கார குழந்தையின் ஆடை அணிகலங்கள், கருணைமிகு முகம்,
      // கண்கள்.பௌர்ணமிச் சந்திரனைப் போன்று அப்பளம். மற்றும் பலகாரங்கள் வேறு//


      தட்டில் உள்ள பலகாரங்கள் அவர் சொன்னது உவமை உண்மை என்றது.

      ஸிம்ஹாவின் ஓவியம் அருமை.

      நீக்கு
    5. நன்றி கோமதி அக்கா.   அழகாக சொல்லி இருக்கிறீர்கள்.  படங்கள் தெரளிவாக, பொருத்தமாக இருந்ததாக நினைத்தேன்.  அதனால்தான் யாரும் அதுபற்றி ஒன்றும் சொல்லவில்லையே என்று நினைத்தேன்.

      நீக்கு
  21. //ஒரு சிறுவன், அவனைவிட இரண்டு மூன்று வயது குறைவாக இருக்கலாம்.//

    நோஓஒ ஐ ஒப்ஜக்‌ஷன் யுவர் ஆனர்ர்ர்ர்:))... கர்ர்:)) இப்படி ஆரம்பிச்சதும், போன பகுதியில முடிச்சவிதம் இங்கு பொருந்தவில்லையே.. அங்கு வந்தது ஆரூ எனத் தேடிக் களைச்சுப் பின்புதான் கண்டுபிடித்தேன் அது அந்தச் சிறுவன் என ஹா ஹா ஹா... போனதடவை முடிச்ச வரியையும் சேர்த்துப் போட்டிருந்தால்தான் தொடருக்கு அழகாக்கும்.. இது புதுப்பரா என்பதுபோல தோணியது.. நேக்கு மட்டும்தேன் அப்பூடி:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அதிரா...    அந்த கடைசி வரியை மட்டும் மீண்டும் எடுத்துப் போட்டால் சரியாகி விடுமா என்ன!

      நீக்கு
  22. மேலே கீசாக்கா பானுமதி அக்கா எல்லாம் சொல்லியிருக்கினம், ஏன் ஸ்ரீராமுக்கு இம்முறை ஓவர் எழுத்துப்பிழை வந்தது.. புரூஃப் ரீடர் இல்லையோ?. அதிராதான் கண்ணதாசன் அங்கிளின் எழுத்துக்களுக்குப் புரூஃப் ரீடராக இருந்தேன் எனச் சொன்னால் நம்பவா போறீங்க.. சரி விடுங்கோ..:)).

    //பட்டு வேட்டிக் கேட்டது. //=க்

    //அப்பஞ்சைப் பையன்//
    இது பஞ்ச எனத்தானே வரும்? எனக்கும் டவுட்:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லை...   இதெல்லாம் பிழைகள் இல்லை அதிரா...    இதெல்லாம் புத்தகத்தில் இருப்பது போலவே...!

      என் கீ போர்டில் ஸ்பேஸ் பார் வேலைசரியாய் வேலை செய்வதில்லை.  அது ஒரு பிரச்னை இல்லைதான்.  ஆனால் வார்திகள் ஸ்பேஸ் இல்லாமல் போகும்போது எழுத்துகள் மாறி விடுகின்றன!

      நீக்கு
  23. பிலஹரி எழுதிய நெஞ்சே நீ வாழ்க என்ற கதையை ' ஆலயம்' என்ற பெயரில் திரைப்படமாக எடுத்தார்கள். 1967 ஆம் வருடம் வெளிவந்த படம். இந்த தகவலை வைத்து கூகிள் + விக்கிப்பீடியா ஆராய்ச்சி செய்ததில் தெரிய வந்த தகவல் : " Pilahari " S Raman" என்று பார்த்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஆஆ நீங்க எப்ப்போ ஆராட்சி அம்புஜமா மாறினனீங்க கெள அண்ணன்?:)..

      நீக்கு
    2. பிலஹரி பற்றி இந்தத் தகவலை கிருஷ் ஸார் தனது தளத்திலும் சொல்லி இருக்கிறார்.

      நீக்கு
    3. ///கௌதமன்21 நவம்பர், 2019 ’அன்று’ பிற்பகல் 12:49
      துப்பறியும் சாம்பு.//

      ஆஆஆஆஆஆஆஆ .... ஹா ஹா ஹா.

      நீக்கு
    4. சென்ற பதிவில் 'ஆலயம்' படம் பற்றி நான் சொன்ன அதிகபட்ச செய்திகளை (அந்த படம் பற்றியும் அதை இயக்கிய திருமலை- மஹாலிங்கம் பற்றியும் குமுதத்தில் நான் எழுதப் போக) மறந்து விட்டீர்கள் போலும்.

      நீக்கு
    5. ஆமாம் ஜீவி ஸார். நினைவுக்கு வருகிறது.

      நீக்கு
  24. //ஒரு பொடியனிடம் வாய் திறந்து//

    பொடியன் எனும் வார்த்தை இதிலும் வருதே.. இது நம்நாட்டில் தானே பாவிப்போம்:)) ஹா ஹா ஹா.. நாம் பெடியன் என்போம்[பேச்சு வழக்கில்].

    கதையின் நடுப்பகுதி, ஒரு பிச்சைக்காரருக்கு திடீரென ஒருவர் இரக்கம் காட்டும்போது மனம் ஏற்றுக்கொள்ளாதுதான்:)... ஊரிலே ஒரு தாத்தா ஒருவர் வெளி வேலைகள் செய்ய வீட்டுக்கு வருவார்.. அவர் எப்பவும் பெரீஈய தேங்காய்ச் சிரட்டையைச் சீவி, அதைத்தான் தன் ரீ கப்பாக வைத்திருப்பார். அது எனக்கு பிடிப்பதே இல்லை, ஆரம்பம் எவ்வளவோ முயன்று பார்த்தேன்[நானும் அப்போ சின்னப்பிள்ளையாக்கும்:))], சில்வர் கப் கொடுத்தேன், மறுத்துப்போட்டார், பின்னர் ஒரு பிளாஸ்ரிக் ஷொப்பில் பெரிய கப் வாங்கி வந்து கொடுத்தேன்.. ம்ஹூம்ம் இல்லை எனக்கு இதுதான் வசதி என்றிட்டார் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) , அவர் உள்ளங்காலில் ஒரு புண் எப்பவும் இருக்கும், அதை ஒரு துணியால் கட்டிப்போட்டு வேலை செய்வார்ர், நான் அதுக்கு மருந்து போட்டு புதுத்துணி கொடுத்துக் கட்ட வைப்பேன்... காலையில் வீட்டுக்கு வந்ததும் என்னைத் தேடுவார்.. ஆனா அவர் இப்போ இல்லை..நல்ல மனிசன்.

    அப்படித்தான் சிலருக்கு சிலது பழகி விட்டால், புதுசாக ஒன்றைப் பார்க்கையில் விருப்பமில்லாமலும் பயமாகவும் இருக்கும்.. இப்போ அதிரா வந்து ஒவரா அலட்டாமல்.. அருமை.. , நல்லாயிருக்கு என மட்டும் போட்டுவிட்டு ஓடினால் உங்களுக்குப் பயம் வராதோ?:)) ஹா ஹா ஹா..

    கதை உற்சாகமாக நகர்கிறது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //கதை உற்சாகமாக நகர்கிறது..//

      இன்னும் தொடரும் என்பது போல சொல்லி இருக்கிறீர்கள்.   இல்லை அதிரா...    முடிந்துவிட்டது!

      நீக்கு
    2. இந்தப் பதிலை, எதிர்பார்த்தேன் ஸ்ரீராம்:) ஹா ஹா ஹா பப்ளிஸ் பட்டினை தட்டியபின்....

      நீக்கு
  25. இரு சிறுவர்களின் முக பாவங்களும் மிக அழகாக வரையப்பட்டிருக்கு, அப்பூடியே கதா பாத்திரத்துக்கு ஏற்ப அமைஞ்சிருப்பது அருமை.

    //அவன் லாட்டரி முடிக்கையில்//
    இங்கு அடிக்கையில் என வருமோ.. வசனம் புரியவில்லை..

    // 'கேட்'டை நெருங்கி//
    ஹா ஹா ஹா cat ஐயும் கேட் எனத்தான் எழுதுறிங்க:) கர்ர்ர்ர்ர்ர் இனிமேல் கற் என எழுதுங்கோ .. கெள அண்ணன் பீஸ்ஸ்ஸ்.. நோட் திஸ் கோல்டன் பொயிண்ட்:)..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. லாட்டரி முடிக்கையில் எங்கே வருகிறது?   பார்க்கவில்லையே...    கேட்டை நெருங்கி ஓகே...   அப்படிதான் வருகிறது.

      நீக்கு
  26. ///மூன்றைப் பறிகொடுத்துட்டு கறிவேப்பிலைக் கன்று மாதிரி இவன் ஒருத்தனை வைச்சிண்டிருக்கேன் !"//

    இந்த வரி படிச்சதும் என் மனதில் ஓடியது... அந்த பிச்சை எடுக்க்கும் பையனையும் தங்களின் மகனாக சேர்த்திடுவார் என:(..

    எங்கள் ஊரில் மிக அழகான ஒரு குடும்பம், 4 பிள்ளைகள்... மூத்த குழந்தைக்கு 13-14 வயசு ஆனதும் ஒருவித வியாதி வந்து இறந்து விட்டது.. பின்பு 2ம் குழந்தை அவ்வயதை அடைஞ்சதும் அதே வியாதி... அதே வயதில் அதுவும் பொய் விட்டது.. பெற்றோர் பைத்தியமாகிவிட்ட நிலைமையில்.. 3 வதுக்கும் அதே கதி.... இனி 4 மட்டும் பிழைக்குமோ எனும் நிலையில்.. வீட்டை இடிச்சு வேறிடம் மாறி.. இந்தக் கவலையால தாயும் போய் விட[சிறிய வயசுதான்], தந்தை முழுக்குடிகாரராகிட.. அந்தக் கடசிக் குழந்தை மட்டும் பிழைச்சு இப்போ தன் மாமா குடும்பத்தோடு நலமே இருக்கிறாவாம் இப்போ படிச்சு யுனியில் இருப்பதாக அறிஞ்சேன்.. விதி எப்படியெல்லாம் விளையாடுகிறது.. நம் கையில் என்ன இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அந்த பிச்சை எடுக்க்கும் பையனையும் தங்களின் மகனாக சேர்த்திடுவார் என:(.//

      ஆ தோ அ வ!

      நீக்கு
    2. ஏன் ஸ்ரீராம், மகனாக இல்லாட்டிலும் ஒரு வேலைக்கார சிறுவனாக என்றாலும், தன் மகனுக்கு ஒரு துணை போல சேர்த்திருக்கப்படாதோ.. 3 ஐ இழந்தவர் என்பதனால...

      நீக்கு
    3. ஹா...  ஹா...   ஹா...   லாம்!  லாம்!

      நீக்கு
  27. ///பரட்டைத்தலை சிரித்தான்.

    "உன் பேரே பிச்சை ! இன்னொருத்தருக்கு நீ பிச்சை போடறியா?... எனக்கு உன் சோறு வேணாம் !"//

    இதைத்தான் திமிர் என்பதோ? ஒரு வேளை சாப்பாட்டுக்கே வழியில்லையாம், இதில எப்படிப் பேசுகிறார் பாருங்கோ, இப்படியானவற்றால்தான் சிலநேரம் மனம் இரங்கத் தவறுகிறது:(.

    அந்தக் குட்டியோடு நண்பனாகியிருந்தால், வாழ்க்கை முழுக்க இவருக்கு உணவு கிடைச்சிருந்தாலும் இருக்கும்.

    கதாசிரியர் இதிலிருந்து என்ன சொல்ல வருகிறார் எனப் புரியவே இல்லை...:)..

    *பணக்காரர்கள் எல்லோருமே இரக்கமில்லாதவர்கள் எனும் மனப்போக்கு பொதுவாக இருக்குது... அப்படி இல்லை என்கிறாரா?
    * பிச்சைக்காரர்களுக்கு இரக்கம் காட்டாதீங்கோ, இப்படி திமிராகப் பலர் இருக்கினம் என்கிறாரா?
    கண்டுபிடிக்க கஸ்டமாக இருக்குது ஹா ஹா ஹா..

    மிக அழகிய கதை.. சுவாரஷ்யமாக இருந்தது... என் கிண்டில் புக் இன்னும் ஆரம்பிக்கவில்லை நான்,
    “கையில்லாத பொம்மை” பாதியில் நிற்கிறது:).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜீவி ஸார் சொல்லி இருப்பதைப் பார்த்தால் அவர் இந்த டைப்கதைகள் நிறைய எழுதி இருப்பார் போல...

      நீக்கு
  28. //ஏன்
    என்பதற்குதான் பதில் தெரிவதில்லை.//
    உண்மைதான் ஏன் என்ற கேள்விக்கு மட்டும் விடை கிடைக்காதாம்...

    ஏன் என்ற கேள்வி கேட்காமல் வாழ்க்கை இல்லை...

    ஏன் ஏன் ஏன் மதுக் கிண்ணத்தை ஏந்துகின்றேன்....

    ஏன் பிறந்தாய் மகனே.....

    ஹா ஹா ஹா

    பதிலளிநீக்கு
  29. விதித்தவன் கடவுளா?
    விதியே கடவுளா?//

    விதிதான் கடவுள்.. ஆனா விதித்தது மனிதன்.. ஹா ஹா ஹா..

    பதிலளிநீக்கு
  30. //உண்மையில் தனித்தனியாய் எழுதி வைத்திருந்த இரண்டை ஒன்றாக்கி விட்டேன்!
    //

    ஆஆஆஆஆஆ எங்கே அந்தப் பொன்னாடை.. எடுத்துவந்து போர்த்தி விடுங்கோ:)).

    //கீதா அக்கா என்று நினைவு, அவர் சென்ற மாதம் இந்த சப்ஜெக்ட் பற்றி //
    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அது அதிராவாக்கும்:) நீங்க மறந்திட்டீங்க ஸ்ரீராம்:)).. ஹா ஹா ஹா மறதி அதிகமாக இருப்போரை இப்படிக் குழப்பிவிட்டால் குழம்பிடுவினம் ஹா ஹா ஹா..

    பதிலளிநீக்கு
  31. //படம் பார்க்கும் முன் நாம் கதை படித்து விட்டோம் என்றால் நம் மனதில் பிம்பங்களாகும் உருவங்களுடன் திரையில் வரும் உருவங்கள் ஒத்தே போகாது!//

    இதனால்தான் நான் எப்பவும் கதை தெரிஞ்சபின் படம் பார்க்க விரும்புவதில்லை...

    //படம் பார்க்கும் முன் நாம் கதை படித்து விட்டோம் என்றால் நம் மனதில் பிம்பங்களாகும் உருவங்களுடன் திரையில் வரும் உருவங்கள் ஒத்தே போகாது!///

    ஹா ஹா ஹா அந்நாளில் போராட்டம் நடத்துவோரைப் பொலீஸ் பிடிச்சால்தான் கெத்தாம்:)).. கண்ணதாசன் அங்கிள் எழுதியிருக்கிறார், தாம் கூட்டுச் செர்ந்து போராடியபோது.. அண்ணாவை பொலீஸ் பிடிச்சு உள்ளே போட்டு விட்டதாம், தன்னைப் பிடிக்கவில்லையாம்,[இவர் டென்ஷனாகிட்டாஅர்போலும்:)] தான் கடுமையாக ஸ்ரைக் பண்ணி, ரெயினின் முன்னால் குதிச்சபோதுதான், இரவானதும் தன்னையும் பிடிச்சு உள்ளே போட்டார்கள் என ஹா ஹா ஹா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வடிவேலுவின் நானும் ரௌடிதான் நானும் ரௌடிதான் ஜோக் ஞாபகத்துக்கு வருகிறது!

      நீக்கு
  32. சுத்தம் சுகாதாரம் இதுக்கெல்லாம் இன்னொரு காரணம் அரசாங்கம்... நாட்டில் மக்களுக்கு பஞ்சமில்லாதவாறு அரசாங்கம் பார்த்துக் கொண்டால், மக்கள் சுத்தமாக வைத்திருப்பர் நாட்டை என நினைக்கிறேன். வளர்ந்துவிட்ட நாடுகளில் பஞ்சம் இல்லாமல் இருப்பதனாலதான் மக்கள் ஓரளவு மகிழ்ச்சியாக இருக்கின்றனர், வயிறு நிரம்பினால்தானே அடுத்ததைப் பற்றி யோசிக்க வரும்... இப்படியெல்லாம் மீ நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மக்களுக்கு பொறுப்பு இருக்கவேண்டும்.  நான் குப்பை போட்டுக்கொண்டே இருப்பேன்.  சுத்தம் செய்வது அரசாங்கத்தின் வேலை என்று நினைத்தால் எப்படி?

      நீக்கு
    2. உங்களுக்குப் புரியவில்லை, நான் சொன்னது, பட்டினி யாக இருக்கும்போது மக்களுக்கு அடுத்த சிந்தனை வராது, சாப்பாட்டுக்கு என்ன பண்ணலாம் எனும் எண்ணம்தான் வரும், இதில் குப்பையாவது மண்ணாங்கட்டியாவது என நினைக்க தோன்றும்...

      ஆனா மக்களின் பஞ்சத்தை அரசாங்கம் கவனித்தால், கொஞ்சமாவது குப்பை பற்றி அடுத்தவர் பற்றி சிந்திக்கும் நினைவு வரும் மக்களுக்கு....

      நீக்கு
  33. விதிப்படி நடக்கும்
    விதித்தவன் கடவுளா?விதியே கடவுளா?
    விதைத்தவன் கடவுள் ஆயின் விதி கடவுள்  ஆகாது. படைப்பு படைத்தவன் ஒருவன் உள்ளபோது படைப்பு கடவுள் ஆவது எப்படி? 
    ஏன் என்ற கேள்வியை கேட்டு பதில் உணாராததால் தான் சாதாரண மனிதர்கள் ஆக இருக்கிறோம். பதில் கிடைத்தால் நாமும் ராமகிருஷ்ணர் போலவோ  ரமணர் போலவோ ஞானம் பெற்றவர் ஆகிவிடுவோம். ஆக நாம் சாதாரண மனிதர்களாக விதியே துணை என்று  வாழ்வோமாக.Jayakumar

    பதிலளிநீக்கு
  34. வெள்ள அனுபவங்கள் நம் குறைகளைக் காட்டும் கவிதை ஆயிற்றோ

    பதிலளிநீக்கு
  35. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன் !

    பதிலளிநீக்கு
  36. கதை நன்றாக இருக்கிறது ஆனால் மனதுக்கு நிறைவு இல்லையே!
    கதை நிறைவு நிறைவுதானா என்று கேட்டு இருப்பது போல் நிறைவு அடையவில்லை.

    பிச்சை வாங்கி சாப்பிடும் ராஜாவின் வயிறு நிறையவில்லை. ராஜாவின் பசியை போக்க நினைத்த பணக்கார குழந்தை பிச்சையின் ஆசையும் நிறைவு பெறவில்லையே!

    (பிச்சை) அந்த குழந்தையின் கண்ணீர் மனதை கஷ்டபடுத்துகிறது. ஏற்கனவே தன் வயதை ஒத்த குழந்தையிடம் பிச்சை வாங்கி சாப்பிட மறுகிய குழந்தை பின் வீராப்பாய் காரணம் சொல்லி போய் விட்டாலும் அவன் வயிறு கூப்பாடு போடுமே! அதை நினைத்தால் கவலையாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வீம்பினால் வரும் பிடிவாதத்தினால் யாருக்கும் பயனில்லை என்று சொல்ல வருகிறாரோ...!

      நீக்கு
  37. கவிதை அருமை.
    அவர் அவர் செயலுக்கு ஏற்ப விதித்தவன் கடவுள்.

    பதிலளிநீக்கு
  38. // நம் மனதில் பிம்பங்களாகும் உருவங்களுடன் திரையில் வரும் உருவங்கள் ஒத்தே போகாது!//

    ஆமாம், முன்பு பொன்னியின் செல்வன் கதைக்கு மணியன் செல்வம் வரைந்த படங்களை பார்த்த கண்களுக்கு பிறகு வேறு யாரோ வரைந்த படங்களை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

    திரையிலும் அப்படித்தான் எதிர்பார்க்கும்.

    மேடை பேச்சு முனுசாமியின் மனைவி பெரிய மனிதாரக வேண்டும் என்றால் அவர் மேல் நடவடிக்கை எடுக்கபட்டு இருக்கவேண்டும் என்கிறார் போலும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் கோமதி அக்கா...    பொன்னியின் செல்வன் படமாக வந்தால் மனம் ஏற்குமா?

      நீக்கு
  39. கீழுள்ள படத்தில் லைக் எண்ணிக்கையும், ஷேர் செய்யப்பட எண்ணிக்கையும் நான் எதிர்பாராதது!//

    நல்ல கருத்து அதுதான் இடம் பெற்று இருக்கிறது. வாழ்த்துக்கள்.

    குப்பை எடுப்பவர் தினம் வந்தாலும் அவர் வண்டியில் போட்டது போக கண்ட நேரத்தில் குப்பையை கொட்டுவார்கள் அவை பறந்து அடுத்த வீட்டு வாசலில், தெருவில் போவோர் மேலே எல்லாம் வந்து நிற்கும். தன் வீடு சுத்தம் ஆனால் சரி.
    சுற்றுலா போனால் போன இடத்தில் குப்பைகளை போட்டு வந்து விடுவார்கள். குப்பை கூடைகளில் போடாமல்.
    ட்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாம் எறியும் பிளாஸ்டிக் குப்பைகள் நம் தெருவில் இருக்கும் சாக்கடையை அடைத்துக்கொண்டு படுத்தும்.  நன்றி கோமதி அக்கா.

      வனச்சுற்றுலா செல்பவர்கள் எறியும் மது பாட்டில்களின் உடைந்த ஓடுகள் யானையின் காலில் ஏறி அவை படும் அவஸ்தைகளை ஜெமோ தனது யானை டாக்டர் கதையில் சொல்லி இருப்பார்.

      நீக்கு
  40. வணக்கம் சகோதரரே

    /நம் மனதில் பிம்பங்களாகும் உருவங்களுடன் திரையில் வரும் உருவங்கள் ஒத்தே போகாது!/

    உண்மைதான்..! கதை படிக்கும் போது மனதில் பதியும் உருவங்களுக்கு புறம்பாக திரையில் காணும் போது வித்தியாசமாக த்தான் உணர்வோம். அது மட்டுமல்ல! இந்ததந்த வேடங்களுக்கு இவர்தான் பொருத்தம் என நம் மனம் நினைத்து மனதில் பதிந்து விட்டால், மற்றொரு சமயத்தில், வேறொருவர் அந்த பாத்திரத்தில் நடித்திருந்தால், மனம் ஒப்பிட்டு குறை சொல்லவும் தயங்காது.

    அரசியல் நகைச்சுவை மட்டுமின்றி அந்தப் படமும் நன்றாக உள்ளது. ரசித்தேன்.

    தங்களது வெள்ளம் பற்றிய விமர்சனம் நிறைய பேருக்கு பிடித்திருந்து செய்தியில் இடம் பிடித்திருப்பதற்கு வாழ்த்துக்கள். அதில் நல்ல கருத்துக்களாக கூறியிருக்கிறீர்கள். நம் மக்கள் திருந்தினால் மகிழ்ச்சியாக இருக்கும். ஒரு செயலுக்கு முன் தற்காப்பு உணர்ச்சி வந்தால் நல்லது. அனைத்தும் நன்றாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா....   சுஜாதாவின் கணேஷ் வசந்த்தையே எடுத்துக்கொள்வோம்.   கதை படிக்கும்போது நம் மனதில் இருக்கும் பிம்பம் என்ன?  ப்ரியா படத்தில் ரஜினி கணேஷ்.  வசந்த்தாக வருபவரைப் பார்த்திருக்கிறீர்களா?  அதே ஓலா இது எப்படியிருக்கு என்கிற படத்தில் ஜெய்சங்கர்  கணேஷ்.  வசந்த் ஒருஆள் தெரியா முகம்!

      நீக்கு
  41. இன்னும் இந்த இடுகையை (கதையை) முழுமையாகப் படிக்கவில்லை. நாளை பயணத்தின்போது படித்துக் கருத்திடுகிறேன். ரொம்ப வேலைகள் அதிகம்.

    சென்னை வெள்ளம் - அந்தச் சமயத்தில் மூணாறு குடும்பத்தோடு போவதற்காக எல்லா ஏற்பாடுகளும் தயார். ஹோட்டல், டிக்கெட் எல்லாம் புக் பண்ணிவைத்திருந்தேன். வெள்ளம் வந்ததும், இவங்களை எங்க ஊருக்கு அழைத்துக்கொண்டேன்...... என் பயணம் கேன்சல். ஹா ஹா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நெல்லை.  நான் நினைத்தேன்.  நீங்கள் இரண்டுபகுதிகளும் வெளியானதும் சேர்த்துதான் படிப்பீர்கள் என்று.  சரிதானே?

      நீக்கு
    2. சென்னை வெள்ளம் சமயம் உங்கள் பயணம் ரத்து பற்றி முன்னர் ஒருதரம் லேசாக சொல்லியிருக்கிறீர்கள் என்று ஞாபகம்.

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!