வியாழன், 26 டிசம்பர், 2019

எங்கேயோ...   எப்போதோ....

வெற்றிக்கு ஆயிரம் சொந்தக்காரர்கள்.   தோல்வி ஒரு அனாதை என்பார்கள்.

நீங்கள் ஒரு வேலையை வெற்றிகரமாக முடித்ததும் அதற்கு சொந்தம் கொண்டாடும் சிலரைச் சந்தித்திருக்கிறீர்களா?  அதாவது அதை தான்தான் செய்தேன் என்று சொல்லமாட்டார்கள்.  அதை நமக்கு சொல்லிக் கொடுத்ததாய்ச் சொல்வார்கள்.  அதற்கு காரணம் ஏதோ ஒரு வகையில் அவர்கள்தான் காரணம் என்பது போல பேசுவார்கள்!

ஓரிரு உதாரணங்கள்...

வருடாந்திர வரவு செலவுக் கணக்கு விழுந்து விழுந்து கைகளால் போட்டுக் கொண்டிருந்தார் என் சீனியர்.  அப்போது என் மாமா கேஜி உதவியுடன் அதை கணினியில் முடித்து, அதை அப்படியே பிரிண்ட் அவுட்டும் எடுத்துக் கொடுத்தேன்.  90 களில், அது அதுவரை என் அலுவலகத்தில் யாரும் செய்யாதது.  கேஜி அதை அப்போதைய லோட்டஸ் தொழில் நுட்பத்தில் முடித்துக் கொடுத்தார்.

அப்போதுதான் நான் முதன்முதலாக கணினியைப்பார்க்கிறேன்.  எங்கள் வட்டாரத்தில் அப்போது கேஜி வீட்டில் மட்டுமே கணினி இருந்தது என்று நினைவு.  அவரும் இந்த வேலையில் எனக்கு உதவினாலும்,  நானாக அதில் ஏதாவது செய்வேன், கற்றுக் கொள்வேன் என்று எதிர்பார்த்து அவ்வப்போது தனியாக விட்டுச் செல்வார்.   நானா?  

நாம் எதையாவது செய்து, அது ஒன்று கிடக்க ஒன்று ஆகிவிட்டால் என்ன ஆவது என்கிற தயக்கத்தில் அவர் வரும்வரை காத்திருப்பேன்.  நான் சொல்லச்சொல்ல தட்டச்சு முழுவதும் அவரே செய்வார்.  மூன்று வருடங்கள் அப்படிச் செய்து கொடுத்தார்.  "நீயே முயற்சி செய்யேன்...   கம்பியூட்டர் என்ன வெடித்தா விடும்?" என்று கேட்பார்.  "ஏதாவது ஒன்று கிடக்க ஒன்று மாறி, ஏதாவது ஆகிவிட்டால்?" என்பேன்.  "ஒன்றும் ஆகாது..    நான் இங்கதான இருக்கேன்...    உடனே சரிசெய்ய மாட்டேனா?  கற்றுக்கொள்ளும் முயற்சி வேண்டும்" என்பார்.

எதையோ சொல்ல வந்து எங்கேயோ போகிறேன்.  இத்தனையும் செய்து வருடாந்திர ரிப்போர்ட் கொடுத்தபின், தலைமை அலுவலகத்திலிருந்து ஆச்சர்யப்பட்டு விசாரித்திருக்கிறார்கள்.  அவர் தானே செய்ததாய் சொல்லி இருக்கிறார்.  அதற்கு அவர் என்னிடம் சொன்ன விளக்கம், "அதைச் செய்ய வேண்டிய ஆள் நான்.  நீ செய்ததாய்ச் சொன்னால் கோபித்துக் கொள்வார்கள்.  மேலும் ஏதாவது தவறு வந்தாலும் நானே பொறுப்பு ஏற்றுக்கொள்வேன்" என்றார்.

எங்கள் உறவில் ஒருவர் இருக்கிறார்.  2000 ஆம் வருடங்களில் அதிதீவிர ஓம் சக்தி பக்தர்.  இப்போது பாபா.  பஸ் கிடைக்க வேண்டுமா?  'ஓம்சக்தி'  சினிமாவுக்கு டிக்கெட் கிடைக்க வேண்டுமா?  'ஓம் சக்தி'.  கேரம்போர்ட் ஆடிக்கொண்டிருப்போம்.  ஸ்ட்ரைக்கர் கைக்கு வந்தததுமே"ஓம் சக்தி" என்று ஓங்கிக் குரல்கொடுத்துதான் ஆடுவார்!  கேரம்போர்ட் என்றில்லை.  ஒவ்வொரு செயலுக்குமே அப்படிதான்.

அவர் நம்பிக்கை அப்படி என்று சொல்லலாம்.  ஆனால் நாம் நமது வேலைகளில் ஏதாவது வெற்றி அடைந்திருக்கும் சமயங்களில் கூட "நான் பாபா கிட்ட வேண்டிகிட்டேன்...   எழுதி வச்சிருந்தேன்...   அதுதான் நடந்தது" என்று அந்த வெற்றியை தனது முயற்சியில் கிடைத்தது போல மாற்றி விடுவார்.  என்ன நஷ்டம் என்கிறீர்களா?   ஒன்றும் இல்லைதான்.  ஆனாலும்...!

===========================================================================================

"என்னை விடுங்கோ...    என்னை விடுங்கோ...    நான் தேம்ஸில் ஆற்றில் குதிக்கிறேன்..." என்று ஓடுகிறாரோ....!




=======================================================================================================


சோனியா அகர்வால்?!!




================================================================================================= 

வேண்டாம்னு சொன்னால் வேண்டாம்னு அர்த்தமில்லை!



==============================================================================================

இந்தப் படத்தை அப்போது - 2013 இல்- எங்கேயோ ஏதோ ஒரு தளத்தில் பாத்ததும் மனதில் நின்று விட்டது.  அந்தப் பெண் என்ன சொல்ல விழைந்திருப்பாள் என்கிற கற்பனை ஓடியது.   அதன் விளைவு...!




108 கருத்துகள்:

  1. வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை இலாத சொலல்..

    வாழ்க நலம்....

    பதிலளிநீக்கு
  2. இன்றைய களஞ்சியம் அருமை...

    ஈர விழிகள்... ஆனாலும்!...

    பதிலளிநீக்கு
  3. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்தநாள் இனிமை நிறைந்ததாக இருக்கவும் ஆண்டவனை மனதாற பிரார்த்தித்து கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா...   காலை வணக்கம்.   நன்றி, இனிய பிரார்த்தனைகளுக்கு.

      நீக்கு
  4. கண்களில் திமிறும் கண்ணீருடனான பெண் முகத்தைப் பார்க்கையில், இந்த மாதிரியான உணர்வுநிலைகளை தூரத்திலிருந்து பார்க்க நேர்ந்தாலும் எனக்கு ஒன்று தோன்றுவதுண்டு: இவர்கள் (இத்தகைய பெண்கள்) வேற்றுலகத்துக்காரிகள். இவர்களது அன்பு, மென்னுணர்வுகளைப் பெறுவதற்கான தகுதி, யோக்யதை நமக்கு-இவ்வுலக ஆண்களுக்கு-இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //கண்களில் திமிறும் கண்ணீருடனான //

      அட....! இதை எழுதும்போது அப்போது அருகிலிருந்த என் நண்பன் சொன்னான்...   "இப்படிக் கண்ணீர் விடுபவர்களை நம்பக்கூடாது!!!"

      நீக்கு
    2. //..இப்படிக் கண்ணீர் விடுபவர்களை நம்பக்கூடாது!"

      உங்கள் நண்பர் பார்த்த பெண்கள் சராசரிகள்! அடிக்கடிக் கண்கசக்கும் கசமாலங்களை நானும்தான் பார்க்கிறேன்.
      மேலே இருக்கும் படம் காட்டும் பெண் வேறு வகை. எப்போவாவது அழும் இனம். காதலில், பிரிவினில் ரகசியமாக அழும் ஜாதி!
      பத்மினிவகைப் பெண் என்றால்.. படிப்பவர் சினிமாவுக்குத் தாவிவிடுவாரே!

      நீக்கு
    3. /// பத்மினி வகை...///

      சினிமாவுக்குத் தாவுவது ஒருபுறம் இஇருந்தாலும்...

      அந்த நுணுக்கங்களை மறந்த வாழ்வல்லவா இப்பொழுது!...

      நீக்கு
    4. இரு விழிகள் கண்டே என்ன வகை என்று சொல்லி விட்டீர்களே!  ஆஹா... 

      துரை ஸார்...  "அத்தினி சித்தினி பத்தினி தரங்கிணி" பாடல் கேட்டிருக்கிறீர்களா?

      நீக்கு
    5. அந்தப் பாடலை எப்பொதோ கேட்டிருக்கிறேன்...
      ஆனால் அந்தப் பாட்டெல்லாம் குப்பை...

      நிறைய விஷயங்கள் வெளியில் பேசலாகாது....

      நீக்கு
  5. முயற்சி + பயிற்சி = வெற்றி

    சோனியா அகர்வால்...? நோ... Top C...? (ஆடுகளம்)

    உன் கண்ணில் நீர் வழிந்தால்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் சோனியா அகர்வால் என்று ஏன் சொன்னேன் என்பதை பானு அக்கா மட்டுமே அறிவார் என்று நினைக்கிறேன்!

      நன்றி DD.

      நீக்கு
  6. யாரையும் காணோம்.கிறிஸ்துமஸ் மயக்கமோ? 

    90 களில் PC யும் lotus-123 யும் wordstar உம் dot matrix prnter உம் வைத்திருந்தீர்கள் என்றால் பெரிய பணக்காரர் ஆக இருந்திருக்க வேண்டும். அப்போதைய விலை இவற்றிற்கு சுமார் 1 லக்ஷம் ஆகும். இன்றைய கணக்குப்படி அது 10 லட்சத்திற்கு சமம். 
    கவிதை கண்டபின் இலங்கை வானொலி ராஜா அவர்களின் விருப்பப் பாடல் (அவர் அடிக்கடி ஒலி பரப்புவார்) பாடல் நினைவுக்கு வந்தது. உபயம் கூகிள். 
    கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ
    கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ
    காலம் இனி மேல் நம்மை ஒன்றாய்க் கொண்டு சேர்க்குமோ
    கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ

    படம் மன்னாதி மன்னன். 

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கிறிஸ்துமஸ் மயக்கமோ, கிரகண பயமோ!    அப்போது எப்படியோ மலிவாக ஒன்று வாங்கிப் போட்டிருந்தார் கேஜி!  ஆம்.   அந்தப் பிரிண்டரும் அவரிடம் இருந்தது. நினைவுக்கு வந்த பாடல் சூப்பர்!   நன்றி ஜேகே ஸார்.

      நீக்கு
  7. இன்றைய பதிவு பொசுக்கென்று முடிந்து விட்டதே? கிரஹண தர்ப்பணம், ஜபம், செய்ய வேண்டுமோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கொஞ்சம் கூட இருந்தால் கீதா அக்கா நீளமான போஸ்ட் என்கிறார்.  நீங்களோ இதை பொசுக்கென முடிந்து விட்டது என்கிறீர்கள்.  அதிகமாய் இருப்பதைவிட இது தேவலாமோ?  

      நீக்கு
    2. எனக்கும் இன்றைய போஸ்ட் குட்டியாகிவிட்டதைப்போல தெரியுது... அதுக்காக அடுத்தகிழமை.. தேம்ஸ்கரை வரை நீளமாக்கிடாதீங்கோ ஸ்ரீராம்:) ஹா ஹா ஹா.

      நீக்கு
    3. அடுத்த வாரம் நீளாமாயும் இல்லாமல், பொசுக்கெனவும் முடியாமல் போட முயற்சிக்கிறேன் அதிரா!

      நீக்கு
  8. தேம்ஸில் குதிக்க விரையும் பெண் யார்? எந்த கதையின் நாயகி? என்று சொல்லியிருக்கலாம். அந்த படத்தில் இருப்பவர் சோனியா அகர்வாலா? சீ! சந்தியாவா? அவ்வளவு ஒல்லியாக இருந்திருக்கிறாரா?படமும், கவிதையும் சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தேம்ஸில் குதிக்க விரையும் பெண் வினு வரைந்த பத்தினிக்கோட்ட நாயகி.  கீதா அக்கா சரியாய்க் கண்டு பிடித்திருப்பார்!  ஏனென்றால் இதுபோல இன்னொரு படத்தை பேஸ்புக்கில் சரியாய்க் கணித்திருந்தார்!

      நீக்கு
    2. வினு வரைந்த ஓவியமா! குமுதத்தில் சாண்டில்யனின் யவன ராணியை வரைந்து தள்ளிய லதாவோ என சந்தேகித்தேன்..
      சாமாவின் பாயசக் கூட்டமும் அட்டகாசம்!

      நீக்கு
    3. நன்றி ஏகாந்தன் ஸார்.  கொஞ்சம் லதாவின் ஓவிய சாயல் இருக்கிறதுதான்!

      நீக்கு
    4. லதாவின் ஓவியங்கள் கண்களுக்குத் தனி மரியாதை கொடுக்கும்.பெரிய கண்கள்..
      வினுவின் மொத்த ஓவியமும் பேசுகிறது.

      ஸ்ரீராம் உங்கள் கவிதை வரிகள்
      அருமை.இந்தப் படத்தை எங்கிருந்து எடுத்தீர்களோ.
      அவனையே விழுங்கி விடுவாள் போல இருக்கிறதே,

      நீக்கு
    5. நினைவில்லை அம்மா.  கூகுளிலிருந்து எடுத்தேனா, இல்லை, நண்பர்கள் தளத்திலிருந்து எடுத்தேனா, நினைவில்லை.

      நீக்கு
    6. அவர் மராட்டி சந்தியா! ஜெ.ஜெ. அம்மா இல்லை. ஆனால் இவரும் பிரமாதமாக ஆடுவார்!

      நீக்கு
  9. ஓம் சக்தி பக்தரைப் பற்றி நீங்கள் எழுதியிருந்ததை படித்தவுடன் ஒன்று புரிந்து கொண்டேன், நாம் மற்றவர்களுக்காக பிரார்த்தனை செய்து அது பலித்தால், அதை வெளியே சொல்லக் கூடாது. 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ...    அவர்கள் வேண்டிக்கொண்டதை நான் மதிக்கவில்லை என்று பொருள் வருகிறதோ?!!   அப்படி இல்லை.   இது அவருக்கு வழக்கம் என்று சொல்லவந்தேன்!

      நீக்கு
    2. அப்படி இல்லை பானு அக்கா, பிரார்ட்த்ஹனை செய்கிறேன் பயப்படாதே என தைரியம் கொடுப்பது வேறு, சிலர் இருக்கிறார்கள், முடிவு வரும்வரை வாயே திறக்க மாட்டார்கள், ஆனா நல்ல முடிவு என்றதும் ஓடிவந்து தன்னாலதான் என்பார்கள்.. அப்ப்படிப்பட்ட வகைகளில் ஒருவர்தான் ஸ்ரீராம் சொன்னவரும் என நினைக்கிறேன்.

      ஊரிலுள்ள நல்ல விசயங்களுக்கெல்லாம் தன் பக்திதான் காரணம் எனச் சொல்லுவோர் அவர்கள்.

      நீக்கு
    3. இல்லை அதிரா...   இவர் பேசிக்கொண்டே இருப்பார்.   தான் பிரார்த்தனை செய்வதாய் / செய்ததாய் சொல்லிக்கொண்டே இருப்பார்.  அதேபோல சிறு சிறு விஷயங்களுக்கும் கடவுளைத் தொந்தரவு செய்வார்!

      நீக்கு
    4. ஓ அப்படியோ.. அப்படி எனில் பாவம் அவர், அவருடைய பிரார்த்தனைகளும் நமக்குச் சேரும் தானே.. அவர் ஆரைக் கும்பிட்டால் நமக்கென்ன, அவருடைய நம்பிக்கை தெய்வத்தை, நமக்காகக் கும்பிடுகிறார் என்பது, மதிக்கத்தக்க ஒன்றுதானே.

      நீக்கு
    5. //.சிறு சிறு விஷயங்களுக்கும் கடவுளைத் தொந்தரவு செய்வார்!//

      தற்கால பக்தர் பலர். சின்னச்சின்ன விஷயங்களுக்கெல்லாம் கடவுளை விரட்டி விரட்டித் தொந்தரவு செய்பவர்கள்தான்! அவர் தென்படாமல் இருக்கும்போதே இந்த லட்சணம்!

      நீக்கு
    6. ஒருமுறை தென்பட்டுவிட்டால் மிரண்டு விடுவார்கள்.   அவர்கள் எதிர்பார்த்த என் டி ஆர் உருவமாக இருக்காதே!

      நீக்கு
    7. //அவர்கள் வேண்டிக்கொண்டதை நான் மதிக்கவில்லை என்று பொருள் வருகிறதோ?!! அப்படி இல்லை. இது அவருக்கு வழக்கம் என்று சொல்லவந்தேன்!// நானும் அப்படி புரிந்து கொள்ளவில்லை ஶ்ரீராம். சிலருக்காக நான் வேண்டிக்கொண்டு அது பலித்த பொழுது அவர்களிடம் கூறினால் பெரிதாக ரியாக்ஷன் இருக்காது. சிலர் கொஞ்சம் கேலியாகக்கூட சிரிப்பார்கள். இப்பொழுதுதான் காரணம் புரிகிறது!

      நீக்கு
    8. பொதுவாக நான் பிறருக்காக வேண்டிக்கொண்டு பலித்ததை என்னிடம் சொல்லி நன்றியும் தெரிவித்தவர்கள் உண்டு.

      நீக்கு
  10. அனைவருக்கும் இன்னாள் நன்னாளாக வாழ்த்துகள்.

    உங்கள் அனுபவம் சக்தி ,சாயீ இரண்டுமே சகஜம் தான்.
    நிலையான பக்தி நமக்கு லபிக்க மன முதிர்ச்சி வேண்டும்.

    90களில் கணினி விலை மிக அதிகம். நீங்கள் பயப்பட்டதில் நியாயம் இருக்கிறது.
    உங்கள் மேலாளர் செயல் ம்ம்ஹூம் சொல்ல வார்த்தைகளில்லை.

    கார்டூன் பலே ஜோர். என்ன அழகான வரைவுகள்.

    அந்தப் படம் Ghost movie? பேசும் படம். அற்புதமான
    உணர்ச்சி. என்ன சொல்லி இருப்பாள் அவள். காலரை வேற பிடித்து விட்டாள்.
    என்னை விட்டுப் போகாதே. போனால் நான் இருக்க மாட்டேன் என்ற மிரட்டல் ,கெஞ்சல்
    எல்லாமே அந்தக் கண்களில். பாராட்டுகள் ஸ்ரீராம்.
    சுந்தரி கண்ணால் ஒரு சேதி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வல்லிம்மா...    நன்றி.  இந்தநாள் இதுவரை இனிமையாகவே போய்க்கொண்டிருக்கிறது!   பசித்திருந்து சாப்பிடப்போகிறேன்!

      கார்ட்டூன் ஜோக் வாசிக்க முடிந்ததோ?

      அது என்ன படம் என்று எனக்குத் தெரியாது.   ஆனால் பார்த்த உடன் நிறுத்தி விட்டது.  பேசும் கண்கள்!

      நீக்கு
  11. ஓடும் பெண் யார் ,பூங்குழலியா,வானதியா,கயல்விழியா.அழகான ஓவியம்.

    பதிலளிநீக்கு
  12. //வெற்றிக்கு ஆயிரம் சொந்தக்காரர்கள். தோல்வி ஒரு அனாதை//

    ஸூப்பர் உண்மை

    புகைப்படத்தில் இருப்பது அதிராவா ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கில்லர்ஜீ அதிர யாழ்ப்பாணத்து மக்கள். அவ்வளவு கலர் தேறாது. மேலும் அதிரா என்றும் கண் கலங்கியது இல்லை. Jayakumar

      நீக்கு
    2. நன்றி ஜி.  படத்தில் இருப்பது அதிராவா?  தேம்ஸில் குதித்தால் அதிராவாய்த்தான் இருக்க வேண்டுமா என்ன!

      நீக்கு
    3. கருப்பு வெள்ளை படத்தில் கலர் எப்படித் தெரியும் ஜெகே ஸார்?!!

      :)))

      நீக்கு
    4. ஆஆஆஆஆஆஆ இடையில இப்படி ஒன்று போகுதோ அவ்வ்வ்வ்வ் .. எய்தவர் இருக்க அம்பை நோக மாட்டேன்ன்ன்.. எங்கே ஸ்ரீராம்:).. ஆராவது பிடிச்சு தேம்ஸ் கரைக்குக் கூட்டி வாங்கோ பிளீஸ்ஸ்:) ஹா ஹா ஹா..

      ஆனா ஓடுபவரைப் பார்த்தால் தேம்ஸ்ல குதிக்க ஓடுபவர்போல தெரியவில்லை.. ஏதோ நித்திரையால எழும்பி எங்கள் புளொக்குக்குப் 1ஸ்ட் கொமெண்ட் போட ஓடுபவரைப்போல இருக்கே... எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்:))..

      ///கருப்பு வெள்ளை படத்தில் கலர் எப்படித் தெரியும் ஜெகே ஸார்?!!

      :)))//

      ஹா ஹா ஹா அவருக்கு தெரியுதே:)

      நீக்கு
    5. //ஏதோ நித்திரையால எழும்பி எங்கள் புளொக்குக்குப் 1ஸ்ட் கொமெண்ட் போட ஓடுபவரைப்போல இருக்கே... //


      ஹா...  ஹா... ஹா...   அவரவருக்கு அவரவர் கற்பனை!  அது கூட நல்லாதான் இருக்கு..    ஆனால் முகத்தில் அந்தப் பதட்டம்....?!!!

      நீக்கு
  13. அதை நமக்கு சொல்லிக் கொடுத்ததாய்ச் சொல்வார்கள்.  அதற்கு காரணம் ஏதோ ஒரு வகையில் அவர்கள்தான் காரணம் என்பது போல பேசுவார்கள்!//

    சூப்பர். இந்த மாதிரி ஆட்கள்தான் இப்போது அதிகம்.

    பதிலளிநீக்கு
  14. //அப்போது என் மாமா கேஜி உதவியுடன் அதை கணினியில் முடித்து, அதை அப்படியே பிரிண்ட் அவுட்டும் எடுத்துக் கொடுத்தேன். //


    // "அதைச் செய்ய வேண்டிய ஆள் நான். நீ செய்ததாய்ச் சொன்னால் கோபித்துக் கொள்வார்கள். மேலும் ஏதாவது தவறு வந்தாலும் நானே பொறுப்பு ஏற்றுக்கொள்வேன்" என்றார்.///

    ஹா ஹா ஹா எப்படிக் கெட்ட கோபமாக வந்திருக்கும் ஸ்ரீராமுக்கு? ஆனா இப்படிப் பலர் இருக்கத்தான் செய்கிறார்கள், அவர்களை ஆண்டவன் பார்த்துக் கொள்வார் என விட்டிட வேண்டியதுதான்.

    இன்னொன்று ஸ்ரீராம், அவராக உங்களிடம் கேட்டதாக நீங்கள் இங்கு எழுதவில்லை, அதனால கேட்காமலேயே நீங்களாக செய்து குடுத்தீங்களோ? அப்படி ஆன இடங்களிலும் துணிஞ்சு இப்படி செய்வோர் உண்டு.. அதாவது, நானா கேட்டுக் கெஞ்சினேன், நீங்கதானே வலிய செய்து தந்தீங்க.. இப்படி திமிர் பேசுவோரும் உண்டு...

    மொத்தத்தில நான் என் அனுபவத்தில கண்ட உண்மை யாதெனில்...

    நாம் ஒருவருக்கு நல்லது செய்தோம் எனில்... அது காசாகா, உணவாக, ஆறுதல் வார்த்தையாக, சரீர உதவியாக... இப்படி எதுவாயினும், அதைப் பெற்றுக்கொண்டவரே நமக்கு திருப்பிச் செய்வார் என எதிர்பார்க்கவே முடியாது,[அவர்கள் நம் மனதை நோகடித்துவிட்டே செல்வர்] ஆனா நாம் எதுவும் உதவி செய்யாமலேயே , பலர் நமக்கு வந்து உதவுவார்கள்.. நாம் இவர்களுக்காக எதுவும் செய்ததில்லையே, இப்படி உதவுகிறார்களே என நினைப்போம்.. மொத்தத்தில் நாம் செய்யும் நல்ல விசயங்கள் என்றுமே வீணாகாது... ஏதோ ஒரு நேரம் திரும்ப கிடைக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அதிரா...  உண்மைதான். அந்த வேலையை நானாகத்தான் இழுத்துப்போட்டுச் செய்தேன்.  நானும் அந்த கமெண்ட்டுக்கெல்லாம் அப்போது அமைதியாகவே போய்விட்டேன்.  (வேறு என்ன செய்ய முடியும்...   அவ்வ்வ்வ்வ்வ்....)

      //ஏதோ ஒரு நேரம் திரும்ப கிடைக்கும்.//

      இப்படி...   இப்படிதான் நாம் பலநேரம் சமாதானப்படுத்திக்கொள்ள வேண்டியிருக்கிறது!

      நீக்கு
    2. இது சமாதானமல்ல ஸ்ரீராம், எங்கள் வாழ்க்கையில் நிறைய நடந்திருக்கிறது. அனுபவத்தை வச்சே சொல்கிறேன்.

      நீக்கு
    3. நானும் நண்பர்களை உங்களுக்கு நினைவு வரும் அனுபவங்களை எழுதியனுப்புங்கள், ஞாயிறில் போடலாம் என்று சென்ற வாரமே கேட்டேன்...   ம்ம்ம்ம்...

      நீக்கு
  15. //என்று அந்த வெற்றியை தனது முயற்சியில் கிடைத்தது போல மாற்றி விடுவார். என்ன நஷ்டம் என்கிறீர்களா?//

    ஹா ஹா ஹா இப்படியும் சிலர் இருக்கிறார்கள்தான். அதாவது ஊரில் ஸ்டேஷன்களில், அவர்களாகவே நம் குட்டி பாக் கை பறிச்சுச் சுமந்துவிட்டு, சுமந்து வந்தேனே பணம் கொடு என்று சொல்வதைப்போல...

    அப்படிச் சொல்வதில் அவர்களுக்கு ஒரு மகிழ்ச்சி, நாம் பாடுபட்டு ஒன்றை செய்து முடிச்சபின், தம் நேர்த்தியாலதான் இப்படி நடந்தது எனச் சொல்லும்போது பொயிங்கோணும் போலதான் வரும், ஆனா அந்நேரம் அமைதியாகப் போய்விட்டு, பின்பு நமக்கொரு துன்பம் நிகழ்ந்தால், அவரைப் பிடிச்சுக் கேட்கோணும், இப்போ மட்டும் உங்கள் நேர்த்தி எங்கே போனது? இதுக்கு எல்லாம் பொறுப்ப்பெடுக்க மாட்டீங்களோ என ஹா ஹா ஹா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பின்பு நமக்கொரு துன்பம் நிகழ்ந்தால், அவரைப் பிடிச்சுக் கேட்கோணும், இப்போ மட்டும் உங்கள் நேர்த்தி எங்கே போனது? இதுக்கு எல்லாம் பொறுப்ப்பெடுக்க மாட்டீங்களோ என ஹா ஹா ஹா//

      நாம் நம் கஷ்டத்தை அனுபவிக்கவே நேரம் சரியாய் இருக்கும்.  இதையெல்லாம் என் எண்ணுவோம்?!!

      நீக்கு
  16. எவ்வளவு அழகான பெண் ஓவியம் அது.. இந்தக் காலத்தில் எல்லாம் கொம்பியூட்டர் மயமானதால இப்படிக் கையால் வரையும் ஓவியங்களைக் காண முடிவதில்லையோ...

    இரு பக்கமும் மூக்குத்தி போட்டிருப்பதால் திருமணமானவர் என அர்த்தம் என நினைக்கிறேன்.

    அக்காலத்தில் தாலிக்கொடி என்பது அட்டியல்போல கழுத்தோடு ஒட்டியிருக்குமாமே.. அப்படித்தான் இவர் கழுத்திலும் இருக்கோ...

    எனக்கு அவர் ஓடுவதையும், முக பாவத்தையும் பார்க்கையுல், ஏதோ புதினம்[விடுப்பு:)] பார்க்க ஓடுகிறார்போல இருக்கு ஹா ஹா ஹா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடா...    நன்றாய் ரசித்திருக்கிறீர்கள்.  ஓடுவதில் அவள் கழுத்து மணிமாலை ஒதுங்கி இருக்கிறது பாருங்கள்!

      நீக்கு
  17. //வேண்டாம்னு சொன்னால் வேண்டாம்னு அர்த்தமில்லை!//

    ஹா ஹா ஹா இது 100 வீதமும் உண்மை.. எங்கெனில் நம் நாடுகளில் :).

    இங்கு அப்படி இல்லை, இப்போ நம் நாட்டில் ஒருவரிடம் ரீ குடியுங்கோ என்றால், மரியாதைக்காகத்தான் வேண்டாம் என்பினம், ஆனா குடிக்க ரெடியாக இருப்பினம்.. நான் ஃபோஸ் பண்ணிக் குடுக்காட்டில் குறை வரும் ஹா ஹா ஹா.

    இங்கு வெள்ளையர்கள் அப்படி இல்லை, வேணும் என்றால் வேணும், வேண்டாம் எனில் வேண்டாம்தான், ஃபோஸ் பண்ணுவது தப்பு என்பது போலாகும்.

    இதையேதான் நம் குழந்தைகளும் பின்பற்றுகிறார்கள். நாம் வேண்டாம் எனச் சொல்லிட்டால் விட்டு விடுவார்கள், ஆனா நாங்கள் புரிஞ்சு கொள்கிறோம், நம் அம்மா அப்பா பரம்பரை புரிவதாக இல்லை. அந்த ஜெனரெசனில் இருப்போருக்கு, தாம் வேண்டாம் எனச் சொல்லோணும், நாம் போஸ் பண்ணிக் குடுக்கோணும் எனும் எதிர்பார்ப்பு இப்பவும் நிலவுது வெளிநாடுகளில்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிஸ்ஸியம்மா படத்தில் வரும் ஏ எம் ராஜா பாடல் கேட்டிருக்கிறீர்களா அதிரா?   முடியும் என்றால் படியாது...   ஆனால் இது வஞ்சியரின் வார்த்தை அல்ல, எல்லோருக்குமே பொருந்தும்! 

      நீக்கு
  18. ஆஆஆ கவிதை அருமை.. அந்தக் கண்ண்களில் ஏதோ ஒரு பயம்கலந்த ஏக்கம் தெரிகிறது.

    பதிலளிநீக்கு
  19. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  20. //பத்தினிக்கோட்ட.. //

    காவல் கோட்டம் இல்லை என்பதில்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சு. வெங்கடேசன்.  காவல்கோட்டம் எழுதி சாகித்ய அகாதமி வாங்கியவர்.   அரசியலில் ஈடுபட்டு கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மதுரையிலிருந்து எம் பி ஆகி இருப்பவர்.

      நீக்கு
  21. //வெற்றிக்கு ஆயிரம் சொந்தக்காரர்கள். தோல்வி ஒரு அனாதை என்பார்கள்.//

    உண்மை தான்.

    மனிதர்கள் பலவிதம் நம்மால் புரிந்து கொள்ளத்தான் முடிவது இல்லை.
    சில நம்பிக்கைகள் சிலருக்கு.

    கேஜி சார் கணினி கற்றுக் கொடுத்தவிதம் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கோமதி அக்கா.    நான் கணினி வாங்கியதும் தன் வீட்டிலிருந்தே என்னைப் பழக்கியவரும் கேஜிதான்!.

      நீக்கு
  22. ஓடும் பெண் ஓவியம், போடு போடாதே! சிரிப்பு எல்லாம் அருமை.
    காத்து இருக்கும் பெண்ணின் கவிதை மனபாரம்.

    பதிலளிநீக்கு
  23. //அந்தப் பெண் என்ன சொல்ல விழைந்திருப்பாள் என்கிற கற்பனை ஓடியது. அதன் விளைவு...! //

    கண்ணீர் ...களின் ஆயுதம் தான்
    அறிவேன் நான்
    இரண்டே துளிகளில்
    எதிராளியை வீழ்த்தலாம்
    பிரயோகிக்க ஒருவர்
    கிடைத்து விடும் பொழுது
    எனக்கென்ன தயக்கம்?..
    அன்னை விசும்பினால் கூட
    அசைய மாட்டார்
    தங்கைகள் விழிகள் நனைந்தால்
    கலங்க மாட்டார்; தெரியும் எனக்கு..
    அன்னியப் பெண்
    கண்களில் நீர் என்றால்
    அதெப்படி இத்தனைக் கரிசனம்?
    அது தான் எங்களுக்கு செளகரியம்
    அப்பாவிகள் அடிக்கடி கிடைப்பர்
    எப்பாவமும் அறியோம் யாம்
    நம்புங்கள் நானிலத்தீரே!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடே...    நன்றாய் இருக்கிறது.   

      இதுதான்...   இப்படிதான்...

      அந்த கண்கள் என்னையும் ஏதாவது அப்போது எழுதத் தூண்டின....

      நீக்கு
    2. மிக மிக அருமை ஜீவீ சார். இதுதான் உங்களுக்கும் எனக்கும் உள்ள மாபெரும் வித்தியாசம். இப்படிச் சொல்வது கூட மரியாதை இல்லை. இதுதான் பெண்ணின் உணர்ச்சி.
      ஆணும் விழுந்து கொண்டே தான் இருக்கிறான்.

      நீக்கு
    3. பின்னூட்டங்கள் இடுக்கில் வாசித்து மகிழ்ந்ததற்கு நன்றி, வல்லிம்மா.

      'அன்னியப் பெண்
      கண்களில் நீர் என்றால்
      அதெப்படி இத்தனைக் கரிசனம்?'

      -- என்பதைச் சொல்வதற்காகவே இந்தக் கவிதை ரூபம் பிறந்தது.

      பத்தினிக் கோட்டம் அமரர் ஜெகசிற்பியனின் நாவல்.


      நீக்கு
  24. //வெற்றிக்கு ஆயிரம் சொந்தக்காரர்கள்.  //
    உண்மைதான் .இப்படிப்பட்டவர்களிடம் இருந்து விலகியும் இருக்கிறேன் .நம் கடின உழைப்புக்கு உரிமை கொண்டாடுபவர்கள் நான் வெறுக்கும் லிஸ்டில் உள்ளோர் :)
     பாபா நாமம் சொல்பவரின் நம்பிக்கை க்ரேட் ..ஆனா அதை அவர் பாபாவுக்குத்தானே சமர்பிக்கணும் .இவர் வேண்டினாலும் இறைவன்தான் கொடுத்தார் .அதனால் இனிமே அவர்  முன் சாமிக்கே நன்றீனு சொல்லிடுங்க :))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஏஞ்சல்...    இப்பவெல்லாம் உங்களைப் பார்க்கறதே காட்சியா இருக்கு!   எப்பவாச்சும்தான் வர்றீங்க...   அந்த தாத்தா பாட்டி நலமா?

      நீக்கு
  25. அந்த ஓடும் ஓவியப்பெண் :) கர்ணபரம்பரைக்காரம்மா தான் :) எதுக்கு ஓடறாங்கன்னா பிரித்தானிய  அஞ்சா:) அஞ்சு புயல் தாக்க வருதேன்னு ஓடறாங்க :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ///எதுக்கு ஓடறாங்கன்னா பிரித்தானிய அஞ்சா:) அஞ்சு புயல் தாக்க வருதேன்னு ஓடறாங்க :)
      ///
      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) இதைச் சொல்லிட்டுப் போவதற்காகவே இன்று நேரம் ஒதுக்கி வந்திருக்கிறா:)) நீங்க ஹாஜாப்புயல் அஞ்சு:) மறந்திட்டீங்களோ:).

      நீக்கு
  26. படமும் அதற்கேற்ற கவிதை வரிகளும் அருமை .அப்பெண்ணின் விழிகள் பல நூறு கவி படைக்கும் 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை.    ஆனால் வேறு யாருமே வேறு கவி படிக்கவில்லையே, ஜீவி ஸார் தவிர!

      நீக்கு
  27. சாந்தாராம் படங்களில் நடித்த சந்தியா வேறு - அம்முவின் அம்மா வேறு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதுக்குத்தான் சீனியர் அவசியங்கறது ..!

      நீக்கு
    2. சாந்தாராம் மராட்டிக்காரர், பெரும்பாலும் தன் இரண்டாம் மனைவி சந்தியா, (முதல் மனைவி ஜெயஸ்ரீ) மகள் ராஜஸ்ரீ ஆகியோரை வைத்தே படங்கள் எடுத்திருக்கார். ஜனக் ஜனக் பாயல் பாஜே என்று அவர் எடுத்த படத்தின் மூலம் தான் பிரபல நடனக்கலைஞர் உதயசங்கர் அறிமுகம் ஆனார். சாந்தாரம் எடுத்த தோ ஆங்கே பாரா ஹாத் திரைப்படம் மிகவும் பிரபலம் ஆனது. அநேகமாக அவர் படங்களை எல்லாமும் பார்த்திருப்பேன். மகள் ராஜஸ்ரீ தந்தைக்குத் தெரியாமல் திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டுக்குச் சென்று விட்டது அந்தக் காலங்களில் பரபரப்பாகப் பேசப்பட்ட ஒன்று.

      நீக்கு
    3. நான் நம்ம அம்மும்மா என்றுதான்நினைத்து விட்டேன்!

      நீக்கு
  28. //சாந்தாராம் படங்களில் நடித்த சந்தியா வேறு - அம்முவின் அம்மா வேறு.// அப்போ நான் சரியாகத்தான் கணித்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  29. கெளதமன் சார் குயினில் உங்கள் அபிமான கதாநாயகி ஒஞ்சுளா (ஹா ஹா ஹா)ஆகி விட்டாரே கவனித்தீர்களா?

    பதிலளிநீக்கு
  30. வணக்கம் சகோதரரே

    கதம்பம் அருமை. முதல் வரிகள் மனதில் பதியும் வண்ணம் நன்றாக உள்ளது.

    "வெற்றிக்கு ஆயிரம் சொந்தக்காரர்கள். தோல்விக்கு ஒரு அநாதை.. " உண்மைதான்..! நாம் ஒரு செயலில் வெற்றி பெறும் போது கூட இருந்தவர்கள் நான் சொன்ன விதங்களை நீ பின்பற்றியதால்தான் வெற்றி கிடைத்தது. என பெருமை பேசி தாங்களும் அந்த வெற்றிக்குள் வந்து விடுவார்கள். ஆனால் தோல்விக்கு ஒரு அநாதை.. அனேகமாக அது நாம்தான்..! அந்த சமயத்தில் நாம்தான் அங்கு அநாதையாக நிற்போம். அருமையான வாக்கியம்.

    தங்கள் அனுபவங்கள் ஆச்சரியமாக உள்ளது. "செய்த செயல்களையும் திருப்தியாக ஏற்றுக் கொண்டு, அவர் நான் செய்த மாதிரி இருக்கட்டும் என்ற போது" வந்த வருத்தத்தை எப்படி மென்று முழுங்கினீர்களோ! கஸ்டந்தான். அதற்கு நிறைய பொறுமை வேண்டு்ம். அது தங்களிடம் இருந்திருக்கிறது.

    ஓவியப் பெண் அத்தனை பதட்டமாக ஓடும் நிலையிலும் அழகாக உள்ளாள்.

    போடு, போடாதே நகைச்சுவைப் படங்களுடன் நன்றாக உள்ளது. அதற்கேற்றவாறு வரிசையாக படங்களை ரசித்தேன்.

    தங்கள் கவிதை அருமை. கண்களில் நீர் ததும்பும் அந்த பெண் முகத்தில் எத்தனை பாவங்கள்...! அவை அத்தனையையும் கவிதையின் வரிகள் புலப்படுத்துகின்றன. ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா... 
      பொறுமையைப் பழகிக் கொண்டிருக்கிறேன்.   இன்னமும்!

      ஓவியப்பெண்ணை அழகாக்கி இருப்பது வினு!

      கவிதையைரசித்ததற்கு நன்றி.

      நீக்கு
  31. வரேன் அப்புறமா! போன பதிவும் படித்தேன். ஆனால் கருத்துச் சொல்ல முடியலை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிஸியா?  ஓகே, அப்புறமா வாங்க கீதா அக்கா. 

      நீக்கு
    2. அந்தப் பெண் கண்கள் மனதின் வேதனையை வெளிக்காட்டாமல் மறைத்தாலும் தன்னை மறந்து பீரிடும் கண்ணீரை மறைக்க முடியவில்லை அவளால். ஏதோ வேதனை! பாவம்! அதை அடக்கக் கொஞ்சம் சிரிப்பும், கொஞ்சம் கண்ணீருமாகத் தன்னை அடக்கிக்கொள்ள முயற்சி செய்கிறாள்.

      நீக்கு
  32. யாரும் அதிகம் தொடாத களப்பிரர் காலம் பற்றிய ஜெகசிற்பியன் நாவல் அல்லவா பத்தினிக்கோட்டம்! எப்போவோ படித்தது நினைவில் இல்லை. :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உத்தமசீலி, கோவிந்த வர்மன், முத்தரையர் பரமேஸ்வரன் எல்லோரும் வருகிறார்கள்.

      நீக்கு
  33. நானும் பெண்களின் கண்ணீர் பற்றி ஒரு பதிவு எழுதி இருந்தேனே பெண்களுக்கு கண்ணீர் ஒரு ஆயுதம் உங்கள் முகநூல் கவிதை நன்று

    பதிலளிநீக்கு
  34. வெற்றிக்குச் சொந்தம் கொண்டாடுபவர்கள் - என்ன சொல்ல? இப்படி பலரை நானும் சந்தித்திருக்கிறேன். அவர்களுக்கு இப்படிச் சொல்லிக் கொள்வதில் ஒரு மகிழ்ச்சி - சந்தோஷமாக இருக்கட்டும் என விட்டு விலக வேண்டியது தான்.

    பொக்கிஷப் படங்கள் அனைத்தும் சிறப்பு.

    பதிவுகளை பின்னோக்கிப் படித்துக் கொண்டிருக்கிறேன் - இன்றைக்கு தான் நீண்ட நாட்களுக்குப் பிற்கு விடுமுறையில் வீட்டில் இருக்கிறேன்! :)

    தொடரட்டும் பதிவுகள்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!