செவ்வாய், 18 பிப்ரவரி, 2020

கேட்டு வாங்கிப் போடும் கதை :  பூக்களுக்கிடையே கெண்டி - கமலா ஹரிஹரன் 



முன்னுரையாக சிறிது என்னுரை...

16.செப்டம்பர் 2018ல் " எங்கள் ப்ளாக்கில்" வந்த ஒரு பதிவை பார்த்ததும், அதில் வரும் "பூக்களுக்கிடையே கெண்டி" என்ற தலைப்புடன் கூடிய படத்தை கண்டு இதற்கு "ஏதாவது  எழுதலாம்" என்ற எண்ணம் எனக்கு வந்தது. அதை அப்படியே சகோதரர் ஸ்ரீராம் அவர்களிடம் தெரிவித்ததும்  அவரும் "எழுதுங்களேன்" என சம்மதம் அளித்து விட்டார். உடனே ஆரம்பித்த இந்த கதை, காலத்தின்  தடுமாற்றங்களில் கதையின் முடிவை எட்டிப் பிடிக்க  இந்த ஒரு வருடகால இடைவெளியை சுலபமாக எடுத்துக் கொண்டது.

பூக்களும், நாருமாக தனித்திருந்த அந்தக் கதையை,  கடந்த சில மாதங்களாக அப்போது ( அதாவது ஒரு வருடத்திறகு முன்.) என் கற்பனை மரங்களில் உதிர்ந்த எழுத்துப் பூக்களை இப்போது நினைவுபடுத்தி நாரில் கோர்த்து மாலையாக்கி "செவ்வாய் தினத்திற்கு" உகந்ததாக இருக்குமென சூட்டியிருக்கிறேன். 

சூட்டியிருக்கும் இந்த மலர்மாலை  வாசமாக நன்றாக அழகாக உள்ளதா என  (சு) வாசித்துக் கூறும் கூடுதல் பொறுப்பையும், இங்கு வரும் அனைவருக்கும் தந்துள்ளேன். இந்தப் பணியை கொஞ்சம் சிரமம் பாராமல் ஏற்றுக் கொள்ள வேண்டுமென அன்புடனும், பணிவுடனும் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். நன்றி.

அன்புடன்..
உங்கள் சகோதரி
கமலா ஹரிஹரன்.



Kamala Hariharan16 செப்டம்பர், 2018 ’அன்று’ முற்பகல் 7:26
காலை வணக்கம் சகோதரரே

நல்லத் தொகுப்பு. ஒவ்வொன்றையும் ரசித்தேன்.. படங்கள் மிக அழகு.

தங்கள் கை பாகத்தில் சாம்பார் ருசி, மணம் தெரிகிறது.

மழை இங்கு தினமும் சொல்லி வைத்தாற் போல் மதியமானதும் பெய்கிறது

"பூக்களிடையே கெண்டி" என்ற தலைப்பில் ஏதாவது எழுதலாம்.

மதன் காமெடி அருமை. முன்பெல்லாம் நிறைய படித்தது நினைவுக்கு வருகிறது.

மஞ்சள் குங்குமச் செப்புக்கள் மிக அழகாக இருக்கின்றன. உண்மையிலேயே வித்தியாசமாக இருக்கிறது.

தமிழ்வாணன் நாவல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். இதைக்கூட படித்திருக்கலாம். ஆனால் நினைவில்லை.படித்தால் நினைவு வரும். நிறைய இடங்களில் ஆங்கில வார்த்தைகளை உபயோகிக்கிறோமோ?

கொழுக்கட்டை அச்சு கதை நன்றாக உள்ளது
என்னிடமும் ஒன்று உள்ளது. (அணில் அல்ல) எப்போதோ பொருட்காட்சியில் வாங்கியது.(நினைவு பொருளாக வைத்திருக்கிறேன்.) தங்களின் அணில் சேவை நன்றாக உள்ளது. படங்கள் அருமை.

என் தளம் வந்து கருத்துக்கள் சொன்னமைக்கு நன்றிகள்.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

பதிலளிநீக்கு
பதில்கள்

ஸ்ரீராம்.17 செப்டம்பர், 2018 ’அன்று’ பிற்பகல் 2:47
வாங்க கமலா அக்கா.

நேற்று நல்ல மழை பெய்தது. நான் படம் போட்டதை பார்த்து அதற்கு ரோஷம் வந்து விட்டது போலும்!

பூக்களிடையே கெண்டி என்ற தலைப்பில் என்ன எழுதலாம்? எழுதுங்களேன்... படிப்போம்.

அவை மஞ்சள் குங்கும சீப்புகள் அல்ல. சற்றே பெரிய கொள்ளான்கள்!

தமிழ்வாணன் நாவல்கள் சிறுவயதில் பிடித்தன. இப்போதும் என்னிடம் அவர் கதைகள் பைண்ட் செய்யப்பட்டு இருக்கின்றன!

நன்றி அக்கா.

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

பூக்களுக்கிடையே ஒரு கெண்டி
கமலா ஹரிஹரன் 


ஜானகி படுத்திருந்தாள். முகத்தில் சோர்வு தெரிந்தாலும், என்ன ஒரு களையான முகம். அந்த கால ரவி வர்மா ஓவியப் பெண்களைப் போல்  இயற்கை வண்ணங்களால் வார்த்தெடுத்த அழகான முகம்.....! மனம் மட்டுமென்ன..! அதை விட அழகோவியமாக இறைவனே பார்த்து  பார்த்துக் கொடுத்திருக்கிறார். ரகு கண்களில் உண்டான லேசான நீர் துளிப்புடன் அவளையே பார்த்தபடி அருகில் அமர்ந்திருந்தான்.

சற்று நேரத்தில் கண் விழித்துப் தன்னையே பார்த்தபடி அவன் அமர்ந்திருப்பது கண்டதும் விழிகளாளேயே "என்ன"வென்று கேட்பது போல் புருவத்தை தூக்கினாள்.

அருகில் நெருங்கி அவள் இரு கைகளையும் சேர்த்துப் பிடித்துக் கொண்டவனுக்கு வார்த்தைகள் எழும்பவில்லை. தன் கைகளில் அவன் கண்களிலிருந்து சூடான இரு முத்துக்கள் விழுந்ததும், பதறிய அவளின் முக பாவம் ரகுவை இன்னமும் வசீகரித்தது.

" இதை எனக்காக இப்படியே நிறுத்தி விடு  ஜானகி..! என்னால் இதை ஜீரணிக்கவே முடியலே... நாளை விடியாமலே போகக்கூடாதான்னு வேண்டிக்கிறேன்."

மெதுவாக அவனிடமிருந்து கரங்களை விடுவித்தவள், மறுகணம் தன் ஒரு கரம் கொண்டு அவன் வாயை லேசாக மூடினாள்.

உலர்ந்திருந்த உதடுகளை நாவினால் தடவி ஈரமாக்கியபடி, மெல்ல எழுந்து அமர்ந்தவள், "ஏன்...!  இப்படி பேசனும்.. எல்லாம் என்னோட கனவுக்குதானே...! இதற்கு எத்தனை வருடம் காத்திருக்கிறேன். உங்க சம்மதந்தானே என் கனவோட முதல்படி. படிபடியாக ஏறி கனவு பலிக்கிற நேரத்துல இப்படி முடியாதுன்னு சொன்னா  எம்மனசு நொறுங்கி போயிடாதா?" வேகமாக சேர்ந்தாற் போல் பேசியதில் சற்று  மூச்சு வாங்க இளைப்பதை கண்டதும், ரகு பதறி எழுந்து போய் தண்ணீர் கொண்டு வந்து சற்றுக் குடிக்கச் செய்து  ஆசுவாசப் படுத்தினான்.

" சரி..! ஜானு..அதிகம்  பேசாதே.. நான் ஒண்ணும் சொல்லலை...உனக்காக  நான் சம்மதிக்கிறேன்.. " என்றவன் கண்களில் கண்ணீர் பெருக  அதை அவளிடம் மறைக்க முயற்சித்தான்.

"என்ன இது...! குழந்தை மாதிரி.. நா என்ன ஊர்ல உலகத்துல செய்யாததையா செய்றேன். இதுக்குப் போயி இப்படி வருத்தப்பட்டா எப்படி? "அவள் மறுபடி பேச ஆரம்பிக்கும் முன் அவளை அமர்த்தியவன்..

" நீ இப்ப எதுவும் பேசாதே ஜானு.. நான்தான் உன் இஷ்டத்துக்கு ஒத்துண்டாச்சே... மறுபடி இப்ப எதுக்கு அதைப் பத்தி பேச்சு.. வேணாம். .,! நீ கொஞ்ச நேரம் தூங்கு.. என்றபடி அவள் தோளை அணைத்து தன் மேல் சாய்த்துக் கொண்டவாறு அவள் அருகில் அமர்ந்து கொண்டான்.

கணவனின் பாசம் கண்டு ஜானகியின் கண்களும் கலங்கியது. அவனறியாமல் கண்களை துடைத்தபடி அவன் பரிவுக்கு கட்டுப்பட்டு கண்களை மூடி தூங்க பிரயத்தனித்தாள்.

"மேகலா, மேகலா, இங்கே வா.! ஜானகியின் பேச்சுக்கு கட்டுப்பட்டு தலை நிறைய பூச்சூடி அழகு தேவதையாய் நடந்து வந்த  மேகலா அவளருகே வந்தமர்ந்தாள்.

" மேகலா.! நீ எனக்கு ஒரு சத்தியம் செய்து தரணும். இத்தனை நாளா உன்கிட்டே  வாய் வார்த்தையா வெறும் உறுதி மொழிதான் கேட்டேன். இப்போ..."  என்றவளை இடைமறித்த மேகலா, "என்னக்கா,  நீங்க பெரிய வார்த்தையா கேக்கறீங்க.. நீங்க சொன்னது நான் மீறினாதானே இந்த மாதிரி சத்தியம் அது, இதெல்லாம் சொல்லனும். நீங்க சொல்றதை நான் தட்டியிருக்கேனா?  ஜானகியின் மெலிந்த கைளை எடுத்து தன் மார்போடு அணைத்தவளாய் பரிவாக சொன்னாள்.

" இன்னைக்கு என்னுயிரை உங்கிட்டே  தந்திருக்கிறேன்... ஏன் தெரியுமா?  அந்த உயிருக்கு ஆதரவா ஒரு உயிரை நீ சீக்கிரம் தரணும். அந்த செயலைத்தான் உங்ககிட்டே உறுதியா கேக்கிறேன். "

வெட்கத்தில்  சிவந்த முகத்துடன் மேகலா அவளுக்கு பதில் கூறும் முன் அந்த  அறைக்குள் நுழைந்தான் ரகு.

"மேகலா.! அவளுக்கு மருந்து தந்தியா?  இனி நீ போ..!  நான் அவளை பார்த்துக்கிறேன்.."  என்றபடி, தன் கட்டிலில் அமரப் போனவனை ஜானகி தடுத்தாள்.

"என்னங்க.. ஒரு நிமிஷம்.. இங்கே வாங்க..!  அழைப்புக்கு கட்டுண்டு வந்தவனை, "என்ன இது.!  இன்னைக்கு என்னவென்று உங்களுக்கு தெரியாதா? உங்க அறைக்கு போங்க. நா கொஞ்ச நேரத்துல மேகலாவை அனுப்பறேன்.  எனக்கு துணையாக இனி என் அத்தை இங்கே இருந்து பாத்துப்பாங்க.! " என்று முடியாமல் கூறி முடிக்கவும், ஜானகியின் அத்தை வந்து மேகலாவை, "வாம்மா" என்றபடி அழைத்துக் கொண்டு போனாள்.

ஒரு நிமிஷம் நடப்பதை பார்த்து திகைப்புடன் நின்றிருந்த ரகு, ஜானகி அருகே வந்தமர்ந்தபடி,  "என்ன ஜானு. .! உன் விருப்பத்துக்குதான் ஒத்துண்டேன். மறுபடியும் என்னை எல்லாத்துக்குமே ஒத்துக்க வைக்கிறே.... இது நியாயமா சொல்லு? என்றான் அழ மாட்டாத குறையாய்..

ஜானகி அவன் கைகளை எடுத்து தன் கைகளில் பிணைத்து கொண்டபடி வருடிக் கொடுத்தாள்." என் செல்ல ராஜா..!  இதுக்குதானே நா என் உயிரை கையிலே வச்சிட்டு காத்திருக்கேன்.  நம்ப குழந்தையை ஒரு வாட்டி பாத்துட்டு, அதுக்கு நான் நினைச்ச மாதிரி ஆகாரம் கொடுக்காமே நான் போவேனா?  அப்படி போனாதான் என் ஆத்மா சாந்தியடையுமா என்ன?" மேற்கொண்டு அவளை பேச விடாமல், வாய் பொத்தி அவளை லேசாக தன்னுடன் அணைத்துக் கொண்டான் ரகு.

தன் திருமணத்திற்கு தன் தாய் தந்திருந்த வெள்ளி கெண்டியை அடிக்கடி எடுத்து வைத்துக் கொண்டு,"  என்னங்க இதில்தான் என் அம்மா எனக்கு பால் புகட்டி வந்திருக்கிறார்கள்.  நானும் என் குழந்தைக்கு இதில்தான் பால் புகட்டிப் பார்க்க வேண்டுமென்று ஆசை... என முகம் சிவக்க கூறும் போது, ரகுவின் சீண்டும் பார்வையை தாங்க முடியாமல் வெட்கத்தில் கைகளால் கண்மூடி மௌனித்த வேளைகள் எத்தனை எத்தனை.!

அவளுடைய ஆசைகள் அவனறியாததா?  அவனின் இருபத்தைந்தாவது வயதில் அவனை நம்பி அவள் அவனுடன் சம்சார பந்தமெனும் கடலில் இறங்கிய போது அவளுக்கு வயது இருபது.  நிறைய கனவுகளில்  சிறகடிக்கும் பறவையின் உற்சாக மனதோடுதான் அவனை கைப்பிடித்தாள்.

 நிறைய இடைவெளியில் , தன் கூடப்பிறந்த இரு தம்பிகளையும் தன் உடன்பிறப்பாக நினைத்து அன்புடனே, வளர்த்து,  தன் பெற்றோர்களின்  நம்பிக்கைக்கு பாத்திரமாகி, நல் மதிப்பெண்கள் பெற்று, தம்பிகளின் திருமணங்கள் வரை, உற்சாகமாக ஓடியாடி  வளைய வந்தவள்தான்.!

"இவ்வளவு பொறுப்பா பெரிய மனுஷியாட்டம்  புகுந்த வீட்டை கட்டிக் காத்து  நல்ல முறையிலே நிர்வகிச்சிண்டு வர்றியே...  ஜானகி. அந்த ஆண்டவன் உன் விஷயத்திலே கண் திறக்க கூடாதா?  உனக்குன்னு ஒரு குழந்தை தங்கி ஒரு குடும்பமா இருந்தாதானே ஒரு சந்தோஷம் நிலையா வரும். "  என்று உறவுகள் தன் தம்பிகளுக்கு பிறந்த குழந்தைகளை அவள் தூக்கி சீராட்டி கொஞ்சும் போது, புகழ்வது போல பேசி,  குறையை சுட்டிக் காண்பித்த போது கூட மனம் சற்று வருந்தியதை அவள்  பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

காலம் வேகமாக ஓடி மூச்சு வாங்கிய போது ஜானகியும் மூச்சு விடக் கூட சங்கடப்பட்டு  சோர்ந்திருந்தாள்.  அவளை பரிசோதித்த பின் குழந்தை பிறக்க இனி சாத்தியமில்லை என மருத்துவர்கள் கூறியதில் நொடித்துப் போன இதயம்.. அது..   மறுபடியும் தேறவேயில்லை...!

ஆயிரம் மருத்துவங்கள்,  பலவித மருந்துகள் என எதுவும் பலனளிக்காமல், அவளை மிகவும் பலவீனபடுத்தியிருந்தன.   கடைசியில் தன்னை அருகிலிருந்து கவனித்துக் கொள்ள தூரத்து உறவின் மூலம் வந்திருந்த மேகலாவை எப்படியோ சம்மதிக்க வைத்து, ரகுவிடமும் போராடி  பேசி அவன் அரைகுறை சம்மதத்தையும் பெற்று இருவருக்கும் மணமுடித்து வைத்து விட்டாள்.  இனி ரகுவின் குழந்தையை கொஞ்சாது தன்னுயிர் பிரியாது என்ற நம்பிக்கையில் தன்னை எதிர்கொள்ள காத்திருக்கும் மரணத்திற்கு சவால் விட்டபடி காத்திருந்தாள்.

டந்த  ஐந்தாணடு காலமாக ரகுவுக்கும், மேகலாவுக்கும் இடையே அவ்வளவாக பேச்சே கிடையாது. "வெளியுலகத்திற்கு நீயும், நானும் கணவன் மனைவி..  ஆனால் அதை தாண்டி ஒரு பந்தமும் நம்மிடையே என்றுமே கிடையாது" . என ரகு சொல்லியபடி வாழ்ந்து வந்தான்.  அவன் என்றாவது மனது மாறுவான் . தன்னிடம் பழைய மாதிரி சுமூகமாக பேசவாவது செய்வான் என்ற நம்பிக்கையோடு பொறுமையாய் இருந்தாள் மேகலா.

அவனை விட்டு விலகிப் போகவும் முடியவில்லை...  அப்படியே போனாலும் அவளைத் தாங்கி அரவணைத்துக்கொள்ள யாரிருக்கிறார்கள்.? பெற்றவர்களும் ஒருவர் பின் ஒருவராக மறைந்து, வறுமையில் யாருமற்ற சூழலுடன் இருக்கையில், உறவில் அத்தை முறையான பார்வதி,  "ஜானகியை கவனமாக பார்த்துக் கொண்டால்,  உனக்கும் ஒரு பாதுகாப்பு கிடைக்கும்" என அழைத்து வந்து இங்கு தங்கச் செய்தாள். ஆரம்பத்தில் சற்று மனம் ஒட்டாமல்  தயங்கினாலும் ஜானகியின் அன்பும், அக்கறையும், அவளின் எந்த பேச்சையும் தட்டாத ஒரு நெருக்கத்தை உண்டாக்கின.

அதன் விளைவுதான் ரகுவை மணந்து கொள்ள அவள் சம்மதித்தாள்.  சட்டப்படி ஜானகி எடுத்த முயற்சி பலனளித்து விட்டாலும், ரகு திருமணமான அன்றே தன் உறுதியான முடிவை "ஜானகிக்காகத்தான் நான் உன்னை ஏற்றுக் கொண்டேன்.  மற்றபடி நீயும், நானும் என்றுமே யாரோதான்..! என்று மேகலாவிடம் கூறி விட்டான். ஜானகியின் மேல் அவன் வைத்திருக்கும் அன்பை இரண்டு வருடங்களாக அவள் பார்த்திருந்ததால்,  இதை மேகலாவும் ஆமோதித்தது புன்னகையால் ஏற்றுக்கொண்டாள்.

"அப்படிப்பட்ட உறவையும், இந்த ஐந்தாண்டு காலம்  மிகவுமே சின்னாபின்னபடுத்தி அழகு பார்க்கிறதே " என எண்ணும் போது, பொறுமையாயிருந்த மேகலாவின் கண்கள் ஆறாகப் பெருகின.  அதன் காரணம் அவள் மனசாட்சிபடி "நீ செய்தது சரிதான்" ! என கூறினாலும், ரகுவை வெறுப்படைய செய்து விட்டதே என நினைக்கும் போது சற்று உறுத்தலாக இருந்தது. அன்றைய நாளின் நினைவுகள் அவளிடமிருந்து சிறிதும் விடைபெற  மறுத்தது மட்டுமின்றி, "நான் என்றுமே உன்னுடன்தான் இருப்பேன்" என்று அழிச்சாட்டியம் செய்தபடி இருந்தது.

மேகலா.! நீயும் என்னை ஏமாற்ற போகிறாயா? கண்களால் கேள்வி கேட்கும் ஜானகியை எதிர் கொள்ளவே மேகலாவுக்கு தர்ம சங்கடமாக இருந்தது. அவளை பூப்போல அசைத்து, பணிவிடைகள் செய்யும் போதும், ஆகாரத்தை மெல்ல ஊட்டி விடும் போதும் பார்வையின் உரசல்களில் அந்த கேள்வி தொக்கி நிற்கும்.

ரகு வேலையிலிருந்து வரும் வரை ஜானகியை முழுதாக அருகிலிருந்து கவனித்துக் கொள்பவள் ரகு  வந்ததும் ரகுவின் கட்டளைக்கிணங்கி அங்கிருந்து அகன்று விடுவாள். இருவரையும் சேர்ந்து பார்த்தால், மறுபடி "குழந்தையை பற்றி பேச்செடுத்து ஜானகி தன்னை இன்னமும் பலவீனமாக்கிக் கொள்கிறாள்" என்ற எண்ணம் ரகுவை ரொம்பவே பாதித்தது.  அதை புரிந்து கொண்டவளாய்  தான் நகர்ந்து விடுவது ரகுவுக்கு பிடிக்கிறது என்ற எண்ணமே மேகலாவுக்கும் திருப்தியளித்தது.

ஒருநாள் இருவரும் சேர்ந்து இருக்க வேண்டிய கட்டாயம் நேர்ந்தது. ஜானகி காலையிலிருந்தே சற்று கூடுதலாக சோர்வாக இருப்பது கண்டு அவளை விட்டு தானும் நகராதிருந்தாள்.  அன்று மேகலாவுக்கும் காலையிலிருந்தே தலைவலியால், சோர்வாக இருந்த உடல் ஜானகிக்கு இரவு கஞ்சியை புகட்டி கொண்டிருந்த போது, சற்று வெளிக் காட்டி விட்டது.  வாய் மூடி பாத்ரூம் சென்று வாந்தி எடுத்து விட்டு வந்தவளை சந்தோஷம் மிக்க கண்களால் விரிய பார்த்தாள் ஜானகி.

அந்தப் பார்வையின் பொருள் உணர்ந்து தன்னிலை உணர்த்துவதற்குள் ஹீனஸ்வரத்தில் "மேகலா நாள் தள்ளிப் போகிறதா? நல்ல செய்தியா? என சந்தோஷம் அடைந்தவளுக்கு முன் எதையும் சொல்ல முடியாமல் மெளனித்தவளை, ரகு முறைத்தான்.

" நான் நினைத்தது நடந்து விட்டது..  கடவுள் என் குறை அறிந்து என் வாழ்க்கையில் ஒரு திருப்தி கொடுத்து விட்டார்,  இது போதும் எனக்கு.." என் வேண்டுதல் பலித்து விட்டது. என மெலிதாக புலம்பிய வண்ணம் இருந்த ஜானகிக்கு அன்று இரவு மிகவும் உடல் பலகீனமாக அடைய, இந்த சந்தோஷம் போதுமென்று மனநிலையில், அதே சிரித்த முகத்துடன் இந்த உலகை வெறுத்து விடை பெற்றாள்.

யிற்று!   நடைபிணமாயிருந்த ரகு பழையபடியாக  மாத கணக்கில் ஆனது.
அன்று சாப்பாடு பறிமாறிய மேகலாவை  "இப்போ உனக்கு திருப்தியா? என் உயிரை என்கிட்டே இருந்து பிரிக்க இப்படி எத்தனை நாளா யோசிச்சே? என்று கேட்கவும், மேகலா திகைத்தாள்.

" நானா? ஏன் இப்படி பேசறீங்க?  அக்காவை நானும் என் உயிராகத்தான் நினைச்சேன். அவங்க இல்லாத ஒவ்வொரு நொடியும் எனக்கு எவ்வளவு வேதனையை தருது தெரியுமா?" கண்ணீர் பீறீட கேவினாள் மேகலா.

"அப்படியென்றால் அன்னைக்கு உண்மையை சொல்ல வேண்டியதுதானே.! "மெளனம் உண்மை.." என்ற மாதிரி அவள் பேச்சுக்கு மறுபேச்சு பேசாது ஏன் அமைதியா இருந்தே? " ஏன்னா உன் எண்ணத்தில் இருந்த ஆசைக்கு அதுவே ஒரு சாட்சி,.!   சீ.. நீயெல்லாம் அவளை உயிரா நினைச்சியா?  ஏன் பொய் மேலே பொய்யா....இப்படி.. " வார்த்தைகளை உமிழ கூட வெறுப்படைந்தவனாக முகம் சிவந்தான் ரகு.

" நீங்க நம்பலைன்னாலும் நான் சொல்றது உண்மை. அந்த நேரத்திலே நீங்க நினைக்கிற மாதிரி இல்லைன்"னு சொல்லவா?  காலையிலிருந்து தலைவலி காரணத்தாலேயே வயிற்றை பிரட்டியதுன்னு சொல்லவான்னு நான் அந்த சமயத்திலே கொஞ்சம் தடுமாறினேன்.  இத்தனக்கும் அவங்க எத்தனையோ நாள் இந்த மாதிரி பேச்சை ஆரம்பிக்கும் போது, ஒருநாள் கூட நாம ரெண்டு பேரும் இன்னமும் வாழ்க்கையையே துவங்கலைன்னு  சொல்ல நினைச்சிருக்கேனா?  இல்லை என்னையும் மீறி சொல்லியிருக்கேனா?  ஏன் என்னை நம்பாமே இப்படி அபாண்டமான பேசறீங்க?" மேகலாவின் வாய் வார்த்தைகளையும் மீறி சற்றே உணர்ச்சி வசப்பட்டதில் நடுங்கியது.

எப்படியோ போ,!  அவளை கொன்னுட்டே. !  என்னையும், அவளையும்  பிரிச்சு பாவத்துக்கு இனி உன் முகத்துல முழிக்கிறதே பாவம். !  ஜானகி பேச்சை மதித்து உன்னை கல்யாணம் பண்ணினதுனாலே உன்னை எங்கேயோ போ"ன்னும், சொல்ல முடியலே!  ஆனா என் ஜென்மம் முழுக்க உன்கிட்டே பேசாமே இருக்க  என்னாலே முடியும்.  இனி நம் தெரிஞ்ச உறவுகளுக்குத்தான்  நீயும், நானும் ஜானகி பார்த்து கல்யாணம் செய்து வைத்த  தம்பதிகள். வீட்டுக்குள்ளே நீ யாரோ.! நான் யாரோ..! என்றவன் இன்று வரை அந்த நிலை மாறாது இருக்கிறான்.

மேகலாவுக்கு முதலில் ரணமாக மனது வலித்தது.  நாளடைவில் ஜானகியின் அன்பை நினைத்து, அவளுடன் தனிமையில் இருக்கும் போது  "ரகு என்ன சொன்னாலும், ரகுவை என்றுமே உன் ஆயுள் பரியந்தம் புறக்கணித்து மட்டும் விடாதே!!" என்று தன்னிடம்  கண்டிப்பான அன்புடன் அவள் கேட்டுக் கொண்ட வார்த்தைகளுக்காகவும்  அவன் கோபங்கள்  தீர இன்னும் எத்தனை வருடங்களானாலும்  பொறுத்துக் கொள்ள தயாராக இருந்தாள்.

காலம்  ஒன்றுதான் யாரிடமும். எதுவும் சொல்லாமல்,  கேட்காமல். தன் வேலையை பார்த்தபடி  செல்லக் கூடியது. மேலும் சில வருடங்களை தன்னுள் விழுங்கிய திருப்தியில், அது ஒருவித அலட்சிய மனப்பான்மையுடன் நகர்ந்து கொண்டிருந்தது.

சமையலறை வாசலில் நிழலாடியது கண்டதும், காய்கறிகளை நறுக்கிக் கொண்டிருந்த மேகலா தலை நிமிர்ந்து பார்த்தாள்.

அறையின் கதவை பிடித்தபடி நின்றிருந்தாள் ரகு.

ஏதாவது முக்கியமாக பேச வேண்டுமென்றால்தான் இப்படி எதிரில் வந்து நிற்பான் என்பதை உணர்ந்தவளாகையால், "என்ன?" என்பது போல அவனை பார்த்து கொண்டபடி இருக்கும் இடத்தை விட்டு ஓரடி முன் வந்து நின்றாள் மேகலா..

"நாளை காலை நாம் ஒரு விஷேடத்திற்குப் போகப் போகிறோம். ஜானகிக்கு நெருங்கிய உறவு. அவளின் மாமா மகனுக்கு  அறுபதாம் கல்யாணம். நம்மை கண்டிப்பாக வரச் சொல்லியிருக்கிறார்கள்.  அங்கு வந்து நம் விரிசல்கள் எதையும் காட்டாமல் நடந்து கொள்...!!" என்று அவள் விழி பார்க்காமல், ரகு சொன்ன போது  மேகலாவுக்கு கோபத்தை விட சிரிப்புதான் அதிகமாக வந்தது.

" என்றைக்கு இந்த விரிசல்களை வெளியில் காட்டி யார் வந்து "சரி செய்யவா?" என்று கேட்டிக்கிறார்கள். என்னறைக்கு உங்கள் மனம் மாறும்..! விரிசலென்று நீங்கள் நினைப்பது  வெறும் கீறல்தான்... அதுவும் நீங்களாகவே போட்டு கொண்டு ஆற விடாமல், பத்திரமாக ரணத்தை அழகு படுத்தி பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்." என்று சொல்ல வேண்டும்  போலிருந்ததை அடக்கியபடி, "சரி" என்றாள்.

மறுநாள் அந்த விஷேடத்திற்கு தன்னை சாதாரணமாகவே அலங்கரித்து கொண்டவளுக்கு, திடீரென" ரகு என்ன சொல்வானோ? "என்ற ஐயம் வந்தது. எனவே அவன் அறை வாசலுக்கு வந்தவள்,  "இது போறுமா? இல்லை.. ஏதேனும் பட்டுப் புடவை உடுத்திக் கொள்ள வேண்டுமா? என கேட்க வந்தவள் அவன் என்ன சொல்வானோ என்ற  நினைப்பில் பேசத் தயங்கி நின்றாள்.

அன்றைக்கென்னவோ அவள் நிலை உணர்ந்தவன் மாதிரி அவளை சற்று ஏறெடுத்துப் பார்த்தவன்," இது பழசாக தெரிகிறதே..! ஏதேனும் பட்டுப்புடவையாக கட்டிக் கொள்ளேன். "என்ற அவன் குரலில் இத்தனை வருடங்களாக இல்லாத ஒரு சிறு நெகிழ்ச்சி மேகலாவை வானத்திற்கு மேலாக பறக்க வைத்தது.

தன்னறைக்குள் புகுந்ததும் அவனின் கரிசனம் மிகுந்த சின்னப் பேச்சு அவளைச்சுற்றி தட்டாமாலை ஆட, திருமணமானதிலிருந்து அவனுடன் சேர்ந்து வாழ்ந்த ஒரு சந்தோஷத்தை அடைந்த திருப்தி எழுந்தது.  

பரபரவென்று தன் திருமணத்திற்கு ஜானகி வாங்கித் தந்த புடவையை கட்டிக் கண்டதும், ஜானகியின் அன்பான அரவணைப்பு தன்னை சுற்றி வியாபிப்பதை உணர முடிந்தது.  கண்கள் கலங்க  மேஜையிருந்த ஜானகியின்  போட்டோவை ஒரு நிமிடம் பார்த்தவள், "என்னை ஆசிர்வாதம் பண்ணுங்கள் அக்கா" என்றபடி கீழே விழுந்து நமஸ்கரித்தாள்.  அப்போது அறை வாசலுக்கு வந்து அகன்ற ரகுவை அவள்  சற்றேனும் கவனிக்கவில்லை.

றுபதாம் கல்யாணம் வைதீக முறைப்படி ஜாம் ஜாமென்று நடந்து கொண்டிருந்தது.  ரகுவிற்கும்,  மேகலாவிற்கும் நல்ல வரவேற்பு கிடைத்த சந்தோஷத்திலே ரகுவிடமும் ஒரு முக மலர்ச்சி உண்டானதாக மேகலாவுக்கு தோன்றியது.  தன்னுடைய இயல்பான சுபாவத்தில் அவளும் ஜானகியின் உறவினர்கள் அனைவரையும் அறிமுகப்படுத்திக்  கொண்டு, கலகலப்பாக அவர்களுக்கு உதவியாக  அங்குமிங்கும் சென்று கொண்டிருந்தாள்.

அவ்வப்போது ரகுவின் பார்வையில் இவள் பார்வையும் படும் போது "இதுதான் இவனுடன் திருமணத்திற்கு பின் முதன்முதலாக சேர்ந்து வந்திருக்கும் விஷேசம்" என்ற எண்ணம் மேகலாவுக்கு வரவும் அவளின் உற்சாகமான முகம் இன்னமும் சற்று மலர்ந்து காணப்பட்டது.

"இவன் நம்ப ஜானகியின் புருஷன் ரகு தானே... !  பாவம் ஜானகி!  இந்த சின்ன வயசுலே அவள் பட்ட கஷ்டமிருக்கே அப்பப்பா ...  ஆனா  அவ ரொம்ப பொறுமைசாலி...  அவ பொறுமைக்கு கடவுள் ரொம்பவும் அவளை பாடாபாடு படுத்திட்டான்.. !"

"ஆமாம்... அவனேதான்... !   அந்த கடவுள் மட்டுமா?  அவ உயிரோடு இருக்கும் போதே இரண்டாம் கல்யாணம் பண்ணி கிட்டவன்தானே இவன்... ! இவன் ஒருத்தன் போதாதா அவ பொறுமையை சோதிக்கறதுக்கு...?"

" என்னமோ அவளே இவனை நிர்பந்த படுத்திதான் கல்யாணம் பண்ணி வைச்சதா கேள்விப் பட்டேனே? "

ஆமாமாம்...! அப்படித்தான் நானும் கேள்விப் பட்டேன். ஆனா அந்த  மாய்மால காரி இருக்காளே...!  அவ என்ன பொடி போட்டு மயக்கிட்டு ஜானகியை அப்படிச் சொல்ல வைத்தாளோ ? யாரு கண்டா?"

" இப்ப அவளும் வந்திருக்காளா? நா அவளை பார்த்ததே இல்லை...!

" அதோ..! நீலகலர்லே பட்டு புடவை கட்டிண்டு  ஏதோ ஜானகிக்கு வேண்டப்பட்ட உறவு மாதிரி வர்றவங்க எல்லோர்கிட்டேயும்  சகஜமா பேசிக்கிட்டிருக்காளே அவதான்..!" 

இவளுக்காவது ஏதாவது குழந்தை குட்டி பிறந்திருக்கா ? 

" எங்கே. .! அவளுக்கு செஞ்ச  துரோகத்துக்கு இவளுக்கு ஒரு குழந்தை பிறக்குமாக்கும்...!  ஜானகியே குழந்தையா வந்து பிறக்கணும்னு கடவுள் ஆஞ்கையிட்டு சொன்னாகூட  ஜானகியே வேண்டாம்னு சொல்லிடுவா.. அந்த அளவுக்கு இவ மேலே அவளுக்கு கோபம் இருக்குமாக்கும்...!" 

ரகு அதற்கு மேல் பொறுக்க மாட்டாதவனாய் சடாரென எழுந்தான்.  வெறும் வம்பு பேசி அரட்டை அடிப்பதற்காக வந்த அந்த உறவுகள் யாரென்று தெரியவில்லை. தான் ஏதாவது பேசி அசம்பாவிதம் ஆகிவிடக் கூடாதென்பதற்காக அந்த இடத்தை விட்டு நகர்ந்தவனுக்கு அவர்களை பார்க்கவே பிடிக்கவில்லை. வேறு இடம் தேடி வந்து அமர்ந்தவனுக்கு உள்ளூர கோபம் அடங்கவில்லை.

ஜானகியை பற்றி புரிந்து கொள்ளாமல் என்னவெல்லாம் பேசுகிறார்கள்.?  அவள் இஷ்டமில்லாமலா நான் மேகலாவை திருமணம் செய்து கொண்டேன்? அவளா அவனுக்கு குழந்தையாக வந்து பிறப்பதை வேண்டாமென்று மறுக்கப் போகிறவள்.. !  சே..!  நாக்கில் நரம்பில்லையென்றால், இப்படி பேச இவர்களுக்கு எப்படி மனசிலும், ஈரங்கள் இல்லாமல் போயிற்று?  ஏதேதோ சிந்தனையில் கண்கள் மேகலாவை தேடின.

"ஏன்..! உன் மனதில் மட்டும் ஈரம் இருக்கிறதா?  நீ அவளை என்னவெல்லாம் பேசியிருப்பே..! அத்தனையும் தாங்கிக் கொண்டு நீ என்னைக்காவது மாறுவேன்னு அவ பொறுமையா இல்லையா?  பாவம் அவள்...!  இனியும் நீ இப்படி நடந்துக்க கூடாது." 

உண்மைதான் ஜானகி... நான் செய்றது தப்புதான்....! 

ரகுவின்  அருகில் அமர்ந்திருந்த இருவர் பேசியது அவனுடைய கன்னத்தில்  அறைந்த மாதிரியிருந்தது.

இங்கும் தன்னருகில் அமர்ந்திருந்த யாரோ இருவர் தனக்காகவே பேசின மாதிரி தன் சிந்தனைக்கு தக்கபடி பேசியது தன் ஜானகியே வந்து பேசின மாதிரி இருந்தது ரகுவுக்கு. இப்போது அவன் கண்கள் தன்னையறியாமல் மேகலாவை விரைந்து தேடின.

"ஆமாம்.. இவள் எனக்கு என்ன குறை வைத்தாள்? என்னிடமும், ஜானகியிடமும் பாசமாக இருக்கதான் செய்தாள்.  நான்தான் இவள் அன்பை உதாசீனபடுத்தினேன்.  இதோ..!  இன்று வரை ஜானகியை  துளியேனும் மறக்காது, காலையில் கூட அவளிடம் மானசீகமாக பேசி, ஆசிர்வாதம் வாங்கி அவளை அன்புடன் நேசித்துதானே  வருகிறாள்.  நான்தான் அவளை புரிந்து கொள்ளாமல் வார்த்தையால் கொன்றேன்.  அப்போதும் அவள் என்னை வெறுக்கவில்லை.   என்னிடம் அவளை ஒப்படைத்து  சென்றதற்காக ஜானகியையும் ஒரு போதும் குறை சொன்னவளுமில்லை.. எல்லா தப்புமே என்னிடமிருந்துதான் ஆரம்பித்தன. "

" நான் "வா" வென்று அதிகாரமாக  அழைத்து வந்த இடத்திலும் எத்தனை முக மலர்ச்சியோடு எதைப் பற்றியும் நினைக்காமல், ஜானகியின் உறவுகளோடு பேசி பழகுகிறாள். இவளை நானே புரிந்து கொள்ளாமல் இருக்கும் போது, பொழுதைப் போக்க இங்கு வந்து வம்படிக்கும் கூட்டம் எப்படி புரிந்து கொள்வார்கள்.? "

சுற்றும், முற்றும் பார்த்து கூட்டத்தில் அவளைத் தேடினான் ரகு.

அதோ..! அந்த சிதறியிருக்கும் மலர்களை  கைகளால் அப்புறப்படுத்திக் கொண்டு மற்றொரு கையில் ஒரு அழகான கெண்டியை வைத்தபடி இருக்கும் மேகலாவைக் கண்டதும், ஜானகியின் வெள்ளி கெண்டியும் அதை சுற்றி படர்ந்திருந்த அவளது கனவுகளும் நினைவுக்கு வந்தன. கூடவே அவளது சுபாவத்தை கேலி செய்து பேசிய  அந்த இரு பெண்மனிகளின் பேச்சுக்களும் காதுகளில் ரீங்காரமிட்டன.

விடு விடுவென எழுந்தவன் மேகலாவின் அருகில் போய் நின்றபடி, "வா..!  மேகலா...! வீட்டிற்குப் போகலாம்...!" என்றான்.

  திடீரென அங்கு அவனைக் கண்டதும் ஒரு நிமிடம் திகைத்துப் போன மேகலா, "என்னங்க. .! நீங்க சாப்பிட்டாச்சா? நானும் இதோ இதை அவர்களிடம் தந்து விட்டு  சாப்பிட்டுட்டு வந்திடுறேன்.. "என்றபடி நகரப் போனவளின் கையை பிடித்தான் ரகு.

அவன் ஸ்பரிசம் தந்த ஆச்சரியத்தில் மறுபடி திகைத்துப் போனவளை "இல்லை...! வேண்டாம். . வா.! நாம் வீட்டுக்கு போகும் வழியிலேயே எங்காவது ஹோட்டலில் சாப்பிடலாம்...! " என்றவன் அந்த கெண்டியை அவளிடமிருந்து வாங்கி அவள்  திரட்டிய மலர்களின் நடுவில் வைத்தவன்  "உன்னை இது நாள் வரை வார்த்தைகளால், சித்திரவதை படுத்தியதற்கு என்னை மன்னித்து விடு மேகலா. .!  இப்போது இந்த பூக்களுக்கிடையே இருக்கும் அழகிய மணத்துடன் ஒளி வீசும்  கெண்டியாக நான் உன்னை பார்க்கிறேன்...!" என்றான் கம்மிய குரலில். 

அவள் ஒரு விதமாக விசித்திரத்துடன் தன்னை பார்ப்பதை உணர்ந்தவன், "என்ன இப்படி பார்க்கிறாய்? இன்று என் மனதை மாற்றுவதற்காகவே ஜானகி நம் இருவரையும் சேர்த்து அனுப்பி வைத்திருக்கிறாள் என நினைக்கிறேன். "வா..! இவர்களிடம் போய் வருகிறோம்" எனச் சொல்லிக் கொண்டு, வீட்டுக்குப் போனதும் உனக்கு விபரமாக என் மனமாற்றத்தின் காரணத்தை கூறுகிறேன்." என்றபடி அவள் கைப்பற்றி அழைத்துச் சென்றவனை, எதையும் புரிந்து கொள்ளும் ஆற்றலை இறைவன் அளித்திருந்தும், புரியாமல் எதை எதையோ பேசி பிறர் மனதை  துன்புறுத்தும் ஆறரறிவு  படைத்த ஜீவன்களை  போலில்லாமல், தனக்கு ஜீவனில்லாவிடினும், தன்னை நேசித்தவர்களுக்கு பயனாக எந்நாளும், எக்காலமும் உழைத்தபடி இருக்கும் அந்த அழகிய கெண்டி மனமுவந்து , மனம் நிறைந்து வாழ்த்தியது.



- நிறைந்தது -

94 கருத்துகள்:

  1. ஒருமைக் கண் தான் கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப் புடைத்து..

    வாழ்க நலம்...

    பதிலளிநீக்கு
  2. அழகான பூக்களையும் கெண்டியையும் கொண்டு இத்தனை அழகான கதை....

    பூக்களைப் போலவே கதை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் துரை செல்வராஜ் சகோதரரே

      தங்கள் விமர்சனம் எனக்கு மிகுந்த உற்சாகத்தை தருகிறது. எனக்கு நீங்கள் அனைவரும் தரும் கருத்துக்களே என்னுடைய எழுதும் ஆற்றல் என்ற ஒரு சிறு செடிக்கு "இன்னும் நாம் வளரலாம்" என்ற நம்பிக்கையை அளிக்கும் உரம். நல்ல கதை என்ற தங்கள் கருத்துக்கு என் பணிவான நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  3. மேகலா என்றாலே தன்னிச்சையாக அன்பும் அழகும் வந்து அமர்ந்து கொள்ளும் போல...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மேகலா என்கிற பெயரில் அப்படி என்ன விசேஷம் என்று அறிய ஆவல்!

      நீக்கு
    2. //மேகலா என்கிற பெயரில் அப்படி என்ன விசேஷம் என்று அறிய ஆவல்!// என்ன ஸ்ரீராம் இது? மேகலா அண்ணியைத் தெரியாதா?

      நீக்கு
    3. ஹா.. ஹா... ஹா... அண்ணன் என்ன சொல்றார், எப்படி சொல்றார்னு பார்க்க ஆவல் கொண்டேன்!

      நீக்கு
    4. ஆஹா :) புரிஞ்சது :) அண்ணி பெயரை பார்த்ததும் சந்தோஷமாகிட்டார் :)

      நீக்கு
    5. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
    6. அண்ணியின் பெயர் வேறு... :)

      மற்றபடிக்கு
      எனது மூங்கில் பாலம் கதையில்
      வீழிநாதனின் மனங்கவரும் இளங்கிளியின் பெயரும் மேகலா தான்..

      நீக்கு
    7. ஆஹா :) அப்படியா சரி சரி இந்த ஸ்கொட்டிஷ் பூனை அடிக்கடி கலா அண்ணின்னு சொல்றதை கேட்டு அதான் அண்ணி பேருன்னு நெனைச்சிட்டேன் :)))))

      நீக்கு
    8. அல்லோ அது அண்ணிக்கு செல்லமாக துரை அண்ணன் வச்ச பெயர்:)) அதை இப்பூடிப் பப்புளிக்கில கேட்டால் அவர் ஷை ஆகிட மாட்டார்ர் கர்ர்ர்ர்ர்:)) அதுதான் வேறு பெயர் என ஜமாளிச்சுட்டார்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா..

      நீக்கு
  4. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்தநாள் இனிமை நிறைந்ததாக இருக்கவும் ஆண்டவனை மனதாற பிரார்த்தித்து கொள்கிறேன்.

    இன்றைய கதைப்பகுதியில் நான் எழுதிய கதையை பிரசுரித்த சகோதரர் ஸ்ரீராம் அவர்களுக்கு என் மகிழ்ச்சியான பணிவுடன் கூடிய நன்றிகள்.

    சற்றே நீண்ட கதையாயினும் பொறுமையாகப் படித்து கருத்துக்கள் வழங்கும் அன்பான வலைத்தள உறவுகளுக்கு என் மனம் நிறைந்த நன்றிகள். நான் சற்றே தாமதமாக வந்து கருத்துக்களுக்கு பதில்கள் அளித்தாலும் அதையும் பொறுமையாக ஏற்றுக் கொள்ள வேண்டுமென மிக மிக அன்போடும் பணிவுடனும் கேட்டுக் கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா..   காலை வணக்கம்.  அன்பான பிரார்த்தனைகளுக்கு நன்றி. அழகான ஒரு கதையைக் கொடுத்திருப்பதற்கும் நன்றி.

      நீக்கு
    2. வணக்கம் சகோதரரே

      அழகான கதை என்று ரசித்து பாராட்டியமைக்கு மிகவும் சந்தோஷம் அடைகிறேன். உங்களைப் போன்றோரின் ஊக்குவிப்பு என்னைப் போன்றோருக்கு கதை எழுதும் ஆர்வத்தை மிகைப்படுத்தும். மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  5. பதில்கள்
    1. வணக்கம் சகோதரரே

      கதை நன்றாக உள்ளதென பாராட்டியமைக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  6. நான் கொஞ்சம் வேலைகளை முடித்துக் கொண்டு வருவதற்குள் வருகிறவர்களுக்கு முதலிலேயே நன்றி கூறியிருந்தேன். ஆனால் சகோதரி கீதா சாம்பசிவம் அவர்கள் கூறுவது போல், இந்தக் கதை அவ்வளவாக போணியாகவில்லை போலும். சுவாரஷ்யம் குறைவோ, இல்லை நெடிய கதை என்பதாலோ தெரியவில்லை "ஈக்கள் மொய்க்காத பலாச்சுளை" ஆகி விட்டது. பரவாயில்லை.. . நான் வேறு ஒரு கதை எழுதி அனுப்புகிறேன். ஐயோ...வந்தவர்களும் எங்கேயோ ஓடுகிறார்களே...!. இங்கே வர நினைப்பவர்களின் காதிலும் இது கேட்டு விடப் போகிறதே... தேவுடா.. ஹா. ஹா. ஹா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனைவருக்கும் இனிய மதியத்திற்கான வணக்கம்.
      ஜானகி என்றால் பொறுமையின் அவதாரமோ.
      ராகவன் என்றால் நேர்மையும் கோபமும் வந்து சேருமோ.
      மிக உணர்ச்சி பூர்வமான கதை.
      2018இல் வந்த படமா.
      கெண்டியும் மலர்களும் வாழை இலையும்,
      பக்கத்தில் விரிக்கப்பட்டிருக்கும் வேஷ்டியும்
      இது எந்த விழாவுக்கான கோலம் என்று தெரியவில்லை.

      யாராவது விளக்க முடியுமா.ஒரு பக்கம் பிடி இருந்தால்
      பூஜைக்குரிய பாத்திரம்.
      இதை வைத்து வெகு விஸ்தீரணமாக அழகான
      கதை பின்னி இருக்கிறார்கள் சகோதரி கமலா ஹரிஹரன்.
      நல்ல வர்ணனைகளுடன்,கோர்வையாக நகரும் கதை.

      படிக்கும் போதே நெகிழ்வாக இருக்கிறது.
      மீண்டும் ஒரு தடவை படித்து விட்டு வருகிறேன்.
      வாழ்த்துகள். அனைவரின் வாழ்வும் செழிக்கட்டும்.

      நீக்கு
    2. வணக்கம் சகோதரி

      கதையை படித்து நன்றாக உள்ளதென்று பாராட்டி கூறியது எனக்கு மகிழ்வாக உள்ளது சகோதரி.

      இதுவும் தன் வீட்டு உறவில் ஒரு அறுபதாம் கல்யாணமோ இல்லை, சதாபிஷேகமோ சென்று வந்த ஸ்ரீராம் சகோதரர் போட்ட பதிவுக்குத்தான் நான் கமெண்ட் தர, சகோதரரும் பதிலுக்கு எழுதுங்கள் என ஊக்குவித்தார். என்ன...எழுதுவதற்குத்தான் நிறைய காலங்கள் கடந்து விட்டது.

      மீண்டும் ஒரு தடவை படிக்கிறேன் என சொன்னதற்கு மிக்க மகிழ்வுடன் கூடிய நன்றிகள் சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  7. அற்புதமான கதை சொல்லிச் சென்ற விதமும் மிக மிக அற்புதம்.வாழ்த்துகளுடன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரரே

      கதையை படித்து நன்றாக உள்ளதென கூறி பாராட்டியமைக்கு என் பணிவான நன்றிகள். தங்களுடைய ஊக்கமிகும் வாழ்த்துக்கள் என் எழுத்துக்களுக்கு பலம். மிகவும் நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  8. கமலா அவர்களே, மற்றவர்களுக்கு சாதாரணமாக தெரியும் ஒரு கெண்டியையும் மலர்களையும் வைத்து ஓர் அறிய கதையை உறுவாக்கியது அறிதிலும் அறிது. Hats off to you Mam.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகை என்னை மிக்க மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியது. கதை நன்றாக உள்ளதென்று கருத்துக்கு மிக்க நன்றி சகோதரி. தங்கள் பாராட்டுகளுக்கும் மனம் கனிந்த நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  9. சுபமான தீர்வு அழகான கதை சகோ.
    இனி அவர்கள் வாழ்வில் வசந்தம் வீசட்டும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரரே

      கதை நன்றாக இருப்பதாக சொன்னதற்கு மிக்க மகிழ்ச்சியுடன் கூடிய நன்றிகள் சகோ.

      ஆம் இனி அவர்கள் வாழ்வில் வசந்தம் ஏற்படட்டும். ஜானகியின் விருப்பம் நிறைவேறட்டும் என வாழ்த்துவோம்.
      தங்களின் அன்பான பாராட்டிற்கு மிக்க நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  10. ஆஆஆ கதைக்கு முன்னுரையே ஒரு கதைபோல இருக்கே ஹா ஹா ஹா கமலாக்கா கதை படிக்க லேட்டாத்தான் வருவேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அதிரா சகோதரி

      /ஆஆஆ கதைக்கு முன்னுரையே ஒரு கதைபோல இருக்கே ஹா ஹா ஹா கமலாக்கா கதை படிக்க லேட்டாத்தான் வருவேன்../

      ஹா. ஹா. ஹா. மெதுவா வாங்க. அவசரமேயில்லை. ஆனால், தங்கள் வரவை அன்போடு எதிர்பார்க்கிறேன். நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  11. அச்சச்சோ நெல்லைத் தனிழனை இங்கின காணல்லியே இன்னும்:)... அவர் சொன்ன வாக்கை மீறமாட்டாராமே:)... அப்போ தாமிரபரணி???:))))))... ஆஆஆ நானில்ல நானில்ல மீ எதுக்கும் பொறுப்பில்லை மீ ரொம்ப நல்ல பொண்ணூஊ சின்ஸ் சிக்ஸ் இயேர்ஸ்ச்ச்ஸ்ச்ச்ச்

    பதிலளிநீக்கு
  12. கதை மிக அருமை.
    ஜானகி மேல் இருந்த பாசத்தால் கண் மூடி இருந்தது.
    இப்போது கணதிறந்து விட்டது மேகலாவின் மேல் உள்ள பாசம். ஜானகிதான் மேகலாவை ஆசீர்வாதம் செய்து இருக்கிறார்.
    மேகலாவின் பொறுமைக்கு விடிவு காலம்.
    மேகம் மறைந்து இருள் விலகி ஒளி தோன்றி விட்டது.
    மேகலவின் வாழ்வு மலர்ந்தது.
    அருமையான கதை வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரி

      தாங்கள் கதையை ரசித்துப்படித்து நல்லதொரு கருத்துக்கள் வழங்கியமைக்கு என் மன மகிழ்வுடன் கூடிய நன்றிகள் சகோதரி.

      /மேகலாவின் மேல் உள்ள பாசம். ஜானகிதான் மேகலாவை ஆசீர்வாதம் செய்து இருக்கிறார்./

      ஆம். சகோதரி. எதுவுமே நேரம் காலம் என்ற ஒன்று அமையும் போது சுபமாகத் தான் முடியும். பொறுமை என்ற அந்த காத்திருப்புக்கு எப்போதும் நல்ல பலன் கிடைக்கும்.

      தங்கள் மனங்கனிந்த பாராட்டுகளுக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  13. கெண்டியும் மலர்களும் அழகு.
    கதையும் சொல்லிய விதமும் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரி

      /கெண்டியும் மலர்களும் அழகு.
      கதையும் சொல்லிய விதமும் அழகு./

      அந்த அழகான கெண்டியும், மலர்களுந்தான் என்னை ஏதாவது எழுதத் தூண்டியது. இதற்கு நன்றி முறைப்படி சகோதரர் ஸ்ரீராம் அவர்களுக்குத்தான் சொல்ல வேண்டும்.

      கதையை சொல்லிய விதம் நன்றாக உள்ளதென பாராட்டியமைக்கு என் மனம் மகிழ்வடைகிறது. தங்களது ஊக்குவிப்புகள் என் எழுதும் சிந்தனைகளுக்கு என்றும் பலமாக இருக்க ஆண்டவனை பிரார்த்திக்கிறேன். நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  14. கேட்டுவாங்கிப் போடும் கதைகளில் தணிக்கை செய்ய இயலாது வாசிப்பவ்ர்களில் பெரும்பாலொர் குறை சொல்லத் தயங்குவார்கள் அகவே கதைஎழுதுபவர் கவனமாக இருக்கவேண்டும் சிறுகதைகளின் கருத்து எழுதுபவரின் கற்பனையைப்பொறுத்தது பதிவில் நீளமதிகமானால் தாண்டிப் போவார்கள் ஆத்ம திருப்திக்குஎழுதும் கதை கூடிய வரைசுருங்கி சொல்லபடுவதாக இருக்கவேண்டும் கூடியவரை என்னைப் பொறுத்தவரை செண்டிமெண்ட்கள் அல்லாததாக இருக்கவேண்டும் இல்லை யென்றால் யார் என்னசொன்னாலும் நான் எழுத்துவதைத்தான் எழுதுவேன் என்னும் எண்ணம் இருக்கவேண்டும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரரே

      கதையை படித்து கருத்துக்கள் தநததற்கு மிக்க நன்றிகள்.

      தங்கள் கருத்துக்கள் உண்மைதான்... பெரும்பாலும் என் கதைகளில், கதையின் கரு என் கற்பனைகளின் துணை கொண்டு பெருகி விடுகிறது. நான் சுருக்கி எழுத நிறையவே கற்றுக் கொள்ள வேண்டும். இனி கற்று கொள்ள முயற்சிக்கிறேன். அனுபவங்கள் மிக நிறைந்த தங்களுடைய அன்பான அறிவுரைகளுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  15. கமலா அக்கா....மனதை தொட்ட கதை...
    முதல் பத்தி ஜானகி யின் வர்ணனை அத்துணை அழகு கா...😍😍😍

    ஜானகி யின் மனம் பால் போல வெண்மையும், சுவையும்...😊😊😊

    ரகுவின் ஜானகியின் நிலைப்பாடு ஆஹா...மிக அருமை..😊

    ஆனாலும் மேகலாவை புரிந்து கொள்ளாத இடங்கள் மிக வேதனை☹️☹️☹️..தான் தனது என்னும் எண்ணத்திலையே இருந்துவிட்டார்...😢


    மேகலா .....அன்பின் மற்றுமொரு உருவம்...
    ☺️☺️☺️

    அருமையான கதை படித்த நிறைவு.... வாழ்த்துக்கள்💐💐💐💐

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரி

      தாங்கள் கதையை மிகவும் ரசித்துப்படித்து கதாபாத்திரங்களின் உணர்வுகளையும், தன்மைகளையும் விளக்கி கூறியது எனக்கும் மிகவும் மகிழ்வை தந்தது. தான் உருவாக்கி எழுதிய கதை மாந்தர்களின் கேரக்டரை மற்றவர்கள் புரிந்து கொள்ளும் போது ஒரு அபரிமிதமான மகிழ்ச்சிதானே உருவாக்கியவருக்கு பிறக்கும்.அந்த திருப்தி எனக்கும் வந்தது. மிக்க நன்றி.

      அருமையான கதை என்ற பாராட்டிற்கும் தங்களது வாழ்த்துக்களுக்கும் என் மனம் நிறைந்த அன்பான நன்றிகள் சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  16. தாமதமாக பகிர்ந்து கொண்டாலும் நல்ல கதை.

    பாராட்டுகளும் வாழ்த்துகளும் கமலா ஹரிஹரன் ஜி. மனதைத் தொட்ட கதை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க மகிழ்ச்சி.

      ஆம் தாமதமாக பகிர்ந்து கொண்டாலும் உங்கள் அனைவரின் அன்பான கருத்துக்கள் கிடைக்கும் போது தாமதம் ஒரு பெரும் குறையாக தெரியாமல் மகிழ்ச்சியாகவே உள்ளது.

      கதையைப் படித்து நன்றாக இருப்பதாக சொன்னதற்கு மிக்க மகிழ்ச்சியுடன் கூடிய நன்றிகள்.
      தங்களது அன்பான பாராட்டுகளுக்கும். வாழ்த்துக்களுக்கும் கூட என் மனம் நிறைந்த நன்றிகள் சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  17. ஆஜர் :) கெண்டி .அழகான வார்த்தை இல்லைய்யாக்கா .இருங்க படிச்சிட்டு வரேன் 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரி

      வாங்க... வாங்க.. கெண்டி அழகான வார்த்தைதான்..! முன்பெல்லாம் அந்த காலத்தில் ஒரு வயது சிறு குழந்தைகளுக்கு கெண்டியில்தான் பால் தருவார்கள். இல்லை பிறந்த சிறு குழந்தையாய் இருந்தால் பாலாடையில் புகட்டுவார்கள். அதன் பின்தான் இந்த பாட்டில்கள் வந்தன. எனக்கு கூட சிறு குழந்தையில் வெள்ளி கெண்டியில் பால் தந்திருப்பதாக எங்கள் அம்மா கூறுவார்கள். நானும் வளர்ந்த பின் அதைப் பார்த்துள்ளேன். படிச்சிட்டு வாங்க.. என நான் கூறுவதற்குள் படித்தே முடித்து விட்டீர்கள். மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  18. படித்து முடிச்சாச்சு /
    ஆரம்பத்தில் ஒரு எமோஷன் சுகவீனமான மனைவி இரண்டாம் திருமணம் செய்துவைத்து ஏற்கவில்லை என் மனம். பிற்  பாதியில் ஒரு மனநிலை கலந்துகட்டி அடிச்சது மனது .இறுதியில் மிக நிறைவாய் மனதுக்கு அமைந்ததுக்கா .வாழ்த்துக்கள் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரி

      உடனடியாக கதை படித்து கருத்துக்கள் இட்டதற்கு நன்றி. இந்த மாதிரி முதல் மனைவியாக தான் இருக்கும் போதே அவனின் நலத்திற்காகவோ, இல்லை தன் ஆசைக்காகவோ, அவனுக்கு திருமணம் நடத்தி வைக்கும் முதல் மனைவிகள் மிக அரிதுதான். இல்லையென்று சொல்லவில்லை. அதே போல், தன் மனைவி கட்டாயபடுத்தி சொல்கிறாளே என வேண்டா வெறுப்பாக மன ஒப்புதலே இல்லாமல் திருமணத்திற்கு சம்மதிக்கும் ஆண்களும் அரிதாகவே இருக்கிறார்கள். இவன் அவ்விதமாககையால், இரண்டாவது மனைவியிடம் மனம் சிறிதும் ஒன்றவில்லை. ஆனாலும், அவனுள் இருக்கும் குற்ற உணர்வுக்கு விழிகள் திறக்க ஒரு நேரம் வரும் போதுதானே நடக்கும். அது ஜானகியின் ஆத்மா உணர்த்தியதாக அவன் நம்பும் போது, அவன் மனம் மேகலாவின் அன்பை ஏற்கவும், தான் அவளுக்கு தன் அன்பை கொடுக்கவும் பக்குவப்பட்டு விட்டது.

      இருப்பினும். கதை படித்து இறுதியில் நிறைவாக அமைந்தது என் வாழ்த்துரைத்தமைக்கு என் மனம் நிறைந்த நன்றிகள்.

      நடுவில் சாப்பாட்டு டயத்திற்காக கொஞ்சம் பிரேக். இன்னமும் வந்த கருத்துகளை கண்டு மகிழ்ச்சியடைந்தேன். பதிலளிக்க வருகிறேன்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    2. கமலாக்கா உண்மையை சொல்லணம்னா இந்த மாதிரி பிள்ளையில்லைன்னு இரண்டாம் திருமணம் புரியும் ஆண்கள்மீது துளி கூட மரியாதை என்பதில்லை எனக்கு .அதுபோல மனைவி இருக்கும்போது வேறு மணம் புரிபவர் மீதும் அதுவும் முதல்மனைவி அப்பாவியா இருக்கும்பட்சத்தில் அந்த ஆணை கல்லெடுத்து மண்டையில் போடணும் துப்பாக்கி கிடைச்சா சுட்டுத்தள்ளனும் இதைவிட இன்னும் அதிகமா அரிவாளோடு கோபத்தில் திரிவேன் நான் :) ஆனா உங்க எழுத்து அந்த எண்ணமே உங்க எழுத்து நடை அதை புறந்தள்ளியது :) ராகு இன்று தப்பித்ததன் காரணம் உங்கள் எழுத்து நடை ஹஹ்ஹஹ் 

      நீக்கு
    3. //ராகு இன்று தப்பித்ததன்// மன்னிக்கவும் ரகு காலோடு வந்துட்டார் :)))))))

      நீக்கு
    4. வணக்கம் சகோதரி

      தங்கள் மீள் வருகைக்கும், காரசாரமான விவாதங்களுக்கும் நன்றிகள். இதுதான் மனம் விட்டு பேசுவது போல் இருக்கிறது. நீங்கள் சொல்வது புரிகிறது. அந்த காலத்தில் முதல் மனைவிக்கு குழந்தை இல்லையென்றால் இரண்டாம் திருமணத்திற்கு பரிந்துரைப்பது என்பதை வீட்டிலுள்ள பெரியவர்களே செய்வார்கள். அப்போது அந்த மனைவியின் மனம் படும் பாட்டை யாருமே புரிந்து கொள்ளாது போல் எப்படியோ அவளை சம்மதிக்க வைத்து விடுவார்கள். இரண்டாவதாக அந்த காலத்தில் மனைவி உயிரோடு, அதுவும் நாலைந்து குழந்தைச் செல்வத்தை தந்த பின்பும் கூட ஆசைக்காக இரண்டாம் கல்யாணம் என்பது சிலருக்கு சாத்தியமான விஷயமாகத்தான் இருந்திருக்கிறது (அவர்களை ஆண்டவன் கூட மன்னிக்கிறான். அது வேறு விஷயம்)

      எனக்கு தெரிந்து எங்கள் தூரத்து உறவில் ஒருவர் முதல் மனைவி உயிரோடு இருக்கும் போதே இரண்டோ, மூன்றோ மக்கட்செல்வத்தை தந்த பிறகும்,அவன் (இந்த இடத்தில் அவர் என்ற மரியாதை தரவும் எனக்கும் இஸ்டமில்லை.) ஆசைப்படுகிறான் என்ற காரணத்திற்காக அவனுக்கு பிடித்தமான பெண்ணை அந்த மனைவி திருமணம் செய்து வைத்தார். அதை கேட்டதுலிருந்து அவனை தாங்கள் கூறுவது போல் பலி கொடுக்கத்தான் அப்போது நானும் பிரியபட்டேன். ஹா. ஹா. ஹா. இன்று அவன் போன புல் முளைத்து விட்டதோ யார் கண்டார்கள்.?
      உண்மை சம்பவமான இதைக் கேட்டால் நெல்லை தமிழர் பொங்கி எழுவார்.ஹா. ஹா. ஹா.

      நல்ல வேளை இந்த கதையில்,ரகு பொய்யான (கற்பனை) உருவத்திலிருப்பதால் தப்பித்தான்.

      /ராகு இன்று தப்பித்ததன்// மன்னிக்கவும் ரகு காலோடு வந்துட்டார் /

      நீங்கள் இத்தனை ஆயுதங்கள் எடுத்தும் ரகு காலோடு இருப்பதே அதிசயம்தான். ஹா. ஹா. ஹா.

      கதையின் கருவால் ரகு இப்படி சித்தரிக்கப்பட்டு விட்டான். அவன் மனைவி சொல்லை தட்டாமல், தட்ட முடியாமல் செய்த காரியம்தான் இந்த இரண்டாம் திருமணம். எப்படி பார்த்தாலும்,அந்த பாவம் என்னைத்தான் சேரும் போலிருக்கிறது.. ஹா. ஹா. ஹா. கருத்துக்களுக்கு நன்றி சகோதரி

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    5. ஆஆஆஆஆஆஆ இன்று என்னமாதிரிப் பொயிங்கிட்டா அஞ்சு:)) சே..சே.. நான் இல்லாமல் போயிட்டனே இந்தப் பொயிங்கலையும் கையில துப்பாக்கியையும் நேரில் பார்க்க கொடுத்து வைக்காமல் போயிட்டனே நான்:)).. ஹா ஹா ஹா.. இனும் கதை படிக்கவில்லை, கொமெண்ட்ச்ல நிற்கிறேன்.

      நீக்கு
  19. // தனக்கு ஜீவனில்லாவிடினும், தன்னை நேசித்தவர்களுக்கு பயனாக எந்நாளும், எக்காலமும் உழைத்தபடி இருக்கும் அந்த அழகிய கெண்டி மனமுவந்து , மனம் நிறைந்து வாழ்த்தியது.//
    கெண்டிக்கு உயிர் கொடுத்த வார்த்தைகள் சூப்பர்க்கா 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரி

      உயிரற்ற பொருட்களின் உன்னதத்தை எப்போதுமே உணருகிறேன். மதிக்கிறேன். உயிருள்ள மனிதர்களை விட அதற்கு கீழே குறைவான அறிவு பெற்ற ஜீவன்களும் அப்படித்தான். அவைகளின் உணர்ச்சிகளை ஆறரறிவு பெற்றவர்களால் புரிந்து கொள்ள இயலாது. தங்களின் பாராட்டுகளுக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  20. அன்புள்ள கமலா, முதல் முறையாக கே.வா.போ. பகுதியில் உங்கள் கதையைப் படிக்கிறேன். எல்லோரும் பாராட்டி விட்டார்கள். நான் கொஞ்சம் விமர்சிக்கலாம் என்று நினைக்கிறேன். என் விமர்சனத்தால் உங்கள் மனம் புண்பட்டு விடுமோ என்று தயக்கமாக இருக்கிறது. மன்னித்து விட்டு மேலே படியுங்கள். 
    இதில் கதாநாயகன் ரகுவின் பாத்திரப்படைப்பு சரியில்லை என்று எனக்குத் தோன்றுகிறது. மனைவிக்காக மறுமணம் செய்து கொள்ள ஒப்புக் கொள்கிறவன், அவளையும் ஏமாற்றி, மணந்து கொண்ட பெண்ணையும் வாழ வைக்காமல் இருப்பது அவன் மீது எந்த விதமான நல்ல அபிப்ராயத்தையும் தோற்றுவிக்கவில்லை. இது ஒரு பெரிய சறுக்கலாக இருப்பதால் கதையில் ஊன்ற முடியவில்லை. மற்றபடி நடையிலும், கதையை எடுத்துச் சென்ற விதத்திலும் எந்த குறையும் இல்லை. தவறாக சொல்லியிருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள். 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகை என்னை மிக்க மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியது. இதற்கு முன்பு ஒரு ஆற்றங்கரை பெரியவர் படத்துக்கேற்ற கதை கே. வா. போ பதிவில் வந்துள்ளது. அதை நீங்கள் படிக்கவில்லையோ. ? இந்த கதையை ரசித்துப் படித்து கருத்துக்கள் தநததற்கு மிக்க நன்றிகள்.

      ஒரு கதையின் விமர்சனம் என்றிருந்தால், நிறை என்ற ஒன்றுடன் குறையும் கண்டிப்பாக இருக்கும். இதை நீங்கள் சுட்டிக் காட்டும் போது என்னை திருத்திக் கொள்ள ஒரு சந்தர்ப்பம் கிடைக்கிறது. இதில் மன்னிக்க என்ன உள்ளது.? தாராளமாக உங்கள் விமர்சனத்தை ஆனந்தத்துடன் வரவேற்கிறேன்.

      இதில் கதாநாயகன் தன் முதல் மனைவியின் வறுப்புறுத்தல் தாங்காமல் அவள் ஆசைக்காகத்தான் மேகலாவை மணக்க சம்மதிக்கிறான்.அதுவும் அவள்
      (ஜானகி) மீது கொண்ட அன்பின் காரணமாகத்தான்,ஒத்துக் கொள்கிறான். அதனால் அவன் மனம் வேறு இச்சைகளுக்கு உடன்படவே யில்லை. இரண்டாவதாக முதல் மனைவி மறைந்த பின்னராவது மேகலாவுக்கு வாழ்வு தர கூடாதா என அனைவரும் எதிர்பார்ப்பதே ! ஆனால் மனைவியின் மறைவுக்கும், அதிலும் அவள் அதீத சந்தோஷத்தில் அன்றைய நாளில் உயிர் விட நேர்ந்ததற்கும் மேகலாதான் காரணம் என்ற எண்ணம் அவன் மனதில் படிந்த பின் அவளுடன் எப்படி வாழ்வை தொடங்குவான்? ஆனால் நேரமும், காலமும் எப்போது ஒருவருக்கு அனுசரணையாக கூடி வருகிறதோ.. அப்போது மனித மனங்களின் அவசர முடிவுகள் மாறி , நல்ல முடிவுகளுடன் கூடிய நல்லெண்ணங்கள் உதயமாவது இயற்கைதானே..!

      மற்றபடி இறுதியில் கதையை பாராட்டி நீங்கள் கூறியது மிக்க மகிழ்ச்சியடைய செய்தது. அருமையான கருத்துக்களுக்கு என் மனம் நிறைந்த நன்றிகள் சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  21. லக்ஷ்மி அம்மா ,ரமணிசந்திரன் ,அனுராதா ரமணன் சிவசங்கரி அனைவரையும் சேர்த்து உருவான கலவையாய் இருந்ததுக்கா உங்கள் எழுத்து ..அழகான மனதை ஊடுருவிய எழுத்து 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரி

      அந்தளவுக்கு புகழ் பெற்ற அவர்களுடன் என்னை சேர்க்காதீர்கள்.. அவர்கள் மலை, என்றால், நான் வெறும் மண் துகள். ஆயினும் நல்லதொரு எழுத்து என்ற பாராட்டுக்கு பணிவோடு தலைவணங்கிக் கொள்கிறேன் சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  22. ஹாஹா @பானுக்கா நானும் எரிச்சலோடு தான் ஆரம்பித்தேன் ரகுவின் மேல் .ஆனால் அவர் மறுமணம் புரிந்தது ஜானகியின் அன்பு நிர்ப்பந்ததால்தானே என்று மனது ஆறுதல் அடைந்தேன் .ஆரம்பத்தில் இருந்த வெறுப்பு 60 ஆம் கல்யாண  நிகழ்வில்சிலரின்  புறணி கேட்டு அவர் மனம் மாறியதால் என் மனம் சமாதானமாகியது .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ///பானுக்கா நானும் எரிச்சலோடு தான் ஆரம்பித்தேன் ரகுவின் மேல் .ஆனால் அவர் மறுமணம் புரிந்தது ஜானகியின் அன்பு நிர்ப்பந்ததால்தானே என்று மனது ஆறுதல் அடைந்தேன்//

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நோஓஓஓஓஓஓஓஓஒ என்ன இருந்தாலும் மனிவி நல்லபடி இருக்கும்போது இன்னொரு மணம் முடிச்சது தப்புத்தான்.. அஞ்சு ஆஆஆஆஆஆறுதல் எல்லாம் படக்குடாது பொயிங்குங்கோ:)))

      நீக்கு
  23. கமலா ஹரிஹரன் மேடம்... இன்று 5:45 வரை கதை வெளியீகலை. அதற்கு அப்புறம் நேரம் கிடைக்கலை. இப்போதுதான் படிக்க நேர்ந்தது.

    வித்தியாசமான கதை, நன்றாக இருந்தது. ஆனாலும் எனக்கு கதைக் கரு பிடிக்கலை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கு நன்றி. இந்தப் பதிவு எப்போதும் போல் 5.30க்கு வெளி வந்திருக்கிறது. ஆனாலும் படித்து தந்த கருத்துகளுக்கு நன்றிகள். கதையின் கருவில் என் பாணிப்படி கதை கொஞ்சம் நீண்டு விட்டது. இல்லை, கருவிற்கேற்றபடி எனக்கு கதை எழுத தெரியவில்லை என நினைக்கறேன். இனி கவனமாக இருக்க முயற்சிக்கிறேன். தங்கள் திருத்தங்களுக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  24. பதில்கள்
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகையும், கருத்துப்பகிர்வும் கண்டு மிகவும் மன மகிழ்ச்சி அடைந்தேன். கதையை படித்து அருமையான கதை என்று பாராட்டியமைக்கு மிக்க நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  25. இந்தத் தடியன் ரகுவுக்கு என்ன விதமான அன்பு ஜானகியின்மீது இருந்தது? எது அவனை மேகலாவை மணம் செய்துகொள்ள அனுமதித்தது? ஆதரவு இல்லாதவள் என்ற அகம்பாவத்தாலா? ஒரு பெண்மையை மதிக்கிறவன் (ஜானகி மீது அன்பு), இன்னொரு பெண்மையை எப்படி மிதிக்க முடியும்? இவன் ஜானகியை மதித்திருந்தால் மேகலாவை எப்படி மிதிக்க முடியும்? அவள் அனாதரவானவள் என்பதாலா?

    இவன் என்ன மாதிரியான மனிதன்?

    இந்தப் பயலுக்கு புத்திவர இவ்வளவு வருஷம் ஆகி, அவனது வயது கூடிவிட அவனுக்கு குழந்தை கொடுக்கும் பருவம் போய், மேகலாவுக்கு குழந்தையே பிறக்காத நிலை வந்துவிட்டால் இவனது மூடத்தனத்தினால் இரண்டு பெண்களின் வாழ்வைக் கெடுத்தவனாக மாட்டானா?

    இந்த ரகு மோசமான, பெண்களை மதிக்காத மனிதர்களின் உதாரணம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதை நானும் நினைத்தேன். இருவருக்கும் என்ன வயதிருக்கும்
      என்று யோசிக்கையில் கணக்கு எட்டவில்லை.
      ஆனாலும் சகோதரி கமலாவின் எண்ணோட்டம்
      புரிந்தது.
      நன்றாக இருப்பார்கள் என்று நம்புகிறேன்.

      நீக்கு
    2. ஆத்தீ :) இன்னிக்கு நெல்லைத்தமிழன் செம கோபத்தில் இருக்கார் .ரகு மட்டும் நேரில் மாட்டினா காலி தன் போல :))

      நீக்கு
    3. ஆஆஆஆஆஆஆ நெல்லைத்தமிழன் வந்திட்டார்ர் + பொயிங்கிட்டார்ர்ர்ர்ர்ர்:)).. எல்லோருக்கும் எதுக்கு ரகுவில இவ்ளோ பொறாமையாக இருக்குதூஊஊஊஊ?:)).. ஹா ஹா ஹா கதையைப் படிக்காமல் கொமெண்ட்ஸ் ஐ முதலில் படிப்பதிலும் ஒரு சுவாரஷ்யம் இருக்குது அவ்வ்வ்வ்வ்வ்வ்:))...

      நேற்று அதிராவை சே..சே அருந்ததி அதிராவை தாமிரபரணியில் தள்ள நின்றார்ர்:) இன்று ரகு பக்கம் திரும்பிட்டார்ர் அப்பாடா மீ சேவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)) ஹா ஹா ஹா..

      நீக்கு
    4. வணக்கம் நெல்லை தமிழர் சகோதரரே

      கதையை படித்து பயங்கரமாக கோபம் கொண்டு விமர்சனம் செய்ததற்கு நன்றி. ரகு மேகலாவிடம் பாராமுகமாக இருந்தது கண்டு அவளை விட உங்கள் அனைவருக்கும் வந்த கோபத்தை ரசிக்கிறேன். ஹா. ஹா. ஹா.

      /ஆத்தீ :) இன்னிக்கு நெல்லைத்தமிழன் செம கோபத்தில் இருக்கார் .ரகு மட்டும் நேரில் மாட்டினா காலி தன் போல :))/

      நீங்கள் பொங்குவதைக் கண்டு அரிவாளோடு வந்து விடுவீர்கள் என சகோதரி ஏஞசலுக்கு தோன்றுகிறது.

      /இன்று ரகு பக்கம் திரும்பிட்டார்ர் அப்பாடா மீ சேவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்/

      சகோதரி அதிரா நான் தப்பித்தேன் என சந்தோஷமடைகிறார். கதையில் அந்த மோசமான மனிதனாக ரகு படைத்த காரணத்தால் இப்போது நான் மாட்டிக் கொள்வேனோ என எனக்கு பயமாக இருக்கிறது. ஹா. ஹா. ஹா.

      எல்லோரும் பொங்கியதில், மங்கிய என் தூக்கம் மறுபடி தலை தூக்குகிறது. மறுபடி நாளை வருகிறேன். தங்கள் காரசாரமான விமர்சனத்திற்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்

      நீக்கு
    5. வணக்கம் சகோதரி

      /ஆனாலும் சகோதரி கமலாவின் எண்ணோட்டம்
      புரிந்தது.
      நன்றாக இருப்பார்கள் என்று நம்புகிறேன்./

      நன்றி சகோதரி என் உள்ளம் நினைப்பதும் இதுவேதான். தாங்களும் அப்படியேதான் நினைத்துள்ளீர்கள். பகையை மறப்பதற்கும், மன்னிப்பதற்கும் வாய்ப்பளித்த இறைவனுக்கு நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  26. ரகுவின் பாத்திரப் படைப்பு நன்றாக இருந்திருக்கலாம்.

    ஆண்களுக்கு இன்னொரு திருமணம் செய்து வைக்கணும் என்று ஜானகி எண்ணுவதும் அவளின் உலக அறிவு அற்ற தன்மையையும் சுயநலத்தையும் காண்பிக்கிறது.

    மேகலா பொறுமையானவள். அவளை மாதிரிப் பெண்கள் அபூர்வத்திலும் அபூர்வம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரரே

      மேகலாவின் பொறுமையை சிறப்பாக விளக்க யத்தனித்ததில் ஜானகியை சுயநலகாரியாகவும், ரகுவை மோசமான பாத்திரமாகவும், மாற்றி காட்டி விட்டதோ? ஒவ்வொருத்தரின் இயல்பான குணங்களை இன்னமும் விமர்சித்தால், சிறுகதை குறுநாவல் ஆகிவிடும் என்ற பயம் எனக்கு வந்து விட்டது. ஏற்கனவே வருடங்கள் என்ற ரீதியில் மனதுக்குள் வந்த கதை இது. அதனாலும் முன்னுக்குப்பின் முரணாக மனதுக்குள் வந்த கதையின் எழுத்துக்கள் மாறியிருக்கலாம். "என்னவோ கதைதானே இது" என எண்ணாமல் உணர்ச்சுயாய் விமர்சித்த தங்களுக்கு நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  27. மரணப்படுக்கையில் இருக்கும் மனைவியின் வற்புறுத்தலுக்கு இணங்கி, அவள் சொல்கின்ற பெண்ணை மணம் செய்துகொண்டு, பிறகு புதியவளை ஏற்றுக்கொள்ளாமல் ஒதுக்கியே வைக்கும் ஒருவன், மனைவியின் மரணத்திற்குப் பிறகு, ஊர், உறவினர் புதியவளை குற்றவாளியாகப் பார்க்கும் / பேசும் பேச்சுகளைக் கேட்டதால், மனம் மாறி புதியவளை ஏற்றுக்கொள்கிறான் - என்பது கதைச்சுருக்கம் என்று நினைக்கிறேன். முதலில் அவனுடைய மனம் எப்படி இருந்தது, மாறுதல் எதனால் வந்தது ஆகியவற்றை அழுத்தமாகச் சொல்ல விழைந்ததால், கதை நீளமாக அமைந்துவிட்டது என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரரே

      கதையின் கருவை நன்றாக புரிந்து கொண்டு, (என்னை விட) அழகாக விமர்சித்த தங்கள் கருத்துக்களுக்கு மனம் நிறைந்த நன்றிகள்.

      தூரமாக நின்று ரசித்துக் கொண்டிருந்த தங்களை அடி, வெட்டு, குத்து என்ற விமர்சனங்கள் தங்களையும் இந்தப் பதிவுக்கு அழைத்து வந்து விமர்சிக்க வைத்து விட்டது பார்த்தீர்களா? ஹா. ஹா. ஹா. இதைதான் நான் நேரம் காலம் என்று பதிலில் குறிப்பிட்டு வருகிறேன். தங்கள் அருமையான கருத்துக்களை தந்ததற்கு மிக்க நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  28. கதையின் பாத்திரப் படைப்பை விமர்சிப்பதே உங்கள் எழுத்து நடை வெற்றிபெற்றுவிட்டது என அர்த்தம். கதாசிரியரைப் பாராட்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அருமையான கரு. அதை விளக்கமாகச் சொல்லி ஆக வேண்டும்.
      அதற்கு இத்தனை எழுத்துகள் எழுதித்தான் ஆக வேண்டும்.
      மிக அருமையாக எழுதி இருக்கிறீர்கள் கமலா.
      மனம் நிறை வாழ்த்துகள்.

      நீக்கு
    2. வணக்கம் சகோதரரே

      நல்லதொரு வாழ்த்துகளுக்கு நன்றிகள்.
      எப்படியாயினும் முடிவில் கிடைத்த பாராட்டை தலை வணங்கி பணிவுடன் ஏற்றுக் கொள்கிறேன்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    3. வணக்கம் சகோதரி

      மீள் வருகை தந்து கருவுக்கேற்றவாறு கதையும் அமைந்துள்ளது எனக்கூறி என்னை தட்டிக் கொடுத்த பாங்கிற்கும், வாழ்த்துகளுக்கும் என் அன்பான நன்றிகள் சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  29. கெண்டி என்றாலே என் கண் முன்னே அகத்தியர்தான் காலைமையில் இருந்து தெரிகிறார்ர்.. ஆனா பாருங்கோ இங்கு ஆருக்கும் அந்த நினைப்பு இல்லை கர்:)).. இதிலிருந்து தெரிஞ்சுக்கோங்க அதிரா ஒரு சுத்த தமிழ்ப் பண்டிதர் என:)).. அஞ்சு சொல்லிட்டா, என் பங்குக்கு மீயும் சொல்றேன், தலைப்பு மிக அழகு.. கெண்டி சுண்டி இழுக்கிறது:)) ஹா ஹா ஹா.. சரி சரி ஆரும் குறுக்க நிக்காதீங்கோ.. எனக்குப் பயங்கர தல்லையிடி, இருப்பினும் கொமெண்ட்ஸ் போடோணும் கமலாக்காவுக்கு என ஒற்றைக் கண்ணால ரைப்பிங்:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிள்ளையார் காக்கை உருவில் வந்து கவிழ்த்தது அகத்தியரின் கமண்டலத்தை - கெண்டியை அல்ல.

      நீக்கு
    2. ஆவ்வ்வ்வ்வ்வ்வ் அப்போ கெண்டி வேறு கமண்டலம் வேறோ?:)) ஹா ஹா ஹா

      நீக்கு
    3. வணக்கம் அதிரா சகோதரி

      இவ்வளவு தலை நோவிலும் நான் எழுதியதை படித்துப் பார்க்க நட்பிற்கு மரியாதை செய்யும் நிமித்தம் சுக்ராச்சாரியார் பார்வை கொண்டு வந்தமைக்கு என உளங்கனிந்த நன்றிகள் சகோதரி.

      கெண்டி தலைப்பு சுண்டி இழுத்து உங்களை இங்கு கொண்டு வந்ததற்கு மண்டியிட்டு இறைவனை நானும் பணிந்து கொள்கிறேன்.ஹா.ஹா.ஹா.

      அகத்தியர் கையில் வைத்திருப்பது கமண்டலம் என நான் சொல்ல வந்ததை சகோதரர் கௌதமன் அவர்கள் கூறி விட்டார். அவருக்கும், தலையிடியோடு பரவாயில்லை என வந்திருக்கும் தங்களுக்கும் நன்றி. நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  30. //கடந்த ஐந்தாணடு காலமாக ரகுவுக்கும், மேகலாவுக்கும் இடையே அவ்வளவாக பேச்சே கிடையாது. "வெளியுலகத்திற்கு நீயும், நானும் கணவன் மனைவி.. ஆனால் அதை தாண்டி ஒரு பந்தமும் நம்மிடையே என்றுமே கிடையாது" . என ரகு சொல்லியபடி வாழ்ந்து வந்தான். //

    ம்ஹூம்ம்.. அப்போ எதுக்காம் கல்யாணத்துக்கு ஒத்துக் கொண்டார்? முடியவே முடியாது எனச் சொல்ல வேண்டியதுதானே.. அத்தனையும் நடிப்பா?:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அதிரா சகோதரி

      ரகு திருமணத்திற்கு ஒத்துக் கொண்டது தனக்கு ஒரு குழந்தை வேண்டும் என்ற எண்ணத்திற்காகவோ, மேகலாவை பார்த்து ஆசைப்பட்டோ இல்லை. அவன் ஜானகியின் பேச்சை மீறி எதுவும் சொல்ல மனமில்லாதவனாக அங்கு அவனை சித்தரிக்கப் போய், அவன் கெட்டவனாக அங்கு குற்றவாளி கூண்டில் நிற்கலாயிற்று. அதுவும் அவன் விதிதான். நான் என்ன செய்வேன். ஹா. ஹா. ஹா. எப்படியோ "ஒரு கதைதானே" என்ற எண்ணம் போய், நானும் நிறைய இடங்களில் குற்றமுள்ள மனதாக தவிக்கிறேன். தங்கள் கருத்துகள் க்கு மிக்க நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  31. ஆஆஆ படிச்சிட்டேன்ன், எனக்கு உள்ளம் குமுறுகிறது, மனம் துடிக்கிறது.. முதல் கோபம் ஜானகியில்.. 2ம் கோபம் ரகுவில்.. உண்மையில் இந்தப் பெண்கள்தான் பெண்களுக்கு எதிரி.

    பாருங்கோ என்ன நடந்தாலும், வாழ்ந்தாலும் தாழ்ந்தாலும், இந்தச் சமூகம் திட்டுவது பெண்களைத்தான், ஆனா உண்மையில் என்னைப்பொறுத்து தப்பில்லாதவர் மேகலாதான், பாவம்தானே மேகலா, என்ன பாவம் செய்தார், 2ம் தடவையாக ஒருவரை மணந்ததுமில்லாமல், அவரின் அன்பு பாசமும் இல்லாமல், ஒரு மனைவி ஸ்தானமும் இல்லாமல் இப்படி அநியாயமாகக் காலம் ஓடி விட்டதே.. ஓடிய காலத்தை இனி ரகுவால் திருப்பித் தர முடியுமோ...

    ஜானகிக்கு எதுக்கு தேவையில்லாத வேலை, நான் இறந்திட்டால் நீங்க இன்னொரு மணம் செய்யோணும் எனச் சொன்னால்கூடப் பறவாயில்லை, உயிரோடிருக்கும்போதே, இன்னொரு சின்னப் பெண்ணின் வாழ்வை அநியாயமாக்கிட்டா. இப்படி குழந்தைக்காக இன்னொரு மணம் முடிப்பதாயின், எதுக்கு புதுப்பெண் தேவைப்படுகிறது இவர்களுக்கு, இன்னொரு கல்யாணமாகி வாழ்வை இழந்த அல்லது கணவரைப் பிரிந்திருக்கும் ஒரு அபலைப் பெண்ணுக்கு வாழ்வு கொடுத்து, குழந்தையைப் பெறலாமே.

    அவர்களுக்கு ஒரு குழந்தை தேவை என்பதற்காக, ஒரு இளம் பெண்ணின் வாழ்வை நாசமாக்கியாச்சே...

    ரகு மணம் முடிச்சது தப்பு, பின்னர் மனைவி எனும் ஸ்தானம் கொடுக்காமல் இருந்ததும் தப்பு, சரி முடிவில ஏதோ நல்ல அறிவு வந்திருக்கிறது அவருக்கு... இனி மேகலா வயசுக்கு வந்தென்ன வராட்டில் என்ன?:)) ஹா ஹா ஹா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஆ !!!! :))) சிங்கம் களம் இறங்கிருச்சி டோய் :))))))))வாங்க தலைவி வாங்க அப்டியே உங்க வெப்பன்ஸ் எல்லாம் எடுத்துட்டு வாங்க போட்டு தள்ளிறலாம் ரகு மாதிரி ஆண்களை :)

      நீக்கு
    2. ஆஆஆஆஆ அஞ்சு தொம் தொம் என நிறையப் பேர் ஓடும் சத்தம் கேய்க்குதே எனக்கு:)... ஆயுதத்தைத் தூக்க முன்னமே ஓடுகினம் ஹா ஹா ஹா:)..

      நீக்கு
    3. வணக்கம் அதிரா சகோதரி

      தங்களின் அருமையான கருத்துகளுக்கு மிக்க நன்றி.

      /இந்தப் பெண்கள்தான் பெண்களுக்கு எதிரி./

      உண்மை.. ஒத்துக் கொள்கிறேன். இரு பெண் மனங்கள் என்றுமே கூடி இருந்ததாக (சகோதரிகளாக இருப்பினும்) கிடையாது. ஒருவருக்கொருவர் ஏற்ற தாழ்வுகளை விரல் மடிக்காமல் கணக்கிடும் மனம்.அது இறைவன் கொடுத்த வாரமும் கூட...அதனால்தான் பெண்களின் சிறப்பும், செல்வாக்கும் என்றுமே நிலைத்து நிற்கிறது. ஒவ்வொரு ஆணின் வாழ்க்கைக்கும் அவளறியாமலே அம்மா ஸ்தானத்திலிருந்து.படிப்படியாக மனைவி, மகள், பேத்தி என வழிவகுத்து கொண்டே முன் செல்பவள் பெண்கள்தான். அந்த வகையினால்தான் ஒரு பெண் மற்ற பெண்களுக்கு எதிரியாக தெரிகிறார்.

      இங்கு உண்மையிலேயே தன் கணவன் மனம் மாறி மேகலாவை ஏற்றுக் கொண்டு தன் ஆசைப்படி ஒரு குழந்தையை கொடுப்பான் என நினைத்துதான் ஜானகி அவனுக்கு மேகலாவை மணம் முடித்து வைக்கிறாள். மேகலாவின் அன்பும், பண்பும் அவளை இந்த முடிவுக்கு வரவைக்கிறது. ரகுவும் தன் மனைவியிடத்தில் வேறு ஒருவரை கனவிலும் ஏற்றுக்கொள்ளாத மனப்பக்குவம் வாய்ந்தவன். தன் மனைவிக்காக ஒத்துக் கொள்கிறானே தவிர்த்து, அவன் மேகலாவின் மேல் ஆசைப்படவில்லை.மேகலாவும் இதையெல்லாம் புரிந்து கொண்டவளாய், ஜானகியின் மேல் உயிராக இருந்துதான் அவளை பார்த்துக் கொள்கிறான். மூவரின் மன நிலையை நான் விவரிக்க ஆரம்பித்தால், கதை நாவலாக விடுமே என்பதை நானும் உணர்ந்தேன். ஹா. ஹா. ஹா. அதனால்தான் சிறு குழப்பங்கள்.

      /இனி மேகலா வயசுக்கு வந்தென்ன வராட்டில் என்ன/

      ஆகா.. இது ஒரு குழப்பமா? இது எங்கிருந்து வந்தது என எனக்கே தெரியவில்லை ஹா. ஹா. ஹா.

      இந்த கதைக்கு வந்து விமர்சித்த அனைவருக்கும் மீ்ண்டும் என நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    4. ஃபோன் ஒத்துழைக்காமல் சிறுசிறு பிழைகள். "வரம்" .. "வாரமாக"வந்து விட்டது. "அவளை பார்த்துக் கொள்கிறாள்" என்ற இடத்தில் "கொள்கிறான்" என வந்து விட்டது. பொறுத்துக் கொண்டு படிக்கவும்.

      நீக்கு
  32. கமலா மிக அழகாகக் கதை படைக்கும் திறமை படைத்தவர் என்பது இந்தக் கதையில் இருந்து மேலும் நிரூபணம் ஆகிவிட்டது. அழகான கதைக்கருவை மிக அழகாயும் திறமையாகவும் கையாண்டிருக்கிறீர்கள் கமலா. வாழ்த்துகள். தொடர்ந்து மேலும் எழுதுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகை என்னை மிகவும் மகிழ்ச்சியடைய வைக்கிறது. நேற்றே உங்களை காணவில்லையே என நினைத்தேன். இன்று காலை எ. பியில் பார்த்ததும் சந்தோஷமாக இருந்தது.

      கதையைப் பற்றிய தங்கள் கருத்துக்களுக்கும், பாராட்டிற்கும் மிகுந்த மகிழ்ச்சி சகோதரி. ஒவ்வொருவர் பார்வையில் கதை வேறுபடுவது கண்டு மனம் மகிழ்கிறேன். உங்கள் அனைவரின் ஊக்கங்களும் என்னை நிறைய எழுத வைக்கும் என்ற நம்பிக்கை வருகிறது. உங்கள் அன்பான வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  33. சில உடல்நலக் குறைவுகளால் இந்தக் கதையை வாசித்து வெளிவந்த அன்றே பின்னூட்டமிட முடியவில்லை. ஆனால் மனசில் சகோதரியின் இந்தக் கதையை வாசித்துக் கருத்து சொல்ல வேண்டும் என்ற எண்ணம் இருந்து கொண்டே இருந்தது. இன்று தான் கதையை வாசித்தேன். தாமதமான பின்னூட்டத்திற்குப் பொறுத்துக் கொள்ள வேண்டுகிறேன்.

    சகோதரி கமலா அவர்களின் அழகான கட்டுக் கோப்பான கதை. கதையைச் சொன்ன விதத்தில் பாராட்ட வேண்டிய அம்சங்கள் நிறைய இருக்கின்றன. இருப்பினும் அவற்றைத் தாண்டி மாறுபட்ட கோணத்தில் இந்தக் கதையைப் பார்க்க வேண்டும் என்று என்னுள் விளைந்த எண்ணத்தில் இதைச் சொல்லத் தோன்றியதாக எடுத்துக் கொள்ள வேண்டுகிறேன்.

    அன்புக்கு என்றைக்குமே ஆக்கிரமிப்பு உணர்வு உண்டு. கணவன் - மனைவி என்று பரஸ்பரம் இருவரிடமும் இயல்பாகவே இருக்கும் உணர்வு அது. ஆனால் அந்த இருவரையும் தாண்டி தங்களை அண்டிவந்த ஒரு பெண்ணினிடம் தங்களின் சொந்த நலனுக்காக இதே ஆக்கிரமிப்பு உணர்வு பாயும் போது என்னவெல்லாம் நிகழும் என்று சொல்ல வந்த கதையாக எனக்குத் தோன்றியது.

    அந்த கணவன்-மனைவி இருவர்கள் தங்களின் ஆசைக்கு அண்டி வந்த அந்தப் பெண்ணை பலிகடா ஆக்கும் பொழுது அந்த பெண்ணின் நல்ல உள்ளம் தான் இந்த தம்பதிகளின் மேல் ஆத்திரப்படாமல் நம்மை வைத்தது. அதற்கேற்ற மாதிரி பாங்காக, பதவிசாக, பண்பாக,
    தியாகியாக அந்தப் பெண்ணைப் படைத்து கதையில் உலவ விட்ட கதாசிரியருக்கு பாராட்டுகள். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரரே

      நான் எழுதிய இந்த கதைக்கு விமர்சித்த தங்கள் வருகை இன்றுதான் அறிந்தேன். மிகவும் அழகீக கதையின் கருவை மாறுபட்ட கோணத்தில் ஆராய்ந்து கருத்துக்கள் தந்துள்ளீர்கள்.

      நான் இந்த கதையில் வரும் ஒவ்வொரு படைப்பின் குணாதிசயங்களை விஸ்தரித்து கூற வேண்டும் என்றுதான் ஆசைப்பட்டேன். அதுவும் மேகலாவின் பாத்திரத்தை விரிவாக எழுதவும் நினைத்தேன். ஆனால், கதையின் நீளம் அதிகமாகி விட்டால் பொருத்தமான தலைப்புடைய இதை எங்கள் ப்ளாக் கே. வா. போ வுக்கு அனுப்ப இயலாமல் போய் விடுமோ என்ற எண்ணத்தில். ஒவ்வொருவரின் மனப்பான்மையை விவரித்து எழுதும் முடிவை கை விட்டேன். மேகலாவின் உயர்ந்த பண்புகளை அப்படி எழுதாமல் விட்டது ரகுவையும், ஜானகியையும் சற்று சுயநலகாரர்களாய் காட்டி விட்டது. ஆனால் நீங்கள் அதை புரிந்து கொண்டு விமர்சித்த பாணிக்கு தலை வணங்குகிறேன். உங்களைப் போன்ற சிறந்த எழுத்தாளர் என் கதைக்கு வந்து விமர்சனம் செய்து என்னை வாழ்த்தி பாராட்டியது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது. மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!