வெள்ளி, 21 பிப்ரவரி, 2020

வெள்ளி வீடியோ : சாமத்தில் பாடறேன் தனியா... ராகத்தில் சேரணும் துணையா

1992 இல் வெளியான சின்னத்தாயி படத்திலிருந்து ஒரு பாடலை அதிரா நேயர் விருப்பமாகக் கேட்டிருக்கிறார்.  

வாலியின் பாடல்களுக்கு இளையராஜா இசை.  'கோட்டையை விட்டு வேட்டைக்குப் போகும் சுடலைமாடசாமி...' என்ற பாடலும் இதில் ஃபேமஸ்.   இன்னும் இரண்டு எஸ் பி பி பாடல்கள் இருப்பதாக தகவல் சொல்கிறது.   எனக்கு கேட்ட நினைவில்லை.  நானும் இந்தப் பாடல்கள் மட்டுமே கேட்டிருக்கிறேன்.



விக்னேஷும் பத்மஸ்ரீ என்பவரும் முக்கியப்பாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.  வினு சக்கரவர்த்தி, நெப்போலியன், ராதாரவி போன்றோர் உண்டு படத்தில்!  எஸ் கணேசராஜா என்பவர் இயக்கம்.



நான் ஏரிக்கரை மேலிருந்து எட்டு திசை பார்த்திருந்தேன் 

நான் ஏரிக்கரை மேலிருந்து எட்டுத் திசை பார்த்திருந்து
 ஏந்திழைக்குக் காத்திருந்தேன் காணலே 
மணி ஏழு எட்டு ஆன பின்னும் ஊரடங்கி போன பின்னும் 
சோறு தண்ணி வேணுமுன்னு தோணலே 
என் தெம்மாங்கு பாட்ட கேட்டு தென்காத்து ஓடி வந்து 
தூதாக போக வேணும் அக்கரையிலே 
நான் உண்டான ஆசைகளை உள்ளாற பூட்டி வச்சே 
ஒத்தையிலே வாடுறேனே இக்கரையிலே   

நான் மாமரத்தின் கீழிருந்து 
முன்னும் பின்னும் பார்த்திருந்து  
மாமனுக்கு காத்திருந்தேன் காணலே  
அட சாயங்காலம் ஆன பின்னும் 
சந்தை மூடி போன பின்னும்  
வீடு போயி சேர்ந்திடத்தான் தோணலே 

 என் தெம்மாங்கு பாட்ட கேட்டு தென்காத்து ஓடி வந்து 
தூதாக‌ போக வேணும் அக்கரையிலே 
நான் உண்டான ஆசைகள உள்ளாற பூட்டி வச்சே 
திண்டாடி நிக்கிறேனே இக்கரையிலே  

நான் ஏரிக்கரை மேலிருந்து 
எட்டுத் திசை பார்த்திருந்து  
ஏந்திழைக்குக் காத்திருந்தேன் காணலே  
மணி ஏழு எட்டு ஆன பின்னும் 
ஊரடங்கி போன பின்னும்  
சோறு தண்ணி வேணுமுன்னு தோணலே  

தூரக் கிழக்கு கரை ஓரந்தான் 
தாழப் பறந்து வரும் மேகந்தான் 
உன்கிட்ட சேராதோ என் பாட்ட கூறாதோ 
ஒண்ணாக நாம் கூடும் சந்தர்ப்பம் வாராதோ  
உன் கூட நானும் சேர ஒத்த காலில் நின்னேனே 
செந்நாரை கூட்டத்தோடு சேதி ஒண்ணு சொன்னேனே  

கண்ணாலம் காட்சி எப்போது எந்நாளும் என் நேசம் தப்பாது  

நான் மா மரத்தின் கீழிருந்து 
முன்னும் பின்னும் பார்த்திருந்து 
மாமனுக்கு காத்திருந்தேன் காணலே  

மணி ஏழு எட்டு ஆன பின்னும் 
ஊரடங்கிபோன பின்னும் 
சோறு தண்ணி வேணுமின்னு தோணலே  

மாமன் நெனப்பில் சின்னத் தாயிதான் 
மாசக் கணக்கில் கொண்ட நோயிதான் 
மச்சான் கை பட்டாக்கா மூச்சூடும் தீராதோ 
அக்காளின் பொண்ணுக்கோர் பொற்காலம் வாராதோ  
கையேந்தும் ஆட்டு குட்டி கன்னிப் பொண்ணா மாறதோ 
மையேந்தும் கண்ணை காட்டி மையல் தீரபேசாதோ  
உன்னாலே தூக்கம் போயாச்சி உள்ளார ஏதேதோ ஆயாச்சு  

நான் ஏரிக்கரை மேலிருந்து எட்டு திசைபார்த்திருந்து 
ஏந்திழைக்கு காத்திருந்தேன் காணலே 
மணி ஏழு எட்டு ஆன பின்னும் 
ஊரடங்கிபோன பின்னும் 
சோறு தண்ணி வேணுமின்னு தோணலே  
என் தெம்மாங்கு பாட்ட கேட்டு 
தென்காத்து ஓடிவந்து 
தூதாக போக வேணும் அக்கரையிலே 
நான் உண்டான ஆசைகளை 
உள்ளார பூட்டிவச்சு திண்டாடி நிக்கிறேனே இக்கரையிலே  
நான் ஏரிக்கரை மேலிருந்து எட்டு திசைபார்த்திருந்து 
ஏந்திழைக்கு காத்திருந்தேன் காணலே  
அட சாயங்காலம் ஆன பின்னும் 
சந்தை மூடிபோன பின்னும் 
வீடு போய் சேர்ந்திடத்தான தோணலே

========================================================================================


இனி என் விருப்பம்...


சின்னத்தாயி படம் வெளியான பத்து வருடங்களுக்கு  முன்னால், அதாவது 1982 இல் வெளியான 'தூறல் நின்னுபோச்சு' படத்திலிருந்து யேசுதாஸ் குரலில், இளையராஜா இசையில் பாடல்.  படத்தில் ஐந்து பாடல்கள்.  ஒவ்வொரு பாடலையும் ஒவ்வொருவர் எழுதி இருக்க, இந்தப் பாடலை எழுதி இருப்பவர் சிதம்பரநாதன்.

பாக்யராஜ், சுலக்ஷணா  நாயக நாயகியாய் நடித்திருக்கும் படம்.  இந்தப் பாடல் காட்சியில் நம்பியாருக்குதான் பெருமளவு வாய்ப்பு. 



இந்தப்படம் பின்னர் தெலுங்கில், ஹிந்தியில், கன்னடத்தில் என்றெல்லாம் எடுக்கப்பட்டது.

எம் என் நம்பியாருக்கு இந்தப் படத்தில் வித்தியாசமான கதாபாத்திரம்.

ரொம்ப ரொமான்டிக்கான பாடல்.  யேசுதாஸ் குரலின் இனிமை இந்தப் பாடலிலும் தெரியும். இதுவும் ஏரிக்கரைப் பாடல்தான்!  பாடல் ரொம்ப இனிமை ஆகிவிட்ட படியால் இறுதி வரிகள் திருஷ்டிப்பரிகாரம்!



பாடலின் ஆரம்பத்தில் யேசுதாஸ் குரலிலிருக்கும் அந்த அந்தப் பரவசம்.....  ஒரு கிராமத்துப் பாடல் பாணியில் அமைந்ததுதான் இந்தப் பாடலும் 

ஏரிக்கரைப் பூங்காற்றே 
நீ போற வழி தென்கிழக்கோ 
தென்கிழக்கு வாசமல்லி 
என்னைத் தேடிவர தூது சொல்லு 

பாதமலர் நோகுமுன்னு நடக்கும் 
பாதைவழி பூ விரிச்சேன் மயிலே 
பாதமலர் நோகுமுன்னு நடக்கும் 
பாதைவழி பூவிரிச்சேன்   மயிலே
ஓடம்போல் ஆடுதே மனசு 
கூடித்தான் போனதே வயசு..
காலத்தின் கோலத்தால் நெஞ்சம் வாடுது 
அந்தப் பொன்னான நினைவுகள் 
கண்ணீரில் கரையுது 

ஓடிச்செல்லும் வான்மேகம் நிலவை 
மூடிக்கொள்ளப் பார்க்குதடி  அடியே 
ஓடிச்செல்லும் வான்மேகம் நிலவை 
மூடிக்கொள்ளப் பார்க்குதடி அடியே 
சாமத்தில் பாடறேன் தனியா 
ராகத்தில் சேரணும் துணையா 
நேரங்கள் கூடினால் மாலைசூட்டுவேன் 
அந்த ராசாங்கம் வரும்வரை 
ரோசாவே காத்திரு 







102 கருத்துகள்:

  1. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். தூறல் நின்னு போச்சு படம் மதுரையில் கல்பனா தியேட்டரில் அல்லது நியூ சினிமா? பார்த்தேன். என் பெரியம்மாவும் அண்ணாவும் அங்கே வெங்குடுசாமி நாயுடு அக்ரஹாரத்தில் இருந்தாங்க. அங்கே அடிக்கடி போவேன். அப்போ ஒரு தரம் இந்தப் படத்தை இரவுக்காட்சியாகப் பார்த்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா அக்கா... வணக்கம். தஞ்சையிலிருந்து நான் மதுரை வத்த புதுசு!

      நீக்கு
    2. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்.... மதுரை ஆசியாவின் மிகப்பெரிய தங்கம் தியேட்டரில் ஓடியது என்றும் அவ்வளவு பெரிய தியேட்டரில் நூறு நாட்களைக் கடந்து சாதனை படைத்தது என்றும் அந்தத் தியேட்டரில் நான் சுதா (பரதநாட்டியம், கால் ஊனம்) படம் பார்த்தபோது சொன்னார்களே

      நீக்கு
    3. ஆமாம்... தங்கம் தியேட்டர் பெரிசுதான்.. ஆனால் இந்தப் படம் அங்குதான் திரையிடப் பட்டதா என்று நினைவில்லை.

      நீக்கு
    4. தங்கம் தியேட்டரில் டார்லிங், டார்லிங், டார்லிங் பார்த்த நினைவு. இந்தப் படமா? இருக்கும். எத்தனை வருஷங்கள் ஆகிவிட்டன? படம் பார்த்தது நினைவிலே இருக்கே! அதுவே எரிய விஷயம்! தங்கம் தியேட்டர் அதிபர் கண்ணாயிரம் அப்பாவின் மாணவர். எல்லாப் படங்களுக்கும் குடும்பப் பாஸ் வந்துடும்.

      நீக்கு
    5. தங்கம் தியேட்டரில் தி ஸ்பை ஹூ லவ்ட் மீ பார்த்தேன். சில அமிதாப் படங்கள் பார்த்தேன். அதுதான் நினைவில் உள்ளது.

      நீக்கு
    6. //கர்ர்ர்ர்ர்ர்ர்ர்.... மதுரை ஆசியாவின் மிகப்பெரிய தங்கம் தியேட்டரில் ஓடியது என்றும் அவ்வளவு பெரிய தியேட்டரில் நூறு நாட்களைக் கடந்து சாதனை படைத்தது என்றும்// இதை நானும் கேள்வி பட்டிருக்கிறேன்.

      நீக்கு
  2. முந்தைய பதிவைப் பார்த்துக் கொண்டிருந்ததில் இது வந்ததே தெரியலை. திடீர்னு பார்த்தால் புதிய இடுகைனு வருது.

    பதிலளிநீக்கு
  3. பாக்யராஜ் தம்மை எப்போவுமே அப்பாவியாகக் காட்டிக் கொள்ளுவார். ஹிந்தியில் ராஜ்கபூரும், தமிழில் எம்ஜாரும் கடைப்பிடித்த உத்தி! அதிலும் "டார்லிங், டார்லிங், டார்லிங்" படத்தில் பூர்ணிமாவுடன் ஜோடியாக நடிக்கையில் இது நன்றாகவே தெரியும். அதுக்கப்புறமாத் தான் அவங்க கல்யாணம் வெகு விமரிசையாக நடந்ததுனு நினைக்கிறேன். இந்தப் படம் வந்தப்போ வீடு கட்டிக்கொண்டிருந்தோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு மிகவும் பிடித்த திரைக்கதை வசனகர்த்தா இயக்குநர் பாக்யராஜ்.

      நீக்கு
  4. பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம் பிற செய்யாமை செய்யாமை நன்று..

    வாழ்க நலம்...

    பதிலளிநீக்கு
  5. மிகவும் இனிய பாடல்கள்..
    இரண்டுமே மனம் கவர்ந்தவை...

    இருப்பினும் அடிக்கடி கேட்கும் பாடல் -

    நான் ஏரிக்கரை மேலிருந்து...

    பதிலளிநீக்கு
  6. அனைவருக்கும், குறிப்பா கீசா மேடத்திற்கு காலை வணக்கங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நெல்லை... காலை வணக்கம்.

      நீக்கு
    2. எனக்கு இப்போத் தான் காலை. காலை/மாலை வணக்கம் நெல்லையாரே! :P

      நீக்கு
  7. இன்றைய இரண்டு பாடல்களுமே சூப்பர் செலெக்‌ஷன்.

    இரண்டையும் ரசித்துக் கேட்டிருக்கிறேன். நல்ல பகிர்வு

    பதிலளிநீக்கு
  8. இரண்டுமே கேட்ட இனிமையான பாடல்களே...

    "சின்னத்தாயி" இளையராஜாவின் தாயார் பெயர் குடும்பத்தை விளம்பரப்படுத்துவதற்காக வைத்த பெயர் (அல்லது இ.ராவை காக்க பிடிப்பதற்காக வைத்த பெயர்)

    ம்... என்ன செய்வது ? செங்கோல் அவர்களது கையில்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கில்லர் ஜி... ஏற்கெனவே பொண்ணு ஊருக்கு புதுசு படப் பாடலிலும் இளையராஜா அம்மா பெயர் வரும்! நன்றி.

      நீக்கு
    2. ஓரம்போ... சின்னத்தாயி பெத்த மகன் பிச்சமுத்து

      சின்னத்தாயவள் தந்த ராசாவே முள்ளில்

      ராஜா கையை வச்சா அது ராங்கா போனதில்லை

      ராகதேவன், இசைஞானி, இசை பிரம்மா, இசைக்கடவுள் - திரையிலகில் ஜால்ரா கோஷ்டி மிக அதிகம்

      நீக்கு
    3. எம் எஸ்வி, கேவிஎம் போன்றோருக்கெல்லாம் இப்படி இல்லை என்று நினைக்கிறேன்.

      நீக்கு
  9. முதல் பாடல் வாய்விட்டு பாடத் தோன்றும் இனிமை ...

    இரண்டாவது பாடல் மனதிற்குள் பாடும் இனிமை...

    இரண்டுமே ரசிக்கும் இனிமையான பாடல்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதெப்படி DD அந்தப் பாடலை மனதுக்குள் பாடுவீர்கள்?!! வாய்விட்டே பாடலாமே..

      நீக்கு
    2. // அச்சம் என்பது மடமையடா // புதிய முயற்சி செய்யும் போது...!
      // பழமுதிர்ச் சோலை எனக்காகத்தான் // மனம் துள்ளும் போது...!
      இப்படி பல பாடல்கள் வாய்விட்டே பாடுவேன்...

      // உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா // மனதை அமைதிப்படுத்த...!
      // மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா // அதே அதே...!
      இப்படி பல பாடல்கள் மனம் பாடும்...

      அந்தந்த சூழ்நிலைக்கேற்ப...
      பாடல்கள் பலவகை உண்டு...
      பாடும் மனநிலையும் பல உண்டு...
      (இப்போதைக்கு கணினியின் விசைப்பலகையை தொட்டால், எழுதிக் கொண்டிருக்கும் 50 குறள்களுக்கு, எந்த பாடல் பொருத்தமாக / சரியாக இருக்கும் என்கிற சிந்தனையே...)

      என்னைப்பொறுத்தவரை - அனைத்திற்கும் பாட்டு உண்டு...

      நீக்கு
  10. ஓம் நம சிவாய!அனைவருக்கும் காலை வணக்கம்.

    பதிலளிநீக்கு
  11. தங்கம் தியேட்டர் இன்னும் தியேட்டராகவே இருக்கிறதா? திருச்சியில் இருந்த பெரிய தியேட்டரான கலையரங்கம்(தியாகராஜ பாகவதர் மன்றம்) கல்யாண மண்டபமாக மாற்றப்பட்டு விட்டது என்று கேள்விப் பட்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கம் தியேட்டர் இப்போது இல்லை. சும்மா மூடித்தான் கிடக்கிறது என்று கேள்வி.

      நீக்கு
    2. தங்கம் தியேட்டர் இப்போது இல்லை துணிக்கடை, நகைகடை வந்து விட்டது.

      நீக்கு
    3. ஓ... முன்னர் சும்மாவே இருந்தது. அதன் பின்கேட் அருகே நாங்கள் குடியிருந்த வீடு இருந்தது.

      நீக்கு
    4. தங்கம் தியேட்டர் பின் வாசல் அருகே தான் காக்காத் தோப்புத் தெருவில் என் அப்பாவின் சித்தி வீடு இருந்தது. அடிக்கடி வருவோம். அங்கே சம்பந்தமூர்த்தித் தெருவுக்குப் போகும் குறுக்குச் சந்து அருகே ஓர் வக்கீல் வீட்டில் ஸ்ரீவாஞ்சியம் அவர்கள் அடிக்கடி வந்து அஷ்டபதி அபிநயங்களோடு ப்ரவசனம் செய்வார். அதுக்கும் அடிக்கடி போயிருக்கோம்.

      நீக்கு
  12. இரண்டு பாடல்களும் இனிமையானவை. ஏரிக்கரை என்று துவங்கும் பாடல்கள் என்றால் முதலில் நினைவுக்கு வருவது "ஏரிக்கரை மேலே போறவளே பொன் மயிலே..."பாடல்தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதனால்தான் அதைவிட்டு இதைப் பகிர்ந்தேன். ஹி... ஹி.... ஹி....!

      நீக்கு
    2. @பா.வெ மேடம்... ஏரிக்கரையின் மேலே போறவளே.. அப்போதான் சந்தம் சரியா வரும். ஆனா ஏரிக்கரை என்றதும் இந்தப் பாட்டு நினைவுக்கு வந்தா 60+ என்றும், ஏரிக்கரைப் பூங்காற்றே நினைவுக்கு வந்தால் 50+ என்றும் நான் ஏரிக்கரை மேலிருந்து நினைவுக்கு வந்தால் 40+ என்றும் வயதை அனுமானிக்கலாம்.

      நீக்கு
    3. பானு, கரெக்டாக சொன்னீர்கள். //ஏரிக்கரை மேலே போறவளே பொன் மயிலே//. நாமே அங்கே போகும் பெண்ணை பார்த்து பாடலாம் என்று தோன்றும் பாட்டு. இன்று இரண்டாவது பாட்டு என்றும் நினைவில் நிற்கும் ஒன்று. அதற்கு முக்கிய காரணம் அது படம் பிடிக்கப் பட்ட விதம் என்று எனக்கு தோன்றும். யேசுதாஸ் குரலும் இளையராஜா இசையும் சேர்ந்து யாவரையும் ஒரு கலக்கு கலக்கும் விந்தை.

      நீக்கு
    4. ஹா ஹா ஹா

      அப்போ சுவீட் 16 எனில் எந்தப்பாட்டைப் பாடோணும் நெ தமிழன்:)?

      நீக்கு
    5. அதிரா... உங்களுக்கு ஞாபகம் வரவேண்டிய ஒரே பாடல்

      அம்மா இங்கே வா வா
      ஆசை முத்தம் தா தா
      இலையில் சோறு போட்டு
      ஈயைத் தூர ஓட்டு.....

      என்ற பாடல்தான்.... இதை உங்களுக்கு சிமியோன் டீச்சர் சொல்லிக் கொடுத்திருக்காங்களா?

      நீக்கு
  13. பகிர்ந்த பாடல்கள் இரண்டும் இனிமையான பாடல்கள்.
    கேட்டு மகிழ்ந்தேன்.

    பதிலளிநீக்கு
  14. இரண்டுமே அழகான. இனிமையான பாடல்கள். இரண்டாம் பாட்டின் மேல் மோகம் அதிகம். நம்பியாரைப் பிடிக்கும் . கடைசியில் இருமும் போது கஷ்டமாக இருக்கும். சின்னத்தாயி படம். பார்ககவில்லை.
    கொடுத்திருக்கும் பாட்டு அருமை் அதிராவுக்கும் உங்களுக்கும் நன்றி. கோட்டைய விட்டு வேட்டைக்குப் போகும். இன்னும் நிறையப் பிடிக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வல்லிம்மா... நானும் சின்னத்தாயி படம் பார்த்ததில்லை. பாடல் இனிமை.

      நீக்கு
  15. தங்கம் தியேட்டரில் இரும்புத் திரையும் ,வஞ்சிக் கோட்டை வாலிபனும் பார்த்திருக்கிறேன். எத்தனை பெரிய தியேட்டர்!

    பதிலளிநீக்கு
  16. பதில்கள்
    1. நாம போய் சுண்டல் அவிக்க முடியுதா...ன்னு பார்ப்போம்!...

      நீக்கு
    2. சுண்டலா? கோட்டையை விட்டு வேட்டைக்குப் போவதாலா?!!

      நீக்கு
    3. இன்னைக்கு ஏரிக்கரை குளத்தங்கரை ஆத்தங்கரை...ந்னு கருத்துக்கள் எல்லம் ஏகதேசமாக இருக்கும்...

      இதுக்கிடையில நமக்கு என்ன வேலை.. ந்னு தான்!...

      நீக்கு
  17. ஆஆஆஆஆஆஆஆஆ அஞ்சூஊஊஊஊஊ ஓடிவாங்கோஓஒ..... அதிராவின் நேயர் விருப்பப் பாடல் வெளிவந்திருக்குதூஊஊஉ அதுவும் பிங் கலரில, இனியும் நித்திரை கொண்டால் தேம்ஸ்ல தள்ளிடுவேன்ன் கர்ர்ர்ர்:))...
    ஆஆஆஆஆஆஆஆ... எங்கள் புளொக் வாழ்க்கை வரலாற்றில் இம்முறைதான் கேட்டதும்/போட்டதும் கிடைச்சிருக்குதூஊஊஊ ஹா ஹா ஹா நான் நினைச்சேன் இன்னும் பல நாட்களாகுமென:))...

    என் காசி ட்றிப்பைக்கூடக் கான்சல் பண்ணிட்டேன்ன்ன்ன்ன்:)).. மீ ஃபெயிண்ட்டாகிறேன்ன்ன்ன் எனக்கு ஆராவது சுட்டாறின தண்ணி தெளிச்சு எழுப்புங்கோ:)).. ஹா ஹா ஹா நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுவீட் 16? முன்னரே அதே எண்தானே இருந்தது? மாறாதோ?

      பழைய நேயர் விருப்ப லிஸ்ட் தொலைந்து விட்டதால் இது உடனே வந்து விட்டது!

      நீக்கு
    2. ஹா ஹா ஹா அப்பூடியே சில சமையல் குறிப்புக்களையும் தொலைத்து விடுங்கோ:)...

      நீக்கு
    3. அதிராவைத்தான் கேய்வி மேல கேய்ள்வி கேக்கிறீங்க:)... மார்க்கண்டேயரை எல்லாம் கேட்கமாட்டேன் என்கிறீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்:)

      நீக்கு
    4. ஹா... ஹா... ஹா..்். கண்ணில் படறவர் கிட்டதானே கேட்க முடியும்?!!

      நீக்கு
  18. நெல்லைத்தமிழனுக்கும் இது மிகப் பிடிச்ச பாடல் என அன்று சொன்னதை நான் ஓரக்கண்ணால வாசிச்சிட்டேன்ன்ன்ன்:)).. இன்று ஜொள்ளாமல் இருக்கிறார் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். அவரும் இந்தப் பாடலை ரிப்பீட் மோடில் கேட்பேன் என்று சொல்லி இருந்தார்.

      நீக்கு
  19. ஓ படப்பெயர் சின்னத்தாயி ஆ... பார்க்கோணும், கோட்டையை விட்டு.. பாட்டும் கேட்டிருக்கிறேன் எல்லாம் ரேடியோவின் புண்ணியம்தான், ரேடியோவினாலதான் அதிகம் கேட்டிராத பாட்டுக்கள் கேட்டு பின் யூ ரியூப்பில் தேடிப் பார்ப்பேன்.

    ஸ்ரீராமின் விருப்பப் பாடல்.. ஏரிக்கரைப் பூங்காற்றே.. அதுவும் சூப்பர்... பல தடவை கேட்டாச்சு.. இன்று இரு பாடல்களும்... ஒரே வித மனநிலையைக் கொண்டு வரும் பாட்டுக்கள்... இபாடலின் ஹீரோ பாக்கி அங்கிளோ அவ்வ்வ்வ்வ்.. பார்ப்பதற்கு நிறையப் படங்கள் இருக்குது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிலோன் ரேடியோதான் புண்ணியம் கட்டிக் கொண்டது. எவ்வளவு நல்ல பாடல்களை கேட்கக் கொடுத்தது....

      நீக்கு
    2. இப்போ அப்படி இலங்கை வானொலி இருக்குதோ ஶ்ரீராம்?
      இப்போ எல்லாம் இண்டநெட் ரேடியோக்கள்தானே...

      நீக்கு
    3. இப்பல்லாம் நாம ரேடியோ பக்கமே போறதில்லை, நினைக்கறதும் இலல்லை... இல்லையா!

      நீக்கு
  20. ராத்திரி.. சிவ ராத்திரி.. அனைவரும் முழிப்பிருக்கோணும் இன்று:)..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தப் பாடலை பாடிக் கொண்டா ? (விடிஞ்சுடும்.. ஹா. ஹா. ஹா.) இது மை. ம. கா ராஜன் பட பாடல் என நினைக்கிறேன்.

      நீக்கு
    2. அட ஆண்டவா... சிவராத்திரி அன்று குழந்தைக்குத்தான் அந்தப் பாடல் நினைவுக்கு வந்தால் பெரியவர்களுக்குமா? ஹையோ ஹையோ

      நீக்கு
    3. அவ்வ்வ்வ் :) இங்கே எங்க தலைவி எதுவும்  விளங்காம பாடலை சொல்லிட்டார் :) நானே இப்போதான் ரைட் க்ளிக்கி ஸ்டில்லை பார்த்து அலறி ஓடிவாறேன் 

      நீக்கு
  21. வணக்கம் சகோதரரே

    இன்றைய பாடல்கள் இரண்டும் நன்றாக உள்ளது. முதல் பாட்டு அவ்வளவாக நான் கேட்டதில்லை. இரண்டாவது படத்துடன் பார்த்து, கேட்டு ரசித்திருக்கிறேன். இப்போது இரண்டும் கேட்டு ரசித்தேன்.

    முதல் படத்தில் வினுசக்ரவர்த்தி ஆடலுடன் "கோட்டைக்குப் போகும்" பாடல் நன்றாக இருக்கும் அதை பார்த்திருக்கிறேன். அந்த பாடலும் தாங்கள் கூறுவது போல் நல்ல பிரசித்தம்.

    எனக்கும் "ஏரிக்கரையின் மேலே" அந்த பாட்டுதான் முதலில் நினைவுக்கு வந்தது. அதுவும் அப்போது மிக பிரசித்தம்.

    ஆனாலும் அந்தந்த பாட்டுக்கென்று பாட்டை நினைக்கும் அனைவருக்கும் ஒரு வயதை நிர்ணயித்த சகோதரர் நெல்லைத் தமிழர் அவர்களை பாராட்ட ஏகப்பட்ட
    சொற்கள் இருந்தும் வார்த்தைகளின்றி தவிக்கிறேன். ஹா. ஹா. ஹா.

    "சொல்லத்தான் நினைக்கிறேன்.. சொல்லத்தான் துடிக்கிறேன்.
    வாயிருந்தும் சொல்வதற்கு
    வார்த்தையின் தவிக்கிறேன்."

    ஆகா.. இன்று ஒரே பாடலாக நினைவுக்கு வருகிறதே..! ஏன் என்று தெரியவில்லையே என யோசிக்கும் போது,
    "பின்னே வெள்ளியல்லவா நான் என்று இந்த நாளும் எள்ளி நகையாடுகிறது."
    பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா... ஆமாம், வினு சக்கரவர்த்தி சாமியாடியாய் வருவார். பாடல்காட்சி பார்த்த நினைவு இருக்கிறது. வெள்ளக்கிழமை என்பதால் உங்களுக்கும் பாடல்களாய் நினைவு வருகிறதோ! நன்றி.

      நீக்கு
  22. தப்பு தப்பாக புரிந்து கொள்வதிலும், தவறாக யூகிப்பதிலும் நெ.த.வுக்கு நிகர் நெ.த.தான். முழு நிலவைப் பார்க்கும் பொழுதெல்லாம் ஜெமினி கணேசன் பட நிலா போல இருக்கிறது என்று கூறும் குழந்தைகளை என்ன சொல்லுவார்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா... ஹா... ஹா... நெல்லையின் பதில் என்னவாக இருக்கும்?

      நீக்கு
    2. பா.வெ மேடம்... இப்படிச் சொல்லுவது டப்பல்லோ...

      பதின்ம வயது அல்லது 20களில் கேட்ட பிரசித்தி பெற்ற பாடல்கள் நம் ஆழ்மனதில் பதிந்துவிடும். பதினாறு வயதினிலே, இ ஊ ஆ, ப்ரியா.... போன்ற படப் பாடல்கள் என் மனதில் பதிந்துவிட்டவை. செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல் பாடல் டக் என என்னை 14-15 வயது ஹாஸ்டல் நினைவுகளைக் கொண்டுவந்துவிடும்.


      கண் எவ்வளவு தொலைவு வரை சரியாத் தெரியுதுன்னு டாக்டர் கேட்டா, அதுக்கு சரியான பதில், 30 மீட்டருக்கு மேல் மங்கலாகுது டாக்டர் என்பதைப்போல் சொன்னால் அது அப்ராப்ரியேட் பதில். அதைவிட்டுவிட்டு, எனக்கு பல லட்சம் மைல் வரை நல்லாவே தெரியுது டாக்டர், சூரியன், நட்சத்திரமெல்லாம் தெரியுதுன்னா பதில் சொல்றது?

      நீக்கு
    3. நீங்கள் சொல்லும் சினிமா பாடல்கள் காற்று வாக்கில் காதில் விழுந்திருக்கிறதே ஒழிய அதன் பொருள், கவிதை நயம்,இசை இவற்றை புரிந்து கொண்டு ரசித்தது எல்லாம் இருபது வயதுக்கு மேல்தான். அவற்றுள் பழைய பாடல்களும் அடக்கம். அதனால் என்னைப் பொருத்த வரை உங்கள் ஊகம்,தவறு.

      நீக்கு
    4. தாமரையின் பாடல்களையும், ந.முத்துகுமாரின் வரிகளையும் மிகவும் பிடிக்கும். என் வயது என்ன? முப்பதா?

      நீக்கு
  23. சில நாட்கள் ஏதோ ஒரு பாடல் காலங்கார்தால நம் மனசுக்குள் புகுந்து கொள்ளும். நாள் முழுவதும் அந்தப் பாடலைத்தான் வாய் முணுமுணுக்கும். அப்படி இன்று மனசுக்குள் உட்கார்ந்து கொண்ட பாடல் நான் ஏரிக்கரை மேலிருந்து.. பாடல்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு இன்று காலை முதல் மனசில் ஓடிய பாடல் "விளக்கே நீ கொண்ட ஒளியாலே..."

      நீக்கு
    2. எனக்கு அந்திமழை பொழிகிறது........

      நீக்கு
  24. அப்பாடி :) இப்போதான் மிக முக்கிய வேலை ஒன்றினை முடிச்சிட்டு வர்றேன் 

    பதிலளிநீக்கு
  25. கண்ணை அங்கிங்கே ஓடிஏ விட்டதில் //தங்கம் // கண்ணில் பட்டது ..யாரது தங்கம் :))))))))

    பதிலளிநீக்கு
  26. ஏரிக்கரை பாட்டு செம சூப்பர் ..தாசேட்டன் எப்பவும் பிடித்த பாடகர் .பெண் குரல் ஸ்வர்ணலதா ??
    என்ன ஒரு இனிமையான குரல்கள் இயற்கை காட்சிகள் .கிராமத்துக்கு ரெண்டு டிக்கெட் ப்ளீஸ் 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தேனிக்கு டிக்கெட் வாங்கி அனுப்பி இருக்கேன். வாங்கிக்கிடுங்க...!

      நீக்கு
  27. ஏரிக்கரை பூங்காற்றே கேட்டிருக்கிறேன் ஸ்கூலுக்கு போகும்போது ரேடியோவில் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ... ஸ்கூலுக்கும்போதுதான் நீங்களும் கேட்டீர்களா?

      நீக்கு
  28. முதல் பாடல் அதிரா நேயர்விருப்பமா ??? ஆஹா சூப்பர் 

    பதிலளிநீக்கு
  29. ஏரிக்கரைப் பூங்காற்றே....மனதை நெருடும் பாடல்.

    பதிலளிநீக்கு
  30. பல பாடல்கள் ,பல நினைவுகள் ,பல காட்சிகள்.
    ரேடியோவுக்கு, இப்போ யூடியூபிற்கு நன்றி சொல்லணும்.

    அந்தக் கால மயில் வாஹனன், அப்புறமா ராஜேஸ்வரி ஷண்முகம்,
    உங்கள் ராஜா, அப்துல் ஹமீத் எல்லோரும் நம்முள் இசையை விதைத்தார்கள்.
    விவித பாரதி ஊதி வளர்த்தது.

    நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. "வீட்டுக்கு வீடு வானொலிப் பெட்டிக்கு அருகில்ஆவலுடன் குழுமி இருக்கும் ரசிகப் பெருமக்களுக்கு அன்பு வணக்கம்...".

      கே எஸ் ராஜாவின் குரல் காதில் ஒலிக்கிறது.

      நீக்கு
    2. மிக மிக உண்மை.மிக வசீகரமான குரல்.

      நீக்கு
  31. இரண்டாவது பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல். முதல் பாட்டும் கேட்டு ரசித்த பாடல் தான்.

    மீண்டும் கேட்கத் தந்தமைக்கு நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!