திங்கள், 11 மே, 2020

பாதாம் கேக்(பர்ஃபி) :: பானுமதி வெங்கடேஸ்வரன் ரெசிப்பி



பாதாம் கேக்(பர்ஃபி) 




      
தேவையான பொருள்கள்:




பாதாம் பருப்புகள்              -  1 கப் 
சர்க்கரை                                  -   1 1/2 கப் 
பால்                                              -   1 கப் 
நெய்                                             -   6 டேபிள் ஸ்பூன் 
குங்குமப்பூ                        - 1 1/2 டீ ஸ்பூன் (இதில் பாதியை ஒரு சிறு கிண்ணத்தில் பாலில் ஊற வைத்துக் கொள்ளவும்)

செய்முறை:


பாதாம் பருப்புகளை கொதிக்க வைத்த நீரில் முக்கால் மணி நேரம் ஊற வைக்கவும்.  பிறகு அந்த பருப்புகளை ஒவ்வொன்றாக எடுத்து பிதுக்கினால் தோல் சுலபமாக கழன்று விடும். அப்படி தோல் உரிக்கப்பட்ட பாதாம் பருப்புகளை மிக்சியில் பால் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.



பின்னர் ஒரு அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து  ஒன்று அல்லது ஒன்றரை ஸ்பூன் நெய் ஊற்றி அதில் அரைத்த பாதாம் விழுதை போட்டு  பிரட்டிக் கொள்ளவும் (இப்படி செய்வதால் பாதாமின் பச்சை வாசனை போய் விடும்)  பிறகு பாலில் ஊற வைத்த குங்குமப் பூவையும்  சர்க்கரையையும்  சேர்த்து கை விடாமல் கிளறவும்.  ஆரம்பத்தில் அடுப்பு மிதமான தீயில் எரியலாம். கொஞ்சம் சேர்ந்து வர ஆரம்பித்த பிறகு சிம்மில் வைத்து விட வேண்டும். இல்லாவிட்டால் அடிப் பிடித்து விடும். அவ்வப்பொழுது நெய் சேர்த்துக் கொள்ளவும். 

பாத்திரத்தில் ஒட்டாமல் வந்ததும் இறக்கி, நெய் தடவிய தட்டில் கொட்டி, அதன் மேலே கொஞ்சம் குங்குமப்பூவைத் தூவி, ஆறியதும் துண்டுகள் போட்டு. எடுத்து வைக்கவும். ஏலக்காய், முந்திரி போன்றவை தேவை இல்லை. செய்வதற்கு மிகவும் சுலபமான இனிப்பு இது.

 


 குறிப்பு: பாதாம் பருப்பு எந்த கிண்ணத்தில் எடுத்துக் கொள்கிறீர்களோ,அதே கிண்ணத்தில்தான் பால், சர்க்கரை இவைகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும். பாதாம் பருப்புகளை அதிகம் கொரகொரப்பாகவும் இல்லாமல், நைஸாகவும் இல்லாமல் மிதமாக அரைத்துக் கொள்ள வேண்டும்.   வேண்டுமென்றால் கலருக்காக கேசரிப் பவுடர் சேர்த்துக் கொள்ளலாம்.



===============

72 கருத்துகள்:

  1. மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு தானம் செய்வாரின் தலை..

    வாழ்க நலம்...

    பதிலளிநீக்கு
  2. அன்பின் வனக்கம் அனைவருக்கும்...

    பதிலளிநீக்கு
  3. ஆஹா காலையில் நாவிற்கு சுவையான காட்சி பகிர்வுக்கு நன்றி மேடம்.

    பதிலளிநீக்கு
  4. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்

    பதிலளிநீக்கு
  5. அனைவருக்கும் காலை, மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள். பிரார்த்தனைகள். ஸர்வே ஜனோ சுகினோ பவந்து! இதுக்கு மேல் என்ன சொல்வது? நாளாக ஆக கூடிக்கொண்டே போகும் எண்ணிக்கைகள் மனதைக் கலங்க அடிக்கிறது. இன்று முதல் கூடுதலாகத் தளர்வுகள், சலுகைகள். இனி என்ன ஆகுமோ என்னும் கவலை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிரார்த்தனைகளுக்கு நன்றி! கவலை வேண்டாம். எல்லாம் நல்லபடி நடக்கும்.

      நீக்கு
  6. வணக்கம் சகோதரரே

    சகோதரி பானுமதி வெங்கடேஷ்வரன் அவர்களின் செய்முறையில் பாதாம் கேக் பார்க்கவும் மிகவும் அழகாக உள்ளது. விரைவில் செய்யத் தூண்டுகிறது. படங்களும், செய்முறை விளக்கங்களும் அருமை. இந்த இனிப்பான ரெசிபியை தந்த சகோதரி பானுமதி வெங்கடேஷ்வரன் அவர்களுக்கு நன்றிகள். பகிர்வுக்கும் மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  7. முன்னெல்லாம் நினைச்சால் பண்ணிக் கொண்டிருந்த தித்திப்பு வகை. இப்போத் தித்திப்புப் பக்ஷணங்கள் பண்ணவே முடியலை! இதைப் பார்த்ததும் கை துறுதுறுவெனத் துடிக்கிறது. பண்ணவேண்டும் என ஆவல். பானுமதி எழுதும் சமையல் குறிப்பெல்லாம் நானும் எழுதி எங்கள் ப்ளாகுக்கு அனுப்ப நீனைப்பேன். ஆனால் வெறும் குறிப்பு மட்டும் போதாதே! படங்களுக்கு எங்கே போக? இதெல்லாம் பண்ணினால் தானே படங்கள் எடுக்க முடியும்! பார்ப்போம், ஏதேனும் பண்ண முடிகிறதா என! :))))))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரொம்ப சிம்பிள் வழி ஒன்று உள்ளது. உதாரணத்திற்கு அடை பற்றி சமையல் குறிப்பு என்று வைத்துக்கொள்வோம். அடைக்கு வேண்டிய ingredients எல்லாவற்றையும் தனியாகவோ, சேர்த்தோ மொபைலில் படம் எடுத்துக்கொள்ள வேண்டும். அப்புறம் அந்தப் பொருட்களை திரும்ப அஞ்சறைப்பெட்டியில் போட்டுடலாம். அப்புறம், தவா படம், எண்ணெய் படம் எல்லாம் போடலாம். கடைசி வடிவமான அடையை மட்டும் இணையத்தில் சுட்டுவிடலாம். அவ்வளவுதான். நாளைய கதை பதிவில் அடை படம் வரப்போகிறது பாருங்கள்.

      நீக்கு
    2. அடை..
      அதை அடை..

      அன்பினை அடை..
      அருளினை அடை..
      அகந்தையை உடை..
      அதற்கென்ன தடை!..

      நதிக்கரை மடை..
      கவிதையின் கடை..
      பொன்பொருள் கொடை..
      மனிதத்தின் விடை!...

      நீக்கு
    3. அடைமொழிக் கவிஞரே! நாளை உங்கள் ராஜ்ஜியம்தான்! நடத்துங்க!

      நீக்கு
    4. எல்லாம் ஈஸ்வரன் -
      கௌதமேஸ்வரன் அருள்!..

      நீக்கு
    5. கௌதமன் சார் சொல்லியிருப்பது போல தேவையான பொருள்களை புகைப்படம் எடுத்துக் கொள்ளுங்கள். செய்முறையை எழுதி அனுப்பி விடுங்கள். 

      நீக்கு
  8. விட்டால் எல்லாத்தையும் நானே சாப்பிட்டுடுவேன். ஆனால் இவங்க கொஞ்சமாப் பண்ணி இருக்காங்க. நெல்லை வேறே போட்டிக்கு வருவார். :)))) இன்னிக்கு எங்கே காணோம்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனைவருக்கும் நன்னாளுக்கான வணக்கம்.

      திருக்குறள் நாளாக இன்று சென்று கொண்டிருக்கிறது.
      நன்றி துரை.
      அன்பு பானுவின் அருமையான பாதாம் கேக் இனிமை.
      நிறைய நெய் இழுத்துக்கொள்ளவில்லை.
      பாலும் ,பாதாமும்,சர்க்கரையும் ,வாசனையும்
      நல்ல ருசியைத் தூண்டுகிறது.

      பக்கத்தில் போகத்தான் பயம்.
      அதனாலென்ன. பரவாயில்லை. மற்றவர்களுக்குச் செய்து கொடுக்கலாமே.
      நன்றி பானுமா.
      அனைவருக்கும் பாதுகாப்பு கொடுக்க இறைவனிடம்
      பிரார்த்தனைகள்.

      நீக்கு
    2. // நெல்லை வேறே போட்டிக்கு வருவார். // நானும் ஸ்வீட் பிரியன். ஒருநாளைக்கு கால் கிலோ மட்டும்தான் சாப்பிடுவேன்!

      நீக்கு
    3. // அதனாலென்ன. பரவாயில்லை. மற்றவர்களுக்குச் செய்து கொடுக்கலாமே.// எனக்கு அனுப்புங்க!

      நீக்கு
    4. //ஆனால் இவங்க கொஞ்சமாப் பண்ணி இருக்காங்க.// நான், என் மருமகள் இருவரும் இனிப்பு சாப்பிட வேண்டாம் என்ற முடிவில் இருப்பதால், என் மகனுக்காக மட்டும் செய்தேன்.    

      நீக்கு
    5. @Gouthaman:////எனக்கு அனுப்புங்க!// //எனக்கு அனுப்புங்க!// தமிழகத்தில் கூரியர் பணிகள் தொடங்கி விட்டன. கர்நாடகத்திலும் தொடங்கியவுடன் அனுப்பி விடுகிறோம். விலாசம் தெரியப்படுத்துங்கள். 

      நீக்கு
    6. @கீதா சாம்பசிவம் - காலையிலேயே படித்துவிட்டேன். கருத்திட நேரமில்லை. பாதாம் அல்வா, கேக்லாம் நான் அவ்வளவா விரும்புவதில்லை.

      @கேஜிஜி அவர்கள் - தனுசு ராசி நேயர்கள் இனிப்புப் பிரியர்களோ?

      நீக்கு
  9. பானுமதி வெங்கடேஷ்வரன் அவர்களின் செய்முறையில் அருமையாக இருக்கிறது அதுமட்டுமல்ல பாதாம் கேக் பார்க்கவும் மிகவும் அழகாக உள்ளது. எங்கள் ப்ளாக் தளத்தின் தலைமை செஃப்பாக பானுமதி அம்மாவை செலக்ட் செய்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //எங்கள் ப்ளாக் தளத்தின் தலைமை செஃப்பாக பானுமதி அம்மாவை செலக்ட் செய்கிறேன்//  அடேயப்பா! என்னை விட பொருத்தமான தலைகள் இங்கு உண்டு. உங்கள் அன்புக்கு நன்றி. 
      கௌதமன் சாரின் ரியாக்சனை கவனித்தீர்களா?

      நீக்கு
  10. பர்ஃபி அழகாக செய்து உள்ளார்கள்...

    பதிலளிநீக்கு
  11. பாதாம் பர்ஃபி - பார்க்கவே நன்றாக இருக்கிறது.

    சுவையான பர்ஃபி - எனக்கும் பிடித்த இனிப்பு. கடைகள் மூடி இருப்பதால் இப்போதைக்கு இனிப்பு எதுவும் சாப்பிட வாய்ப்பில்லை! :) செய்து தான் சாப்பிட வேண்டும் போல இருக்கிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வெங்கட். செய்வதற்கு சுலபமான இனிப்புதான். முயற்சி செய்து பாருங்கள். நன்றி. 

      நீக்கு
  12. முன்பு Pastry யில் அரபு இனிப்புகளுக்காக பொடி செய்து (பொடித்து அல்ல) வைக்கப் பட்டிருக்கும் பாதாம் முந்திரி வகைகளைக் கொண்டு இவ்விதம் செய்வதுண்டு...

    ஆனால் இதில் ஒரு பிரச்னை...
    கொழுப்பு அதிகம்..

    முன்பெல்லாம் ஆடிக்கொரு தரம் அமாவாசைக்கொருதரம் - பாதாம் பிஸ்தா குங்குமப்பூ சாலாமிஸ்ரி என்று விற்றுக் கொண்டு வருவார்கள்..

    பாயசத்தில் முந்திரிப் பருப்பு அதிகம் கிடைத்தாலே வரப்ரசாதம்...

    இப்போதெல்லாம் அப்படியில்லை...

    பாதாம் பிஸ்தா முந்திரி எல்லாம் தாராளமாகக் கிடைக்கின்றன...

    சில ஊடகங்களும் வளரும் பிள்ளைகளுக்கு Nuts கொடுங்கள் என்று கதறுகின்றன..

    அதன் விளைவு என்ன!...

    ஓய்!.. அதப் பத்தி அப்புறமா பேசிக்கலாம்...
    இப்போ ரெண்டு துண்டு எடுத்து வாயிலே போட்டுக்கிட்டு கம்..ந்னு இருக்கவும்!...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஆனால் இதில் ஒரு பிரச்னை...
      கொழுப்பு அதிகம்.. //  பாதாமில் இருக்கும் கொழுப்பு தேங்காயில் இருக்கும் கொழுப்பை விட குறைவுதான். அப்படியே இருந்தாலும் நல்ல கொழுப்பு. . என்கிறார்களே? ரெண்டு துண்டு எடுத்துக் கொண்டீர்களா? நன்றி துரை சார். 

      நீக்கு
  13. என் மாமியார் அவர்கள் ஒவ்வொரு தீபாவளிக்கும் செய்யும் இனிப்பு.
    அப்புறம் பேரன், பேத்திகள் வந்தால் செய்வார்கள்.

    படங்கள் மிக அழகு. செய்முறை குறிப்பும் அது போல்தான்.
    சுவையான பாதாம் கேக் எடுத்துக் கொண்டேன்.

    பதிலளிநீக்கு
  14. நெய் இல்ல. வாங்கி வந்ததும் செய்து பார்க்கலாம்.
    வீட்டில் குங்குமப்பூவும் இல்லியே! அதுக்கு மாற்று வழி சொல்லி இருக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வீட்டில் குங்குமப் பூ இல்லை என்பதால் செய்யாமல் இருக்காதீர்கள்...

      அதற்காக செயற்கை வண்ணங்களையும் அதிகம் சேர்க்காதீர்கள்...

      இதோ நான் தயாராகி விட்டேன்
      பாதாம் பர்பி செய்வதற்கு!...

      மகிழ்வான இனிப்பு..
      செய்முறை தந்ததற்கு மகிழ்ச்சி..

      நீக்கு
    2. குங்குமப்பூ ஒரு added attraction மட்டுமே. குங்குமப்பூ இல்லாமலும் செய்யலாம். முயற்சி செய்யுங்கள். 

      நீக்கு
    3. /மகிழ்வான இனிப்பு..
      செய்முறை தந்ததற்கு மகிழ்ச்சி.. // 
      நன்றி துரை சார். 

      நீக்கு
  15. பதில்கள்
    1. முக்கியமான தருணங்களில் செய்யலாமே எல்,கே.சார். கருத்துக்கு நன்றி. 

      நீக்கு
  16. இன்று காலை அலைபேசியில் அழைத்த தி.கீதா,"இன்று எ.பி.கிச்சனில் யார் கை வண்ணம்?" என்று கேட்டார். "தெரியவில்லை இன்னும் நான் பார்க்கவில்லை" என்றேன்.  கடமையைச் செய் பலனை எதிர்பார்க்காதே என்னும் கீதாச்சாரியன் சொன்னதை கடைபிடிப்பதால்(ஏய்!)எ.பி.க்கு அனுப்புவதோடு என் கடமை முடிந்து விடும். அது வெளியிடப் படும் நாளை நினைவில் கொள்வதில்லை. இன்றைக்கு நான் செய்து அனுப்பிய பாதம் பர்ஃபி!வெளியிட்ட எ.பி.க்கும், ரசித்து,பின்னூட்டமிட்டவர்களுக்கும் நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவ்வளவுதானா!..

      அப்படியானால் தனித்தனியாக ஆளுக்கொரு துண்டு பர்பி இல்லை போலிருக்கிறது..

      நானெல்லாம் எபியில் எனது பதிவு வெளியாகும் நாளை
      மனதிற்குள் அடை காத்துக் கொண்டிருப்பேன்...

      நீக்கு
    2. ஹா... ஹா... ஹா... அக்கா வேற ஏதோ வொர்க்ல பிஸி போல..

      நீக்கு
    3. //அப்படியானால் தனித்தனியாக ஆளுக்கொரு துண்டு பர்பி இல்லை போலிருக்கிறது..// ஆஹா, உங்களுக்கெல்லாம் இல்லாததா? நீங்கள் எடுத்துக் கொண்டது போக மிஞ்சியதுதான் எனக்கு. 

      நீக்கு
  17. இந்த இரட்டையர்களை வேற கொஞ்ச நாளா காணோம்...

    பதிலளிநீக்கு
  18. பாதாம் பர்பி அழகு. அந்த ஊரில் இருக்கும்போது அடிக்கடி செய்வேன்.

    முதல் தடவை செய்யும்போது பாதாம் தோலை நாமே உரிப்போம் என நினைத்து (தோலுரித்த பாதாம் அங்கு கிடைக்கும்) தண்ணீரில் ஊறப்போட்டு ஒருநாள் முழுவதும் ஊறியும் தொல் உரிக்க மிகவும் கஷ்டப்பட்டேன்.

    இப்போலாம் இதில் ஆசை இல்லை.

    இன்று சமையலறை என்கைவசம் என்பதால் சர்க்கரைப் பொங்கல் செய்தேன். பையன், சீயம் பண்ணச் சொன்னான். இன்று முடியுமான்னு தெரியலை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு முக்கியமான விஷயத்தை நினைவூட்டியதற்கு நன்றி நெல்லை. பாதாம் பருப்பை கொதிக்க வாய்த்த நீரில் ஊற வைத்தால் சீக்கிரம் ஊறி விடும். உரிப்பதும் சுலபமாக இருக்கும். இதை குறிப்பிட நினைத்தேன், மறந்து விட்டேன். நன்றி. இதற்குத்தான் நெல்லை தமிழன் வரவேண்டும் என்கிறது. இன்னும் தேம்ஸ் நதி தீரத்தினர் வரவில்லையே?   

      நீக்கு
    2. ஆமா உங்க ரெண்டு பேரில் யார் மைசூர்பா ரெசிப்பி செஞ்சது ? 

      நீக்கு
    3. நாந்தான் அனுப்பியிருந்த நினைவு. ஏன்னா, பெண் வைத்திருந்த அவன் பாத்திரத்தில் பட்டர் பேப்பர் வைத்து அழகாக கட் பண்ணி, அந்த அழகில் மயங்கி, ஏகப்பட்ட புகைப்படங்கள் எடுத்திருந்தேன்.

      இந்தப் பெருமைல, அம்மாவுக்காகச் செய்தபோது, பாதி நெய் (அப்போ பார்த்து நெய் காலி, ரெண்டு மணி நேரத்துல கிளம்பணும் அம்மா இருந்த ஊருக்கு), அம்மாவுக்கு கோல்ட்வின்னரா உபயோகிப்பது, கடலை எண்ணெய் உபயோகிக்கலாம் என்று நினைத்து பாதி கடலெண்ணெய் போட்டுச் செய்த மைசூர்பா, மிக மிக அழகாக சாஃப்டாக வந்தது. ஆனா பாருங்க ஒரே கடலை எண்ணெய் வாசனை (பெண் பிறகு சொன்னா. எனக்கு அப்போ ஸ்மெல் தெரியாது). அம்மாக்கு போன் பண்ணி நடந்ததைச் சொன்னேன். அதுல இருந்து இனிப்பு வகைகளுக்கு கடலை எண்ணெய் பக்கமே போகமாட்டேன்.

      நீக்கு
    4. ஆஹா :) நீங்க தானா அப்போ அந்த மைசூர்பாக் உங்களை நோக்கி வந்துகொண்டிருக்கு :) 
      எனக்கு வாசனை எல்லாம் ஈஸியா கண்டுபிடிப்பேன் என்ற கர்வம் பெருமை எல்லாமே போச்சு ரீசண்டா ..இதுக்குமேல விவரம் விரைவில் சொல்றேன் :)

      நீக்கு
  19. நினைக்க நினைக்க இனிக்குதடா பர்ஃபி

    பதிலளிநீக்கு
  20. வாவ் !! ரொம்பா ஈஸியா இருக்கே ..என் கணவர்தான் ஸ்வீட் பிரியர் ,இதில் பெரிய வேலை இல்லைங்கறதால் செய்றேன் சீக்கிரம் .பாதாம் கிடைக்கும்  ஆனா குங்குமப்பூ தான் கிடைக்காது 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பெரிய வேலை இல்லைங்கறதால் செய்றேன்// - தட்டச்சுப் பிழை எனக்குப் புரிகிறது. எழுத நினைத்தது, //பெரிய வேலை இல்லைங்கறதால் செய்யச் சொல்றேன் அல்லது செய்வார்// - ஹா ஹா ஹா.

      நீக்கு
    2. ஹஆஹாஆஆ :)))) இப்போ உங்களால் எனக்கு ஐடியா கிடைச்சாச்சு .சத்தியமா நான்  ஸ்வீட் செய்ய சாத்தியமில்லை .

      நீக்கு
  21. சுவையான பாதாம் கேக்(பர்ஃபி) ...பார்க்கவே ஆசையா இருக்கே ...

    இன்னும் நீங்க சொன்ன கோதுமை அல்வாவே செய்யல...அதுனால் இது இப்போ செய்ய முடியாது ..


    ஆனா உங்க அரிசி அடை செஞ்சாச்சு .....அதுவும் நல்லா வந்துச்சு ...

    விரைவில் அந்த படங்களுடன் வருகிறேன் ....

    பதிலளிநீக்கு
  22. அதென்ன அடைப்புக் குறியில் பர்ஃபி?..

    பர்ஃபி என்பது வேறில்லையோ?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கேக் என்றால் பேக் செய்யும் சமாசாரம் என்று நினைத்து விடுவார்கள் என்பதால் பர்ஃபி என்றும் குறிப்பிட்டேன். நன்றி. 

      நீக்கு
  23. பாதாம் பர்ஃபி கேக் சூப்பராக வந்திருக்குது பானு அக்கா.. மீ தான் லேட்டூ.. இப்போதான் வாசம் வந்தது:))

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!