சனி, 9 மே, 2020

உதவும் உள்ளங்கள் ஓய்வதில்லை.






லாக்டவுன் மதுரையில், தினம்  பாட்டில் பொறுக்கி விற்றுப் பாழும் வயிற்றுக்கு பதில் சொல்லப்பார்க்கும் பரிதாப மனிதரின்  முகம் வாடிப்போய்விடாமல்  பார்த்துக்கொண்ட சில பொறுப்பான இளைஞர்கள்.  ”சின்னப்பசங்க நீங்க,  எங்க கஷ்டத்த உணர்ந்து நாங்க எதிர்பார்க்காத அளவுக்கு உதவி செஞ்சிருக்கீங்க!”  என்று அந்த கேட்பாரில்லா ஏழைகளை உணர்ச்சிவசப்பட வைத்த உன்னதங்கள்..

சுட்டி <== 

நன்றி :  ஏகாந்தன்.

=======================

புற்றுநோய் பாதித்த பெண்ணை நிவாரண பொருட்கள் வழங்கி சொந்த ஊருக்கு அனுப்பிய மதுரை ஆட்சியர்.

             
மதுரை அரசு மருத்துவமனையில் இருந்து வெளியே அனுப்பப்பட்ட புற்றுநோய் பாதிக்கப்பட்ட பெண் சொந்த ஊர் செல்வதற்கு மதுரை ஆட்சியர் மற்றும் செஞ்சிலுவை சங்கத்தினர் உதவினர்.
புதுக்கோட்டை கறம்பக்குடியைச் சேர்ந்த பெண் ஒருவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இவர் மார்பகப் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார்.
அவரை அறுவை சிகிச்சை செய்யாமல் ஒரு மாதமாக மருத்துவமனையிலேயே வைத்திருந்தனர். பின்னர் ஒரு மாதத்துக்கு மருந்து, மாத்திரைகளை வழங்கி மருத்துவமனையில் இருந்து வெளியே அனுப்பினர்.
ஊரடங்கு நேரத்தில் சொந்த ஊருக்குச் செல்ல முடியாமல் தவித்த அந்தப்பெண் கணவருடன் மதுரை ஆட்சியரை நேரில் சந்தித்து உதவி கேட்டார். இதையடுத்து அப்பெண் சொந்த ஊர் செல்ல உடனடியாக ஆட்சியர் அனுமதி சீட்டு வழங்கினார்.
அவருக்கு செஞ்சிலுவை சங்க அவைத் தலைவர் ஜோஸ், செயலர் கோபாலகிருஷ்ணன், வழக்கறிஞர் முத்துகுமார், தினேஷ், மைதிலி ஆகியோர் ஒரு மாதத்துக்கு தேவையான நிவாரண பொருட்கள், சொந்த ஊர் செல்ல இலவச வாகனம் ஏற்பாடு செய்து கொடுத்தனர்.
இதையடுத்து அந்தப் பெண் சொந்த ஊருக்கு சென்றார்.

நன்றி : இந்து தமிழ் நாளிதழ். மே 8. 2020. 

=======

நலிந்தோரை தேடி சென்று உதவி செய்யும்  ஆசிரியை.


நாகப்பட்டினம் : கொரோனா தாக்கம் துவங்கிய நாளில் இருந்து, ஆயிரக்கணக்கானோருக்கு, ஐந்து லட்சம் ரூபாய் அளவுக்கு, அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியை, நலத்திட்ட உதவிகள் வழங்கியுள்ளார்.

நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த அண்டர்காடு, சுந்தரேச விலாஸ் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியை வசந்தா, 50. தமிழகத்தில் கொரோனா தாக்கம் துவங்கியவுடன், முதல்வர் நிவாரண நிதிக்கு, 50 ஆயிரம் ரூபாய் அனுப்பினார்.


தொடர்ந்து, கருப்பம்புலம், நெய்விளக்கு, கோடியக்கரை உட்பட சுற்றுவட்டார கிராம மக்கள், அரசு மருத்துவமனை பணியாளர்கள், போலீசார், துாய்மை பணியாளர்கள், மின்வாரிய ஊழியர்கள் என, 4,000 பேருக்கு, 'மாஸ்க், மஞ்சள் துாள், சோப்பு, அகல், தேங்காய் எண்ணெய், திரி அடங்கிய பைகளை வழங்கினார்.

முக்கிய சாலைகளில் கொரோனா படம் வரைந்தும், விளம்பர பதாதைகள் அமைத்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.வேதாரண்யம் பகுதிகளில், உணவு கிடைக்காமல் தவிக்கும், 250 பேருக்கு ஊரடங்கு துவங்கிய நாளில் இருந்து, உணவுப் பொட்டலங்களை தொடர்ந்து வழங்கி வந்தார். தற்போது, ஊரடங்கு தளர்வால், மனநோயாளிகள், 50 நபர்களுக்கு உணவு வழங்கி வருகிறார்.

மேலும், தன் பள்ளியில் படிக்கும், 56 குழந்தைகளின் இல்லங்களுக்கு தேவையான நிவாரணப் பொருட்கள் வழங்கியவர், தலா, 1,000 ரூபாய் நிதியும் அளித்துள்ளார். இவ்வாறு, தன் சொந்த பணத்தில், 5 லட்சம் ரூபாய் வரை செலவு செய்துள்ள இவரை, பல தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.


நன்றி: தினமலர் மே 8

===========



===================================


வாழ்க்கை வழி வந்த கதை

  

ரமா ஸ்ரீனிவாசன் 

ஒவ்வொரு வாரமும் நல்ல உள்ளங்களைப் பற்றியும் கோவிட்
தாக்கங்களை பற்றியும் எழுதும் நான் இவ்வாரம் வித்தியாசமாக
யோசித்தேன். அதன் விளைவுதான் இன்றைய கதை. ஏனெனில் இது என்
மிகச் சிறு வயதுக் கதை.

என் தந்தை தமிழ்நாடு மின்வாரியத்தில் அப்போது உதவி
பொறியாளராக பணியாற்றி வந்த காலம். ஊர் ஊராக, கிராமம் கிராமமாகச் சென்று தன் அலுவலக சிப்பந்திகளை வழி நடத்தி ஊர்களுக்கும் கிராமங்களுக்கும் மின்சார வசதி செய்துக் கொண்டிருந்த காலம். மிக உள்ளடங்கியுள்ள இடங்களுக்கு டிரான்ஸ்ஃபர் ஆகும்போது (கோரக்குந்தா என்று நினைக்கின்றேன்) என் அண்ணன், (9 வயது) நான்
(6 வயது) ஆகியோர் அந்த ஊரில் பள்ளிக்கூடம் இல்லாததால் ஒரு வருடம் படிப்பே இல்லாமல் குஷியாக வளைய வந்திருக்கின்றோம்.

நான் ஆறாவது படிக்கும்போது என் அப்பாவிற்கு கபிஸ்தலத்திற்கு அருகேயுள்ள சருக்கை கிராமத்திற்கு மாற்றலாகியது. நல்ல காலமாக அங்கு ஒரு கவர்ண்மென்ட் பள்ளி இருந்தது. அங்கு என்னை ஏழாவது வகுப்பில் சேர்த்து விட்டார். என் அண்ணன் பெரிய கிளாஸ் என்பதால் ஹாஸ்டலில் சேர்க்கப் பட்டான். நாங்கள் முதலில் போய் மின்சாரத் துறை விடுதியில் தங்கினோம். அப்போழுது எல்லாம் நாமே வீடு கட்டும் காலம். மின்சார வசதி செய்யச் சென்றதால், என் அப்பாவிற்கு ஏக மரியாதை. எல்லா ஆண்களும் ஒன்று கூடி எங்கள் வீட்டைக் கட்டுவதற்கு உதவ முன் வந்தார்கள். 

அரசலாறு என்னும் ஆற்றின் மிக அருகாமையில் ஓர் இடம் பார்த்து நல்ல நாளில் பூமி பூஜை செய்து வீட்டைக் கட்டத் துவங்கினார்கள். எனக்கு கோடை விடுமுறையானதால், அங்கேயே பொழுதைக் கழித்தேன்.

அந்த ஆத்தோரத்து மணலை எடுத்தே அழகான நல்ல வெளிச்சமும்
விசாலமுமான ஒரு வீட்டை அக்கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மகிழ்ச்சியுடன் ஒரே மாதத்தில் கூரை வேய்ந்து கட்டி விட்டார்கள். உள்ளே தரைகளுக்கு சாணியை தண்ணீரில் கரைத்து தெளித்து மொழுகி சுத்தமாக எங்களுக்கு வாழ வழங்கினார்கள்.

சிலுசிலு எனக் காற்றும் வெளிச்சமும் போட்டிப் போட்டுக் கொண்டு வீட்டை சுகப் படுத்தின.
   



மெல்ல மெல்ல அம்மாவும் நானும் அக்கிராம வாசிகளும் சேர்ந்து
அழகிய தோட்டம் ஒன்றை அமைத்து முருங்கை, வெண்டை, கத்திரிக்காய், கொத்தவரை, அவரை, பூசனி, கீரை போன்றவைகளை பயிர் செய்தோம்.

பின்னர், ஆற அமர மா, பலா, வாழை, தென்னை போன்ற மரங்களையும்
விட்டு வைக்கவில்லை. எல்லா விதத்திலும் சுகமானதும்
உபயோகமானதுமாக மாறியது அவ்வீடு. சந்தோஷமாகக் குடியிருந்தோம்.

கோடை நாட்களே தெரியா வண்ணம் காற்று முன்புறமும் பின்புறமும்
மோதி மோதி வீட்டை மிகக் குளிர்ச்சியாக வைத்திருந்தது. வெய்யில்
உள்ளே புகாத மாதிரி வேலி முழுவதும் செடிகளாலும் கொடிகளாலும்
மறைக்கப்பட்டு இருக்கும்.

கிராமமாதலால் எப்போதும் எங்கள் வீட்டுக் கதவு திறந்தபடி இருக்கும்.
அப்பா மட்டும்தான் தமிழ் நாட்டில் இருந்ததால், உறவினர்களும் நண்பர்களும் வந்த வண்ணம் இருப்பார்கள். யாவருக்கும் அன்புடன் வரவேற்பும் அன்பும் கிடைக்கும்.

எங்கள் மாமா வந்தால் ஒரே குஷிதான். என் அம்மா விருந்து பரிமாற,
மாம்பழமும் பலாப்பழமும் மாறி மாறி இலையில் விழும். உடல்
வெப்பமாகாமல் இருக்க, அம்மா யாவர்க்கும் கொம்புத் தேன் அருந்தக்
கொடுப்பார்கள்.

இரவு உணவு முடிந்தவுடன், கட்டில்கள் வாசலுக்கு மாற்றப்பட்டு,
யாவரும் அரட்டை அடித்தபின் நிம்மதியாகத் தூங்குவோம். அந்தக் காலத்தில் திருட்டு பயமோ மற்ற சொல்ல முடியாத பயங்களோ கிடையாது. நேர்மையும் கட்டுப்பாடும் ஊரளவில் பரவியிருந்தது.

அப்பா மின்வாரியத்தில் பெரிய வேலை என்பதால், அத்தையின்
திருமணம் நாங்கள் இருந்த கிராமத்திலேயே நடந்தது. தெருவையே
அடைத்து பந்தல் போட்டு வீடு தயாரானது. அத்தைக்கும் அவரது கணவராக வருபவருக்கும் தங்க நகைகள் வெள்ளி பாத்திரங்களும் சீதனமாக கடைகளிலிருந்து வந்த இறங்கின.

திருமணத்தன்று மூன்று கார்களை வாடகைக்கு எடுத்து மாப்பிள்ளை
ஊர்வலம், பெண் ஊர்வலம் என்று ஜமாய்த்தார் அப்பா. கிராம மக்கள்
யாவரும் ஒன்று கூடி வான வேடிக்கை, மேளம், தாளம் என அமர்க்களப்
படுத்தினார்கள். திருமண நாள் மாலை அருமையான ஒரு வில்லுப் பாட்டுக் குழுமத்தை ஏற்பாடு செய்து கிராம மக்கள் தங்கள் அன்பை வெளிக்காட்டினார்கள்.


அத்தையின் கணவரும் அவரது குடும்பமும் அசந்து போயினர். அடுத்த
நாள் எதிர் விருந்திற்கு வருகைத் தந்த அக்குடும்பத்தினர் தங்கள்
செய்கைகளால் உடல் பாஷைகளாலும் தங்களது திருப்தியையும்
மகிழ்ச்சியையும் காண்பித்தார்கள். 

அத்தையும் மாப்பிள்ளையும் அப்பாவையும் அம்மாவையும் நிற்க வைத்து புடவை, வேட்டி அளித்து காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றார்கள். பின்னர், இனிதே யாவரும் திரும்பி ஊர் சென்றனர்.

இன்று காலை உணவிற்கு பின்னர் அமர்ந்து நினைவலைகளில் மிதந்து
கொண்டிருந்த போது, சட்டென்று ஒரு பல்பு என் மூளைக்குள் எரிந்து
அனைந்தது. இக்கதைக்கேற்ற ஒரு பாட்டு ஏற்கனவே இயற்றி பாடப்
பட்டுள்ளது என்பதுதான் அது. இதோ அந்த பாடலை இங்கே பகிர்ந்துள்ளேன்.


“ஆத்தோரம் மணல் எடுத்து
அழகழகாய் வீடு கட்டி
தோட்டமிட்டு செடி வளர்த்து
ஜோராக குடியிருப்போம்


வெய்யிலிலே குளிர்ந்திருக்கும்
வேலியிலே கொடியிருக்கும்
கையகலம் கதவிருக்கும்
காத்து வர வழியிருக்கும்
வழி மேலே விழியிருக்கும்
வந்தவர்க்கெல்லாம் இடமிருக்கும்


மனக் கதவை திறந்து வைப்போம்
மாமனுக்கு விருந்து வைப்போம்
கனி கனியாய் எடுத்து வைப்போம்
கை நிறைய தேன் கொடுப்போம்
நிலவு வரும் நேரத்திலே
நிம்மதியாக தூங்க வைப்போம்.


பத்து விரல் மோதிரமாம்
பவள மணி மாலைகளாம்
முத்து வடம் பூச்சரமாம்
மூக்குத்தியும் தோடுகளாம்
அத்தையவள் சீதனமாம்
அத்தனையும் வீடு வரும்


கல்யாண ஊர்வலமாம்
கச்சேரி விருந்துகளாம்
மாப்பிள்ளையின் அம்மாவும்
மனம் குளிர வருவாராம்
அம்மாவின் கால்களிலே
அன்புடனே வணங்கிடுவோம்”.


அதற்கு பின்னரும் என் அப்பா அந்த ஊரில் மூன்று வருடங்கள் பணி
செய்து சருக்கை கிராமம் மின்சார தன்னியங்கி கிராமம் என்று பறைசாற்றப்பட்டப் பின்னர் சென்னைக்கு டிரான்ஸ்ஃபர் கிடைத்து இங்கு வந்து நிரந்தரமாக சென்னைவாசிகளாகி விட்டோம்.


ஆனால், நண்பர்களே, அந்த ஏழாவது வகுப்பில் நான் கண்ட
மகிழ்ச்சியும், அன்பும், பாசமும் இப்போது வளர்ந்து சென்னை வந்த பிறகு தேடுகிறேன், தேடுகிறேன், தேடுகிறேன். ஆனால் கிடைக்கவில்லை.

எல்லாமே ஒரு வேகமான, அர்த்தமில்லாத போலியான வாழ்க்கையாய்
தெரிகின்றது. எல்லோருமே ஓடிக் கொண்டிருக்கின்றோமே ஒழிய எதற்காக, ஏன், எது வரை என்பது புரியவில்லை.

ஆச்சரியம் என்னவென்றால் நான் விரும்பி திருமணம் செய்து
கொண்டவர் அந்த சருக்கை கிராமத்தையே சேர்ந்தவர். ஆகவே, அவரும்
நானும் நாலைந்து முறைகள் அக்கிராமத்திற்கு சென்று கிட்டத்தட்ட எங்கள் வீடிருந்த இடத்தையும் பார்த்துவிட்டு வந்தோம். ஆனால், சருக்கை கிராமமும் மாறி விட்டிருந்தது. நாகரீகம் என்ன சருக்கைக்கு மட்டும் விதிவிலக்கா என்ன?


அதே போல், தோழர்களே, அன்று இருந்த நம்பிக்கை, விஸ்வாசம்,
மதிப்பு, நேர்மை யாவையும் இன்று காணாப் பொருட்களாகி விட்டன
என்பதை நினைக்கும்போது மனம் வருந்துகின்றது. நாம் இந்த
வாழ்க்கையையும் இந்த உலகையுமா நம் சந்ததியினருக்கு விட்டுச் செல்லப்போகிறோம் என்று எண்ணும்போது வருத்தமும் துக்கமும்தான்
மிஞ்சுகின்றன.


இருந்தாலும் மனம் கூறுகின்றது : “இன்னொரு அப்துல் கலாமும்,
இன்னொரு கணித மேதை ராமானுஜமும், இன்னொரு சிறந்த மருத்துவர்
பாஷ்யம் அய்யங்காரும் அவசியம் திரும்பி பிறவியெடுப்பார்கள்” என்று.


நம்புவோமே. நம்பிக் காத்திருப்போமே! 

================

67 கருத்துகள்:

  1. எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு..

    நலம் வாழ்க...

    பதிலளிநீக்கு
  2. அன்பின் வணக்கம் அனைவருக்கும்...

    பதிலளிநீக்கு
  3. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த ஒரு நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வழக்கம்போல இனிய பிரார்த்தனைகளுடன் வந்திருக்கும் கமலா அக்காவுக்கு நன்றி, நல்வரவு, வணக்கம்.

      நீக்கு
  4. நல்ல உள்ளங்களை வாழ்த்துவோம்.
    //
    எல்லோருமே ஓடிக் கொண்டிருக்கின்றோமே ஒழிய எதற்காக, ஏன், எது வரை என்பது புரியவில்லை//

    இதுதான் காலமாற்ற்ம் இது மனிருக்கு நிச்சயமாக இதுவரை மட்டுமல்ல இனியும் பயனில்லை.

    பதிலளிநீக்கு
  5. அனைவருக்கும் வணக்கம். நல்வரவு, வாழ்த்துகள். கொரோனா இல்லாத தமிழகம் இனியாவது நீதிமன்றத் தீர்ப்புக்கும் பின்னாவது தோன்றப் பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிரார்த்திப்போம். வணக்கம் கீதா அக்கா.. வாங்க நன்றி, நல்வரவு.

      நீக்கு
  6. நல்ல உள்ளங்கள் அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுகள். புற்று நோய்ப் பெண்ணைத் தவிர்த்து மற்றவை புதியவை. ரமா ஸ்ரீநிவாசனின் நினைவலைகள் அருமை. வீடு நாமே கட்டிக்கொள்ளவேண்டும் என்னும் செய்தி புத்தம்புதியது. இதுவை கேள்விப் படாத ஒன்று. இது எந்த வருடங்களில்? ஏனெனில் என் மாமனார் ஊருக்கும் 76 ஆம் வருடம் தான் மின்சாரம் வந்தது. அங்கே வந்து தங்கிய பொறியாளருக்கு அக்ரஹாரத்தில் ஒரு வீட்டை ஒழித்துக் கொடுத்ததாகச் சொல்லுவார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கங்கள். கீதா, நாங்கள் சென்றபோது அக்ர்ஹாரம் முழுவதும் நிரம்பியிருந்ததாலும் என் அப்பா ஆச்சார சீலர்களை சிரமப் படுத்தாதீர்கள் என்று கூறியதாலும் எங்களுக்கு வீடு கட்டும் சந்தர்ப்பம் கிடைத்தது.

      நீக்கு
    2. அப்படியா? ஆனால் நீங்க எந்த வருடம்னு சொல்லவே இல்லை! :)))))))

      நீக்கு
  7. மருத்துவத் துறையில் "மருத்துவர் ரங்காச்சாரி" அவர்களைத் தான் சொல்வார்கள். சென்னை ராஜீவ் காந்தி பொது மருத்துவமனை வாயிலிலும் அவர் சிலைதான் அமைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த பாஷ்யம் ஐயங்கார்? அவரும் ஓர் பிரபலமான மருத்துவரா? முற்றிலும் புதிய செய்தி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதா உங்களுக்கு ஒன்று தெரியுமா? ரங்காச்சாரி மருத்துவரும் சரி பாஷ்யம் ஐயங்கார் மருத்துவரும் சரி என் மாமியார் மாமனார் வழி தாயாதிகள். என் பெரிய பெண் மருத்துவம் பயில வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தபோது, நாங்கள் அவளை மேல் கூறிய மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அந்த சிலையை காட்டி அவள் அனுவில் ஏற்கனவே ஒரு பெரும் மருத்துவர் அயிக்கியம் ஆகி இருக்கின்றார் என்பது உணர்த்தினோம்.

      நீக்கு
    2. ஆஹா! கொடுத்து வைத்தவர் நீங்கள்! எவ்வளவு பெரிய மனிதர்கள்! ஆனால் உங்கள் மூலம் தான் பாஷ்யம் ஐயங்கார் குறித்து அறிந்தேன். மேல் அதிகத் தகவல்களை அடுத்த சனிக்கிழமை கொடுக்கும்படி வேண்டிக்கொள்கிறேன். நான் இன்று வரை அறியாத ஒரு மனிதர். டாக்டர் ரங்காச்சாரி பற்றி என் தாத்தா கூறியும் அவர் குறித்த புத்தகம் திருமதி ராஜம் கிருஷ்ணன் எழுதியும் படிச்சிருக்கேன். பாஷ்யம் ஐயங்காரை அறிந்ததில்லை.

      நீக்கு
  8. கண்கள் மறைப்பதால் ஆங்காங்கே எழுத்துப் பிழைகள்! மன்னிக்கவும். :( இப்படியும் ஓர் நிலை வரும் என்பது எதிர்பாராத ஒன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சீக்கிரம் சரியாக எங்கள் பிரார்த்தனைகள் கீதா அக்கா. டேக் கேர்.

      நீக்கு
    2. கீதா சாம்பசிவம் மேடம்... உங்கள் கண் பிரச்சனை விரைவில் சரியாகட்டும். அதற்காகப் ப்ரார்த்திக்கிறேன்.

      நீக்கு
    3. நன்றி இருவருக்கும்.

      நீக்கு
    4. மருத்துவரிடம் சென்று வந்தீர்களா? மருத்துவர் என்ன சொல்கிறார்?
      கீதா உங்கள் கண் பிரச்சனை சரியாக வேண்டிக் கொள்கிறேன்.

      நீக்கு
    5. அம்பேரிக்காவில் இருந்து வந்ததும் மருத்துவரிடம் போனது தான். இப்போதைக்குப் போக முடியவிலை. போகவும் பயமாயும் கவலையாயும் இருக்கிறது. மருத்துவரே பயந்து கொண்டு அனைவரையும் பார்க்க வேண்டி இருக்கே!

      நீக்கு
  9. ரமா ஸ்ரீநிவாசன் வீட்டை வர்ணித்திருக்கும் விதமே அந்த வீட்டின் குளிர்ச்சியையும், அருமையான சூழ்நிலையையும் எடுத்துச் சொல்லுகிறது. இப்படியான ஒரு வீட்டில் வாழக் கொடுத்து வைத்திருக்கிறார். தோட்டங்களும், மரம், செடி, கொடிகளும் இல்லாத வீடும் ஒரு வீடா என்றே நான் முன்னர் நினைப்பேன். ஆனால் இப்போது? தவிர்க்க இயலாமல் இங்கே இருக்கோம்.

    பதிலளிநீக்கு
  10. நல்ல உள்ளங்களுக்கு பாராட்டுகள்... வாழ்த்துகள்...

    சிறு வயதுக் கதை.அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
      எல்லோருக்கும் உதவும் உள்ளங்கள் இருக்கும் வரை நம் சமுதாயத்துக்கு
      குறை இல்லை.
      திரு ஏகாந்தன் கொடுத்த சுட்டியும்,
      மற்ற விவரங்களும் நெகிழ வைக்கின்றன.

      இந்தத் தொற்று சீக்கிரம் பரவுவதைவிடப் பரவும் வம்பு
      கிளப்பும் பீதி அதிகமாகிறது.

      ஒரு பாதுகாப்புக் கவசம் இறைவன் எல்லோருக்கும்
      கொடுப்பான்.
      அனைத்து வைத்தியர்கள், நர்ஸ், அனைவரும்
      காக்கப் பட வேண்டும். சென்னையில்
      அம்மா வீட்டருகே இருவருக்கு வந்துவிட்டதாம். சுற்றி
      இருப்பவர்கள் பாதுகாப்போடு இருக்க வேண்டும்.

      ரமா ஸ்ரீனிவாசனின் சருக்கை இல்லம் பார்க்க அழகாக இருக்கிறது.
      இது போலக் கேள்விப்பட்டதில்லை.
      கனவு இல்லம் போலக் காண்கிறேன்.

      நல்ல நினைவுகள் நன்மையை மீட்டுத்தரட்டும். வாழ்த்துகள்.

      நீக்கு
    2. மற்ற செய்திகளையும் பத்திரிக்கையிலும்
      வாட்ஸாப்பிலும் படித்தேன்.
      நல் வாழ்த்துகள்.

      நீக்கு
    3. வாங்க வல்லிம்மா.. இனிய காலை வணக்கம். நன்றி. நல்ல காலம் பிறக்கட்டும் சீக்கிரம்.

      நீக்கு
    4. தனபாலன் சார், மிக்க நன்றி.

      நீக்கு
    5. வல்லி மாமி, அது நாங்கள் இருந்த வீடு அல்ல. வலை தளத்திலிருந்து எடுத்த போட்ட புகைப்படம்.

      நீக்கு
    6. நானும் அதான் நினைத்தேன்.

      நீக்கு
  11. அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்! இன்றைய நாள் அனைவரையும் நலமாய் வைத்திருக்கட்டும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய காலை வணக்கம் மனோ சாமினாதன் மேடம்... வாங்க..

      நீக்கு
  12. உதவும் உள்ளங்களின் செயல்பாடுகள் அருமை! அவர்களின் நல்ல ம‌னங்களுக்கு பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு
  13. ரமா சீனிவாசன் மிக அழகாய் தன் மலரும் நினைவுகளை எழுதியிருக்கிறார். ' வாழ்க்கை வாழ்வதற்கே ' திரைப்படப்பாடல் அவரின் ' சருக்கை ' கிராம வாழ்க்கைக்கு மிகப்பொருத்தமாக இருக்கிறது. என் தந்தை போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்ததால் நாங்களும் சிறு வயதில் கபிஸ்தலத்தில் வாழ்ந்திருக்கிறோம். அந்த நினைவுகளெல்லாம் இவரின் எழுத்தைப்படித்தபோது திரும்ப வந்து தாக்கின.

    பதிலளிநீக்கு
  14. எளிய மக்களுக்கு உதவி செய்த மதுரை படிக்கட்டுகள் இளைஞர்களும், புற்று நோயால் பாதிக்கப்பட்ட பெண் ஊர் திரும்புவதற்கு உதவிய மதுரை ஆட்சியர் மற்றும் சென்சிலுவை சங்கத்தினர்களும் போற்றுதலுக்குரியவர்கள். வாழ்க வளமுடன். மாஸ்க் இல்லாதவர்களுக்கு மாஸ்க் வழங்கும் அய்யருக்கு வணக்கங்கள்.

    பதிலளிநீக்கு
  15. //கோடை நாட்களே தெரியா வண்ணம் காற்று முன்புறமும் பின்புறமும்
    மோதி மோதி வீட்டை மிகக் குளிர்ச்சியாக வைத்திருந்தது. வெய்யில்
    உள்ளே புகாத மாதிரி வேலி முழுவதும் செடிகளாலும் கொடிகளாலும்
    மறைக்கப்பட்டு இருக்கும்.//
    ஆஹா! படிக்கும்பொழுதே குளுகுளுவென்றிருக்கிறதே! சருக்கை வாழ்க்கையை ரமா விவரித்திருக்கும் விதம் பிரமாதம். ரமாவுக்குள்  நிறைய ரமாக்கள் இருக்கிறார்கள் போலிருக்கிறதே!  

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரமாவிற்குள் இத்தனை ரமாக்கள் வரக் காரணமாக இருந்தவர்களை வல்லி மாம், நீங்கள் மற்றும் ஸ்‌ரீராம்தான் என்பதை மறுபடியும் நினைவு படுத்துகின்றேன்.

      நீக்கு
  16. ஆயிரம் இருந்தாலும்
    தஞ்சை மாவட்டத்தின் ஆற்றங்கரை வாழ்வு போல எங்குமே கிடைப்பதில்லை...

    அதைத் தாங்கள் சொல்லியிருக்கும் விதம்
    அருமை.. அருமை...

    கண்ணாரக் கண்டு கலந்து ஆடிய நாட்கள் நினைவுக்கு வருகின்றன...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. துரை சார், தஞ்சை என்பது மாவட்டமல்ல சார். அது தஞ்சை அம்பல நடராஜனின் உரைவிடம். மற்றும் பிரசித்தி பெற்ற வைனவ கோவில்களின் பூமி. ஈடு இணையற்றது. பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி.

      நீக்கு
    2. தில்லையம்பல நடராஜன் என்பதற்கு தவறாக தஞ்சை அம்பல நடராஜன் என்று எழுதி விட்டேன். மன்னிக்கவும்.

      நீக்கு
    3. அதனால் என்ன!..

      தஞ்சையும் அம்பலம் தான்..
      பெருவுடையாரின் பேரம்பலம்....

      ஓம் நம சிவாய...

      நீக்கு
    4. நானும் தஞ்சாவூர்தானுங்க....

      நீக்கு
    5. @ ர ஸ்ரீ - அப்போ படித்ததிலிருந்து, தஞ்சை, 'காளி'யின் உறைவிடமாச்சே. தில்லைனா அம்பலத்து நடராஜன் என்று நினைத்தேன். பின்னூட்டத்தில் எழுதணும்னு நினைத்தேன். அதற்குள் நீங்களே clarify பண்ணிவிட்டீர்கள்.

      நீக்கு
    6. தில்லை அம்பல நடராஜன் என்றே நான் புரிந்து கொண்டேன். ஸ்ரீராம் தஞ்சைக்காரங்க கிட்டே நானும் தஞ்சாவூர் என்பார். என்னை மாதிரி மதுரைக்காரங்க கிட்டே, நானும் மதுரை என்பார். இப்போச் சென்னை வாசிகளிடம் நானும் சென்னை தான் என்று சொல்லுவார்! :)))))))))))))

      நீக்கு
    7. ஹா.. ஹா.. என்னிடம் மட்டும் தேவகோட்டை என்று சொல்லவில்லை

      நீக்கு
    8. ஓ!...

      அம்பலம் என்றால் காளி இல்லாமலா!..

      தஞ்சையின் காளி கோயில்களைக்
      இதோ கேட்டுக் கொள்ளுங்கள்...

      ஸ்ரீ கோடியம்மன் (காளி) வடக்கு எல்லை
      ஸ்ரீ நிசும்பசூதனி - வடபத்திரகாளி
      ஸ்ரீ உக்கிர காளி - குயவர் தெரு
      ஸ்ரீ உஜ்ஜயினி மாகாளி
      ஸ்ரீ வடபத்திரகாளி - மேல அலங்கம்
      ஸ்ரீ பகளாமுகி - வடக்குராஜவீதி
      ஸ்ரீ வீரபத்திர காளி - வடக்கு அலங்கம்
      ஸ்ரீ ராஜகாளியம்மன் - தெற்குராஜவீதி
      ஸ்ரீ சியாமளா தேவி -
      நகர் முழுதும் சித்திர ரூபம்
      ஸ்ரீ எல்லையம்மன்
      நகர் நடுவே ஐயங்கடைத் தெருவில்
      ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி
      ஸ்ரீ செல்லியம்மன் - கரந்தை
      ஸ்ரீ தக்ஷிணகாளி - கரந்தை
      தெற்கு எல்லையில் அண்ணாநகர்..
      ஸ்ரீ ஏகௌரியம்மன் -
      மேற்கு எல்லையில் வல்லம்..
      ஸ்ரீ முத்து மாரியம்மன்
      கிழக்கு எல்லை புன்னை நல்லூர்..
      ஸ்ரீ வராஹி பெரிய கோயிலுக்குள்...

      ஓம் சக்தி ஓம்..

      நீக்கு
    9. ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி
      தெற்கு எல்லையில் அண்ணா நகர்...
      என்று வாசித்துக் கொள்ளவும்..

      நீக்கு
    10. // நானும் தஞ்சாவூர் என்பார். என்னை மாதிரி மதுரைக்காரங்க கிட்டே, நானும் மதுரை என்பார். இப்போச் சென்னை வாசிகளிடம் நானும் சென்னை தான் என்று சொல்லுவார்! :))))))))))))) //

      அதில் உண்மை இருக்கா இல்லையா?!!

      கில்லர் ஜி... தேவகோட்டை என் அத்தையூர்!

      நீக்கு
    11. தஞ்சை காளி - மாரியம்மன் கோயில்களில் இன்னும் சில விடுபட்டுள்ளன...

      இருபதுக்கும் மேலாக பெருமாள் கோயில்கள்.. இவற்றுள் நரசிம்மர் தலங்கள் இரண்டு...

      நகருக்குள் மட்டும் ஆறு முருகன் கோயில்கள்.. இவற்றில் மூன்று மேற்கு நோக்கியவை... ஒன்றில் மாசி மாதத்தில் சூரிய வழிபாடு...

      நீக்கு
  17. ர.ஸ்ரீ. அவர்களின் கிராமக் கதை நன்றாக இருக்கிறது. கபிஸ்தலம் என் அம்மாவின் பூர்வீகமும். அந்தப் பக்கம் போய்ப் பார்க்க ஆசை வருகிறது; பார்த்துத் திரும்பும்போது ஏமாற்றம்தான் கூடவே வரும் எனத் தெரிந்தும்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏகாந்தன் சார்.... கவித்தலம் பெருமாளைச் சேவிக்க எனக்கு மூன்று முறை கடந்த ஒரு வருடத்தில் வாய்ப்பு கிட்டியது. அதுதான் உங்கள் அம்மா வழி பூர்வீகமா? அது மூப்பனார் பூமியாச்சே..

      நீக்கு
    2. ஒரே வருடத்தில் மூன்று தரிசனமா! பெருமாள் கருணை. தஞ்சாவூர், கவித்தலம் என்று டூர் அடிக்கவேண்டியதுதான் எனத் தோன்றுகிறது.கவித்தலம் போனதேயில்லை.

      நீக்கு
    3. ஏகாந்தன் சார்... நீங்க கும்பகோணம் சுற்றியுள்ள கோவில்களுக்குப் போகணும்னா, கும்பகோணத்தில் 2 அல்லது அதிகபட்சம் 3 நாட்கள் தங்கினா போதும். கவித்தலத்தில், ரோடுக்கு அந்தப் பக்கம் சந்தில் சென்றால் பெருமாள் கோவில். எதிர்பக்கம் பள்ளிக்கூடத்தின் (மூப்பனார்) முன்பு உள்ள மைதானத்தின் வழியே சென்றால் அந்தக் காலத்தில் ஆற்றின் கரையில் இருந்த கிருஷ்ணன் கோவில் (ஆழ்வார் பாடிய கோவில்). வாய்ப்பிருந்தால் கும்பகோணம் சுற்றியுள்ள கோவில்கள் பாருங்க.

      பெருமாள் கோவில்கள் 14, முருகன் கோவில் 1, ஏராளமான சிவன் கோவில்கள் (பாடல் பெற்ற பழமையான), ஆர்வம் இருந்தால் பள்ளிப்படைகள் 2, தொல்துறையினால் பாதுகாக்கப்பட்ட இடங்கள் தாராசுரம், பெரிய கோவில் போன்றவை..

      உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கணும்னு ப்ரார்த்திக்கிறேன்.

      நீக்கு
    4. நன்றி நெல்லை. ஆழ்வார் பாடிய கண்ணன் எனப் படித்தேன். எந்த ஆழ்வார் எனத் தெரியவில்லை.

      நீக்கு
  18. ரமா ஸ்ரீநிவாசன் அவர்களின் கிராமத்து வாழ்க்கை மனதைக் கவர்ந்தது. அப்போதெல்லாம் எளிமை என்பது முதன்மையாக இருந்ததால் சக மனிதர்கள் மீது அன்பும் அக்கறையும் செலுத்துவதற்கு நேரமும் விசாலமான மனதும் இருந்தது.

    இதைப் படித்தபோது துளசி கோபால் அவர்கள், தன் தளத்தில் வெகுகாலம் முன்பு எழுதியிருந்த அவரது வாழ்க்கையை நினைவுபடுத்தியது. (அக்காவைப் பற்றிய கதை என்று நினைவு). அதேபோன்ற வீட்டைத்தான் நீங்களும் விவரித்திருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  19. ரமாஸ்ரீ,

    நினைவுகள் என்றுமே நித்யமானவை. அவற்றை மீட்டிப் பார்க்கத் தெரிந்தவர்கள் பாக்யசாலிகள். வாழ்க்கையின் வேக ஓட்டத்தில் சிலருக்கு மட்டுமே அது சாத்யமாகிறது. அந்த சிலரிலும் கோர்வையாக அதை இன்னொருவரிடம் பகிர்ந்து கொள்ளத் தெரிந்து மற்றவர்க்கும் தான் பெற்ற உணர்வை மடைமாற்றத் திறம் படைத்தவர்கள் வெகு சிலரே.

    உங்கள் சருக்கை கிராம வீட்டு வர்ணனைக்கு ஏற்ப அந்தப் பாடல் வெகு பொருத்தமாகவும், உற்சாகத்தைக் கொடுத்ததுமாக இருந்தது. இதே பாடல் சோக காட்சியில் பாடல் பொழுது மிக உருக்கமாக இருக்கும். இருப்பினும் அது வேறு நிலை என்பதினால் இப்போது வேண்டாம்.

    பதிலளிநீக்கு
  20. உதவும் கரங்களை வாழ்த்துவோம்.

    கிராமத்து வீடு படிக்கும் பொழுதே ஓலைக் கீற்று இதம் வீசியது. பழைய இனிய பாடல் பகிர்வும் மிகப் பொருத்தம்.
    எங்கள் பிறந்தவீட்டின் முன்புறம்,பக்கமும் உள்ள இரு வீடுகளும் இதே போன்றதுதான் நாங்கள் விடுமுறையில் பகல்பொழுதை அங்குதான் களிப்போம்.

    பதிலளிநீக்கு
  21. "படிக்கட்டுக்கள்" அமைப்பை சேர்ந்த சில பொறுப்பான இளைஞர்களுக்கு வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.
    மதுரை ஆட்சியருக்கு வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.
    ஆசிரியை வசந்தா அவர்களுக்கு வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.

    பாலாஜி சாஸ்திரிகளுக்கு வணக்கங்கள், வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  22. ரமா சீனிவாசன் அவர்களின் மலரும் நினைவில் பகிர்ந்த வீடு, மக்களின் அன்பு , அவர் பகிர்ந்த பாடல் எல்லாம் மிக அருமை.

    திருவெண்காடு, மாயவரம் ஆகிய ஊர்களில் வசித்து அன்பும், பண்பும் நிறைந்த எளிமையாக எல்லோருடனும் பழகும் மனிதர்களுடன் வசித்த காலங்கள் எனக்கும் மறக்காது. மதுரை வந்து இப்போது தனிமையை உணர்கிறேன். கொரோனா வந்தவுடன் மேலும் தனிமையை உணர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  23. வணக்கம் சகோதரரே

    இன்றைய பாஸிடிவ் செய்திகள் அருமை.
    உதவும் உள்ளங்களாய் அனைவரும் செயல்பட்டுள்ளனர், ஒரு குழுவாக உதவும் இளைஞர்கள், புற்று நோயால் பாதிக்கப்பட்டு இருந்த பெண்ணுக்கு உதவிய மதுரை மாநகர ஆட்சியாளர், அனைவருக்கும் பாராட்டுக்கள்.

    ஆசிரியை பொறுப்பிலிருக்கும் வசந்தா அவர்களின் மகத்தான சேவைகள் மலைக்க வைக்கிறது. அவருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். அனைவருக்கும் தன்னால் இயன்ற வரை இந்த கால கட்டத்தில் மாஸ்க் வழங்கி சேவை புரிந்து வரும் பாலாஜி சாஸ்திரி அவர்களின் சிறந்த சேவைகளுக்கு பணிவான வணக்கங்கள்.

    சகோதரி ரமா ஸ்ரீநினிவாசன் அவர்களின் மலரும் நினைவுகள் மிகவும் நன்றாக உள்ளது. அவர்களின் கிராம வாழ்க்கையும், அதற்கேற்ற பாடலையும், படிக்கும் போது மனதில் பசுமையாய் ஆனந்தம் பொங்குகிறது. அவர் அத்தையின் திருமண வைபோகம் சிறப்பாக நடந்ததை நினைவு கூறும் போது நம் வீட்டு திருமண வைபவம் ஒன்றை களிப்புடன் கண்டு களித்த மாதிரி மனதுக்கு நிறைவாக இருந்தது. இப்போது பெரிய மண்டபங்களில் நடத்தப்படும் திருமணங்களை விட அந்த காலத்தில் வீட்டின் வாசலில் ,தெருவை அடைத்து பந்தல் போட்டு உறவினர் அனைவரும் ஒரு வாரத்திற்கும் மேலாகவே வந்திருந்து கூடி செய்யும் திருமணங்கள் உண்மையிலேயே மகிழ்ச்சியானவை. மிகவும் அனுபவித்து தன் மலரும் நினைவுகளை இதமான தென்றலுக்கு சமானமாய் இங்கு பகிர்ந்து எங்களுக்கு ஆனந்தமூட்டிய சகோதரி ரமா ஸ்ரீநினிவாசன் அவர்களுக்கு மனம் நிறைந்த நன்றிகள். பகிர்ந்தளிந்த உங்களுக்கும் மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  24. நல்ல மனம் வாழ்க நாடுபோற்ற வாழ்க சிறு வயதில் எல்லாமே அழகுதான் ஆச்சரியம்தான்

    பதிலளிநீக்கு
  25. நல்லுள்ளங்கள் அனைவருக்கும் வாழ்த்துகளும் பாராட்டுகளும். ஒவ்வொருவரின் செயலும் சிறப்பானது.

    ரமா ஸ்ரீனிவாசன் அவர்கள் எழுதியதும் நன்று - கிராமிய வாழ்க்கை - மகிழ்ச்சிகரமானது. எங்கள் அம்மாவின் ஊருக்கு சில வருடங்கள் முன்னர் சென்று வந்தபோது கிராமிய மனிதர்களின் அன்பைக் கண்டு நெகிழ்ந்தோம்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!