1982 இல் வெளியான பயணங்கள் முடிவதில்லை திரைப்படம் அதன் இயக்குனர் ஆர் சுந்தராஜனுக்கு மட்டும் முதல் படமல்ல, கோவைத்தம்பி - அதாவது மதர்லேண்ட் பிக்சர்ஸுக்கும் அதுவே முதல் படம். ஆனாலும் அப்போது அவர் அதை மதர்லேண்ட் பிக்சர்ஸ் என்று அறிவிக்காமல் தயாரிப்பாளர்களாய் மூன்று பெயர்கள் சொன்னார்.
அரசியலில் இருந்ததால் கோவைத்தம்பி படத்தயாரிப்பாளராய் மாற தயங்கினாராம். அப்போது சக அமைச்சராய் இருந்த அரங்கநாயகம் தைரியம் கொடுத்ததால் படத்தயாரிப்பில் இறங்க, படம் வெள்ளி விழா கண்டது. தமிழகத் திரையரங்குகளில் ஒரு வருடத்துக்கும் மேல் ஓடி சாதனை படைத்த படம்.
இளையராஜா இசை, எஸ் பி பி குரல், ஆர் சுந்தராஜனின் திரைக்கதை அனைத்தும் பத்திரிகைகளாலும் பொதுமக்களால் பெரிதும் பாராட்டப்பட்டனவாம். புதுக் தயாரிப்பாளர், புது இயக்குனர் என்பதால் இந்தப் படத்தில் நடிக்க முதலில் பூர்ணிமா தயங்கினாராம். இளையராஜாதான் இசை என்று தெரிந்ததும் தேதி கொடுத்தாராம்.
இந்தப் படத்தின் பாடல்கள் எல்லாம் சூப்பர் ஹிட். வைகறையில் வைகைக்கரையில் பாடல் சுபபந்துவராளி ராக அடிப்படையிலும், மணி ஓசை கேட்டு எழுந்து பாடல் சிந்துபைரவி ராக அடிப்படையிலும், தோகை இளமையில் பாடல் லதாங்கி ராக அடிப்படையிலும் அமைக்கப்பட்டிருந்த பாடல்கள் என்று கங்கை அமரன் பின்னர் ஒரு பேட்டியில் சொல்லி இருந்தார். இந்தப் படத்தின் குத்துப்பாடல் வகையறாவான ஏ ஆத்தா ஆத்தோரமா பாடலிலும் கர்னாடிக் கலப்பு உண்டு என்று சொல்லி இருந்தார்.
பாடல்களை வைரமுத்து, கங்கை அமரன், முத்துலிங்கம் ஆகிய மூவரும் எழுதி இருக்கின்றனர்.
வைரமுத்து வரிகளில் எஸ் பி பாலசுப்ரமணியம் தனித்துப் பாடி இருக்கும் இந்தப் பாடலை ஹிந்தியில் கலாகார் என்று இந்தப் படத்தை எடுத்தபோது
அப்படியே
கிஷோரைப் பாட வைத்து எடுத்தார்கள். கிட்டத்தட்ட இதே ராகம். சரணங்களில் கிஷோர் கொஞ்சம் உயரத்துக்குப் போவார். இந்தப் பாடலில் கிடார் முக்கிய பங்கு வகிக்கும்.
இளைய நிலா பொழிகிறதே
இதயம் வரை நனைகிறதே
உலாப் போகும் மேகம்
கனாக் காணுமே விழாக் காணுமே
வானமே .....
வரும் வழியில் பனி மழையில்
பருவ நிலா தினம் நனையும்
முகிலெடுத்து முகம் துடைத்து
விடியும் வரை நடை பழகும்
வானவீதியில் மேக ஊர்வலம்
காணும் போதிலே ஆறுதல் தரும்
பருவ மகள் விழிகளிலே
கனவு வரும் ......
முகிலினங்கள் அலைகிறதே
முகவரிகள் தொலைந்தனவோ
முகவரிகள் தவறியதால்
அழுதிடுமோ அது மழையோ
அழுதிடுமோ அது மழையோ
நீலவானிலே வெள்ளி ஓடைகள்
போடுகின்றதே என்ன ஜாடைகள்
விண்வெளியில் விதைத்தது யார்
நவமணிகள்..
அடுத்து வரும் இதுவும் வைரமுத்து எழுதிய பாடல் . எஸ் பி பி - எஸ் ஜானகி பாடிய பாடல். காதலனைச் சந்திக்கக் காத்திருக்கிறாள் கைதூக்கிவிட்ட காதலி. காதலன் பிஸியாகிவிட்டான். நேரமில்லை அவனுக்கு. இடையில் காதலிக்கு ஒரு சிறு ' கால்ஷீட் ' கொடுத்து டூயட் பாடி மகிழ்வித்து, மகிழ்ந்து ஓடுகிறான்...
சாலை ஓரம் சோலை ஒன்று வாடும்
சங்கீதம் பாடும்
சாலை ஓரம் சோலை ஒன்று வாடும்
சங்கீதம் பாடும்
கண்ணாளனை பார்த்து கண்ணோரங்கள் வேர்த்து
கண்ணாளனை பார்த்து கண்ணோரங்கள் வேர்த்து.......
பாவை இவள் பார்த்து விட்டால் பாலைவனம் ஊற்றெடுக்கும்
கண்ணிமைகள் தான் அசைந்தால் நந்தவனக் காற்றடிக்கும்
நீங்கள் என்னை பார்த்தால் குளிரடிக்கும்
மனதுக்குள் ஏனோ மழை அடிக்கும்
ஹே பாரிஜாத வாசம் நேரம் பார்த்து வீசும்
பாரிஜாத வாசம் நேரம் பார்த்து வீசும்
மொட்டுக் கதவை பட்டு வண்டுகள் தட்டுகின்றதே இப்போது
கடற்கரை ஈரத்திலே காலடிகள் நீ பதிக்க
அலை வந்து அழுத்ததினால் கன்னி மனம் தான் துடிக்க
கடலுக்கு கூட ஈரமில்லையோ
நியாயங்களை கேட்க யாருமில்லையோ
சேர்த்து வைத்த தாகம் கண்ணா என்று தீரும்
சேர்த்து வைத்த தாகம் கண்ணா என்று தீரும்
பேசும் கிள்ளையே ஈர முல்லையே
நேரமில்லையே இப்போது
காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும் அன்ன நீரார்க்கே உள..
பதிலளிநீக்குநலம் வாழ்க..
நலமே விளைக
நீக்குஅன்பின் வணக்கம் அனைவருக்கும்..
பதிலளிநீக்குவணக்கம் துரை செல்வராஜூ ஸார்.. வாங்க...
நீக்குஇசையால் இனித்திடும் பாடல்கள்
பதிலளிநீக்குஇன்றைய பதிவில்...
82 ல் சிங்கப்பூரில் பார்த்தது இந்தப் படத்தை... அதற்குப் பின் ஒரு தடவை வீடியோவில் பார்த்தது...
திரு SPB அவர்களுக்கு நல்ல பெயர் கிடைத்தது...
பாடல்களில் ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாத வரிகள் என்று அப்போதே பேசப்பட்டது...
ஆமாம்... இரண்டாவது பாடலில் பாடலுக்கும் வரிகளுக்கும் என்ன சம்பந்தமோ என்று தோன்றும். அர்த்தமில்லா வரிகளால் கோர்க்கப்பட்ட பாடல்கள். ஆனால் எஸ் பி பி .
நீக்குஅந்தப் படம் மட்டும் புஸ்வாணம் ஆகியிருந்தால்!?...
பதிலளிநீக்குஆகி இருக்காது. ஆகி இருந்தால் வேறொரு படம் இவர்களைத் தூக்கி நிறுத்தி இருக்கும். ஆர் சுந்தர்ராஜனுக்கு(ம்) இளையராஜா பெரிய பலம்.
நீக்குஅதே.. அதே!...
நீக்குஅன்பு ஸ்ரீராம், அன்பு துரை, இன்னும் வரப் போகிறவர்களுக்கு இளங்காலை
நீக்குவணக்கம்.
ஆரோக்கிய வாழ்வு தொடர பிரார்த்தனைகள்.
பாடல்களால் ஓடிய படம்.
நீக்குஏதோ ஒரு பாடல் நடுவில் இருமல் வரும். அந்தப் பாடலைக் கேட்க
மாட்டேன்:)
மனம் மிக சங்கடப் படும்.
இளைய நிலா என்ன ஒரு இனிமை.
மிக உயர்த்திப் பேசப்பட்ட,ரசிக்கப் பட்ட வரிகள்.
எத்தனையோ காதல் கதைகளிலும்
இந்த வரிகள் பயன்படும்.
உயர்ந்த இசை, உருக வைக்கும் பாலு சாரின் குரல்.
கொஞ்சம் அழ வைத்த படம்.
கோடம்பாக்கம் கமலா தியேட்டரில் பார்த்தேனோ.
தோழியின் குடும்பமும் நானும் மகளும் இரண்டு வண்டிகளில்
சென்று
நைட் ஷோ பார்த்து விட்டுத் தூக்கம் வராமல் தவித்த இரவு.
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
நீக்குவாங்க வல்லிம்மா... வணக்கம். ஆமாம். அந்த நேரத்தில் பெரிதும் பேசப்பட்ட படம். முக்கிய காரணம் பாடல்கள்தான். இளையராஜா, எஸ் பி பி .
நீக்குஅனைவருக்கும் காலை/மாலை வணக்கம். அனைவர் வாழ்விலும் ஆரோக்கியம் செழிக்கவும், நோய்த் துன்பம் இல்லாமலும் இருக்க எல்லாம் வல்ல ஈசனைப் பிரார்த்திக்கிறேன்.
பதிலளிநீக்குவணக்கம் கீதா அக்கா... வாங்க... இணைந்து பிரார்த்திப்போம்.
நீக்குஇந்தப் படம் பார்த்ததில்லை. ஆனால் பாடல்கள் அனைத்தும் கேட்டிருக்கேன். பூர்ணிமாவுக்கு இது முதல் படம் இல்லையோ? மோகன் நடித்த படங்கள் எல்லாமுமே அப்போது வெள்ளிவிழாத் தான் கொண்டாடி இருக்கின்றன. அதனாலேயே திட்டமிட்டு ஓரம் கட்டப்பட்டார். பாவம். இவர் இறந்துவிட்டதாக வதந்தி வேறே பரப்பினார்கள்.
பதிலளிநீக்குமோகனுக்கு பயங்கர ராசி. மைக் வச்சிருந்த படங்கள்லாம் பயங்கர ஹிட். அவருக்கு வாய்ஸ் கொடுத்தது சுரேந்தர் (நடிகர் விஜய் உடைய தாய் மாமன்). ஈகோவினால் ஒரு படத்தில் சுரேந்தர் வேண்டாம் என்று சொல்லி தானே பேசினார். அதற்கப்புறம் அவர் மார்கெட் போயிடுச்சு.
நீக்குவயதானபிறகு சொந்தப் பணத்தில் படம் எடுத்து காணாமலேயே போய்விட்டார்.
மோகன் எய்ட்ஸில் இறந்ததாக வேறு கொடுமையாகப் பேசினார்கள். அப்புறம் அவரே நேரில் பேட்டி கொடுத்தார். ஆனால் நெல்லை சொல்வதுபோல எஸ் என் சுரேந்தர் குரல் இல்லை என்றானதும் அவர் வெற்றி பாதிக்கப்பட்டது.
நீக்குஇந்த விஷயங்களை எல்லாம் 'ஏதோ நடந்ததை நடந்த மாதிரி' விவரிக்கிற ஆர்வம் எங்கிருந்து வந்தது?
நீக்குமேற்கண்ட கேள்வி நெல்லைக்கானது.
நீக்கு//'ஏதோ நடந்ததை நடந்த மாதிரி'// - நாம புத்தகத்தில் படித்ததையோ இல்லை இன்னொரு பிரபலம் எழுதியதையோ சொல்கிறோம். நிறைய விஷயங்கள் எல்லோருக்கும் தெரிந்ததாக இருந்தால் சொல்வதில் அர்த்தம் இருக்காது. யாராவது, அப்படி இல்லை என்றால், படித்த புத்தகத்தை ரெஃபெரன்ஸுக்கு காமிக்க வேண்டியதுதான்.
நீக்குரெபரென்ஸ் காட்டுவதற்கு இதென்ன விஷிட்டாத்வைத
நீக்குவேதாந்த விளக்கமா?
நான் சொல்றதை நம்பலைனா என்ன பண்ணறது? Doubting Thomasகளுக்கு வேற எப்படித்தான் புரிய வைப்பது, நாங்க கிசுகிசு ஃபேக்டரி இல்லை, புத்தகங்களில் உள்ளதைத்தான் சொல்றோம் என்று.
நீக்குவாசிப்பில் எதற்கு எந்த அளவு முக்கியத்வம் அளிக்க வேண்டும் என்று இல்லை?
நீக்குநம்பறதை பற்றியா என் கேள்வி? அதுவும் இந்த குப்பைகளைப் பற்றி?
நீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
நீக்கு//வாசிப்பில் எதற்கு எந்த அளவு முக்கியத்வம் அளிக்க வேண்டும் என்று இல்லை?// - இதுவுமே ஒவ்வொருத்தரைப் பொறுத்து அளவீடு மாறும். என்னோட தாத்தாகிட்ட கேட்டால், 'சுந்தரகாண்டமோ இல்லை இராமாயணம் புத்தகமோ படிடா' என்பார். என் அப்பா, 'தேவன், கல்கி இவர்கள் எழுதினது நல்லாருக்குமே. இல்லைனா ஷேக்ஸ்பியர்' என்பார். அம்மா, அவங்க அளவீட்டின்படி, லக்ஷ்மி எழுதினது நல்லா இருக்குமே என்பார். பசங்கள்ட கேட்டால், 'போப்பா... அகதா கிறிஸ்டி, டான் ப்ரெளன்... 'என்று பெரிய லிஸ்டே இருக்கு என்பார்கள்.
நீக்குவாசிப்பதற்கு நான் தேர்ந்தெடுப்பது - அனுபவ நூல்கள்தாம். அதிலும் ஆன்மீக அனுபவங்கள், பெரியவங்க தன் வரலாறு, திரையுலகைச் சேர்ந்தவங்க எழுதும் வரலாறு போன்றவை. அதற்கு அப்புறம் லைட் ரீடிங். நாவல், சிறுகதை - இவற்றிலெல்லாம் ஆர்வமே இல்லை. முன்பு சிவசங்கரி, சுஜாதா போன்ற புகழ் பெற்ற பலரின் தொடர்கதைகளைப் படித்திருக்கிறேன் - அதாவது கல்லூரிக்காலங்களில். இப்போ அந்த நாவல்களில் பலதையும் திரும்பப் படிக்க இயலாது (அவங்களுக்கே என் அளவீட்டில் அந்தக் கதி. அப்போ மத்த பழைய சிறுகதை, நாவல், தொடர்கதை எல்லாம் - என் அளவீட்டின் படி வேஸ்ட் ஆஃப் டைம்) சுஜாதாவின் கற்றதும் பெற்றதும், எப்போது வேணும்னாலும் திரும்பப் படிக்கலாம், காரணம் அனுபவம். அவருடைய பக்தி நூல்களும் அந்த மாதிரித்தான்.
அதனால 'வாசிப்பு' என்பது இப்படித்தான் இருக்கவேண்டும் என்று யாரும் சொல்லுவது கடினம். நமக்கே 'வாசிப்பின் அளவீடு'கள், வயது மாற மாற, மாறிக்கொண்டே இருக்கும். இப்போ உட்கார்ந்து, அணில் பத்திரிகை, இரும்புக்கை மாயாவி போன்ற காமிக்ஸ் புக்ஸ் படித்தால், அல்லது 'பாக்கெட் நாவல்' படித்தால் பார்க்கிறவங்க சிரிப்பாங்க.
நெல்லை,
நீக்குசினிமா என்பது மிகப்பெரிய முதலீடு சமாச்சாரம். சிலரை லைம் லைட்டில் வைத்துக் கொண்டிருப்பதற்காக எதையாவது எழுதிக் கொண்டு தான் இருப்பார்கள். அதெல்லாம் வியாபார சம்பந்தப்பட்ட விஷயம் என்ற தெளிவு நமக்கு வேண்டும்.
சிவாஜிக்கு எப்பொழும் ஊஞ்சலில் உட்கார்ந்து தான் பழக்கம். அதுவும் வலது காலை மடித்து இடது காலை
தொங்கப் போட்டுகொண்டு தான் உட்காருவார் என்று எதிலாவது எழுதி படித்திருந்தீர்கள் என்று வைத் துக் கொள்ளுங்கள். பத்து வருஷங்களுக்கு அதை நினைவில் வைத்துக் கொண்டு சிவாஜிக்கு எப்பொழுதும் வலது காலை மடித்து என்று ரிபீட் பண்ணக்கூடாது. இது குழந்தைத்தனம். அதைத்தான் சொல்ல வந்தேன்.
பெரும்பாலும் வெள்ளி இடுகைத் தலைப்பைப் பார்த்து பாடல் நினைவுக்கு வருகிறதா என்று யோசிப்பேன். இன்றைய தலைப்பு, நியாயங்களோ பொதுவானது, புரியாமல் போனது... பன்னீர் புஷ்பங்களே. என்றுதான் மனதில் ஓடினதே தவிர பாடல் பிடிபடவில்லை. நீங்கள் கொடுத்துள்ள பாடலின் இரண்டாவது சரணம் மனதில் பதிந்ததே இல்லை
பதிலளிநீக்குஇவ்வளவு பாப்புலரான இரண்டு பாடல்கள். மிக அருமை.
இந்தப் படம் பாளை அசோக்கில் பார்த்தேன். டைரக்டரைப் பற்றி சிவகுமார் எழுதியிருந்தது நினைவில் வருகிறது.
சாலையோரம் பாடல் மிக அருமை.
நீக்குஇயற்கையாக எடுக்கப் பட்ட காட்சிகள். 80 களின்
மௌண்ட் ரோட்.
இளைய மோகன், இளைய பூர்ணிமா.
மைக் மோகனாக உருவெடுக்கக் காரணமாக
இருந்த படமோ?
பாடல்வரிகளில் ''பாரிஜாதம்'' அடிக்கடி
உபயோகிக்கப் பட்ட காலம். ஏன் என்று தான் தெரியாது.
தெரிந்து செய்தார்களோ, தெரியாது.
தலையில் சூட்டிக் கொள்ளாத,கடவுளுக்கு மட்டுமே அர்ப்பணிக்கப் படும் மலர்.
நம் அன்புக்குரிய பாலு அவர்கள்
நல்லபடி மீண்டு வர வேண்டும்.
கண்டவர்கள் காணாதவர்கள் எல்லோரும் அவர் உடல் நிலையைப்
பற்றிப் பேசாமல் இருந்தாலே நன்மை.
ஒரு அமிதாப் பச்சன் மீண்டால் நம் பாடும் நிலாவும் மீள முடியும்.
நம்பிக் காத்திருப்போம்.
அன்பு ஸ்ரீராம் மிக நன்றிமா. மிக மகிழ்ச்சியுடன் இரு பாடல்களையும்
ருசித்து ரசித்தேன்.
இளைய நிலாவைப் பற்றி சொல்லாமல் போக முடியுமா.
நீக்குஎன்ன ஒரு இனிமை.
மோஹன், சேகர், பூர்ணிமா, அந்த இன்னோரு நடிகை
எல்லோருமே தூள் கிளப்பி இருப்பார்கள்.
மீண்டும் நன்றி ஸ்ரீராம்.
அந்த கிடார் இசை. மறக்க முடியாத பாடல்.
அப்படியா... அந்தப் பாடலா நினைவுக்கு வந்தது நெல்லை? ஆச்சர்யம்தான். நான் மதுரையில் பார்த்தேன்.
நீக்குஆமாம் வல்லிம்மா... அந்தக்கால சென்னையை காட்சிகளில் பார்க்கலாம். பாரிஜாதம் என்று சொன்னதும் எனக்கு இன்னொரு பாடலும் நினைவுக்குவ வருகிறது.
நீக்குடைரக்டர் சுந்தர்ராஜன், வசனம் எதையும் எழுதி வைக்கமாட்டாராம். சிவகுமார் ஒரு படத்தில் தன் ஸ்க்ரிப்ட் கேட்டபோது, படப்பிடிப்பில் சொல்கிறேன் என்று சொன்னாராம். கதையிலேயே என் மைன்ட் ஓடிக்கிட்டே இருக்கு. காட்சி எடுக்கும்வரை வசனத்தை மெருகேற்றுவேன். இதில் உங்கள்ட முந்தின நாள் வசனம் கொடுத்து மறுநாள் எல்லாத்தையும் மாற்றினால் நல்லா இருக்காது, என்றாராம்.
பதிலளிநீக்குபடம் (இந்தப் படமா இல்லை வை கா வா நினைவில்லை. ) வெற்றிபெற்ற பிறகு, அடுத்த படத்துக்கு சம்பளமா தி நகர் பங்களா ஒன்றை வாங்கினாராம் (எவ்வளவு சம்பளம்னு கேட்கறீங்க. இந்த வீட்டை வாங்கணும். இவ்வளவு லட்சம் வேணும்னு சொல்லி அதற்கான பணம் பெற்றுக்கொண்டாராம்)
சிவகுமார் சம்பவம் கேள்விப்பட்டிருக்கிறேன். தி நகர் பங்களா விஷயம் கேள்விப்பட்டதில்லை.
நீக்குகொடுமையப்பா! இந்த அளவுக்கா பத்திரிகையில் வாசிப்பது அத்தனையையும் நம்புவது?
நீக்குநான் நேரிடையாக தெரிந்த விஷயத்தையே 'இவரை பாதிக்குமோ அவரை பாதிக்குமோ' என்று பொதுவில் சொல்ல ஆயிரம் முறை யோசிக்கிறேன்.
//அத்தனையையும் நம்புவது?// - கலைஞானம் (திரைக்கதை ஆசிரியர், நடிகர், படங்கள் தயாரித்தவர்) தன் வரலாறு புத்தகம் (5 வால்யூம்) எழுதியிருக்கிறார். நிறையபேரால் மதிக்கப்பட்டவர். சிவகுமார், தான் அறிந்த திரையுலக மனிதர்கள் பற்றி எழுதியிருக்கிறார். அதுபோல, வாலி, கண்ணதாசன், கங்கை அமரன், சாருஹாசன், மற்றும் பலர். பத்திரிகை கிசுகிசுக்களை நம்ப முடியாது. ஆனால் இந்த மாதிரி புத்தகங்களை நம்பலாம். அவர்கள் உயிரோடு இருக்கும்போது தொடராக பத்திரிகையில் எழுதியது அல்லது புத்தகமாகப் போட்டது.
நீக்குஇப்போ, அப்படி இல்லை, எனக்கு சுந்தர்ராஜனை பெர்சனலா தெரியும் என்று நீங்கள் சொன்னால், எந்தப் புத்தகத்தில் படித்தேனோ அந்தப் புத்தகத்தின் ரெஃபரென்ஸ் கொடுக்க முடியும்.
'நம்புவது' - இந்த சந்தேகம் இருந்தால் எதையுமே சொல்ல முடியாது, நம்முடன் வாழும் மனைவி, குழந்தைகளைப் பற்றியும். காரணம், ஒரு உண்மைக்குப் பல கோணங்கள் உண்டு. ஒரே உண்மை, பலருக்கும் பலவிதமாகத் தோற்றமளிக்கும், பொய்யாக மாறிவிடும்.
குழப்பமான பதில். பிரபலங்களைப் பற்றி வரும் செய்திகளைக் கேட்டால் வீடு வரை வார்க்கிறீர்களே?
நீக்கு* வருகிறீர்களே?
நீக்குஇன்றைய பாடல் பகிர்வு அருமை.
பதிலளிநீக்குநன்றி நெல்லை.
நீக்குஇப்படத்தில் அனைத்து பாடல்களும் சிறப்பானதே...
பதிலளிநீக்குநன்றி ஜி.
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா அக்கா... வணக்கம். இணைந்து பிரார்த்திப்போம்.
நீக்குஅனைத்து பாடல்களும் கேட்டுக் கொண்டே இருக்கலாம்...
பதிலளிநீக்குThank you DD.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய பாடல் இரண்டுமே அடிக்கடி கேட்டு ரசித்த இனிமையான பாடல்கள்தான். இந்த படமும் அப்போது அதிசயமாக திரையரங்கிற்கே சென்று பார்த்துள்ளேன். சென்னையிலிருக்கும் போது, நானும் என் பெரிய நாத்தனார் பெண்ணும், கோடம்பாக்கம் ராம் தியேட்டரில் படம், பாடல்கள் நன்றாக உள்ளதாம் என்ற அவளின் வறுப்புறுத்தலால் பார்க்கப் போனோம். அப்போது அங்கெல்லாம் தனியே சென்று பழக்கமில்லையாததால் வழி விசாரித்து கொண்டே இந்தப் "பயணங்கள் முடிவதில்லை" போலும் எனப் பேசிக் கொண்டே சென்று படத்தைப் பார்த்து விட்டு வந்தது இன்றும் மலரும் நினைவாக வந்தது.
படத்தைப்பற்றிய தகவல்களும். இனிய பாடல்களும் மனதை கவர்ந்தன. நன்றி.
உன்னத பாடகர் திரு.எஸ்.பி.பி நலமடைந்து வர நானும் மனமாற பிரார்த்தித்துக் கொண்டேயிருக்கிறேன். பாடல் பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
எஸ் பி பி நலம் பெற இணைந்து பிரார்த்திப்போம். நன்றி கமலா அக்கா.
நீக்குபாடல் பகிர்வு அருமை. தகவல்களும் இனிய பாடல்களும் மனதை கவர்ந்தன.
பதிலளிநீக்குநன்றி அன்பு.
நீக்குஅனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்!
பதிலளிநீக்குஅவ்வளவாக பிரபலம் ஆகாத, ஆனால் இனிமையான டூயட் பாடல் மறுபடியும் கேட்க இனிமையாக இருக்கிறது!
ஆனால் ' இளைய நிலா ' பாட்டு தான் என்றும் சாகா வரம் பெற்ற பாடல்! எல்லா மேடைகளிலும் எஸ்.பி.பி அவர்கள் பெரும்பாலும் இந்தப்பாடலைப்பாடுவார். அவர் ' இளய நிலா' என்று ஆரம்பித்தவுடனேயே கரகோஷம் விண்ணை எட்டும். எத்தனையோ பாடல்கள் பாடி, எத்தனையோ பேர்களுக்கு எப்போது கேட்டாலும் குரல் வழியாக இனிமையையும் இதத்தையும் தருபவர்! இந்தக்கொடிய நோயின் தாக்குதலிலிருந்து அவர் மீண்டு வர வேண்டும்! ஒரு வாரமாக அலைப்புறும் மனதுடன் என் பிரார்த்தனையும் தொடர்கிறது!
இணைந்து பிரார்த்திப்போம் மனோ சாமிநாதன் மேடம். நன்றி.
நீக்குஇரு பாடல்களுமே மனதைக் கரைய வைக்கும் பாடல்கள். அதுவும் எஸ். பி. பி. அவர்களின் வாயிலிருந்து முத்துக்களில் இரண்டு. கேட்க வேண்டுமா.
பதிலளிநீக்குஉலகே அவருக்காக பிரார்த்திருக்கின்றது. நல்லதே நடக்கும் என்று அழுத்தமாக நம்பினால் நிச்சயம் நடந்துவிடும்.
ஆமாம். நன்றி ரமா ஸ்ரீநிவாசன்,
நீக்குஇரண்டு பாடல்களுமே சூப்பர் . இதுதான் முதல் தடவையாகப் பாக்கிறேன் . சினிமா டிவி பார்க்கும் பழக்கம் அவ்வளவாக இல்லை
பதிலளிநீக்குநன்றி சகோதரி அபயா அருணா.
நீக்குஸ்ரீராம் இன்று செம ம்யூசிக்கல் மூவி போல!
பதிலளிநீக்குஇந்தப் படத்தின் பாடல்கள் அனைத்துமே ஹிட். அதுவும் எஸ்பிபி சான்ஸே இல்லை. இந்த இளைய நிலா பொழிகிறது...செம
எல்லா பாட்டுமே பிடிக்கும். அதிசயமா எங்க காலேஜ்ல இந்தப் படத்தை போட்டாங்க. ஆச்சரியம். எங்க காலேஜ்ல இப்படியான படங்கள் எதுவும் போட மாட்டாங்க. அதிசயம்.
ஆனா ஏற்கனவே பார்த்த பசங்க இந்தப் படம் சோகம்னு சொன்னதும் நான் பார்க்கவே இல்லை. வெளியில் உட்கார்ந்து பாடல்களை மட்டும் கேட்டேன். ஹா ஹா ஹா சோகம்னா ரொம்ப யோசிப்பேன் பார்க்க.
அதே போல ரயில் பயணங்கள் படமும், வைதேகி காத்திருந்தாள் போட்டாங்க. பார்க்கலை
கீதா
நன்றி கீதா.
நீக்குரெண்டு பாட்டுமே ரொம்பப் பிடிக்கும். மீண்டும் கேட்டு ரசித்தேன் ஸ்ரீராம்.
பதிலளிநீக்குகீதா
நன்றி கீதா.
நீக்குஇனிமையான பாடல்கள். மாலையில் தான் பாடல்களைக் கேட்க வேண்டும்.
பதிலளிநீக்குநன்றி வெங்கட்.
நீக்குஇளைய நிலா பாடல் கொஞ்சம் என் இனிய பொன் நிலாவே போல இருக்கும். ஆனால் எஇபொநி வெஸ்டர்ன் ஸ்டைல் கொஞ்சம். நடபைரவி பேஸ் என்று தெரிகிறது.
பதிலளிநீக்குஏ ஆத்தா பாடல் காபி மிக்ஸ்..என்று தெரியுது. தண்ணி தொட்டி தேடி வந்த பாடல் பேஸ் காபி.
கீதா
நன்றி கீதா.
நீக்குஇனிமையான பாடல்கள் இரண்டும்.
பதிலளிநீக்குஇரண்டு பாடல்களையும் கேட்டேன்.
எஸ். பி. பி. விரைவில் நலம் பெற வேண்டும்.
நன்றி கோமதி அக்கா.
நீக்குஇரு பாட்டுமே சூப்பர்... அதிலும் முதலாவது .... பாட்டு என்பதை விடக் கவிதை என்றே சொல்லலாம்... எப்பவும் நான் கேட்டு ரசிக்கும் வசனங்கள்...
பதிலளிநீக்குஅதிலும் வானம் பார்க்கும் போதெல்லாம் இந்த வரிகள்தான் நினைவுக்கு வரும்....
///முகிலினங்கள் அலைகிறதே
முகவரிகள் தொலைந்தனவோ
முகவரிகள் தவறியதால்
அழுதிடுமோ அது மழையோ///
எஸ் பி பி அங்கிள் விரைவில் நலம்பெற நானும் பிரார்த்திக்கிறேன்.
நன்றி அதிரா.
நீக்குநான் இந்தப் படம் பார்த்திருக்கிறேன். அருமையான பாடல்கள். இங்கு நீங்கள் பகிர்ந்திருப்பது உட்பட.
பதிலளிநீக்குரசித்தேன் ஸ்ரீராம்ஜி.
துளசிதரன்
நன்றி துளஸிஜி.
நீக்குஇளைய நிலா பாட்டு எங்கள்வீட்டில் அனைவருக்கும் பிடித்தபாட்டு என் மூத்தமகன் பாட என் இளைய மகன் ட்ரம்ஸ் வாசிக்க அந்தக்காலத்கில் எல்லோரையும் கவர்ந்த பாடல்
பதிலளிநீக்குஅப்படி ஒரு வீடியோ நீங்கள் அனுப்பி நான் கேட்டிருக்கிறேன் என்று ஞாபகம். நன்றி ஜி எம் பி ஸார்.
நீக்குஎனக்கு எந்த வீடியோவையும் அனுப்பிய நினை வில்லை மறதி பற்றியது நிறையவே எழுதலாம்
நீக்குஇளைய நிலா.. அருமையான பாடல். எஸ் பி பி அபாரமாகப் பாடியிருக்கிறார். இளையராஜாவின் இதமான இசை. வைரமுத்து நல்ல வரிகளைத் தந்த காலகட்டம்.
பதிலளிநீக்குஇளைய நிலா அருமையான மனம் கவர்ந்த பாடல்
பதிலளிநீக்கு