சனி, 29 ஆகஸ்ட், 2020

++ செய்திகள் ++ நன்றி : தினமலர்

இந்த வார பாசிடிவ் செய்திகள் அனைத்தும் தினமலர் - telegram  app  மூலம் காணப்பட்டு - இங்கே தொகுத்து அளித்திருக்கின்றேன். 

லண்டன் : லண்டனில் உள்ள புகழ்பெற்ற ஸ்வாமிநாராயண் கோவிலின் வெள்ளி விழாவை முன்னிட்டு, பிரிட்டன் இளவரசர் சார்லஸ், சிறப்பு, 'வீடியோ' செய்தியை வெளியிட்டுள்ளார்.

ஐரோப்பிய நாடான பிரிட்டனின் தலைநகர் லண்டனில், பி.ஏ.பி.எஸ்., எனப்படும், 'போச்சாசன்வாசி ஸ்ரீ அக்ஷர் புருஷோத்தம் ஸ்வாமி நாராயண் சன்ஸ்த்' அமைப்பால் நிர்வகிக்கப்படும், ஸ்வாமி நாராயண் கோவில் உள்ளது. பிரம்மாண்டமாக காட்சியளிக்கும் இந்த கோவிலுக்கு,1995 ஆகஸ்ட், 20ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. இந்த கோவிலுக்கு, பிரதமர் போரிஸ் ஜான்சன், இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல தலைவர்கள் வந்து சிறப்பு பூஜைகள் நடத்தியுள்ளனர்.

பி.ஏ.பி.எஸ்., தன்னார்வலர்கள் உள்ளிட்ட ஹிந்து சமூகத்தினர், ஆதரவற்ற மக்களுக்கு தொடர்ந்து பல உதவிகளை செய்து வருகின்றனர். ஏழை எளிய மக்களுக்கு மதிய உணவு வழங்குதல், முதியோருக்கு தேவையான உதவிகளை செய்தல் போன்ற பல அளப்பறியபணிகளை செய்து வருகின்றனர். அவர்களை நினைத்து பெருமைப்படுகிறேன். இவ்வாறு, அவர் கூறினார். இந்த கோவிலுக்கு, இளவரசர் சார்லஸ், நான்கு முறை சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

===


அமெரிக்காவில் கொரோனா தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் பல தனியார் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இந்த மருந்துகளை உணவு மற்றும் மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு பரிசோதனை செய்துவருகிறது. தற்போது, அமெரிக்க மருந்து நிறுவனம் ஒன்றின் ஆயின்மென்டை உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அங்கீகரித்துள்ளது.


latest tamil news

'இந்த ஆயின்மென்ட் கொரோனா உட்பட பல வைரஸ் காய்ச்சல்களை உடலுக்குள் செல்லாமல் போக்கவல்லது' என, அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 'இந்த ஆயின்மென்டின் லேப் பரிசோதனையின் போது, டி3-எக்ஸ் சோதனை முடிவுற்று, 30 வினாடிகள் ஆனபிறகு, எந்த வைரசும் கண்டுபிடிக்கப்படவில்லை' என, இந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

latest tamil news

அமெரிக்காவின் இந்தியானா மற்றும் டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த இந்த மருந்து நிறுவனத்தின் தலைமை நிர்வாகி டாக்டர் பிரயான் ஹூப்பர் கூறுகையில், ''கொரோனா வைரஸ் மூக்கு துவாரங்கள் வழியாகவே அதிக அளவில் உடலுக்குள் செல்கின்றது. எங்கள் மருந்து நிறுவனத்தின் ஆயின்மென்டை தடவிக்கொண்டால் கொரோனா வைரஸ் உடலுக்குள் செல்வதைத் தவிர்க்கலாம்.
தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு ஒருபக்கம் ஆராய்ச்சி நிலையில் இருந்தாலும் வருமுன் காப்பதே சிறந்தது. இந்த ஆயின்மென்டை தினசரி தடவிக்கொண்டு தாராளமாக வெளியே செல்லலாம். இதன்மூலம் பயமின்றி நாம் எதிர்வரும் மனிதர்களை எதிர்கொண்டு பேசலாம். விரைவில் இந்த ஆயின்மென்ட் விற்பனைக்குவரும்,'' எனக் கூறியுள்ளார்.

====

புதுடில்லி: ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் - அஸ்ட்ரா ஜெனெகா கண்டுபிடித்துள்ள ‛கோவிஷீல்ட்' தடுப்பூசி, 73 நாட்களில் வணிகமயமாக்கப்படும் என பிசினஸ் டுடே வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தேசிய நோய்த்தடுப்பு திட்டத்தின் (NIP) கீழ் இந்தியர்களுக்கு கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

====


====

மனிதநேயம்,மாயசங்கிலி , கொரோனா, மனங்கள்,தமிழரசன்

திருநெல்வேலி : விளிம்பு மனிதர்களுக்கு உதவ துாரம் ஒரு பொருட்டல்ல..ஏழ்மை ஒரு காரணமல்ல என நிரூபித்திருக்கிறார் சைக்கிளில் டீ விற்று பிழைப்பு நடத்தும் இளைஞர் தமிழரசன். சென்னையில், கணவன் இல்லாமல் இரண்டு குழந்தைகளுடன் வறுமையில் வாடிய பெண் ஒருவருக்கு சொந்த செலவில் தையல் மெஷின் வாங்கி கொடுத்து, பலரது பாராட்டையும் பெற்றுள்ளார்.

link : 

===

டேராடூன்: காயமடைந்த பெண் ஒருவரை, ஸ்ட்ரெக்சரில் வைத்து 40 கி.மீ., தூரத்தை, 15 மணி நேரம் நடைபயணமாக இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் கடந்துள்ளனர்.

உத்தரகாண்டின் தொலை தூர கிராமமான லாப்சாவுக்கு போக்குவரத்து வசதிகள் எதுவும் இல்லை. அங்கு பெண் ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார். அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடிவு செய்த இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த ஜவான்கள், 40 கி.மீ., தூரத்திற்கு அப்பெண்ணை ஸ்ரெக்சரில் தூக்கிய படி பயணித்துள்ளனர்.

15 மணி நேரம் நடைபயணமாக பித்தோராகரில் உள்ள முன்சாரிக்கு அப்பெண்ணை தூக்கி கொண்டு வந்தனர். வழியில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நல்லா பகுதியையும், நிலச்சரிவு பகுதிகளையும் அவர்கள் கடந்து வந்தனர். அப்பெண்ணுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு நலமுடன் உள்ளதாக, இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படை தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

        

====

கோவா: கொரோனா தொற்றுக்கு எதிராக முழு பாதுகாப்பு அளிப்பதோடு, அணிவதற்கு ஏற்ற வகையிலான பல்நோக்கு முகக்கவசத்தை கோவாவை சேர்ந்த டிசைனர் ஒருவர் வடிவமைத்துள்ளார்.


latest tamil news

கொரோனா பரவல் காரணமாக உலகம் முழுவதும் மக்கள் முகக்கவசம் அணிய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. முகக்கவசம் பயன்படுத்துவதில் டாக்டர்கள் முதல் விமானப்பணியாளர்கள் வரை பலரும் சிரமத்தை அனுபவித்து வருகின்றனர். இந்நிலையில், கோவாவை சேர்ந்த தொழில்துறை வடிவமைப்பாளரான தீபக் பதானியா, கொரோனாவில் இருந்து முழுமையான பாதுகாப்பிற்காக ஒரு தனித்துவமான, 'மல்டி மாஸ்க்' ஒன்றை வடிவமைத்துள்ளார்.


இது குறித்து தீபக் பதானியா தெரிவித்துள்ளதாவது:இது எதிர்கால முகக்கவச தேவைகளுக்கு ஒரு தீர்வாக இருக்கும். புதிய பல்நோக்கு முகக்கவசமானது முகத்தில் சரியாக பொருந்தும். முகக்கவசம் எந்தவொரு கயிறும் இல்லாமல் இருப்பதால், தேவைப்படாத சமயத்தில் எளிதாக கழற்றி கொள்ளலாம். பயனர்கள் பேசும் போது, ஒலி வடிப்பான் வழியாக மட்டுமே உள்ளே செல்வதால் தெளிவாக கேட்க முடியும்.

latest tamil news


முகக்கவசத்தின் அனைத்து பகுதியையும் எளிதில் கழுவ முடியும் என்பதால் பயோ கழிவுகளை குறைக்கலாம். மேலும் எதிர்காலத்தில், முகக்கவசத்தை எலெக்ட்ரானிக் பில்டர், ஆடியோ, வீடியோ பதிவு போன்றவற்றிற்கும் பயன்படுத்தி கொள்ளலாம். என்னுடைய தயாரிப்பு உலகின் சிறந்தவற்றுடன் போட்டியிட வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. கிரவுடு பண்டிங் இயங்குதளங்களில் தயாரிப்புக்கு நிதி திரட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். மேலும் ஒரு பொருளை முன்கூட்டியே விற்பனை செய்வது மூலதனத்தை உருவாக்குவதற்கான ஒரு சிறந்த வழியாகும்.இவ்வாறு அவர் கூறினார்.

புனேவை சேர்ந்த வடிவமைப்பு நிறுவனத்துடன் இணைந்து பல்நோக்கு முகக்கவசத்திற்கு இறுதி வடிவமைப்பு, கருவி மற்றும் உற்பத்தி செயல்முறை பணிகளில் பதானியா ஈடுபட்டு வருகிறார். உலகில் வேறு எங்கும், இதேபோன்ற முகக்கவசம் வடிவமைக்கப்பட்டுள்ளதா என்று ஆராய்ந்த பின், இதற்கு காப்புரிமை வழங்கப்படும்.


===


கொரோனாவால் பல மாதங்களாக பள்ளிகள் பூட்டிக்கிடக்கின்றன. டிவி, ஆன்லைன் வழியாக பாடங்கள் கற்பிக்கப்படுகிறது என்றாலும், ஆசிரியர்கள் நேரடியாக சொல்லி கொடுப்பது பே ால் வருமா? அதனால்தான், தொட்டியப்பட்டி அரசு பள்ளி தலைமை ஆசிரியர் மூர்த்தி, மாணவர்களின் வீடுகளுக்கு சென்றே பாடங்களை கற்றுத்தந்து வருகிறார். தொட்டியப்பட்டி அரசு பள்ளியில் 13 குக்கிராமங்களை சேர்ந்த 57 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். தினமும் ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்று நான்கைந்து மாணவர்களை வரவழைத்து வீட்டு திண்ணை, மரத்தடி என கிடக்கும் கிடத்தில் சமூகவெளியுடன் அமரவைத்து பாடம் நடத்தி வருகிறார்.


====



++++++++++++++++ 


42 கருத்துகள்:

  1. இன்றைய பாசிடிவ் செய்திகள் அருமை. கோவிலில் ஆழம்பித்து, கல்வியில் முடிந்திருப்பது சிறப்பு

    பதிலளிநீக்கு
  2. அன்பின் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
    நல்ல செய்திகளைத் தொகுத்துத் தந்திருக்கும் கௌதமன் அவர்களுக்கும் நன்றி.

    அனைவரும் நோய்த் தொற்று இல்லாமல்
    அனைத்து நலன் களும் பெற இறைவனும் இறைவியும் அருளுவார்கள்.

    பதிலளிநீக்கு
  3. முகக் கவசம் மிக அற்புதம். நம் இந்தியர்களின் பெருமை
    சொல்ல அரிதே.

    வீட்டுக்கு வந்து பாடம் சொல்லித்தரும் உபாத்தியாயர் என்றும் நலமுடன் வாழ்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்க வாழ்க, வாழ்வில் நல்லவர் என்றும் கெடுவதில்லை இது நான்கு மறை தீர்ப்பு!

      நீக்கு
  4. 15 மணி நேரம் நடைபயணமாக பித்தோராகரில் உள்ள முன்சாரிக்கு அப்பெண்ணை தூக்கி கொண்டு வந்தனர். வழியில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நல்லா பகுதியையும், நிலச்சரிவு பகுதிகளையும் அவர்கள் கடந்து வந்தனர். அப்பெண்ணுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு நலமுடன் உள்ளதாக, இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படை தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.யயய

    வணங்குகிறோம் ஐயா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓர் உயிரைக் காப்பாற்ற, இத்தனை மனிதர்களால் இவ்வளவு பிரயத்தனம் செய்ய முடிகிறது என்பது மிகவும் அசாதாரணமான விஷயம்தான். நன்றி.

      நீக்கு
  5. காவல் துறை கான்ஸ்டபிளுக்கு,சைக்கிள் காவலருக்கு
    மனம் நிறை வாழ்த்துகளும், பாராட்டுகளும்.
    யூ டியூபு என்ன எல்லாம் சொல்லித்தருகிறது!!!!

    பதிலளிநீக்கு
  6. அமெரிக்காவில் ஆயிண்ட்மெண்டா. கேள்விப்படவே இல்லையே.
    மிக மிக நன்றி. விசாரித்துப் பார்க்கலாம்.
    வெளியே போவதே இல்லை.
    போகிறவர்களுக்கு நல்ல உபயோகமாகும்.

    பதிலளிநீக்கு
  7. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  8. ஸ்வாமி நாராயணன் கோவில் பற்றி அறிய மிக மகிழ்ச்சி. இளவரசரும்
    வந்திருக்கிறார். மத நல்லிணக்கம் ஓங்கட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த (கிழட்டு) இளவரசர் சரக்கு இல்லாத ஆளு! (நம்ம ராகுல்ஜி மாதிரி!) அவங்க நாட்டு மதிப்பீடே இப்படி.. (சே, அரசியல் பேசக்கூடாதுப்பா, அதுவும் சனிக்கிழமையில..)
      ஏதோ பொழுது போகல, செய்யறதுக்கு ஒன்னுமில்ல, கூப்பிட்டிருப்பானுங்க, வந்துட்டாரு, அதுக்காக நல்லிணக்கம், மதம், இதம் என்றெல்லாம் அதீதக் கற்பனை தேவையில்லை!

      ஸ்வாமி நாராயண் மந்திர் பொதுவாக குஜராத்திகளால் சிறப்பாக நடத்தப்படுவது. நைரோபியில் (கென்யா) ஒரு அருமையான ஸ்வாமி நாராயண் மந்திர் இருக்கிறது. பஜன், பூஜை, பிரசாதம் எனத் தூள்பறக்கும், குறிப்பாக சனி, ஞாயிறுகளில்..

      நீக்கு
    2. தகவல்களுக்கு நன்றி ஏகாந்தன் சார்.

      நீக்கு
    3. மனிதர்கள் ஒற்றுமையாக வாழ்ந்தார்கள்..

      அதுவரைக்கும் சரி.. ஆனால்
      மத நல்லிணக்கம் என்பது ஊடகங்களாலும் அரசியல்வாதிகளாலும் உருவாட்டப்பட்ட ஒரு மாயை...

      நம் முதுகில் பிறர் குதிரை ஏறுவதற்கு அனுமதிப்பதே - எம்மதமும் சம்மதம்

      தற்காலத்தில் மத நல்லிணக்கம் என்பதன் அர்த்தம் வேறு..

      நீக்கு
  9. வணக்கம் சகோதரரே

    இன்றைய பாஸிடிவ் செய்திகள் அனைத்தும் ஊக்கமளிக்கின்றன.

    கோவில் செய்தி நன்று. வைரஸ் தடுப்பூசி, ஆயின்மெண்ட் போன்ற செய்திகள் இந்த தொற்று நம்மை விட்டு வெகு விரைவில் விலகி விடும் என்ற நம்பிக்கை அளிக்கின்றன. மனித நேயமுள்ள தமிழரசன் போன்றோருக்கு நாம் என்றும் தலை வணங்குவோம்.

    இந்த கொரோனா காலத்திலும் கிராமந்தோறும் சென்று குழந்தைகளுக்கு பாடம் நடத்தி படிப்பறிவு தரும் பள்ளி தலைமை ஆசிரியருக்கு வாழ்த்துகள். பாராட்டுக்கள். அனைத்து நல்ல பாஸிடிவ் செய்திகளை பகிர்ந்தமைக்கு தங்களுக்கு மனம் நிறைந்த நன்றிகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  10. நல்ல உள்ளங்கள் உலகில் இன்னும் வாழத்தான் செய்கின்றார்கள். வாழ்த்துவோம்...

    பதிலளிநீக்கு
  11. பெருமனம் படைத்தோருக்கு பாராட்டுகள். காயம் அடைந்த பெண்..தொடர்பான செய்தி நெகிழ வைத்தது.

    பதிலளிநீக்கு
  12. நல்ல குணம் தயாள சிந்தை உடையவர்களால் இந்த மண் சிறப்பு எய்துகின்றது...

    நல்ல சிந்தனைகளாலும் செய்கைகளாலும் இப்பூமியினை வளப்படுத்துவோம்...

    பதிலளிநீக்கு
  13. அமெரிக்க ஆயின்ட்மென்ட் செய்தி புத்தம்புதிது. இளவரசர் சார்ல்ஸ் தான் எப்போதும் மீடியாவின் கவனத்தில் இருப்பதற்காக ஏதேனும் செய்தாகணுமே! பாவம்! போனால் போகட்டும். அந்த இன்ஸ்பெக்டர் செய்திக்குக் கீழே சைகிளில் தேநீர் விற்ற பையர்

    பற்றிய செய்தியை முழுவதும் விசாரித்துவிட்டு முகநூல் நண்பர்கள் செய்தி முழுக்க
    முழுக்கப் பொய் என்று போட்ட பதிவைத் திரும்பப் பெற்றனர். அந்தப் பையர் தன்னை
    அம்பேரிக்காவில் வேலைக்குக் கூப்பிட்டதாகவும் எல்லாம் சொல்லி இருந்திருக்கார். நானும் கூடப் பகிர்ந்திருந்தேன். நண்பர் இந்தச் செய்தி பொய் என்றார். இவரே வேலை தேடிச் சென்னை சென்றதாகவும் சான்றிதழ்களைத் தொலைத்துவிட்டதாகவும் ஒரு செய்தி! மற்றவற்றில் இந்தோ - திபெத் வீரர்களின் சாதனை தொலைக்காட்சியிலும் வந்தது. குழந்தைகளைத் தேடிச் சென்று வீடுகளில் பாடம் எடுக்கும் ஆசிரியர்களைப் பற்றியும் தொலைக்காட்சி மூலம் அறிய நேர்ந்தது.

    பதிலளிநீக்கு
  14. நல்ல செய்திகள் தொகுப்பு அருமை!

    பதிலளிநீக்கு
  15. இன்றைய பாஸிடிவ் செய்திகள் எல்லாம் நல்ல உள்ளங்களை காட்டுகிறது.
    அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    //இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த ஜவான்கள், 40 கி.மீ., தூரத்திற்கு அப்பெண்ணை ஸ்ரெக்சரில் தூக்கிய படி பயணித்துள்ளனர்.//

    15 மணி நேரம் நடந்து அந்த பெண்ணின் உயிரை காப்பற்றியது மிகவும் உன்னதமான செயல் அவர்கள் கடவுள் அனுப்பி வைத்தவர்கள் அவர்களை வணங்கி வாழ்த்துகிறேன்.

    பதிலளிநீக்கு
  16. //ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்று நான்கைந்து மாணவர்களை வரவழைத்து வீட்டு திண்ணை, மரத்தடி என கிடக்கும் கிடத்தில் சமூகவெளியுடன் அமரவைத்து பாடம் நடத்தி வருகிறார்.//

    "ஆசிரியர் பணி அறப்பணி" அதற்கு தன்னை அர்ப்பணித்து இருக்கும் ஆசிரியருக்கு வாழ்த்துக்கள், வணக்கங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் அந்த வகை அர்ப்பணிப்புகள் இந்தக் காலத்தில் அரிதாகிவிட்டன.

      நீக்கு
  17. இன்றைய பாசிட்டிவ் செய்திகள் அனைத்தும் நன்று. அனைவருக்கும் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  18. பாசிடிவ் செய்தி தொகுப்பு வித்தியாசமாய் இருக்கிறதோ

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!