திங்கள், 7 டிசம்பர், 2020

'திங்க'க்கிழமை : சப்பாத்தி (ஏடாகூடமாக ) Stuffed

 நீண்ட நாட்களாய் கிடப்பில் இருந்த திட்டம் ஒன்றைச் செயல்படுத்தினேன்!  வீட்டில் அண்ணனும் அவர் மகனும் வந்திருக்க அன்று இதைச்செய்ய முடிவெடுத்தேன்.


கொஞ்சம் வேலை இழுக்கும் வேலை!  பொருள் செலவும் கூட!  ஒருமுறைதானே என்று செய்யத் துணிந்தேன்.


முட்டைகோஸ் (இதெல்லாம் அதில் போடுவார்களா என்று கேட்கக்கூடாது) வெங்காயம், பீன்ஸ் (10) குடைமிளகாய், பட்டாணி, கொஞ்சம் கேரட், இவற்றுடன் உருளைக்கிழங்கை வேகவைத்து (இது இல்லாமலா) அதையும் சேர்த்துக் கொண்டேன்.​  மற்ற காய்களை வதக்கிக்கொண்டு அதில் உப்பு காரப்பொடி சேர்த்து உருளைக்கிழங்கை உதிர்த்து, பனீரை (இது வேறயா?) துருவிச் சேர்த்தேன்.





மேலே வலதுபுறம் இருப்பது இறுதி வடிவம்!


இன்னொரு பக்கம் கேரட், பீட்ரூட் துருவிக் கொண்டேன்,  அதை வதக்கிக்கொண்டு லேசாக சர்க்கரை சேர்த்துக்கொண்டேன்.


சப்பாத்திக்கான அப்பளங்களை மாமியார் இட்டுக்குவித்து விட்டார்.  கொஞ்சம் மெதுவாக இட்டிருந்தால் சில திருத்தங்களை அவ்வப்போது செய்து கொண்டிருப்பேன்.  

ஒரு அப்பளத்தை எடுத்து அதில் முதலில் கேரட், பீட்ரூட், தேங்காய்த்துருவல் கலவையை இட்டு, அதனை இன்னொரு அப்பளத்தால் மூடி, முனைகளை பூட்டி, 






அதேபோல இன்னொரு செட் அப்பளத்தில் மற்றொரு கலவையை இட்டு இதே போல 










கல்லில் போட்டு சுட்டு எடுத்துச்....


சாப்பிட்டோம்.


இப்படிச் செய்யலாம்தான்.  ஆனாலும் நான் நினைத்தபடி இப்படிதான் செய்ய வேண்டும் என்று நினைத்துச் செய்தது..




செய்தபின் சாப்பிட பின் சில யோசனைகள் தோன்றின.  கோஸ் வேண்டாம்.  பனீரை வில்லைகளாகப் போடலாம்,  குடைமிளகாய் கூட வேண்டா.......மோ...  காரம் தெரியாதது ஒரு குறை.  ஒரு உள்ளார்ந்த காரம் இருந்து சாப்பிட்டு முடித்தபின் நாக்கில் தெரிவது குறை.

116 கருத்துகள்:

  1. செல்வத்துட் செல்வம் செவிச் செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை..

    நலம் வாழ்க...

    பதிலளிநீக்கு
  2. அன்பின் வணக்கம் அனைவருக்கும்...

    நலம் வாழ்க என்றென்றும்...

    பதிலளிநீக்கு
  3. மாயா பஜார் மர்மயோகி மாதிரி இருக்கிறது.. யாருடைய பதிவு என்று தெரிய வில்லையே!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்ப் என்னுடையது தான்

      நீக்கு
    2. நாந்தான்.  நாந்தான்...   நானேதான்!  ஸ்ரீராம்!  போன வாரமே பேஸ்புக்கில் முன்னோட்டம் கொடுத்திருந்தேனே..  பார்க்கவில்லையா?!!

      நீக்கு
    3. //அப்ப என்னுடையது தான்//

      ஹா..   ஹா...  ஹா...

      நீக்கு
    4. ஸ்ரீராம் முகநூலிலேயே இந்தக் காய்கள் நறுக்கிய படத்தைப் போட்டு என்ன செய்யப் போகிறார் என்பதை யூகிக்கும்படி சொல்லி இருந்தார். பரிசு ஏதும் அறிவிக்காததால் நான் சொல்லவில்லை. ஆனால் இதான் இருக்கும் என எதிர்பார்த்தேன்.

      நீக்கு
    5. முகநூல் என்பது official பெயரா
      அல்லது எல்லாவற்றையும் தமிழ்ப்படுத்தும் பேர்வழிகளின் அட்டூழியமா?

      கூகில் வாட்ஸப்பையும் தமிழ்ப்படுத்த வேண்டியது தானே?

      நீக்கு
    6. நான் அநேகமாய் ஃபேஸ்புக் என்றே எழுதிக் கொண்டிருந்தேன். பின்னர் மாற்ற வேண்டி வந்தது. வாட்சப்பிற்குப் புலனம்னோ என்னவோ சொல்றாங்க. யூ ட்யூபிற்கு உன் குழல் என்றெல்லாம் மொழிபெயர்ப்பு இருந்தது. இப்போ ஏதோ மாற்றி இருக்காங்க. ஒரு பட்டியல் வந்தது. ஆனால் சேமிக்கவில்லை. :)))))

      நீக்கு
    7. கீதா அக்கா.. யூகித்திருந்தால் என்னிடம் மெஸேஜில் கேட்டிருப்பீர்களே! ஹி..ஹி.் ஹி..

      நீக்கு
    8. அப்பாஜி..். வாட்ஸாப்பையும் தமிழ்ப்'படுத்தி' இருக்கிறார்கள். கட்செவி அஞ்சல்!

      நீக்கு
    9. இந்தி தெலுங்கு கன்னடத்துல இப்படி பண்றாங்களா? தமிழருக்கு மட்டும்தான் இந்தப் பெருமையா? எல்லாரையும் நல்லா நாலு சாத்து சாத்தினா சரியாப் போயிடும்.

      நீக்கு
    10. கட்செவியா? அதெப்படி? என்னமேலே அல்லது தூயமாக யாதுமேலே?

      நீக்கு
    11. அது எனக்குத் தெரியாது. அப்படிதான் சொல்கிறார்கள்.

      நீக்கு
    12. ஃபேஸ் புக் என்று டைப் பண்ணுவதை விட முகநூல் என்று டைப்பண்ணுவது சுலபம்.

      நீக்கு
    13. தமிழை வளர்க்க வேண்டும் என்பதற்காக இப்படி ஆங்கில வார்த்தைகளை மொழி பெயரக்க ஒரு டிபார்ட்மெண்டே தமிழக அரசில் இயங்குகிறது.

      நீக்கு
    14. நல்லா வளருது தமிழ். :-)

      நீக்கு
    15. Youtube க்கு உன்குழாய் என்றா மொழிபெயர்த்திருக்கிறார்கள்?

      நீக்கு
    16. பானுமதி, தமிழக அரசில் மட்டுமல்ல, மத்திய, மாநில எல்லா அரசுகளிலும் இப்படி ஒரூ மொழிபெயர்ப்புத்துறை முக்கியமான மொழிகளில் உண்டு. அலுவலர்கள் உண்டு. தமிழ்நாட்டில் ஹிந்தி பிரசார சபாவில் ஹிந்தி படிச்சுட்டு மத்திய அரசுத் துறைகளில் ஹிந்தி மொழிபெயர்ப்பாளராகப் பணி புரிபவர்கள் உண்டு.

      நீக்கு
    17. குழம்பி என்றெல்லாம் மொழிபெயர்த்து  குழப்புவார்கள்.

      நீக்கு
  4. Creative.. சப்பாத்தி போல் உப்பி வருமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நடுவில் இவ்வளவு ஸ்டஃப் வைக்கும்போது உப்பிதானே இருக்கும்!!!  இன்னும் கொஞ்சம் கூட குறைவாய் வைத்து பரப்பி விடலாம்!

      நீக்கு
    2. பார்க்க நன்றாக இருக்கிறது... சுவை எப்படி?
      Worth the effortஆ?

      நீக்கு
    3. கண்டிப்பாக...   நன்றாய் இல்லாமல் இருக்குமா?

      நீக்கு
    4. செய்து பார்க்கத் தூண்டுகிறது.

      நீக்கு
    5. முயற்சித்துப் பாருங்கள்.

      நீக்கு
  5. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். அனைவர் வாழ்விலும் ஆரோக்கியமும் மகிழ்ச்சியும் பெருகப் பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  6. நான் சின்னவளாய் இருக்கும்போது (இப்போ மாதிரிக் குழந்தை இல்லை) எங்க மாமியெல்லாம் வெஜிடபுள் கட்லெட் என்னும் பெயரில் இந்த மாதிரி ஒன்றைப் பண்ணித் தருவார்கள். தக்காளிச் சட்னியோடு சாப்பிட்டிருக்கோம். ஆனால் அப்போ பீட்ரூட், காரட், உ.கி.வெங்காயம் தவிர்த்து வேறே ஏதும் போடலைனு நினைக்கிறேன். பட்டாணி எல்லாம் அப்போ அபூர்வம். கொடைக்கானலில் இருந்து வரும் டபுள் பீன்ஸ், பட்டர் பீன்ஸ் இவைதான் அதிகம் பார்த்திருக்கேன். கூட்டு வகைகளில் போடுவாங்க, இல்லைனா சுண்டல் மாதிரிப் பண்ணுவாங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்போல்லாம், நான் சொல்வது அறுபதுகளில், கட்லெட்டின் உண்மையான வடிவமோ, செய்முறையோ, எப்படிப் பண்ணுவாங்க என்பதோ தெரியாது. ஆனால் சென்னை வாசிகள் உட்லன்ட்ஸ் ட்ரைவ் இன் கட்லெட் பற்றிப் பெருமையாகப் பேசுவாங்க. ஒரு சில கதைகளில் கட்லெட்டும் பீச்மெல்பாவும் கதாநாயகன், கதாநாயகி சாப்பிட்டதாக வரும். அப்போ யோசித்து இப்படித் தான் இருக்கும் என நினைத்துக் கொண்டு பண்ணுவார்கள். நாங்களும் கட்லெட் சாப்பிட்டதாகப் பெருமையாய்ச் சொல்லிப்போம். இஃகி,இஃகி,இஃகி

      நீக்கு
    2. ஆமாம்.  டைவர்ஸ் கதையிலோ வேறு எதிலோ...  

      நீக்கு
    3. அப்படியா? டைவர்ஸ் பிவிஆரோடது, அதிலேயா? ஆனால் நான் நினைத்துக் கொண்டது சேவற்கொடியோன் எழுதிய உன் கண்ணில் நீர் வழிந்தால் என்னும் நாவல். அதில் தான் கதாநாயகன் நடராஜன் (?) கதாநாயகியுடன் மெரினா பீச்சிலோ, லவர்ஸ் பீச்சிலோ "பீச் மெல்பா" சாப்பிட்டதாக வரும்.

      நீக்கு
    4. எனக்கும் நிச்சயமாய்த் தெரியவில்லை.

      நீக்கு
  7. ஒரு சின்ன குறிப்பு. இப்படி இரண்டு இரண்டு சப்பாத்திகளை ஒன்று சேர்க்காமல், மாவைச் சின்ன வட்டமாக இட்டுக் கொண்டு காய்களை நிரப்பிக் கொழுக்கட்டையை மூடுவது போல் மூடிக் கொண்டு பின்னர் எண்ணெய்/நெய்யைத் தொட்டுக் கொண்டு கைகளால் தட்டிப் பெரிசு பண்ணலாம். அல்லது பழக்கம் இருந்தால் குழவியால் இட்டுக் கூடப் பெரிசாக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதுவும் நல்லா இருக்கும் போல இருக்கு

      நீக்கு
    2. இரண்டு விஷயங்கள்.. நீங்கள் சொல்வது போலும், மாவிலேயே கலந்தும் முன்னர் செய்து பதிவிட்டிருக்கிறேன். இரண்டாவது அப்பளம் இட்டது மாமியார். மெஷின் போல செய்து கடைசி விட்டுச் சென்றுவிடுவார !

      நீக்கு
    3. grrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr அவங்க வயசுக்கு இவ்வளவானும் செய்யறாங்களேனு யோசிங்க! :(

      நீக்கு
    4. குறையாச் சொல்லவிலையே...   பதிவிலேயே குறிப்பிட்டிருக்கிறேன் என்று நினைக்கிறேன்.   நாமே செய்துகொண்டால் அவ்வப்போது சில மாற்றங்கள் செய்து கொள்ளலாம்!

      நீக்கு
  8. திரு தனபாலன் அவர்களுக்கு என்ன ஆச்சு? நலமாய் இருக்கிறார் தானே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நலமாயிருக்கிறார் என்று நம்புகிறேன். வாட்ஸாப்பில் விசாரித்திருந்தேன். அதன்பின் அவர் பலமுறை வாட்ஸாப் வந்தும், இதைத் திறந்து பார்க்காமல் தவிர்க்கிறார்.

      நீக்கு
    2. நான் அவரை செல்ஃபோனில் அழைத்தேன். என் அழைப்பை அவர் ஏற்கவில்லை.

      நீக்கு
    3. உடல் நலமாக இருந்தால் சரி! இப்போக் காலம் சரியாக இல்லையே! அதான்!

      நீக்கு
  9. காய்களைப் பொடியாக நறுக்கி இருந்தால் வெஜிடபுள் சாதம் எனவும், துருவலாக இருந்தால் சப்பாத்திக்கு எனவும் யூகிக்கக் கஷ்டமாக இருக்காது ஸ்ரீராம். நான் உங்களிடம் கேட்கணும்னு தோணலை, அவ்வளவு தான். மனதை அத்தனை விஷயங்கள் ஆக்கிரமித்துக் கொண்டு இருப்பதால் இப்போதெல்லாம் மனம் பதிவது கஷ்டமாக இருக்கிறது. :))))))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சும்மாதான் வம்பிழுக்கக் கேட்டேன்.  அவ்வளவுதான்!  இது ஒன்றும் பெரிய ப்ரமாதமில்லை.

      நீக்கு
  10. பதில்கள்
    1. அனைவருக்கும் இனிய காலை வணக்கம். மிகப் பிரமாதமான
      மசாலா சப்பாத்தி செய்து அசத்தி விட்டார். ஸ்ரீராம்.
      ஏன் பாஸ் பெயரைப் போடவில்லை???

      நீக்கு
    2. இது போல அருமையான மாமியார் கிடைப்பது
      அபூர்வம் .வாழ்த்துகள்.
      அசந்துவிட்டேன் உங்கள் முயற்சியைப் பார்த்து.
      எத்தனை சுத்தம் அ....எத்தனை வண்ணம்.
      அருமையான படங்கள்/.

      எல்லாம் சேர்ந்து சென்னையில் இல்லையே என்று தோன்றியது.

      நீக்கு
    3. கு கு?   அது யார் கீதா அக்கா?

      நீக்கு
    4. வாங்க வல்லிம்மா...  வணக்கம்.  பாஸ் கொஞ்சம் கொஞ்சம் உதவி செய்தார்தான்!

      நீக்கு
    5. //கு கு? அது யார் கீதா அக்கா?//

      @ஸ்ரீராம், அநியாயம், அக்கிரமம்! நான் பதில் சொல்லப்போவதில்லை. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

      நீக்கு
    6. குட்டிக் குஞ்சுலு..். என்ன சொல்றீங்கன்னு பார்த்தேன்!

      நீக்கு
    7. சமாளிப்ஸ்? யாரோ சொல்லிக் கொடுத்துட்டாங்க போல! :)))))))

      நீக்கு
    8. கிர்ர்ர்ர்ர்.............  எனக்குத் தெரியாதா?

      நீக்கு
  11. பீட் ரூட் வைத்து செய்தது கிடையாது.
    மற்ற கறிகாய்களை வைத்து மூடி ,சப்பாத்தி இட்டு
    செய்ததுண்டு.
    மனம் நிறை பாராட்டுகள் ஸ்ரீராம். அண்ணா என்ன சொன்னார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அண்ணா ரசித்துச் சாப்பிட்டார்.  அபிப்ராயம் எல்லாம் கேட்டால்தான் சொல்வார்!  நான் கேட்கவில்லை!  பாஸ் கேட்டபோது நன்றாயிருக்கு என்றார்.

      பீட்ரூட் கலவைதான் ரொம்ப நன்றாய் இருந்தது.

      நீக்கு
    2. கார போளி, இனிப்பு போளி போலத்தானே!

      நீக்கு
    3. அப்படிச் சொல்ல முடியாது..  கொஞ்சம் வேறு டேஸ்ட்.

      நீக்கு
  12. இன்று சின்னப் பேரனுக்குப் பிறந்த நாள்.
    கேக் செய்து முடித்தோம். முட்டையெல்லாம்
    போடுவதில்லை.
    படம் பின்னர் அனுப்புகிறேன்.
    அனைவரும் வளமுடன் நலமுடன் இருக்கப்
    பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பேரனுக்கு என் சார்பாக பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவிக்கவும்.

      நீக்கு
    2. பேரன் பிறந்தநாளுக்கு எங்கள் வாழ்த்துகளையும் சொல்லுங்கள்.

      நீக்கு
    3. சின்னப் பேரனுக்கு (கிரூஷ்ணா தானே?) இனிய பிறந்த நாள் வாழ்த்தூகள். மகளிடமும் சொல்லி விடுங்கள். எங்க வீட்டிலேயும் முட்டைபோடாத கேக் தான் எப்போவுமே.பையர், பெண் இருவருமே வீட்டில் செய்தாலும் சரி, ஆர்டர் பண்ணினாலும் சரி, முட்டை சேர்க்க மாட்டார்கள்.

      நீக்கு
    4. நன்றி கீதாமா. ஆமாம் கிருஷ்ணா தான்:)

      நீக்கு
    5. கண்டிப்பா ஶ்ரீராம் .நன்றி மா. சொல்கிறேன்.

      நீக்கு
  13. இத்தனை சிரமப்பட்டு செய்வதை தின்று முடிப்பது வெகு சீக்கிர்ம் அது சரி நாக்கு கேட்டால் சிரம்ப்பட வேண்டியய்தே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புதுமாதிரி (என்று நினைத்துக் கொண்டு) செய்து, அதை எல்லோரும் ரசித்துச் சாப்பிட்டால் அதுதான் பெரிய திருப்தி!  இலையா ஜி எம் பி ஸார்?  இல்லையா அப்பாஜி?

      நீக்கு
  14. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  15. படங்கள் எடுத்துத் தள்ளிவிட்டீர்கள். அருமை.

    ஸ்டஃப்டு சப்பாத்தி 2 சாப்பிடுவதே கடினம். பனீருக்குப் பதில் சீஸ் ஷீட் இன்னும் ருசியைக் கூட்டியிருக்கும். காரம் குறைவு அல்லது அதிகம் என்ற குறை வந்துவிட்டால் சிறிது ஊறுகாயோ (நார்த்தங்காய், அப்புறம் ஊட்டி ஊறுகாய் கிடையாது) கெட்டித் தயிரோ தொட்டுக்கலாம்.

    நல்ல செய்முறை. நன்றாக வந்திருக்கு, பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ப்ரம்மர் பட்டம் என்று சொல்ல வந்திருக்கிறார்.

      இவங்களுக்கு இந்த மாதிரி வ.வா.பி.ரி என்பது போல சுருக்கித்தான் எழுதத் தெரியும் போலிருக்கு. விரிவா அதனைப் படிக்கத் தெரியாது போலிருக்கு. ஹாஹா

      நீக்கு
    2. ஸ்ரீராம் மாதிரி இந்த மாதிரி உழைப்புலாம் நமக்குக் கிடையாது சாமி. ஸ்டஃப்ட் சப்பாத்தி பார்க்கவே ரொம்ப அழகா இருக்கு. ருசியும் நல்லா இருந்திருக்கும். யார்ட்ட கன்ஃபர்ம் பண்ணுவது?

      நீக்கு
    3. வ.வா.பி.ரி என்றால் ஈஸியாகப் புரிந்து விடுமே என்று அப்படி எழுதினேன்!!!

      நீக்கு
  16. புதுப் பாத்திரங்களில் ஸ்டிக்கர் ஒட்டி விட்டுடறாங்க. கையால் கிழிப்பது, பிறகு மெடல் ஸ்க்ரப்பரை வைத்துத் தேய்ப்பது சரிப்படாது.

    அரை மணி நேரம் ஃப்ரீசரில் வைத்துவிட்டு வெளியே எடுத்து சுலபமா பிரித்துவிடலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ...  அப்படியா?  டிப்ஸுக்கு நன்றி.

      நீக்கு
    2. புது பாத்திரங்களை அடுப்பில் சில நிமிடங்கள் வைத்து எடுத்தால் சுலபமாக ஸ்டிக்கரை அகற்றலாம்..அந்த பசையையும் சற்றே சூடுபண்ணி தேங்காயெண்ணெய் விட்டு டிஷ்யூ பேப்பரால் துடைத்தால் போய்விடும்.

      நீக்கு
  17. வணக்கம் சகோதரரே

    இன்றைய திங்கள் பதிவில், தங்களது செய்முறையாக வெஜிடபுள் கார, இனிப்பு சப்பாத்திகள் வெகு அருமையாக வந்துள்ளது. படங்களும் மிக அழகாக உள்ளது.சோம்பலில்லாமல் சப்பாத்திகளை இட்டுத்தந்த தங்கள் மாமியாருக்கு பாராட்டுக்கள். அது வட்டமான அழகுடன் இருக்க வேண்டுமானால்,ஒரு பெரிய மூடி வைத்து நீங்கள் ஒவ்வொரு சப்பாத்திகளையும் வெட்டி திருத்திக் கொண்டிருக்கலாமே...!

    சப்பாத்திகளை ஒன்றின் மேல் வைத்து மூடிய போது உள் பக்கம் நன்றாக வெந்திருந்ததா? நல்ல திறமையுடன் பொறுமையாக செய்துள்ளீர்கள். அனைத்து காய்கறிகளும் சேரும் போது சுவை நன்றாகத்தான் இருந்திருக்கும். நான் காய்கறிகளை மாவில் கலந்து செய்துள்ளேன். இப்படியும் முயற்சிக்கிறேன். உங்களுக்கு வாழ்த்துகளுடன் பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் மாவில் கலந்து, அரைத்துச் சேர்த்து என்றெல்லாம் ஏற்கெனவே முயன்றிருக்கிறேன் கமலா அக்கா..    இதுமாதிரியும் செய்யலாமே என்று செய்தது.  காய்களை ஏற்கெனவே கொஞ்சம் வதக்கி விட்டதில் பிரச்னை இல்லாமல் வந்திருந்தது.  சுவையாக இருந்தது.

      நீக்கு
  18. நேற்று நான் பூரி மசால், நெல்லை முறைல செய்தேன். நேரமின்மை... கொஞ்சம் பூரி இட்டு, பொரிக்க parallelஆ மேனேஜ் பண்ண கடினமா இருந்தது. மனைவி, பெண்ணை இட்டுத்தரச் சொல்லுங்கோ என்றாள். நான் அவங்களை தொந்தரவு படித்தக் கூடாது என்று இடையில் அடுப்பை அணைத்துச் செய்துமுடித்தேன்.

    இந்த மாதிரி ஸ்டஃப்டு சப்பாத்தி நிறையச் செய்யும்போது சப்பாத்திகளை இட்டுத் தருவது பெரிய உதவிதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்.  நிச்சயம் உதவிதான்.  ஆனாலும் யாரும் செய்யாவிட்டாலும் நானே செய்துவிடுவேன்.  பெரும்பாலும் காய் உட்பட நறுக்குவது எல்லாம் நானே செய்வதுதான் எனக்கு ஒத்துவரும்.

      நீக்கு
    2. அது என்ன பூரி மசால் நெல்லை முறை?

      நீக்கு
    3. அதானே? நீங்க செய்வது மதுரை முறையா கீதாக்கா?!

      நீக்கு
    4. அம்மா பண்ணினாப்போல்! இதெல்லாம் மாமியார் வீட்டுக்கு நான் அறிமுகம் செய்தவை. ஆகவே அங்கே செய்தாப்போல்னு எல்லாம் சொல்ல முடியாது. நான் வர வரைக்கும் அவங்க சப்பாத்தி, (BH)பூரினு சொல்லுவாங்க. இரண்டுக்கும் நெய், சர்க்கரை தான். மொறு மொறுனு வேறே பண்ணுவாங்க. அதுவும் சப்பாத்தியெல்லாம் தூளாகி விடும்.

      நீக்கு
    5. //மாமியார் வீட்டுக்கு நான் அறிமுகம் செய்தவை// - நல்லவேளை அவங்க நெல்லையைச் சேர்ந்தவங்க இல்லை. இருந்திருந்தால் வரிந்து கட்டிக்கொண்டு சண்டைக்கு வந்திருப்பேன்.

      மதுரைல பூரியாவது மசாலாவாவது? நான் அந்த பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள அசோக் ஹோட்டல்லதான் 80கள்ல சாப்பிட்டிருக்கேன். நல்லாத்தான் இருக்கும். காலேஜ் ஹவுஸில் நான், பீஸ் மஸாலா சாப்பிட்டு மிக மிக ரசித்திருக்கேன். மதுரைனா இட்லி மட்டும்தான் ஃபேமஸ். என்னவோ ஸ்ரீராம் மட்டும் முந்திரி அல்வா முந்திரி அல்வான்னு சொல்றார்... அவரே எனக்குத் தந்தால்தான் உண்டு.

      நெல்லைலதான் பூரி மசால், மற்றவைகள்லாம் ஃபேமஸ்..ஹாஹா

      நீக்கு
    6. என்ன நெல்லை மதுரையை இப்படிச் சொல்லிட்டீங்க...   இட்லி சாம்பார் மட்டுமல்ல, நிறைய சட்னி வகைகள், பரோட்டா (நாங்கள் அதை ப்ரோட்டா என்று அப்போது சொல்வோம்!  அதுவும் கோரிப்பாளையம் கிங் மெட்ரோ ஹோட்டலில் ரொம்ப பேமஸ் அப்போது)  எல்லாமே வெரைட்டியாய் இருக்கும்.

      நீக்கு
    7. அங்க இருந்தபோது, கிங் மெட்ரோ ஹோட்டல் பேரே கேள்விப்படலை (85-86). நாங்க கல்லூரி நண்பர்கள், காலேஜ் ஹவுஸில் சாப்பிட்டுவிட்டு அல்லது இரயில் நிலையத்துக்கு வெளியே இருக்கும் ஹோட்டலில்-டக்குனு பெயர் மறந்துவிட்டது, ரவாதோசை பாதாம் பால் சாப்பிட்டுவிட்டு, சினிமா பார்க்கப் போவோம். பார்த்துவிட்டு நடு ராத்திரியில் பஸ் கிடைக்கலைனா, ஒரு சில சமயம் தினமலர் பேப்பர் வேனில்கூட எங்க ஹாஸ்டலுக்குச் சென்றிருக்கிறோம். மதுரை பஸ் ஸ்டாண்டில் அப்போது மினி-மீனா டிஃபன் செண்டரில் பரோட்டா சாப்பிட்டிருக்கிறோம் (சில வருடங்களுக்கு முன் அந்த ஹோட்டல்களைப் பார்த்தபோது, இங்கயா என்று தோன்றியது ஹாஹா)

      நீக்கு
    8. //அவங்க நெல்லையைச் சேர்ந்தவங்க இல்லை. இருந்திருந்தால் வரிந்து கட்டிக்கொண்டு சண்டைக்கு வந்திருப்பேன்.// ஹாஹாஹா, மாமியார் இதை எல்லாம் ஏத்துக்க சுமார் 15 வருஷங்கள் ஆகிவிட்டன. அதிலும் தோசைக்குத் தக்காளித் துவையல், தக்காளி சாதம், வெஜிடபுள் ஃப்ரைட் ரைஸ், இதெல்லாம் பண்ணினாலோ சப்பாத்திக்குக் குருமாப் பண்ணினாலோ சமையலறைப்பக்கமே வர மாட்டாங்க. மாமனார் மற்ற மைத்துனர்களுக்கெல்லாம் இதெல்லாம் சாப்பிடாதீங்கனு எச்சரிக்கையும் கொடுத்து வைப்பாங்க. அவங்கல்லாம் மாமியார் கிட்டே சரினு சொல்லிட்டுச் சாப்பிடும்போது எல்லாம் போடச் சொல்லிச் சாப்பிடுவாங்க. இஃகி,இஃகி,இஃகி,இஃகி, இதில் அன்றிலிருந்து இன்று வரை மாறாமல் இருப்பது நம்ம ரங்க்ஸ்தான். அப்போதும் அதிகம் விரும்பிச் சாப்பிட மாட்டார். இப்போதும் அதே! என்னிக்காவது தான் இதெல்லாம் இப்போது பண்ணுகிறேன்.

      நீக்கு
  19. அனைவருக்கும் வணக்கம். Stuffed சப்பாத்தி என்று பார்த்ததும் நெ.த.வின் மகளின் கை வண்ணமோ என்று நினைத்தேன். பெயர் இல்லை என்றதும் நிலைய வித்வான் என்று புரிந்து விட்டது. சப்பாத்தி சுவையாகத்தான் இருக்கும் என்று தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிலைய வித்வான்....   ரசித்தேன் நானும் பானு அக்கா.

      நீக்கு
    2. அவசரங்களுக்குக் கை கொடுப்பது நிலைய வித்வான் தானே!

      நீக்கு
    3. ஆனால் ஶ்ரீராம் அன்னிக்கே ஃபேஸ்புக், முகநூலில் சொல்லி இருந்தார். வர வாரம் இதைத் தான் போடப் போவதாக!

      நீக்கு
    4. //அவசரங்களுக்குக் கை கொடுப்பது// - கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.... என்ன அவசரம்? வேணும்னா நாங்கள்லாம் ரெடியா வச்சிருப்போம் இல்லையா? ஆனாலும் ஸ்ரீராம் எழுதணும்னு நானும் நினைக்கிறேன்.

      நீக்கு
    5. சும்மா...  எனக்கும் எழுத ஒரு ஐட்டம் கிடைச்சுது அதுதான்!

      நீக்கு
    6. என்னிடமும் 2,3 குறிப்புகள் கிடப்பில் இருக்கின்றன. தேடி எடுக்கணும்.

      நீக்கு
  20. அழகாக இருக்கிறது சுவையாகவும் இருக்கும் பகிர்வுக்கு நன்றி ஸ்ரீராம்ஜி

    பதிலளிநீக்கு
  21. நன்று. ஸ்டஃபிங் கொஞ்சம் அதிகம். குறைவாகப் பயன்படுத்தினால் இன்னும் சுவையாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை.  பதிவில் சொல்ல நினைத்து மறந்து விட்டேன்.  அப்பாதுரைக்கு பதிலில் சொல்லி இருக்கிறேன் என்று நினைக்கிறேன்.  நன்றி வெங்கட்.

      நீக்கு
  22. ஸ்டஃப்டு சப்பாத்தி செய்முறை நன்றாக உள்ளது படங்களுடன். கொஞ்சம் தனியாத்தூள், கரம் மசாலா சேர்த்தால் சுவையாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த இரண்டும் சேர்த்தால் எங்கள் வீட்டில் இரண்டு டிக்கெட் பகிஷ்கரித்து விடும்! நன்றி திருமதி வெங்கட்.

      நீக்கு
  23. நல்லா வந்திருக்கு ஸ்ரீராம்...நீங்களும் நல்லாதான் செஞ்சுருக்கீங்க...அழகா படங்களும் எடுத்துருக்கீங்க. அதுவும் ஸ்டெப் பை ஸ்டெப் எல்லாம் நல்லா எடுத்துருக்கீங்க படங்களும் நல்லா வந்திருக்கு. கைல ஒரு தொழில் இருக்கு!!!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  24. நான் இப்படி நீங்க செஞ்சுருப்பது போலவும் செய்ததுண்டு...அதெல்லாம் முன்ன...நல்லா நுனி வரை பூரணத்தைப் பரப்பி...நுனியை நல்லா சேர்த்து ஒட்டி கொஞ்சம் லைட்டா குழவியால் தேய்த்து......நீங்க செஞ்சுருக்காப்ல. அப்புறம் நடுல பூரணம் வைச்சு கொழுக்கட்டை போல செஞ்சு போளி செய்வது போல தேய்த்து மெலிதாகவோ, ஜஸ்ட் பராத்தா போல திக்காகவோ....பஞ்சாபி ஸ்டைல்....
    இல்லேன்னா சப்பாத்தி வாட்டிட்டு உள்ள வைச்சு ரோல் போல...
    அல்லது நீங்க கூட செஞ்சுருக்கீங்களே மூணா கட் செஞ்சு கல்லுல அப்படியும்....இது மகனுக்காகச் செய்துகட் செஞ்சு லஞ்ச் பாக்ஸ் ல வைக்க.

    ஸ்ரீராம் பாராட்டறேன் உங்களை!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  25. சப்பாத்தி சுவை.
    உருளை சோயாமீற் காரம் போட்டு செய்வோம்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!