சனி, 9 ஜனவரி, 2021

நல்ல செய்திகள்

 

தனக்கு வந்த வாய்ப்பை ஊருக்கே பயன்படுத்தி கொண்ட நாசாவில் சாதனை செய்ய துடிக்கும் பெண்: 


" - - - - - அந்த நேரத்தில்தான், ‘கிராமாலயா’ என்ற ஒரு தொண்டு நிறுவனம் ஜெயலெட்சுமிக்கு உதவ முன்வந்தது. “உங்கள் தேவையைச் சொல்லுங்கள். ” என்று ஜெயலெட்சுமியிடம் தொண்டு நிறுவனத்தினர் கேட்டனர். அதற்கு ஜெயலெட்சுமி, “அமெரிக்கா செல்லத் தேவையான பண உதவி கிடைத்துவிட்டது” என்று கூறியுள்ளார். “சரி, வேறு என்ன உதவி வேண்டும்?” என்று தொண்டு நிறுவனத்தினர் கேட்ட கேள்விக்கு ஜெயலெட்சுமி வைத்த கோரிக்கை, இன்று அவர் கிராமத்தையே முன்மாதிரி ஆக்கியுள்ளது. அம்மக்களின், குறிப்பாக அந்த ஊர்ப் பெண்களின் பல ஆண்டு அவஸ்தைகளுக்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளது. அப்படி என்ன கேட்டார் ஜெயலெட்சுமி? “எனக்கு என்று எந்தத் தேவையும் இல்லை. ஆனால், எங்கள் கிராமத்திற்கு நிறைய தேவைகள் உள்ளன. முக்கியமாக, கழிப்பறைகள் இல்லாமல் பெண் பிள்ளைகள் ரொம்பவே சிரமப்படுகிறோம். உங்களால் அதற்கு உதவ முடியுமா?” என ஜெயலெட்சுமியின் இந்த வேண்டுகோளிலிருந்து ஆரம்பமானது, ஒரு நல் முயற்சி. ஜெயலெட்சுமியின் கிராமமான ஆதனக்கோட்டையை முழுவதும் ஆய்வு மேற்கொண்ட `கிராமாலயா’ தொண்டு நிறுவனம், அங்கு கழிப்பறை வசதி இல்லாத 125 வீடுகளுக்கு 125 குளியலறையுடன் கூடிய கழிப்பறைகள் கட்டிக்கொடுத்துள்ளனர். - - - -  " 

முழு விவரமும் படிப்பதற்கு :  >>>> சுட்டி 
நன்றி : கீதா சாம்பசிவம் மற்றும் விஜயபாரதம் 
= = = = 


மதுரை ராமுத்தாத்தாவை முன்னோடியாய் வைத்து சென்னையில் ஏழை எளியவர்க்கு பத்து ரூபாய்க்கு தரமான சாப்பாடு...  




என்னால் இலவசமாகவே இந்த உணவு பாக்கெட்டை கொடுக்கமுடியும் ஆனால் இலவசம் என்றால் வாங்கும் மக்களிடையே அலட்சியம் வந்துவிடும் உணவை வீணாக்குவார்கள் மேலும் இலவசமாகப் பெற சிலரது சுயமரியாதை இடம் கொடுக்காது ஆகவே பத்து ரூபாய் விலை வைத்துள்ளேன் பத்து ரூபாய் சாப்பாடுதானே என்றும் ஏளனமாக நினைத்துவிட வேண்டாம் வீட்டு சாப்பாடு போன்ற தரமுடையது கொடுக்கும் பணத்தைவிட பல மடங்கு மதிப்புமிக்கது.

அன்றாடம் ஆயிரம் பேர் வந்தாலும் சாப்பாடு பாக்கெட் கொடுக்கமுடியும் அதற்கான சக்தியை இறைவன் தந்துள்ளான் என்று கூறிய முகேஷிடம் பேசுவதற்கான எண்:98400 58366.

==============================================================================================

.ஊரடங்கினால் 9 மாதம் தனுஷ்கோடியில் பள்ளி கூடம் மூடியதால், மாணவர்கள் பெற்றோருக்கு உதவியாக தனுஷ்கோடி கடலில் கரை வலை, சிறியரக நாட்டுபடகில் மீன்பிடிக்கவும், மீன்களை தரம்பிரித்து வலைகளை உலர்த்தும் பணிக்கு சென்றதால், மாணவர்களின் கல்வி தரம் பாதித்தது.




இதனை தடுக்க பள்ளி தலைமை ஆசிரியை ஜேம்ஸ்ஜெயசெல்வி உள்ளிட்ட ஆசிரியர்கள் மாணவர்களுக்கு வீடு தேடி சென்று பாடம் நடத்திட முடிவு செய்தனர். கடந்த 20 நாளுக்கு மேலாக தனுஷ்கோடி மாணவர்கள், பெற்றோருடன் வேலை செய்த மாணவர்களை தேடி அவர்களை வீட்டிற்கு அழைத்து வந்து, முகக்கவசம் அணிந்து பாடம் நடத்தி வருகின்றனர்.


======================================================================================================================



பல்லாவரம் நகராட்சிக்குட்பட்ட, குரோம்பேட்டை, லட்சுமிநகர், இரண்டாவது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ஜி.ராகவன்,83.'காயத்ரி டிரஸ்ட்' என்ற அமைப்பை நடத்தி வரும் இவர், 37 ஆண்டுகளாக, அனாதை உடல்களை தகனம் செய்து, மனித நேயம் மறையவில்லை என்பதை உணர்த்தி வருகிறார்.  'கொரோனா' பரவல் காலத்திலும் பல அனாதை உடல்களை தகனம் செய்துள்ளனர்.




===============================================================================================

 விமானம் சுத்தம் செய்யும் ரோபோ: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அறிமுகம். 

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் டில்லி விமான நிலையத்தில் விமான உட்புறங்களை சுத்தம் மற்றும் கிருமி நீக்கம் செய்வதற்கான ரோபோ தொழில்நுட்பத்தை இன்று தொடங்கியுள்ளது. இந்தியாவில் முதல் முறையாக தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த ஐசாட்ஸுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

இது குறித்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: "ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தின் உட்புறங்களை கிருமி நீக்கம் செய்வதற்கும் சுத்தம் செய்வதற்கும் ரோபோ தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்திய இந்தியாவின் முதல் விமான நிறுவனமாக திகழ்கிறது.

"யு.வி.-சி கிருமிநாசினி அமைப்பு உலகளவில் கிருமிநாசினியின் மிகவும் பயனுள்ள வடிவங்களில் ஒன்றாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்பம் கிருமிகள், பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்கள் ஆகியவற்றிலிருந்து மேற்பரப்புகளை கிருமி நீக்கம் செய்வதற்கான செயல்திறனுக்காக என்ஏபிஎல் ஆய்வகத்தால் சோதிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

மடங்கும் கருவிகளுடன் பொருத்தப்பட்ட ரோபோ சாதனம், குறிப்பாக விமான இருக்கைகள், இருக்கைக்கு அடியில் உள்ள பகுதிகள், மேல்நிலை பேக்கேஜ் பெட்டியின் உள்ளே, ஜன்னல் பேனல்கள், காக்பிட் கருவி பகுதி, மேல்நிலை சுவிட்ச் பேனல் மற்றும் வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்களில் இருந்து கிருமி நீக்கம் செய்ய வடிவமைக்கப்பட்டுள்ளது.

= = = = 
4.17 நிமிடத்தில் 150 நாடுகளின் கொடிகள், தலைநகரங்கள்: 5 வயது சிறுமி சாதனை. 

உஜ்ஜைனி : 5 வயது சிறுமி ஒருவர், வெறும் 4 நிமிடங்களில், 150 நாடுகளின் கொடிகள், தலைநகரங்களை கூறி, உலக சாதனை படைத்துள்ளார்.

ம.பி., மாநிலம் உஜ்ஜைனி நகரத்தை சேர்ந்த பாரத் - சங்கீதா தம்பதியினரின் 5 வயது மகள் பிரஷா. கொரோனா ஊரடங்கு காலத்தில், சிறுமியின் உறவினர்கள் கொடுத்த 'வேர்ல்ட் புக்', அவருக்கு கொடிகள் மீதான ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது. நாடுகளின் கொடிகள், தலைநகரங்கள் குறித்து மனப்பாடம் செய்து அதனை நினைவில் பதிய வைத்திருக்கிறார்.

இந்நிலையில், 150 நாடுகளின் பெயர்கள், அவற்றின் தலைநகரங்களை, 4 நிமிடம் 17 விநாடிகளில் கூறிய இச்சிறுமி, புதிய உலக சாதனை படைத்துள்ளார். பல்வேறு நாடுகளின் நாணயங்கள், மொழிகள் மற்றும் அந்நாடுகளின் பிரதமர்கள், ஜனாதிபதிகள் ஆகியோரின் பெயர்களைக் கற்றுக்கொள்வது தனது அடுத்த குறிக்கோள் என பிரஷா தெரிவித்துள்ளார்.
= = = =

32 கருத்துகள்:

  1. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். கொரோனா தடுப்பு ஊசி அனைவருக்கும் பயன்பட வேண்டும் எனப் பிரார்த்தித்துக் கொள்கிறோம்.

    பதிலளிநீக்கு
  2. போணி பண்ணிட்டேன் சாமியோவ்! அடுத்து வரவங்களும் நல்லாச் சொல்லுங்க! எல்லாச் செய்திகளும் புதுசு இல்லை. கடைசிச் செய்தி முக்கியமாய்ப் புத்தம்புதுசு. தனுஷ்கோடி செய்தியும் புதுசு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வந்துட்டோம்..வந்துட்டோம்.... அந்த டால்டா டின்னை கொஞ்சம் ஒதுக்குங்கம்மா... செய்தி படிக்க முடியாம மறைக்குது.

      நீக்கு
    2. எல்லோருக்கும் எல்லாமே புதுசாக இருக்க இயலாது.

      நீக்கு
    3. //வந்துட்டோம்..வந்துட்டோம்.... அந்த டால்டா டின்னை கொஞ்சம் ஒதுக்குங்கம்மா... செய்தி படிக்க முடியாம மறைக்குது./க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :)))))))

      நீக்கு
  3. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  4. இனிய காலை வணக்கம் கீதாமா. இன்னும் வருபவர்களுக்கு என் அன்பு வணக்கங்களும். இனிய நாட்களுக்கான பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  5. விஜயபாரதம் இணைப்புக்கு மிக நன்றி கீதாமா. எத்தனை அருமையான பெண்.இந்த ஜெயலட்சுமி. வளமுடன் வாழ வேண்டும்.

    பதிலளிநீக்கு
  6. அனைவருக்கும் அன்பின் வணக்கம்...
    எங்கும் நலம் வாழ வேண்டிக் கொள்வோம்...

    பதிலளிநீக்கு
  7. இன்றைய தொகுப்பின் அனைத்துச் செய்திகளும் மனித நேயத்தை முன்னிறுத்துகின்றன...

    வாழ்க தொண்டுள்ளங்கள்...

    பதிலளிநீக்கு
  8. வணக்கம் சகோதரரே

    இந்த வார பாஸிடிவ் செய்திகள் அனைத்தும் அருமை.

    முதல் செய்தியில் மிக தைரியமாக செயல்படும் ஜெயலட்சுமி நன்றாக இருக்கவேண்டும். அவர் வாழ்வில் அனைத்துமே ஜெயமாக நடக்கும். செய்தி திரட்டி தந்த சகோதரி கீதா சாம்பசிவம் அவர்களுக்கும் நன்றிகள்.

    பசியால் வாடும் அனைவருக்கும் பத்து ரூபாய்க்கு தரமான உணவு அளித்து வரும் முகேஷ் அவர்களை மனமாற வாழ்த்திப் போற்றுவோம்.

    அநாதையாக மரணம் சம்பவித்தவர்களை தன் செலவில் அடக்கம் செய்யும் ஜி. ராகவன் அவர்களை வாழ்த்துவோம். நல்ல மனங்கள் என்றுமே நாடு போற்ற வாழ்வார்கள். அனைவரும் போற்றப்பட வேண்டியவர்கள். இன்றைய நல்ல செய்திகளை தந்த தங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  9. பத்து ரூபாய்க்கு உணவு கொடுக்கும் பெரியவர் நல்லபடி வாழட்டும்.
    எல்லாமே நற் செய்திகள்.
    தனுஷ்கோடியில் ஆசிரியர்களின் பணி மகத்தானது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம். காலத்தினாற்செய்த நன்றி சிறிது எனினும் ஞாலத்தின் மாணப் பெரிது.

      நீக்கு
  10. அனாதைகளுக்கு கர்ம காரியங்கள் செய்யும்
    திரு ஜி. ராகவன் நலம் வாழ வேண்டும்.
    எத்தனை பெரிய புண்ணியம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம். நான் இவரை பல தடவைகள் குரோம்பேட்டையில் பார்த்தது உண்டு.

      நீக்கு
  11. அன்னதானம் சிறப்பு... நல்ல உள்ளங்கள் வாழ்க...

    பதிலளிநீக்கு
  12. போற்றுதலுக்கு உரியோர்
    போற்றுவோம்

    பதிலளிநீக்கு
  13. போற்றத்தக்கவர்களைப் பற்றிய அரிய செய்திகள். அருமை.

    பதிலளிநீக்கு
  14. சாதனையாளர்களையும், உதவும் கரங்களையும் வாழ்த்துவோம்.

    பதிலளிநீக்கு
  15. அனைத்து செய்திகளும் சிறப்பு. முதல் செய்தி முன்னரே பார்த்தேன்.

    சாதனையாளர்களுக்கும் ஆகச் சிறந்த மனிதர்களுக்கும் மனம் நிறைந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!