புதன், 16 மார்ச், 2022

காமிக்ஸ் புத்தகங்கள் எத்தனை வயசு வரை படிச்சிருப்பீங்க?

 

நெல்லைத்தமிழன் : 

உடலுக்கு நல்லதான கடலை எண்ணெய் 180 ரூ விற்கும்போது உடலுக்குக் கெடுதலான பாமாயில் 150 ருபாய்க்கு வாங்கு உடலைக் கெடுப்பதன் காரணம் என்னவாக இருக்கும்? மக்களுக்கும் ஏன் அந்த அவேர்னெஸ் இல்லை?

$ கடலை எண்ணெய் பிடிக்காதவர்கள் பாமாயில் உபயோகிக்கலாம்.

பாமாயில் கெடுதல் என்று எதை வைத்து சொல்கிறீர்கள்?


& அதான் நீங்களே சொல்லிட்டீங்களே - பாமாயில் கடலெண்ணையை விட விலைக் குறைவு என்று  - அதுதான் காரணம். 

இங்கே, வாசகர்களுக்கு ஒரு கேள்வி : கடலெண்ணை / பாமாயில் இவற்றுக்கு பதிலாக, Rice bran oil உபயோகப்படுத்துவது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? 

வலிமையான எதிர்க்கட்சி நமக்கு அவசியம் அல்லவா? காங்கிரஸின் இந்த நிலைமை வருத்தம் தரவில்லையா?

# நிச்சயம் நல்ல எதிர்க்கட்சி இருப்பது அவசியம்தான்.  காங்கிரஸ்தான் நாடளாவிய தளத்தில் எதிர்க்கட்சியாக இருக்க யோக்கியதை படைத்த கட்சி. ஆனால் என்ன செய்வது ?இந்திரா காந்தி எந்த காலத்திலோ  நிஜலிங்கப்பா போன்றவர்களை எதிர்க்கக் கிளம்பி கட்சி  சின்னாபின்னமாகி விட்டது.

$ AAP வலுவான எதிர்க்கட்சியாக உருவாகக் கூடாதா என்ன?

(இந்த எதிர்க் கேள்விக்கும் ஒரு பதில் !! )

# ஆம் ஆத்மி பார்ட்டி இப்பொழுதுதான் டெல்லியை தாண்டி பஞ்சாப் கோவாவில் ஒரு சின்ன அடையாளம் கண்டிருக்கிறது. அது இந்தியா முழுவதும் பரவி ஒரு நல்ல கட்சியாக வருவதற்கு இன்னும் ரொம்ப காலம் ஆகும்.

இங்கே, வாசகர்களுக்கு ஒரு கேள்வி : சிறந்த எதிர்க்கட்சியின் செயல்பாடுகள் எப்படி இருக்கவேண்டும்? 

கீதா சாம்பசிவம் :

உங்களுக்கு மிகப் பிடித்த எழுத்தாளர் யார்? ஏன்? சுஜாதாதான் என்னும் பதிலைத் தவிர்க்கவும்.

# எனக்குப் பிடித்த எழுத்தாளர் தி.ஜானகிராமன். மிகையில்லாமலும்  நுட்பமான உணர்வுகளை சரளமாகவும் சம்பாஷணை வெகு இயல்பாகவும் எழுதுகிற திறமை இவைதான் காரணம். 

& Erle Stanley Gardner, P G Wodehouse. 

சின்ன வயசில் முதல் முதல் படித்த கதைப்புத்தகம்/நாவல்/சித்திரத் தொடர் நினைவில் இருக்கா?

$ துப்பறியும் சாம்பு.

& இருக்கு. 

காமிக்ஸ் புத்தகங்கள் எத்தனை வயசு வரை படிச்சிருப்பீங்க? (ஹிஹ்ஹிஹிஹி, நானெல்லாம் இப்போவும் படிப்பேன். டாம்&ஜெரி கார்ட்டூன் இப்போவும் ரசிக்கிறேன்.) அதிகம் முகநூலில் பார்ப்பதே டாம்&ஜெரி தான்.

# பொன்னியின்  செல்வன் மோகமுள் படித்த நினைவு இருக்கிறது.  காமிக்ஸ் படித்ததில்லை.

& ஓ சி யில் கிடைத்தால், காமிக்ஸ் புத்தகம் எதையும் விடாமல் படித்துவிடுவேன். டாம் & ஜெர்ரி எப்பொழுதுமே பார்ப்பேன். 

அம்புலிமாமா, கண்ணன் பத்திரிகை, மஞ்சரி ஆகியவற்றைப் படிச்சிருக்கீங்களா?

$ அம்புலிமாமா, கண்ணன் சரி. மஞ்சரி எப்படி? பின் ஏ ன் கலைமகள் இல்லை?ரத்னபாலா, Champak இன்னும் நிறைய உண்டு. 

# அம்புலிமாமா, கண்ணன், மஞ்சரி எல்லாமே படித்திருக்கிறேன் . அம்புலிமாமா மட்டும் வாசக சாலையில், மற்றவை நண்பர்களிடமிருந்து.

& படித்திருக்கிறேன். முதன் முதலில் ஒற்றை இலக்க வயதிலிருந்தே படிக்கத் தொடங்கியது கண்ணன் மற்றும் அம்புலிமாமா. கண்ணன் பத்திரிக்கை தொடர்ந்து நான் படித்தது, ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது - படித்தது, என்  அண்ணனின் நண்பர் பாம்பே கண்ணன் வீட்டில் - நாகப்பட்டினத்தில். 

அம்புலி மாமாவின் முன்னெல்லாம் அதிகம் வங்காள மொழிபெயர்ப்புக் கதைகளே வரும். ஏன்? தமிழில் சிறந்த குழந்தை எழுத்தாளர் யாருமே இருந்ததில்லையா?

# அம்புலிமாமாவில் வங்காள மொழிக் கதைகளின் மொழிபெயர்ப்பை படித்ததாக நினைவில்லை பெரும்பாலும் தெலுங்கில் எழுத்தாளர்கள் எழுதியுள்ளதை ஆசிரியர் குழு தமிழ்ப்படுத்தி விடுவார்கள் என்று நினைவு. தமிழில் குழந்தை எழுத்தாளர்கள் - அதாவது குழந்தைகளுக்கான கதைகளை எழுதும் எழுத்தாளர்கள் அந்தக்  காலத்தில் மிகக் குறைவுதான்.

& அம்புலிமாமா கதைகள் படிக்கும்போது யார் எழுதியது என்றெல்லாம் பார்த்ததில்லை. கதை என்று எது இருந்தாலும் படித்துவிடுவேன். 

சரித்திரம் என்றாலே தமிழகத்தில் வெளிவந்த புத்தகங்களில் வட நாட்டுச் சரித்திரங்கள்தான் நாவல்களாகவும்/கதைகளாகவும் எழுதப்பட்டு வந்த ஒரு காலம் இருக்கு. இதை மாற்றியவர் யார்?

# வடநாட்டு நிகழ்ச்சிகளை மட்டுமே கதையாக எழுதினார்கள் என்பதை என்னால் ஒப்புக்கொள்ள முடியவில்லை.

இப்போ வெளிவரும் புத்தகங்களில் அச்சுப் புத்தகங்கள் படிக்க வசதியா? இணையம் மூலம் படிப்பது வசதியா? (எனக்கெல்லாம் கையில் புத்தகத்தை வைத்துக் கொண்டு பக்கத்தில் பகோடா/மிக்சர் போன்றவை இருக்கக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொரித்த வண்ணம் புத்தகம் படிக்கப் பிடிக்கும். ஆனால் இப்போல்லாம் அச்சுப் புத்தகங்கள் அவ்வளவாய்க் கிடைப்பதில்லை. :( புத்தகக் கண்காட்சியில் இருக்கும் தான். ஆனால் எனக்கு ஏனோ புத்தகக் கண்காட்சி பிடிப்பதில்லை.)

$ முன்னே என்ன படித்தோம் என்று back & forth புரட்டுபவர்களுக்கு அச்சு புத்தகம்.

மின் திரையில் புத்தகங்கள் படிப்பதை விட காகிதத்தில் அச்சடித்த புத்தகங்கள் படிப்பது எளிது என்பதை ஒப்புக்கொள்ள வேண்டியதுதான்.

ஆன்லைனில் புத்தகங்களை வெகு எளிதாக வரவழைத்து விடலாமே.

& இடது கையில் amazon kindle / kindle reader வைத்துப் படித்துக்கொண்டே கூட, பக்கத்தில் பக்கோடா / மிக்சர் / சமோசா எது வேண்டுமானாலும் சாப்பிடலாமே!! என்னைக் கேட்டால், மின் புத்தகங்கள் வாசிப்பதுதான் வசதி. 

= = = =

எங்கள் கேள்விகள் : 

மேலேயே நடுநடுவே கேட்டிருக்கிறோம் ! பார்த்து பதில்கள் பதியவும். 

= = = = 

படம் பார்த்து கருத்துப் பதியுங்க !

1) 

2) 

3) 


= = = = 

129 கருத்துகள்:

  1. ஆளும் கட்சி நல்ல ஆட்சியை கொடுத்தால் எதிர்கட்சி என்று ஒன்று வேண்டியதே இல்லையே.. ஆளும் கட்சி எதிர்கட்சி எல்லாமே மோசம்தான்

    மன்மோகன் சிங்கை நாம் எவ்வளவு கழுவி உற்றி இருப்போம் இப்போ அவரை நல்லவர் என்று சொல்கிறார்கள் அது போல யோகி பிரதமராக வந்தால் நாம் மோடியை நல்லவராக கொண்டாடுவோம் ஹும்ம்ம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // இப்போ அவரை நல்லவர் என்று சொல்கிறார்கள் //

      சும்மா இருங்க மதுரை.. சிரிப்பு மூட்டாதீங்க...!

      நீக்கு
    2. மன்மோகன் சிங்கை நல்லவர் வல்லவர்னு, அவரே சொல்லிக்க மாட்டாரே... அவருக்குப் பதில் காந்தி கட்அவுட்டை வைத்தே பத்து வருடங்கள் ஆட்சி புரிந்திருக்கலாம் சோனியா கும்பல். அரசியலைப் பற்றி அதிகம் இங்கு எழுதவேண்டாம் என்பதற்காகத் தவிர்க்கிறேன். மோடி, பாஜக எதிர்ப்பாளர்கள் எல்லோருக்கும், மக்களைக் கொள்ளையடிக்க முடியவில்லையே, மத்த்தைப் பரப்புவது கடினமாக இருக்கிறதே, இந்தியாவின் தொன்மையைச் சிதைப்பது கடினப்பட்டிருக்கே என்ற வயிற்றெரிச்சல்.

      நீக்கு

    3. மோடியும் பாஜக கட்சியினரும் மகா யோக்கியர்கள் அதனால்தான் பாஜகவின் கட்சியின் நிதிக்கு கணக்கு வழக்கு இல்லாமல் இருக்கிறது போல கண்ணை மூடிக் கொண்டால் பூனை உலகமே இருண்டு போனதாக நினைக்குமாம் சரி சரி நமக்கு எதற்கு வம்பு

      நீக்கு
    4. கட்சி நிதிக்கு எப்படி கணக்கு வழக்கில்லாமல் இருக்கும்? கட்சி நிதி ஒவ்வொரு வருடமும் ஆடிட் செய்யப்படவேண்டியது. அதனால் அதில் எந்தச் சந்தேகமும் எனக்கு இல்லை. அதற்கு வெளிநாட்டு நிதி வந்திருக்காது என்பதிலும் எனக்குச் சந்தேகமில்லை.

      திருட்டு இரயில் ஏறியவர்களுக்கே லட்சம் கோடி சொத்து எப்படி வந்தது என்று யாருமே கேட்டதாகத் தெரியவில்லை.

      நீக்கு
  2. மூதாதையர் படம் இல்லையே. ஏன்? 
    படம் 1. எத்தனை ஜாக்கிரதையாக பொருட்களை  வைத்தாலும் இவன் செய்யும் அடாவடி.....
    படம் 2. காக்கா மட்டும் தான் வடை திருடுமோ? நானும் தான். ஹாய் ஹாய் ஹாய்.
    படம் 3. நல்ல மெத்தை.

     Jayakumar

    பதிலளிநீக்கு
  3. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்
    ஆரோக்கியம் நிறையட்டும்.

    பதிலளிநீக்கு
  4. அனைவருக்கும் காலை/மதியம்/மாலை வணக்கம். நல்வரவு. வாழ்த்துகள், பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  5. தொங்கிப் பார்க்கிறேன்.

    2, க்ர்ர்ர்ர்ர்... இந்த வடையை எப்படி எடுக்கிறேன்னு பார்க்கிறேன்.

    3 தாலாட்டுதே உன் அன்பு......

    பதிலளிநீக்கு
  6. முதல் படத்தில் பாலை மேடையில் அவ்வளவு ஓரமாக வைத்தது ஏன்? குழந்தை எடுக்கும்போது கொட்டிவிடாதோ?
    இரண்டாவது படத்தின் செல்லம் கோபத்தில் ஏன் உறுமுகிறது?
    மூன்றாவது படம் இணையத்தில் அடிக்கடி பார்த்தாலும் குழந்தையை இப்படி நாயுடன் நெருங்கி இருக்க வைப்பது ஆரோக்கியத்திற்கு (குழந்தையின்) உகந்ததே அல்ல. அதோடு என்னதான் பழகினாலும் ஒரு சமயம் போல் இவை எல்லாம் இருக்காது. கவனமாகவே இருந்தாகணும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ​அக்கறையான அவதானிப்பு... (முதல் படத்துக்கு)

      நீக்கு
    2. கூர்ந்து கவனித்துள்ளீர்கள் !!

      நீக்கு
    3. //பாலை குழந்தை எடுக்கக்கூடாதுன்னு ஓரமா வச்சிருக்காங்களா? // குழந்தை வளர்த்து நாளாகிவிட்டதால் எல்லாம் மறந்துவிட்டது இந்த கீசா மேடத்துக்கு. குழந்தை இயல்பு காலை உன்னி விரலை நீட்டி பிடிக்கப் பார்ப்பது. இல்லை கீழே பாத்திரத்தை அல்லது அதுபோன்றதைக் கவிழ்த்து அதில் ஏறி இந்த மாதிரி முயல்வது. பிடித்து எடுக்கணும்னு தெரியாது. விரலால் முயன்றால் அது கவிழ்ந்து கிழந்தை தலையில் விழுந்து குழந்தைக்க அடிபடும் என மேடையின் ஓரத்தில் வைப்பதுதான் வழக்கம். குழந்தையின் இன்னொரு இயல்பு எதை எடுத்தாலும் கடிப்பது, நக்குவது, இல்லை விரலால் அளைந்து வாயில் வைத்துக்கொள்வது. வாளியில் தண்ணீரைக் கண்டால் அளைவது, இல்லை வாளிக்குள் கவிழ்ந்து தண்ணீரை அளாவ முயல்வது (இப்படி முயன்று வாளித் தண்ணீரில் மூழ்கி இறந்த குழந்தைகள் உண்டு). ஏற முயல்வது (எக்கியாவது)., தண்ணீர், கதவைத் திறந்துகொண்டு வெளியில் செல்வது ஆகிய இந்த மூன்றிலிருந்தும் (படியில் ஏறுவது, அதன் கைப்பிடியிலிருந்மு எட்டிப்பார்ப்பது உட்பட) குழந்தையை எப்போதும் பாதுகாக்கணும். குழந்தையைவிடப் பெரிய அக்கா/அண்ணனிடமிருந்மும்-அவர்கள் பொறாமையால் கிள்ளுவது, அடிப்பது போன்றவைகளை பிறர் இல்லாதகோது செய்யக்கூடாது என்பதற்காக.

      நீக்கு
    4. பாலைக் குழந்தை எடுத்துக் கொட்டிவிடக்கூடும்னு ஓரமாக வைக்கலாம். அல்லது ஆறட்டும் அது வரைக்கும் இங்கே ஓரமாக இருக்கட்டும்னு வைக்கலாம். அதுக்குள்ளாகக்குழந்தை அதைப் பார்த்துட்டுத் தானே எடுக்கணும்னு முயற்சி செய்கிறது. பக்கத்தில் இருக்கும் செல் மேல் அதன் கண் இல்லை. பாலைப் பார்த்தே மேலே ஏறுகிறது. பசிக்குதோ என்னமோ!

      நீக்கு
    5. சொந்தக்காரங்க குழந்தைகள், அக்கம்பக்கம் குழந்தைகள், இப்போது பேத்திகள் என மொத்தம் சுமார் ஐம்பது குழந்தைகளையாவது நான் தனியாக சமாளிச்சிருக்கேன். இதிலே நெல்லை எனக்குக் குழந்தை வளர்த்து நாளானதால் எதுவும் தெரியலைனு சொல்றார்.

      நீக்கு
    6. எனக்கு உங்களை வம்புக்கு இழுக்காவிட்டால் பொழுது போகாது. சரி சரி... கொஞ்சம் பயந்ததனால் 'கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்' போடலை போலிருக்கு.

      நீக்கு
    7. ஆமாம், பயம், அதுவும் உங்களிடம்! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! எனக்கு யாரோடாவாவது ஒத்துவரலைனா விலகி நிப்பேன். பயமெல்லாம் வராது. எப்போவானும் தேவையானால் பேசியே ஆகணும்னு நேர்ந்தால் பேசுவேன். மற்றபடி திரும்பிக் கூடப்பார்க்க மாட்டேன்.

      நீக்கு
  7. கைப் புத்தகங்களே அருமை. இப்பொழுது
    இணையத்திலும் படிக்க ஆரம்பிக்கிறேன்.
    கௌதமன் ஜி அனுப்பிய மின்னூல் பழக்கி விட்டது. நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் இரண்டும் படிக்கிறேன்.   அச்சுநூலுக்கே என் வோட்டு - இப்போதைக்கு!

      நீக்கு
    2. எந்தன் ஓட்டு மின்னூலுக்கே !!

      நீக்கு
    3. மின்னூலும் படித்தாலும் இப்போதைக்கு அச்சுப் பதிப்புக்கே என்னோட ஓட்டும்.

      நீக்கு
    4. ஹிஹிஹி, இப்போ ஓர் இலக்கணக் கேள்வி.

      ஓட்டு, வோட்டு இரண்டில் எது சரி?

      நீக்கு
    5. மின் நூலில்தான் பெரும்பாலும் படிக்கிறேன், இருந்தாலும் அச்சுப் பதிப்பின் மீது அலாதி பிரியம் தான்.

      நீக்கு
    6. ஓட்டு, வோட்டு இரண்டில் எது சரி?
      ஓட்டிற்கே என் ஓட்டு.

      நீக்கு
    7. வோட்டு என்று தட்டச்சு செய்யும்போது வேட்டு என்று வருவதற்கு வாய்ப்பு உண்டு. ஆனால் ஓட்டு என்று தட்டச்சு செய்யும்போது ஒட்டு என்று வராது.

      ஆனால் எழுதும்போது இரண்டுமே சரியாக வரும்.

      நீக்கு
    8. ஓட்டு வோட்டு இரண்டுமே எழுதும்போது சரி.. ஆனால் தமிழில் எழுத ஆசைப்படுபவர்கள், வாக்கு என்ற வார்த்தையை மட்டுமே உபயோகிக்கணும்.

      பங்கஜம், பங்கயம் என்றெல்லாம் எழுதுவது சரி. ஆனால் தாமரை என்ற வார்த்தை தெரிந்தால் அதை மட்டுமே உபயோகிக்கணும்.

      இது, தமிழை மறந்தவர்களுக்கான என் அட்வைஸ் அல்ல, ஆலோசனை. ஹிஹிஹி

      நீக்கு
    9. //ஓட்டு, வோட்டு இரண்டில் எது சரி?// இதான் முதல் கேள்வி! :)))))

      நீக்கு
  8. இரண்டு நாட்களாகப் பெருமாள் நம்ம வீடு இருக்கும் தெருவழியாகவே போய் வந்து கொண்டிருந்தார். ஆனாலும் நடு இரவில் அவர் திருட்டுத்தனமாய்ப் போயிட்டுத் திருட்டுத் தனமாவே வந்ததால் கொட்டோ/பட்டாசோ/மேள சப்தங்களோ இல்லை. ஒரே ஒரு வேட்டு மட்டும் போட்டார்கள். போய்ப் பார்க்க முடியலை. நடு ராத்திரி 2 மணியிலிருந்து 3 மணிக்குள்ளாக! :( என் தூக்கமே சுகம்னு இருந்துட்டேன். :( எழுந்துக்க முடியலை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களை தொந்தரவு பண்ண வேண்டாம்னு நினைச்சுருப்பார்.

      நீக்கு
    2. என்னவோ போங்க! :( இரண்டு வருஷங்கள் ஆகிவிட்டன அவரைப் பார்த்து! :(

      நீக்கு
    3. மனதில் நினைத்தாலே தரிசனம் கிடைத்துவிடுமே!

      நீக்கு
    4. நினைச்சுண்டே தானே இருக்கேன். எங்கே! :(

      நீக்கு
    5. நான் முந்தாநாள் மதியத்திலிருந்து, நேற்று மதியம் வரை தூங்கவில்லை, இடையில் நள்ளிரவு 3-3:50 வரை தூங்கியதைத் தவிர. இரவு முழுதும் மேல்கோட்டை உற்சவர் வைரமுடியுடன் நான்கு தெருக்களிலும் (200 மீட்டர் ஒரு தெரு இருக்கலாம்) ஊர்வலம் வர 7 மணி நேரம், 50000 மக்கள் கூட்டத்தில் (பொதுவாக இரண்டு லட்சம்பேர் அந்த வீதிகளில் கிடைத்த இடங்களிலெல்லாம் இருப்பார்கள். கர்நாடக முதலமைச்சர் வந்ததால் கட்டுப்பாடுகளால் கூட்டம் குறைவு)

      நீக்கு
  9. காமிக்ஸ் இப்பவும் படிக்கிறேன்.
    அம்புலிமாமா,கண்ணன் எல்லாமே படித்தது உண்டு. குழந்தைகளுக்காக
    டிங்கிள் வாங்கி அவைகளையும் பைண்ட் செய்து வைத்திருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் சில காமிக்ஸ் புத்தகங்கள் வாங்கி சேமிப்பில் வைத்துள்ளேன்! எப்பவுமே சுவாரஸ்யம்தான்!

      நீக்கு
    2. சிறு வயதிலேயே தொடர்கதைகள் படிக்கத் தொடங்கி விட்டதால் அம்புலிமாமா வாசிக்கும் குழந்தைகளை ஆல்பமாக பார்த்ததுண்டு. அதில் வரும் விக்கிரமாதித்தன்,வேதாளம் கதை மட்டும் பிடிக்கும். கண்ணன் படித்த நினைவு இல்லை.

      நீக்கு
    3. முத்து காமிக்ஸ் ரொம்ப பிடிக்கும் அதிலும் இரும்புக் கை மாயாவி மிகவும் பிடிக்கும்.

      நீக்கு
    4. இப்போது உங்களிடம் ஒரு கேள்வி மில்ஸ் அண்ட் பூன் எத்தனை வயது வரை படித்தீர்கள்?

      நீக்கு
    5. ஹி ஹி !! மில்ஸ் அண்ட் பூன் எல்லாம் பொம்பளைங்க சமாச்சாரம் என்று என் கசின் (சகோதரி) சொன்னதால் அந்தப் பக்கம் திரும்பிக்கூடப் பார்த்ததில்லை!

      நீக்கு
    6. மில்ஸ் & பூன்ஸ் - புத்தக அட்டையை முதன்முதலில் பார்த்ததே எனக்கு 24 வயதில் சென்னையில் கணிணி படித்தபோது, கோர்ஸுக்கு வந்திருந்த பனிரெண்டாம் வகுப்பு சேட்டுப் பெண்ணின் கையில்தான். இப்போதும் பெண் மட்டும் வீட்டில் இருந்தால் (அறுபதுக்கு மேல் தவிர) நுழைய மாட்டேன் என்ற குணம் என்னுடையது

      நீக்கு
    7. சிறு வயதிலேயே தொடர்கதைகள் படிச்சால் காமிக்ஸ் படிக்கக் கூடாதா என்ன? கண்ணனின் வந்த தொடர்கதைகளைப் படிச்சதில்லை போல நீங்க! எல்லாமே ஒரே திகிலாக இருக்கும். புத்தகமும் கனமாகக் குறைந்தது நூறு பக்கங்களுக்கும் மேல் இருக்கும். அடுத்து அம்புலிமாமாவிலும் நல்ல நல்ல கதைகளாக வரும். அப்போ துர்க்கேச நந்தினி என்னும் தொடர் வந்து கொண்டிருந்தது. பெரியப்பா வீட்டில் வாங்குவதால் அங்கே போய்ப் படிச்சுட்டு வரேன். மற்றபடி நானும் ரொம்பச் சின்ன வயசிலேயே புத்தகங்கள் படிக்க ஆரம்பிச்சேன்.

      நீக்கு
    8. மில்ஸ் அன்ட் பூன் கேள்விப் பட்டது தான். நான் பார்த்ததே இல்லை. எங்க பெண்ணெல்லாம் வாசிச்சது இல்லை. அவளோட அப்போதைய ஃபேவரிட் அகதா கிறிஸ்டி தான். தேடித்தேடிப் படிப்பாள். பையர் வேறே மாதிரி. சின்ன வயசிலேயே ஒரே தத்துவமாய்ப் படிப்பார்.

      நீக்கு
    9. எங்க குழந்தைகளின் காமிக்ஸ் புத்தகம் எல்லாம் இன்னமும் பத்திரப்படுத்தி வைச்சிருக்காங்க.

      நீக்கு
  10. //# வடநாட்டு நிகழ்ச்சிகளை மட்டுமே கதையாக எழுதினார்கள் என்பதை என்னால் ஒப்புக்கொள்ள முடியவில்லை.// அப்படித்தான் எழுதி வந்திருக்காங்க என்பதைப் பொன்னியின் செல்வனிலோ/பார்த்திபன் கனவிலோ/சிவகாமியின் சபதத்திலோ புத்தக முன்னுரையில் படித்த நினைவு. ராஜபுதனத்து வீரர்கள்/மராட்டி வீரர்கள் பற்றியே கதைகள் எழுதப்பட்டு வந்ததாகச் சொல்வார்கள் ஆதாரபூர்வமாகச் செய்தி கிடைச்சால் பகிர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  11. என் மாமியாருக்கு என்னமோ பாமாயில் மேல் அப்படி ஒரு மோகம். வேறே எண்ணெய் பயன்படுத்தக்கூடாது எனப் பிடிவாதமே பிடிப்பார். ஆனால் நான் பக்ஷணங்கள் பண்ண மட்டும் அதைப் பயன்படுத்தச் சொல்லிட்டு மற்றவற்றிற்கு நல்லெண்ணெய் தான். அப்புறமா மாமியார் எங்களை விட்டு மைத்துனரிடம் போன பின்னர் கடலை எண்ணெயும், நல்லெண்ணெயும், தே.எண்ணெயும் தான். மற்றவை ஒத்துக் கொள்வதே இல்லை. இந்த ரிஃபைன்ட் ஆயில் என்பதை நான் தீபாவளி சமயம் அத்தனை பக்ஷணங்கள் பண்ண வேண்டி இருக்கே என வாங்குவேன். ஏனெனில் என்னதான் கடலை எண்ணெய் நன்றாக இருந்தாலும் சீருக்கு வைப்பது போல் பக்ஷணங்கள் பண்ணி வைக்க முடியாது. சில நாட்களிலேயே வாசனை வந்துடும். எங்க வீட்டிலேயோ எல்லாமும் பெரிய பெரிய ட்ரம்களில் பண்ணி வைக்கணும். இப்போல்லாம் சின்னச் சம்புடம்! :)))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருத்துரைக்கும், தகவல்களுக்கும் நன்றி.

      நீக்கு
    2. பாமாயில் வந்தபோதே என் மாமா, அதை உபயோகிக்கக்கூடாது என்று எல்லோரிடமும் சொல்லுவார். இந்த விஷயத்தில் கூகுள் செய்திகளை நான் நம்புவதில்லை. அதிலும் கோல்கேட், உங்க டூத் பேஸ்ட்ல உப்பு இருக்கா, கரி இருக்கா உமி இருக்கா என்றெல்லாம் பல்டி அடித்த பிறகு.

      மற்ற எண்ணெய்களில் (தவிட்டு, கடுகு, சூரியகாந்தி,...) எனக்கு ஆட்சேபணை இல்லை, தொஇர்க்க முடியாவிட்டால்.

      கர்நாடகாவில் பாமாயில் உபயோகம் மிக அதிகம்

      நீக்கு
    3. நான் பாமாயிலில் எது செய்தாலும் சாப்பிடவே மாட்டேன். அதுவே கோவிப்பாங்க மாமனார்/மாமியாரெல்லாம். உனக்குனு தனி வழி என்பாங்க.

      நீக்கு
  12. மஞ்சரியை ஏன் சேர்த்தேன் என்றால் குழந்தைகள்/படிப்பவர்களுக்கான பொது அறிவு விஷயங்கள் அதில் அதிகம். கலைமகள் அப்படி இல்லை. என்றாலும் எனக்குக் கொஞ்சமானும் தமிழ் அறிவு வளர்ந்தது என்றால் அது கலைமகள், அமுதசுரபி ஆகியவற்றால் என்றே சொல்லலாம். அதிலும் கலைமகள் பக்கத்துக்குப் பக்கம் அறிவுச் சுரங்கம். விபரம் தெரிந்த ஒற்றைப்படை வயதில் இருந்து தொடர்ந்து பல ஆண்டுகள் படித்திருக்கேன்.

    பதிலளிநீக்கு
  13. ஒரே எண்ணெயை தொடர்ந்து உபயோகிக்கக் கூடாது மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும் என்ற ஒரு மருத்துவரின் ஆலோசனையின்படி க.எண்ணெய், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், ரைஸ் பிரான் ஆயில், சூரியகாந்தி எண்ணெய் என்று மாற்றி மாற்றி உபயோகிப்பேன். கடைசி இரண்டையும் சாப்பிடக்கூடாது என்று ருசியா திவாகர் கூறுகிறார்.
    பாம் ஆயில் பிடிக்காது. இரண்டு காரணங்கள். ஒன்று அதிகம் கெட்ட கொழுப்பு. இன்னொன்று, அதை மலேஷியாவிலிருந்து இறக்குமதி செய்வதற்காக நம் தேங்காய் எண்ணெயயில் கொழுப்பு அதிகம் என்று கதை கட்டி விட்டு அரசியல்.

    பதிலளிநீக்கு
  14. பதில்கள்
    1. தகவல்களுக்கு நன்றி. ருசிதா = ருசி + தா ?

      நீக்கு
    2. ருசிதா என்று தவறாக குறிப்பிட்டு விட்டேன். ருஜுதா திவாகர் என்று சரியாக குறிப்பிட்டிருந்தார் ஒரு வேளை யாரென்று புரிந்திருக்கும். இந்தியாவின் பிரபல Nutritionist ஆன இவர் பல பிரபலங்களுக்கு டயடீஷியன். அதிக உடல் எடையோடு இருந்த அம்பானியின் மகனை இளைக்க வைத்தவர். இவருக்கு ஃபேவரிட் கரீனா கான் கபூராம். நம் பாரம்பரிய உணவு முறையை நவீனமாக்குகிறவர்.

      நீக்கு
    3. ஓ, இவரா? இவர் பேட்டிதான் வாட்சப்பில் சுமார் ஐந்து வருஷங்களுக்கும் மேலாகச் சுற்றிக் கொண்டிருக்கே. சாதம் சாப்பிடுவது தவறில்லை என்பார்.

      நீக்கு
    4. அட! இங்கே கொடுத்த கருத்து எங்கே போச்சு? இந்த ந்யூடிரிஷியனோட ஆலோசனைகள் சில வருடங்களாகவே வாட்சப்பில் சுற்றுகிறதே. சாதம் சாப்பிடலாம், அளவாக என்பார்.

      நீக்கு
  15. ரைஸ் பிரான் ஆயிலில் பட்சணங்கள் செய்தால் நன்றாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அம்பேரிக்காவில் பையர்/பெண் வீட்டில் ஆலிவ் எண்ணெய்தான். தே.எண்ணெய் அங்கேயே தயாரிப்பதும் கிடைக்கிறது. வெள்ளை வெளேர் எனப் பனிக்கட்டியைப் போல் இருக்கும். நல்லெண்ணெய் இதயம் கம்பெனியின் எண்ணெய் தான். என்றாலும் விலை அதிகம். ஆனால் நன்றாகவே இருக்கும். கடுகு எண்ணெயும் கிடைக்கிறது.

      நீக்கு
    2. கருத்துரைகளுக்கும், தகவல்களுக்கும் நன்றி.

      நீக்கு
    3. ஆலிவ் எண்ணெயை பொரிக்க பயன்படுத்தக் கூடாது என்கிறார்களே?

      நீக்கு
    4. ஆலிவ் எண்ணெய் கொதிக்க வைத்தால் நல்லதல்ல. அதற்கு சூ.கா போன்ற ஆயில்கள் எவ்வளவோ பரவாயில்லை.

      புதன் கேள்வி.. தீபம் எண்ணெய் என்று ஏமாற்றுவித்தை காண்பிப்பதைப் பற்றி உங்கள் அபிப்ராயம் என்ன?

      நீக்கு
    5. @Bhanumathy Venkateswara ஆலிவ் ஆயிலில் பல வகைகள் உள்ளன். பொரிப்பதற்கு என்று உள்ள ஆயில் உள்ளது எங்கள் வீட்டில் அந்த ஆலிவ் ஆயில்தான் எல்லாவற்றிற்கும் உபயோகிக்கிறோம் நல்லெணி வத்த குழம்பு வைப்பதற்கு மட்டும் உபயோக்கிறோம்

      நீக்கு
    6. நான் உபயோக்கிக்கும் ஆலிவ் ஆயிலுக்கான லிங்க் இங்கே https://www.instacart.com/landing?product_id=126762

      நீக்கு
    7. ஆலிவ் எண்ணெய் சமையலுக்கு எனத் தனியாக இருக்கிறது, நான் நிறைய பக்ஷணங்கள் பண்ணி இருக்கேன். பூரி, வடை, பஜ்ஜி, சமோசா எல்லாமும் பண்ணுவேன். எண்ணெயே குடிக்காது. ஆனால் தோசை/அடை எனில் நல்லெண்ணெய் தான்.

      நீக்கு
  16. நான் எப்போதுமே தேங்காய் எண்ணெய்க்குத் தான் என்னோட ஓட்டைப் போடுவேன். பாம் ஆயில் மாமியாருக்காக வாங்கினாலும் எனக்கு அவ்வளவாப் பிடிக்காது. முன்னெல்லாம் ரேஷனில் கொடுப்பார்கள். இப்போவும்/அப்போவும் அடை வார்த்தால்/அவியலுக்கு/மோர்க்குழம்பு/பொரிச்ச குழம்பு/கீரை/எரிசேரி போன்றவற்றிற்குத் தேங்காய் எண்ணெய் தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் பெண் கல்யாணத்திற்கு சமையல் + பட்சணம் எல்லாம் செய்த நாகராஜன் (மஹாலக்ஷ்மி கேட்டரிங்) சொன்ன தகவல் : சீர் முறுக்கு போன்ற பட்சணங்கள் தேங்காய் எண்ணெயில் செய்தால் - நீண்ட நாட்கள் கெட்டுப்போகாமல் இருக்கும்.

      நீக்கு
    2. உண்மை. என் அப்பா வீட்டில் அம்மா இருந்தவரை தேங்காய் எண்ணெய் தான் எல்லாவற்றிற்கும் சொல்லப் போனால் அப்பளம்/வடாம் கூட அதில் தான்! பின்னர் மாறிவிட்டது. கல்யாணம் ஆகி வந்த புதுசில் இங்கே தேங்காய் எண்ணெய்ப் பழக்கம் இருந்தாலும் தோசைக்கு, வதக்கல் கறிகளுக்குக் கடலை எண்ணெய் சேர்க்கையில் எனக்கு ஒத்துக்காமல் ரொம்பக் கஷ்டப்படுவேன். பின்னர் பழகிவிட்டது.

      நீக்கு
    3. நெல்லையில் வனி எண்ணெய் என்று எண்ணெய்க்கடைகளில் விற்பார்கள் (எண்ணெய்கள் அளந்து கொடுக்கும்போது வழிபவற்றை டிரேக்களிலிருந்மு எடுத்து). அது இட்லி மி பொடிக்கு சூப்பர்.அந்த எண்ணெய் வாசனையே அலாதி

      நீக்கு
  17. 2.நாம் வாங்கும் காய்கள்/பழங்கள்/ தானியங்கள் எல்லாமுமே தாவரங்களில் இருந்து பெறப்படுபவையே! அப்படி இருக்கையில் இப்போல்லாம் ஆர்கானிக் என்னும் பெயரில் வருவன எங்கிருந்து வருகின்றன?
    ஆர்கானிக் என்பதன் உண்மையான பொருள் என்ன?
    காய்கறிக்கடைகளில் இருந்து நாம் வாங்கும் காய்கள் எல்லாமும் காய்கறித் தோட்டங்களில் விளைந்தவையே! அப்படி இருக்கையில் குறிப்பிட்ட சில காய்கள் மட்டும் தோட்டத்துக்காய் எனச் சொல்லி விற்பது ஏன்? உதாரணமாகச் சிலர் எலுமிச்சம்பழங்கள்/மாங்காய்/மாவடு போன்றவை. மரத்திலிருந்து இறக்கியது என்பார்கள். எல்லாமுமே அப்படித் தானே வந்திருக்கணும்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 1. நான் தட்டச்சிய முதல் கேள்வி எங்கே மறைந்தது?

      இதிதான் முதல் கேள்வியாக இருந்திருக்குமோ?

      நீக்கு
    2. முதல் கேள்வியை முன்னாடியே கேட்டுட்டேனே. நீங்க யாருமே கவனிக்கலை. நெல்லை எப்போவுமே கவனிக்க மாட்டார். அது அவர் வழக்கம். நீங்களுமா? :)))))

      நீக்கு
    3. ஹைப்ரிட் காய்கள் உடலுக்கு நல்லது செய்யுமா? பிடி கத்திரிக்காய் என்கிறார்களே! அதை எப்படிக் கண்டுபிடிப்பது? (இப்போதைக்குக் கத்திரிக்காய் வாங்கலை)
      பேலியோ உணவு குறித்து அறிந்திருக்கிறீர்களா? அதை ஆதரிக்கிறீர்களா?
      சர்க்கரையைக் குறைக்கப் பேலியோ உணவு சிறந்தது என்கிறார்கள். அது உண்மையாய் இருக்குமா?

      நீக்கு
    4. பி.டி. கத்தரி - நாட்டுக்கத்தரி இல்லாதது, சுரைக்காய் சைஸுக்கு இருப்பது. பி.டி. தக்காளி-பெங்களூர் தக்காளி என்று சொல்லப்படுவது. பி.டி. வாழைப்பழம்-மஞ்சள் வாழைப்பழம்-விதையில்லாமல், பளீர் நிறத்தில் பலநாட்கள் இருப்பது. ..ஓ இவையெல்லாம் அடுத்தவாரக் கேள்விகளா? சாரி...

      நீக்கு
    5. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! எல்லாமே அடுத்த வாரத்துக்கான கேள்விகள். நீங்கதான் எப்போவுமே அ.கு. ஆச்சே! :)))))

      நீக்கு
  18. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
    இறையருள் சூழ்ந்து எங்கும் இன்பமே நிறைந்து வாழ்க..

    வாழ்க நலம்..
    வாழ்க தமிழ்..

    பதிலளிநீக்கு
  19. பாமாயில் எப்படிக் கிடைக்கிறது?..

    பாமாயில் மரத்திலிருந்து ரேசன் கடை வழியாக பாக்கெட்டுகளில் கிடைக்கிறது.

    பதிலளிநீக்கு
  20. பாமாயில் ஏன் பனை எண்ணெய் என்று சொல்லப்படுவதில்லை?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒருவேளை ஈச்சம் மரம் / பழத்திலிருந்தும் எடுப்பார்களோ?

      நீக்கு
  21. பாமாயில் எனப்படும் பனை எண்ணெய் நல்லதோ கெட்டதோ.. இதை சாகுபடி செய்வதற்காக இந்தோனேசியாவில் உலகின் அரியதான மழைக் காடுகள் அழிக்கப்படுவதையும் வனங்களுக்கு வைக்கப்படும் தீயில் சிக்கிக் கொண்டு உராங் உட்டாங் எனும் வானரங்கள் மற்ற சிற்றுயிர்கள் துடிதுடிப்பதையும் இணையத்தில் தேடி தெரிந்து கொள்ளலாம்..

    Save rain forest என்றொரு இயக்கமும் இருக்கின்றது..

    பதிலளிநீக்கு
  22. படம் 1. செல்ஃபோன் மேடையில்தான் இருக்கிறது. எனவே அம்மா அருகில்தான் இருக்க வேண்டும், வந்து கீழே இறங்கி விட்டு விடுவாள்.

    படம் 3. தூக்கம் வருது இன்னும் அம்மாவைக் காணோம். உன் மேல் படுத்துக் கொள்கிறேன்.

    படம் 3.

    பதிலளிநீக்கு
  23. நானும் அம்புலிமாமா படித்ததுண்டு...
    கே.ப.சுவாரஸ்யம்.

    பதிலளிநீக்கு
  24. இங்கெல்லாம் பாமாயில்தான் எல்லா இடங்களிலும் பயன்படுத்துகிறார்கள். பாக்கெட்டில் வரும் தேங்குழல் முறுக்கு, தட்டை, எதுவாக இருந்தாலும். ஃபேமஸ் மையாஸ் கூட பாமாயில் தான் பயன்படுத்துகிறார்கள். ஆனால் 0% கொலஸ்ட்ரால் ன்னு பல ப்ரான்ட்ஸ் வரத் தொடங்கியிருக்கிறது.

    ஏதோ ஒரு ப்ரான்ட் மறந்து போச்சு மட்டும் ப்யூர் பட்டர் இல்லைனா வெஜிட்டபிள் ஆயில்னு போட்டிருப்பாங்க யாமறியோம் பராபரமே. வாங்குவதில்லை.

    நம் வீட்டில் கடலை எண்ணை, நல்லெண்ணை, தேங்காய் எண்ணை. எப்போவாவது ரைஸ்ப்ரான் எண்ணை. ஆனால் அது அபூர்வம். பொரிக்க க எ அல்லது தே எ.

    கீதா

    பதிலளிநீக்கு
  25. இங்கு வீட்டிற்கு அடுத்த விடிடில் இருப்பவர் இங்குள்ள ஒரு ரெஸார்ட்டில் மேனேஜராக இருக்கிறார். அவர் சொன்ன தகவல்....அந்த ரெஸார்ட்டில் ஒரு தடவை பொரிக்க பயன்படுத்திய எண்ணையை மீண்டும் பயன்படுத்த மாட்டார்கள். அந்த எண்ணையை ஒரு லிட்டர் 30, 40 ரூபாய்க்குச் சின்ன ஹோட்டல்கள், ரோட் சைட் கடைக்காரர்கள் வாங்கிக் கொண்டுவிடுவார்களாம்.

    கூடியவரை வெளியில் வாங்கிச் சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது. நம்மூரில் பெரும்பான்மையான் உணவகங்களில் எந்த செக்கிங்கும் இல்லை, விதிமுறைகளும் பின்பற்றப்படுவதில்லை. தெருவோரக் கடைகள் பற்றிச் சொல்லவே தேவையில்லை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானுமே கொஞ்சமாய் எண்ணெய் வைத்துப் பொரிக்க வேண்டியதைப் பொரித்து எடுப்பேன். எண்ணெய் மிஞ்சினால் மறுநாள் உபயோகம் செய்ய முடிந்தால் சரி, இல்லைனா கொட்டிண்டு தான் இருந்தேன். இப்போல்லாம் வேலை செய்யும் பெண் எங்களுக்குப் பிடிக்கும் என வாங்கிச் செல்கிறார். சுட்ட எண்ணெயில் ஏதேனும் பொரித்தது சாப்பிட்டால் என்னோட வயிறு உடனே காட்டிக் கொடுத்துடும். :( ஆகவே வெளியில் வாங்கினால் கூடத் தேர்ந்தெடுத்துத் தான் வாங்குவோம்.

      நீக்கு
    2. கருத்துரைகளுக்கு நன்றி.

      நீக்கு
  26. படம் - 1. இந்த அம்மா இப்பத்தான் ஃபோன் பேசி முடிச்சிட்டு எனக்குப் பால் ரெடியா எடுத்து வைச்சிருக்காங்க, தருவாங்கன்னு நினைச்சா ஆளையே காணும்! நாமளே எடுத்துக்கணும் போல (பால் பாட்டில் ரெடியாக இருக்கிறது. நிப்பிள் எல்லாம் போட்டு ரெடியாக இருக்கிறது...சௌகரியமாகப் போச்சு)

    கீதா

    பதிலளிநீக்கு
  27. படம் 2 - ஹூம் தட்டில் இருப்பது இன்னும் வாய்க்கு வரலை! என்ன விட்டுட்டு அங்க என்ன பார்வையோ பேச்சோ? (ஏவ்வளவு நேரமா வெயிட்டிங்க் ஃபார் த எஜமானின் கமான்ட்)

    கீதா

    பதிலளிநீக்கு
  28. கடைசியில் இருக்கும் படங்கள் ரசித்தேன். கேள்வி பதில்கள் ஸ்வாரஸ்யம்.

    பதிலளிநீக்கு
  29. கேள்வி பதில்கள் நன்று. படங்கள் ரசனை.

    ஒரேஎண்ணையை பாவிக்க கூடாது மாற்றவேண்டுமென வைத்தியர்களும் சொல்கிறார்கள். தேங்காய் எண்ணெய் சூரியகாந்தி,ஆலிவ்,நல்லெண்ணெய்தான் பயன்படுத்துவோம்.

    பதிலளிநீக்கு
  30. கேள்விகளும், பதில்கள்ய்ம், பின்னூட்டங்களும் அருமை.
    காமிக்ஸ் புத்தகம் எப்போதும் பிடிக்கும். னானும் என் கண்வரும் வாங்கி படித்தோம், பிள்ளைகளுக்கு வாங்கி கொடுத்தோம், பேர பிள்ளைக்களுக்கு வாங்கி கொடுத்தோம்.

    குழந்தை கீழே ஒன்றும் இல்லை ஏற இவ்வளவு எம்பி ஏறி இருப்பது வியப்பு.

    டோனேட் ஒன்று தான் இருக்கு எனக்கு வேண்டும் என்கிறது செல்லம்.

    குழந்தை என்ன தான் வளர்ப்பு செல்லமாக இருந்தாலும் இப்படி படுத்து இருப்பது கவலைதான் பார்க்க. குழந்தைக்கு உடம்புக்கு எதுவும் வராமல் இருக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  31. குழந்தை கீழே ஒன்றும் இல்லை ஏற இவ்வளவு எம்பி ஏறி இருப்பது வியப்பு.''
    exactly. :)

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!