புதன், 25 மே, 2022

பால், தயிர், வெண்ணெய், நெய், மோர் - இவற்றில் மனிதனுக்கு ஆதாரமாகத் தேவைப்படுவது எது?

 

நெல்லைத்தமிழன் : 

சமீபத்தில் இரயில் பிரயாணத்தில் (தில்லி-பெங்களூர்) ஒரு 50 வயதுக்காரர், பெட்டி, பை கிழிந்திருந்தால் தைப்பதற்கு வந்தார். எங்கள் சக பயணியின் பையைத் தைத்துக்கொடுத்தார்.  மற்ற எல்லா சர்வீஸ்களைவிட இதுவும், zip சரி பண்ணித்தருவதும், செருப்பு சரிபண்ணித்தருவதும் முக்கியமான சர்வீஸ்களாக எனக்குத் தோன்றின (பிரயாணத்தில்). அது தவிர, தயிர், மோர், வாழைப்பழம் போன்றவை விற்பவர்களும். கேள்வி - இரயில் பயணத்தில் எது மிகவும் முக்கியமான சர்வீஸ்? காபி டீ கேட்டு வருபவர்களா? உணவா? அல்லது வேறு என்ன என்ன?

# நாம் முக்கியமான சர்வீஸ் என நினைப்பது அதைச் செய்பவருக்கு லாபகரமாக இராது . உதாரணமாக அறுந்த பை , செருப்பு சரி செய்வது ரொம்ப அவசர - அவசியம்- ஆனால் அடிக்கடி வியாபாரமாகாது. விற்பவர் வாங்குபவர் இரு தரப்புக்கும் திருப்தி அந்தந்த இடத்துக்குப் பிரத்தியேகமான பண்டம் பழம் விற்பதுதான். காரமாங்காய்த்துண்டம் கொய்யா வெள்ளரிப் பிஞ்சு இன்னபிற.

& முன்பு எப்போதோ நீண்ட ரயில் பயணத்தின்போது தமிழ்ப் புத்தகங்கள் / காமிக்ஸ் / வார - மாத இதழ்கள் கட்டணம் பெற்று, வாசிக்கக் கொடுத்தனர். அது ஒரு நல்ல சேவை, பயனுள்ளது என்று தோன்றியது. 

இங்கு பதாமி எனப்படும் பெங்களூர் அல்ஃபோன்ஸா கிலோ 70 ரூ, பங்கனப்பள்ளி 50-60 ரூ என்று விற்கிறது. ஏன் இந்தத் தடவை பலாப்பழம் மட்டும் மிக அதிக விலை விற்கிறது? 300 ரூபாய்க்குக் குறைவாக எந்தப் பலாப்பழமும் கண்ணில் படவில்லை.

# முற்றுமுன் பிஞ்சு-காய் உதிர்ந்து விளைச்சல் குறைந்தால் விலை ஏற்றம் இயல்பு.

 பால், தயிர், வெண்ணெய், நெய், மோர் - இவற்றில் மனிதனுக்கு ஆதாரமாகத் தேவைப்படுவது எது?

# பால்படுபொருள் எல்லாமே தேவையற்ற அநாசாரம் என்று ஒரு கட்சி இருக்கிறதே நினைவில்லையா?  தென் இந்தியப் பழக்கவழக்கப் படி வெண்ணெய் தவிர மற்ற எல்லாமே ஆதாரத் தேவை எனச் சொல்லலாம்.

& என்னைக் கேட்டால், மோர் மட்டும் போதும் என்று சொல்வேன். 

பங்கனப்பள்ளி மாங்காய் ஊறுகாய்க்கு நல்லா இருக்கும். அது மார்க்கெட்ல கிடைப்பது அபூர்வம். ஆனா பழம் குமியுது. என்ன காரணம்?

# பெரும்பாலும் மாங்காய் ஊறுகாய் ஒரு குறுகிய காலத்திற்கு போடப்படுவது.  விதிவிலக்கு  மாங்காய் வற்றல் &.  ஆவக்காய் மாங்காய். இந்த மாதிரி நெடுநாள் பயன்பாட்டுக்கு ஊறுகாய் போட நல்ல புளிப்பு இருக்கிற காய்தான் சரிப்பட்டு வரும். அதுபோக காயாய் விற்றால் என்ன விலையோ அதைவிட  பழமாக விற்றால் அதிக விலை கிடைத்தால் மாங்காய் ஊறுகாய் சந்தைக்கு வராது.  எந்த சீஸனில் எந்த காய் ஊறுகாய்க்காக அதிகம் விற்பனை ஆகிறது என்பதை கணித்து வைத்திருப்பார்கள். அதைப் பொருத்துதான் காய் விற்பனை. நாள்பட வரும் ஆவக்காய் ஊறுகாய்க்கு நார் அதிகம் உள்ள புளிப்பு மிக்க ஒரு பதமான விதை இருக்கக்கூடிய காய்தான் சிறப்பு. அதற்கான  விசேஷமான காய் விற்பனைக்கு நிறைய வரும். 

பங்கனபள்ளி மாங்காய் வாங்கி எல்லாரும் ஊறுகாய் போடமாட்டார்கள். மேலும் மாம்பழத்தை தெருவோரத்தில் விற்பனை செய்வது கடைகளில் விற்பனை செய்வது இவை இரண்டும் போக ஏற்றுமதி வியாபாரம் பழச்சாறு தயாரிப்பாளர்களுக்கு விற்பது என்பது  முக்கிய பகுதியாகும். பெரும்பாலான நல்ல தோப்புகளின் விளைச்சல் இந்த மாதிரி ஏற்றுமதிக்கும் பழச்சாறுக்கும் விற்கப்பட்டு விடுகிறது என்பதால் பழுக்கக் கூடிய காய்கள் ஊறுகாய்க்காக விற்பனைக்கு வருவதில்லை.

அரசியல் கொலைகாரர்களின் விடுதலையைக் கொண்டாடும் அளவு நாடு தரம் தாழ்ந்து விட்டதா? 

# இலங்கை தமிழர்களுக்கு ஒரு பெரிய பலமாக விடுதலைப்புலிகள் இருந்த காலம் ஒன்று உண்டு. எனவே ஈழத் தமிழர்களின் அபிமான கட்சியாக எல்டிடிஇ உருப்பெற்றது. ஆனால் மறுப்பு எதிர்ப்பு என்பது திசை திரும்பி போர் என்ற நிலைக்கு வந்ததும் நிலைமை சிக்கலாகிவிட்டது இதற்கு எளிதான தீர்வு எதுவும் கிடைக்கவில்லை எல்லோரும் முயன்று பார்த்தார்கள். பலனில்லை. நீண்ட ஆலோசனைக்குப் பின் ராஜீவ்காந்தி இதற்கு ஒரு தீர்வு காண முற்பட்டார் ஆனால் ஈழத்தில் உள்ள 2 அணிகளும் அந்த தீர்வை மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளவில்லை. விஷயம் முற்றிப்போய் ராஜீவ் காந்தி ஈழத்தமிழர்களின் எதிரியாகவே பார்க்கப்பட்டார். இது சரி என்று நிச்சயம் சொல்ல முடியாது. ஆனால் அவர்களுடைய வெறுப்பு உணர்ச்சிக்கும் ஒரு சின்ன அடிப்படை இருக்கிறது என்பதை யோசித்தால் விளங்கும்.

"நம்மைப் போன்ற தமிழ் மக்களுக்கு எதிரி"  என்ற கண்ணோட்டத்தில் ராஜீவ் காந்தியைப்  பெரும்பாலோர் பார்த்தார்கள் என்பது கசப்பான உண்மை.  இதன் காரணமாகத்தான் ராஜீவ் கொலையில் நேரடியாக ஈடுபட்டவர்களும்  செத்துப் போன பின், முதல் நிலைக் குற்றவாளியல்லாத  மற்றவர்களுக்கு மிகக் கடுமையான தண்டனை என்பது  மனதளவில் ஒரு அநியாயமாகவே பெரும்பாலோர் பார்க்கிறார்கள். இந்த பிரச்சனைக்கு இதுதான் அடிப்படை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இதெல்லாம் சரி என்று யாரும் சொல்ல முடியாது. அதே போல இதெல்லாம் முற்றிலும் சரியில்லை  என்றும் சொல்ல முடியாது.

அரசியல் என்று வந்தபின், " இவர் சரி " என ஒரு சாரார்  சொன்னால் " இவர் சரி இல்லை " என்று  சொல்லவும் சிலர் இருப்பார்கள்.  எனவே இதில் யார் நிலைப்பாடு  சரி யார் வாதம் சரியில்லை என்பது பெரும்பாலும் சூழ்நிலையைப் பொருத்த விஷயம்.

யாரோ ? : 

Cooker-ல் தானியங்களுக்கும் தினசரி சமையலுக்கும் எவ்வளவு whiste கொடுக்கணும். 

- கொண்டை கடலை

- மொச்சை கொட்டை

- சிறு தானியங்கள்

- பயறு வகைகள்

- பருப்பு வகைகள்

- சாதம்

இதை தெரிவித்தால் தனியாக சமைக்க நேரிடும் ஆண்களுக்கு மிக மிக உபயோகமாக இருக்கும். 

பதிவில் வந்த பதில் : 

மாதேவி : 

 கொண்டைக்கடலை - 3விசில்

மொச்சை - 3 விசில்

சாதம்-3விசில்

நாட்டு சிவப்பு அரிசி - 5விசில்

பயறு,பருப்பு வகைகள் 2-விசில் நான் வைக்கிறேன்.

பெரும்பாலும் சாதம் ரைஸ் குக்கரில் போட்டுவிடுவேன்.

# இது கடலை, குக்கர், விசில் எல்லாவற்றையும் பொறுத்து மாறுகிற விஷயம்.  பரீட்சார்த்தமாக வைத்துப் பாருங்கள்.  அஞ்சு விசில் ஆனப்புறம் பதம் சரியா என்று பார்க்கலாம்.  எவ்வளவு விசில் என்று எளிதில் முடிவு செய்யலாமே.

கிண்டலாகக் கேட்டிருக்கிறீர்கள் என்றால் எங்கள் விடையை சுண்டலாக எடுத்துக் கொள்ளவும்.

$ சன்னா, மொச்சை, கொத்துக்கடலை, சிவப்பு பீன்ஸ், ராஜ்மா, காராமணி, எல்லாவற்றுக்கும் நாங்கள் முதல் whistle வந்தவுடன் 15 whistle வரை விடுவோம் (தண்ணீர் நிறைய விட மறக்க வேண்டாம்)

= = = = =

எங்கள் கேள்விகள் : 

1) மழை காலத்தில் மின்னல் மின்னும்போது டிவி கெட்டுப் போகலாம் என்று இரவில் எல்லா ஸ்விட்ச் களையும் off செய்து பிளக், கேபிள் எல்லாவற்றையும் கழட்டுவதுண்டா?

2) அரசியல், மதம், நடிகர்கள் குறித்த விவாதம் தவிர்க்க வேண்டும் என்று நினைக்கிறோம். சரிதான். ஆனால் எல்லோரும் இவை பற்றி விவாதம் வேண்டாம் என்று இருந்து விட்டால் சீரழிவை தடுப்பது எப்படி ?

3) சாராய மோகம், பணம் வாங்கிக் கொண்டு வாக்குப் போடுவது இரண்டும் இல்லாத ஒரு நிலை வரும். என்று நம்புகிறீர்களா ?

4) உணவுப் பொருள் மிகுதியாகி குப்பையில் கொட்டுவது உண்டா?

5) உங்கள் பேரக்குழந்தைகளுக்கு தமிழ் அல்லது அவர்களது தாய்மொழி சரளமாகப் பேசவருமா?

======

பின் வரும் படங்களைப் பார்த்தவுடன், உங்கள் வாழ்க்கையில் நடந்த அல்லது நீங்கள் படித்த / கேள்விப்பட்ட விஷயம் எது ஞாபகத்திற்கு வருகிறது? 

1) 


2) 


3) 


= = = = =

92 கருத்துகள்:

  1. அறன் எனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும் பிறன்பழிப்ப தில்லாயின் நன்று..

    குறள் நெறி வாழ்க..

    பதிலளிநீக்கு
  2. நட்பின் நன்மலர்கள் அனைவருக்கும் அன்பின் வணக்கம் ...

    இனிய சொற்களே உறவாக
    இறையருள் சூழ்க நிறைவாக..

    வாழ்க நலம்..
    வாழ்க தமிழ்..

    பதிலளிநீக்கு
  3. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
    எல்லோரும் ஆரோக்கியம், அமைதி நிறைந்த
    வாழ்வு என்றும் கிடைக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  4. கேள்விகளும் பதில்களும் சுவாரஸ்யம். நன்றி.

    முதல் கேள்விக்குப் (உங்கள்) பதில்.

    ஆமாம். இந்த ஊரில் மின்னல் பயங்கரமாக இருக்கும்.
    எல்லா ப்ளக் குகளையும் கழற்றி வைத்து விடுவோம்.
    நம் ஊரிலும் டிவி கனெக்ஷன் எடுத்து விடுவது உண்டு.
    அப்போது ஆண்ட்டென்னாக்கள் உபயோகமான காலம்.

    பதிலளிநீக்கு
  5. 2, எனக்கும் அந்த சந்தேகம் உண்டு.
    3, எனக்கு நம்பிக்கை இல்லை. பிரார்த்திக்கலாம்.

    4, நம்மூரில் நமக்கு உதவி செய்பவர் வாங்கிக் கொள்வார்.
    இங்கே அது கிடையாது. சில நாட்கள்
    குப்பையில் தான் போடவேண்டும்.

    5,பேரக் குழந்தைகள் வெகு சரளமாகப் பேசுவார்கள்.
    புரிந்தும் கொள்வார்கள்.

    பதிலளிநீக்கு
  6. படங்கள் ஜோர். முதல் இரண்டும் ஜாலி. மூன்றாவது
    வாழை தார் அம்மாடி பெரிசு. இதே போல்
    எங்கள் வீட்டிலும் காய்த்திருக்கிறது:)

    பதிலளிநீக்கு
  7. சாராய மோகம், பணம் வாங்கிக்கொண்டு வாக்களிப்பது, இந்தத் தலைமுறையிடம் நிச்சயம் செல்லாது என்றே நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  8. உணவுப்பொருள் மிகுதி... இனிப்பு வகைகள் தவிர மற்றவை வீணாவதைத் தவிர்க்க முடிவதில்லை. மற்றபடி பட்சணங்கள் , அரிசி போன்ன மூலப்பொருள்கள் காரிடாரில் சுத்தப்படுத்த வரும் பெண்களிடம் கொடுத்துவிடுகிறோம்.

    பதிலளிநீக்கு
  9. அரசியல், மதம், மொழி போன்றவற்றில் நம் கருத்தையும் மாற்றுக்கருத்தின்மீதான வெறுப்பையும் தெரிவிக்கத்தான் விவாதம் பயன்பெறும். விவாத்த்தின்மூலம் அடுத்தவர் கருத்தையோ நம்பிக்கையையோ மாற்ற முடியாது. அபூர்வத்திலும் அபூர்வம்.

    அது சரி... மொழி என்ற உணர்வினால் பாரதப் பிரதமரை (இராஜீவ்) வெறுத்தால், மதம் என்ற காரணத்துக்காக எதிரி நாட்டை நேசிப்பவர்களை எவ்வாறு குற்றம் சொல்வது?

    பதிலளிநீக்கு
  10. எங்கள் வீட்டில் பங்கனப்பள்ளி மரம் இருந்தது. பெரிய, அளவுக்கதிகமான காய்கள் காய்க்கும் காலம். தினம் புதிதாகப் பறித்து, அம்மா ஊறுகாய் செய்து, நான் சாப்பிட்டுக் காலி பண்ணுவேன். இப்போதும் எனக்கு, மாங்காய், பலாப்பழம் போன்றவற்றில் அப்சஷன் உண்டு. எங்கு பார்த்தாலும் வாங்கிவிடத் தோன்றும்.

    என் தம்பி, வீடு கட்ட, பங்கனப்பள்ளி, மல்கோவா, ருமானி, நீலன் மரங்களை வெட்டியது எனக்கு ரொம்பவே வருத்தம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். எங்க அம்பத்தூர் வீட்டிலும் பாதிரி மாமரம், ருமானி மாமரம் இருந்தன. பக்கத்திலே அடுக்கு மாடிக் குடியிருப்புக் கட்டுகையில் ஒட்டிக் கட்டினதில் சிமென்ட் எல்லாம் விழுந்து மரங்கள் வீணாகிப் போய் விட்டன. :( இப்போத் தான் சில வருடங்களாகக் கீழே கார் பார்க் என வந்திருக்கு!

      நீக்கு
  11. பதிவின் இறுதியில் உள்ள புகைப்படங்கள் என் இளமைக்காலத்திற்கு அழைத்துச் சென்றன.

    பதிலளிநீக்கு
  12. 1. ஊறுகாய்க்குச் சிறந்த மாங்காய்கள் என்ன என்ன? 2. கிளிமூக்கு மாம்பழம்தான் மாம்பழங்களிலேயே சுமார் என்பது என் எண்ணம். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? 3. மோர் சாத்த்திற்கு மாம்பழமா என அசூயைப்படுவேன். அதற்கும் ரசிகர் கூட்டம் எப்படி அமைகிறது? 4. அடைமாங்காய், அதாவது மாங்காயின் இருபுறக் கதுப்பையும் ஓரளவு வெட்டி பொடி அடைத்து, முழு மாங்காயாக ஊறவைக்கும் முறை யாருக்காவது தெரியுமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதில்கள் அளிப்போம்.

      நீக்கு
    2. ஊறுகாய்க்குச் சிறந்தது கொஞ்சம் புளிப்பான உருண்டை மாங்காய்/அல்லது ருமானி மாங்காய். ருமானி மாங்காயில் ஆவக்காய் போட்டால் நாலைந்து வருஷங்கள் ஆனாலும் கெடாது. மோர் சாதம் என்ன குழம்பு சாதத்தில் இருந்தே என் மாமனார்/மைத்துனர்கள்/நாத்தனார்கள் மாம்பழம் தொட்டுப்பாங்க. நம்மவர் தான் இந்த விஷயத்திலே அலாதி. நானெல்லாம் மாம்பழமே முழுசாய்ப் பார்த்தது/.சாப்பிட்டது பதினைந்து வயதுக்குப் பின்னரே! கிளி மூக்கு மாங்காய்/மாம்பழம் வேறு வழியில்லாமல் வாங்கிச் சாப்பிட்டிருக்கேன். விலை மலிவு என்பதால். அடை மாங்காய் கேள்வி தானே தவிர்த்துப் போட்டதில்லை. கிளி மூக்கு மாவடு நன்றாக இருக்கும். கிளி மூக்கு மாங்காயில் தொக்கு நன்றாக இருக்கும்.

      நீக்கு
  13. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  14. 1) டிவி ஸ்விட்சை மட்டும் கழற்றிவிடுவதுண்டு. எங்கள் இல்லத்தில் கேபிள் இணைப்பு கிடையாது.

    2) சீரழிவை தடுக்கமுடியாதுதான். இருந்தாலும் இவ்வாறான விஷயங்களில் தலையிடும்போது விவாதம் பிற திசைக்கு மாறிவிடுவதால் இவை போன்றவற்றில் தலையிடுவதில்லை. குறிப்பாக என் ஆய்வில் இதனைக் கண்டுள்ளேன்.

    3) கண்டிப்பாக முடியாது. (ஆனால் நாங்கள் இதுவரை எந்த அரசியல் கட்சி கொடுத்த பணத்தையும் வாங்கியதில்லை.)

    4) தவிர்க்கவே முடியாத சூழலில் கொட்டுவோம். வீணாகக்கூடாது என்றளவில் மிகவும் கவனமாகவே நடந்துகொள்கிறோம்.

    5) எங்கள் பேரக்குழந்தைகளுக்கு தமிழ் (தாய்மொழி) சரளமாகப் பேசவரும்.

    பதிலளிநீக்கு
  15. அடிக்கடி வாட்சப், செய்திச் சேனல்கள், செய்தி இணையதளம் பார்ப்பதே ஒரு வியாதியா?

    பதிலளிநீக்கு
  16. அந்த காலத்துத் தீபாவளி மலர் மாதிரி இருக்கின்றது..

    பதிலளிநீக்கு
  17. விசில் விவரங்களுக்கு ஒரு விசில்...!

    1) இல்லை...!
    2) சீரழிவு உறுதி...!
    3) வாய்ப்பில்லை ராசா...!
    4) இல்லை...!
    5) நூலைப் போல் சேலை...!

    பதிலளிநீக்கு
  18. 1) மழை காலத்தில் மின்னல் மின்னும்போது டிவி கெட்டுப் போகலாம் என்று இரவில் எல்லா ஸ்விட்ச் களையும் off செய்து பிளக், கேபிள் எல்லாவற்றையும் கழட்டுவதுண்டா

    உண்டு.

    2) அரசியல், மதம், நடிகர்கள் குறித்த விவாதம் தவிர்க்க வேண்டும் என்று நினைக்கிறோம். சரிதான். ஆனால் எல்லோரும் இவை பற்றி விவாதம் வேண்டாம் என்று இருந்து விட்டால் சீரழிவை தடுப்பது எப்படி ?

    சரிதான். தற்போதே மதம் குறித்த சார்பு கொஞ்சம் உண்டு. என்னுடைய பதிவுகள் உட்பட. நடிகர்கள் இளையதலைமுறை பார்த்துக்கொள்வார்கள். ஆக எஞ்சுவது அரசியல் மட்டுமே. எ பி யில் அரசியல் விவாதங்கள் வருவதால் யாருக்கும் பிரயோஜனம் இல்லை. எ பி என்பது தற்போதைய நிலையில் ஒரு அரட்டை அரங்கம் எனலாம். அப்படியே இருக்கட்டும். யாரும் யாருக்கும் பகை ஆக வேண்டாம். எ பி யால் நாட்டுக்கு எந்த சேவையும் இல்லை.

    3) சாராய மோகம், பணம் வாங்கிக் கொண்டு வாக்குப் போடுவது இரண்டும் இல்லாத ஒரு நிலை வரும். என்று நம்புகிறீர்களா ?

    அந்நிலை இங்கு கேரளத்தில் உண்டு. இதுவரை எந்த தேர்தலிலும் எங்களுக்கு பணமோ பொருளோ கொடுக்க யாரும் முன் வந்ததில்லை. மாறாக தேர்தல் செலவு என்ற பெயரில் எங்களிடம் இருந்து 500 1000 பிடுங்குவார்கள். அழுதுகொண்டே கொடுப்போம். இந்த பணப்பிரிவில் கம்யூனிஸ்டுகள் தான் முன்னிலை.

    4) உணவுப் பொருள் மிகுதியாகி குப்பையில் கொட்டுவது உண்டா?

    கூடிய வரையில் சோறு போன்றவை அளவாக சமைக்கப்படும். எப்படியானாலும் சோற்று பானையை திறந்தவுடன் முதல் கரண்டி சாதம் காக்கைக்கு வைப்பது தவறாது. food poison ஏற்படாதிருக்க சில பழைய உணவுகளை குப்பையில் கொட்டுவது உண்டு.

    5) உங்கள் பேரக்குழந்தைகளுக்கு தமிழ் அல்லது அவர்களது தாய்மொழி சரளமாகப் பேசவருமா?

    பேரக்குழந்தைகள் பன்மொழி வித்தகர்கள். தமிழ் உட்பட. என்ன ஓரு சங்கடம் என்றால் பல மொழிகளையும் கலந்து வாக்கியம் அமைப்பார்கள். 3 வயது பேரன் : அம்மா பிளீஸ் எனிக்கு பாணி காவல. தமிழ் தெலுங்கு, ஹிந்தி ஆங்கிலம் என்ற நான்கு மொழிகள்.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருத்துரைக்கு நன்றி.

      நீக்கு
    2. பெயரில்லா25 மே, 2022 அன்று PM 2:20

      ஜெகே அண்ணா இப்ப நான் உங்கள் பேரன் போலத்தான் இருக்கிறேன். ஹாஹாஹா.....தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி, தெலுங்கு ஆங்கிலம் எல்லாம் கலந்து கட்டி வருகிறது!!! தடுமாறுகிறேன் பல சமயங்களில். அருகில் இருப்பவர் தெலுங்கு, கன்னடம், ஹிந்திக்காரர்கள், கடைகளுக்குப் போனால் கன்னடம், தெலுங்கு ஹிந்தி பேசுகிறார்கள். மலையாளிக் கடை இரண்டு இருக்கிறது. அங்கு மலையாளம் மட்டுமே எனவே சரளமாக வந்துவிடும். அது போல ஒரு கடையில் தமிழ் கன்னடம் கலந்து பேசுவார்கள் அவர்களிடம் தமிழ் சரளமாகப் பேச முடியும். அல்லாமல் கன்னடம் தெலுங்கு கடைகளுக்குப் போனால் எல்லாம் கலந்துகட்டி!!

      ஆனால் உங்கள் பேரன் வித்தகர் பல மொழிகளில் நான் ஹிஹிஹி ஒன்றிலும் உருப்படி இல்லை!!!!

      கீதா

      நீக்கு
  19. 1) ஒவ்வொரு சமயம் மறந்து விடும்..

    பதிலளிநீக்கு
  20. 2) அ) நடிகர்/ நடிகையர் அவர்களது வேலையை மட்டும் பார்க்க வேண்டும்..

    ஆ) சமயம் (மதம்) - பல வீட்டுச் சாப்பாடு ஒவ்வொன்றும் அந்த அந்த இடத்தில் இருந்தால் நல்லது.. எல்லாம் சேர்ந்து ஒரே பாத்திரத்தில் விழும் போது விரைவில் நாற்றம் எடுத்து விடுகின்றது.. இதுதான் இன்றைய நிலை..

    இ) அறிவியல், புவியியல் என்பது மாதிரி தான் அரசியல்.. இன்று ஏதோ ஒன்றின் கிடைத்த கொ.கட்டை!..

    பதிலளிநீக்கு
  21. அதென்ன கொ. கட்டை?..
    கொழுக்கட்டையா.
    கொள்ளிக்கட்டையா?..

    உங்கள் விருப்பம்!..

    பதிலளிநீக்கு
  22. 3) படித்து விட்டால் புத்தி வந்து விடுகின்றதா?... இன்று லஞ்சம் ஊழல் அயோக்கியத் தனம் எல்லாமே படித்தவன் தான் செய்கின்றான்.. மாணவனும் குடிக்கின்றான்.. மாணவியும் குடிக்கின்றாள்.. இதுகளுக்கு அதுவும் வேண்டும்.. இதுவும் வேண்டும்.. வேறொன்றும் வேண்டும்..

    ஆகவே நாடு திருந்திவிடும் என்றெல்லாம் கனவு காணாதீர்கள்..

    பதிலளிநீக்கு
  23. 5) முன் ஏர் சென்ற வழியே பின் ஏர்!..

    பதிலளிநீக்கு
  24. 1) சில தடவை களட்டியுள்ளோம்
    2). சந்தேகம்.
    3) பணம் தானே வோட்டுப்போடவைத்து ஏமாறுகிறார்கள்.
    4) கொட்டுவதில்லை
    5) நன்றாகவே பேரன் பேசுவார்..

    பதிலளிநீக்கு
  25. பெயரில்லா25 மே, 2022 அன்று PM 2:09

    எங்கள் கேள்விகள் :

    1) மழை காலத்தில் மின்னல் மின்னும்போது டிவி கெட்டுப் போகலாம் என்று இரவில் எல்லா ஸ்விட்ச் களையும் off செய்து பிளக், கேபிள் எல்லாவற்றையும் கழட்டுவதுண்டா?

    டிவி யே வீட்டில் இல்லை. மற்ற இணைப்புகள் அவ்வப்போது மறந்து போகும் ஆனால் கண்டிப்பாகக் கணினி மூடப்பட்டு இணைப்புகள் அகற்றப்படும்.

    2) அரசியல், மதம், நடிகர்கள் குறித்த விவாதம் தவிர்க்க வேண்டும் என்று நினைக்கிறோம். சரிதான். ஆனால் எல்லோரும் இவை பற்றி விவாதம் வேண்டாம் என்று இருந்து விட்டால் சீரழிவை தடுப்பது எப்படி ?

    இது எபியிலா? அல்லது பொதுவெளியிலா?

    சரி எபி என்றே எடுத்துக் கொள்வோம், எபி யில் செய்வதால் என்ன பயன்? எனவே தவிர்த்து ஜாலியாக இருப்பதே நன்று.

    மற்றபடி பொதுவெளியில் இல்லாமலா இருக்கு? சிறுசதவிகிதத்தினர் நடத்திக் கொண்டேதானே இருக்கிறார்கள். அதனால் ஏதேனும் நன்மைகள் உண்டா என்றால் ஒன்னுமில்லை. சும்மா டி ஆர் பி ரேட் எகிறும். வியூஸ் கூடும் பத்திரிகை விற்கும்.

    அதை விடுங்கள் உறுப்படியான விவாதம் நடக்கிறதா என்ன? எனக்குத் தெரிந்து இல்லை. குழாயடிச்சண்டைதான்.

    3) சாராய மோகம், பணம் வாங்கிக் கொண்டு வாக்குப் போடுவது இரண்டும் இல்லாத ஒரு நிலை வரும். என்று நம்புகிறீர்களா ?

    சான்ஸே இல்லை. சாராயத்தை ஒழிக்கவே முடியாது ஆட்சியாளர்கள் உறுதியாக இல்லாத வரை.

    4) உணவுப் பொருள் மிகுதியாகி குப்பையில் கொட்டுவது உண்டா?

    குப்பையில் கொட்டும் அளவு செய்வது இல்லை. காலையில் மீறுவதைப் பொருத்து மதியம், இரவு என்று நகர்த்திவிடுவோம். மதியம் இரவுக்குப் புதியதாச் செய்ய வேண்டும் என்று வைத்துக் கொண்டது இல்லை அதற்கு ஏற்ப திட்டமிட்டுவிடுவது வழக்கம். அப்படி ஒரு வேளை விருந்தினர் வரும் போது ல்லது விசேஷங்களின் போது கண்டிப்பாக மீறும் ஏனென்றால் தாரளமாகச் செய்வதுண்டு என்பதால். எல்லாரும் சாப்பிட்டு முடித்ததும் அடுத்த வேளைக்குக் (என் மாமியார் வீட்டிலும் சரி) கணக்குப் பண்ணிக் கொண்டு சமைப்பது அல்லது அதைப் பயன்படுத்த முடியாது என்றால் அருகில் இருக்கும் பாவப்பட்டவர்களுக்குக் கொடுத்துவிடுவது ஆனால் அதை மட்டும் கொடுக்காமல் சூடாக ஏதேனும் புதியதாய் செய்து கொடுப்பதும் வழக்கம் (இது எங்கள் வீட்டில்) . ஆனால் மீந்ததைக் கொடுக்கும் போதும் அதைச் சூடு செய்து கொடுப்பது வழக்கம். சொல்லியும் அதாவது எதெது மீந்தவை என்று சொல்லிக் கொடுப்பது வழக்கம் சிலர் மீந்தவற்றை எடுத்துக் கொள்வதில்லை.

    5) உங்கள் பேரக்குழந்தைகளுக்கு தமிழ் அல்லது அவர்களது தாய்மொழி சரளமாகப் பேசவருமா?

    ஹிஹிஹிஹி.....நானே ஒரு குழந்தை...எனக்குப் பேரக் குழந்தையா!!ஆஆஆஆஅ

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருத்துரைக்கு நன்றி. தி கீ?

      நீக்கு
    2. நானே குழந்தைதான் என்பது கீ சா வசனம் அல்லவோ - அதனால்தான் சந்தேகமாக கேட்டேன்!!

      நீக்கு
  26. பெயரில்லா25 மே, 2022 அன்று PM 2:14

    குக்கர் விசில் - விவரங்களுக்கு

    # பதில் தான் ...டிக் அடிக்கிறேன்

    கீதா

    பதிலளிநீக்கு
  27. பெயரில்லா25 மே, 2022 அன்று PM 2:28

    ஆஹா பிஞ்சு வாழைக்காயைப் பார்த்ததும் கை துறு துறு என்று வருகிறது....பிய்த்து வாழைக்காய் புட்டு, பொரியல் என்று செய்யலாமே என்று...

    கீதா

    பதிலளிநீக்கு
  28. மகிழ்ச்சியுடன் சறுக்கி விளையாடும் பெண் குழந்தை எப்போதும் இப்படியே சந்தோஷமாக இருக்க வேண்டும், பாவம் அதுக்கு இப்போது தெரியுமா கீழ உள்ளே ஜயன்ட் வீல் போலத்தான் வாழ்க்கை என்று!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  29. நம்ம ரங்க்ஸ் கொஞ்சம் காற்றடித்தாலே மோடம் வீணாகிடும்னு அதை அணைச்சுடுவார். தொலைக்காட்சிப் பெட்டியும் அப்படியே!
    இரண்டாவது கேள்விக்குப் பதில் மக்களாகப் பார்த்துத் திருந்தணும். திரைப்பட மோகம் தமிழகத்தில் மிக மிக அதிகம். திரைப்படக் கதாநாயகர்களைக் கடவுளாகக் கும்பிடும் இளைஞர்கள்! இளம்பெண்கள்! :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. :(( கருத்துரைக்கு நன்றி.

      நீக்கு
    2. யாரோ முன்னால இராமர் படம் கிருஷ்ணர் படம் கிடைக்காமல், அவசரத்துக்கு என்.டி.ராமராவ் அந்த அந்த வேடங்களில் நடித்த படங்களை வீட்டில் மாட்டி வைத்திருந்ததாகக் கேள்விப்பட்டேனே

      நீக்கு
    3. யார் அது நெல்லை? எங்க வீட்டில் எப்போவுமே எந்தத் திரைப்பட நடிகர் படங்களும் எங்கேயும் இடம் பெற்றதில்லை. அதை வைத்து வழிபாடு செய்யும் அளவுக்கெல்லாம் போனதில்லை. ராமர் படமோ கிருஷ்ணர் படமோ இல்லாமல் இருந்ததும் இல்லை. ஆகவே நீங்க யாரைச் சொல்றீங்கனு தெரியலை. கல்யாணம் ஆகி வரச்சே கொடுத்த ஸ்வாமி படங்கள் அனைத்தும் ஷில்பி, கொண்டையராஜூ, விவி,சர்மா ஆகியோர் வரைந்த படங்களை ஃப்ரேம் போட்டுக் கொண்டு வந்தேன். இன்னமும் அவை இருக்கின்றன.

      நீக்கு
  30. மூன்றாவது கேள்விக்குப் பதில் வரும். இந்தக் கலியுகம் முடிந்து பிரளயம் வந்து அடுத்த சதுர்யுகம் ஆரம்பிக்கையில் ஆரம்பகாலத்து சத்ய யுகத்தில் வரலாம்.அப்போவும் நாமெல்லாம் இப்படியே பிறப்பு எடுப்போமா? இப்போ நடந்ததெல்லாம் அப்போவும் நினைவில் இருக்குமா? ஏனெனில் ஒவ்வொரு யுகத்திலும் ஒரு ராமன் பிறப்பான் என்பார்கள்! அப்போ மீண்டும் இதே சுற்றா?

    பதிலளிநீக்கு
  31. நான்காம் கேள்விக்குப் பதில் சில தவிர்க்க முடியா சந்தர்ப்பங்களில் குழம்பு, ரசம், கூட்டு போன்றவையைக் கொட்ட வேண்டி வரும். அநேகமாக வீட்டில் வேலை செய்யும் பெண்ணிடம் கொடுத்துடுவேன். சாதம் அநேகமாச் சரியா இருக்கும்.

    பதிலளிநீக்கு
  32. எங்கள் பேரக்குழந்தைகள் தமிழைப் புரிஞ்சுப்பாங்க. நேற்று எனக்குப் பிறந்த நாள் வாழ்த்துச் சொன்ன எங்க பெரிய பேத்தி அமெரிக்கன் ஆங்கிலத்தில் பேச/நாங்க தமிங்கிலீஷில் பேசினோம். கு.கு.வும் அப்படியே! எங்களுக்குப் புரியுமோ/புரியாதோ என நினைக்கும் சமயங்களில் நிறுத்தி நிதானமாய்ப் பேசிப் புரிய வைக்கும். தமிழை நன்றாகப் புரிஞ்சுப்பாங்க. பேசுவது என்னமோ வருவதில்லை. எங்க பெண்ணும்/பையரும் தமிழ் பேசத்தான் செய்வாங்க. எழுதவோ/படிக்கவோ வராது. எனக்கு அது கொஞ்சம் இல்லை/நிறையக் குறை. பாரதியை எல்லாம் அவங்களால் புரிஞ்சுக்க முடியாமல் போச்சே என்று தோன்றும். படித்த சூழ்நிலை அப்படி. எல்கேஜியில் இருந்து ஆங்கிலமும்/ஹிந்தியும் தான்! அதன் பின்னர் எட்டு வகுப்பு வரை சம்ஸ்கிருதம், ஆங்கிலம், ஹிந்தி!

    பதிலளிநீக்கு
  33. சறுக்கு மரத்தைப் பார்த்திருக்கேன். அதிகம் சறுக்கி விளையாடியதில்லை. குடை ராட்டினத்தை தூரத்தில் இருந்து பார்த்துக் கன்னத்தில் போட்டுக் கொள்வதோடு சரி. வாழைத்தார் இம்மாதிரிக் காய்த்து நிறையப் பார்த்திருக்கேன்.

    பதிலளிநீக்கு
  34. வணக்கம் சகோதரரே

    இன்றைய கேள்வி பதில்கள் எப்போதும் போல் அருமை. போட்டி போட்டு வந்திருந்த கருத்துரைகளும் படிக்க சுவாரஸ்யமாக இருக்கிறது. என்ன சொல்ல? எல்லாவற்றையும் எல்லோரும் விபரமாக சொல்லி விட்டனர். அனைவருக்கும் நன்றி.

    படங்கள் அருமை. சிறு பிராயத்தில் விளையாட்டுடன் விளையாட்டாக இந்த சறுக்கு மரத்தில் சறுக்கி கீழே விழுந்து எழுந்தாலும், கொஞ்சம் வளர்ந்த பின் , ஜெயண்ட் வீலீல் சுற்றுவது போல், கல்வியுடன் வாழ்க்கை பாடங்கள் அனைத்தும் கற்று புகழ், அந்தஸ்து என பெற்றவர்களுக்கு பெருமை சேர்க்கும்படி உயரே பறந்தாலும், மேலும் உரம் மிகுந்த அந்த வாழைத்தார் போல் உறுதியான நல்ல கொள்கைகளுடன் நீ சிறப்பாக வாழ கற்று கொள்ள வேண்டுமென அந்த சறுக்கு மரத்தில் விளையாடும் தன் சகோதரிக்கு அந்த சகோதரன் சொல்லி அறிவுறுத்துகிறானோ?படங்களைப் பார்க்கையில் எனக்குள் தோன்றியதை ஏதோ எழுதி விட்டேன். கருத்து சரியாக வரவில்லையென்றால் மன்னிக்கவும்.
    பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  35. வணக்கம் சகோதரரே

    எங்கள் கேள்விகளுக்கான பதில்கள்.

    1.முன்பெல்லாம், கடுமையான இடி மின்னலுக்கு பயந்தும், அதிக மழை வரும் சமயமும் டி. வி, கு. சா பெட்டி பிளக் முதலியவற்றை எடுத்து விடுவோம். இப்போது இங்கு கொஞ்சம் மழை வலுத்தாலும், அவர்களே கரண்டை கட் செய்து விடுகிறார்கள். இதோ.. இன்றைய மழைக்கும் அப்படித்தான் மூன்று மணிக்கே கரண்ட போய் விட்டு இப்போதுதான் வந்தது.

    2. இதில் எது பற்றி பேசினாலும் வீண் பிரச்சனைகள் வரும்.

    3.இதைப்பற்றியும் எதுவும் சொல்லத் தெரியவில்லை.

    4. உணவுகள் அளவாக சமைப்பதால் இரவுக்குள் காலியாகி விடும். அப்படியே சாதம் மிகுந்தாலும் நீர் விட்டு மறுநாள் பயன்பாட்டுக்கு வைத்துக் கொள்வோம். அனாவசியமாக குப்பையில் கொட்டுவதில்லை.

    5. பேரன், பேத்திகளுக்கு இன்னமும் தமிழ் எழுத படிக்க வரவில்லை. பேசினால் புரிந்து கொள்கிறார்கள். இந்த வருடந்தான் முதல் வகுப்புக்குப் போகிறார்கள். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரரே

      இப்போதெல்லாம் என் கருத்துக்கள்தான் அனைவரின் பதிவிலும் கடைசியாக இடம் பெறுகிறது. உடல் நிலைகள், சூழ்நிலைகள் காரணமாக ஏனோ முன்பு போல் காலையிலேயே வர இயலவில்லையே என எனக்கும் வருத்தமாக உள்ளது. நாளையிலிருந்து விரைவில் வர முயற்சிக்கிறேன். அனைவரும் என்னை மன்னிக்கவும். நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    2. கருத்துரைகளுக்கு நன்றி. படங்களை இணைத்து சொல்லப்பட்ட கருத்தை ரசித்தோம். நன்றி.

      நீக்கு
  36. கேள்வி பதில்கள் நன்று. தொடரட்டும் உங்கள் பதிவுகள்.

    பதிலளிநீக்கு
  37. 1. இன்வெர்ட்டரை, டிவியை ஆஃப் செய்து ப்ளக் எடுத்து வைத்து விடுவதுண்டு.

    4. அடுக்களை விஷயங்கள். அவ்வளவாக எனக்குத் தெரிவதில்லை. தெரிந்தவரை சோறு மிச்சமானால் கோழிகள், இருப்பதால் போடுவதுண்டு. மற்றவை பெரும்பாலும் மிச்சம் ஆவதில்லை. கொட்ட வேண்டி வந்தால் கொட்டப்படும்.

    நான் தனியாக இருந்தது வரை நானே சமைத்து சாப்பிட்ட வரை அளவாகச் செய்வதுவழக்கம் இல்லையே ஹோட்டலில் சாப்பிடுவது வழக்கம். எதுவும் வீணாக்கியது இல்லை.

    5. இன்னும் பேரக் குழந்தைகள் இல்லை. குழந்தைகள் படிப்புமுடியவில்லை.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  38. கேள்விகளும், பதில்களும் நன்றாக இருக்கிறது.
    இடி மின்னல் சமயம் ப்ள்க்கை கழற்றி வைப்பேன்.


    "பாழாய் போறது பசு வயிற்றில் என்பார்கள்"
    அரிசி, பருப்பு பூச்சி வந்தால் புடைத்து சுத்தம் செய்து மாட்டுக்கு போட்டுவிடுவார்கள். மாடு வைத்து இருப்பவர்களுக்கு கொடுத்து விடுவேன்.
    சமைத்த உணவுகளில் சாதம் மீந்து போனால் பறவைகளுக்கு வைத்து விடுவேன் எவ்வளவு வைத்தாலும் சாப்பிட்டு விடும். தட்டு காலியாக காலியாக வைத்து காலி செய்து விடுவேன்.


    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!