ஞாயிறு, 22 மே, 2022

மரங்களும் மலர்களும் :: KGY Raman

 
















= = = =

உதகை மலர்க் கண்காட்சி தற்சமயம் (மே 20 to 24) நடந்து வருகிறது. ஊட்டியில் வேலை பார்த்து வந்த எல்லா வருடங்களிலும், எங்கள் சகோதரர் கே ஜி விசுவேஸ்வரன், தன்னுடைய உறவினர்கள், நண்பர்கள் எல்லோரையும் ஊட்டிக்கு வரச்சொல்லி, மலர்க் கண்காட்சி / படகு சவாரி என்ற எல்லா பொழுதுபோக்கு இடங்களுக்கும் கூட்டிச் செல்வார். ஊட்டி மலர்க் கண்காட்சி நடைபெறும் அதே சமயத்தில்தான் அவருக்கு பிறந்த நாளும் (மே 23 ) 

அவர் நினைவாக, இரண்டு வருடங்களுக்கு முன்பு அவர் அனுப்பிய சில  flower show படங்கள் இங்கே  பகிர்கிறோம். 




= = = =



41 கருத்துகள்:

  1. தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும் தீரா இடும்பை தரும்..

    குறள் நெறி வாழ்க..

    பதிலளிநீக்கு
  2. நட்பின் நன்மலர்கள் அனைவருக்கும் அன்பின் வணக்கம் ...

    இனிய சொற்களே உறவாக
    இறையருள் சூழ்க நிறைவாக..

    வாழ்க நலம்..
    வாழ்க தமிழ்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்க.. வாழ்க..

      வாங்க துரை செல்வராஜூ ஸார்.. வணக்கம்.

      நீக்கு
  3. நல்லார்க்கும் அல்லார்க்கும்
    நலம் வாழ்க என்று
    எல்லார்க்கும் முகம்
    காட்டும் பூக்கள்..

    பதிலளிநீக்கு
  4. பூக்களோடு பூக்களாய்
    என்றென்றும்
    வாழ்க திரு KGV..

    பதிலளிநீக்கு
  5. தண்ணீர் விட்டாலும் விடா விட்டாலும்
    பூக்கள் முகம் திருப்பிக் கொள்வதில்லை..

    பதிலளிநீக்கு
  6. அதெல்லாம் சரி!..

    நமக்குத் தான் அந்த மாதிரி வாய்ப்பது இல்லையே!..

    பதிலளிநீக்கு
  7. பூக்கள், தேன் உண்ணும் வண்ணத்து பூச்சி படங்கள் நன்றாக உள்ளன.

     Jayakumar

    பதிலளிநீக்கு
  8. அனைவருக்கும் காலை/மதியம்/மாலை வணக்கம், நல்வரவு. வாழ்த்துகள். பிரார்த்தனைகள். நேற்று சுகாதார அமைச்சர் கொரோனா, ஒமைக்ரான் ஆகிய தொற்று நோய்கள் தமிழகத்தில் கண்டறியப் பட்டிருப்பதாகச் சொல்லி இருக்கார். விரைவில் அவை முற்றிலும் ஒழிந்து போகப் பிரார்த்திப்போம்.,

    பதிலளிநீக்கு
  9. அழகான மலர்க்கூட்டங்கள், அதிலும் அந்த மலர்களோடு மலராகக் காட்சி அளிக்கும் வண்ணாத்திப் பூச்சி! அருமையான புகைப்படங்கள். தேர்ந்த நிபுணரால் கலை ரசனையோடு எடுக்கப் பட்டிருக்கும் படங்கள். நேரிலேயே ஊட்டி மலர்க்கண்காட்சியைப் பார்த்திருக்கேன். ஊட்டியில் சில வருடங்கள் இருக்கவும் கொடுத்து வைத்தது. குன்னூரின் சிம்ஸ் பார்க்கும், ஊட்டியின் ரோஜாப் பூங்காவும் இப்போதும் மனதில் நிற்கின்றன.

    பதிலளிநீக்கு
  10. நினைச்சால் சிம்ஸ் பார்க் போய்ச் சுற்றிப் பார்த்துட்டு உட்கார்ந்து ரசித்துவிட்டுப் பின்னர் குன்னூர் பேருந்து நிலையத்தில் இருந்த லக்ஷ்மி விலாஸ் ஓட்டலில் தயிர் வடை/காஃபி சாப்பிட்ட நினைவுகள். வெலிங்க்டனில் இருந்து அந்த மலைச் சரிவில் நடந்தே வந்த நினைவுகள். இப்போ வீட்டுக்குள் நடப்பதே பெரிய விஷயமா இருக்கு. :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தயிர் வடை & காபி என்ன ஒரு காம்பினேஷன் !!

      நீக்கு
    2. ஹாஹாஹாஹாஹா! சில்லென்ற சற்றே காரமான காராபூந்தி தூவிய தயிர்வடைக்கப்புறமா ஒரு நல்ல காஃபி சாப்பிட்டுப் பாருங்களேன்! இப்போ அந்த ஓட்டல் குன்னூரில் இருக்கோ இல்லையோ! ஆனால் "பெண்"களூரிலேயே கிடைக்கும். மல்லேஸ்வரத்தில் ஒரு ஓட்டலில் சாப்பிட்டோம். நன்றாகவே இருந்தது. காஃபியின் உண்மையான சுவை கர்நாடகாவில் தான் என்பது என் தனிப்பட்ட கருத்து. மங்களூரில் ஜனதா கஃபே என்னும் ஓட்டலில் பாட் காஃபி மணமும் சுவையுமாக இருக்கும். அதே போல் உடுப்பி, சிருங்கேரி ஆகிய இடங்களிலும் காஃபியின் சுவை அபாரம்.

      நீக்கு
  11. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  12. மலர்கள், வண்ணத்துப்பூச்சி, மற்றும் மலர் கண்காட்சி அனைத்தும் அருமை.

    பதிலளிநீக்கு
  13. மலர்களின் அணிவகுப்பு அருமை ஜி

    பதிலளிநீக்கு
  14. ஊட்டி மலர் கண்காட்சி படங்கள், மற்ற படங்கள் என அனைத்தும் அழகு. பூக்களின் படங்களை மிகவும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  15. பூக்கள் படங்கள் அனைத்தும் அழகு. சாமரம் போன்று விரிந்த அந்த பிங்கி பூவும், வண்ணத்துப்பூச்சி, காந்தள் விரல்கள் என்று சொல்வது போல் காந்தள் பூ போல அந்த ஆரஞ்சு நீளமான ஒல்லியான பூ பெயர் டக்கென்று வரவில்லை...அதுவும் அழகு

    கீதா

    பதிலளிநீக்கு
  16. கேஜிவி அவர்களின் ஊட்டி மலர்க்கண்காட்சிப் படங்கள் செம. இதில் சில மின் நிலாவில் வந்திருக்கிறது இல்லையா?

    கீதா

    பதிலளிநீக்கு
  17. என்னாச்சு எனது அடுத்த கருத்து இங்கு தெரிந்தது இப்போது காணவில்லை?! ஸ்பாமில் இருக்கிறதோ? வெங்கட்ஜி தளத்திலும் போட்டவை எல்லாம் மறைந்து போயின அப்புறம் அவை ஸ்பாமில் இருப்பதாகச் சொன்னார்.

    கீதா

    பதிலளிநீக்கு
  18. மலர்கள் படங்கள் அழகு. மலர்கண்காட்சி கண்ணைக் கவரும் வண்ண மலர்கள்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!