திங்கள், 29 ஆகஸ்ட், 2022

"திங்க"க்கிழமை : மாங்காய் சாதம் - கீதா சாம்பசிவம் ரெஸிப்பி 

 மாங்காய்ப் பாலுண்டு மலை மேல் இருப்பவர்க்கு

ஹிஹிஹி, குதம்பைச் சித்தரின் பாடல் சும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா! இதிலே மாங்காய்ப் பால் தேங்காய்ப் பால் இரண்டும் உண்டே!

புத்தகம் அடுக்கும் வேலை ஆரம்பிச்சுப் பாதியிலேயே நிக்குது! அவ்வளவு சுறுசுறுப்பு! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! எல்லாம் இந்தக் கணினி நடுவில் படுத்துடுச்சா! அந்தக் கவலை! மருத்துவர் வரதும் போறதுமா இருக்கவே மத்தியான நேரங்கள் அதில் போய்விட்டன! புத்தகங்கள் வேலை அப்படியே நின்னிருக்கு! அதைச் சீக்கிரமாச் சரி செய்யணும். எப்படினு தெரியலை! அது கிடக்கட்டும்.

இப்போச் சில மாசங்களாக நம்ம வழக்கமான சாப்பாடு சாம்பார், அல்லது குழம்பு, ரசம், கறி, கூட்டு முறையை மாற்றியாச்சு. நம்ம ரங்க்ஸே அதிசயமாப் பொடி ஏதேனும் பண்ணி வைனு சொல்லிப் பருப்புப் பொடி, கொத்துமல்லி விதைப் பொடி பண்ணி வைச்சிருக்கேன். புளிக்காய்ச்சலும் செய்து வைச்சிருக்கேன். அதிலே ஒரு தில்லுமுல்லுவும் பண்ணினேன். ஹெஹெஹெ! அதைத் தனியாச் சொல்றேன். இப்போ மாங்காய் சாதம் பண்ணினதைப் பத்திச் சொல்லப் போறேன். மாங்காய் என்ன மலிவா விற்றாலும் நம்ம ரங்க்ஸுக்கு மாங்காய்ப் பச்சடியோ அல்லது மாங்காய் சாதமோ அல்லது மாங்காய் சாம்பாரோ அல்லது மாங்காய் போட்ட மோர்க்குழம்பு அல்லது அவியலில் மாங்காய் சேர்த்தால் அலர்ஜியோ அலர்ஜி! மாங்காய்னா ஊறுகாய்க்கு மட்டும் எனத் திடமான நம்பிக்கை கொண்ட பேர்வழி! எவ்வளவோ சொல்லியும் அவரை இந்த விஷயத்தில் மாத்த முடியலை! நீ பண்ணிச் சாப்பிட்டுக்கோனு சொல்லிடுவார். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! அதே போல மாங்காய்க்கு உப்பு மட்டும் போட்டுப் பச்சைமிளகாய் தாளிச்சாலோ, காரட், இஞ்சி சேர்த்து மி.பொடி, வெந்தயப்பொடி, கடுகுப்பொடி போட்ட ஊறுகாயோ பிடிக்காது! அரைப் பழமான காயில் மாங்காய் ஊறுகாய் போட்டு நான் மோர் சாதத்துக்குத் தொட்டுப்பேன். அரைப்பழமா இருந்தால் அவருக்குப் பிடிக்காது! ஐய! தித்திப்பு, எப்படித் தான் சாப்பிடறயோ என்பார்.

இப்படியாகத் தானே ரெண்டு பேரும் எதிரும் புதிருமா இருக்கக் கூடிய காலகட்டத்திலே ஒரு நாள் திடீர்னு பார்த்தால் மாங்காய் (கல்லாமை) வாங்கி வந்தார்.  என்னமோ அதிசயம் பாருங்க! போன வாரம் ஒரு மாங்காய் வாங்கிட்டு வந்தார். ஒட்டு மாங்காய் என இந்தப் பக்கங்களிலும் கல்லாமை மாங்காய் என மதுரையிலும் சொல்வோம். அதைப் பார்த்தாலே பச்சடி பண்ணு, பண்ணுனு சொன்னது! அதிலே கொஞ்சம் போல் தோல் சீவி எடுத்துக் கொண்டு பச்சடிக்குனு தனியா வைச்சேன். நான் மட்டும் தான் சாப்பிடணும்! :( பரவாயில்லை, துணிந்து நில் மனமே என என்னை நானே தைரியப் படுத்திக் கொண்டேன். ஆனாலும் பாருங்க, இதுக்கெல்லாம் கூட நாங்க "கத்தி" ச் சண்டை போட்டுப்போம். ஏன், சாப்பிட்டா என்ன நு நானும் நான் சாப்பிடலைனா உனக்கென்னனு அவரும் "கத்தி!" எடுக்காத குறையாச் சண்டை. அரைகுறையாக் காதிலே வாங்கிக்கற அக்கம்பக்கத்தினருக்கு இது பழகிப் போயிருந்தாலும் இதுங்களுக்கு வேறே வேலையே இல்லையானும் தோணும். ஹெஹெஹெ!

சரி, சரி, பாயின்டுக்கு வந்துடறேன். மாங்காய் மிச்சம் இருந்ததைத் துருவினேன். துருவும்போதே என்ன செய்யலாம் என யோசனை! அப்போப் பார்த்து ரங்க்ஸ் இதை வேணா மாங்காய் சாதமாப் பண்ணிடுனு சொன்னாரா! எனக்கு மயக்கமே வந்துடுத்து! ஙே என நான் முழிக்க, மாங்காய் சாதம்! என்றார். நிஜம்மாவா என வாயைப் பிளந்த நான் மூட வெகு நேரம் ஆச்சு! சரி எங்கேயானும் மாறிடப் போறாரேனு அவசரம் அவசரமா அதைத் துருவி எடுத்துட்டுப் போனால் என்னைக் கூப்பிட்டு, "இங்கே பார்!" எனக் காட்டினார். அதிலே தினமலர் வார மலர்/பெண்கள் மலர், ஏதோ ஒரு மலர் அதிலே  மாங்காய் சாதம் ரெசிபி ! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! கடைசியில் இதைப் பார்த்தா! சரி பரவாயில்லைனு அதைப் படித்துக் கொண்டேன். மாங்காய் சாதத்துக்கு சாதம் தனியா எப்போவும் தயாரிக்கிற மாதிரித் தயாரித்தால் போதுமே. மாங்காய் கிளறியது தான் தனியா வேணும். ஆகவே அதற்காக சாமான்கள் சேகரித்தேன்

மாங்காய்த் துருவல்

மாங்காத் துருவல் ஒரு கிண்ணம், பச்சை மிளகாய் 3, இஞ்சி ஒரு துண்டு, தேங்காய் துருவல் ஒரு டேபிள் ஸ்பூன், ஜீரகம் (தேவையானல்), மஞ்சள் பொடி கால் டீஸ்பூன், மிளகாய்ப் பொடி அரை டீஸ்பூன், வெந்தயப் பொடி கால் டீஸ்பூன், உப்பு தேவையான அளவுக்கு.

இஞ்சி, பச்சை மிளகாய், ஜீரகம்

நல்லெண்ணெய் அரைக்கிண்ணம், கடுகு, உ.பருப்பு, க.பருப்பு, வேர்க்கடலை, கருகப்பிலை, பெருங்காயம்  தாளிக்க. தேவையானால் ஒரே ஒரு மி.வத்தல் தாளிக்கலாம். அவரவர் காரத்தைப் பொறுத்து.

தேங்காய்த் துருவல்



தாளிதம்

முதலில் பச்சை மிளகாய், இஞ்சி, தே.துருவலை ஜீரகத்தோடு சேர்த்து நன்கு அரைக்கவும். அடுப்பில் நல்லெண்ணெய் ஊற்றிக் கொண்டு கடுகு, பெருங்காயம், மி.வத்தல், கருகப்பிலை போட்டுத் தாளித்துக் கொண்டு உபருப்பு, கபருப்பு, வேர்க்கடலையையும் போடவும். அல்லது இவற்றைப் பின்னர் தனியாகத் தாளிக்கவும். இந்த எண்ணெயில் தாளிதத்தைத் தனியாக எடுத்து வைத்து விட்டுப் பின்னரும் சேர்க்கலாம். நான் அப்படியே இதில் மாங்காய் விழுதைப் போட்டு, அரைத்த விழுது, மஞ்சள் பொடி, மி.பொடி போட்டுக் கிளறினேன். நன்கு கிளறி எண்ணெய் பிரிந்து வரும் சமயம் கீழே இறக்கி வெந்தயப் பொடி சேர்க்கவும். தாளிதம் கரகரப்பாக இருக்கணும் எனில் மாங்காய் விழுதுடன் அரைத்த விழுது, மி.பொடி, உப்பு சேர்த்துக் கிளறி இறக்கிவிட்டுத் தனியே கடைசியில் தாளித்து   இப்போது தாளிதத்தைப் போட்டுக் கலக்கலாம். இம்முறையில் தாளிதம் கரகரப்பாக இருக்கும்.  


ஒரு தட்டில் சமைத்த சாதத்தில் அரை டீஸ்பூன் உப்பு கொஞ்சம் நல்லெண்ணெய் விட்டு உதிர்த்துக் கொள்ளவும். அதில் இந்த விழுதைக் கொஞ்சம் போல் எடுத்து நன்கு கலக்கவும். சாதமும் விழுதும் நன்கு கலந்தவுடன் வாயில் போட்டுப் பார்த்து சரியாக இருக்கானு பார்த்துக் கொள்ளவும். தேவையானால் இன்னும் கொஞ்சம் விழுது சேர்க்கலாம்.
தேவையானால் கொத்துமல்லி சேர்க்கவும். இதில் கொத்துமல்லி அவ்வளவு சுவை கூட்டவில்லை. இதுக்குத் தொட்டுக்க நான் செய்தது பச்சை மோர்க்குழம்பு! இதைச் சூடு செய்ய வேண்டாம்.

அரைத்த விழுது!


மாங்காய் விழுதுடன் கலந்து வதக்குதல்

சாதம் கலந்தாச்சு!






பக்கத்தில் பச்சை மோர்க்குழம்பு. சிலர் இதுக்குத் தேங்காய்த் துருவல் சேர்ப்பதில்லை. அவரவர் விருப்பம்!

நல்ல கெட்டியான மொரில் தேவையான உப்பு, மஞ்சள் பொடி போட்டுக் கலந்து வைக்கவும்.

மி.வத்தல் ஒன்று அல்லது இரண்டு, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு தலா அரை டீஸ்பூன், வெந்தயம் அரை டீஸ்பூன், தேங்காய்த் துருவல் ஆகியவற்றை எண்ணெயில் வறுத்து மிக்சி ஜாரில் போட்டு நன்கு  அரைத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் அல்லது இரும்புக் கரண்டியில் தாளிக்க எண்ணெய் ஊற்றிக் கொண்டு கடுகு, கருகப்பிலை, மி.வத்தல் ஒன்று பெருங்காய்ம் போட்டுத் தாளிக்கவும். அரைத்த விழுதை மோரில் போட்டுக் கலந்து விட்டுத் தாளித்ததை அதில் சேர்க்கவும். இதற்கு வெண்டைக்காய் வற்றல் இருந்தால் தாளிக்கும் எண்ணெயிலேயே வறுத்துச் சேர்க்கலாம். 

58 கருத்துகள்:

  1. நன்றாகத்தான் இருக்கிறது நன்றி.

    பதிலளிநீக்கு
  2. திருச்செந்தூரில் இருந்து அன்பின் வணக்கம் ...

    திருச்செந்தில் ஆண்டவனுக்கு அரோகரா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோவிலுக்குள் நுழையுமுன் கூட்டுறவுக் கடைகளில் பனைவெல்லம், சுக்குவெல்ல வெரைட்டிகள் விற்கும் கடை உண்டு. ரொம்ப நன்றாக இருக்கும். கடலில் கால் நனைப்பதும் சுகம்.

      தெரிந்தவர்களுடன் அந்தக் கோவில் போகணும் என்று நினைத்திருக்கிறேன். அப்கோதான் எல்லாச் சன்னிதிகளையும் சேவிக்க முடியும்.

      நீக்கு
    2. உடன்குடியில் தான் நாங்கள் கருப்பட்டி வகையறாக்களை வழக்கமாக வாங்குவோம்.. இல்லையெனில் எங்கள் கோயில் வாசலில் ஆட்கள கடை போட்டிருப்பார்கள்.. அங்கே நியாயமாக இருக்கும்..

      தவிரவும், இணைய வசதியால் இந்த வட்டாரத்தில் எங்குமே ஒரே விலை..

      இங்கே வாங்குவது மிகவும் ஆதாயம்..

      நீக்கு
    3. எனக்கு கருப்பட்டி, சுக்குக் கருப்பட்டி மிக மிகப் பிடிக்கும் (obsession). அதனால் நான் எங்க பார்த்தாலும் வாங்குவேன். சென்னைல, பெங்களூர்ல விற்பதில் வெல்லம்தான் அதிகம். வெல்லம் கிலோ 60 ரூ, கருப்பட்டி 240 ரூ. இவங்க 160-200 ரூபாய்க்கு தர்றாங்க, நல்லா இருப்பதில்லை. ஒரிஜினல் கருப்பட்டி 350 ரூபாய்க்குக் குறையாதுன்னு நினைக்கிறேன். நான் கொரியர் மூலம் வரவழைத்தேன் (கிலோ 450 ரூ... மனைவி கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்)

      நீக்கு
    4. சில்லுக்கருப்பட்டி என ஓலைப்பெட்டியில் வரும் முன்னெல்லாம். இருமல் வந்தால் வாயில் அடக்கிக்கச் சொல்லுவாங்க. சுக்குப் போட்டுக் கொஞ்சம் காரமாக இருக்கும். எனக்கு அதையெல்லாம் வாயில் போட்டு அடக்கிக் கொண்டால் உள்ளே தோல் வழன்று போய்விடும் என்பதால் இருமல் வந்தால் மருந்து தான். இதையெல்லாம் வாயில் அடக்கிக் கொள்ள மாட்டேன்.

      நீக்கு
  3. மாங்காய்ப் பாலுக்கும் தேங்காய்ப் பாலுக்கும் சித்தர் பெருமான் வந்து தான் விளக்கம் சொல்ல வேண்டும்..

    பதிலளிநீக்கு
  4. ரசித்து வாசிக்கும்படி எழுதியிருக்கீங்க. எழுத்து நன்றாக இருந்தது. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  5. இப்போவும் கிளிமூக்கு மாங்காய் இங்க கிடைக்குது. கிலோ 100 ரூபாய். தேற்று ஊறுகாய் போட கிலோ 120ரூ விலையில் ருமானி மாங்காய் அரைக்கிலோ வாங்கினேன். அதுதவிர நீலன்(னு நினைக்கிறேன்) மாங்காய்கள் சிறிய சைஸ் ஆறு 50ரூ க்கு வாங்கினேன். அதைவைத்து மாங்காய் சாதம் பண்ணுமளவு எனக்கு மாங்காய் சாத்த்தில் விருப்பம் இல்ஙை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாங்காய் சாப்பிட்டே ஒரு மாதத்துக்கு மேல் ஆகிறது. வயிறுப் பிரச்னை வந்ததில் இருந்து அநேகமாகப் புழுங்கலரிசிக் கஞ்சி, அங்காயப் பொடி சாதம், அல்லது தயிர் சாதம் மட்டும் நாரத்தங்காயுடன். இப்போத் தான் 2 நாட்களாகச் சப்பாத்தியும், தோசையும் சாப்பிட்டேன். இன்னிக்குக் கொஞ்சம் இலை போட்டுச் சாப்பாடு.

      நீக்கு
  6. மாங்காய் சீசனின் போது, இரு முறை மாங்காய் சாதம் செய்யச் சொல்லிச் சாப்பிட்டிருக்கிறேன். கலந்த சாதங்களுக்கு எங்க வீட்டில் என்னைத் தவிர ஆதரவு கிடையாது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் நடு நடுவில் பிசைந்த சாதங்களும் பண்ணுவேன். அநேகமாக எலுமிச்சைச் சாதம், புளியஞ்சாதம், சாம்பார் சாதம் இருக்கும். இப்போ மாசா மாசம் மக நக்ஷத்திரத்தன்று ஐந்து வகைச் சித்திரான்னங்கள் பண்ணி விநியோகமும் செய்து கொண்டிருந்தேன். இந்தத் தரம் மக நக்ஷத்திரத்தன்று உடம்பு முடியாமையில் பண்ணலை. மனசே உறுத்தல் அதே போல் வெள்ளிக்கிழமை அன்று ராகுகால விளக்கு ஏற்றவும் மறந்திருக்கேன். :( மற்றபடி இங்கே வருஷம் பூராவும் மாங்காய் ஏதேனும் ஒரு ரகம் கிடைக்கும். நல்ல புளிப்பு மாங்காய்னா சாதம் பிசைவதற்குப் பதில் ஊறுகாய்தான் சரியா இருக்கும். சாதத்துக்குப் புளிப்பு மாங்காய் சரிவராது.

      நீக்கு
    2. எதுனால புளிப்பு மாங்காய் சரிவராது? மாங்காயின் புளிப்பு இருந்தால்தானே சாதம் ருசிக்கும்?

      நீக்கு
    3. புளிப்புப் புளியில் சமைத்தால் சாம்பார், ரசம் அத்தனை ருசிக்காது. புளி கொஞ்சமானும் புளிப்புக் குறைவாத் தித்திப்பாக இருக்கணும் என்பாங்க. அதே போல் புளி கரைத்தால் கொழகொழவென்று புளி ஜலம் வந்து கொண்டே இருக்கக் கூடாது என்றும் சொல்லுவார்கள். உப்பு, காரம் சரியாகச் சேராது என்ன போட்டாலும் என்பார்கள். அதே போல் தான் புளிப்பு மாங்காயும். சாதத்துக்கு எடுக்காது. நிதானமான புளிப்புள்ள மாங்காயே அல்லது கல்லாமை எனப்படும் ஒட்டு மாங்காயே சாதம் பண்ணத் தோது.

      நீக்கு
  7. மாங்காய் சாதம் உதிர் உதிராக வராது. மாங்காய் சீவலை வதக்குவதால். சாதம் உதிர் உதிராக அமையலைனா எந்த கலந்த சாதமும் நல்லாருக்காது.

    செய்முறை அருமையா வந்திருக்கு. படங்களும் ஞாபகமா எடுத்துப் போட்டுக் கலக்கிட்டீங்க

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உதிர் உதிராப் பண்ணி இருக்கோமே! சாதத்தை உதிராக வடிச்சுக்கணும். இன்னும் சொல்லணும்னால் வெங்கடேஷ் பட்டின் "மாங்காய்த் தொக்கு" செய்முறையில் பண்ணிச் சாதம் கலந்தால் புளியோதரைனு சத்தியம் பண்ணிச் சொல்லலாம்.

      நீக்கு
  8. //சாதம் உதிர் உதிராக அமையலைனா எந்த கலந்த சாதமும் நல்லாருக்காது.// ஆனால் தயிர் சாதம் உதிரியா இருந்தா நல்லா இருக்காதே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு அப்படித்தான் பிடிக்கும். பேஸ்ட் மாதிரி இருந்தால் பிடிக்காது. தயிர் சாதம் நல்லா இருக்கணும்னா, சூடா (கோவிலில் கொடுப்பதுபோல) இருக்கணும். இஞ்சி இருந்தால் ஆஹா

      நீக்கு
    2. ஆமாம் நெல்லை கலந்த சாதத்துக்கு சாதம் உதிர் உதிரா இருந்தா நல்லாருக்கும். மாங்கா சாதம் உதிர் உதிரா வருமே!

      எனக்குத் தயிர் சாதம் குழைந்து செய்திருந்தாலும் பிடிக்கும் உதிர் உதிராக இருந்தாலும் பிடிக்கும்....அதுவும் நீங்க சொல்லிருக்காப்ல கோயில் தயிர்சாதம்...ஸ்ஸ்...(ஆனா சூடா தரதுல அவங்க அதுல தயிர் சேர்க்கமாட்டாங்க....பால் தான். பேருக்கு ஒரு ஸ்பூன் தயிர்...சூடா தயிர் சேர்த்தா திரிஞ்சாப்ல ஆகிடுமே.

      கீதா

      நீக்கு
    3. சமீபத்தில் சென்றிருந்த கோவிலில், எலுமிச்சை சாதம் பிரசாதமாக (நிறையவே) கொடுத்தார்கள். ஆனா பாருங்க... எலுமிச்சை பிழிய மறந்துவிட்டார்கள். ஹா ஹா. அப்புறம் எப்படி இருந்திருக்கும்?

      நீக்கு
  9. கிளிமூக்கு மாங்காயில் புளிப்பு அதிகம் இருக்காதே. அடுத்த வாரம் தேங்காய் சாதம் தானே? படங்கள் சரியாக வந்திருக்கின்றன. சொதப்ப வில்லை. அது சரி காஸ் அடுப்பானாலும் கோலம் போட்டுத்தான் பத்த வைக்கணுமா என்ன?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எந்த அடுப்பானாலும் அக்னி தானே பிரதானம். எரிவாயு அடுப்பிலும் எரிவாயு அக்னியாகத் தான் செயல்படுகிறது. தினமும் இரண்டு வேளை அடுப்பைத் துடைத்துக் கோலம் போடுவதை நினைவு தெரிந்து சமைக்க ஆரம்பித்ததில் இருந்து பழக்கமாக வைச்சிருக்கேன். பெரியவங்க சொல்லிக் கொடுத்தது. முன்னெல்லாம் அக்ஷயம்னு அடுப்புக்கு எதிரே எழுதுவாங்களாம். அது என்னமோ கை வந்தது இல்லை. ஆனால் கோலமில்லாமல் அடுப்பைப் பற்ற வைப்பதில்லை ஸ்ராத்த நாட்கள் இரண்டைத் தவிர்த்து. எனக்குத் தெரிஞ்சு பலரும் அடுப்புக்குக் கோலம் (எரிவாயு அடுப்பாக இருந்தாலும்) போட்டு வைச்சிருப்பதைப் பார்த்திருக்கேன்.

      நீக்கு
    2. அதே போலக் காலை பிரம்ம முஹூர்த்தத்தில் ஸ்வாமி விளக்கு ஏற்றிய பின்னரே சமையலறையில் அடுப்பைப் பற்ற வைப்பதும் பழக்கமாக வைச்சிருக்கோம். எனக்கு முடியாமல் எழுந்திருக்கலைனா அவர் எழுந்து ஸ்வாமி விளக்கேற்றி விட்டு அடுப்பைப் பற்ற வைச்சுக் காஃபி டிகாக்ஷன் போட்டுடுகிறார் இப்போதெல்லாம்.

      நீக்கு
  10. பதில்கள்
    1. ஹிஹி திரு தனபாலன், அந்தத் துருவல் துருவும் ஸ்டீல் பலகை கல்யாணச் சீரில் கொடுத்தது இத்தனை வருஷமாகப் பத்திரமாக வைச்சிருக்கேனாக்கும். இன்னொன்றும் மரத்தில் உண்டு. அது பெட்டிக்குள் எங்கோ இருக்குப் போல..

      நீக்கு
  11. மாங்காய் சாதம் நல்லா, சொதப்பாம வரணுமே இறைவா..... என்று வேண்டிக்கொண்டு, கோலம் போட்டுவிட்டு ஆரம்பித்திருக்கிறீர்கள்.. ஹா ஹா ஹா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வீட்டு வாசல், பூஜை அறை/ஸ்வாமி அலமாரி, சமைக்கும் அடுப்பு, (ஸ்டவ், குமுட்டி அடுப்பு என்றால் கூடக் கீழே தரையில் கோலம் போட்ட பின்னரே ஸ்டவை/அல்லது குமுட்டியை அங்கே வைப்போம்.) இங்கே எல்லாம் கோலம் போடுவது என்பது நமக்கெல்லாம் கூடவே பிறந்து விட்டது நெல்லை.

      நீக்கு
  12. மாங்காய்ச்சாதம் சூப்பர்.

    மாமாக்கு ஏனோ இப்படி வீடியோ பேப்பரில் வரும் ரெசிப்பிஸ்தான் பிடிக்கிறதா? பின்னே எங்க கீதாக்கா செய்யும் மாங்காய்ச் சாதத்தை சாப்பிடாதவர் ஏதோ பேப்பர்ல போட்டிருக்கற ரெசிப்பய பார்த்து செய்யச்சொல்றதுக்கு ஒரு தர்ணா போட்டுடலாம்!!! ஹாஹாஹா

    படங்களும் நல்லா வந்திருக்கு கீதாக்கா.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். அதை ஏன் கேட்கறீங்க? இப்போத் தான் கொஞ்ச நாட்களாக ஒண்ணும் சொல்லுவது இல்லை. இன்னும் அவர் சொல்லி நான் மதுரை அஷ்டமிச் சப்பரக் கத்திரிக்காய்ச் சாதமும் மதுரை மீனாக்ஷி கோயில் சாம்பார் சாதமும் பண்ணிப் பார்க்கலை. பாக்கி இருக்கு. :))))))

      நீக்கு
  13. கீதாக்கா ஒரு ஐடியா. மாமாக்கு அலர்ஜின்னு சொல்ற ரெசிப்பிஸ் எல்லாத்தையும் நீங்கள் வேறு ஒரு புனைப்பெயர்ல (மாமாக்குப் பிடிச்ச பெயர்) நாளிதழ், வீடியோன்னு அனுப்பி அவர் பார்க்கற இடங்கள்ல போட்டு வைச்சுடுங்க. ஹாஹாஹா....அவர் பார்த்துட்டு உங்ககிட்டயே செய்யச் சொல்லுவார். திருநெல்வேலிக்கே அல்வா!! நீங்க இஃஇ இஃகினு சிரிச்சுக்கிட்டே வெற்றிய கொண்டாடலாம்!!!

    இது எப்படிருக்கு? தெக்கினிக்கு ஓகேவா!!?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு காலத்தில் எனக்கும் மோர்க்குழம்பும், கத்திரிக்காய்ப் புளி விட்டகூட்டும்னா உயிரையே கொடுத்துடுவேன். இப்போ அதிகம் பண்ணுவதில்லை பண்ணினாலும் சாப்பிட முடிவதில்லை.

      நீக்கு
    2. வேறே பெயரைப் போட்டாலும் நம்ம மூஞ்சி அவங்களுக்கு அதாவது பத்திரிகைக்காரங்களுக்குத் தெரிஞ்சு போயிடுதே தி/கீதா. அதனால் அதை எல்லாம் போட மாட்டாங்க.

      நீக்கு
    3. //பண்ணினாலும் சாப்பிட முடிவதில்லை.// - செய்முறை மறந்துடுச்சா என்று கேட்டால் சண்டைக்கு வருவாங்களோ?

      நீக்கு
    4. சாப்பாட்டில் விரும்பிச் சாப்பிடுவது என்பதே குறைந்து வருகிறது நெல்லை. அதனால் முன்போல் மோர்க்குழம்போடு கத்திரிக்காய்க் கூட்டுப் பண்ணினால் சாப்பிட்டதாகப் பெயர் தான் பண்ணுகிறேன். :)))) என் மாமனார் 77 வயசுக்குச் சாகிறவரை நன்றாகவே சாப்பிட்டார். மாமியாரும் அப்படியே1 90 வயசிலும் பறங்கிக்காய்ப் பச்சடி தொட்டுக் கொண்டு குழம்பு சாதம் சாப்பிடுவாங்க. கீழே உட்கார்ந்து சாப்பிடுவாங்க. கடைசியில் தான் ஒரு ஆறு மாதம் பிரச்னை. அப்போக்கூடச் சாப்பிடுவாங்க. ஆனால் மருத்துவமனையில் கொடுக்கக் கூடாதுனு சொல்லிடுவாங்க. :( அவங்க கொடுக்கும் சாப்பாடு தான் சாப்பிட்டாகணும். கடைசியில் தான் இரண்டு நாட்களுக்குக் காஃபிக்கும், ரசம் சாதத்துக்கும் ஏங்கிவிட்டுச் செத்துப் போனாங்க! இன்னிவரைக்கும் அது ஓர் வருத்தமாகவே இருக்கும். :(((((

      நீக்கு
    5. Surprisingly எனக்கும் சாப்பாட்டின் மீதான ஆர்வம் குறைந்துகொண்டே வருகிறது. அதுவும் டிரெடிஷனல் சாதம் சாம்பார், ரசம்.... இவற்றிலெல்லாம் ஆர்வம் மிகவும் குறைகிறது. எதனால் என்று தெரியவில்லை. இட்லி மி பொடி ஒத்துக்கொள்வதில்லை. காரம் ஒத்துக்கொள்வதில்லை... நிறைய தடவை தயிர் சாதம்தான் சாப்பிடறேன். என்னவோ காரணம் தெரியலை

      நீக்கு
  14. அதென்னவோ தெரியலை, பேப்பரில் அல்லது வீடியோக்களில் இணையங்களில் இருக்கும் பெரும்பாலான செய்முறைகள் ல சும்மாவாச்சும் ஜீரகம் அல்லது தனியா இல்லைனா ரெண்டும் சேர்த்து இல்லாம சமைக்கறதே இல்ல....

    நான் மாங்காய்ச் சாதத்துக்கு ஜீரகம் சேர்ப்பதில்லை. வெந்தயம் பெருங்காயம் அந்த மணம் வித் மாங்காய் அருமையா இருக்கும்

    தேங்காய் சிலப்போ சேர்ப்பேன் சிலப்போ இல்லை.

    பச்சை மோர்க்குழம்பு வாவ்! சூப்பர் மிகவும் பிடிக்கும். மோர்க்குழம்புன்னு சொன்னா போதும் எனக்கு....ஆனா தனியா, ஜீரகம் சேர்க்காத மோர்க்குழம்பு!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் சப்பாத்திக்கூட்டு வகைகள், ரசம், அவல் உப்புமா, சாபுதானா கிச்சடி போன்றவற்றைத் தவிர்த்து மற்றதில் ஜீரகம் சேர்த்ததில்லை. இங்கே என்னன்னா சாம்பாருக்குக் கூட ஜீரகம் தாளிக்கிறாங்க. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

      நீக்கு
    2. ஒரு காலத்தில் எனக்கும் மோர்க்குழம்பும், கத்திரிக்காய்ப் புளி விட்டகூட்டும்னா உயிரையே கொடுத்துடுவேன். இப்போ அதிகம் பண்ணுவதில்லை பண்ணினாலும் சாப்பிட முடிவதில்லை.

      நீக்கு
  15. நல்ல குறிப்பு விளக்கத்துடன்.

    மாங்காய் சாதம் , பச்சடி, கறி, தாளித்த மாங்காய், ஊறுகாய் , பால் சொதி , ரசம், வத்தல் அனைத்தும் எங்கள் வீட்டில் உண்டு கணவருக்கு பிடிக்கும். மரமும் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்க அம்பத்தூர் வீட்டிலும் நான்கு மாமரங்கள், ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம் இருந்தன. ஒன்று தானாய்ப் பட்டுப் போனது. ஒன்று ரொம்பப் பெரிசா அடர்த்தியாத் தோட்டத்தை நிழல் தட்டச் செய்ததால் வெட்டினோம். மற்றவை அக்கம்பக்கம் அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டும்போது போட்ட சுண்ணாம்பு, ஜல்லி, சிமென்ட் கலவைகளில் வீணானது. இதை எல்லாம் வைச்சே அங்கே இருந்து கிளம்பினோம். இப்போ அக்கம்பக்கம் தான் மரம், மரங்கள். :(

      நீக்கு
  16. மாங்காய் சாதம், பச்சை மோர்க்குழம்பு நன்றாக இருக்கிறது.
    படங்களும் நன்றாக இருக்கிறது.

    மிள்காய் வற்றல், பெருங்காயம், கொஞ்சம் வெந்தயம் கொஞ்சம் கொத்தமல்லி, தேங்காய் பூ சேர்த்து வறுத்து பொடி செய்து வதக்கிய மாங்காவில் போட்டு பிரட்டி பின் சாதம் கலக்குவேன்.

    பச்சை, மிளகாய் இஞ்சி சேர்த்து செய்து பார்க்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்க சொன்ன செய்முறையிலும் பண்ணலாம் கோமதி. இது பத்திரிகையைப் பார்த்துப் பண்ணச் சொல்லிப் பண்ணினது.

      நீக்கு
  17. மாங்காய் சாதம் என்னுடைய செய்முறையும் இப்படியே. நன்றாக வந்திருக்கிறது👍

    பானுமதி வெங்கடேஸ்வரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாங்காய் சாதத்துல என்ன வெவ்வேறு செய்முறை? எல்லாமே ஒண்ணுதானே. ஹா ஹா. படம் நல்லா வந்திருக்கு என்று மட்டும்தான் சொல்லமுடியும். சாப்பிட நல்லா இருந்ததான்னு அவங்க சொல்லலையே

      நீக்கு
    2. grrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr @ Nellai. @Banumathy! Thank you.

      நீக்கு
  18. மாங்காய் சாதக்குறிப்பு அருமை! அதைப்பற்றிய தகவல்களும்
    அவற்றை சுவாரசியமாக எழுதிய உங்களின் திறமையான எழுத்தும் அதையும் விட அருமை!

    பதிலளிநீக்கு
  19. Hiya
    It's my favourite, amma used to make this mango rice .it goes well with potato podimas .
    Feeling nostalgic.

    It's me
    Angel
    From London ☺️☺️☺️

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாங்காய் சாதம் செய்முறை சுவாரஸ்யமாக எழுதி இருக்கிறீர்கள் ருசியும் வித்தியாசமாக இருக்கும் எனக்கும் உங்களை மாதிரி எதுவும் சாப்பிட முடியாது படித்து ரசிக்கிறேன் மாங்காய் பார்த்தால் செய்யச் சொல்கிறேன் மிகவும் நன்றி அன்புடன்

      நீக்கு
    2. ஹி, ஏஞ்சல்! திடீர் வருகைக்கும் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
    3. நன்றி அம்மா. விரைவில் உங்களுக்குக் கொஞ்சமானும் சாப்பிடும்படி இறைவன் அருளப் பிரார்த்திக்கிறேன்.

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!