சனி, 13 ஆகஸ்ட், 2022

இகழ்ச்சி அடையா முயற்சிகள் - மற்றும் - நான் படிச்ச கதை (JC)

 மதுரை:'இஸ்ரோ'வின், 'ஆசாதி சாட்' செயற்கைக்கோள் வடிவமைப்பு பணியில், மதுரை மாவட்டம், திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி மாணவியர் ஈடுபட்டுள்ளனர்.

இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின், 'ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா' திட்டம் சார்பில், நாடு முழுதும், 75 அரசு பள்ளிகளைச் சேர்ந்த, 750 மாணவியர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.அவர்கள், 'ஆசாதி சாட்' எனப்படும் செயற்கைக்கோள் தயாரிப்பு பணியில், பிப்ரவரி முதல் ஈடுபடுத்தப்பட்டனர்.
திருமங்கலம் மாணவியரும், அந்த பணியில் ஈடுபட்டுள்ளனர்.அவர்கள், ஆந்திரா மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர். அங்கு, பிற, 75 பள்ளி மாணவியருடன் இணைந்து, செயற்கைக் கோளை உருவாக்கி, விண்ணில் ஏவ உள்ளனர்.
மாணவியர் குழு ஒருங்கிணைப்பு ஆசிரியர்கள் கர்ணன், சிந்தியா கூறியதாவது: இப் போட்டியில் பங்கேற்க நாடு முழுதும் ஆன்லைனில் போட்டி நடந்தது. தமிழகம் சார்பில், சென்னை, மதுரை திருமங்கலம் பள்ளிகள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டன.மாணவியர் அர்ப்பணிப்புடன் பணியாற்றியதால் சாதித்துள்ளனர். இதில் பங்கேற்றதை ஆசிரியர்கள், மாணவியருக்கு பெருமையாக கருதுகிறோம்.இவ்வாறு கூறினர்.

===============================================================================================================

கொச்சி: கேரளாவை சேர்ந்த ஒரு பெண், சர்வதேச பெண் தொழில் முனைவோர் விருது பெற்றுள்ளார்.
கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் சங்கீதா அபயன்,35. இவர், www.eweworld.com என்ற இணைய தளத்தை 2017ல் துவக்கினார். இதன் வாயிலாக கதர், கைவினைப் பொருட்கள் மற்றும் இயற்கை விவசாய பொருட்கள் ஆகியவற்றை உலக அளவில் விற்பனை செய்து வருகிறார். இவருடைய இணையதளம் வாயிலாக பல்வேறு மாநிலங்களை சேர்ந்த கைவினைப் பொருட்கள் தயாரிப்போரின் வாழ்க்கைத் தரம் உயர்ந்துள்ளது.
தன் தொழில் வாயிலாக சமூக மாற்றத்தை ஏற்படுத்திய சங்கீதா அபயனுக்கு, 'ஜூனியர் சேம்பர் இன்டர்நேஷனல் ஹாங்காங்' என்ற அமைப்பு சர்வதேச பெண் தொழில் முனைவோருக்கான விருது வழங்கியுள்ளது. இந்த விருதுக்கு உலக அளவில் 225 பேர் பரிசீலிக்கப்பட்டனர். அதில் சங்கீதா அபயன் முதலிடம் பெற்றுள்ளார்.
================================================================================================================

சி.எம்.டி.ஏ.,வின் ஓட்டுனர் பிரிவில் உள்ள பணிக்கு, பெண்களுக்கு தனி இட ஒதுக்கீடு உண்டு. ஆனால், இதுவரை பெண்கள் விண்ணப்பித்ததே இல்லை. முதன்முறையாக இந்துப்ரியா என்பவர் விண்ணப்பித்து, தேர்ச்சியும் பெற்றார்; அவருக்கு பணி நியமனம் வழங்கப்பட்டு உள்ளது. இது, பல பெண்களுக்கு உத்வேகமாக இருக்கும். பெண்கள் முன்னேற்றத்துக்கான முன்னெடுப்பாக எங்களது அலுவலகத்திலேயே, 'துளிர் அகம்' என்ற, 'டே கேர்' மையம் துவங்கி, இரண்டு பெண்களை நியமித்து இருக்கிறோம். ஏற்றத்தாழ்வுகள் இன்றி, எந்த பணி நிலையில் உள்ளவர்களும், தங்கள் குழந்தைக்காக இந்த அகத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். தவிர, தாய்மார்கள் பாலுாட்டும் அறையையும், இங்கே துவங்கி இருக்கிறோம். அலுவலக வேலை முடிந்து, பெண்கள் வீடு திரும்ப தாமதமாகும் சூழலில், அருகிலுள்ள ரயில் நிலையங்களுக்கு அவர்களை அழைத்துச் செல்ல, வாகன வசதியும் செய்து தந்திருக்கிறோம். பெண்கள் சாதிக்கட்டும்; அவர்களுக்கு நாம் துணை நிற்போம்.சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் முதல் பெண் ஓட்டுனர், இந்துப்ரியா: எனக்கு, 19 வயதில் திருமணமானது; கணவர் டிரைவர். அவர் தான் கார் ஓட்டக் கற்றுக் கொடுத்தார். குழந்தை ஸ்கூலுக்கு போக ஆரம்பித்த பின், 'நான் வேலைக்கு போகலாம்ன்னு நினைக்கிறேன்' என்று சொன்னேன். '10வது படித்த உனக்கு, என்ன வேலை கிடைக்கும்' என்று கேட்டார் கணவர். 'எனக்கு தான் கார் ஓட்டத் தெரியுமே... டிரைவர் வேலைக்கு போறேன்'னு சொன்னேன். 'பொம்பளப்புள்ள கார் ஓட்டுறது சரி... ஆனா இன்னொருத்தருக்கு டிரைவரா போறதெல்லாம் சரியாக வராது' என்றார். கஷ்டப்பட்டு கணவரை சம்மதிக்க வைத்து, தனியார் நிறுவனம் ஒன்றில் டிரைவராக வேலைக்கு சேர்ந்தேன். ௧௦ ஆண்டு கள் வேலை பார்த்த பின், அரசு வேலைக்கு முயற்சி செய்தேன். கும்மிடிப்பூண்டியில் உள்ள அரசு சாலை போக்குவரத்து நிறுவனத்தில், 'ஹெவி வெஹிக்கிள்ஸ்'ன்னு சொல்லக்கூடிய கனரக வாகனங்களுக்கான பயிற்சி வகுப்பில் சேர்ந்தேன். 25 பேர் கொண்ட, 'பேட்ச்'சில் நான் மட்டுமே பெண்!சி.எம்.டி.ஏ.,வில் டிரைவர் வேலைக்கு ஆள் எடுக்கும் தகவல் தெரிந்து விண்ணப்பித்தேன். தேர்வு எழுதி பாஸ் செய்து, இதோ வேலையில் சேர்ந்து விட்டேன். கனவை துரத்தினால், அது நிச்சயம் நம் கைக்குள் வரும்.
=============================================================================================================

 

நான் படிச்ச கதை

ஜெயக்குமார் சந்திரசேகரன்

 *********************

ஜி. நாகராஜனின் நிமிஷக்கதைகள்

 

கதையாசிரியர்: ஜி.நாகராஜன்


 ஜி. நாகராஜன் (1929-1981) மதுரையைச் சார்ந்தவர். பழனியில் பள்ளிப் படிப்பை முடித்த இவர் மதுரை கல்லூரியில் புகுமுகவகுப்பு படித்து பல்கலை முதல் மாணவராக தங்க மெடல் வாங்கினார். பின்னர் இளங்கலை, முதுகலை பட்டப் படிப்புகளை முடித்து கல்லூரி ஆசிரியராகப்  பணியாற்றி பின்னர் ஆசிரியப் பணியை விட்டு விட்டு முழு நேர இடது கம்யூனிஸ்ட் தொண்டராகப் பணியாற்றினார்.

 தனியார் பயிற்சிக் கல்லூரிகளில் சில காலம் பணியாற்றினார். இக்கால கட்டத்தில் சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன் ஆகியோரது நட்பு ஏற்பட்டது. 1956இல் கட்சியை விட்டு வெளியேறினார்.

ஜி. நாகராஜன் - விளிம்புகளை வரைந்த வாத்தியார்என்று அழைக்கப்படுகிறார். எழுத்திலும் கூட தொடத் தயங்கிய பாத்திரங்களை யதார்த்தத்துடன் படைத்தளித்தவர் நாகராஜன். விலைமாது, பிட்பாக்கெட்கள், திருடர்கள்  என அவரின் படைப்புலகம் உலக வாழ்வின் இருண்ட முகங்களை அவைகளின் அறங்களுடன் காட்சிப்படுத்தியது.

இவர் முறையாக எழுதியவர் அல்ல. ஆங்காங்கே எழுதி எவரிடமாவது கொடுத்துவிட்டுச் செல்லும் வழக்கம் அவருக்கு இருந்தது. 1950 முதலே சிறுகதைகள் எழுதியிருக்கிறார்.”

ஆனால் தீய பழக்கங்களுக்கு அடிமையாகிக் கடைசி காலத்தில் அதற்காகப் பிச்சை  ஏந்தும் நிலைக்குத் தள்ளப்பட்டு  வறுமையில் இறந்தார்.

 சி. மோகன் இவருடைய உற்ற நண்பர், தோழர்.

சாளரம் ஒன்றைத் திறந்துவிட்டு கம்மென்று வாயை மூடிக்கொண்டு நம்முடன் நின்றபடி உள்ளே எட்டிப் பார்க்கிறார் - இந்தத் தருணத்தில் சாளரத்தைத் திறந்ததுதான் தான் செய்த ஒரே காரியம் என்ற பாவத்துடன். கெட்டிச் சாயங்கள் என்று நாம் நம்பிவரும் சில உருப்படிகள் சலவைக்கு ஆளாகின்றன.”

சுந்தர ராமசாமி.

 இன்று நான்கு மைக்ரோ கதைகள் கீழே தரப்பட்டுள்ளன.

 1

குத்தத்தை ஒத்துக்கிறயா ?’ என்று மாஜிஸ்ட்ரேட் கைதியைக் கேட்டார்.

ஆமாங்க என்றான் கைதி.

இந்த மாதிரிக் குத்தத்துக்கெல்லாம் ஆறு மாச தண்டனை கொடுக்கணும். ஆனால் நீ குத்தத்தை ஒத்துக்கிறதுனாலே, பொளச்சுபோ, மூணு மாச தண்டனை கொடுக்கிறேன் என்றார் மாஜிஸ்ட்ரேட்.

அய்யய்யோ எசமான்! நீங்க மூணுமாசந்தான் போடுவீங்கன்னா, நான் என் குத்தத்தை ஒத்துக்கலே. கேசே நடத்திப் பாத்துரேன். கெடச்சா ஆறுமாசம் இல்லண்ணா ஒண்ணுமில்லேன்னு போகணும் என்றான் கைதி. அதற்குள் இன்ஸ்பெக்டர் எழுந்திருந்து, ‘யுவர் ஆனர், கேஸ் நடந்தா தப்பிச்சாலும் தப்பிச்சிடுவான். அவன் கேக்கறபடி ஆறு மாசமே போட்டிடுங்க. ஒரு கன்விக்ஷன் என்றாவது டயரியில் வரும் என்றார்.

மாஜிஸ்ட்ரேட் ஆறு மாதத் தண்டனை விதித்தார்.

ஜெயித்தது யார்? அந்த ஏழைக்கைதிதான்.

2.

மடத்துக்கு முன்னால் ஒரே கூட்டம். ஊர் மக்கள் அனைவரும் திரண்டு வந்திருந்தனர். அத்தனை பேர் முகத்திலும் வருத்தம் தோய்ந்திருந்தது. குசுகுசு என்று மட்டும் பேசிக்கொண்டனர்.

சாமியார் சமாதியாகிவிட்டார்.’ ‘இன்று காலை தியானத்தில் உட்கார்ந்திருந்தவர் தானாம், அப்படியே சமாதியாகி விட்டார் என்றெல்லாம் பேசிக்கொண்டனர்.

ஊர்ச்சிறுவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. கூட்டத்தின் நடுவே குறுக்கும் நெடுக்குமாக சென்று கொண்டிருந்தனர். என்னவென்று புரிந்து கொள்ளாமலேயே அவர்களும்சாமியார் சமாதியாகிவிட்டார்  என்ற வார்த்தைகளைச் சொல்லிக்கொண்டனர். இறுதியில் மடத்துக்காரர்கள் சாமியாரை வெளியே கொண்டுவந்தனர். சாமியார் வெளியே தூக்கிக் கொண்டு வரப்படுவதையே உற்று நோக்கிக் கொண்டிருந்த ஒரு சிறுவன் திடீரென்று, ‘டேய், சாமியார் செத்துப் போயிட்டாரு என்று கத்திக் கொண்டே கூட்டத்தைவிட்டு ஓடிவந்தான். உடனே அத்தனை சிறுவர்களும், ‘மடத்துச் சாமியாரு செத்துப் போயிட்டாரு என்று அழுத்தம் திருத்தமாகக் கத்திக்கொண்டு ஓடினர். பெரியவர்கள் சிறுவர்களைக் கூட்டத்தை விட்டு அதட்டி மிரட்டி ஓட்டினர்.

3.

அவள் ஒரு விபச்சாரி. அவளை வைத்துக் கதை எழுத வேண்டுமென்று எழுத்தாளன் விரும்பினான். ஆகவே அவன் அவளிடம் சென்றான்.

பெண்ணே! நீ இவ்வளவு கெட்ட நிலைக்கு வரக்காரணம் என்ன ?’ என்று எழுத்தாளன் கேட்டான்.

என்ன ? … கெட்ட நிலையா? அப்படி ஒண்ணும் எனக்கு சீக்குக் கீக்குக் கிடையாது. ஒங்கிட்ட சீக்கில்லாமே இருந்தா அதுவே ஆண்டவன் புண்ணியம்என்றாள் விபச்சாரி.

இல்லே, உனக்கு சமுதாயம் எவ்வளவு பெரிய கொடுமையை இழைத்துவிட்டது!’ என்றான் எழுத்தாளன்.

கொடுமை என்ன கொடுமை! பசிக்கொடுமை எல்லோருக்குந் தானிருக்குஇந்த போலீசுக்காரங்க தொந்தரவு இல்லாட்டி ஒண்ணுமில்லேஎன்றாள் விபச்சாரி.

கண்ட கண்டவங்க கிட்டெல்லாம் போகிறது உனக்கு கஷ்டமாக இல்லை ?’

யாரும் கண்ட கண்டவங்க கிட்டெல்லாம் போகல. எனக்குன்னு ஒரு புருஷன் இருக்காரு

மற்ற பெண்கள் எல்லாம் கட்டின புருஷனோடு மட்டும்தான் இருக்கிறார்கள். வேறு ஆண்பிள்ளைகளோடு சம்பந்தம் வைத்துக் கொள்வதில்லை தெரியுமா?’

அப்படியா ?’

பின்பு ?’

சரி, உங்களுக்கு பெஞ்சாதி இருக்குங்களா?’

ஊம், இருக்கு

நீங்க மட்டும் எங்கிட்ட வந்திருக்கீங்களே ஒங்களுக்கு வெக்கமா இல்லே? .. சரி, அது கிடக்கட்டும், நேரமாவுதுங்க

கொடுமையிலும் கொடுமை, கொடுமையை கொடுமை என்று புரிந்து கொள்ளாததுதான். எழுத்தாளனுக்கு அது புரியவில்லையோ என்னவோ, விபச்சாரியைக் காட்டி, வாசகர்களின் கண்ணீரைப் பிதுக்கியெடுத்து, நாலு காசு சம்பாதிக்கும் எண்ணத்தை மட்டும் கைவிட்டான்.

4.

அவன் தாமரையைப் பற்றிக் கவிதைகளில் படித்திருக்கிறான். படங்களில் பார்த்திருக்கிறான். அதன் செம்மையும், மென்மையும், எழிலுருவும் அவன் உள்ளத்தைச் சுட்டெரித்தன. அதை அடைய விரும்பினான். தடாகத்துக்குச் சென்றான். அதோ! அங்கு மலர் தெரிகிறது. தண்ணீரின் மேல் கவலையற்று உறங்கிக் கிடக்கிறது. ‘வா, வாஎன்று அவனைக் கள்ளப் பார்வை கொடுத்து அழைக்கிறது. அவன் தடாகத்துக்குள் காலெடுத்து வைத்தான்.

யாரது? தண்ணீரிலே இறங்காதே. ஒரே சகதி! தாமரைக் கொடி காலைச் சுத்திக்கிட்டா அப்புறம் உயிருக்கே ஆபத்துஎன்று எச்சரிக்கிறான் யாரோ ஒருவன்.

தாமரையைப் பார்த்து விரும்பிய அவனும் உடனே சட்டென்று நின்றுவிட்டான். மலரைப் பார்த்துப் பெருமூச்செறிந்து சற்று நேரம் நின்றுவிட்டு, அதோ அங்கே அவனும் தலை குனிந்து செல்கிறான். அவன் இன்னும் வாழ்கிறான். எனக்குத் தெரியும். ஆனால் என்றோ தற்கொலை புரிந்து கொண்டு விட்டான்!

கதை ஆய்வு.

முதல் கதையில், தீர்ப்பின் படி யார் லாபம், அல்லது பயன் அடைந்தனர் என்பதே முக்கிய கேள்வி. ஆசிரியர், கைதி முன்வைத்த இரண்டு விருப்பங்களில், ஒன்று கைதிக்கு கிடைத்ததால் கைதி ஜெயித்ததாகக்  கூறுகிறார். ஆனால் கைதிக்கு அதனால் லாபம், பயன்  ஒன்றும் இல்லை.

மாஜிஸ்டிரேட்டிற்கு தீர்ப்பினால் ஒரு பயனும் இல்லை. ஓர் கேஸ் முடிந்தது அவ்வளவே.

இதில் பயன் அடைவது இன்ஸ்பெக்டர் மட்டுமே. அவருக்கு ஒரு கன்விக்சன் கிரெடிட் கிடைக்கும். ஆகவே அவரே பரிசு பெறுகிறார். இது என்னுடைய அனுமானம்.

இரண்டாவது கதையில் சிறுவர்களுக்குச் சமாதி என்பது ஒரு இடம் (grave) என்று மட்டுமே தெரியும். துறவிகள் சமாதி அடைவது என்பது அவர்களுக்குப் புரியாத புதிர். அதனால்தான் அவர்கள் சாமியார் செத்துப் போயிட்டார்  என்று உணர்ந்ததும் புதிர் அவிழ்ந்த உணர்வை சத்தமாக வெளிப்படுத்துகிறார்கள்.

நான்காவது கதை பத்மநாபன் அண்ணாச்சி வெங்கட்ஜி மூலமாக "சந்தித்ததும் சிந்தித்ததும்" தளத்தில் சொன்ன ஒரு கதையை நினைவூட்டுகிறது. அதில் ஒரு சிறுவன் தாமரைக் குளத்தில் மூழ்கி இறந்ததை உருக்கமாக சொல்லி இருப்பார்.

ஆசிரியர் இக்கதையில் பூக்களைப் பறிக்காதீர் என்று சொல்ல வருகிறாரோ?

மூன்றாவது கதை பல படிப்பினைகளை தருவது. 100 சதம் நல்லவர் என்று யாருமில்லை. அதேபோல் 100 சதம் தீயவர் என்று யாரும் இல்லை. நல்லவர் தீயவர் என்பது அவரவர் கண்ணோட்டமே.

நல்லார் தீயார்

உயர்ந்தார் தாழ்ந்தார்

நமக்குள் யார் யாரோ……

நான் யார்

நான் யார் நீ யார்” 


-----புலமை பித்தன்


இக்கதையின் கருத்தில், அதன் அடிப்படையில்  சுஜாதா "எப்படியும் வாழலாம்" என்று ஒரு நீண்ட சிறுகதை எழுதியுள்ளார். அக்கதையின் கடைசி சில வரிகள்   கீழே தரப்பட்டுள்ளது. உங்கள் தீர்ப்பு என்ன என்று கூறுங்கள்.

சுஜாதா "எப்படியும் வாழலாம்"

………

இத்தினி நேரம் என்னைய இத்தினி கேள்வி கேட்டியேநான் உன்னைக் கேக்க வேண்டாமா?”

கேளு தாராளமா.”

நான் சொன்னதை எல்லாம் எளுதப் போறியா?”

ஆமாம். அப்படியே மாத்தாம.”

அதுக்குப் பணம் கொடுப்பாங்களா?”

ஆமா. அந்தப் பணத்தை உங்கிட்ட கொண்டு கொடுத்துர்றதா உத்தேசம்.”

நான் அதுக்குச் சொல்ல வரலை. நீயும் நானும் ஒண்ணுன்னு சொல்ல வரேன். உனக்கு ஒரு தெறமை இருக்கு எளுதுற தெறமை. அதை உபயோகிக்கறே. காசு வாங்கறே. என் தெறமை இது ஒண்ணுதான். நானும் அதைக் காட்டிக் காசு வாங்கறேன். என்ன சொல்றே?”

அப்படிப் பார்த்தா எல்லா உத்தியோகத்துக்கும் இது பொருந்தும் இல்லையா?”

இப்ப இந்தப் போட்டி பண்ணியே, இதுக்கு ஏதாவது பலன் உண்டா?”

போட்டி இல்லை, பேட்..!”

சரி, பேட்டி.”

நான் இந்தப் பேட்டிக்கு வந்த காரணம் வேற. அதனோட பர்ப்பஸே வேற. உன் சின்ன வயசுல நடந்த நிகழ்ச்சிகளில் எங்கயோ அந்தக் காரணம் பொதிஞ்சிருக்கு…”

பொதிஞ்சிருக்குன்னா?”

மறைஞ்சிருக்கு.”

என்ன காரணம்?”

நீ ஏன் இந்தத் தொழிலுக்கு வந்தேன்னு?”

காசு சம்பாதிக்க.”

நான் அந்த அர்த்தத்திலே கேக்கலை ராணிஆல் ரைட். நீதான் இந்த   தர்க்கத்தை ஆரம்பிச்சுக் கொடுத்தேஉன்னைக் கேக்கறேன். நீ பண்றது தப்பான காரியம்னு உனக்கு எப்பவாவது தோணுதா?”

தப்பாஎனக்குப் புரியலை.”

பாவம்னு புரியுதா?”

இப்ப நான் செய்யறது பாவம்கறியாஅப்ப என்னைத் தேடி வர்றவங்க செய்யறது!”

தேடி வரும்படியான சூழ்நிலையை ஏன் உருவராணி! எனக்கு இதைச் சரியா உனக்குப் புரியும்படியா சொல்லத் தெரியலை. இத பாரு? வாழறதுக்கு எத்தனையோ வழி இருக்கு இல்லையா? உன்னை மாதிரி பெண்கள் இப்பல்லாம் எத்தனையோ நவீனமான காரியங்கள் பண்றாங்க. ஏரோப்ளேன்கூட ஓட்டறாங்க. கம்ப்யூட்டர்னு ஒண்ணு இருக்கு. அது எல்லா கணக்கும் போடும். அதை எல்லாம் இயக்கறாங்க!”

! அடி ஆத்தே!”

இது நீ வியக்கறதுக்காகச் சொல்லலை ராணி

இப்ப உன்னை ரெய்டுபண்ணி அரஸ்ட் பண்ணாங்களே போலீஸ் ஆபீஸர்…” அவங்ககூட பொண்ணுதான்.”

நீ இன்னாங்கறே? எனக்குப் புரியலியே.”

ராணி! ஒழுங்கா வாழறதுக்கு எத்தனையோ வழிகள் இருக்கறப்போ, உலகத்தில் மிகப் புராதனமான தீமை இந்த ப்ராஸ்டிட்யூஷன். இதில் போய் மாட்டிக் கிட்டு…”

எனக்கு இதான்யா தெரியும். வேற எதும் தெரியாதே. நானும் காதல் பண்ணிப் பார்த்தேன். டிராமா ஆடிப் பார்த்தேன். எங்க பார்த்தாலும் போட்டி!

எங்கயும் எனக்கு செரிப்படலை. இங்கயும் போட்டிதான்.

ஆனா டிமாண்டு இருந்துகிட்டே இருக்கு. இப்ப நீ என்ன செய்யணும்கறே?

இதெல்லாத்தையும் விட்டுட்டு ஏதாவது கவுரதையா தொழில் செய்யணும்கறியா?”

ஆமா.”

எனக்கு ஏதாவது அந்த மாதிரி ஏற்பாடு செய்து தர்றியா?”

மகா சனங்களே!

ஆமா, நான் செய்யறது பாவந்தான். தப்புதான். இவுரே சொல்லிட்டாரு. அதுக்கெல்லாம் காரணம் நான் வளர்ந்த சூழ்நிலைதான்னுட்டு. ஏதோ சந்தர்ப்பவசத்தால நான் இந்த தொழில்ல வந்து மாட்டிக்கிட்டேன்.

என்னை இதுல இருந்து விடுவிச்சு கூட்டிட்டுப் போக உங்கள்ல என் கதையைப் படிக்கிறவங்க இருந்தாங்கன்னா பெங்களூர் சிக்பேட்டை விஜயலட்சுமி கொட்டாயண்ட வந்து, பக்கத்துல சந்து இருக்குது. அதுல நுளைஞ்சா செட்டுக்கு மாடில இருக்குது லாட்ஜு. அங்க வந்து யாரை வேணா ராணின்னு கேட்டா போதும்.

உடனே என்னைக் கூப்பிடுவாங்க. பகல் வேளைல வாங்க. சாயங்காலம் அஞ்சரைக்கு மேல கொஞ்சம் பிஸியா இருப்பேன்வாங்க நான் காத்துக்கிட்டு இருக்கேன். மறுவாழ்வு தாங்க.

இத இப்படியே போடுய்யா.”

சரி.”

//விபச்சாரியைக் காட்டி, வாசகர்களின் கண்ணீரைப் பிதுக்கியெடுத்து, நாலு காசு சம்பாதிக்கும் எண்ணத்தை மட்டும் கைவிட்டான்//

இவ்வாறாக நாகராஜன் கதையை முடிக்கிறார்.

ஆனால் சுஜாதா?

சுஜாதா கதையின் சுட்டிகள்.

சுஜாதாவின் அடல்ட்ஸ் ஒன்லி கதை – “எப்படியும் வாழலாம்!…” | வி ரி ம் - சுட்டி

எப்படியும் வாழலாம் - வலைத்தமிழ் - சுட்டி

எப்படியும் வாழலாம் - சிறுகதைகள்.காம் - சுட்டி

விமரிசனக் கதையின் சுட்டி  

29 கருத்துகள்:

  1. முயன்றால் வெற்றி நிச்சயம் ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு வகையில் போராடித்தான் வெற்றி பெறுகிறார்கள்.

    பதிலளிநீக்கு
  2. எல்லோருக்கும் இனிய காலை வணக்கம்....

    இஸ்ரோவில் செயற்கைக் கோள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள மாணவியருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்!!

    கீதா

    பதிலளிநீக்கு
  3. ஆனால் இந்த ஆசாதி சாட்டிலைட் தோல்வி அடைந்துவிட்டது. கடைசி தருணத்தில் அது தோல்வி அடைந்துவிட்டது. இதில் சொல்வதற்கு நிறைய இருக்கின்றன. ஆனால் இங்கு பாசிட்டிவ் செய்திகள் பகிர்வதால் அதைத் தவிர்க்கிறேன்

    கீதா

    பதிலளிநீக்கு
  4. மற்ற இரு செய்திகளும் நல்ல விஷயங்கள். அவர்களுக்கும் வாழ்த்துகள்!

    கீதா

    பதிலளிநீக்கு
  5. நாகராஜன் எனும் எழுத்தாளர் எனக்கு இப்போதுதான் அறிமுகம். ஜெகே அண்ணாவிற்கு நன்றி. நானும் அழியாச்சுடர்கள், போன்ற சுட்டிகள் எல்லாம் போவதுண்டு. ஆனால் இவர் கதையை வாசித்ததில்லை.

    ஜெகே அண்ணாவின் கருத்துகள் அவருடைய பார்வையில். எனக்கு அதோடு தோன்றியவை. ஒவ்வொருவரது பார்வையும் வாசிக்கும் போது ஏற்படும் எண்ணங்களும் வித்தியாசமாக இருக்கலாம்..

    சாமியார்க் கதை - சிறுவர்கள் புரிந்து கொண்ட அர்த்தம் க்ரேவ்யார்ட் என்பதை விட, சிறுவர்களுக்கு சமாதி என்பது புரியாது. அவர்களைப் பொறுத்தவரை செத்துவிட்டார் அவ்வளவுதான்.....மேலும் மரணம், சமாதி என்ற இரு சொற்களின் அர்த்தம் அந்த இடத்திற்கு ஏற்ப மாறுபடுவதும், சாமியார் என்றால் சமாதி என்றும் மக்கள் என்றால் மரணம் என்பதை மறைமுகமாகச் சுட்டி தன் சாமியார்கள் மீதான தன் எண்ணத்தை கதாசிரியர் வெளிப்படுத்துகிறார் என்றே எனக்குப் பட்டது.

    கீதா

    பதிலளிநீக்கு
  6. முதல் கதையில் அண்ணா சொல்லியிருப்பது போல் அந்த போலீஸ் தான் வெற்றி பெற்றதாகத் தெரிகிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
  7. தாமரை - அதில் பூக்களைப் பறிக்காதீர் என்ற அர்த்தம் இருப்பதாகத் தெரியவில்லை.....அதிலும் தாமரையை மறைமுகமாகப் பெண் என்ற சித்தரிப்போ என்று தோன்றினாலும் இன்னும் ஆழமாகப் பார்த்தால் அவன் செய்யும் முயற்சிகள் எல்லாவற்றிற்கும் ஏதோ ஒரு உள்மனக் குரல் தடை செய்கிறது, இப்படி அவன் தன் சுய முடிவு எடுக்க முடியாமல் என்றோ தற்கொலை செய்துகொண்டுவிட்டான் என்ற அர்த்தமும் வருவதாக எனக்குப் படுகிறது. தைரியம் இல்லாத மனிதன். வாழ்க்கையில் தேங்கி நிற்கிறான். என்ற அர்த்தமும் கொள்ளலாம் என்று என் மனதில் பட்டது. இதில் மன ரீதியாகவும் பார்க்கலாம்.

    கீதா

    பதிலளிநீக்கு
  8. நாகராஜன் அவர்களின் 4 வது கதை முடிவு, சுஜாதா அவரின் கதை முடிவு இரண்டுமே முடிவு யதார்த்தம்தான்.
    நாகராஜன் எழுத்தாளர்களை மறைமுகமாக நையாண்டி செய்துள்ளாரோ என்றும் தோன்றுகிறது.

    சுஜாதா பாசிட்டிவ் எண்டிங்க் அவர் மனதில் இருக்கும் எண்ணம்..ஆதங்கம் என்றும் சொல்லலாம்....(எல்லோர் மனதிலும் இருக்கும் எண்ணம் என்றும் சொல்லலாம்)..அவர் இதைச் சில இடங்களில் வெளிப்படுத்தியிருக்கிறார் என்ற நினைவும் கூட.

    கீதா

    பதிலளிநீக்கு
  9. தன் முயற்சி இருந்தால் வாழும் வாழ்க்கையைச் செம்மையாக வைத்துக்கொள்ளலாம். கில்லார்ஜியின் கருத,து என்னைக் கவர்ந்தது.

    தான் செய்வது சரி, வேறு வழியில்லை என்று ஒவ்வொருவரும் எல்லாத் தொழில்களையும், கொலை, கொள்ளை முதல்கொண்டு, ஜஸ்டிஃபை பண்ணிவடலாம். இந்தத் தொழிலைத் தஙறு என்று சொல்பவர்கள் என் வாழ்க்கைக்கு ஒரு தீர்வு தாருங்கள் என்று மற்றவர்கள்பேல் அந்த பாரத்தை ஏற்றிவிடலாம். இப்படித்தான் அரசும் சாராயம் விற்பதை நியாயப்படுத்துகிறது, சிகரெட் விற்கும் கோபாலசாமிகளும் நியாயப்படுத்துகின்றனர்.

    பதிலளிநீக்கு
  10. //வாசகர்களின் கண்ணீரைப் பிழிந்தெடுத்து// - எழுத்தாளர்களோ, திரை/நாடகத் தொழிலாளர்களோ காலத்தைக் காட்டும் கண்ணாடிகள். அவர்கள் தங்கள் தொழிலின் மூலம் சமூகத்தின் மனசாட்சியைத் தட்டியெழுப்புகிறார்கள். (அந்த நோக்கத்தோடு படைத்தால்). மற்றபடி அதை எழுதிக் காசுபார்க்கிறார்கள் என்று குற்றம் சுமத்தினால், அத்தனை படைப்பாளிகளும் இந்தக் குற்றம் செய்தவராவார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லை சூப்பர்!

      படைபபற்றல் என்பது ஆகப் பெரியத் திறமை. அது எல்லோரையும் சென்றடைவது என்பது அதைவிடப் பெரிய விஷயம். எத்தனையோ நல்ல எழுத்தாளர்கள் வெளி உலகிற்குத் தெரியாமலேயே பேசப்படாமலேயே இருந்திருக்கிறார்கள் இப்பவும் இருக்கிறார்கள்.

      கீதா

      நீக்கு
    2. //எத்தனையோ நல்ல எழுத்தாளர்கள் // - எனக்குத் தெரிந்து இந்த டாப்பிக்கில், சும்மா சுஜாதா, பாலகுமாரன்களோடு நிறுத்திக்கொண்டால் பத்துக்கு ஐந்து பேர் ஆமாம் போடுவார்கள். மீதி 2 பேர்கள், ஏன் கல்கி இருக்கிறார், அவர் இருக்கிறார், இவரும் இருக்கிறார் என்று கூடச் சேர்த்துக்கொள்வார்கள். மீதி இரண்டு பேர், இவர்கள் யாரையும் ஒத்துக்கொள்ளாமல், தெரியாத பேர்களைச் சொல்லி, அவர்களை வாசித்திருக்கிறீர்களா, அவர்களைப் போல் வராது என்றெல்லாம் சொல்லுவார்கள். மீதி ஒருத்தர், தன்னைத் தவிர, தன் நண்பர்களை-அதாவது தனக்குத் தெரிந்தவர்களைத் தவிர, மற்ற எல்லா எழுத்தாளர்களும் படுமோசம் என்று சண்டைக்கு வருவார்கள். அதனால்........... 'நல்ல எழுத்தாளர்கள்' என்பதை, அழகிய கையெழுத்துக்கொண்டவர்கள் என்று புரிந்துகொள்வதோடு நிறுத்திக்கொள்வது, நம் எல்லோருக்கும் ப்ரெஷரோ சண்டையோ மனவருத்தமோ உண்டாக்காது. ஹா ஹா ஹா

      நீக்கு
  11. இத்தவணை கதைப்  பதிர்வுக்கு சில சிந்திக்க வைக்கும் விமரிசனங்கள் வந்திருக்கின்றன. மாறுபட்ட கருத்துக்கள் ஆனாலும் மதிக்கத் தக்கவை. கீதா அவர்களுக்கும் நெல்லை அவர்களுக்கும் மிக்க நன்றி. 

    Jayakumar

    பதிலளிநீக்கு
  12. இனிய காலைப் பொழுதில்

    அன்பின் வணக்கங்களுடன்..

    வாழ்க நலம்
    வாழ்க தமிழ்..

    பதிலளிநீக்கு
  13. செயற்கைக்கோள்
    தயாரிப்பில் ஈடுபட்ட மாணவியருக்கு மனமார்ந்த நல்வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  14. @ கில்லர் ஜி..

    // முயன்றால் வெற்றி நிச்சயம் ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு வகையில் போராடித்தான் வெற்றி பெறுகிறார்கள்..//

    நல்லதொரு கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மகிழ்ச்சி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கில்லர்ஜி அண்ட் துரை அண்ணா கருத்து நல்ல கருத்துதான்....

      ஒன்றே ஒன்று, போராடினாலும் அதிர்ஷ்டம் என்றோ அல்லது இறை அருள் என்றோ சொல்லிக் கொள்ளலாம் அப்படி ஒன்று இருந்து நமக்கு நடக்க வேண்டும் என்று இருந்தால் மட்டுமே நடக்கும்.

      ஒரு சிலருக்கு எந்தவிதப் போராட்டமும் இல்லாமல் எளிதாக வெண்ணை போன்றுநழுவி கையில் வந்து விழுகிறதே!

      கீதா

      நீக்கு
    2. சனாதன மதம் மட்டும்தான் இதற்குச் சரியான விளக்கத்தை அளிக்கிறது. 'பதவி பூர்வ புண்யாணாம்', எதுவும் அவரவர் வினைப்பயன் என்று பல விதங்களில் அதனை விளக்குகிறது. மக்களைக் கொள்ளையடித்து, ஒழுக்கமில்லாத அயோக்கியர்களுக்கும் ஓரளவு மக்கள் ஆதரவு இருப்பது, ஒரு வேலையையும் உருப்படியாகச் செய்யத் தெரியாமல், பெரும் பணக்காரராக அதிகாரத்தில் இருப்பது, படிக்காத, ஒழுக்கமில்லாத, பேசக்கூடத் தெரியாமல் ஒரு மாநிலத்தின் மக்களின் தலையெழுத்தைத் தீர்மானிக்கும் இடத்தில் இருப்பது என்றெல்லாம் இருப்பதற்கு எப்படிப்பட்ட விளக்கத்தைக் கொடுத்துச் சமாதானப்படுத்திக்கொள்வது?

      ஒரு Electricity dept Officer சொன்னார், 'எங்க முன்னோர்களையெல்லாம் அடிமைப்படுத்தி கஷ்டப்பட வச்சாங்க சார்... அதனால் வட்டியும் முதலுமா நான் இப்போ லஞ்சம் வாங்கறேன். அதனால் மனதில் குற்ற உணர்ச்சி இல்லை' என்று சொன்னார். ஹா ஹா

      நீக்கு
  15. //கண்ணீரைப் பிழிந்தெடுத்து..//

    அதெல்லாம் 60/70 களில் மலையேறி விட்டது...

    பதிலளிநீக்கு
  16. இப்போதெல்லாம் நிர்வாகச் சீர்கேடுகளால் - அவரவரும் அழுது கொண்டிருக்கின்றனர்..

    பதிலளிநீக்கு
  17. சுஜாதாவின் கதையை வாசித்திருக்கிறேன்.

    (சுஜாதா மாதிரி எல்லாம் எழுத முடியுமா என்ன?)

    இப்படியான நிலையில் இருக்கும் ஒரு பெண்ணின் கதையை எழுதி கொஞ்சம் ஆறப் போடலாம் என்று போட்ட பின் ஏதேச்சாய்யாக சுஜாதாவின் இக்கதையை வாசித்ததும்...அப்படியே விட்டுவிட்டேன் அது இப்போது பாழடைந்த ஹார்ட் டிஸ்கில்......நினைவுக்குக் கொண்டு வந்து அதை எழுதலாமோ என்றும் தோன்றியது.

    நான் எழுதியது ......டபுள் டெக்கர் ரயிலில் பயணித்த போது ஏதேச்சையாகச் சந்தித்த பெண்...என் இருக்கையின் எதிரில், (டபுள் டெக்கர் ரயிலில் முதல் சீட் டேபிள் எதிரில் சீட் என்று மற்ற பயணிகளோடு அத்தனை தொடர்பு இல்லாமல் ஒரு தனிமை இருப்பது போல் இருக்கும் பயணித்தவர்களுக்க்குத் தெரியும்..).அப்படிச் சந்தித்த பெண் ஹைடெக் பெண் சொன்னதின்அடிபப்டையில்...எழுதியதை அப்படியெ போட்டிருந்தேன் இப்ப அதை நினைவுக்கு க் கொண்டு வந்து எழுத வேண்டும்...

    அது போலவே ரயிலில் இப்படியான பெண்ணை சந்தித்ததை வைத்து வேறு ஒரு எழுத்தாளரும் எழுதியிருப்பதாக ஜெகே அண்ணா சொன்னவுடன்...மீண்டும் வடை போச்சேன்னு இருக்கு

    கீதா

    பதிலளிநீக்கு
  18. @ கீதா

    // ஒரு சிலருக்கு எந்தவிதப் போராட்டமும் இல்லாமல் எளிதாக வெண்ணெய் போன்று நழுவி கையில் வந்து விழுகிறதே!.. //

    " இஞ்சி லாபம் மஞ்சள்.. ல!.. " என்று தஞ்சை வட்டாரத்தில் பழமொழி ஒன்று உண்டு.. அப்படியானால் இஞ்சி விளைச்சலில் நஷ்டம் என்று அர்த்தம்..

    இதிலே இவனுக்கு வெற்றி என்றால் வேறொன்றில் தோற்றுப் போயிருப்பான்.. ஆனானப்பட்ட ,
    ராஜேந்திர சோழனின் தலைநகரமே காணாமல் போயிருக்கின்றது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 7 தலைமுறைகள் நன்றாக வாழ்ந்தவன் இல்லை. ராஜேந்திர சோழன் செத்ததற்குப் பிறகு, அவன் மாளிகை இருந்தால் என்ன, தலைநகரம் இருந்தால் என்ன? அதுவும் தவிர, எல்லாவற்றிலும் வெற்றிபெற்ற ஒருவன் என்று யாருமே இருக்கமுடியாது. மகாபாரத, ராமாயண நிகழ்வுகளைப் படித்தாலே தெரிந்துவிடும்.

      நீக்கு
    2. எனது கருத்துரையின் உள்ளீடும் இதுதான்..

      ஏழு தலைமுறை கூட இல்லை.. அந்தத் தலைமுறையோடு அழிந்ததுவும் உண்டு..

      எல்லாம் அவன் எழுதிய எழுத்து..

      நீக்கு
  19. செய்திகள் அருமை.
    திருமங்கலம் அரசு பள்ளி மாணவிகளுக்கு பாராட்டுக்கள், வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  20. கதை பகிர்வு நன்றாக இருக்கிறது.
    பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  21. போற்றுதலுக்கு உரியவர்கள்.போற்றுவோம்

    பதிலளிநீக்கு
  22. கதை, பவ செய்திகள் என பகிர்வு நன்று.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!