புதன், 7 செப்டம்பர், 2022

ஒரு கோவிலுக்குச் செல்லும் பொழுது அதற்கு அருகில் இருக்கும் ..

 

நெல்லைத்தமிழன் : 

1. கட்சி சார்பானவர்கள், பத்திரிகையாளர் என்ற போர்வையில் வளைய வருவது கேலிக்கிடமாக இல்லையா? 

# கட்சிகள் தம் சார்பில் பத்திரிக்கைகள் , தொலைக்காட்சி ஆகியவற்றை நடத்துவது இந்தக் கால வழக்கமாகிவிட்டது . இந்த மாதிரியான ஊடகங்களில் உண்மையான செய்திகள் உலா வராது என்பதைப் புரிந்து கொள்ளும் பக்குவம் பார்வையாளர்களுக்கும் , வாசகர்களுக்கும் இருக்க வேண்டும் .

& அதைக் கூட புரிந்துகொள்ளலாம் அல்லது ஏற்றுக் கொள்ளலாம் - ஆனால் ஒரு சானலில் 'மயில்சாமி - பொருளாதார நிபுணர் ' என்று போட்டார்களே - அதைத்தான் இப்போதும் நினைத்தால் சிரிப்பு வருகின்றது! 

2. சாப்பாடே பிடிக்க மாட்டேன் என்கிறது (இனிப்புகளைத் தவிர). என்ன காரணமாக இருக்கும்?

# வயிறு மந்தமாக பசி குறைந்து போவதற்கு சில காரணங்கள் உண்டு . இவற்றுக்கு உணவில் இஞ்சி , மிளகு , சீரகம் , ஓமம்,  அதிகம் சேர்த்துக் கொள்வதும் , சாப்பிட்ட பிறகு அஷ்ட சூரணம் போன்ற ஆயுர்வேதப் பொடிகளை எடுத்துக் கொள்வது நல்லது . வெறும் சுக்குப்பொடியில் வெல்லப் பொடி சேர்த்து வைத்துக்கொண்டு அதில் ஒரு சுண்டைக்காய் அளவு உட்கொண்டாலும்  நல்ல குணம் தெரியும் . வாரம் ஒரு முறை அல்லது மாதம் இருமுறை இரண்டு வேளை உணவை தவிர்த்து வழக்கப் படுத்திக் கொண்டால் ஜீரண சக்தி அதிகம் ஆகும்.

இனிப்பு அதிகம் சேர்த்துக் கொள்பவர்களுக்கு குடலில் பூச்சிகள் வர வாய்ப்பு உண்டு அதையும் சரிபார்த்துக் கொள்ள வேண்டும் .

3. மதிப்பெண் குறைவாகப் பெற்றதால், ஆசிரியர்களை மாணவர்கள் மரத்தில் கட்டிவைத்து அடித்தனர். இது ஜார்கண்டில். இந்தச் செய்தி பற்றி உங்கள் அபிப்ராயம் என்ன? இது தமிழகத்திலும் வருமா?

# இது விபரீத புத்தி. தமிழகத்தில் வராது, வரக்கூடாது, வரவேண்டாம்.

& நேற்றுதான் ஆசிரியர்கள் தினம் கொண்டாடினோம். இன்றைக்கு இப்படி ஒரு கேள்விக்கு பதில் எழுத்தவேண்டுமா ! சிவ சிவா !! (பதில் எழுதிய நாள் 6.9.22) 

4. பிளாக்குகளில் எழுதுபவர்கள் ஏன் குறைந்துவிட்டனர்? அதைவிட முகநூல் நல்லா ரீச் ஆகுதா இல்லை மற்றவர்கள் படித்து என்ன பயன், லைக்ஸ் க்ளிக்கினால் போதும் என்று நினைத்துவிட்டார்களா?

# இதற்கு பதில் சொல்ல நம்மால் இயலாது. படிப்பவர்களை ஈர்த்து வைத்துக் கொள்வதும் புதியவர்களைக் கவர்ந்து இழுப்பதும் விரும்பத்தக்கதுதான்.  ஆனால் இயலவில்லை. எங்கள் குடும்பத்தில் கூட பலர் எங்கள் பிளாக் பக்கம் வருவதில்லை. என்ன செய்ய ?

& முகநூல் என்பது fastfood கடை. அவசர உலகம் - போகிற போக்கில் எதையாவது போட்டு likes comments பார்த்தவண்ணம் பயணிக்கின்றனர். முகநூலில் சிலருடைய பதிவுகள் தவிர பெரும்பாலானவை மொக்கை பதிவுகள்தான். 

5. கான்ஸ்டிபேஷன் வந்ததுபோல முகத்தை வைத்துக்கொண்டு, அல்லது முக சேஷ்டைகளுடன் பாடும் பாடகர்களைப் பார்த்து, இதுக்கு பேசாம mp3 CD மாத்திரம் போடப்படாதா... ஏன் பார்வையாளர்களை இம்சைப்படுத்தணும் என்று நினைத்திருக்கிறீர்களா?

# நாம் போவது இசை கேட்பதற்கு. முக பாவத்தை கோணலாக வைத்துக் கொள்வதோ கையை வீசுவது போன்ற சேட்டைகளோ இசையை பாதிக்காதவரை ஆட்சேபிக்க ஏதுமில்லை.  காரணம் அவை பாடும்போது சிலருக்கு  இயல்பாக ஏற்படுபவை.

நாம் போவது இசை கேட்பதற்கு. முக பாவத்தை கோணலாக வைத்துக் கொள்வதையோ , கையை வீசுவது போன்ற சேட்டைகளையோ  இசையை பாதிக்காதவரை ஆட்சேபிக்க நியாயம்  ஏதுமில்லை.  காரணம் , அவை பாடும்போது சிலருக்கு  இயல்பாக ஏற்படுபவை.

எவ்வளவு உயர்ந்த ரகமான CDயாக இருந்தாலும்  ஒரு கச்சேரியை நேரில் கேட்கும் அனுபவத்துக்கு ஈடாகாது.

6. ஒத்தை விக்கெட்டை எடுத்துவிட்டு, ஏதோ உலக மஹா சாதனை செய்ததுபோல முஷ்டியை நீட்டுவதும், கீழே பூமியை நோக்கி கையைக் குத்துவதுபோல அங்க சேஷ்டைகள் செய்யும் பவுலர்களின் சின்னத்தனத்தைப் பற்றி நீங்க என்ன நினைக்கறீங்க?

# எனக்கும் அது பிடிக்கவில்லைதான் . ஆனால் அப்படி ஓவராக ரியாக்ட் செய்ய வேண்டும் என்று சொல்லிக் கொடுத்து இருப்பார்கள் போல் தெரிகிறது . பார்வையாளர்களை கட்டிப்போடும் முயற்சி . 

பெண்கள் டென்னிஸ் போட்டிகளில் குட்டைப் பாவாடை போல் இதுவும் ஒரு வியாபார தந்திரம்.

& நாம் ஆதரிக்கும் அணி செய்தால் ரசிப்போம்; எதிர்அணி அதையே செய்தால் நமக்கு ரசிக்காது! 

பானுமதி வெங்கடேஸ்வரன் : 

ஒரு கோவிலுக்குச் செல்லும் பொழுது அதற்கு அருகில் இருக்கும் உணவகங்கள், அங்கு கிடைக்கும் சிறப்பான உணவுகளின் நினைவு வருவதை தவிர்க்க முடியவில்லையே?

$ வரக்கூடாது என்று நியதி எதுவும் உண்டா ?

# அன்ன தேவோ பவ':   பக்தி உணர்வோடு கூட விரசம் இல்லாத வேறு உணர்வுகள் இருப்பது தவறில்லை.

= = = = =

ஆகஸ்ட் 24 ஆம் தேதி பதிவில் நாங்கள் கேட்ட கேள்விகள் : 

எங்கள் கேள்விகள் :

1) யார் அழகு ? வரிசைப் படுத்துங்கள் 

a ) ஐஸ்வர்யா பச்சன் b ) ஐஸ்வர்யா லக்ஷ்மி c ) ஐஸ்வர்யா ராஜீவ் d ) ஐஸ்வர்யா சுரேஷ் e ) ஐஸ்வர்யா கபூர் 

2) கீழ்க் கண்டவைகளில் - வரிசையில் சேராதது எது? ஏன் ? 

2 a :  7 , 17 , 21, 41, 61, 71 

2 b : குமுதம், விகடன், கல்கி, குங்குமம், பாக்யா, ராணி 

2 c :  சன், மூன், ஸ்டார், காமெட் 

2 d : புத்தகம், நோட்டு, பேனா, பென்சில், பலப்பம் 

சில கேள்விகளுக்கு சிலர் சரியான பதில் அளித்திருந்தனர். 

சரியான பதில்கள் இங்கே. 

1) முதல் கேள்வி. படங்களை நாங்கள் வெளியிடாததற்கு காரணம் ( படங்கள் எங்கே என்று கேட்டவர்களுக்கு கூகிள் மூலம் பார்த்துக்கொள்ளச் சொன்னதன் காரணம்)  - கீழே உள்ள படங்களைப் பார்த்தால் தெரிந்துகொள்ள இயலும்! 

1 a )   ஐஸ்வர்யா பச்சன் 


1 b ) ஐஸ்வர்யா லக்ஷ்மி 

1 c) ஐஸ்வர்யா ராஜீவ் 

1 d) ஐஸ்வர்யா சுரேஷ் 

1 e) ஐஸ்வர்யா கபூர் 

ஐஸ்வர்யா கபூர் என்பவர் ரிபப்ளிக் டி வி யின் news எடிட்டர்களில் ஒருவர். இதை யாராவது கண்டுபிடிக்கின்றீர்களா என்று பார்க்கத்தான் அந்த கேள்வி. யாரும் கண்டுபிடிக்கவில்லை! 

2 a ) 21 - (மற்ற எண்கள் எல்லாம் prime numbers. )

2 b ) பாக்யா ( மற்ற எல்லா பெயர்களிலும் திரைப்படங்கள் வந்துள்ளன. பாக்யா என்ற பெயரில் இதுவரை எந்தத் திரைப்படமும் வரவில்லை ) 

2 c ) காமெட் - ( மற்ற மூன்று பெயர்களிலும் தமிழ் டி வி சானல் உள்ளன. )

2 d ) பலப்பம் - (புத்தகம், நோட்டு இவற்றில் பேனா அல்லது பென்சிலால் எழுதலாம். ஆனால் பலப்பம் கொண்டு  புத்தகம் நோட்டில் எழுத இயலாது. )

எதிர்வினை ஆற்ற நினைக்கும் வாசகர்கள் கருத்துரையில் ஆற்றலாம்!! 

= = = = = =

'திங்க'கிழமை சமையல் பகுதிக்கு உங்களிடமிருந்து சமையல் குறிப்புகள் வரவேற்கப்படுகின்றன. எல்லோரும் அனுப்பவும். 

= = = = = = =

91 கருத்துகள்:

  1. தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும் தீரா இடும்பை தரும்.

    வாழ்க குறள்..

    பதிலளிநீக்கு
  2. அனைத்துயிரும் இன்பமுற...

    அன்பின் வணக்கம்..

    பதிலளிநீக்கு
  3. // மதிப்பெண் குறைவாகப் போட்டதால், ஆசிரியர்களை மாணவர்கள் மரத்தில் கட்டிவைத்து அடித்தனர்.//

    தன் மகளை விட் அதிகம் மதிப்பெண்கள் எடுத்த சக
    மாணவனைக் கொன்று விட்டாள் ஒருத்தி - இங்கே காரைக்காலில்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம்ம தாய்மார்கள் குழந்தைகிட்ட, கீழ விழுந்ததற்காக தரையை அடிக்கும் பழக்கத்தின் நீட்சியா?

      நீக்கு
  4. அடுத்தவன் பெண்டாட்டியை வர்ணிப்பது!?...

    அததுக்கும் ஒரு லச்சணம் வேணுங்கோ!..

    ஐஸ்வர்யான்னு பேரு வச்சுக்கிட்டா மட்டும் போதுமா?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. துரை சார்... நீங்க கேட்பது அநியாயம். திருமணவாழ்வில் ஈடுபட்டு குடும்பப் பெண்ணாகிவிட்ட நடிகையை யாருமே தோற்றத்தை வைத்து விமர்சிப்பதில்லை. தங்கள் அதீத கவர்ச்சிப் படங்களைப் பொதுவெளியில் தொடர்ந்து உலாவ்விட்டு, எங்கள் கண்களில் படுமாறு அமையும்போதுதான் விமர்சனம் வரும்.

      அது சரி.. பிறன் மனை நோக்காப் பேராண்மை என்பது இவர்களுக்குப் பொருந்துமா?

      நீக்கு
  5. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்விதமான கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக அமைய வேண்டுமென இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  6. அனைவருக்கும் காலை/மதியம்/மாலை வணக்கம். நல்வரவு. வாழ்த்துகள். பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  7. தன் மகள் முதல் இடத்தில் வரணும் என்பதற்காகப் பக்கத்து வீட்டுச் சிறுவனையே கொன்றுவிட்ட தாயைப் பற்றி என்ன சொல்லுவது? நினைக்க நினைக்க மனசு ஆறவில்லை! சமூகச் சூழ்நிலை மிகவும் கீழிடத்துக்குப் போய்க் கொண்டிருப்பதைப் பார்த்தால் எதிர்கால சந்ததியினர் குறித்துக் கவலையும்/பயமும் ஏற்படுகிறது.

    பதிலளிநீக்கு
  8. டி.எம்.கிருஷ்ணாவை விடவா மற்ற இசைக்கலைஞர்கள் கையையும் காலையும் ஆட்டுகின்றனர்? அவர் பாடினால் பக்கவாத்தியக்காரர்களுக்குப் பத்தடி தள்ளியே உட்கார இடம் ஏற்பாடு பண்ணும்படி இருக்கும். :)))))

    பதிலளிநீக்கு
  9. கச்சேரிகளை நேரில் கேட்டதெல்லாம் மதுரையோடு போச்சு. அங்கே தான் பல இசை வல்லுநர்களின் கச்சேரிகளைக் கேட்டிருக்கோம். மதுரை சோமு, சீர்காழி, வீணை சிட்டிபாபு, எம்.எஸ். அம்மா, எம்.எல்.வி அம்மா, பட்டம்மாள் அம்மா, மதுரை மணி ஐயர், டி.என்.சேஷகோபாலன் திருப்புகழ் மணி, பெரியவர் வீரமணி, பித்துக்குளி முருகதாஸ் இப்படி எத்தனை எத்தனை இசை வல்லுநர்கள்! அதிலும் ஸ்வாமி ஹரிதாஸ்கிரியின் கச்சேரி/பஜனை என்றால் மதுரையின் ரசிகர் கூட்டம் தனியாக வரவேற்புக் கொடுக்கும். பலமுறை ஹரிதாஸ்கிரி அவர்களின் பஜனைக் கச்சேரியைக் கண்டு அனுபவிக்கும் வாய்ப்புக் கிடைத்துள்ளது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம். நேரில் கேட்பது சுகானுபவம்தான்.

      நீக்கு
    2. இவங்கள்லாம் 18ம் நூற்றாண்டில் கச்சேரி பண்ணினவங்களாச்சே... அதுவும் நேரில் கேட்டிருக்கிறேன் என்கிறார்களே.. அப்போ இவரை நம்மைவிடச் சிறிய வயதுக்கார்ர் என்று நினைத்தது டப்பா?

      நீக்கு
  10. ஆசிரியர்களை அடிப்பது - பிள்ளை வளர்ப்பு சுத்தமாகச் சரியில்லை இதனால் குடும்பமும் சீரழியும், சமூகமும் சீரழியும். சமூகத்தின் போக்கு சுத்தமாகச் சரியில்லை. நீதி தேவதைக்குக் கண் கட்டப்பட்டிருக்கிறதே அது போலத்தான் நாமும் கண்ணை மூடிக் கொண்டு இருக்க வேண்டும்!!!!!!!

    கீதா

    கீதா

    பதிலளிநீக்கு
  11. துரை அண்ணாவும், கீதாக்காவும் சொல்லியிருக்கும் செய்தியே சொல்கிறதே வளர்ப்பு பற்றி இப்படி அம்மா இருந்தால் அப்புறம் எப்படி குடும்பம் நல்லாருக்கும் சமூகம் நல்லாருக்கும்? இந்த அழுத்தம் எங்கிருந்து வருகிறது என்பதையும் யோசிக்க வேண்டும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மதிப்பெண்களையே முக்கியமாகக் கருதும் கற்பித்தலே காரணம் என்பது என் தனிப்பட்ட கருத்து. இந்த அழகில் மாநில அரசு தேசிய கல்விக்கொள்கையைத் தூக்கி எறியச் சொல்லிக் கொண்டிருக்கிறது. தேசிய கல்விக்கொள்கையை மாதிரிக்குச் சில பள்ளிகளில் மட்டும் கொண்டு வந்து சோதித்துப் பார்க்கட்டும். மாநிலப் பாடத்திட்டம் எவ்வளவு மோசமானது என்பது புரியும். இங்கே பெயர் வாங்கும் மாணவ.மாணவிகள் பலரும் என்சிஈஆர்டி கல்வித்திட்டத்தில் பயின்றவர்களாகவே இருக்கும்.

      நீக்கு
    2. கீதாக்கா ஹைஃபைவ்! முதல் வரி....அதே கருத்துதான்...எனக்கும். வந்து போடுவதற்குள் இங்கு நெட் ஸ்லோ.. கருத்தை நீங்க பொதுவாகவே வைக்கலாம் கீதாக்கா.

      கல்லூரியில் அடி எடுத்து வைக்கும் மாணவ மாணவியரைக் கையாண்ட அனுபவம் நம் வீட்டில் உண்டு.

      எந்த மாநிலத்திலும் மாநிலக் கல்வி சரியாக இல்லை என்பதே உண்மை. அதிலும் தன்னார்வம் உள்ளவர்கள் மட்டுமே அது எந்தக் கல்விமுறையானாலும் சரி நன்றாகத் தேர்ச்சி பெறுகிறார்கள் சமீபகாலத்தில் என்பதும்

      கீதா

      நீக்கு
    3. பொதுத்தேர்வுகளை மாணவ/மாணவியர் தைரியத்துடனும் நம்பிக்கையுடனும் எதிர்கொள்ளும்படி பெற்றோரும் வளர்ப்பதில்லை. ஆசிரியர்கள் பாடம் சொல்லிக் கொடுப்பதும் சொல்லிக்கொள்ளும்படியாக இருப்பதில்லை. கடைசியில் அரசு எல்லோரும் பாஸ் எனச் சொல்லி எல்லோரையும் பெரிய வகுப்புக்கு எளிதாக மாற்றி விடுகிறது. இதற்கு ஏன் ஓர் கல்விக்கொள்கை? பள்ளிகள்? ஆசிரியர்கள்? படிக்காமலே எல்லோரும் பாஸ் என்றால் அப்படியே சொல்லிவிடலாமே!

      நீக்கு
    4. தமிழ்ப்பாடத்தை மட்டும் எடுத்துக் கொண்டால் அதில் தரத்தைத் தேட வேண்டியதாக இருக்கு. பக்தி, மதச்சார்பற்ற அரசு என்றெல்லாம் சொல்லிக்கொண்டு பக்தி இலக்கியத்தையே மாணவ/மாணவிகளுக்கு அரசு முற்றிலும் மறுத்துவிட்டது. இந்த அழகில் ஒழுங்கையும் கட்டுப்பாட்டையும் கொண்டு வரும் மற்ற நீதி நெறிகளைப் போதிக்கும் பாடல்களையும் மாணவர்களுக்கோ/மாணவிகளுக்கோ கற்பிப்பதில்லை.

      நீக்கு
    5. போனால் போகிறது எனத் திருக்குறளை மட்டும் விட்டு வைச்சிருக்காங்க. நாலடியாரோ, இன்னா நாற்பதோ, இனியவை நாற்பதோ, நான்மணிக்கடிகை, திரிகடுகம், ஏலாதி, ஆசாரக்கோவை, சிறுபஞ்ச மூலம், பழமொழி நானூறு மற்றும் இது போன்ற இன்னொன்று முதுமொழிக் காஞ்சி? ஆகியவற்றிய நூல்களின் பெயராவது இன்றைய தமிழில் படிக்கும் மாணவர்களுக்குத் தெரியுமா? இவை ஒவ்வொன்றிலிருந்தும் செய்யுள்களை மனப்பாடம் செய்து ஒப்பித்திருக்கோம் எங்கள் பள்ளி நாட்களில். ஆசிரியர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றினார்கள். தவறு செய்யும் மாணவ/மாணவியரைக் கண்டித்தனர். இன்று?

      நீக்கு
    6. நான் சொன்ன அனைத்தும் இன்னும் தேவார, திருவாசகங்களும், பிரபந்தங்களும் மாணவ/மாணவியருக்கு முற்றிலும் மறுக்கப்பட்டு 40 வருடங்களுக்கும் மேல் ஆகின்றன. அதே ஶ்ரீலங்காவில் தமிழ் மாணாக்கர்கள் இவை அனைத்துமே கட்டாயமாகப் படிப்பார்கள். இன்று கோயிலுக்குச் சென்றால் ஒரு இளைஞனுக்காவது அல்லது இளம்பெண்ணிற்காவது தேவாரப் பாடலோ;/ திருவாசகப்பாடலோ பாடி இறைவனைத் துதிக்க வருமா? இந்த விஷயத்தில் வைணவர்கள் ஒரு படி மேல். தங்கள் குழந்தைகளுக்கு எப்படியேனும் பிரபந்தப் பாடல்களைச் சொல்லிக் கொடுத்து விடுவார்கள். இங்கேயே பல குடும்பங்களிலும் பார்க்கிறேன். ஏதோ அவர்களால் கொஞ்சம் கொஞ்சம் இறை பக்தி உயிர்ப்புடன் இருக்கிறது எனலாம்.

      நீக்கு
    7. ஔவையாரைப் பற்றி யாருக்கானும் நினைவில் இருக்கா? காக்கைப் பாடினியார் என்பவர் பெண் புலவர் என்பது யாருக்கும் தெரியுமா? கரிகாலன் மகள் "ஆதிமந்தி" சங்கப்புலவர்களுள் ஒருவர் என்பதை அறிந்திருக்கோமா? இவள் ஆட்டன் அத்தியைக் காதலித்ததையும், இரு பெண்கள் ஆட்டன் அத்தியைக் கவர்ந்து சென்றதையும் கடைசியில் மருதி என்பவள் ஆட்டன் அத்தியை ஆதிமந்திக்கு விட்டுக் கொடுத்ததையும் நாங்க பள்ளியில் படிக்கையில் நாட்டிய நாடகமாய்ப் போட்டிருக்கோம். இப்போல்லாம் உள்ளவர்களுக்கு இவங்களை எல்லாம் பற்றிய அறிவே இருக்க வாய்ப்பு இல்லை. :(

      நீக்கு
    8. சரி ரொம்பவே எழுதி எல்லோரையும் போர் அடிச்சுட்டேன்னு நினைக்கிறேன். 3 மணிக்கு மருத்துவரிடம் போகணும். ஆகவே இன்னிக்கு இதோடு நிறுத்திக்கிறேன்.

      நீக்கு
    9. இல்லை கீதாக்கா உங்கள் கருத்துகளை ஆமோதிக்கிறேன் நான் சொல்ல நினைத்தவை நீங்கள் சொல்லியது எனக்கு டைப்பிங்க் மிச்சம்..ஹிஹிஹிஹி.... சென்னையில் இருப்பதால்

      கீதா....

      நீக்கு
    10. கீசா மேடம் எழுதியிருக்கறதெல்லாம் இப்போதுள்ள தமிழாசிரியர்களுக்கே தெரியாது. லியோனிட்ட கேட்டால் அவரே முழிப்பார். இதுல, பசங்களுக்குத் தெரியுமா? என்று பஞ்சாயத்துக்கு வர்றாரே. இதுல எதுக்கு திருவள்ளுவரை இழுக்கறீங்க? அவர் சனாதனதர்மம் (இந்து என்று சொன்னால் மதத்தை எதுக்கறாங்க என்று இந்துக்கள் ஒன்று சேர்ந்துவிடுவார்களாம். அதனால் இந்தச் சொல்லாடல்) கொடுத்த நன்கொடை. அவரையே வெள்ளை வேட்டி கட்டி விபூதி இல்லாமல் வெற்று நெற்றியோட வச்சிருக்காங்க, அவரைப் பற்றி எந்த ஒரு அறிவும் இல்லாதவங்க

      நீக்கு
  12. சமையல் பதிவுகளுக்குத் திரும்பத்திரும்ப சில குறிப்பிட்டவர்களே எழுதுவதால் வரவேற்பு இல்லையோ? (முக்கியமாக என் பதிவுகளே அதிகம் வருகின்றன.)
    2.தினம் தினம் என்ன சமைப்பது என்ற பிரச்னை எல்லா வீடுகளிலும் உள்ளதா?
    3.பதிவுகள் எழுதுவதிலும்/இணையத்திற்கு வருவதிலும் பலருக்கும் ஒரு சோர்வு ஏற்படுவது ஏன்?
    4.பழி வாங்கும் குணம் ஏன் ஏற்படுகிறது?
    5.உங்களிடம் அலட்சியமாக நடந்து கொண்டு விட்டுப் பின்னர் காரியம் ஆகணும் என்பதற்காக நட்பு பாராட்டுபவர்களைப் பற்றி என்ன நினைப்பீர்கள்?
    6.அப்படிப்பட்டவர்களுக்குத் தெரிந்து கொண்டே உதவி செய்யலாமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /வரவேற்பு இல்லையோ?// --- கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்... வெளியிட்ட பதிவுக்கு வந்த பின்னூட்டங்களுக்கு ஒரு மறுமொழியும் எழுதாம காணாமல்போய் வெறுப்பேத்தியவங்க கேட்கிற கேள்வியைப் பாருங்க!!

      நீக்கு
    2. நெல்லை! ஒரு கண்ணாடிக்கு இரண்டு கண்ணாடி போட்டுக் கொண்டு போய்த் திங்கள் பதிவைப் பாருங்க. எல்லோருக்கும்/எல்லாவற்றுக்கும் பதில் சொல்லி இருக்கேன். பதிவைத்தான் சரியாப் படிக்கிறதில்லைனா கருத்துக்களைக் கூடவா? உங்கள் கருத்துகளுக்கும் பதில் சொல்லி இருக்கேனே! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

      நீக்கு
    3. கீதாக்கா, ஹாஹாஹா நல்லா சொன்னீங்க!!! இந்த நெல்லை இப்படித்தான்...

      கீதா

      நீக்கு
    4. கீதாக்கா, எங்கள் தளத்தில் பதிவுகள் எழுதுவதே எனக்கு நேரம் எடுக்கிறது படங்கள் கோர்த்து.....என்று விசாகப்பட்டினம் அடுத்த பதிவு எழுதணும்.. திங்கவுக்கு சில இருந்தாலும் அனுப்ப முடியவில்லை அது போலத்தான் கதைகளும்.....நம்ம கதை எல்லாம் செல்லுபடியாகாது என்பதால் எழுதும் ஆர்வம் குறைந்துவிட்டது.

      கீதா

      நீக்கு
    5. //நெல்லை! ஒரு கண்ணாடிக்கு இரண்டு கண்ணாடி போட்டுக் கொண்டு போய்த் திங்கள் பதிவைப் பாருங்க. எல்லோருக்கும்/எல்லாவற்றுக்கும் பதில் சொல்லி இருக்கேன். // - எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும். இப்போ 3 மணிக்கு கீசா மேடம் எந்த டாக்டரைப் பார்க்கப் போறாங்கன்னு. யாராவது சொல்ல முடியுமா? (ஹிஹிஹி)

      https://engalblog.blogspot.com/2022/08/blog-post_15.html

      நீக்கு
    6. //கீதாக்கா, ஹாஹாஹா நல்லா சொன்னீங்க!!! இந்த நெல்லை இப்படித்தான்...

      கீதா// - கீதா ன்னு பேர் வச்சிக்கிட்டாலே இந்தப் பிரச்சனை உண்டா? ஹா ஹா ஹா

      நீக்கு
    7. //இப்போ 3 மணிக்கு கீசா மேடம் எந்த டாக்டரைப் பார்க்கப் போறாங்கன்னு. யாராவது சொல்ல முடியுமா? (ஹிஹிஹி)// ஆயுர்வேத மருத்துவர். பிரபலமான மயிலை வெங்கட்ரமணா மருத்துவமனையின் தலைமையகமான கரூரில் இருந்து ஒவ்வொரு மாதம் முதல் புதன்.மூன்றாம் புதன் இங்கே வருகிறார். இவர் கொரோனா காரணமாக வராமல்/மருந்துகளும் கிடைக்காமல் நான் அவதிப்பட்டதைப் பற்றி ஏற்கெனவே புலம்பி 3 மாசம் படுக்கையிலேயே இருந்தும் எதிர்ப்புகள் தெரிவிச்சாச்சு. காலையில் வந்தால் மாலை ஏழு மணி வரை இங்கே இருப்பார். மதியம் 3 மணியில் இருந்து ஐந்து மணி வரை மாடி ஏற முடியாத என் போன்ற நோயாளிகளைக் கீழே வந்து பார்ப்பார். நேத்திக்குப் போயிட்டு வந்தோம். நெல்லைக்கு இன்னிக்குச் சாப்பாடு இறங்கி ஜீரணமும் ஆகும் என நம்பறேன். இஃகி,இஃகி,இஃகி இஃகி/

      நீக்கு
    8. சென்னை/மயிலை/வெங்கட்ரமணா மருத்துவமனையில் மருந்துகள் வாங்கிச் சாப்பிட்டதில் :நுனிப்புல்" உஷாவின் அம்மாவுக்குப் புற்று நோய் குணமாகி இருக்கிறது. முதலில் உஷா இதைப் பற்றி வெளிப்படையாகச் சொல்லலை. பின்னர் மருத்துவப் பரிசோதனைகள் மூலம் குணம் தெரியவே அனைவருக்கும் பயன்படட்டும் என வெளிப்படையாகத் தெரிவித்தார்.

      நீக்கு
    9. Sorry. நான் சொன்னது, 'ஞாபக மறதி' க்காக டாக்டரைப் பார்க்கப் போறாங்களோ என்ற punல், as you haven't replied for சுதந்திர தினம் தி.பதிவு. விரைவில் உங்கள் உடல் பிரச்சனை தீரப் ப்ரார்த்திக்கிறேன்.

      நீக்கு
  13. 7.அபத்தமான கேள்விகளாக் கேட்டிருக்கேனோ?
    8.எதற்கெடுத்தாலும் நேரடியாகப் பிரதமரே காரணம் எனச் சொல்பவர்களைப் பற்றி? (இத்தனைக்கும் உலகத்தலைவர்களில் முதலிடம் பெற்றிருக்கார்.)
    9.என்ன நடந்தாலும்/யார் என்ன சொன்னாலும்/வாய்மூடி மௌனிகளாக இருந்தால் பிரச்னைகளே வராது இல்லையா?
    10.இந்தியப் பொருளாதார நிலைமை இங்கிலாந்தை முந்தி இருப்பது பற்றி உங்கள் கருத்து என்ன?

    பதிலளிநீக்கு
  14. அதிகமான
    மதிப்பெண்களைப் பெறுவதே கல்வி - என்று கருதும் கற்பித்தல் முறையே சமூக ஒழுக்கக் கேட்டிற்கு முதற்காரணம் ...

    அதற்கு அடுத்ததாக இன்னொன்று..

    கை நிறைய
    எப்படியாவது
    சம்பாதிக்க வேண்டும்!..

    பதிலளிநீக்கு
  15. வாந்தி எடுத்த சிறுவனை முறையாகப் பரிசோதித்து விரைவான சிகிச்சை அளிக்கவில்லை என்றும் செய்திகள் வருகின்றன..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // தன் மகள் முதல் இடத்தில் வரணும் என்பதற்காகப் பக்கத்து வீட்டுச் சிறுவனையே கொன்றுவிட்ட தாயைப் பற்றிய செய்தியோடு வரவேண்டியது
      .. //

      நீக்கு
    2. ஓ... இப்போ புரிகிறது. சிபிஎஸ்ஸி முறையில், யோசித்து, மூளையை உபயோகித்து எழுதினால்தான் மதிப்பெண்களைப் பெற முடியும். ஆனால் தமிழகக் கல்வித் திட்டத்தில் அதற்கு வேலையில்லை. உண்மையைச் சொல்லணும்னா, தமிழகத்தில் எம்.ஏ, எம்.எஸ்ஸி போன்றவற்றை தமிழக பல்கலைக்கழகத்தின் மூலமாகப் படிப்பதும்கூட, மூளைக்கு வேலையில்லாமல், மனப்பாடம் பண்ணிக் கக்குவதைத்தான் ஊக்குவிக்கிறது. தமிழக பொறியல்(ஹாஹா) கல்லூரிகளும் அந்த ரகம்தான். அதனால்தான் அதில் படித்த பலரும் (தனிப்பட்ட intelligent personsதவிர, மற்றவர்கள்) அரசு வேலையை எதிர்பார்க்கும் அவலம் நேருகிறது. அரசுவேலை செய்பவர்களின் க்வாலிட்டி மோசமாக இருப்பதற்கு இதுதான் காரணம்

      நீக்கு
    3. இதை யாரும் ஒத்துக்கப் போறதில்லை என்பதோடு தமிழ்நாடு தான் படிப்பில் மட்டுமில்லாமல் அனைத்திலும் முதலிடத்தில் இருப்பதாகப் பீற்றிக் கொள்வார்கள். இன்றைய புள்ளி விபரம் ஒன்றில் பிஹாரும், உத்திரப் பிரதேசமும் படிப்பு விஷயத்தில் தமிழகத்தை முந்தி விட்டதாகச் சொல்கிறது. அதிலும் ஐஏ எஸ், ஐபிஎஸ் தேர்ச்சிகளில் பிஹார் முந்துகிறது என்கின்றனர்.

      நீக்கு
    4. குஜராத்தில் இருந்து அரசு வேலைக்கோ/ராணுவத்துக்கோ இளைஞர்கள் வருவது மிகக் குறைவு. ராஜஸ்தானிலிருந்து கொஞ்சம் கொஞ்சம் வருவார்கள். ராணுவத்தில் நிறையவே இருப்பார்கள்.

      நீக்கு
  16. டாக்டர்கள் அவர்களது அறத்தில் இருந்து தவறி விட்டார்களோ!..

    அவரு வேற சொல்லிட்டும் போய்ட்டார்!..

    நோய் நாடி நோய் முதல் நாடி..

    அப்டின்னு..

    " யோவ்!.. நீ எந்த காலத்துல இருக்கிறே!?.. "

    பதிலளிநீக்கு
  17. இந்த லிஸ்டில் ஐஸ்வர்யா பச்சனைச் சேர்த்து எங்கள் வயதை ஒரு இருபத்தைந்து அதிகமாக்குவதில் கௌதமன் சாருக்கு என்ன மகிழ்ச்சியோ.

    நீங்களே படங்களைப் போட்டுக் கேட்டிருக்கலாம். நாங்கள் செர்ச் பண்ணினால், மனைவியைச் சமாளிப்பது எப்படி? அதுக்கு புதன் கேள்வி கேட்கமுடியாதில்லையா?

    பதிலளிநீக்கு
  18. கோவிலைப் பற்றி நினைக்கும்போது, கோவில் பிரசாதங்கள், எது கிடைக்கும்? (எப்போதும்போல் புளியோதரை கிடைக்காதா?), கிடைப்பதில் எதை வாங்கலாம் என்று நினைத்தால், அது கோவிலையொட்டிய ஆன்மீகச் சிந்தனை (ஹிஹிஹி)

    இவங்க, பக்கத்து ஹோட்டலைப் பத்தி நினைக்கிறாங்களாமே... ஒரு வேளை, எப்படி கூட வர்றவங்களை கன்வின்ஸ் பண்ணி ஹோட்டலில் எல்லோரும் உணவை முடித்துக்கொள்வது? ஒரு வேளைக்கு சமையலறை பக்கம் ஒதுங்காமல் விட்டுப்போன சீரியல்களைப் பார்க்கலாம், சினிமா பார்க்கலாம், பதிவைத் தேத்தலாம் என்று யோசிக்கிறாங்களோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு தகவல் நெல்லைக்கு! ஏற்கெனவே தெரிந்திருக்கலாம். மயிலை மாடவீதியில் இருக்கும்/அல்லது இருந்த சங்கீதா ஓட்டலில் கொத்துமல்லி வடை நன்றாக இருக்கும். நாங்க சென்னையில் இருந்தப்போ மயிலை போனால் ஒரு தரம் சங்கீதா, ஒரு தரம் கீழமாடவீதியில் இருக்கும் கற்பகாம்பாள் மெஸ் எனப் போவோம்.

      நீக்கு
  19. //ஒத்தை விக்கெட்// எவன் பண்ணினாலும் எனக்குப் பிடிப்பதில்லை. நம்ம அச்சீவ்மென்டை மத்தவங்க கொண்டாடணும். அதுவும் தவிர அதீத ரியாக்‌ஷன் பௌலரின் மனவக்கிரத்தை வெளிப்படுத்துது என்று எனக்குத் தோணும். அதிலும் நம்ம பௌலராக இருந்து, சரமாதிரியா பவுண்டரி சிக்சர்கள் கொடுத்துட்டு ஒத்தை விக்கெட்டுக்கு ரியாக்‌ஷன் காட்டினால் பளீர் என்று குடுக்கலாம் எனத் தோன்றும்.

    பதிலளிநீக்கு
  20. //மயில்சாமி பொருளாதார நிபுணர்// -- இங்க கம்யூனிஸ்ட் ஜெயரஞ்சனையும் பொருளாதாரப் புளி என்றுதான் எழுதறாங்க. எல்லாப் பயலுவளும் எல்லாம் தெரிஞ்சவன் மாதிரிப் பேச ஆரம்பிச்சுட்டாங்க. இந்தியா பொருளாதாரம் இலங்கையை விட மோசம், இலங்கை நன்கு வளர்ச்சி பெற்றிருக்குன்னு சொன்ன பொருளாதார நிபுணர் சொல்லி வாய் மூடுவதற்குள் இலங்கை அதல பாதாளத்தில் வீழ்ந்தது. இதுக்கெல்ஙாம் காரணம் கட்சிக் கண்ணோட்டம் சொந்த விருப்பு வெறுப்பு அவங்களோட மூளையை மழுங்கடிப்பதுதான். அகங்காரம் அவங்க கண்ணையும் மறைக்குது

    பதிலளிநீக்கு
  21. //குட்டைப் பாவாடை வியாபார தந்திரம்// இது தவறான எண்ணம். அப்படிப் பார்த்தால் பெண்களுக்கான எல்லா ஒலிம்பிக் போட்டிகளும் வியாபார தந்திரம் என்று கொச்சைப்படுத்திவிடலாமே..

    பதிலளிநீக்கு
  22. அந்த மாணவர்கள் வெங்கோலனின் சீடர்கள்...!

    பதிலளிநீக்கு
  23. //2. சாப்பாடே பிடிக்க மாட்டேன் என்கிறது (இனிப்புகளைத் தவிர). என்ன காரணமாக இருக்கும்?//

    சமந்தா காரணமாக இருக்கும்.

    Jayakumar

    பதிலளிநீக்கு
  24. வணக்கம் சகோதரரே

    இன்றைய கேள்வி பதில்கள் அனைத்தும் எப்போதும் போல் அருமை..அதற்கு வந்த கருத்துரைகளும் படிக்க, அறிந்து கொள்ள என ஸ்வாரஸ்யமாக இருக்கிறது.

    அழகு, அறிவு, பணம், புகழ் அனைத்தும் விதி தந்த கொடுப்பினையில் நம்முடன் வருவது. அது வேண்டியும் வருவதில்லை. அதை வேண்டாவிட்டாலும் விடுவதில்லை.

    கோவிலின் அருகில் சிறப்பு உணவு என்றதும், எனக்கு நெல்லை அல்வா கடை நினைவுக்கு வருகிறது. அந்தக் கடையின் அடையாளமே அதுதான். அத்தனைப் பகிர்வுக்கும் நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //எனக்கு நெல்லை அல்வா கடை நினைவுக்கு வருகிறது. // - அவங்களே இரண்டா பிரிஞ்சு கொஞ்சம் தள்ளி இன்னொரு கடையும் வந்துவிட்டது. நான் அந்தக் கடை ஓனரிடம் பேசிக்கொண்டிருந்தேன். போட்டோவும் எடுத்துக்கொண்டோம் (குடும்பத்துடன் சென்றிருந்தேன்). இந்த கோவிட் சமயத்தில், அவருக்கு கோவிட் வந்த உடன், பயந்துகொண்டு தற்கொலை செய்துகொண்டுவிட்டார் என்று பேப்பரில் படித்து வருந்தினேன்.

      நீக்கு
    2. அது விசாகம் கடைதானே.. நாங்கள் இப்போது போகும் போது மதியமாகையால் பழைய கடை மூடியிருந்தது. மாலை 6 மணிக்கு கடை திறப்பு நேரத்தில் அதற்கு முன்பாகவே அங்கிருந்து கிளம்பி விட்டோம். அவரின் இறப்புச் செய்தி உறவினர்கள் மூலம் கேட்டு நானும் வருந்தினேன். என்ன செய்வது? விதி என்றுமே வலியதுதான்.

      நீக்கு
  25. கிரிக்கெட் வீரர்(?)களின் இம்சை தாங்க முடியவில்லை.

    பதிலளிநீக்கு
  26. 'மாணாக்கர்களை மரத்தில் கட்டிவைத்து அடிப்பது ' ஆசிரியர்கள் எந்தக் காலத்தில் வாழ்கிறார்கள் என எண்ணத்தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
  27. இப்போது ஆதிமந்தி என்று சொன்னால்

    ஆதி மந்தி என்று எழுதி ஆரியன் சதி என்று பொங்கி எழுந்து தொல் மந்தி, துணை மந்தி, பழ மந்தி - பழம் மந்தி கடைசியில் மந்திப் பழம் என்று ஆளாளுக்குக் குழப்பி விடுவார்கள்..

    பதிலளிநீக்கு
  28. கேள்விகளும், பதில்களும் அருமை.
    பின்னூட்டங்களும் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  29. கேள்வி பதில்கள் நன்றாக இருக்கின்றன. ஆசிரியர்களை அடித்த மாணவர்கள் பற்றிய செய்தி கலக்கமடையச் செய்கிறது. இங்கு தெற்கில் இது போல் இருக்காது என்று நினைக்கிறேன். நம் குழந்தைகளைச்சுற்றி நல்ல சூழல் இல்லாதது மிகப்பெரிய குறை.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  30. ///பிளாக்குகளில் எழுதுபவர்கள் ஏன் குறைந்துவிட்டனர்? அதைவிட முகநூல் நல்லா ரீச் ஆகுதா இல்லை மற்றவர்கள் படித்து என்ன பயன், லைக்ஸ் க்ளிக்கினால் போதும் என்று நினைத்துவிட்டார்களா?//


    பிளாக்குகளில் எழுதுபவர்கள் குறைந்துவிட்டனரா என்றால் இல்லை என்று தான் சொல்லவேண்டும் அதே நேரத்தில் அதகரிக்கவும் இல்லை சீராக சென்று கொண்டுதான் இருக்கிறது ஆனால் என்ன முன்பை போல பல தளங்களுக்கு நாம் சென்று பார்ப்பதில்லை நம்மை நாமே சுருக்கி சில தளங்களில் மட்டுமே சென்று வருகிறோம் அவ்வளவுதான்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மதிப்பெண் குறைவாகப் பெற்றதால், ஆசிரியர்களை மாணவர்கள் மரத்தில் கட்டிவைத்து அடித்தனர். இது ஜார்கண்டில். இந்தச் செய்தி பற்றி உங்கள் அபிப்ராயம் என்ன? இது தமிழகத்திலும் வருமா?

      எந்த சப்ஜெக்டில் மார்க் குறைவு, குறைவாகப் பெற்றது யார் ஆசிரியரா மாணவரா போன்ற உப கேள்விகள் தோன்றினாலும் இது கண்டிக்கத் தக்கதே என்பது என் அபிப்பிராயம். தமிழகத்திலிருந்து தான் ஜார்கண்ட் போயிருக்கும் என்பதும் என் அ.

      -மந

      நீக்கு
  31. சாப்பாடே பிடிக்க மாட்டேன் என்கிறது (இனிப்புகளைத் தவிர). என்ன காரணமாக இருக்கும்?

    இனிப்பு தான் காரணமாக இருக்கும்.
    நாம் நன்றாக சமைத்தால் பிறர் சமைத்த சாப்பாடு சில நேரம் சகிக்காது என்பதும் காரணமாக இருக்கலாம்.

    -மந

    பதிலளிநீக்கு
  32. ஒரு கோவிலுக்குச் செல்லும் பொழுது அதற்கு அருகில் இருக்கும் உணவகங்கள், அங்கு கிடைக்கும் சிறப்பான உணவுகளின் நினைவு வருவதை தவிர்க்க முடியவில்லையே?

    அதற்குத் தான் நேரே உணவகத்தில் போய் ஒரு பிடி பிடிக்க வேண்டும் என்கிறது.. பிடிக்கும் பொழுது கோவில் நினைவாகவே இருக்கும் இல்லையா?

    -மந

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!