நாம் ஆக்ரா கோட்டையில், அக்பர்/ஜஹாங்கீரின் அரண்மனைப் பகுதிகளைப் பார்த்துக்கொண்டிருந்தோம். ஆக்ரா கோட்டையின் பகுதிகள் எப்படி அமைந்துள்ளன என்பதைக் கீழே உள்ள படத்தில் காணலாம்.
அங்கிருந்த சோம்நாத் கதவு. கஜினி முகம்மது, சோம்நாத்தைக் கொள்ளையடிக்க வந்தபோது, அங்கிருந்த கதவையும் எடுத்துக்கொண்டு சென்றுவிட்டானாம். (1010ல்). பிரிட்டிஷார்கள், இந்தியர்களின் (இந்துக்களின்) நன் மதிப்பைப் பெற, கஜினியில் (Ghazni என்ற ஊரின் முகம்மது என்பவன். அதனால் அவனுக்கு கஜினி முகம்மது என்ற பெயர்), முகம்மதுவின் கல்லறையிலிருந்த கதவை 1840களில் இந்தியாவிற்குக் கொண்டுவந்து, நாங்கள் கஜினியிலிருந்து சோம்நாத்திலிருந்து களவு போன கதவைக் கொண்டுவந்துவிட்டோம் என்று பொய் பரப்புரை செய்தார்களாம். ஆக்ரா கோட்டையில் அந்தக் கதவை வைத்தார்களாம். தற்போது அந்தக் கோட்டையில் கண்ணாடி அறைக்குள் இந்தக் கதவு இருக்கிறது.
நான் எடுத்த படங்கள் (இதையும் வேலையத்துப் போய் இந்த பிரிட்டிஷார் அங்கிருந்து கொண்டுவந்திருக்கிறார்களே என்று நினைத்துக்கொண்டேன்)
ஷாஜஹான் மகள்கள் மாளிகைப் பகுதி
ஜஹானாரா மாளிகை…. அதன் பக்கத்தில் நீதிக் கயிறு இருந்ததற்கான அறிவிப்பு.
நீதிக்கான கயிறு (தங்கம்), ஷாஜஹானின் மாளிகையை அடுத்து உள்ளதைக் காணலாம் (சல்லடைக் கம்பி வழியாகப் பார்த்தால் ஷாஜஹானின் பால்கனி தெரியும்)
ஜஹாங்கீரைப் பற்றி விமர்சனங்கள் இருந்தாலும் அவர் ஒரு உன்னதமான கலைஞர். ராஜ வம்சத்தைச் சேர்ந்தவர் என்பதைப் பலவிதங்களில் நிரூபித்தவர். 1605ல் (பட்டத்திற்கு வந்த பிறகு), பிற்காலத்தில் கட்டப்பட்ட ஜஹானாரா மாளிகைக்கு அருகில் (ஔரங்கசீப்பின் சகோதரி, ஜஹாங்கீரின் பேத்தி) அவர், ஒரு திறப்பில், “நீதிக் கயிறு” என்ற பெயரில் அங்கிருந்து அரண்மனையின் வெளிப்பகுதியில் (யமுனை ஆறு பக்கம்) 80 அடி நீள தங்கக் கயிறைத் தொங்கவிட்டார். அதில் 60 மணிகள் கோர்க்கப் பட்டிருந்தன. சாமானியனுக்கு அரசாங்கத்தில் நீதி கிடைக்கவில்லை என்றால், அல்லது அதிகாரிகள் நியாயமற்று நடந்துகொண்டால், கோட்டையின் பின்புறமுள்ள இந்தக் கயிற்றை இழுக்கலாம். அந்த மணிச் சப்தம் அரசருக்குக் கேட்டு, அவரின் கவனத்திற்கு வந்து உடனே தீர்ப்பு வழங்குவார். பொதுமக்கள் அனைவருக்கும் இந்த உரிமை உண்டு, ஏழை, பணக்காரன், இந்த மதம், அந்த மதம் என்று எந்த வேறுபாடும் கிடையாது என்று ஆணையிட்டிருந்தார். (பிற்பாடு ஔரங்கசீப் காலத்தில், இது என்ன பைத்தியக்காரத்தனம் என்று சொல்லி அந்தத் தங்கக் கயிற்றை எடுத்துவிட்டார்)
ஜஹாங்கீர் ஓவியங்கள், பறவைகள், விலங்குகள் போன்றவற்றில் ஈடுபாடு நிறைந்தவர் என்பதும், அதற்காக தன் கூடவே ஒரு ஆஸ்தான ஓவியரை வைத்துக்கொண்டு, ஒவ்வொரு பறவையையும் வரையச் சொல்லி, அதன் தனித்தன்மையைக் குறிப்புகளாக எழுதியிருக்கிறார் என்பதும் ஆச்சர்யம்தான். இன்னொரு பிரமிக்கவைக்கும் செயல், தான் செய்த தவறுகளை அப்படியே குறிப்பிட்டு, அது அரசியலுக்கு அவசியமான செயல் என்பதால் செய்ய நேரிட்டது என்பதையும் எழுதியிருக்கிறார்.
சுவரின் அலங்காரங்கள். அந்தக் காலத்தில் விலை உயர்ந்த ரத்தினங்கள் பதிக்கப்பட்டிருக்கலாம்.
தங்க ரேக்குகளாலும் ரத்திங்னகளாலும் அலங்கரிக்கப்பட்டிருக்கும்.
இந்த மாதிரி மாடங்களில் என்ன இருந்திருக்கும். அழகிய ஓவியங்களா இல்லை குளிர்/வெயில் முதலியவற்றிற்காக ஏதேனும் செய்திருப்பார்களா என்பது தெரியவைல்லை.
ஷாஜஹானின் அரண்மனைக்கு (அதாவது அவரது வீட்டிற்கு) அருகில் அவரது இரண்டு மகள்களுக்கான அரண்மனை இருக்கிறது. ஒன்று இளைய மகள் ரோஷனாரா. இரண்டாவது மூத்த மகள் ஜஹானாரா. (இவர்கள் ஔரங்கசீப்பின் சகோதரிகள்). மேலே உள்ளது ரோஷனாராவின் வீடு (அப்போது தங்கக் கூரை வேய்ந்தது)
மூத்த மகள் ஜஹானாராவின் வீடு. இரண்டு அறைகள் மற்றும் இடையில் ஒரு ஹால். பெரும்பாலும் முகலாய அரண்மனைகள் இப்படித்தான் இருக்கின்றன. கோல்கொண்டா கோட்டையில் வழிகாட்டி, இப்போது எல்லோரும் பார்க்கும்படியாக எல்லாமே openஆக இருந்தாலும், அப்போதைய காலகட்ட த்தில் ஒவ்வொன்றிர்க்கும் திரைச்சீலை இருந்தது (தடிமனான). அத்தகைய திரைச்சீலைகளை (கூடாரத்திற்கான துணி) வைத்துத்தான் ஒவ்வொரு அறையையும் பிரித்திருந்தார்கள் என்று சொன்னார். அவருடைய வீட்டிற்கு அருகில் (நமக்கு இடது புறத்தில்) தெரியும் கூரை உடைய பகுதிதான் ஷாஜஹானின் அரண்மனைக்குச் செல்லும் வழி.
அக்பர் கோட்டையிலும், அரண்மனைப் பகுதி வீரர்கள் (பாதுகாப்புப் பணியில் இருந்தவர்கள்) எல்லோருமே மூன்றாம் பாலினத்தவர்கள் (அல்லது அப்படி ஆக்கப்பட்டவர்கள்) என்று வழிகாட்டி சொன்னார். அதன் காரணம், சொன்னதை அப்படியே செய்யும், விசுவாசமான அவர்களது குணம், இரண்டாவது அங்கிருந்த இளவரசிகளுடன் உறவு வைத்துக்கொள்ளும் வாய்ப்பே கிடையாது (அதாவது வேறு ரத்தத்தைச் சேர்ந்த வாரிசு உருவாகாது)
கஸ் மஹல் - இந்தப் படத்தில் இடது மேற்புறம் இருப்பது ஷாஜஹானின் அரண்மனை ஆரம்பம். அதற்கு அடுத்தது ஜஹானாராவின் மாளிகை. நடுவில் மண்டபம் அல்லது இடைவெளி. அதற்கு அடுத்தது இளையமகள் ரோஷனாராவின் மாளிகை. அடுத்த அரசனிடம் அதிகாரம் வந்துவிட்டால், முந்தைய அரசனுக்கு மரியாதை குறையும். அதிலும் ஷாஜஹான் வீட்டுச் சிறையில் இருந்ததால், அவர் சிறிது அவமரியாதையாக நட த்தப்பட்டார். அவரது கடைசி காலத்தில் அவருக்கு உதவியாக இருந்தவர் மூத்த மகள் ஜஹானாரா. அதனால், ஷாஜஹான் அவருடைய மகள் ஜஹானாராவைத் திருமணம் செய்துகொண்டார் என்று அரசல் புரசலாகப் பேசப்பட்டது. இருந்தாலும் அந்தக் காலத்தைய வரலாற்று அறிஞர்கள், அப்படி பரவலாகப் பேசப்பட்டாலும் அதில் சிறிதும் உண்மையில்லை என்றே எழுதியிருக்கிறார்கள்.
மேடைபோலக் காணப்படும் பகுதியில் உள்ள நீரூற்று. அதன் பின்னணியில் பல்வேறு அறைகள், முப்புறமும். இங்குதான் ஷாஜஹானின் ஆசை நாயகிகள் தங்கினார்கள் என்று சொன்னார் வழிகாட்டி.
ஒவ்வொரு மாடத்திலும் அழகிய அலங்காரங்களும், தங்க ரேக்குகளும் மணிகளும் இருப்பதாகக் கற்பனை செய்யுங்கள். எப்படி உயர்வாக இருந்திருக்கும்? பாரதம் முழுமைக்கும் சக்கரவர்த்தியின் மாளிகை ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டதாக இருந்திருக்காதா?
வெறும் மெல்லிய கோடுகள், தீற்றல்கள் மாத்திரமே எஞ்சியிருக்கிறது. விதானங்கள், மாடங்கள், சுவற்றின் அலங்காரங்கள் போன்றவற்றைக் கண்முன் நிறுத்த படங்களைக் கோர்த்திருக்கிறேன். இவற்றில் இருந்த பொன், விலையுயர்ந்த ரத்தினங்கள் மற்றும் பொருட்கள் பிரிட்டிஷாரினால் எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கும்.
ஷாஜஹான் காலத்தில் கட்டப்பட்ட வெள்ளைப் பளிங்கு மாளிகைப் பகுதியைப் பார்க்க ஆரம்பித்த நாம், ஷாஜஹானின் அரண்மனையைப் பார்க்காமலா விடப்போகிறோம்? அதிசயத்தால் அரச பதவிக்கு வந்து, தன் வீரத்தால் தக்கவைத்துக்கொண்ட ஷாஜஹானையும் விதி சும்மா விட்டுவைக்குமா? என்ன ஆனது என்பதை வரும் வாரங்களில் பார்ப்போம்.
(தொடரும்)
கட்டுரையில் உள்ள பல விவரங்களும் பாட புத்தகங்களில் இல்லாதவை. விளக்கமான கட்டுரை, அதற்கேற்ற படங்கள். ஒரு சரித்திர பாடம் படித்த திருப்தி.
பதிலளிநீக்குJayakumar
வாங்க ஜெயகுமார் சார். இன்று சென்னையில் கார் எடுத்துக்கொண்டு ஒரு நாள் நான்கு (அதற்கு மேலும் வாய்ப்பு உள்ளது) கோவில்கள் தரிசனத்துக்கு காலை ஐந்து மணிக்கு தி நகரிலிருந்து புறப்பட்டு இப்போது காஞ்சி வரதராஜப் பெருமாள் கோவிலுக்கு வந்திருக்கிறேன். இன்னும் நடை திறக்கவில்லை.
நீக்குசுருக்கமாகவே எழுதியிருக்கிறேன். ஷாஜஹானின் அந்தப்புறத்தில் நூற்றுக்கணக்கான மகளிர்னு எழுதினா மதச்சார்பின்மை பாதிக்கப்பட்டுவிடுமோ, இஸ்லாமியர்கள் கோபிப்பார்களோ என நினைத்து வரலாற்றையே மறைத்துவிட்டனர்
கற்பக கணபதி
பதிலளிநீக்குகனிவுடன் காக்க..
முத்துக்குமரன்
முன்னின்று காக்க..
தையல் நாயகி
தயவுடன் காக்க..
வைத்திய நாதன்
வந்தெதிர் காக்க..
இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
பிரார்த்திப்போம்..
எல்லாருக்கும் இறைவன்
நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..
நலம் வாழ்க..
வாழிய நலம் துரை செல்வராஜு சார்
நீக்குதண்செய்யும் வாழ்க.. தஞ்சையும் வாழ்க..
பதிலளிநீக்குதளிர் விளைவாகித்
தமிழ் நிலம்
வாழ்க..
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் துரை செல்வராஜு சார்
நீக்கு
நீக்குஅன்பின் நெல்லை அவர்களுக்கு
வணக்கமும் நன்றியும்
ஜஹானாரா
பதிலளிநீக்குரோஷனாரா -
70 களில் பள்ளி நூலகத்தில் படித்திருக்கின்றேன்..
படங்கள் அழகு..
மிக்க நன்றி
நீக்குசமீபத்திய பதிவுகளில் சிறப்பான பதிவு...
பதிலளிநீக்குநன்றி துரை செல்வராஜு சார்
நீக்குநாங்கள் கஜினியில் இருந்து சோம்நாத்தில் களவு போன கதவைக் கொண்டு வந்துவிட்டோம் என்று பொய்யுரை செய்தார்களாம்...
பதிலளிநீக்குஇப்டியும் பொழப்பு நடத்தியிருக்கானுவோ...
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் துரை செல்வராஜூ அண்ணா..
நீக்குமகிழ்ச்சி...
நீக்குதங்களது அன்பினுக்கு நெஞ்சார்ந்த நன்றி ஸ்ரீராம்..
அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவாழ்க வளமுடன் கோமதி அரசு மேடம்
நீக்குசிறப்பு
பதிலளிநீக்குநன்றி கரந்தை ஜெயக்குமார் சார்
நீக்குபதிவு மிக அருமை. சோம்நாத் கதவு வரலாறு மற்றும் ஜஹாங்கீரைப் பற்றிய வரலாறும் , அரௌமை.
பதிலளிநீக்குபடங்கள் எல்லாம் மிக நன்றாக எடுத்து இருக்கிறீர்கள்.
//ஒவ்வொரு மாடத்திலும் அழகிய அலங்காரங்களும், தங்க ரேக்குகளும் மணிகளும் இருப்பதாகக் கற்பனை செய்யுங்கள். எப்படி உயர்வாக இருந்திருக்கும்? பாரதம் முழுமைக்கும் சக்கரவர்த்தியின் மாளிகை ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டதாக இருந்திருக்காதா?//
ஆமாம், சக்கரவர்த்தியின் மாளிகை இரத்தினகளால் அலங்கரிக்கப்பட்டு இருக்கும்.
ரோஷனாராவின் வீடு தங்க கூரை வேய்ந்து இருக்கும் போது சக்கரவர்த்தி மாளிகை எப்படி இருந்து இருக்கும்!
கிணறு, மேல் விதானம் , மற்றும் மேடைபோலக் காணப்படும் பகுதியில் உள்ள நீரூற்று. எல்லாம் அருமை.
ஜஹாங்கீர் பறவைகள், விலங்குகள் மேல் பிரியம் உள்ளவர் என்பது மகிழ்ச்சியான விஷயம். முன்பு பாட புத்தகத்தில் ஜஹாங்கீர் தோள் மேல் பறவை அமர்ந்து இருப்பது போல ஓவியம் பார்த்த நினைவு.
//ஜஹானாரா மாளிகை…. அதன் பக்கத்தில் நீதிக் கயிறு இருந்ததற்கான அறிவிப்பு. //
மனுநீதி சோழன் போல அனைவருக்கும் நீதி கிடைக்க கயிறு கட்டியது சிறப்பான செயல்.
ஊரில் ஆல்பத்தில் இருக்கும் படங்களை பார்க்க ஆவல் வந்து விட்டது.
இந்த இடத்தின் படங்களை எல்லாம் நாங்கள் எடுத்து இருப்பது எப்படி இருக்கிறது பார்க்க ஆவல்.
அப்போது எல்லாம், மகன், கணவர், மகள் தான் போட்டோ எடுப்பார்கள்.
அடுத்த வாரம் தொடர்கிறேன்.
வாங்க கோமதி அரசு மேடம்.
நீக்குசிறுபிள்ளைத் தனமாகவும் அப்பாவின்மீது எப்போதும் கோபம் கொண்டவராகவும் ஆனால் அரசியல்ரீதியான கொலைகளைச் செய்யத் தயங்காதவருமான சலீம், ஜஹாங்கிர் என்ற பெயரோடு அரசாட்சி செய்தபோது கலைகளின்மீது அவருக்கு இருந்த காதல் ஆச்சரியம் தான்
பல விவரங்கள் சொல்லி இருக்கிறீர்கள். படங்களும் பிரமாதம். அங்கு சென்று பார்க்கும் ஏக்கத்தை ஏற்படுத்துகிறது.
பதிலளிநீக்குமிக்க நன்றி ஸ்ரீராம்
நீக்குதங்கக்கயிறா? சாதா தாம்புக் கயிறு போதாதா? அதை கண்ணிகண்ணியாக திருடாமலா வைத்திருந்தார்கள்!!!
பதிலளிநீக்குஅப்போது என்ன இப்போதுள்ள நீதித்துறையா? குற்றவாளிகள் தண்டனைக்குள்ளாகிவிடக் கூடாது என கவலைப்பட? ஒரு முறை அக்பர் (என நினைவு) உணவில் விஷம் கலந்திருக்க (எதேச்சயாக பூனை இறந்ததைக் கண்டு) சமையல்காரரிலிருந்து படிப்படியாக பரிமாறுபவர் வரை அனைவரும் அரச ஆணையில் உடனே கொல்லப்பட்டனர். அது அரச நீதி. கிட்டத்தட்ட இப்போது யோகி செய்வதைப்போன்று
நீக்குஇதுபற்றி விரைவில் எழுதுகிறேன்
நீக்குஅவுரங்கசீப் சகோதரி பற்றி வேறு சில விவரங்கள் படித்த நினைவு. அவரை அவுரங்கசீப் கொள்ளாமல் விட்டிருந்ததற்கு ஸ்பெஷல் காரணம், அவர் கவிஞர், ராஜதந்திரி (கிட்டத்தட்ட குந்தவை போல?) என்றெல்லாம் ஏதோ படித்த நினைவு.
பதிலளிநீக்குஅரச உரிமைக்கு பெண்கள் எப்போதும் போட்டியில்லை. தவிர ஔரங்கசீப் கடைசி காலத்தில் அலரது அறைக்கு சகோதரி மாத்திரமே அனுமதிக்கப்பட்டார்
நீக்குஅரச உரிமைக்கு பெண்கள் எப்போதும் போட்டியில்லை. தவிர ஔரங்கசீப் கடைசி காலத்தில் அலரது அறைக்கு சகோதரி மாத்திரமே அனுமதிக்கப்பட்டார்
நீக்குஇந்தப் பதிவுகளை தயார் செய்ய நிறைய உழைத்திருப்பீர்கள். பாராட்டுகள்.
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீராம்
நீக்குசகோ துரைசெல்வராஜூ அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள், வாழ்க வளமுடன், வாழ்க நலமுடன்.
பதிலளிநீக்குஅன்பின் வணக்கம்..
நீக்குநெஞ்சார்ந்த நன்றி...
மகிழ்ச்சி.. நன்றி..
'குங்குமப் பொட்டின் மங்கலம்'
பதிலளிநீக்குதிரைப்படம் : குடியிருந்த கோயில்
பாடலாசிரியர் : ரோஷனாரா பேகம்
பாடல் அருமையானது. பாடலாசிரியர் பெயர் ஆச்சர்யம்
நீக்கு
பதிலளிநீக்குநேற்று ஆனி ஹஸ்தம்..
ஜன்ம நட்சத்திரம்..
தஞ்சையம்பதியில் பதிவு நேற்றும் இன்றும் பிறந்த நட்சத்திரத்தை முன்னிட்டுத் தான்..
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
நீக்குவாழ்க நலமுடன்.
அன்பின் வணக்கம்..
நீக்குநெஞ்சார்ந்த நன்றி...
மகிழ்ச்சி.. நன்றி..
பல தகவல்கள் எனக்கு புதிதாக இருக்கிறது தமிழரே... சுவாரஸ்யமான பகுதி
பதிலளிநீக்குபடங்கள் வழக்கம் போல அருமை.
வாங்க கில்லர்ஜி. முகலாய மன்னர்கள் வரலாறு மிக சுவாரசியமானது.
நீக்குஅடேங்கப்பா....இரத்தினங்களும், தங்கமும் பதிக்கப்பட்ட மாளிகை மனக்கண்ணில் சிமிட்டுகிறது.
பதிலளிநீக்குபடங்கள் வரலாறுகள் என நல்ல பகிர்வு.
வாங்க மாதேவி அவர்கள். நன்றி
நீக்குசுமார் இரண்டு ஆண்டுகளாக என்னுடைய சோழ நாட்டில் பௌத்தம் (முதலில் தமிழில், தொடர்ந்து ஆங்கிலத்தில்) நூல் பணி காரணமாக வலைப்பூ பக்கம் வர இயலா நிலையில் இருந்தேன். தமிழ்ப்பதிப்பு வெளிவந்துவிட்டது. ஆங்கிலம் இம்மாத இறுதிக்குள் வரவுள்ளது. இனி வலைப்பூவில் நண்பர்களின் பதிவுகளைப் பார்ப்பேன் என எண்ணுகிறேன்....
பதிலளிநீக்குவாங்க ஜம்புலிங்கம் சார். நல்வரவு.
நீக்குஅருமையான புத்தகங்கள் எழுதுபவர்கள் வரலாறு சாமானியர்களுக்குத் தெரிந்துவிடக் கூடாது என்று நினைப்பதுபோல் புத்தக விலையை ஆயிரங்களில் வைப்பது ஏன்? அரசாங்கத்தின் பங்களிப்பைப் பெற்று மலிவு விலைப் பதிப்பு கொண்டுவந்தால் என்ன?
நீக்குஆய்வு நூல்கள் என்பவை துறை சார்ந்தவர்களுக்குப் பயன்படும் வகையிலும், வரலாற்றுக்கான முக்கிய தரவு என்ற அடிப்படையிலும், களப்பணி அடிப்படையிலும் உருவாக்கப்படுகின்றன. மலிவு விலைப்பதிப்பு என்பதும், அரசாங்கத்தின் பங்களிப்பு என்பதும் சற்றே சிரமம். (வாய்ப்பு கிடைக்கும்பொழுது விரிவாக பேசுவோம்). 30 ஆண்டு கால உழைப்பு. வரலாற்றுக்கு என்னால் ஆன பங்களிப்பு.
நீக்குவேற்று உலகிற்கு வந்த உணர்வு. சிறப்பான பதிவு.
பதிலளிநீக்குமிக்க நன்றி ஜம்புலிங்கம் சார்
நீக்குமிக்க நன்றி ஜம்புலிங்கம் சார்
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குகாலையில் புறப்பட்டு இப்போதுதான் ஸ்ரீ ரங்க பட்டிணம் ஸ்ரீ ரங்கநாதனை சுவாமியை தரிசனம் (குடும்பத்தோடு ) செய்து விட்டு வந்தோம். உங்கள் பதிவை இனிதான் படிக்க வேண்டும். படித்து விட்டு வருகிறேன் நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா ஹரிஹரன் மேடம். நாங்களும் திருவிடவெந்தை விஸ்வரூப தரிசனம், தலசயனப் பெருமாள் கோவில், மாமல்லபுரத்தில் காணவேண்டிய இடங்கள், காஞ்சீபுரத்தில் எட்டு திவ்யதேச தரிசனங்களுக்குப் பிறகு இப்போதுதான் வந்துசேர்ந்தோம் தி நகரில் தங்குமிடத்துக்கு
நீக்குஇவர் திருப்பதி வெங்கடாசலபதியை தரிசனம் செய்திருந்தால் கொஞ்சம் சுறுசுறுப்பாக இருந்திருப்பார். ஸ்ரீரங்கபட்டினத்தில் ரங்கநாதரை தரிசனம் செய்த கையோடு அவரைப்போலவே துயிலில் ஆழ்ந்துவிட்டாரா?
நீக்குவணக்கம் துரை செல்வராஜ் சகோதரரே.
பதிலளிநீக்குதங்களுக்கு இனிய பிறந்தநாள் என இப்போதுதான் கோவிலிலிருந்து வந்தவ டன் அறிந்தேன். மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகள். வாழ்க வளமுடன்.
நல்ல ஆயுள் ஆரோக்கியத்தோடு தங்களது வாழ்க்கை குடும்பத்துடன் சிறப்பாக இருக்க வேண்டுமென அந்த ஸ்ரீ ரங்க நாதனை மனதாற பிரார்த்தித்துக் கொள்கிறேன். 🙏. நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
பதிவு நன்று. பல தகவல்கள் சொல்லி இருக்கிறீர்கள்... பாராட்டுகள்.
பதிலளிநீக்குவாங்க தில்லி வெங்கட். நன்றி
நீக்குநான் எடுத்த படங்கள் (இதையும் வேலையத்துப் போய் இந்த பிரிட்டிஷார் அங்கிருந்து கொண்டுவந்திருக்கிறார்களே என்று நினைத்துக்கொண்டேன்)//
பதிலளிநீக்குடக்குனு சிரித்துவிட்டேன் நெல்லை....எதுக்குன்னு சொல்லுங்க ஹிஹிஹிஹி....ஆ! அப்ப நெல்லை அண்ணன் அம்புட்டு வயசானவரான்னு!!!!!
கீதா
வாங்க தில்லையகத்து கீதா ரங்கன். நிறைய ஊர்களை தொடர்ந்து சுற்றிக்கொண்டிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.
நீக்குஎல்லோருமே மூன்றாம் பாலினத்தவர்கள் (அல்லது அப்படி ஆக்கப்பட்டவர்கள்)//
பதிலளிநீக்குஅதெப்படி அப்படி ஆக்க முடியும்? அது இயற்கை அல்லவா...
ஓ! யோசித்ததில் புரிகிறது அடுத்த வரி வாசித்ததும்
ஜஹாங்கீர் குறித்தும் கொஞ்சம் இப்படி வாசித்த நினைவு இருக்கிறது. அந்த நல்ல குணங்கள் குறித்து.
அந்த மாடங்களில் ஓவியங்களும் இருந்திருக்கும் விளக்குகளும் இருந்திருக்கலாம் நெல்லை. அப்பலாம் மின்சாரம் ஏது?
கஸ் மஹல், அந்த மேடை போன்ற பகுதியை நீங்க எடுத்த விதம் செம.
வெள்ளை மாளிகையின் விதானங்கள், அமைப்பு, மாடங்கள், வளைவுகள் படங்கள் எல்லாம் செம.
கீதா
மாடங்களில் விளக்குகள் இருந்திருக்கும். அது சரி... இரவு ஆகிவிட்டால் வேலைக்காரர்கள், வேலையற்றுப்போய் ஒவ்வொரு விளக்காக அமர்த்திவிட்டு வருவார்களா? அப்போ ஒவ்வொருவரும் தூங்கும் அறைகளில் அவர்களே விளக்கை அணைக்க வேண்டுமா? என்னன்னவோ கேள்விகள் எழுகின்றன.
நீக்குஅந்த அரண்மனையே ரொம்ப அழகாக இருக்கிறது. பாருங்க அந்த சில ஏக்கர் இடத்திலிருந்து கிட்டத்தட்ட இந்தியா முழுமையையும் அவங்க ஆண்டிருக்காங்க. எத்தனை எத்தர்கள், எதிரிகள், ஏமாற்றுக்காரர்கள் சதிகாரர்களைத் தாண்டி அவங்க ஆட்சி செய்திருக்கணும்?