திங்கள், 15 ஜூலை, 2024

"திங்க"க்கிழமை  :  பூண்டு குழம்பு - துரை செல்வராஜூ ரெஸிப்பி 

 பாரம்பர்ய பூண்டுக் குழம்பு..

செய்முறை :

இந்தக் குழம்பு வைப்பதற்கு செக்கில் ஆட்டி எடுக்கப்பட்ட நல்லெண்ணெய் தான் சிறந்தது..

தேவையான பொருட்கள்:

தேங்காய் ஒருமூடி
பூண்டு  20 பற்கள் 
சின்ன வெங்காயம்  150 gr
மிளகு  1 Tsp 
சீரகம்   1⁄2 Tsp 
புளி   சிறிதளவு
வீட்டில் தயாரித்த
சாம்பார் பொடி  1 T sp
 மஞ்சள் தூள் 1 tsp
வெந்தயம்  1⁄2 tsp
உளுத்தம் பருப்பு 1⁄2 tsp
கடுகு  1⁄2 tsp
கல்உப்பு தேவையான அளவு
கறிவேப்பிலை ஒரு இணுக்கு
நல்லெண்ணெய்  100 ml 

முதலில் பூண்டு வெங்காயம் இவற்றை உரித்து அலசிக் கொள்ளவும்.. நறுக்க வேண்டாம்..

தேங்காய் மூடியைத் துருவி - துருவலை சரிபாதியாகப் பிரித்துக் கொள்ளவும்..

1) ஒரு பாதியில் திட்டமாக  விட்டு அரைத்துப் பால் பிழிந்து கொள்ளவும்
( தண்ணீர் விடாமல் அரைத்துக் கொள்ளவும்..)

2) திட்டமான நீரில் புளியை ஊற வைத்துப் பிழிந்து - 
அதில் சாம்பார் பொடி மற்றும் மஞ்சள் தூள் கரைத்து  தனியாக வைத்துக் கொள்ளவும் . 

வாணலி ஒன்றை மிதமான சூட்டில் வைத்து, அதில் சிறிது நல்லெண்ணெய் விட்டு காய்ந்ததும்,  மிளகு, சீரகம் மறுபாதி தேங்காய்த் துருவல்  ஆகியவற்றை தனித்தனியாக வறுத்து -  ஆறிய பிறகு  ஒன்றாகச் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும். 

அதே வாணலியில்   நல்லெண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு, வெந்தயம் உளுத்தம் பருப்பு  கறிவேப்பிலை தாளித்து,   பூண்டு வெங்காயம் சேர்த்து சிவக்கும்படி வதக்க வேண்டும். 

நன்கு வதங்கிய நிலையில் அதனுடன் 1) தேங்காய்ப் பால் ஊற்றவும்.. தொடர்ந்து,  2) புளிச்சாறு ஊற்றி, தேங்காய் விழுது, உப்பு போட்டு நன்கு கொதித்ததும் மேலும் சிறிது நல்லெண்ணெய் விட்டு - நன்றாகக் கொதிக்க வைத்து இறக்கினால்,  பூண்டு குழம்பு..


                       (படம் : இணையத்திலிருந்து .. )

கையளவு சுண்டை வற்றலைப் பொரித்துக் குழம்பில் போடுவதும் பழக்கம்.

நீர்க்க இல்லாமல் கொஞ்சம் இறுக்கமாக வைத்துக் கொண்டால் சுவையோ சுவை!..

ஃஃஃ

28 கருத்துகள்:

  1. அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை
    பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.,

    தமிழ் வாழ்க..

    பதிலளிநீக்கு
  2. கற்பக கணபதி
    கனிவுடன் காக்க..
    முத்துக்குமரன்
    முன்னின்று காக்க..
    தையல் நாயகி
    தயவுடன் காக்க..
    வைத்திய நாதன்
    வந்தெதிர் காக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..
    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  3. தண்செய்யும் வாழ்க.. தஞ்சையும் வாழ்க..
    தளிர் விளைவாகித்
    தமிழ் நிலம்
    வாழ்க..

    பதிலளிநீக்கு
  4. இன்று சமையல்களம் காண்பதற்கு வருகை தருகின்ற அனைவருக்கும் நல்வரவு..

    இக்குறிப்பினைப்பதிப்பித்த ஸ்ரீராம் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி..

    பதிலளிநீக்கு
  5. பூண்டு குழம்பிற்குத் தேங்காய் சேர்த்துச் செய்ததில்லை. செய்து பார்க்கிறேன். நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெகு நாட்களுக்குப் பிறகு தங்கள் வருகை..

      நல்வரவு..

      தேங்காய்க்கு என்றும் பிரச்னையில்லாத தஞ்சை மாவட்டத்தில் இதுவும் ஒரு பக்குவம்.. செய்முறை..

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
    2. தலைப்பே *திங்க* கிழமை பூண்டு குழம்பு
      திங்காமல் விடுவோமா
      கே. சக்ரபாணி

      நீக்கு
    3. எனது பதிவிற்கு முதல் முறையாக வந்திருக்கின்ற தங்களுக்கு நல்வரவு..

      மகிழ்ச்சி..
      நெஞ்சார்ந்த நன்றி ...

      நீக்கு
  6. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

    பூண்டு குழம்பு - ஆஹா... குறிப்புகள் நன்று.

    பதிலளிநீக்கு
  7. ஊர் எல்லாம் மணக்கும் பூண்டுக் குழம்பு சுவையோ சுவை.

    பதிலளிநீக்கு
  8. செய்முறை விளக்கம் அருமை ஜி

    பதிலளிநீக்கு
  9. துரை அண்ணா நம்ம வீட்டில் பூண்டுக் குழம்பு ஒவ்வொரு வகையிலும் செய்வதுண்டு.

    உங்க பக்குவமும் சூப்பர் துரை அண்ணா. மணக்குது.

    தேங்காய்ப்பால் சேர்த்துச் செய்யறப்ப நான் அதைக் கடைசியில் விடுவதுண்டு. அதாவது குழம்பு நன்றாகக் கொதித்து வந்ததும் கடைசியில் தேங்காய்ப்பால் சேர்த்து அதிகம் கொதிக்காமல் இறக்கிவிடுவது. ஏனென்றால் சேர்த்துக் கொதிக்கவிட்டால் தேங்காய் எண்ணை வாசம் வந்துவிடும் இல்லையா? இப்படிச் செய்யும் பூண்டுக் குழம்பிற்கு நான் தேங்காய் எண்ணை சேர்த்துச் செய்வேன் நல்லெண்ணையும் தேங்காய் எண்ணையும் கலந்து வாசம் வித்தியாசமாகிவிடுமே என்று.

    நல்லெண்ணையில் பூண்டுக் குழம்பு செய்யும் போது அப்ப தேங்காய் அரைத்துவிடாமல் தேங்காய்ப்பால் சேர்க்காமல்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இவங்க நிஜமாவே செஞ்சு பாத்திருக்காங்களா? அடுத்த தடவை அவங்க வீட்டுக்குப் போகும்போது செக் பண்ணிடவேண்டியதுதான்

      நீக்கு
    2. உண்மை தான்..
      பூண்டும் நல்லெண்ணெயும் மருத்துவ குணங்கள் உடையவை..

      இதயக் கொழுப்பு குறைவதற்கு பூண்டு பால் வைத்தியம் சிறந்தது..

      மகிழ்ச்சி..
      நன்றி சகோ..

      நீக்கு
  10. எங்க வீட்டில் செய்ததே இல்லை. நானும் எங்கேயுமே சாப்பிட்டதில்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ன இப்படி சொல்லி விட்டீர்கள்?...

      நீக்கு
    2. ஹாஹாஹா. நிஜமாவே சாப்பிட்டதில்லை. பூண்டு ரசம் ஹோட்டல்களில், ஹாஸ்டல்களில் சாப்பிட்டிருக்கேன்.

      இன்னொன்று..எனக்கு புதிய உணவுவகைகளை (இனிப்பு தவிர) முயற்சிக்கும் ஆர்வமே கிடையாது. எங்கள் வீட்டில் நான் மட்டும் தனிரகம்

      நீக்கு
    3. /// எனக்கு புதிய உணவுவகைகளை (இனிப்பு தவிர) முயற்சிக்கும் ஆர்வமே கிடையாது.///

      இதைப் பற்றி த்னிப் பதிவு எழுதலாம்...

      முயற்சிக்கின்றேன்..

      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  11. பூண்டு குழம்பு செய்முறையும், படமும் அருமை.

    பதிலளிநீக்கு
  12. என் பின்னூட்டம் என்ன ஆச்சு?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதோ... ஸ்பாம்ல ஒளிஞ்சிக்கிட்டிருந்ததை காதைப் பிடிச்சு திருகி இழுத்துக் கொண்டு வந்து விட்டேன் அக்கா...!!

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!