திங்கள், 29 ஜூலை, 2024

"திங்க"க்கிழமை   : சக்கவரட்டி - பானுமதி வெங்கடேஸ்வரன் ரெஸிப்பி 

 

சக்க வரட்டி


தேவையான பொருள்கள்:

பலாச்சுளை : 40 - 50
வெல்லம்  - 1/4 கிலோ
நெய் - 3 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

இதை செய்ய நன்கு கனிந்த பழங்கள் மற்றும் நார் உள்ள சுளைகளை பயன்படுத்திக் கொள்வது நலம் 

பலாச் சுளைகளிலிருந்து கொட்டைகளை எடுத்து விட்டு நன்றாக கழுவி, 1/4 டம்ளர் தண்ணீர் விட்டு ஒரு குக்கரில் வைத்து மூன்று விசில் வரும் வரை வைத்திருந்து, நிறுத்தி விடவும்.






பத்து நிமிடங்கள் கழித்து குக்கரை திறந்து, வெந்த பலா சுளைகளை மத்தினால் நன்றாக மசிக்கவும். அல்லது ஆறியதும் மிக்ஸியில் அரைத்துக் கொள்ளலாம். நைஸாக அரைக்கக் கூடாது. கரகரப்பாக அரைக்க வேண்டும்.



மசிந்த பலா சுளைகளோடு நறுக்கி வைத்திருக்கும் *வெல்லத்தை சேர்த்து, அடுப்பை மீடியம் ஃப்ளேமில் எரியவிட்டு வெல்ல வாசனை போகும் வரை கை விடாமல் கிளறவும். பிறகு நெய் சேர்த்து கிளறி அடுப்பை நிறுத்தி விடலாம். இதற்கு வேறு வாசனை சாமான்கள் எதுவும் தேவை இல்லை.


சுவையான இந்த சக்கை விரட்டியை ஒரு டப்பாவில் எடுத்து குளிர்சாதன பெட்டியில் வைத்துக் கொண்டால், தேவைப்படும் பொழுது பாயசம் அடைப்பிரதமன் போன்றவை செய்யலாம். நேரம் கிடைக்கும்பொழுது அவைகளை பகிர்கிறேன்.

பலாச்சுளை விழுது எவ்வளவு இருக்கிறதோ அதே அளவு வெல்லத்தூள்(1:1) சேர்க்க வேண்டும். 


30 கருத்துகள்:

  1. ஹலோ...   யாராவது இருக்கீங்களா, இல்லை இல்லையா? 

    ஹலோ...   என்ன, யாரையுமே காணோம்? 

    கடைவிரித்தோம்...கொள்வாரில்லையே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒருவேளை ' வரட்டி' என்று பார்த்து பயந்துபோய் விட்டார்களோ!

      நீக்கு
  2. ஹாஹாஹாஹா ஸ்ரீராம் காலையிலேயே சந்தைல கூவுவது போல் ஆகிடுச்சே!

    எனக்கு இப்பத்தான் எங்க விட்டுக்குள்ளார பூந்து உங்க வீட்டு அடுக்களைக்குள்ள வர முடிந்தது!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஹாஹாஹாஹா ஸ்ரீராம் காலையிலேயே சந்தைல கூவுவது போல் ஆகிடுச்சே!// என்னுடைய படைபாயிற்றே, அதனால் இருக்கலாம்.

      நீக்கு
  3. பானுக்கா மிகவும் பிடித்த பதார்த்தம் ஆனா பாருங்க சாப்பிட முடியாது.

    ரொம்ப நல்லா வந்திருக்கு பானுக்கா! சூப்பர்!

    எங்கள் வீட்டில் இது regular சக்கை வரத் தொடங்கிவிட்டதென்றால். சென்னையில் இருந்தப்ப மகனுக்கும் அனுப்பிக் கொடுத்ததுண்டு அவங்க ஊர்ல கிடைக்காது என்பதோடு அவங்க ஆசிரியர்களுக்கும் மற்றவங்களுக்கும் சுவைக்க. இப்ப பெரிய NO அவனும் என் பட்டியலில் ஆகிவிட்டதால்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், நன்றாகத்தான் வந்திருக்கிறது. என் பேத்தியும் ரசித்து ருசித்தாள்.

      நீக்கு
    2. ஆஹா!! பேத்தி ரசித்து ருசித்தாள் என்பது மகிழ்வான விஷயம். நாம் செய்வதை விட நம் பேரன் பேத்திகள் குழந்தைகள் ரசித்து சாப்பிட்டால் அதுவே மனதுக்கு மிகவும் மகிழ்ச்சி தரும்.

      கீதா

      நீக்கு
  4. ரொம்பவும் சுவையான குறிப்பு! பார்க்கும்போதே சுவைக்கத்தோன்றுகிறது! நான் இது போல செய்து பணியாரம் செய்திருக்கிறேன்!

    பதிலளிநீக்கு
  5. அக்கா, இதில் பாயாசம் செய்வது சக்கை பிரதமன். அடைபிரதமன்னு சொல்வதில்லை.

    இதை இப்படி வைத்துக் கொண்டால், சக்கை உன்னியப்பம், இலை அடை, சக்கைவட்டையப்பம் என்று பல செய்யலாம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இலை அடை என்று குறிப்பிட நினைத்தேன். தவறாகி விட்டது. நன்றி.

      நீக்கு
  6. முதல் படமே அட்டகாசம் மேடம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எடுக்கப்பட்ட வரிசையில் அதுதான் கடைசிப் படம் :)). நன்றி.

      நீக்கு
    2. ஆம் முடிந்த பிறகு எடுத்து இருப்பீர்கள்.

      நீக்கு
  7. சக்கை வறட்டி என்பது jackfruit jam தான். இங்கு கூழன் சக்கையிலும் சிலர் செய்கிறார்கள். பலாப்பழம் சுளையாக சாப்பிடுவதே அதன் ருசி. மேலும் கேரளா சர்க்கரை என்கிற மறையூர் வெல்லம் எல்லா இடங்களிலும் கிடைப்பதில்லை. திருவனந்தபுரத்தில் சக்கை அறுத்து சுளையாக விற்பதில்லை. நாங்கள் முழு சக்கை வாங்குவதில்லை. ஆகவே இந்த வறட்டியை மறந்து வருடங்கள் ஆகின்றன.
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இங்கு கூழன் சக்கையிலும் சிலர் செய்கிறார்கள்// இதை தி.கீதா கூறினார். சக்கை வரட்டியா? வறட்டியா?

      நீக்கு
  8. இட்டிலியில் பூர்ணமாக இந்த ஜாமை வைத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர். இட்லி தட்டில் அரைக்கரண்டி இட்லி மாவு ஊற்றி, கொஞ்சம் ஜாம் பூர்ணம் வைத்து மேலும் கொஞ்சம் இட்லி மாவை ஊற்றி இட்லி அவித்து எடுக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியா? எங்கள் வீட்டில் இட்லியே இரண்டாம் பட்சம்.

      நீக்கு
    2. ஆமாம் இது நேத்து சொல்ல விட்டுப் போச்சு. ஜெ கே அண்ணா சொன்னது போலும் செய்வதுண்டு.

      கீதா

      நீக்கு
  9. சக்கவரட்டி இனிப்புப் பிரியர்களுக்கு கொண்டாட்டம்.

    பதிலளிநீக்கு
  10. ஆமாம். நன்றி. இப்போது சீசனாச்சே?

    பதிலளிநீக்கு
  11. இன்றைய திங்கற கிழமையில் நான் அனுப்பிய சமையல் குறிப்பை வெளியிட்ட எ.பி.க்கு நன்றி.
    இதை செய்ய நன்கு கனிந்த பழங்கள் மற்றும் நார் உள்ள சுளைகளை பயன்படுத்திக் கொள்வது நலம் என்று குறிப்பிட மறந்து விட்டேன்.

    பதிலளிநீக்கு
  12. அருமையான பாலச்சுளை அல்வா. நாங்கள் சக்கரை வரட்டி என்றால் பதமான பலாசுளையை சர்க்கரை பாகில் போட்டு எடுத்து வைப்பதை அப்படி சொல்வோம். வெகு நாட்கள் இருக்கும் .

    என் அம்மா பலாபழம் அதிகவரத்து காலத்தில் கண்டிப்பாய் செய்து விடுவார்கள். எங்கள் எல்லோருக்கும் பிடிக்கும். படங்கள் எல்லாம் அருமை. வீடியோ வரவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //நாங்கள் சக்கரை வரட்டி என்றால் பதமான பலாசுளையை சர்க்கரை பாகில் போட்டு எடுத்து வைப்பதை அப்படி சொல்வோம். வெகு நாட்கள் இருக்கும் .// அப்படியா? கேள்விப்பட்டது இல்லை. செய்முறை அனுப்புங்கள்.
      தாமதமான நன்றி நவிலலுக்கு மன்னிக்கவும். மிக மிக நன்றி .

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!