தயிர்ப் பச்சடி
தமிழ் நாட்ல - தயிர்ப் பச்சடி பற்றி தெரியாதவங்களே இருக்க முடியாது ன்றப்போ எதுக்காக இந்தப் பதிவு?.. சும்மா ஒப்பேத்துறதுக்கா!..
தமிழ் நாட்டில் தமிழறியாமல் வாழ்வோர் ஆயிரக் கணக்கில்.. தமிழக குடும்பங்களிலேயே தமிழறியாத தலைமுறை உருவாகிக் கொண்டிருக்கும் சூழலில் -
பதிவின் நிறைவாக வந்திருக்கின்ற விவரங்களுக்காகத் தான் இந்தப் பதிவு..
***
தேவையானவை :
வீட்டில் உறையூற்றிய
தயிர் - 150 gr
வெள்ளரிக்காய் 2
பெரிய வெங்காயம் 2
பச்சை மிளகாய் - 2
கல் உப்புப் பொடி - சுவைக்கு
விருப்பம் எனில்
தாளிப்பதற்கு:
கடுகு, உளுத்தம்பருப்பு -
கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை - சிறிதளவு
செய்முறை:
தேவையானவற்றை தயாராக வைத்துக் கொள்ளவும்..
முதல் நாள் இரவில் உறையூற்றிய பால் மறுநாள் தெளிந்த நீருடன் உறைந்திருக்கும்.. தெளிந்த நீரை இயன்ற வரை வடிகட்டி எடுத்து விடவும்..
வெள்ளரிக்காயை நன்கு கழுவி விட்டு விருப்பப்படி நறுக்கிக் கொள்ளவும்..
வெங்காயத்தைத் தோல் உரித்து மெல்லியதாக நீளவாக்கிலும் குறுக்காகவும் நறுக்கிக் கொள்ளவும்..
பச்சை மிளகாயை நீளவாக்கில் மட்டும் கீறிக் கொள்ளவும்..
(பச்சை மிளகாயைத் தூளடித்து அதனிடம் கோபத்தைக் காட்ட வேண்டாம்..)
தண்ணீர் வடித்த தயிரை - மத்தினால் ஒரு சுழற்று சுழற்றி விட்டு
வெள்ளரிக்காய் வெங்காயம் பச்சை மிளகாயை சேர்த்து உப்புத் தூளைப் போட்டு பிசறி விடவும்..
விரும்பினால்
கடுகு, உளுத்தம் பருப்பு , கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை தாளித்து சேர்த்துக் கொள்ளலாம்..
ஆரோக்கியமான தயிர்ப் பச்சடி இது தான்..
***
Curd or Yogurt which is nature..
In almost every Indian household, the curd is prepared by curdling milk with natural acidic substances.
On the other side, yoghurt is fermented with artificial acids and it usually cannot be prepared in your kitchen.
Curd (also Thayir/Dahi/ Mosaru/Perugu)
is a traditional yogurt or fermented milk product, originating from and popular throughout the Indian subcontinent. It is usually prepared from cow's milk, and sometimes buffalo milk or goat milk.
The word curd is used in Indian English to refer to homemade yogurt.
while the term yogurt refers to the pasteurized commercial variety known as heat-treated fermented milk..
While both are rich in probiotics and protein, curd is often preferred for its tangy taste and versatility in cooking, while yogurt is known for its creamy texture and cooling properties. Finally, curd is more popular in Indian cuisine.
நன்றி : விக்கி
இயற்கையே வளம்
இயற்கையே நலம்
***
காலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம்..
நீக்குதங்களது வருகைக்கு
நெஞ்சார்ந்த நன்றி...
மகிழ்ச்சி...
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய திங்கள் பதிவில் தங்கள் செய்முறையாக வெள்ளரிக்காய் தயிர்ப்பச்சடி நன்றாக உள்ளது. இதில் வெள்ளரி மட்டுமின்றி, எந்த காய்கறி துருவி/ நறுக்கி சேர்த்தாலும் இதன் சுவை குன்றுவதில்லை. நல்ல தயிரின் குணாதிசயம் அப்படி.
முன்பு (இப்போதும்) திருமணம், மற்றும் சுவையான பாரம்பரியமான விருந்துகளில் முதலில் பறிமாறும் பாயாசத்திற்கு அடுத்தபடியாக இலையில் இடம் பெறுவது இந்தப்பச்சடிதான்.(இங்கு முதலில் உப்பு பறிமாறுகிறார்கள். ஒவ்வொருவரின் கலாச்சாரம் பண்பாடுகள் விசித்திரமானதுதான்.)
அருமையான தயிர்ப்பச்சடி செய்முறை விளக்கங்கள் அருமை. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
/// எந்த காய்கறி துருவி/ நறுக்கி சேர்த்தாலும் இதன் சுவை குன்றுவதில்லை. நல்ல தயிரின் குணாதிசயம் அப்படி.///
நீக்குஉண்மை தான்...
அன்பின் கருத்திற்கு
மகிழ்ச்சி..
நன்றி..
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்கு/(பச்சை மிளகாயைத் தூளடித்து அதனிடம் கோபத்தைக் காட்ட வேண்டாம்..)/
ஹா ஹா ஹா. உண்மைதான் பிறகு அதன் கோபத்தை நம் மீது அது காண்பித்தால் நாம் தாங்க மாட்டோம். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
மிளகாய் கீறப்பட்டு இருந்தால் ஒரு ஓரமாக எடுத்து வைத்து விடலாம்...
நீக்குஅரைத்துக் கரைத்து கலந்து விட்டால் உடல் நிலை பிரச்சினை உள்ளவர்கள் என்ன செய்ய முடியும்?...
மகிழ்ச்சி..
நன்றி..
செய்முறை விளக்கம் அருமை ஜி
பதிலளிநீக்குமகிழ்ச்சி..
நீக்குநன்றி ஜி...
மிகவும் பிடித்த ஒன்று. சில நேரங்களில் இது மட்டுமே எனது மதிய உணவாக இருக்கும். probiotic
பதிலளிநீக்குகீதா
இது மட்டுமே மதிய உணவாக இருக்கும் பட்சத்தில் சிறப்பு..
நீக்குமகிழ்ச்சி..
நன்றி சகோ..
பச்சை மிளகாய் சேர்ப்பதென்றால் நான் அதை பொடியாக நறுக்காமல் மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றிச் சேர்ப்பதுண்டு. எனக்கு மட்டும் என்றால் ப மி சேர்ப்பதில்லை.
பதிலளிநீக்குகீதா
பச்சை மிளகாய் சும்மா லுலுவா மட்டுமே...
நீக்குமகிழ்ச்சி..
நன்றி சகோ..
வீட்டில் செய்யும் தயிருக்கு நல்லதோர் மணம் இருக்கும். நானும் தயிர் வீட்டில் போடுவேன் வாங்கும் பெட்டித் தயிர் மணம் இருக்காது ஆனால் மிகுந்த கட்டியாக இருக்கும் என்ன கலப்
பதிலளிநீக்குபார்களோ தெரியவில்லை.
நல்ல பச்சடி சத்தானதும் கூட.
வணக்கம்..
பதிலளிநீக்குஅனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி...
மகிழ்ச்சி...
வீட்டில் செய்யும் தயிருக்கு நல்லதோர் மணம் இருக்கும்..
நீக்குஇதுதான் ஆரோக்கியம்...
மகிழ்ச்சி..
நன்றி மாதேவி..
தயிர் பச்சடி அருமையாக இருக்கிறது.
பதிலளிநீக்குகோடைக்கு ஏற்ற பதிவு.
படங்களும், செய்திகளும் அருமை.
அன்பின் கருத்திற்கு மகிழ்ச்சி..
நீக்குநன்றி..
நலம் வாழ்க..
கோடைக்கு ஏற்றதா? இப்போ நல்ல குளிர், காத்து சீசன் பெங்களூரில். புலாவ், புளியோதரை, சப்பாத்தி போன்றவற்றிர்க்கு எனக்கு விருப்பமானது தயிர்பச்சிடி
நீக்குநெல்லை அவர்களுக்கு நன்றி..
நீக்குஅன்பின் கருத்திற்கு மகிழ்ச்சி..
நலம் வாழ்க..
நேற்று காலையில் சுவாமிமலை தரிசனம்...
பதிலளிநீக்குஇரவு உறவினர் வீட்டில்...
இணையம் கிடைக்கவில்லை..
எனவே தாமதம்..
தயிர்பச்சிடி எனக்கு எப்போதுமே விருப்பமானது.
பதிலளிநீக்குசப்பாத்திக்கு எனக்கு வெங்காய தயிர்பச்சடி ரொம்பப் பிடிக்கும். தண்டு தயிர் பச்சிடி நல்லா இருக்கும்
அன்பின் கருத்திற்கு மகிழ்ச்சி..
நீக்குநன்றி..
நலம் வாழ்க..
வணக்கம்
பதிலளிநீக்குஐயா
செய்கை முறையுடன் சிறப்பான விளக்கம் தொடருங்கள்
நீக்குவெகு நாட்களுக்குப் பின் வருகை..
தங்களுக்கு நல்வரவு.
மகிழ்ச்சி..
நன்றி ரூபன்..
சுவையான குறிப்பு.
பதிலளிநீக்கு