திங்கள், 8 ஜூலை, 2024

"திங்க"க்கிழமை :  பூசணி உ. கி கூட்டு, துவையல். - கமலா ஹரிஹரன் ரெஸிப்பி 

 

கூட்டும், துவையலும், கூட்டின் முறையும்...

 பூசணி உ. கி கூட்டு, துவையல்.

வணக்கம் சகோதர சகோதரிகளே 

இன்று சமையல் பதிவுடன் வந்திருக்கும் என் அன்பான அறுவைகளை சற்றுப் பொறுத்துக் கொள்ளுங்கள். அப்படி பொறுக்க இயலவில்லையெனில், பேசாமல் மன்னித்து விடுங்கள். :)) 

சிகப்பு பூசணிக்காய் முழுதானதாக ஆனால் சின்னதாக மற்ற காய்களுடன் சென்ற வாரம் ஒருநாள் வாங்கினேன். (பூசணி என்றதும் எனக்கே நான் இறுதியில் எழுதிய கற்பனை கதையின் முடிவின்  உறுத்தல் நினைவுக்கு வருகிறது. உங்களுக்கும் அப்படி  வந்திருக்குமானால், "கொன்றால் பாவம். தின்றால் போச்சு." என சமாதானத்துடன் விட்டு விடலாம்.. என்ன நான் சொல்வது.. சரிதானே..!! ) 

பார்டா!!! சந்தடி சாக்கில் இவர்களின் பதிவுக்கு   இப்படி ஒரு விளம்பரமா..? ஆகா.. தாங்க முடியவில்லையே...!! என  (நீங்கள் காதை பொத்திக்கொண்டு, இல்லையில்லை, கண்களை ஆயாசமாக மூடிக் கொண்டு) மனதுக்குள் லேசாக முணுமுணுப்பது  எனக்கும் லேசாக கேட்கிறது./தெரிகிறது. ஹா. ஹா. ஹா. 

அதில் அது (சிகப்பு பூசணிக்காய்) சில நாள் கு. சா. பெட்டியில் பொறுமையாக காத்திருந்து பின் ஒரு கால் வாசி ஒருநாள் சாம்பாராக பயன்பட்டு புண்ணியம் தேடிக் கொண்டு விட்டது. மீதி இருப்பவை கொண்டு இருவிதமாக செய்தால், (துவையலும், கூட்டும்.) ஒருநாள் சமையல்பாடு கழிந்து விடும் என்பதற்காக இந்த சிறு முயற்சி. 


இது சுத்தமாக கழுவிய பின் (இருக்கிற தண்ணீர் பிரச்சனையில் ஒரு தடவைக்கு இரண்டு தடவையாக வேறு கழுவினேன். :)) ) தோல், (அதனுடனேயே  பூசணியில் உள்ளிருக்கும் பகுதிகள் மட்டும் கூடவே. ) சற்று பட்டையாகவே எடுத்து தனியே வைத்திருக்கும் படம். 


இது தோல் நீக்கிய காயை பொடிதாக கூட்டுக்காக அரிந்து வைத்திருப்பவை.


துவையலுக்கு தேவையான மி. வ. நான்கு, இரண்டு ஸ்பூன் க. ப, இரண்டு ஸ்பூன் உ. ப, கொஞ்சம் கடுகு என கடாயில் சிறிது சமையல் எண்ணெய் விட்டு வறுத்து வைத்திருக்கும் தயாரிப்பு படம். 


இது அதே கடாயில், துவையலுக்கான பூசணித் தோலுடன் சேர்ந்த காய்களை போட்டு ஒரு தம்ளர் தண்ணீருடன் வேக வைத்த படம். 


வறுத்து எடுத்த பருப்புக்கள், மி. வ காரத்துடன் கொஞ்சம் புளி, கல் உப்பையும் சேர்த்து வைத்து விட்டால் அது சிறிது ஆறியதும் மிக்ஸியில், முதலில் போட சௌகரியமாக இருக்கும். 

அரிந்து வைத்த காய்களுக்கு தாளிப்பாக முதலிலேயே சிறிது கடுகு, ஒரு ஸ்பூன் மசூர்தால் ( இதுவும் ஒரு வித்தியாசத்திற்குத்தான்) போட்டு, தேவையான உப்பையும் போட்டு விட்டேன். ஒரே கடாயில் எல்லாவற்றையும் இப்படி செய்து வைத்துக்கொண்டால் கடாய் உபயோகம் குறைவாக இருக்கும். (இங்கு இப்போதுள்ள தண்ணீர் சிக்கனத்திற்கும் வழி வகுக்கும்.) துவையலுக்கான காய் கலவைகள் வெந்து எடுத்ததும் இதையும் அதிலேயே வேக வைத்து விடலாம். 
 

பூசணியின் காய்கள் கூட்டுக்கு கொஞ்சம் குறைவாக இருப்பதாக தோன்றவே, கிட்டத்தட்ட ஒரே குணமுடைய உ. கி யிடம்,  "இந்த  சிகப்பு பூசணியுடன் இன்று நீயும் தயவு செய்து கொஞ்சம் ஒத்துழைத்து போகிறாயா?" என்று கேட்டேன். அது சிறிது யோசித்து விட்டு பிறகு அரை மனதுடன் சரியெனவும், அது மனம் மாறுவதற்குள், அதையும் அவசரமாக தயார் செய்தேன். (இந்தப் பதிவின் தலையில் நான் வைத்த தலைப்(பாகைக்கு)புக்கு இப்படி ஏதாவது சொல்லி தப்பிக்க வேண்டுமே...! அப்பாடா..!! ஒரு வழியாக தப்பித்தாகி விட்டது. :)) ) 

இரு வகை காய்கள் வெந்து, வறுத்த சாமான்கள் அரைப்பதற்கு ஆறுவதற்குள் ஒரு சிறு கதை. 

அறுபத்துமூவர் நாயன்மார்களில் ஒருவரான இளையான்குடி மாறநயினார் பெருத்த செல்வந்தராக இருந்த போதும் சரி, இறைவனின் லீலையால் , வறுமை சூழ்ந்து ஏழ்மையில் தவித்த போதும் சரி, ஈசனிடம் வைத்த அளவு கடந்த பற்று காரணமாக, இறைவனின் அடியார்களுககு தினமும் உணவளித்து உபசாரம் செய்விக்க வேண்டுமென்ற கொள்கையில் மாறாதிருந்து சிறந்து விளங்கினார். இதன் காரணமாக அவரது செல்வங்கள் கரைந்து ஒன்றுமேயில்லாத நிலைமைக்கு வந்தும் கூட அவர் மனந்தளரவில்லை. 
 
இவரின் இச்சிறப்பை உலகத்திற்கு உணர்த்த எண்ணம் கொண்ட இறைவன் ஒரு மழை கால இரவில், நாயனார் வறுமையின் பிடியில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கும் அந்த வேளையில், அன்னம் புசிப்பதற்காக ஒரு அடியவர் வடிவம் கொண்டு இவரிடம் வரவே அன்று வீட்டில் ஏதுமில்லாத நிலை கண்டும் மாறநயினாரும், அவர் மனைவியும் மனம் கலங்கவில்லை. 

மாறாக, காலையில்தான், ஒதுக்குப்புறமாக  இருக்கும் தன் சிறிதளவான நிலத்தில் விதைத்திருந்த விதை நெல்லை,பெய்து கொண்டிருக்கும் அந்த பெரும் மழையையும்,இரவின்  இருளையும் பொருட்படுத்தாமல் அக்கழனிக்குச் சென்று அவற்றையெல்லாம் சேகரித்து அள்ளி வந்து தம் மனைவியிடம் தந்தார். 

மழையில் ஈரம் சொட்ட அந்நேரம் வரை மிதந்திருந்த நெற் கதிரினின்று அந் நெல்லை, பிரித்தெடுத்து வறுத்து குத்தி அரிசியாக்க, ஈரமில்லாத விறகு இல்லாத காரணத்தால், தங்கள் குடிசையின் பின் பகுதி ஓலைகளுக்கு முட்டு தந்திருந்த மூங்கில் சிலாச்சுகளை உருவியெடுத்து அதை விறகாக பயன்படுத்தி, அந்நெல்லை வறுத்து உரலில் குத்திப்புடைத்து அரிசியாக்கி சுவையான அன்னம் சமைத்தார் அந்த புண்ணியவதி. 

அன்னத்திற்கு உறுதுணையாக காய்கனிகள் ஏதுமில்லாத அந்த நிலையில் வீட்டின் பின்புறம் தாம் வளர்ந்திருந்த கீரைகளை பறித்து வந்து அதையே விதவிதமாக, பலவிதங்களில் சுவை மிகும்படிக்கு கூட்டு, பொரியல், என சமைத்து முடித்ததும், அந்த விபரத்தை கணவரிடம் தெரிவித்தார். 

பின்னர் கூடத்தில் அமர்ந்து பசியால் கண்ணயர்ந்து அமர்ந்து  கொண்டிருந்த அந்த சிவனடியாரரை நோக்கி வந்து அன்போடு அவருக்கான உணவு தயாராகி விட்டதெனவும், சமையல் செய்ய நேரம் கடத்தி விட்ட தங்கள் செயலுக்கு உள்ளம் உருகி விட்ட அன்போடு மன்னிப்பு கேட்டபடியும், தம்பதியர் இருவரும் அடியாரின் அடிபணிந்து அழைத்தார்கள். 

அப்போது ஜோதிப்பிளம்பாக உமையவளோடு காட்சி தந்த இறைவன் "இத்தனை வறுமை சூழலிலும், எத்தனை இக்கட்டான பொழுதினிலும், தன்மீது இந்த தம்பதிகள் வைத்திருக்கும் ஆழமான பக்தியை, இவர்களின் அன்பை உலகிற்கு பறை சாற்றிடவே தான் அடியார் வேடத்தில் வந்ததாகக் கூறி" , இருவருக்கும் இப்பிறவியில் கைலாய வாசம் செய்ய வரமருள் செய்து விட்டு  மறைந்தார். 

நாயன்மார்கள் கதைகளில்,அத்தனை கதைகளும் சிறந்த வைரங்கள் என்றால், இந்தக் கதை என்னால் மறக்க இயலாத அபூர்வமான ஒரு பொக்கிஷ கதை. இவர்களுக்குத்தான் இறைவனிடம் எத்தனை அன்பு. பற்று. இரவென்றும் பாராமல் அந்த கணவரின் மனதிற்கு தகுந்த மாதிரி நடந்து கொள்ளும் மனம் படைத்த அந்த மனைவியான புண்ணியவதி முற்பிறவியில் எத்தனை பாக்கியம் செய்திருப்பார். 

இந்த மாதிரி நான் ஒரே காயை வைத்து  சமையல் செய்யும் போதெல்லாம், இந்தக்கதை என்  நினைவுக்கு வர தப்புவதில்லை. எங்கள்  குழந்தைகளிடம் இக்கதையை சொல்லவும்  தவறுவதில்லை. அதுவும் என்  மனக்கண் முன்னே அன்றே புதிதாக நடப்பது போன்றே மனதுக்குள் அந்தகாட்சிகளை கண்டு அந்த சிவனடியார்களை உள்ளம் கனிந்து தொழுது பூரித்திருக்கிறேன்

அவர்கள் அன்பில் மூழ்கி செய்த அந்த சமையலில்தான் எத்தனை அபாரமான ருசிகள் இருந்திருக்கும். அந்தளவிற்கு என்  பாகத்தில் சுவை ஏதும் கூட்டாது. இருப்பினும் என்னாலான சமையலை பகிர்ந்து, நான் ரசிக்கும் இந்தக் கதையையும் (இது உங்களுக்கும் ஏற்கனவே தெரிந்திருப்பினும்,) உங்களுடன் பகிர்ந்துள்ளேன். அன்போடு பார்த்து கேட்டதற்கும் என் பணிவான நன்றிகள். 


அரைத்த துவையலில் சற்று பெருங்காய பொடி சேர்ந்து கலந்து விட்ட பின் சாதத்தில் கலந்து சாப்பிட பறங்கிகாய்  துவையல் ரெடி. 


அதே மிக்ஸியில் தேங்காய் சீரகம், இரண்டு மி. வத்தல் சேர்த்து நன்கு அரைத்து, (கறிவேப்பிலை, அல்லது கொத்தமல்லி தழைகள் என வீட்டில் இருந்தால் இதன் கூடவே சேர்ந்து அரைக்கலாம்.) அந்த விழுதை  விட்டு ஒரு கொதி சேர்ந்து வந்ததும், துவையல் சாதத்திற்கு தொட்டுக் கொள்ள இந்த கூட்டும் ரெடி. 

ஒரு சேர கொதித்து வந்ததும், அடுப்பை நிறுத்தும் போது ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் விட வேண்டும். துவையல் சாதமும், அதன் துணையாக கூட்டும் தயார் ஆகி விட்டது. இனி என்ன  அழகாக, திருப்தியாக சாப்பிடலாமே.. .!!

இதுவரை திங்களோடு சேர்ந்து செவ்வாயாகவும் மலர்ந்த சமையல், மற்றும் ஆன்மிக கதை கேட்ட சகோதர சகோதரிகள் அனைவருக்கும் என் அன்பான, பணிவுடைய நன்றிகள். 🙏. 

59 கருத்துகள்:

  1. அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை
    பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.   

    தமிழ் வாழ்க..

    பதிலளிநீக்கு
  2. கற்பக கணபதி
    கனிவுடன் காக்க..
    முத்துக்குமரன்
    முன்னின்று காக்க..
    தையல் நாயகி
    தயவுடன் காக்க..
    வைத்திய நாதன்
    வந்தெதிர் காக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..
    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரரே

      /எல்லாருக்கும் இறைவன்
      நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..
      நலம் வாழ்க../

      ஆம் அனைவருக்கும் இறைவன் நல்லதை தர வேண்டுமாய் நானும் பிரார்த்திக்கிறேன். நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  3. தண்செய்யும் வாழ்க.. தஞ்சையும் வாழ்க..
    தளிர் விளைவாகித்
    தமிழ் நிலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  4. மதிப்புக்குரிய ஸ்ரீமதி கமலா ஹரிஹரன்..

    எபியின் பக்கங்கள் தங்களது கை வண்ணத்தால் மேலும் சிறப்புறுகின்றது..

    வாழ்க வாழ்க..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரரே

      உங்கள் சமையல் கைப்பக்குவங்கள் கொண்டு எ. பியில் எப்போதும் அசத்தி வருகிறீர்கள். இதில் என் பங்கு சிறு அணிலாக...! ஏதோ எனக்குத் தெரிந்ததை அரைத்த மாவாக பகிர்ந்திருக்கிறேன். எனினும் அதையும் முதலில் விரைந்து வந்து அன்புடன் பாராட்டியமைக்கும் உங்கள் வாழ்த்திற்கும் என் பணிவான நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  5. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  6. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  7. கூட்டும், துவையலும் அதனுடன் அழகான கதை பகிர்வும் , அருமை.
    படங்கள் எல்லாம் அருமை.

    //நாயன்மார்கள் கதைகளில்,அத்தனை கதைகளும் சிறந்த வைரங்கள் என்றால், இந்தக் கதை என்னால் மறக்க இயலாத அபூர்வமான ஒரு பொக்கிஷ கதை.//

    எனக்கும் மறக்க இயலாத கதை தான்.

    சிறு வயதில் சின்மயா மிஷன் பாலவிஹாரில் படித்த போது ஒரு விழாவில் குழந்தைகளை புராண கதை சொல்ல சொன்னார்கள். அப்பா எனக்கு இந்த கதையை சொன்னார்கள். நான் அப்பாவிடம் சொல்லி காட்டும் போது நன்றாக சொன்னேன், பாலவிஹாரில் மேடையில் ஏறி கதை சொல்ல ஆரம்பித்த போது திக்கி திணறி சொல்லி முடித்தேன், கூட்டத்தைப்பார்த்து பயம். வேர்க்க விறு விறுக்க சொல்லி முடித்தேன்.
    நினைவை விட்டு அகலாமல் இருக்கிறது.

    //அவர்கள் அன்பில் மூழ்கி செய்த அந்த சமையலில்தான் எத்தனை அபாரமான ருசிகள் இருந்திருக்கும்.//

    ஆமாம், இறை சிந்தனையுடன் சமைக்கும் போது அந்த உணவுக்கு சுவை கூடும், அது மட்டுமல்ல உண்பவர்களுக்கும் நல்ல சிந்தனைகள் உருவாகும் என்பார்கள், கோபம், வெறுப்புடன் சமைக்கும் போது அது உடல் நலத்துக்கு தீங்கு என்பார்கள்.


    திருவெண்காட்டில் வசிக்கும் போது பக்கத்து வீட்டில் ஒருவர் ஒரே காயில் கூட்டு, பொரியல், குழம்பு என்று செய்து விடுவார். அடுத்தநாள் அதே போல் வேறு காயில் செய்வார். அவர் நினைவுக்கு வந்தார்.

    கூட்டும், துவையலும், கூட்டின் முறையும்..//

    தலைப்பு அருமை.
    பாட்டும் நானே பாவமும் நானே! பாடல் நினைவுக்கு வந்தது

    //கூத்தும் இசையும்
    கூத்தின் முறையும்//

    செய்முறை சொன்ன விதமும், கதை பகிர்வும் அருமை.

    //ஒரே கடாயில் எல்லாவற்றையும் இப்படி செய்து வைத்துக்கொண்டால் கடாய் உபயோகம் குறைவாக இருக்கும். (இங்கு இப்போதுள்ள தண்ணீர் சிக்கனத்திற்கும் வழி வகுக்கும்.) //

    தண்ணீர் சிக்கனம் எப்போதும் நல்லதுதான்.
    பாராட்டுக்கள், வாழ்த்துகள்.





    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரி

      தங்களது வருகையும், அன்புடனான கருத்துக்களும் எனக்கு மிக மன மகிழ்வை தருகிறது.

      செய்முறைகளை ரசித்து படங்களை பாராட்டியமைக்கு மிக்க நன்றி சகோதரி.

      தங்களுக்கும் இந்தக்கதை மிக மறக்க இயலாத கதை என்பதையறிந்து மிக்க மகிழ்ச்சியடைந்தேன். தங்கள் குடும்பமே சிவநேச பக்தியுடைய குடும்பம் என்பதை அறிவேன். உங்கள் அனுபவமுள்ள பகிர்வுகளுக்கும், பக்திக்கும் முன் என் ஆத்மார்த்த பக்தி சிறியதுதான். இருப்பினும், நான் பகிர்ந்த இந்த பக்தி கதையையும் பாராட்டி பதிவின் சில பகுதிகளை எடுத்து குறிப்பிட்டு தாங்கள் விவரித்து எழுதியிருந்த கருத்திற்கு என் பணிவான நன்றி.

      தங்களின் ஊக்கம் நிறைந்த கருத்துகளை தொடர்ந்து தாருங்கள். உங்கள் அன்பிற்கு மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  8. /// எனக்குத் தெரிந்ததை அரைத்த மாவாக///

    அரைத்த மாவு என்பது எனக்கு வழங்கப்பட்ட ஒன்று...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரரே

      /அரைத்த மாவு என்பது எனக்கு வழங்கப்பட்ட ஒன்று.../

      உங்களுகென்றில்லை. அனைவரும் எப்போதும் வழக்கமாக செய்வதை இப்படி மீண்டும் விவரிக்கும் போது, வந்த சொல்லாடல் இந்த அரைத்த மாவு.

      பொதுவாக வீட்டில் அரைத்த மாவில் செய்யும் இட்லி தோசைகள்தான் என்றும் சுவையானவை. தீடீர் மாவு என்ற கணக்கில் வருபவை தறகாப்புக்குத்தான். அவசர யுகத்திற்கு எனப் பயன்படுபவை. நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  9. பத்தாம் வகுப்பில் இளையான்குடி மாற நாயனார் வரலாறு பாடப்பகுதியில்...

    பாசப் பழி முதல் பறிப்பார் போல - என்று நாயனார் நள்ளிரவில் கீரை பறித்ததைச் சொல்வார் சேக்கிழார்.. மனதை உருக்குகின்ற வரலாறு..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரரே

      /பாசப் பழி முதல் பறிப்பார் போல - என்று நாயனார் நள்ளிரவில் கீரை பறித்ததைச் சொல்வார் சேக்கிழார்.. மனதை உருக்குகின்ற வரலாறு/

      ஆம். நானும் படித்திருக்கிறேன். மனதை உருக்குகின்ற பக்தி. இதற்கு முன்ஜென்ம நல்ல கொடுப்பினைகளை தொடர்ந்து இறைவனிடம் வரமாக பெற்று வந்திருக்க வேண்டும். நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  10. சிறு வயதில் (5 வயது) ஒரு பரங்கிக்காய் பாடல் பிரபலம்.

    பரங்கிக்காயை பறித்து
    பட்டையெல்லாம் சீவி
    பொடிப்படியாய் நறுக்கி
    எண்ணெயிட்டு தாளித்து
    இன்பமாக புசிப்போம்.
    இன்னும் கொஞ்சம் கேட்போம்
    தந்தால் சிரிப்போம்
    தராவிட்டால் அழுவோம்.

    என்று பாடியது இன்றும் நினைவில் நிற்கிறது.
    பட்டையும் துவையலாக்கலாம் என்பது புது செய்தி.
    தோல், பட்டை போன்றவற்றில் பூச்சி மருந்து, மற்றும் கிருமிகள் இருக்கலாம் என்பதால் நாங்கள் அவற்றை குப்பையில் போட்டு விடுகிறோம்.
    ​Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரரே

      தங்களின் அன்பான வருகையும், கருத்துப் பகிர்வும் மனதிற்கு மகிழ்வை தருகிறது.

      பறங்கிகாய் பாடல் அருமை. இதேப் போல் மற்றொரு பாடல் உண்டு. "தோசையம்மா தோசை." அதிலும் குழந்தைகள் மனதிற்கு பிடித்தமான பாடல் வரிகளுடன் அமைந்திருக்கும்.

      நல்ல பகுதிகளாக பார்த்து சிவப்பு பூசணி பட்டையை சீவி எடுத்துக் கொள்ளலாம். உள்ளிருக்கும் பகுதிகளையும் நன்கு நீரில் அலசிய பின்தான் வதக்க வேண்டும். இதே போல் சவ்சவ் துவையலும் செய்யலாம். சுவையாக இருக்கும். . தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே. நான்தான் பதில் சொல்ல தாமதம். மன்னிக்கவும். நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  11. பறங்கிப்பட்டை என்பது ஒரு ஆயுர்வேத மருந்து. (கேரளப்பகுதிக்காரர்களுக்குச் வேண்டியதில்லை)
    பறங்கியின் அடித் தோலை சீவியெடுத்து வெயிலில் உலர்த்தி காய்ந்த பட்டையை பொடி பண்ணி ஒரு டீ ஸ்பூன் பொடியை தேனுடன் கலந்து சாப்பிடுவது தோல் நோய்களுக்கு மிகச் சிறந்த மருந்து.
    பறங்கிப்ப்பட்டை பொடி, பறங்கிப்பட்டை லேகியம் என்றெல்லாம் உண்டு.
    அதனால் பறங்கிப்பட்டையை நறுக்கி எறியாமல் சேர்த்தே குழம்பு, கறி போன்றவற்றிக்கு உபயோகிப்பது சாலச் சிறந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரரே

      தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      /பறங்கிப்பட்டை என்பது ஒரு ஆயுர்வேத மருந்து./

      ஆம்.. பறங்கி பட்டை சூரணம் தோல் நோய்களுக்கு சிறந்த மருந்து. இதன் பட்டையுடன் நறுக்கி சாம்பார் செய்யலாம். சுவையாகத்தான் இருக்கும். சுலபமாக வெந்ததும் விடும். இதேப் போல் வெண்பூசணியையும் சாம்பாருக்கு தோலுடன் பயன்படுத்தலாம். தங்கள் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  12. கேரளப்பகுதிக்காரர்களுக்குச் சொல்ல வேண்டியதில்லை என்று வாசிக்க வேண்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
  13. தலைப்பே ஏடாகூடமாக இருக்கிறதே... கூட்டா இல்லை துவையலான்னு சந்தேகம் வருது. பதிவை வாசித்துவிட்டு வருகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரரே

      தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      /தலைப்பே ஏடாகூடமாக இருக்கிறதே... கூட்டா இல்லை துவையலான்னு சந்தேகம் வருது./

      ஹா ஹா ஹா. சந்தேகம் தீர்ந்திருக்குமென நினைக்கிறேன். கூட்டும், கூட்டின் முறையும் பற்றி படித்து ரசித்து பல கருத்துக்களை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  14. இளையான்குடி மாறநயினார் கதை மீண்டும் படித்தேன். முடிவில், இப்பிறவியிலேயே கைலாச வாசம்னா வரம் கொடுத்தார்? பிறவி முடிந்ததும் அல்லவா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரரே

      இளையான்குடி மாறநாயினார் கதை படித்தமைக்கு மிக்க நன்றி.

      அவருக்கு சிவலோக பதவி பிறவி முடிந்ததும்தான்.அது வரை அவர் பிறவியின் நோக்கப்படி சிவனடியார்களுக்கு தொண்டு செய்து அகமகிழ்ந்திருப்பார். அதுவே பெறும் பேறல்லவா? இப்பிறவி முடிந்ததும், அடுத்த பிறவி என்றில்லாமல் சிவனுடன் ஜோதிமயமாக இரண்டற கலந்து ஒன்று சேர எவ்வளவு புண்ணியம் செய்திருக்க வேண்டும். தங்கள் கருத்துக்கு நன்றி சகோதரரே

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  15. பறக்கிக்காய் துவையல் இதுவரை செய்ததில்லை. செய்யும் ஆசை வந்துவிட்டது. ஆனால் துவையல் சிறிது நீர்க்க இருப்பதுபோலத் தெரிகிறதே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரரே

      தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      /துவையல் சிறிது நீர்க்க இருப்பதுபோலத் தெரிகிறதே/

      அப்படியா?.. படத்தில் அப்படி தெரிகிறதா? ஆனாலும், சிறிது நீர்க்க இருந்தால்தான் சாதத்தில் கலந்து சாப்பிட தோதாக இருக்கும். பொதுவாக இந்த மாதிரியான துவையல்களே மிக கெட்டியாக இருந்தால் சாதத்துடன் சேராது.என்பது என் அனுபவம்.

      நீங்களும் செய்து பாருங்கள். சமையலில் திறமை பெற்றவரான உங்களுக்கு இந்த வழிமுறைகள் தெரியாதா என்ன? கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  16. உருளை தேங்கா சீரக்க் கூட்டு இங்கேயே எழுதியிருக்கிறேன். அதே போல பரங்கிக்காயை இதுவரை செய்ததில்லை. இன்று இரண்டையும் செய்துபார்த்துவிடலாம் என நினைத்திருக்கிறேன். (கிச்சன் என் வசம்). போய் முதலில் பரங்கிக்காய் வாங்கிவருகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரரே

      தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      உருளை கூட்டு என்றில்லை. எல்லா காய்களின் கூட்டும் இப்படித்தான் சீரகம், தேங்காய் அரைத்து செய்வோம். சிலதுகளில், மிளகு, காரத்திற்கு சி. மி. ப. மி என வேறுபடும்.

      இன்று சமையலறை உங்கள் வசமாகி இருப்பதால் இக்கூட்டு செய்திருப்பீர்கள் என நினைக்கிறேன். தங்கள் அன்பான கருத்துக்களுக்கு மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  17. தூய சவேரியார் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது சிங்கராயர் என்ற கணக்கு ஆசிரியர் இருந்தார். கோளத்தின் பரப்பளவு சம்பந்தமான பாடத்தை முந்தின வகுப்பில் முடித்திருந்தார். அன்று இன்ஸ்பெக்‌ஷனுக்கு வருகிறார்கள் என்பதால் அதே பாடத்தை எடுத்துக்கொண்டார். வட்டம் கோட்டு மற்ற டீடெயிலை போர்டில் எழுதியும் எங்கள் வகுப்புக்கு இன்னும் இன்ஸ்பெக்‌ஷனுக்கு வரலை. அதனால் வட்டத்திலேயே கோளத்தைக் காண்பிப்பதுபோல மெதுவாக சாக்பீஸினால் கோடுகள் வரைந்து நேரத்தைக் கடத்திக்கொண்டிருந்தார். அதை முடிக்கும் சமயத்தில் உன்ஸ்பெக்‌ஷனுக்கு வந்து, பிறகு எல்லாம் நல்லபடியாக முடிந்தது.

    அதுபோல தி பதிவுக்கு இரண்டு செய்முறைகளை எடுத்தும், தன் பதிவு போல இருக்கணும்னா இன்னும் ஒன்றரை சாண் நீளமாக இருக்கணும் என்பதற்காக நாயனார் கதையை உள்ளே கொண்டுவந்துவிட்டீர்களோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா. ஆஹா .. உண்மையை கண்டு பிடித்து விட்டீர்களே!! தங்கள் கருத்தை படித்து ரசித்து சிரித்தேன்.

      பின்னே ஒன்றிரண்டு சமையல் பதிவுகள் நம் குடும்ப பதிவுலமாகிய
      எ. பியில் நான் அதிசயமாய் எழுதும் போது பாப்புலர் எப்படி ஆகுவதாம்.? அதற்குத்தான் இந்த முறையை தேர்ந்தெடுத்தேன். (அதான் இப்படி மறுநாளுக்கும் சேர்த்து.)

      இரண்டாவதாக ஏதாவது எழுதும் போது என் வழக்கப்படி பெரிதாக எழுதினால்தான் மனதுக்கு திருப்தியாக இருக்கிறது.

      தங்கள் பள்ளியில் நடந்த இன்பெக்ஷன் கதை நன்றாக உள்ளது. கோளம் வட்டத்தின் இறுதியில் இன்ஸ்பெக்டர் வந்தது போல என் பதிவுக்கும் நீங்கள் அனைவரும் வந்து நல்ல படியான கருத்துக்களை தந்து விட்டீர்கள். அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    2. நகைச்சுவைக்காக எழுதினதை அதே விதத்தில் புரிந்துகொண்டதற்கு நன்றி கமலா ஹரிஹரன் மேடம். தொடர்ந்து மழை, வானம் அனேகமாக எப்போதுமே மேக மூட்டம், வெயில் அபூர்வம் என்று மூன்று வாரங்களுக்கு மேல் இப்படி இருக்கிறது. எப்போதும் குளிர் காற்று. இருந்தாலும் தண்ணீர் பிரச்சனை இன்னும் இருக்கிறதா?

      நீக்கு
    3. வணக்கம் சகோதரரே

      நகைச்சுவை என்றில்லாமல் சாதாரணமாக சொல்லியிருந்தாலும், இதில் தவறாக நினைக்க என்ன இருக்கிறது? இயல்பாகவே என் கருத்துக்களும், பதிவும் பெரியவைதானே.. :)) பாருங்கள். பதில் கருத்துக்களை சுருக்கித் தர இயலா(தெரியா)மல் ஒரு சமையல் பதிவுக்கு எ. பியின் பக்கங்களை அக்கால கடிதங்களைப் போல நிரப்பிக் கொண்டிருக்கிறேன்.

      இப்போது சீதோஷ்ண நிலையில் பெங்களூர் பழையபடிக்கு திரும்பி விட்டது. ஆனாலும் எங்கள் அப்பார்ட்மெண்டில் தண்ணீர் பிரச்சனை முழுமையாக தீரவில்லை. காலை 6. 30திலிருந்து 9.30 வரையும், அதுபோல் மாலையும் என கணக்கு வைத்து தண்ணீர் வருகிறது. அதுவும் வீட்டின் எல்லா குழாய்களிலும் ஒன்று போல் வராது. ஆனால் முந்திக்கு இப்போ பரவாயில்லை என வைத்துக் கொள்ளலாம். 24 மணி நேரமும் தண்ணீர் வரும் நாட்களை எதிர் பார்க்கிறோம். அதற்குள் மறுபடி கோடை வந்து விடுமென நினைக்கிறேன். எப்படியோ நேரத்திற்கு வரும் தண்ணீரை பிடித்து வைத்து கொண்டபடி நாட்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன. நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்

      நீக்கு
  18. வணக்கம் ஸ்ரீராம் சகோதரரே.

    என் எழுத்துக்களை ஊக்கப்படுத்தும் விதமாக இன்று என் சமையல் பதிவை இங்கு (எ. பியில்) வெளியிட்டிருப்பதற்கு என் பணிவான நன்றி. எ.பி ஆசிரிய பெருமக்களுக்கும் என் உளமார்ந்த நன்றிகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  19. வணக்கம் சகோதரரே

    இன்று என் பதிவு வெளியாகும் என்பதை வீட்டின் கெடுபிடி வேலைகளில் மறந்து விட்டேன். சென்ற வாரந்தான் (திங்களன்று) நினைவுக்கு வந்தது.

    பதிவு வெளியானவுடன் உடனடியாக வந்து நல்லதொரு கருத்துக்களை தந்த சகோதரர் துரைசெல்வராஜ் அவர்கள், ஜெயக்குமார் சந்திரசேகர் அவர்கள், ஜீவி அவர்கள், நெல்லைத்தமிழர் அவர்கள் அனைவருக்கும், சகோதரி கோமதி அரசு அவர்களுக்கும் என் அன்பான நன்றிகள்.

    இனி வரப்போகும் சகோதர, சகோதரிகளையும் அன்போடு வரவேற்கிறேன். கொஞ்சம் வேலைகளில் பிஸியாக உள்ளதால் அனைவருக்கும் சற்றுப் பொறுத்து பதில் கருத்துரைகளை தனித்தனியாக தருகிறேன். அனைவரும் மன்னிக்கவும். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  20. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

    பூசணி/பரங்கி கொண்டு செய்யப்படும் சமையல் பொதுவாக பலருக்கும் பிடிப்பதில்லை. ஆனால் இந்த இரண்டுமே உடலுக்கு நல்லது. தனியாக இருப்பதால் இங்கே சமைப்பதில்லை. வீட்டுக்கு வரும்போது தான் இதையெல்லாம் சுவைக்க வேண்டியிருக்கிறது. ஒருவருக்கு என்று இங்கே வாங்குவது கடினம்.

    சமையல் குறிப்புகளும் மற்றவையும் நன்று. தொடரட்டும் பதிவுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி.

      ஆமாம். சிலருக்கு இதன் இனிப்புச் சுவை பிடிக்காது. வெண்பூசணியும் அவ்வளவு இனிக்காதென்றாலும், அதன் சுவையும் சிலருக்கு பிடிக்காது. அங்கு உங்கள் ஒருவருக்கென இதை செய்து கொள்வது கடினம்தான்.அதன் பத்தைகள் ஒன்றிரண்டாக கிடைத்தால், (காய்கள் விற்பனைக்கென்று முழுதாக இல்லாமல்) செய்து கொள்ளலாம்.

      பதிவை ரசித்து படித்தமைக்கு என் மனம் நிறைந்த நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  21. பறங்கி கூட்டு,துவையல் செய்முறை படங்கள் நன்று.

    இடையே வித்தியாசமாக நாயனார் கதைப்பகிர்வும் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகையும், கருத்துப் பகிர்வும் கண்டு மிக்க மகிழ்ச்சியடைந்தேன். நன்றி சகோதரி .

      பறங்கி கூட்டு, துவையல் பதிவை ரசித்துப் படித்தமைக்கும், நடுவில் வந்த நாயனார் கதையை படித்து ரசித்தமைக்கும் என் மனமார்ந்த நன்றி சகோதரி. தொடர்ந்து என் பதிவுகளுக்கு ஆதரவு தாருங்கள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  22. கமலாக்கா வாங்க வாங்க உங்க குறிப்பா இன்று!!

    மாறநாயினார் கதை மீண்டும் உங்கள் வரிகளில் வாசித்தேன்.

    நாமளும் அப்படித்தானே ஒரே காய வைச்சு வெவ்வேறாகச் செஞ்சுற மாட்டோம்!! கதையோடு சமையல் சூப்பர் கமலாக்கா.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி சகோதரி.

      தங்கள் அன்பான வரவேற்பை கண்டு மனம் மகிழ்ச்சி கொள்கிறது. சமையல் பதிவையும், கதையையும் ரசித்துப் படித்தமைக்கு மிக்க நன்றி சகோதரி.

      /நாமளும் அப்படித்தானே ஒரே காய வைச்சு வெவ்வேறாகச் செஞ்சுற மாட்டோம்!! கதையோடு சமையல் சூப்பர் கமலாக்கா./

      அதானே..! வீட்டுக்கு விருந்தாளிகள் வரும் போது இப்படியெல்லாம் நாம் நம் சமையல் திறமைகளை செய்து காண்பிப்போமே ..! அத்தோடு அவர்கள் விரும்பி கேட்கும் உணவுகளையும் சேர்த்துச் செய்து...
      உங்கள் அன்பான பாராட்டுகளுக்கு மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  23. நானும் பூஷணி துவையல் செய்வதுண்டு. பெரும்பாலும் அதனுள் இருக்கும் அந்த நடுவில் இருக்கும் பகுதி இப்ப அந்த வார்த்தை டக்குனு கிடைக்க மாட்டேங்குது, அதை செய்வதுண்டு, வேக எல்லாம் வைக்காமல் அப்படியே லைட்டா வதக்கி அல்லது வதக்காமல் நீங்க வறுத்து வைப்பது போலத்தான் அதே சாமான் தான் வறுத்து சேர்த்து துவையல்.

    உங்க மெத்தடும் சூப்பர் இப்படியும் செய்து பார்த்திடலாம்.. அதாவது வேக வைத்து

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி சகோதரி.

      நீங்களும் இது போல் செய்வதறிந்து மகிழ்ச்சி. நானும் முன்பு பூசணியின் தோலை மெலிதாக அறிந்து லேசாக வதக்கித்தான் செய்து கொண்டிருந்தேன். இப்போது கொஞ்சம் பட்டையாக எடுப்பதால் சிறிது நேரம் வேக வைக்கிறேன். இது ஒரு இரு தினங்களுக்கு (மீதமிருந்தாலும்) வம்பாகாமல் இருக்கிறது. இளம் கொட்டையாக இருந்தால்,தோலை மெல்லியதாக எடுப்பது கஸ்டமாகி விடுகிறது. அதனால் இப்படி...!

      தங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்.
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    2. ஆம். கோது. நன்றி சகோதரரே.

      நீக்கு
  24. கூட்டும் இதேதான் ஆனா உகி போட்டுச் செய்ததில்லை.

    பூஷணிக்காயில் பால் கூட்டு, கேரளத்து எரிசேரி, கேரளத்து புளியங்கறி, இப்படிச் செய்வதுண்டு.

    துவையும் இந்தக் கூட்டும் நல்லாருக்கும் கமலாக்கா!

    சூப்பர் செய்முறைக் குறிப்பு உங்கள் வரிகளில்.

    சும்மா அறுவை அது இதுன்னு எல்லாம் சொல்லக் கூடாது சொல்லிப்புட்டேன்!! ஓகேயா!!! ஹாஹாஹா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி சகோதரி.

      நானும் எப்போதும், இந்த சிகப்பு பூசணி கூட்டு மட்டுந்தான் செய்வேன். அன்று காய் காணாதது போல் தோன்றியதால் உ. கி உடன் சேர்ந்தது.

      கேரள பூசணி பால்கூட்டு, எரிசேரி போன்றவையும் அமர்க்களமாக இருக்கும். பூசணி அல்வா சூப்பராக இருக்கும்.

      தங்களது பாராட்டுக்கள் கண்டு மிகுந்த மன மகிழ்ச்சியடைந்தேன். நன்றி.

      /சும்மா அறுவை அது இதுன்னு எல்லாம் சொல்லக் கூடாது சொல்லிப்புட்டேன்!! ஓகேயா!!! ஹாஹாஹா. /

      ஹா ஹா ஹா. சொல்ல மாட்டேன். ஏனென்றால் இப்போதெல்லாம் உங்கள் அனைவருக்கும் இந்த "ரம்பம்" பழகி விட்டதென அறிவேன். ஹா. ஹா. மனம் திறந்த கருத்துரைக்கு மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  25. பூஷணி துவையல் (எனக்குப் பறங்கிக்காய்னு சொல்லவே வரதில்லை மஞ்சள் பூஷனி இல்லை பூஷணி. துவையல் நம் வீட்டில் கெட்டியாகச் செய்வதுண்டு கமலாக்கா.

    ஏன்னா எங்க ஊர்ல வெள்ளை பூஷணி - தடியங்காய், இப்படிச் சொல்லியே பழகிவிட்டது. இல்லைனா திருஷ்டிப்பூஷணி!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி சகோதரி

      ஆம். நாங்கள் சென்னையில் இருக்கும் போதுதான் இதன் பெயர் "பறங்கிக்காய்" என கற்றுக் கொண்டேன். திருநெல்வேலியில், இதை மஞ்சள் பூசணி, என்றே சொல்வோம். அது போல் வெள்ளை பூசணியை "தடியங்காய்" என்றுதான் சொல்லிப் பழக்கம்.
      சென்னை வந்ததும் கடைகளில் தடியங்காய் என்றால் என்னவென்ற கேள்வி வந்தது. இதற்குப் பெயர் வெள்ளைப்பூசணி என்றுதான் விற்பனை நடந்தது. காய்களுக்கு ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு மாதிரியான பெயர்கள். கோவைக்காய் பயன்பாடும் சென்னையிலிருக்கும் போதுதான் கற்றேன். அப்போது தி. லி பக்கம் கோவைக்காய் என்றால் தெரியாது

      நீங்கள் சொல்வது போல், வெண்பூசணி திருஷ்டி கழிப்பதற்கும் பயன்படுகிறது. சிகப்பு பூசணி வெளிநாடுகளில், வருடந்தோறும் வரும் "பேய் திருவிழாவிற்கு" பயன்படுகிறது.

      தங்கள் அன்பான பல கருத்துக்களுக்கு மிக்க நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  26. ஸ்டெப் பை ஸ்டெப்பாகச் சொல்லியிருக்கிறீர்கள் பூஷணி செய்முறை.

    இடையில் இறைவனுக்கு உணவு படைத்த தம்பதிமார்கள் நாயனார் கதை பதிவிற்குப் பொருத்தமாக இருந்தது என்பதோடு மனதிற்கு மிகவும் பிடித்தது, இதமாக இருந்தது. மிக்க நன்றி சகோதரி

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி சகோதரரே.

      பதிவை ரசித்து, பாராட்டியிருப்பதற்கு என் மன மகிழ்வுடனான நன்றி சகோதரரே.

      இடையில் வந்த கதையையும் மன நிறைவுடன் படித்து ரசித்து நன்றாக உள்ளது என கூறியிருப்பதற்கு மிக்க நன்றி.

      உங்கள் ஊக்கம் தரும் கருத்துக்கள் என்னை எழுத வைத்துக் கொண்டிருக்கிறது. அதற்கு எப்போதும் நன்றியுடையவளாக இருப்பேன்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  27. சுவாரஸ்யமான செய்முறை விளக்கம் சொல்லிய விதம் அருமை சகோ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி சகோதரரே.

      பதிவு சுவாரஸ்யமாக இருப்பதை குறிப்பிட்டு பாராட்டியமைக்கு மிக்க நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    2. வணக்கம் சகோதரரே

      உங்களுக்கும் ஒரு கருத்தை தந்திருந்தேன். சட்டென அது மாயமாகி விட்டது. அதைத் தேடி தரும் வேலை சகோதரர் ஸ்ரீராமுடையது. அவருக்கும், பதிவை ரசித்து கருத்து தந்திருக்கும் உங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    3. காணாமல் போன கருத்துக்களை வெளிக் கொணர்ந்தமைக்கு நன்றி ஸ்ரீராம் சகோதரரே.

      நீக்கு
  28. பதில்கள்
    1. வணக்கம் சகோதரரே

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி சகோதரரே..

      பதிவை ரசித்து தாங்கள் தந்த பாராட்டிற்கு என் பணிவான நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  29. வணக்கம் சகோதர சகோதரிகளே

    இன்றைய என் சமையல் பதிவில் அனைவரும் கலந்து கொண்டு அவரவர் கருத்துக்களை மனமுவந்து தந்த அனைவருக்கும் என் அன்பான நன்றிகள். 🙏.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரரே

      இதில் சகோதரர் கில்லர்ஜி அவர்களுக்கு இரண்டு முறை தந்த பதில் கருத்துக்கள் எங்கோ காணாமல் போய் விட்டது. அதனால் அங்கு தட்டச்சு செய்யாமல், இங்கு தனியாக ஒரு முறை தட்டச்சு செய்கிறேன். இதுவாவது நிலைத்து நிற்கிறதா எனப் பார்க்கலாம். நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  30. பரங்கிக்காய்+உ.கி. கூட்டு, மற்றும் துவையல் நன்றாக இ
    ருக்கிறது. சாதாரணமாக குழந்தைகளுக்கு சாதம் ஊட்டும் பொழுது கதை சொல்வோம், பெரியவர்கள் எங்களுக்கு சமைக்கும் பொழுதே கதையா?? Enjoyed 👌

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரி

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றி சகோதரி.

      சமையல், மற்றும் கதை பகிர்வு பதிவை ரசித்து தாங்கள் தந்த பாராட்டுகளுக்கு மிக்க நன்றி.

      /சாதாரணமாக குழந்தைகளுக்கு சாதம் ஊட்டும் பொழுது கதை சொல்வோம், பெரியவர்கள் எங்களுக்கு சமைக்கும் பொழுதே கதையா?? Enjoyed 👌/

      ஹா ஹா ஹா. ஆம். கதை கேட்கும் போது எந்த வொரு செயலிலும் அலுப்பு வராமல் இருக்குமில்லையா? அதனால், இங்கு பெரியவர்களுக்காக ஆன்மிக கதை. .எனக்கும் கதைச் சொல்லும் போது எல்லோரும் செய்வதையே திரும்ப செய்து காட்டும் ஒரு தாழ்வு மனப்பான்மை வராமல் இருப்பதற்காக இந்த பக்திக் கதை. தங்களது ஊக்கம் நிறைந்த பாராட்டுகளுக்கு மிக்க நன்றி சகோதரி 🙏.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!