ஞாயிறு, 28 ஜூலை, 2024

நான் தரிசனம் செய்த கோயில்கள் – ஐந்து துவாரகைகள் யாத்திரை – பகுதி 30 : நெல்லைத்தமிழன்

 

பேரரசர் ஜஹாங்கீரின் ஆசை மனைவி நூர்ஜஹான் (இவரை எப்படித் திருமணம் செய்துகொண்டார் என்ற கதைக்கெல்லாம் போனால், நமக்கு ரசிக்காது. பேரசரின் நன்மதிப்பை நாம் குலைப்பானேன்). ஜஹாங்கீருக்கு அவரது முதல் மனைவி மன்பாயின் மூலமாகப் பிறந்த குஸ்ரூ மற்றும் குர்ரம் இரண்டு குழந்தைகள். அக்பர் மற்றும் முக்கியத் தளபதிகள், ஜஹாங்கீரைவிட, குஸ்ரூ, அக்பருக்குப் பிறகு சக்ரவர்த்தியாக இருந்தால் நல்லது என்று நினைத்ததால், குஸ்ரூவின் கண்களை ஜஹாங்கீர் பிடிங்கிவிட்டார் (கண் தெரியாதவர்கள் அரசராக முடியாது. இதனால் ஏற்பட்ட மஹாபாரதம் நமக்குத் தெரிந்ததுதான்). 

குர்ரம் வீரத்தில் சளைத்தவர் இல்லை. தந்தையின் ஆசை மனைவியும், அரசாங்கத்தில் மிகுந்த செல்வாக்கும் பெற்றிருந்த நூர்ஜஹானிடம் ரொம்பவே ஜாக்கிரதையாகவே இருந்தார். ஒரு நேரத்தில் நூர்ஜஹானுக்கு, தனக்கு மாத்திரமே செல்வாக்கு இருக்கவேண்டும், நாளை ஷாஜஹான் அரசரானால் தன் வாழ்வு அதோகதி என்ற எண்ணம் இருந்தது. ஆனால் நூர்ஜஹானுக்கு ஆதரவாக இருந்த அவரது சகோதரர் அஸஃப்கான், தன் மகளை ஷாஜஹானுக்குத் திருமணம் செய்துகொடுத்திருந்தார். பல அமைச்சர்களுக்கும் மூத்த பிரமுகர்களுக்கும் நூர்ஜஹான், ஜஹாங்கீரை ஆட்டிவைப்பது பிடிக்கவில்லைமுக்கியமான கட்டத்தில், அஸஃப்கானும் தன் மருமகனுக்கு ஆதரவாக இருந்து, ஷாஜஹான்  அரியணை ஏற வழிவகுத்துத் தந்தார். (ஒரு பத்தியில் எழுதிவிட்டாலும், ஷாஜஹானின் மனதில் என்ன ஓடியிருக்கும் என்று நமக்குப் புரியும். அண்ணன் குஸ்ரூவின் கண்ணைப் பறித்த மாதிரி, தனக்கும் அந்தக் கதி நேர வாய்ப்பிருப்பதை அவர் உணர்ந்திருப்பார்).

ஷாஜஹானுக்கு நான்கு மகன்கள். மூத்தவர் தாராவை ஆரம்பம் முதலே தனக்கு அனுசரணையாக வைத்துக்கொண்டார். பிற்பாடு அவருக்குத்தான் அரசபதவி வரப்போகிறது என்று. தாராவுக்கு போரை விட, இறை மற்றும் கலைகளில் விருப்பம் அதிகம், ஓரளவு நல்ல குணங்களோடு இருந்தவர். மூன்றாமர் ஔரங்கசீப்போ போர்த்திறமை மிக்கவர், ஆக்ரோஷமானவர். இதனாலேயே ஷாஜஹான் ஔரங்கசீப்பை தெற்குப் பகுதிக்குப் போய் போர் செய், அந்த அரசரோடு மோது என்று களத்திற்கே அனுப்பிக்கொண்டிருந்தார், அவருடைய வெற்றிகளை அங்கீகரிக்கவில்லை

ஆனால் இந்த மாதிரிப் பயணங்களால் பலருடனான தொடர்பும், உரமும் ஔரங்கசீப்பிற்கு வந்தமைந்தன. ஔரங்கசீப்பிடமும் அரச ரத்தம் ஓடியதல்லவா? 1657ல் ஷாஜஹான் உடல் நலம் இல்லாது இருந்தபோது, அரசரைக் காக்கவேண்டும் என்ற போர்வையில் தாராவுடன் போர் செய்து வெற்றிபெற்றார். ஷாஜஹானோநிலைமை கைமீறிப் போனதைப் புரிந்துகொள்ளாமல், ஔரக்கசீப்பிடம் ராஜ்ஜியத்தை ஒப்படைக்காமல், ஆக்ரா கோட்டைக் கதவுகளை மூடச் செய்து, ஔரங்கசீப்பை உள்ளே அனுமதிக்கவில்லை. ஔரங்கசீப்போ, ஆக்ரா கோட்டைக்குள் நீர் வரும் வழியை அடைத்து  மூன்றே நாட்களில் ஆக்ரா கோட்டையைக் கைப்பற்றி, பிறகு முகலாய சக்ரவர்த்தியாகவும் முடிசூடிக்கொண்டார். தோல்வியடைந்த தந்தை ஷாஜஹானை ஆக்ரா கோட்டையில் இருந்த அவரது அரண்மனையிலேயே சிறைவைத்துவிட்டார். அரச உடை, பாதுகாப்பு என்று எதுவும் இல்லாமல், சுற்றி இருந்த பாதுகாவலர்களின் அவமரியாதையை அனுபவித்தும், தன் மூத்த மகள் ஜஹானாராவின் அரவணைப்பில் தன் கடைசிக் காலம் வரை (சுமார் எட்டு ஆண்டுகள்) இந்த அரண்மனையிலேயே இருந்தார் ஷாஜஹான்.


பளிங்குத் தரையும், பளிங்கில் சல்லடை போன்ற சுவர் அமைப்பும்

இப்படியெல்லாம் பளிங்கில் அலங்கரித்து ஆடம்பரமாக வைத்துக்-கொள்வார்களா என்று நீங்கள் நினைக்கலாம். பெர்ஷியன் ஆர்ட் அப்படிப்பட்டது. நான் பஹ்ரைனில் இருந்தபோது கம்பெனி ஓனரின் ஒரு வீட்டைப் பார்த்திருக்கிறேன். அவர் வருடக்கணக்காக, பெர்ஷியாவிலிருந்து கலைஞர்களைக் கூட்டிவந்து வீட்டை அழகுபடுத்திக்கொண்டே இருப்பார். அவற்றின் படங்களை ஒரு நாள் பகிர்கிறேன். (மிலியன்கள் கணக்கில் செலவழித்தார். கடைசியில் கம்பெனியும் அழிந்தது) அவரே அப்படி என்றால், சாம்ராஜ்ய சக்ரவர்த்தியின் அரண்மனை எப்படி இருக்கவேண்டும்?

ஷாஜஹானின் பிரத்யேக மசூதிக்குச் செல்லும் பாதை

சிறைப்பட்டிருந்த காலத்தில் அவரது சொந்த உபயோகத்திற்கான, வெள்ளைப் பளிங்கினால் கட்டப்பட்ட பள்ளிவாசல்


ஷாஜஹானின் அரண்மனைக்கு வெளியே உள்ள திவான் இ காஸ் அரசரைச் சந்திப்பதற்கான Private Chamber தனியறைஇதன் உள் பகுதியில்தான் அரசர் (1635) ஷாஜஹான் பிரமுகர்களைச் சந்திப்பாராம். அந்தச் சமயத்தில்தான் மயிலாசனம் செய்யப்பட்டு உபயோகிக்கப்பட்ட து. (இப்போது விக்டோரியா-ஆல்பர்ட் மியூசியம், லண்டனில்)



நாம் திவான் இ காஸ் என்ற மண்டபத்தின் வெளிப்புறத்தில் நிற்கிறோம். அங்கிருந்து பார்த்தால் ஷாஜஹான் அரண்மனை (மேற்கூரையை பழுது பார்க்கிறார்கள்) தெரிகிறதா?

இங்கிருந்து தாஜ்மஹலின் தோற்றம்


நான் நின்றுகொண்டிருப்பது ஜஹாங்கீரின் அரியாசனம் முன்பு. அங்கிருந்தே தாஜ்மஹல் தூரத்தில் தெரிகிறது. (நான் நின்றுகொண்டிருக்கும் இடத்திலிருந்து நுறு அடிகளுக்குள்தான் ஷாஜஹான் சிறைவைக்கப்பட்டிருந்த அவரது மாளிகை பால்கனி இருக்கிறது. அங்கிருந்து ஷாஜஹானுக்கும் இதே காட்சிதான் கிடைத்திருக்கும்.

Diwan I Khas – அரசர் தனிப்பட்டவர்களைச் சந்திக்கும் மாளிகை – 1900ல் இருந்த நிலை.

பிரமுகர்களைச் சந்திக்கும் திவான் இ காஸ் வெளிப்பகுதியில் (திறந்தவெளி) இரண்டு பளிங்கு ஆசனங்களைக் காணலாம். அதில் வெள்ளைப் பளிங்கு ஆசனம் சட் என்று தெரியும். அதற்கு எதிர்ப்பகுதியில் (ரெண்டு பசங்க நின்றுகொண்டிருக்கும் இடம்) அதைவிடப் பெரிய, தடிமனான கறுப்புப் பளிங்கு ஆசனம் இருக்கும். இதன் க்ளோஸப் படங்களைக் கீழே கொடுத்துள்ளேன்.






இந்தக் கறுப்பு, ஒற்றைக் கல்லால் ஆன, 10 ½ க்கு 10 அடி நீள அகலமும் 6 அடி உயரமும் கொண்ட இந்தப் பளிங்குக் கல்லுக்கு ஒரு வரலாறு உண்டு. அக்பருக்கு எதிராக அவரது மகன் சலீம் (அவர்தான் ஜஹாங்கீர்) 1602ல் எதிர்ப்புக் குரல் எழுப்பி, அலஹாபாத்தில் தானே மன்னர் என்று முடிசூட்டிக் கொள்கிறார். நாணயங்களைத் தன் பெயரில் அச்சிட்டு, அதனால் அக்பரின் தீராத கோபத்துக்கு ஆட்பட்டுசலீம் மீது போரிட சிறிய படையை அனுப்பவும், சலீம் பயந்துகொண்டு, அக்பரிடம் மன்னிப்பு வேண்டவும், அக்பர் தன் அறைக்கு சலீமை அழைத்து வெளுத்து வாங்கினாராம். பிறகு சலீம் பெட்டிப் பாம்பாக அடங்கிக்கிடந்தாராம்.  

எதிர்ப்புக் குரல் எழுப்பிய சமயத்தில் தனக்காகச் செய்துகொண்ட ஆசனம்தான் இது. அப்போது தான் அரசர் என்று அதில் பெர்ஷியன் மொழியில் பொறித்திருக்கிறார். அதன் பெயர், அரசர் சலீமின் ஆசனம். அலஹாபாத்திலேயே இருந்த இது, 1605ல் சலீம் ஜஹாங்க்கீராக முடிசூட்டிக் கொண்ட பிறகு, திவான் இ காஸ் பகுதியில் ஒரு மாளிகை எழுப்பி, அதனுள் தன் கறுப்புப் பளிங்கு ஆசனத்தை வைத்தாராம். அந்தச் சமயத்தில்தான் அதில் புதிய பெயரான ஜஹாங்கீர் பாதுஷா என்பதையும் பொறித்தாராம். இந்த மாளிகை பிற்காலத்தில் இல்லை. ஆனால் அந்த ஆசனம் அந்த இடத்திலேயே வெட்ட வெளியில் இருக்கிறது.

திவான் இ காஸ் என்ற இந்த மாளிகையின் முன்பு இரண்டு பளிங்கு ஆசனங்களைப் பார்த்திருப்பீர்கள் (10க்கு 10 அடி, 6 அடி உயர கறுப்பு பளிங்கு ஆசனம் மற்றும் அதன் எதிரே சிறிது உயரம் குறைவான வெள்ளைப் பளிங்கு ஆசனம்). இரண்டிற்கும் இடையே 60 அடி இடைவெளி உள்ளதுவழிகாட்டி இதைப்பற்றிச் சொன்னதுகறுப்பு பளிங்குக்கல் (ஜஹாங்கீர் ஆசனம்), அரசர் உட்கார்ந்திருப்பது. வெள்ளைப் பளிங்குக்கல், பிரதம அமைச்சர் உட்கார்ந்திருப்பது. நான் கேட்டேன், இவ்வளவு தூரத்தில் இருந்தால் எப்படிப் பேசிக்கொண்டிருந்திருப்பார்கள் என்றுஅரச அலுவல்களில் அரசரிடமிருந்து வரும் மெசேஜ், அதற்கு பிரதமரின் பதில் என்றுதான் அலுவல்கள் இருக்குமே தவிர, இருவரும் அருகருகே இருந்துகொண்டு அளவளாவது போன்று இருக்காது. இருவருக்கும் இடையே தூதர்கள் (அலுவலர்கள்) நின்றுகொண்டு கருத்துகளைப் பரிமாறிக்கொள்வார்களாம். இவர்கள் இரண்டு புறமும் சிறிது தள்ளி வரிசையாக பிரமுகர்கள் இருப்பார்களாம் (நாம் திரையில் பார்ப்பதைப்போல).  சக்கரவர்த்தி மாத்திரமே indisposable. மற்றவர்கள் எல்லோருக்கும் நிலையில்லாத முக்கியத்துவம். அதனால் சக்ரவர்த்தியிடம் மிகப் பணிவுடனும் குனிந்த தலையுடனும் இருப்பார்களாம்.

அரச விளையாட்டில் மற்ற எல்லோரும் சதுரங்க விளையாட்டின் காய்கள். அக்பரின் அளவில்லாத மதிப்பையும் நம்பிக்கையையும் பெற்ற தென் பிராந்தியத் தளபதி அப்துல் ஃபஸலுக்கு, அக்பரின் மகன் சலீமால் நேர்ந்த மரணத்தைப் பார்த்தோம். இதைப்பற்றி நேர்மையாக ஜஹாங்கீர் (சலீம் சக்ரவர்த்தி ஆன பிறகு வைத்துக்கொண்ட பெயர்) தன் சுய சரிதையில் குறிப்பிட்டிருக்கிறார். அது அவசியமான ஒரு செயல் என்று தாம் கருதினோம் என்று.

இன்னொன்று, எப்போதுமே, ஒரு மனிதனின் உச்சகட்ட காலம் என்பது, 25-50 வருடங்கள். 35 வரை வீரத்தில் சிங்கமாக இருப்பவர், பிறகு கனிந்து நல்ல அரசராக மாறுவார். சலீமோ, தனக்கு 30 வயசாகியும், இன்னும் சக்ரவர்த்தியின் கட்டளையை நிறைவேற்றும் பலரில் ஒருவனாகத்தானே இருக்கிறோம், அரசராகவில்லையே என்ற தவிப்பு. அதில் பெரிய தவறில்லை என்றே நான் நினைக்கிறேன். ஔரங்கசீப், தன் முன்னோர்களின் வரலாறையும், தன் தந்தையிடமும் சகோதர்களிடமும் தான் நடந்துகொண்ட விதத்தையும் அறிந்திருந்ததனால், கடைசி வரை தன் மகன்களையோ இல்லை மற்றவர்களையோ தன்னிடம் நெருங்கவிடவில்லை. (சகோதரி ஜஹானாரா மாத்திரமே அவர் பக்கத்தில் நெருங்கமுடியும்) 90 வயதுவரை அரச அதிகாரத்தைத் தன் கையில் வைத்திருந்தார். அதனால் அவர் இறந்த பிறகு பட்டத்திற்கு வந்த 70+ வயதான மகன் சோபிக்கவில்லை.

நாGகினா மசூதி

அரசகுலப் பெண்டிருக்கான (மற்றும் அரசர்களுக்கான பெண்டிர்களுக்கான) மசூதி இது. மிக அழகாகவும், ஆடவர்கள் கண்ணில் படாதவாரும் அமைந்த மசூதி இதுஇதன் முன்பு அழகிய நீரூற்றும் இருந்ததாம். நான் சென்றபோது அங்கிருந்தவர்கள், காலணியைக் கழற்றிவிட்டு வரும்படி சொன்னார்கள். அங்கு நினைவுக்காக புகைப்படம் எடுத்துக்கொண்டேன்.




பொதுமக்களை அரசர் சந்திக்கும் மண்டபம் (Hall of Public Audience)

இந்த மண்டபம் மிக அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில்தான் பிரமுகர்கள் வரிசையாக நின்று அரசரிடம் பணிவார்கள். 208 அடிக்கு 76 அடி அகலத்தில் அமைந்துள்ள இந்த மண்டபத்தில் 27 நட்சத்திரங்களைக் குறிக்கும் தூண்கள் உள்ளன. முழுவதும் சிவப்புக் கல்லினால் கட்டப்பட்டு, வெளியில் வெண்பூச்சு பூசப்பட்டிருக்கும் இந்த மண்டபம், சட் என்று வெள்ளைப் பளிங்கு மாளிகை போன்றிருக்கும். இங்குதான் அரசர் தினசரி அலுவல்களை மேற்கொள்ளுவார். அவர் முன்பு அனைத்து அலுவலர்கள், பிரமுகர்கள், மிகவும் பயபக்தியுடன் வரிசையாக நின்றுகொண்டிருப்பார்களாம்.




அரசர் அமர்ந்திருக்கும் இடம். மூன்று வாயில்கள் இருப்பது தெரிகிறதா?

அந்தக் காலத்தில், முகலாய சாம்ராஜ்ய சக்ரவர்த்தி இங்கு மயிலாசனத்தில் அமர்ந்திருந்தபோது, இந்த இடங்களெல்லாம் பொன்னும் மணியும் மரகதம் மாணிக்கமுமாக எப்படி மின்னியிருந்திருக்கவேண்டும்?

இங்குதான் முகலாய அரசர், புகழ்பெற்ற மயிலாசனத்தில் அமர்ந்திருந்தாராம். பிறகு மயிலாசனம் நாதிர் ஷா அவர்களால் கவரப்பட்டு, அவரிடமிருந்து பின்பு பிரிட்டிஷ் வசம் சென்றது. தற்போது லண்டனில் உள்ள மியூசியத்தில் உள்ளது. (எகிப்திலிருந்து மம்மிகளையும் (இந்த மம்மி, ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் இறந்த உடல்அரசியலாக்கிடாதீங்கப்பா) கைப்பற்றிச் சென்ற பிரிட்டிஷார், விலையுயர்ந்த வஸ்துக்களை விட்டுவைப்பார்களா என்ன?)

கீழே இருக்கும் பளிங்கு மேடை. இது அரசரிடம் மனு தரவோ இல்லை அலுவல் சம்பந்தமான ஓலைகள் தரவோ, ஒருவர் நின்றுகொள்ள அமைக்கப்பட்டிருக்கலாம். இதனை அக்பர் சம்பந்தப்பட்ட திரைப்படத்தில் பார்த்திருப்பீர்கள். அல்லது மதப் பிரமுகர் அமர்ந்திருந்திருக்கும் இடமாகவும் இருந்திருக்கலாம். (கொஞ்சம் விட்டால் பார்வையாளர்கள் தங்கள் பெயரை எழுதிவிடுவார்கள் என்று வேலி போட்டிருப்பார்கள்)

Hall of Public Audience – முழுத் தோற்றம்

ஆக்ரா கோட்டையின் உன்னதம், ஷாஜஹானுக்குப் பிறகு இல்லை. முகலாய அரசர்களில் ஷாஜஹான் கடைசியாக இந்த அரண்மனையில் வாழ்ந்தவர். ஔரங்கசீப், தில்லிக்குக் குடிபெயர்ந்துவிட்டார். பிற்பாடு பிரிட்டிஷார்கள், முகலாயர்கள் ஆட்சியை முடித்துவைத்தபோது, ஆக்ரா கோட்டை அவர்கள் வசம் வந்தது.

Hall of Public Audienceஐப் பார்த்த பிறகு அதனை விட்டுக் கீழிறங்கி புல்வெளியில் இருந்த பாதையில் நடக்க ஆரம்பித்தேன். மைதானத்தின் நட்ட நடுவே ஒரு சமாதி இருந்தது. இவ்வளவு அலங்காரமான சமாதியா? அது என்னவாயிருக்கும் என்ற யோசனையில் அதனை நோக்கி நடந்தேன். அது என்ன என்பதை அடுத்த வாரம் பார்க்கலாம்.

 (தொடரும்) 

= = = = = = = = =

60 கருத்துகள்:

  1. கற்பக கணபதி
    கனிவுடன் காக்க..
    முத்துக்குமரன்
    முன்னின்று காக்க..
    தையல் நாயகி
    தயவுடன் காக்க..
    வைத்திய நாதன்
    வந்தெதிர் காக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..
    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  2. தண்செய்யும் வாழ்க.. தஞ்சையும் வாழ்க..
    தளிர் விளைவாகித்
    தமிழ் நிலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காவிரியில் நல்ல வெள்ளப் பெருக்கு ஏற்பட்டிருக்க வேண்டுமே. நீர் வந்துவிட்டதா?

      நீக்கு
  3. ஐந்து துவாரகைகள் யாத்திரைத் தொடர்ச்சி எப்போ வரும் என்ற நினைப்பு மேலோங்குகிறது.
    முஸ்லிம் மன்னர்கள், அவர்கள் பற்றிய செய்திகள் துவாரகை யாத்திரையின் உள்ளடக்கத்தில் அடங்காமல் பிதுங்கலாகப் போய் விடக்கூடாது. வேண்டுமானால் இந்தப் பகுதிகளுக்கு தனி உள் தலைப்பு கொடுத்து தொடர்ந்து எழுதலாம். எப்பொழுது பெருமைமிகு துவாரகை யாத்திரையின் தொடர்ச்சி தொடங்குகிறதோ அந்த இடத்திலிருந்து இந்த 'ஐந்து துவாரகைகள் யாத்திரை' தலைப்பை மீட்டெடுத்துத் தொடரலாம்.
    இந்தத் தொடரை ஒரு புத்தக அமைப்பில் மனதில் உருவகம் கொண்டு நான் பார்ப்பதால் இந்த எண்ணம் தோன்றியது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜீவி சார். உங்கள் கருத்து நூற்றுக்கு நூறு சரிதான். எப்போதும் யாத்திரை எழுதும்போது, இடையில் சில வாரங்கள் மற்ற தலைப்பில் படங்கள் தொகுப்பு வெளியிடுவேன். காரணம் தொடர்ந்து கோவில்களாக, சிற்பங்களாக அமைந்தால் ரசிக்காது என்று. இந்தத் தொடரில் ஆக்ரா கோட்டை மற்றும் தாஜ்மஹல் அமைந்துவிட்டது. அனேகமாக இன்னும் ஒரு வாரத்தில் யாத்திரை துவங்கிவிடும். ஆக்ராவிலிருந்து புறப்பட்டுவிடுவோம் கண்ணனைத் தரிசிக்க

      நீக்கு
  4. ஆக்ரா கோட்டையும், முகலாய சரித்திரமும் கூடுதல் ஆகிவிட்டது போல் தோன்றுகிறது. தலைப்புக்கேற்ற உள்ளடக்கத்துக்கு திரும்பும் நேரம் வந்துவிட்டது என்று நினைக்கிறேன்.
    துவாரகை யாத்திரைக்கு திரும்புங்கள்.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜெயகுமார் சார். ஞாயிறு பட உலா பகுதியை ஆக்ரா பல வாரங்களுக்குப் பிடித்துக்கொண்டது. விரைவில் ஆக்ராவை விட்டுக் கிளம்பிவிடுவோம்.

      நீக்கு
  5. வாரிசுகளுக்கு தக்க வயது வந்தும் ஆட்சி அதிகாரம் கிடைக்கவில்லை என்றால் என்ன நடக்கும் என்பதையும், 70 வயதில் ஆட்சி கிடைத்தால் என்ன ஆகும் என்பதையும் இன்றும் காண்கிறோமே...!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா. இதற்குக் காரணம், அடுத்த தலைமுறையைத் தலைவர் ஆக்கினால் தன் அதிகாரம், மரியாதை முழுமையாகப் பறிபோய்விடும் என்ற நியாயமான அச்சம்தான். பேச முடியாத நிலைமையிலும் கட்சித் தலைவர் பதவியை விட்டுக்கொடுக்காத கருணாநிதி மாத்திரம் இந்த வரலாற்று உண்மையைப் புரிந்துகொள்ளாமலா இருந்திருப்பார்?

      நீக்கு
    2. இரண்டாம் கட்ட தலைவர்கள் உருவாகாமல் சாமர்த்தியமாகத் தடுத்துக் கொண்டிருக்கும் தலைவர்கள் அத்தனை பேருமே தாங்கள் சார்ந்திருக்கும் கட்சிக்கு மேலாக தங்களைக் கற்பிதம் கொண்டு கட்சியின் மேலான வளர்ச்சிக்கு தடையாகிப் போய்விடுகிறார்கள்.
      அந்தந்த நேர கட்சியின் வளர்ச்சிக்குத் தாங்கள் தான் காரணம் போன்ற ஒரு பிரமையை ஏற்படுத்தி விடுகிறார்கள். இது நாளாவட்டத்தில் ய்தேச்சிகார போக்க்சியும் தனி நபர் வழிபாட்டையும் ஏற்படுத்தி விடுகிறது
      ஆனால் யதார்த்த உண்மையாகப் பார்க்கப்போனால் திறமையான புத்திசாலியான நடைமுறை தந்திரங்கள் அறிந்த
      அதிகாரிகளின் ஆலோசனைகள் தாம் ஆட்சியை நடத்திக் கொண்டிருப்பது தெரிய வரும். உள்கட்சி ஜனநாயகம் என்று ஒன்றிருக்கிறது. அது பெரும்பாலும் எல்லாக் கட்சிகளிலும் இல்லாமல் போய்விட்டதாகவே கருதத் தோன்றுகிறது.

      நீக்கு
    3. //இரண்டாம் கட்ட தலைவர்கள் உருவாகாமல் சாமர்த்தியமாகத் தடுத்துக் கொண்டிருக்கும் தலைவர்கள்// இது எல்லா இடங்களிலும் உண்டு ஜீவி சார்... தனியார் நிறுவனங்களிலும், தனக்குக் கீழாக வேலை பார்ப்பவரை project செய்தால், தன்னுடைய வேலைக்கே உலை வைப்பதாக ஆகிவிடும் என்றே பலர் நினைத்துச் செயல்படுகின்றனர்.

      Insecurity என்ற எண்ணம் மேலோங்கிவிடுவதால் மற்றவர்களை வளரவிடுவதில்லை. இதில் ஓரளவு நியாயம் இருக்கிறது. காரணம், (உதாரணமா) ப.சிதம்பரத்தின் qualifications மற்றும் புத்திசாலித்தனம் பளிச் என்று இருந்தாலும் அவருக்கு பத்து வாக்குகள் கிடைக்கணும் என்றால் காங்கிரஸ் என்ற கப்பல் இருந்தால்தான் முடியும். காங்கிரஸிலிருந்து அவரை வெளியேற்றினால் அவருக்கு அவர் வீட்டார் கூட வாக்களிக்க மாட்டார்கள். அதனால்தான் இருக்கும் இடத்திற்கு விசுவாசம் காண்பிப்பதுபோல இருந்து தன் பையனைத் தவிர மற்றவர்களை வளரவிடுவதில்லை

      நீக்கு
    4. //இரண்டாம் கட்ட தலைவர்கள் உருவாகாமல் சாமர்த்தியமாகத் தடுத்துக் கொண்டிருக்கும் தலைவர்கள்// இது எல்லா இடங்களிலும் உண்டு ஜீவி சார்... தனியார் நிறுவனங்களிலும், தனக்குக் கீழாக வேலை பார்ப்பவரை project செய்தால், தன்னுடைய வேலைக்கே உலை வைப்பதாக ஆகிவிடும் என்றே பலர் நினைத்துச் செயல்படுகின்றனர்.

      Insecurity என்ற எண்ணம் மேலோங்கிவிடுவதால் மற்றவர்களை வளரவிடுவதில்லை. இதில் ஓரளவு நியாயம் இருக்கிறது. காரணம், (உதாரணமா) ப.சிதம்பரத்தின் qualifications மற்றும் புத்திசாலித்தனம் பளிச் என்று இருந்தாலும் அவருக்கு பத்து வாக்குகள் கிடைக்கணும் என்றால் காங்கிரஸ் என்ற கப்பல் இருந்தால்தான் முடியும். காங்கிரஸிலிருந்து அவரை வெளியேற்றினால் அவருக்கு அவர் வீட்டார் கூட வாக்களிக்க மாட்டார்கள். அதனால்தான் இருக்கும் இடத்திற்கு விசுவாசம் காண்பிப்பதுபோல இருந்து தன் பையனைத் தவிர மற்றவர்களை வளரவிடுவதில்லை

      நீக்கு
  6. வழக்கம் போலப் படங்கள் சிறப்பு. எந்த விதத்தில் சிறப்பு என்றால் அவற்றைப் பெரிது பண்ணிப் பார்க்கும் பொழுது ஏதோ அந்தக் குறிப்பிட்ட இடத்தில் நாமே நின்று கொண்டு நேரடியாகப் பார்ப்பதைப் போன்ற உணர்வைத் தோற்றுவிக்கிறது. அந்த உங்கள் திறமைக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஜீவி சார். எடுத்த படங்களில் சிறப்பானவற்றைக் கோர்த்திருக்கிறேன். அங்கு இருந்தபோது என்னைக் கவர்ந்தவைகளை நான் பார்க்கும் பார்வையில் புகைப்படங்களாக எடுத்தேன்.

      நீக்கு
  7. படங்கள் செமையா இருக்கு நெல்லை! வழக்கம் போல.

    நல்ல கோணங்கள், க்ளோஸப் காட்சின்னு!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  8. அது சரி ஒரு படத்துல நெல்லை அண்ணே ரொம்ப டயர்டா முகம் கருத்துப் போய்!!! வெயிலில் Tan ஆகிருக்கோ?!!! அந்த க்ளோஸப் படம்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்க வேற கீதா ரங்கன்... யாத்திரையின்போது ஷேவ் செய்துகொள்ளக்கூடாது என்று யாத்திரை நடத்துபவர் எப்போதும் சொல்லுவார். நானோ தினமும் ஷேவ் செய்யாமல் இருந்ததே இல்லை. சரி ஒரு முறை இதையும்தான் கடைபிடிப்போமே என்று பார்த்தால், .... என் முகத்தை எனக்கே பார்க்கப்பிடிக்கலை. அதாவது ஷேவ் செய்யாவிட்டால் ஃப்ரெஷ்னெஸ் இருப்பதில்லை. அதனால் அந்த யாத்திரையோடு சரி..பிறகு எப்போதுமே கடைபிடித்ததில்லை.

      நீக்கு
  9. (இவரை எப்படித் திருமணம் செய்துகொண்டார் என்ற கதைக்கெல்லாம் போனால், நமக்கு ரசிக்காது. பேரசரின் நன்மதிப்பை நாம் குலைப்பானேன்//

    ஹாஹாஹா ரசிக்காது என்பதை விட, அதெல்லாம் அவங்கவங்க தனிப்பட்ட விஷயம். ஊருக்கு நல்லது செஞ்சாங்களா....மக்களுக்கு நல்லது செஞ்சாங்களா அம்புட்டுத்தான் நாம பார்க்கணும். தனிப்பட்ட விஷயங்களுக்குள் நுழைவது இப்ப இருக்கற யுட்யூப் சானல்கள் அலசி ஆராய்ந்து என்னவோ உலகத்துக்கு நல்லது செய்யறா மாதிரி போடறாங்க பாருங்க அந்த மாதிரி ஆகிடும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லை கீதா ரங்கன்... தன் படைத்தளபதி, அமைச்சரவை சகா, முக்கியஸ்தர்கள் என்று யாருடைய மனைவியோ இல்லை மகளோ அரசர்கள் கண்ணில் பட்டுவிட்டால் ஆபத்துதான். மனைவியாக இருந்தால், கணவனை தொலை தூரத்திற்கு அரசு விஷயமாக அனுப்பிக் கொலை செய்துவிட்டு மனைவியைத் திருமணம் செய்துகொள்வார்கள். ஜஹாங்கீர் கதையும் அப்படித்தான்.

      நமக்கே தெரியும் ஷாஜஹான், மும்தாஜை எங்கு பார்த்து எப்படி லவட்டிக்கொண்டார் என்று

      நீக்கு
  10. ஷாஜஹான் அரண்மனையை பழுது பார்ப்பது தெரிகிறது.

    சில - ஓரிரு படங்கள் ரிப்பீட் ஆகிருக்கோ? நெல்லை?

    சிவப்பு கலர் பகுதில கொஞ்சம் முன்னாடி சொல்லியிருந்த நினைவு. தன்னைத்தானே முடிசூட்டிக் கொண்டு நாணயங்கள் அச்சிட்டது....

    //08 அடிக்கு 76 அடி அகலத்தில் அமைந்துள்ள இந்த மண்டபத்தில் 27 நட்சத்திரங்களைக் குறிக்கும் தூண்கள் உள்ளன. //

    அவர்களுக்கும் இந்த நட்சத்திர நம்பிக்கை இருந்ததோ?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்கள் ரிபீட் ஆக வாய்ப்பில்லைனு நினைக்கிறேன், வேறு கோணத்தில் எடுத்தவைகள் வந்திருக்கலாம்.

      முகலாயர்களுக்கும் இந்த மாதிரி நம்பிக்கைகள், வழி வழியாக அல்லது இங்கிருந்தவர்களால் சொல்லப்பட்டு வந்திருக்கலாம்.

      நீக்கு
    2. 1990களில் இருந்த நிலைமைக்கும் இப்போது இருக்கும் நிலைமைக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. காரணம் தொடர்ந்து பராமரிப்பதும், பழுதுபார்ப்பதும்தான்.

      நீக்கு
  11. நட்சத்திரம் பற்றி சொன்ன பாராவுக்குக் கீழ வரும் படங்கள் மிக அழகு அந்த டிசைன், நீங்க எடுத்த விதம் எல்லாமே செம அழகு.

    கீதா

    பதிலளிநீக்கு
  12. மூன்று வாயில்கள் படங்கள் இரண்டுமே வெவ்வேறு ஆங்கிள் லைட்டிங்கில் இரண்டாவது அந்த லைட்டிங்க் ரொம்ப நல்லாருக்கு.

    நம்ம மக்கள் எங்க போனாலும் தாங்களும் வந்து போனோம்ன்ற வரலாறு இருக்க வேண்டாமான்னு!!!! அப்படிச் செய்யறாங்க!!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு எப்போதுமே தோன்றும்.... சாதனை புரியும் சாமர்த்தியம் படைத்தவர்கள் சாதிக்கிறார்கள். அந்தத் திறமை இல்லாதவர்கள், இரசிகர் மன்றத்தில் சேர்ந்துகொள்கிறார்கள், அல்லது வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களில் தங்கள் கிறுக்கல்களைப் பதிவு செய்து வைக்கிறார்கள்.

      நீக்கு
  13. தட்டினால் தங்கம் வரும்..
    வெட்டினால் வெள்ளி வரும் என்ற மாதிரி ஆக்ரா டில்லி எங்கெங்கும் இரத்தக் கறை படிந்த பக்கங்கள்...

    வந்தார்கள் வென்றார்கள் என்ற மதன் அவர்களது கை வண்ணத்திற்கு இணையாக தங்களது பதிவு..

    படங்கள் வழக்கம் போல அழகு.. அருமை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எப்போதுமே ரத்தக்கறை படிந்திருந்தது என்று சொல்லிவிட முடியாது துரை செல்வராஜு சார். அந்த முகலாய மன்னர்கள் அரண்மனைக்கு நம் ஆன்மீகப் பெரியோர்கள் சென்றிருந்திருக்கிறார்கள் என்றால், அவர்களுக்கும் அங்கு மரியாதை இருந்தது என்றுதானே அர்த்தம்?

      ஆனால் தில்லியில் ரத்தக்கறை படிந்த ஒரு நாள் சம்பவத்தை நான் படித்திருக்கிறேன். நகரைக் கைப்பற்றிய அரசனைப் பார்த்துச் சிலர் ஏளனமாகச் சிரித்ததால் வந்த அனர்த்தம் அது. லட்சம் பேர்களுக்கு மேல் ஒரே நாளில் காவுகொண்ட சம்பவம் அது.

      நீக்கு
    2. அந்த இடம் சாந்தினி சௌக் என்பார்கள்..

      நீக்கு
  14. அருமையான உங்களின் விவரிப்பு, அழகிய புகைப்படங்கள் எல்லாமே மிகச் சிறப்பாக இருக்கின்றன! சில நாட்களாகவே நான் அதிகம் வலைத்தளப் பக்கம் வர முடியவில்லை. இன்று வந்தபோது தான் மொகலாயர்களின் கட்டிடக்கலை பற்றி நீங்கள் தொடர்ந்து எழுதி வந்திருப்பது தெரிந்தது. உடனேயே ஜுன் மாத பக்கங்களுக்குச் சென்று அங்கிருந்து அனைத்தும் படித்து இன்றைய பக்கத்திற்கு வந்து படித்தேன்! அருமை!
    நான் தொண்ணூறுகளில் ஆக்ரா, தாஜ்மஹல் செங்கோட்டையைப் பார்த்தேன். அப்போதெல்லாம் பதிவு செய்து வைத்துக்கொள்ள நிறைய வசதிகள் இல்லை. மதனின்' வந்தார்கள், வென்றார்கள்' ஐ நிறைய தடவைகள் படித்திருக்கிறேன். விஜய் டிவியில் ' ஜோதா அக்பர் ' என்ற சீரியலில் மொகலாயர்களின் கட்டிடக்கலை, கலைகள், இசை, வீரம் என்று அற்பதமாக விவரித்திருப்பார்கள். உங்கள் மூலமாக மறுபடியும் ஆக்ராவிற்கும் டில்லிக்கும் சென்று வந்த மாதிரி இருக்கிறது!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க மனோ சாமிநாதன் மேடம். பஞ்சத்வாரகா யாத்திரையின்போது இடையில் ஆக்ரா சென்றிருந்த சமயத்தில் பார்த்த இரு இடங்களை நெடியதாக படங்களுடன் பல பதிவுகளில் விவரித்திருக்கிறேன். வரலாறு சம்பந்தப்பட்ட இடங்களுக்குச் செல்வதிலும் அங்கு இருப்பவைகளைக் காண்பதிலும் எனக்கு மிகுந்த ஆர்வம் உண்டு (அந்தச் சமயத்தில் பிறந்திருந்தால் பக்கத்திலேகூடச் சென்றிருக்க முடியாது. ஜனநாயக நாட்டில் எல்லாப் பகுதிகளுக்கும் செல்லும் சுதந்திரம் இருக்கிறது, எல்லோருக்குமே)

      நீக்கு
    2. ஹைதராபாத் கோல்கொண்டா கோட்டை பற்றியும் விரைவில் எழுதுகிறேன். ஸ்ரீமஹாபக்த விஜயத்தில் சின்ன வயதில் படித்த பக்த ராமதாசர் கைது செய்யப்பட்டு இருந்த இடத்தை பிற்காலத்தில் பார்ப்பேன் என்று நான் நினைத்ததே இல்லை.

      நீக்கு
  15. தகவல்கள் அனைத்தும் எனக்கு புதிதாக இருக்கிறது.

    படங்கள் வழக்கம் போல அழகாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  16. பக்த ராமதாசர் கைது செய்யப்பட்டு சித்ரவதை அனிபவித்து சிறையிடப்பட்டு இருந்த இடத்தை தரிசிக்க எனக்கும் ஆவலுண்டு...

    பலுகே பங்காரமாயினா!..

    ஹே ராமா!.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதுக்கு நீங்க கோல்கொண்டா கோட்டை இருக்கும் குன்றின்மீது ஏறணும். நான் ஹைதிராபாத்தில் தங்கியிருந்த ஹோட்டலில் (அங்கெல்லாம் காலை breakfast ஹோட்டல் சார்ஜில் சேரும்) காலை உணவிற்கு 25-30 ஆப்ஷன்கள், சுடச் சுட செய்துதரும் வித வித தோசைகள் உட்பட இருந்தன. அதனால் நிறையச் சாப்பிட்டதால் ஏறுவதற்கு கஷ்டமாக இருந்தது. அங்குதான் அவரைச் சிறை செய்திருந்த அறை இருக்கிறது. நான் விரைவில் ஞாயிறு பகுதியில் வெளியிடுகிறேன். அந்தக் கோட்டை ஔரங்கசீப்பின் வாழ்க்கையில் சம்பந்தப்பட்டது

      நீக்கு
  17. மாணிக்க வாசகருக்குப் பின் பகத ராமதாசர்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இவர்களெல்லாரும் இந்த மண்ணில் பிறந்துவாழ்ந்தவர்கள். ராமதாசரின் காலம் சில நூற்றாண்டுகளுக்கு முன்புதான். ஆனாலும் நாம், கடவுள் இருக்காரா? எங்கே இருக்கார்? யார் பார்த்தார்கள் என்று பிதற்றிக்கொண்டிருக்கிறோம்.

      நீக்கு
  18. திரு அரங்கத்தில் நிகழ்த்தப்பட்ட கொடுமைகளை கர்நாடகத்தில் தீபாவளி அன்று நடத்தப்பட்ட வன்முறைகளை மறக்கவும் கூடுமோ!?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திருவரங்கத்தில் பன்னீராயிரம் வைணவர்கள் ஒரே நாளில் கொல்லப்பட்டனர். மேல்கோட்டையில் ஆயிரக்கணக்கில் வைணவர்கள் கொல்லப்பட்டதால் இன்றும் மாண்டியா வைணவர்கள் தீபாவளி கொண்டாடுவதில்லை. இதெல்லாம் நமக்குத் தெரியக்கூடாத வரலாறு. நமக்குச் சொல்லிக்கொடுக்கப்பட்டவை, அசோகர் மரம் நட்டார், அக்பர் குளம் வெட்டினார், ஔரங்கசீப் 6 அடியில் அடக்கம் செய்யப்பட்டான் என்பதுதான்

      நீக்கு
    2. // அசோகர் மரம் நட்டார்,//

      சாலை விரிவாக்கத்துக்கு பெருத்த இடைஞ்சல்

      நீக்கு
  19. /// நான் விரைவில் ஞாயிறு பகுதியில் வெளியிடுகிறேன்.///

    விரைவில் வெளியிடுங்கள்..
    சேவித்துக் கொள்கின்றேன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் இதனையே அடுத்த ஓரிரு வாரத் தொடராக எழுதுகிறேன். காசி பற்றியும் எழுதணும், ஆனால் உண்மையை எழுதும்போது (வரலாற்று) அதில் மதக்கண்ணோட்டம் வந்துவிடுகிறது.

      நீக்கு
    2. எழுதுங்கள்..
      எழுதுங்கள்..

      இஞ்சி தின்ற மாதிரி இருக்கும் எனக்கும்...

      நீக்கு
  20. என் மகனின் கைத்தலப் பேசியின் அழைப்பு ஒலி பத்ராசலம் ராமர் ஸ்லோகம் தான்..

    பதிலளிநீக்கு
  21. பிராட்டி மடியிருக்கின்ற திருக்கோலம்.


    ராம.. ராம..

    பதிலளிநீக்கு
  22. ராமதாஸ் கிளியை கூண்டில் அடைத்த பாவமே அவர் சிறையில் இன்னலுற்றார் என்று வாரியார் ஸ்வாமிகள் சொல்லக் கேட்டிருக்கின்றேன்...
    இப்போது காட்சியாய் கைத்தலத்தில்...

    பக்த ராமதாசர் படம் பார்த்துக் கொண்டிருக்கின்றேன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பன்னிரண்டு நாட்கள் கிளியைக் கூண்டில் அடைத்திருந்த பாவத்திற்காக பனிரண்டு வருடங்கள் சிறையில் இருக்கவேண்டியதாகிவிட்டது என்று சொல்லுவதாகச் செல்லும். இதைத்தான் நான் என் பசங்களுக்குச் சொல்லுவேன் (அவங்க யாரேனும் நாய் வளர்ப்பதில் ஆர்வம் காண்பிக்கும்போது). இன்று இந்த டாபிக் வந்ததிலிருந்து அன்றைக்கு நான் எடுத்த படங்கள் எங்கு இருக்கின்றன என்று தேடும் ஆர்வம் வந்துவிட்டது.

      நீக்கு
  23. ஆக்ரா கோட்டையும் அரசர்கள் சரித்திரமும் மிகவும் விரிவாக பல படங்களுடன் விளக்கி இருக்கிறீர்கள். பலரும் அறிந்து கொள்ளக் கூடியதான பகிர்வு.

    கோட்டையை நேரில் பார்த்த உணர்வை தருகிறது .நன்றி.

    பதிலளிநீக்கு
  24. படங்களும் வரலாறும் மிக அருமை.
    விரிவாக வரலாறு சொன்னீர்கள்.
    படங்கள் எல்லாம் ஒவ்வொரு கோணத்தில் எடுத்து அசத்தி விட்டீர்கள்.
    மீண்டும் அனைத்தையும் பார்த்து ரசித்தேன். மாதேவி சொன்னது போல நேரில் பார்த்த உணர்வுதான்.

    இன்று மாலைதான் வெளியூர் போய் விட்டு வந்தோம்.
    பல இடங்களை சுற்றிப்பார்க்க அழைத்து போனான் மகன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கோமதி அரசு மேடம். ஞாயிறு என்பதால் வெளியில் சென்றிருந்திருப்பீர்கள் என நினைத்தேன். மிக்க நன்றி

      நீக்கு
  25. விரிவான தகவல்கள்... படங்களும் சிறப்பு. தொடரட்டும் உலா.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!