சீர்காழி கோவிந்தராஜன் பாடியுள்ள இந்தப் பாடல் எத்தனை பேர்களுக்கு நினைவில் இருக்கும் என்று தெரியவில்லை! எத்தனைபேர் முன்னர் கேட்டிருப்பீர்கள் என்றும் தெரியவில்லை!
ஓர் ஆனை கன்றை உமையாள் திருமகனை
போரானை கற்பகத்தை பேணினால்
வாராத புத்தி வரும்
வித்தை வரும்
புத்திர சம்பத்து வரும்
சக்தி தரும் சித்தி தரும் தான்
சுழி போட்டு செயல் எதுவும் தொடங்கு
பிள்ளையார் சுழி போட்டு செயல் எதுவும் தொடங்கு
அதன் துணையாலே சுகம் கூடும் தொடர்ந்து
அதன் துணையாலே சுகம் கூடும் தொடர்ந்து
பிள்ளையார் சுழி போட்டு செயல் எதுவும் தொடங்கு
அழியாத பெருஞ்செல்வம் அவனே
தில்லை ஆனந்த கூத்தனின் மகனே
தில்லை ஆனந்த கூத்தனின் மகனே
பிள்ளையார் சுழி போட்டு செயல் எதுவும் தொடங்கு
வழியின்றி வேலனவன் திகைத்தான்
குற வள்ளியவள் கைபிடிக்கத் துடித்தான்
வழியின்றி வேலனவன் திகைத்தான்
குற வள்ளியவள் கைபிடிக்கத் துடித்தான்
மறந்துவிட்ட அண்ணனையே நினைத்தான்
மறந்துவிட்ட அண்ணனையே நினைத்தான்
மறு கணத்தினிலே மகிழ்ச்சியிலே திளைத்தான்
மறு கணத்தினிலே மகிழ்ச்சியிலே திளைத்தான்
பிள்ளையார் சுழி போட்டு செயல் எதுவும் தொடங்கு
கேட்டதெல்லாம் கொடுக்க வரும் பிள்ளை
அவன் கீர்த்தி சொல்ல வார்த்தைகளே இல்லை
ஆட்டமென்ன பாட்டுமென்ன அனைத்தும்
அவன் நாட்டமின்றி எவ்வாறு நடக்கும்
அவன் நாட்டமின்றி எவ்வாறு நடக்கும்
பிள்ளையார் சுழி போட்டு செயல் எதுவும் தொடங்கு
தும்பிக்கை நம்பிக்கை கொடுக்கும்
வரும் துயர் யாவும் முன் நின்று தடுக்கும்
அஞ்சேலென்றொரு பாதம் எடுக்கும்
அவன் அசைந்து வர அருள் மணிகள் ஒலிக்கும்
அவன் அசைந்து வர அருள் மணிகள் ஒலிக்கும்
பிள்ளையார் சுழி போட்டு செயல் எதுவும் தொடங்கு
அதன் துணையாலே சுகம் கூடும் தொடர்ந்து
அதன் துணையாலே சுகம் கூடும் தொடர்ந்து
பிள்ளையார் சுழி போட்டு செயல் எதுவும் தொடங்கு
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
அம்மாவுடன் ஒருநாள் ஒரு ஹிந்திப் படம் பார்க்கச் சென்றார் ஸ்ரீப்ரியா. அது 1976 ஆம் வருடம். படத்தின் பெயர் நாகின். அதில் வரும் ஒரு பாடல் ஸ்ரீப்ரியாவை மிகவும் கவர்ந்துவிட, அது போல ஒரு பாடல் தனக்கு வாய்க்காதா என்று அம்மாவிடம் மறுபடி மறுபடி அவர் குறைபட, அம்மா போய் அந்த ஹிந்திப் படத்தின் உரிமையையே வாங்கி கொண்டு வந்து தமிழில் மகளை வைத்து 'நீயா?' என்று எடுத்து விட்டார்.
அன்றைய பிரபல நடிகர்கள் நிறைய பேர் நடித்த வகையில் இது ஒரு லேண்ட்மார்க் படம். படமும் வெற்றிபெற்று சாதனை படைத்தது. ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் பாடல் காட்சியைப் பார்த்த சிவாஜி ஸ்ரீப்ரியாவிடம் பாராட்டிவிட்டு, தன்னை அந்த வேடத்திலாவது நடிக்க அழைத்திருக்கக் கூடாதா என்று கேட்டாராம். ஸ்ரீப்ரியாவுக்கு ஒரே பெருமை.
முதலில் கமல் நடிக்க வேண்டிய வேடத்தில் ரஜினியை நடிக்க அழைத்தாராம் ஸ்ரீப்ரியா. தேதிகள் இல்லாததால் கமல் நடித்தாராம்.
துரை இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு இசை சங்கர் கணேஷ். சில பாடல்களை உருவியும், சில பாடல்களை தழுவியும், சொந்தமாகவும் இசை அமைத்திருந்தார்.
அந்தப் படத்திலிருந்து ரசிக்கத்தக்க பாடல்கள் வரிசையிலிருந்து இன்று ஒரு பாடல். கமலும் லதாவும் இனைந்து நடித்த ஒரே படம் என்று நினைக்கிறேன். பாடலைப் பாடி இருப்பவர்கள் தலைவரும் சுசீலாம்மாவும்.
வாலியின் பாடல். நினைத்த உருவம் எடுக்கும் இச்சாதாரி பாம்பு லதா உருவில் கமலஹாசனை பழிவாங்க வருகிறது. ஸ்ரீப்ரியாதான் பாம்பு என்று தமிழ்நாடே அறியும்! இந்த சிச்சுவேஷனுக்கு தகுந்தாற்போல வரிகளை அமைத்து வாலி எழுதி இருக்கிறார். காலமெல்லாம் கண்ணா நான் காத்திருந்தேன், அஃதை முடிக்க நன்னாளை பார்த்திருந்தேன் என்றும் பதிலுக்கு அது புரியாததா நான் அறியாததா என்று கமல்...
ரசிக்க வாய்க்கு டியூன், ரசிக்க வைக்கும் SPB குரல்... கேளுங்களேன்.
நான் கட்டில்மேலே கண்டேன் வெண்ணிலா
என்னைக் கட்டிக்கொண்டு பேசும் பெண்ணிலா
ஓ... விழிகளில் தாபம் படமெடுத்தாடும்
விழிகளில் தாபம் படமெடுத்தாடும்
ஓ..ஓஓ ஓஓ ஓஓ
வேளையில் நான் வர சீறுது சிணுங்குது ஏன்
நான் கட்டில் மேலே கண்டேன் வெண்ணிலா
எனைக் கட்டிக்கொண்டு பேசும் பெண் நிலா
காலமெல்லாம் கண்ணா நான் காத்திருந்தேன்
கதை முடிக்க நன்நாளைப் பார்த்திருந்தேன்
காலமெல்லாம் கண்ணா நான் காத்திருந்தேன்
கதை முடிக்க நன் நாளைப் பார்த்திருந்தேன்
அது புரியாததா நான் அறியாததா
அது புரியாததா நான் அறியாததா
உன் உள்ளம் என்னென்று தெரியாததா
எங்கே உன் தேன் கிண்ணம்
இந்தா என் பூ முத்தம்
எங்கே உன் தேன் கிண்ணம்
இந்தா என் பூ முத்தம்
நான் கட்டில் மேலே காணும் வெண்ணிலா
ஓரிடத்தில் நில்லாமல் நான் மிதக்க
வானகத்தில் எங்கேயோ நான் பறக்க
ஓரிடத்தில் நில்லாமல் நான் மிதக்க
வானகத்தில் எங்கேயோ நான் பறக்க
ஒரு உயிர் வாழ்ந்திட இரு உடல் வேண்டுமா
ஒரு உயிர் வாழ்ந்திட இரு உடல் வேண்டுமா
ஒன்றான பின்னாலே இரண்டாகுமா
அம்மாடி உன் ஆசை பொல்லாத பேராசை
அம்மாடி உன் ஆசை பொல்லாத பேராசை
= = = = = = = = = = = =
KGG அளிக்கும் வித்தியாசமான வீடியோ !
சென்ற வாரம் போல, இந்த வாரமும் வித்தியாசமான காணொளி எதையாவது போடலாம் என்று தேடினேன்.
இது கிடைத்தது.
பார்த்து, கேட்டு, படித்து மகிழ -
= = = = = = = = =
அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவாங்க கோமதி அக்கா... வணக்கம்.
நீக்குஇன்றைய இரண்டு பாடல்களும் அடிக்கடி கேட்ட பாடல்கள்.
பதிலளிநீக்குமுதல் பாடல் மாயவரத்தில் ஒவ்வொரு சதுர்த்தி அன்றும் ஒலிக்கும் முதல் பாடல். எங்கள் வீட்டிலும் பிள்ளையார் சதுர்த்தி அன்று ஒலிக்கும் பாடல்.
வாழ்த்து கவிதை காணொளியும் நன்றாக இருக்கிறது.
நன்றி கோமதி அக்கா.
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா அக்கா.. வணக்கம்.
நீக்குமுதல் பாடல் ஓரிரு முறை மட்டுமே கேட்டிருக்கிறேன்.
பதிலளிநீக்குநீயா படம் என் ஹாஸ்டல் காலங்களில் வெளியானது. எத்தனையோ முறை அந்தப் படப் பாடல்களைக் கேட்டிருக்கிறேன். நல்ல பகிர்வு, படத்தைப் பற்றிய சிறு குறிப்போடு.
ஆம், நானும் இந்த பிள்ளையார் சுழி பாடலை சிலமுறை மட்டுமே கேட்டுள்ளேன். நீயா பாடல்கள் அத்தனையும் ஹிட்.
நீக்குமுதல் பாடல் பல முறை கேட்ட பாடல், ஸ்ரீராம். வரிகளைப் பார்த்ததும் நினைவுக்கு வந்துவிட்டது. பலவருஷங்களுக்குப் பிறகு இப்ப கேட்டேன்!
பதிலளிநீக்குகீதா
நான் பலமுறை கேட்டதில்லை என்றாலும் சிலமுறை முன்னர் கேட்ட பாடல்களில் ஒன்று கீதா இது!
நீக்குஇந்தப் பாடலைக் கேட்டால் அன்று வீட்டில் பாம்பு வருமாம். தெரியுமா கீதா ரங்கன்(க்கா)
நீக்குஇந்தப் பாடலையா? ஏன்? புன்னாகவராளி ராகமா இது?
நீக்குஹாஹாஹா நெல்லை அதுக்கெல்லாம் பயப்படற ஆளுங்க இல்லையாக்கும் நாங்க! எங்க ஊர்ல பாம்புகளோடு வளர்ந்தவங்க நாங்க!!
நீக்குகீதா
ரெண்டாவது பாட்டு பாடலின் தொடக்க இசை உருவல்?! தழுவல்?! முன்பு எப்போதாச்சும் பொதுவெளியில் கேட்ட ஹிந்திப்பாடலின் இசை போல!
பதிலளிநீக்குபாடலும் நிறைய கேட்டிருக்கிறேன், ஸ்ரீராம்.
எஸ்பிபியின் நெளிவு சுளிவுகளோடு!! ஆரம்ப வரிகளிலேயே வந்துவிடும்!
கீதா
ஆமாம். ஓரளவு ஒத்துப்போகும் ஒரு பழைய ஹிந்தி மெட்டு இருக்கிறது. அதன் டியூன் மனதில் ஓடுகிறது. வார்த்தை சட்டென நினைவுக்கு வரவில்லை. முதல் வரி லியா ஹை என்று முடியும்.
நீக்குசுராலியா ஹை? எனக்குத் தமிழ் பாட்டு வரிகளே டக்குனு வராது! ஹிந்தி பாட்டு கேக்கணுமா!
நீக்குகீதா
இல்லை கீதா... சுராலியாவை மறப்பேனா? பாந் லியா ஹை என்று வரும்.
நீக்குகண்டுபிடிச்சுட்டேன்ல...
நீக்குhttps://www.youtube.com/watch?v=XhWrmd1b6HE
கேட்கிறேன் ஸ்ரீராம். அதானே ஸ்ரீராமாவது கண்டுபிடிக்காம இருக்கறதாவது!!!!!
நீக்குகீதா
திருமணநாள் நல்வாழ்த்துக்கள் அருமை
நீக்குயாரேனும் அவர்கள் திருமண நாள் அன்று கடவுளிடம் எனக்கு அடுத்த ஜென்மத்திலும் இவரே மனைவியாக வரவேண்டும் என்றோ இவரே கணவராக வரவேண்டும் என்றோ
வேண்டிக்கொண்டிருப்பார்களா
கே. சக்ரபாணி
சென்னை 28
நன்றி கே சக்ரபாணி.
நீக்கு//வேண்டிக்கொண்டிருப்பார்களா// - அருமையான புதன் கேள்வி
நீக்குஹாஹாஹாஹா கௌ அண்ணா!!! ஆருக்காக்கும் 60!! திருமணநாள் வாழ்த்துகள்! உங்களுக்குன்னு வீடியோல வருதே!!!! ஆ!!! நாங்கலாம் சின்ன பாப்பாக்களாக்கும்! ஸ்ரீராம், நெல்லையும் சேர்த்துதான் சொல்லறேன்! பின்ன எங்க அண்ணன் நெல்லைய சேர்த்துக்கலைனா வருத்தப்படுவாரே!!
பதிலளிநீக்குகீதா
வாழ்க...
நீக்குமூத்த ஆசிரியரா? KGY?
பதிலளிநீக்குகீதா
:))))
நீக்குஸ்ரீராமும் சின்ன பையன் தான்! 60 வது திருமண நாள் கொண்டாடுறவங்க யாருன்னு யோசிக்கிறேன்!
நீக்குகீதா
/// ஸ்ரீராமும் சின்ன பையன் தான்!.. ///
நீக்குசின்னப் பையனா!..
கொழந்த..
கொழந்த!..
:))))
நீக்கு60 வயது நிறைவுற்று 61-வது வயது நட்சத்திர ஆரம்ப நாள். வடமொழியில் சஷ்டியப்த பூர்த்தி.
நீக்குஆ! என்ன இது யாருமே புரிஞ்சுக்கலை?!!!!!! பிறந்த நாளுக்கும் திருமண நாளுக்கும் வித்தியாசம் உண்டுதானே!!!!!!!!!!!!!!! அதனாலதானே நான் இல்லாத மூளைய கசக்கிட்டுருக்கேன்!!!!!!
நீக்குகீதா
கௌ அண்ணா நேக்குப் புரிந்தது!!! இந்த வாழ்த்து எதுக்குன்னு ஆனா பாருங்க.....60 வது பிறந்த நாளன்றே 60 வது திருமண நாளும் வருமான்னு கலங்கி வியந்து நிற்கிறேன்!!!! ஹாஹாஹாஹா
நீக்குகீதா
கற்பக கணபதி
பதிலளிநீக்குகனிவுடன் காக்க..
முத்துக்குமரன்
முன்னின்று காக்க..
தையல் நாயகி
தயவுடன் காக்க..
வைத்திய நாதன்
வந்தெதிர் காக்க..
இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
பிரார்த்திப்போம்..
எல்லாருக்கும் இறைவன்
நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..
நலம் வாழ்க..
வாழ்க.. வாங்க செல்வாண்ணா... வணக்கம்.
நீக்குதண்செய்யும் வாழ்க.. தஞ்சையும் வாழ்க..
பதிலளிநீக்குதளிர் விளைவாகித்
தமிழ் நிலம் வாழ்க..
வாழ்க.. .
நீக்குஓரானைக் கன்றை உமையாள் திருமகனை
பதிலளிநீக்குபோரானைக் கற்பகத்தை பேணினால்
வாராத புத்தி வரும்
வித்தை வரும்
புத்திர சம்பத்து வரும்
சக்தி தரும் சித்தி தரும் தான்..
இஃதொரு பழம் பாடல்
இதனைத் தொகையாகக் கொண்டு பிற வரிகள்...
அக் காலத்திலேயே மனப்பாடம்!..
மகிழ்ச்சி...
அடடே...
நீக்குஆட்டமென்ன பாட்டுமென்ன அனைத்தும்
பதிலளிநீக்குஅவன் நாட்டமின்றி எவ்வாறு நடக்கும்..
எவ்வாறு நடக்கும்??
:-))
நீக்குஎவ்வாறு நடக்கும்?..
பதிலளிநீக்குபாலும் தெளிதேனும் கொடுக்க வேண்டியிருக்குமோ?..
இருக்கும்..
இருக்கும்!..
நாலு கொடுத்துட்டு மூணு கேக்கறதுக்கு நாம என்ன ஔவையாரா?..
நாம எல்லாம்
2024 குட்டீஸ்..
கர்மம்..
கர்மம்..... கர்மம்..
நீக்குஇந்தக் கால குட்டீசு எல்லாம் கிரஞ்சி காட்டப் பொறந்ததுங்க...
பதிலளிநீக்குஅப்டித் தானே சொல்றானுங்க..
காட்டு கிரஞ்சி.. ன்னா..
எதுடா கிரஞ்சி?..
அப்படீன்னா?
நீக்குஇஃதொரு பிசுக்கட்டு வெளம்பரம்!..
நீக்கு__/\__
நீக்கு'ர'வில் ஆரம்பிக்கும் பெயர் வேண்டாம்.
பதிலளிநீக்கு'க'வில் ஆரம்பிக்கும் பெயருள்ளவரை முயற்சி செய்யுங்கள் என்று ஆலோசனை கிடைத்ததால் தான் கமலுக்கு அந்த சான்ஸ் கிடைத்தது.
ஏதோ ஒரு பத்திரிகையில் சினி நியூஸ் பக்கத்தில் படித்த நினைவு.
சினி நியூஸ் என்ற தலைப்பில் எந்தப் பத்திரிகையில் சினிமா தகவல்கள் கொட்டிக் கிடக்கும் என்பது சட்டென்று நினைவுக்கு வரவில்லை. உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள்.
நம்ப வேண்டாம் என்றாலும் படிக்க ரசனையாய் இருக்கும்!
நீக்குசீர்காழியாரின் இந்தப்பாடல் ஒரு காலத்தில் எங்கள் வீட்டில் தினமும் ஒலிக்கும்.
பதிலளிநீக்குநீயா பாடலும் கேட்டு ரசித்ததே...
காணொளி கண்டு கேட்டேன் சிறப்பு.
நன்றி ஜி.
நீக்குபிள்ளையார் பாடல் - கேட்டு ரசித்த பாடலே...
பதிலளிநீக்குநீயா பாடல் - அது சரி! பிள்ளையார் பாடலுடன் இந்தப் பாடலா!
வாழ்த்து மடல் நன்று.
எஸ்பிபி ரசிகர்...
நீக்குசிறப்பு
திருமணநாள் வாழ்த்துக்கள் அருமை.
நீக்குயாரேனும் திருமணநாள் அன்று அடுத்த ஜென்மத்திலும் இவரே மனைவி யாக வரவேண்டும் என்றோ
இவரே கணவராக வரவேண்டும் என்றோ
வேண்டிக்கொண்டிருப்பார்களா
கே. சக்ரபாணி
சென்னை 28
வெங்கட்.. அபப்டி எல்லாம் ஜோடி சேர்த்து பாடல் போடுவதில்லை. ஓரிரு வருடங்களுக்குமுன் நான் ரசித்த பக்தி பாடல்களையும் பகிர ஆரம்பித்தேன். அதனோடு கூட வழக்கம்போல ஒரு திரைப்பாடல்.
நீக்கு// அடுத்த ஜென்மத்திலும் இவரே மனைவி யாக வரவேண்டும் என்றோ //
நீக்குஅடுத்த ஜென்மம் என்று ஒன்று இருக்கா என்பதே முதல் கேள்வியாக இருக்கும்!! நன்றி சக்ரபாணி.
முந்தின ஜென்மம் என்று ஒன்று இருந்ததா என்ற முதல் கேள்விக்கான பதிலுக்கு விடைகண்டு தானே நீங்கள் சொல்லும் இரண்டாவது கேள்வுக்கு வர வேண்டும்? அதற்குள் அவசரப்படுகிறீர்களே?
நீக்குநான் தமிழ்நாட்டில் ராசிங்கபுரம் கிராமத்தில் இருந்த போது பிள்ளையார் பாடல் பெரும்பாலும் திருமண வீடுகளில் ஒலிபெருக்கி ஒலிக்கத் துவங்கும் போது பெரும்பாலும் முதலில் இடப்படும் பாடல். பல திருமண வீடுகளில் ஒலித்த பாடல்களைக் கேட்ட போது இது முதலில் ஒலித்ததாக நினைவிருக்கிறது.
பதிலளிநீக்குதுளசிதரன்
யாராவது ஒருவராவது நான் இந்தப் பாடலை கேட்டதே இல்லை என்று சொல்வார்களோ என்று பார்த்தேன்!!! நன்றி துளஸிஜி.
நீக்குநீயா படமும் பார்த்திருக்கிறேன். படப் பாடல் பலமுறை ரசித்துக் கேட்ட பாடல். இப்போது மீண்டும் கேட்க பகிர்ந்ததற்கு மிக்க நன்றி.
பதிலளிநீக்குவாழ்த்துப் பாடல் கவிதை மிக நன்று.
துளசிதரன்
நீயா படப்பாடல்கள் எல்லாமே நன்றாக இருக்கும். நன்றி ஜி.
நீக்குஅருமையானப் பாடல்கள்
பதிலளிநீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குவெள்ளி பாடல் பகிர்வில் இரு பாடல்களுமே அருமை. கேட்டு ரசித்தேன். நீயா படப்பாடல் அடிக்கடி கேட்டுள்ளேன். அந்தப்படத்தின் விபரங்களும் அருமை. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
மூன்றாவது பாடல்?
நீக்கு