வியாழன், 14 நவம்பர், 2024

கைவிடப்பட்ட கூடுகள்

யானையை எல்லோருக்கும் பிடிக்கும்.  அந்த பிரம்மாண்ட உயிரை மனிதன் மிகவும் கேவலப்படுத்திக் கொண்டிருக்கிறான் என்றே தோன்றும்.  நாய்க்குட்டி போல நினைத்து அதன் அருகில் விளையாடுவது, நமக்கு அதனைப் பிடிக்கும் என்பதால் அதற்கும் நம்மைப் பிடிக்கும் என்று நினைப்பது..  காடுகளில் சுதந்திரமாக சுற்றித் திரியும் அதை நான்கு சுவர்களுக்குள் அடக்கி, அதற்குத் தெரியாத கடவுளை கும்பிடுவதாக ஆக்ஷன் செய்யப் பழக்கி...  காடுகளிலும் அவற்றை நிம்மதியாக வாழ விடுவதில்லை.  அதன் பாதையில், அது வாழும் இடத்தின் சுற்றுப்புறங்களில் பாதை அமைப்பதும், வீடுகள், கட்டிடங்கள் கட்டுவதும்...

அப்படி கட்டப்பட்ட ஒரு பெரிய கட்டிடத்தின் வரவேற்பறைக்குள் புகுந்து யானைகள் தங்கள் வழக்கமான பாதையைத் தொடர்வதாக ஒரு காணொளி நீண்ட நாள் முன்பு பார்த்தது நினைவுக்கு வருகிறது...  அது போவதற்கு பாதை போன்ற அமைப்பை கட்டிட உரிமையாளர் செய்து கொடுத்திருந்தார்.

சமீபத்தில் ஒருவர் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார்.  "என்னிடம் வாருங்கள்.  என்னிடம் நான்கடிக்கு நான்கடி உள்ள அறையும், அதில் ஒரு தங்கக் கட்டிலும் இருக்கிறது.  வேளாவேளைக்கு உங்களுக்கு உணவு அளிக்கப்படும்.  குளிப்பாட்ட, கொண்டுவிட ஆட்கள் இருப்பார்கள்.  ஆனால் நீங்கள் அந்த நான்கடிக்கு நான்கடி அறையில்தான் இருக்க வேண்டும்" என்று சொல்லி இருந்தார்.  அப்படிதான் நாம் நாய், கிளி, பூனை உட்பட எல்லாவற்றையும் வதை செய்கிறோம் என்றார்.  உண்மைதான்.

கோவிலில் உங்களுக்கு ஆசி வழங்கும் யானை அங்கு வருவதற்கு முன் பயிற்சி என்கிற பெயரில் என்னென்ன கொடுமைகளை அனுபவித்திருக்கும் என்பதை அறிவீர்களா?  பார்த்தால் மனம் பதறும், கண் கலங்கும்.  அது என்ன பாவம் செய்தது என்று தோன்றும்.  அதன் மனதில் பதிந்து விடும் பயம் அப்புறம் அதை அமைதியாக்கி, அடிமையாக்கி விடுகிறது.  அந்தக் கோபம் ஒருநாள் வெடிக்கும் போது மனிதன் கூழாகி விடுவான்.

மனிதன் பாருங்கள், தனது ஃப்ராட் தனங்களை அதற்கும் கற்றுக் கொடுத்து வைத்திருக்கிறான்.  ஜெர்மனியில் கைதிகளுக்கு செல்போன் கொடுக்க ஒரு புசுபுசு குண்டு பூனையை பழக்கி வைத்திருந்தார்களாம்.  வீடுகளில் திருட குரங்கை பழக்குகிறான்.

நாய்களை வளர்க்கிறேன் என்று சொல்லி அதை வீட்டுக்குள் நான்கடிக்கு இரண்டடி கூண்டுக்குள் சிறை வைத்து சாப்பாடு போட்டு...  அதைதான் சமீபத்தில் கவிதை என்கிற பெயரில் எழுதி இருந்தேன்.  வீட்டுக்குள் சுதந்திரமாக உலவ விட்டாலும் சரி...  அல்லது அதற்கு புழங்க பெரிய விசாலமான இடமாவது கொடுக்க வேண்டும்.


ஷார்ட்ஸ் காணொளியில் ஒரு விஷயம் பார்த்தேன்.  கடைகளில் விற்பனைக்கு வைத்திருக்கும் கூண்டுக்கிளிகளைப் பார்க்கும் ஒரு இளைஞன், அதை அப்படியே மொத்தமாக விலை கொடுத்து வாங்கி  மரங்கள் அடர்ந்த பகுதிக்கு சென்று அவ்வளவு கிளைகளையும் திறந்து விட்டு பறக்க வைத்து விடுகிறான்.  

மகிழ்ச்சி.

எனக்கு என்ன தோன்றியது தெரியுமா?  இவ்வளவு நாட்களாக வியாபாரியிடம் சிறைப்பட்டிருந்த கிளிகள் பழக்க தோஷத்தில் மறுபடி அவனிடமே வந்து அமரும்.  மறுநாள் மறுபடியும் அவன் மொத்தமாக அவற்றை விற்பான்.  அந்த இளைஞனோ, அல்லது அவன்போன்ற வேறு சமூக ஆர்வலரோ மறுபடி வாங்கி அவற்றை விடுதலை செய்ய முயலலாம்.  மறுபடியும் கிளிகள்....

  கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவில் தரிசனம் முடித்து வெளியில் மங்களா யானையிடம் வந்தோம்.    
===================================================================================================

JKC Sir திரு காவிரிமைந்தன் தளத்திலிருந்து அனுப்பி வைத்துள்ள ஒரு சுவாரஸ்யமான பகிர்வு...


1946-ல் மதுரையில் நடைபெற்ற ஒரு திருமண பத்திரிகையை
கீழே காணலாம்…. அதில் பல வியக்கத்தக்கவை -

முக்கியமாக நான் சொல்ல நினைத்த 2 விசேஷங்கள் …

முதலில் பத்திரிகையை பார்த்து உங்களுக்கு அவை
என்னவென்று தெரிகிறதா என்று பாருங்களேன்…


ஒன்று - திருமணம் - வீட்டிலேயே - நடைபெறுகிறது…..

இரண்டு - திருமணத்திற்கு வருபவர்களை தங்கள் ரேஷன் அரிசியை
2 நாட்கள் முன்னதாகவே அனுப்பி வைக்க வேண்டுகோள்….பத்திரிகையில் கீழே கடைசி வரி .....

(அப்போது அத்தனை அரிசி பஞ்சம் …!! இப்போது ரேஷனில் இலவச அரிசி ...!!! )

காலம் தான் எப்படி மாறிக்கொண்டே வருகிறது … !!!

(பத்திரிகை உதவிக்கு நன்றி - திரு.மோகன்)

(மூன்றாவது விஷயம் என்ன என்று முதலில் எந்த வாசகர் எழுதுகிறார் என்று பார்ப்போம்! " & " )

===============================================================================

நியூஸ் ரூம் 

பானுமதி வெங்கடேஸ்வரன் 

-  பெங்களூரு; அரசு அலுவலகங்களில் ஊழியர்கள் புகையிலைப்  பொருட்களை பயன்படுத்த கர்நாடகா அதிரடியாக தடை விதித்துள்ளது.

-  புதுடில்லி: 30 லட்சம் மக்கள் மட்டுமே வாழும் திருப்பதிக்கு எப்படி தனி மாநில அந்தஸ்து வழங்க முடியும்? என சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் சரமாரி கேள்வி எழுப்பி உள்ளனர்.  

-  ராஜிவ் கொலையாளிகளுக்காக பரிந்து பேசும் ராகுல் மற்றும் பிரியங்கா, அந்த படுகொலை சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரையும், பாதிக்கப்பட்டோரையும் சந்திக்காதது மன வேதனை அளிக்கிறது என்று கூறி, காங்கிரஸ் கட்சியின் மாநில செயலாளர் பொறுப்பில் இருந்த போலீஸ் அனுசுயா வெளியேறினார்.

-  துப்பறியும் சுக்கு !
ஹிமாச்சல பிரதேச சி.ஐ.டி., தலைமையகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் சுக்விந்தர் சிங் சுகுவுக்காக வாங்கப்பட்ட சமோசா காணாமல் போனதால், சி.ஐ.டி., விசாரணைக்கு உத்தரவிடப்பட்டதை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்ததுடன், கேலி கிண்டல் செய்து வருகின்றனர்.

-  மதுரை : மதுரையில் ரூ.60 வழிப்பறி வழக்கில் 27 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் கைது செய்யப்பட்டார்.  27 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவரை கைது செய்த போலீசாரை கமிஷனர் லோகநாதன் பாராட்டினார்.

-  கொச்சி: கேரளாவில், காதலனால் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகி கருவுற்ற, 16 வயது சிறுமியின் கருவை கலைக்க, அம்மாநில உயர் நீதிமன்றம் அனுமதி அளித்தது.

-  உடுப்பி: உடுப்பியில் பரசுராமர் பூங்காவில் நிறுவுவதற்கு வெண்கலம் என்று கூறி, பைபரில் பரசுராமர் சிலை செய்து கொடுத்து ஏமாற்றிய சிற்பியை, புதுச்சேரி சென்று, கர்நாடக போலீசார் கைது செய்தனர்.

-  பாக்தாத்: ஈராக்கில், பெண்ணின் திருமண வயதை, 18ல் இருந்து 9 ஆக குறைக்க அந்நாட்டு பார்லிமென்ட் முடிவு செய்துள்ளது.

-  தஞ்சாவூர்: திருமணம் செய்து கொண்ட சூரியனார் கோவில் ஆதீனத்தை, கிராம மக்கள் மடத்தை விட்டு வெளியேற்றி, மடத்துக்கு பூட்டு போட்டனர்.

தட்சிண கன்னடா: கல்குவாரியில் கல் உடைக்கும் வேலை செய்து வந்த நாகு குஷாலா என்பவர் மஞ்சுநாத சுவாமியை வேண்டி முதன்முதலாக ஒரு லாரியை வாங்கினார். அதை வைத்து தொழில் துவங்கி இன்றைக்கு பெரிய தொழிலதிபராக உள்ளார். அதனால் 24 ஆண்டுகளுக்கு முன், தான் வாங்கிய லாரியை தர்மஸ்தலா மஞ்சுநாத சுவாமியின் சேவைக்காக சமர்ப்பித்துள்ளார்.

அமெரிக்கா: தெற்கு கரோலினா ஆய்வகம் ஒன்றில் ஆய்வு மேற்கொள்வதற்காக பாதுகாக்கப்பட்டிருந்த 50 செம்முக குரங்குகளில் 41 குரங்குகள் தப்பி விட்டன. அவற்றின் பாதுகாவலர் கூண்டை திறந்து வைத்திருந்ததால் குரங்குகள் தப்பி விட்டன. அவை அனைத்தும் பெண் குரங்குகளாம். அவற்றைத் தேடி வருகிறார்கள்.

உலக ஆணழகன் ஆனார் தமிழக வீரர் சரவணன். உலக உடற் கட்டமைப்பு மற்றும் உடல் திறன் கூட்டமைப்பு சார்பில் மாலத்தீவில் நடைபெற்ற 15வது உலக ஆணழகன் போட்டியில் பல்வேறு நாடுகளிலிருந்து 350க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இதில் தமிழகத்தின் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மணி சரவணன் இரண்டாவது முறையாக மிஸ்டர் யுனிவர்ஸ் பட்டத்தை வென்றார்.

புதுடில்லி: தலையில் பலத்த அடி பட்டதால் கடந்த பதினோரு ஆண்டுகளாக அசைவற்ற நிலையில் இருக்கும் 30 வயது இளைஞரின் கருணைக் கொலைக்கு அனுமதி மறுத்த உச்ச நீதிமன்றம். அவரை பராமரிக்க தேவையான அனைத்து மருத்துவ மற்றும் செவிலியர் வசதிகள் அனைத்தும் உ.பி. அரசின் உதவியோடு செய்து தரப்படும் என மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

பெங்களூரு,சதாசிவ நகரில் வசிக்கும் சிக்கிம் மாநிலத்தைச் சேர்ந்த சாகர் குருங், அவரது மனைவி ஊர்மிளா குமாரி இருவரும் இரண்டு ஆண்டுகளுக்கு முன் பெங்களூரு வந்தனர். சாகர் ஹோட்டல் நடத்தி வருகிறார். வீட்டிலிருந்த ஊர்மிளா பொழுது போக்காக வீடியோக்கள் சோஷியல் மீடியாவில் வெளியிடத் தொடங்கினார். தங்கள் வீட்டுத் தோட்டம் பற்றி அவர் பகிர்ந்திருந்த வீடியோ வைரலானது. அதில் அவர்கள் வீட்டுத் தோட்டத்தில் கஞ்சா செடி வளர்ப்பது தெரிய வர, போலீஸ் அவர்களைக் கைது செய்திருக்கிறது.

===========================================================================================

இணையத்தில் பார்த்தது...


Liberation’s Relief


In 1945, five emaciated, liberated Australian POWs read the paper and drank tea, capturing a moment of relief. During WWII, over 140,000 Allied troops were held in Japanese labor camps under brutal conditions. Notable events include the harrowing Bataan Death March and the construction of the Burma Railway, where many perished.

========================================================================================================




வருடா வருடம் 
புதிய கூட்டில்தான் 
குஞ்சு பொரிக்கின்றன 
பறவைகள் 
திரும்பி வருவதே இல்லை 
பழைய கூடுகளுக்கு 


கைவிடப்பட்ட கூடுகள் 
விரிசலாய் விண்டு 
விழுவதற்கு 
காத்திருக்கின்றன 
ஒரு பெரும் 
காற்றுக்கும் மழைக்கும் 




குஞ்சுகள் வளர்ந்து 
கூட்டை விட்டு 
பறந்தபின் 
தாய்க் காக்கையும் 
புறக்கணித்துப் பறக்கிறது 
பழைய கூட்டை .
காலியான கூட்டில் 
கிடக்கின்றன 
இளம் சிறகுகளின் 
சில மிச்சங்கள் 

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இதை எழுதியவர் யார் என்று சொல்ல முடியுமா?


எண்பதுகளின் இறுதியில் சிலவற்றைப் படிக்க நேர்கையில் நான் அறிய ஆரம்பித்தேன் : நமது so-called leaders-தேசத்தலைவர்கள்- எப்படி மத்திய அரசினால் மக்களுக்குக்காட்டப்பட்டார்களோ, பாடப்புத்தகங்களில் எழுதப்பட்டிருந்தார்களோ உண்மையில் அப்படி இல்லை அவர்கள் என. இந்த நேர்மையற்ற நேரு&Co-வை இப்படி tit-bits-களினாலும், சின்ன சின்ன comments-களினாலும் கடந்துவிடமுடியாது. அதற்காக ஒரேயடியாக நேருவின் Special Assistant M.O. மத்தாய் (Reminiscences Of The Nehru Age) ஆக மாறி, புஸ்தகம் போட்டுக்கொண்டிருக்கமுடியாதுதான்!

நேருவை சரியாகப் புரிந்து கொள்ளவேண்டுமெனில், அப்போதைய அரசாங்கத்தினால் விளம்பரக் கட்டமைக்கப்பட்ட 1) சமாதானப் புறாக்களைப் பறக்கவிடுதல் 2) கோட்பாக்கெட்டில் நித்ய ரோஜாப்பூ 3) குழந்தைகளை தூக்கிக் கொஞ்சுதல் போன்ற நமக்கு சிறுவயதில் அடிக்கடிக் காட்டப்பட்ட அவரது படங்களை, முதலில் மனச்சுவரிலிருந்து கழற்றிக் கடாசுங்கள் மூலையில். இவை அவரது அசல்ரூபத்தை நம்மை அறியவிடாது தவிர்ப்பவை. உண்மையின்மேல் தொங்கவிடப்பட்ட கருப்புத்திரைகள்.

நேருவின் அபத்த புராணத்தை இந்திய சுதந்திரத்துக்கு முன்பிருந்தே ஆரம்பிக்கமுடியும்.  வேண்டாம் (இப்போதே நீள ஆரம்பித்துவிட்டது). சுருக்கமாகச் சிலதை சொல்கிறேன்: ஒரு நாட்டிற்கு- இந்தியா போன்ற ஒரு பல-மத, பல-இன, பல-மொழி நாட்டிற்கு- உலகின் பெரும் ஜனநாயகத்துக்கு உலக அரங்கில் தலைமைதாங்க நிச்சயமாகத் தகுதியில்லாதவர் நேரு. வெறும் வாய்ச்சொல்வீரர். (எதைப்பற்றியும் மணிக்கணக்காக ஹிந்தியில், அழகாக ஆங்கிலத்தில் பேசமுடியும் – காங்கிரஸின் கொள்கைப்பரப்பு செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கலாம். –ஆனால் ‘’எதற்காக ஆரம்பித்தோமோ அந்த நோக்கம்(இந்திய சுதந்திரம்) பூர்த்தியடைந்தது. இனி காங்கிரஸ் கட்சியைக் கலைத்துவிடலாம்’’ என்றல்லவா காந்தி சொன்னார். நேரு கேட்டாரா?). சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக காந்தியின் முட்டாள்தனமான தேர்வு ஜவஹர்லால் நேரு. (தவிர்க்கமுடியாக் காரணங்கள் இருந்திருக்கூடும் என்பதை மறுப்பதற்கில்லை).

காந்தியின் தேர்வே இந்த லட்சணமென்றால், நேருவின் தேர்வைப்பற்றி என்ன சொல்ல? குறிப்பாக நாட்டின் இந்தியப்பாதுகாப்புக்கு இன்றியமையாத ராணுவ மந்திரியாக யார்? வி.கே.கிருஷ்ணமேனன்! எங்கேயிருந்து பிடித்தார் இந்த ஆளை நேரு? நேரு சேறாகிப்போனது இந்தப்புள்ளியில்தான். பறந்துபோன சமாதானப்புறாக்கள் திரும்பி வந்து நேருவைக் கொத்தோ கொத்தென்று கொத்தியது இங்கேதான்.

ஜெனரல் திம்மய்யாவை புறக்கணிக்கும் மேனன்.

தனது மூன்றாவது கேபினெட்டில் (1957-62), வி.கே.கிருஷ்ணமேனனை பாதுகாப்பு மந்திரியாக நியமித்தார் நேரு. நமது நாட்டின் பாதுகாப்புக்குக் குந்தகம் விளைந்தது முக்கியமாக இந்தக் காலகட்டத்தில்தான். மேனன், வசதியான குடும்பத்திலிருந்து வந்தவர், மேல்நாட்டில் படித்தவர் என்பதே நேருவின் aristocratic attitude-க்குப் போதுமானதகுதியாக தோன்றியிருக்கும். அதற்கே உரிய மெத்தப்படித்த மேதாவித்தனம், தான்தோன்றித்தனம், அடாவடித்தனம் மேனனிடம் நிறைய இருந்தன. தனது துறைசார்ந்த ஞானம் ஐயாவுக்கு இருக்கவில்லை. மேனனின் இந்தப் பொறுப்பில்லா மேதாவித்தனம் குறித்து மௌலானா அபுல் கலாம் ஆஸாத் நேருவை எச்சரித்தார். நேரு கேட்டால்தானே? ராணுவ விஷயங்களில் நிபுணர்களின் அறிவுறுத்தலை அலட்சியம் செய்தல், ஏடாகூடமாக முடிவெடுத்தல் என ஆரம்பத்திலிருந்தே ராணுவத்தில் குழப்பங்களை ஆரம்பித்தார் மேனன். ஜெனரல் திம்மையா ராணுவ நிர்வாகத்தில் மேனனின் முறைகேடான குறுக்கிடல் பற்றி பிரதமர் நேருவிடம் குறைகூறி, தகுந்த ஆலோசனை கூறியுள்ளார். அதனால் அவர்மீது கடும் கோபத்தில் இருந்தார் மேனன். (ஃபீல்ட் மார்ஷல் மானேக்ஷா அப்போது மேஜர் ஜெனரலாயிருந்தார். ஜெனரல் திம்மையாவுக்கெதிராக எழுதிக்கொடுக்கும்படி மானேக்ஷாவையும் மற்ற ஜூனியர் ஆஃபீஸர்களையும் வற்புறுத்தியவர் பாதுகாப்புமந்திரி மேனன்! மானேக்ஷா மறுத்ததினால் அவருடைய வேலைக்கே உலைவைக்கும் அளவுக்குப் போனார் மேனன் என்பது கூடுதல் செய்தி (Field Marshal Sam Manekshaw, The Man and His Times) ஆனால் கிருஷ்ணமேனனுக்கு எதிராக யார், எதைச்சொன்னாலும் கேட்பதில்லை என்று நேரு கங்கணம் கட்டியிருந்தார்.

விளைவுகளை 1962 வரிசையாகப் படித்தது. 1957-லிருந்தே ராணுவஉளவுத்துறை பாதுகாப்பு மந்திரியான மேனனை, சீன ராணுவத் திட்டங்கள் பற்றி முறையாக எச்சரித்துவந்தது. அந்த ரகசிய ரிப்போர்ட்டை அலட்சியம் செய்தார் கிருஷ்ண மேனன். அப்படியெல்லாம் சீனா நம்மைத் தாக்காது என்றார் நேருவிடம். வெளிநாட்டுப்பயணம், ஐநாவில் பேசுவது, தன்னை பெரும் சர்வதேச அரசியல்வாதியாக, ஆலோசகராக, ஸ்டேட்ஸ்மனாகக் காட்டிக்கொள்வது என வேறு உலகத்தில் அப்போது உலவியவர் மேனன். 1947 லிருந்து 1962 வரை தளவாட இறக்குமதி இல்லை; இந்திய ராணுவம் போர்-ஆயத்தநிலையில் வைக்கப்படவில்லை. நேரு-மேனனின் மோசமான அலட்சியப்போக்கே காரணம். முதலில் ஜெனரல் திம்மையா, பின்னர் ஜெனரல் கரியப்பா என ராணுவத்தின் அவசியத் தேவைகளென நவீன ஆயுதங்கள், கருவிகள், விமானங்கள் என தேவைப்பட்டியலை அடுக்கியும், பாதுகாப்பு மந்திரியோ, பிரதமரோ கண்டுகொள்ளவேயில்லை. ஆனால், நேருவையும், மேனனையும் சரியாகக் கணக்கிட்டிருந்த சீனா, 1962 அக்டோபரில் ராணுவத் தயார்நிலை இல்லாத, உலக நாடுகள் ஆதரவும் இல்லாத இந்தியாவை அசால்ட்டாகத் தாக்கியது. ( நேரு-கிருஷ்ணமேனன் முன்னிறுத்திய நடுநிலைக்கொள்கையினால் அமெரிக்காவோ, சோவியத் யூனியனோ கண்டுகொள்ளவில்லை). வீரமிருந்தும் போதிய ஆயுத வசதியின்றி போரிட்ட இந்திய ராணுவத்தை வென்று, சீன ராணுவம் அசாம்வரை முன்னேறி, இந்திய நாட்டை அவமானப்படுத்தியது. இந்திய மக்கள் கொதித்தனர். நேரு-மேனனுக்கெதிரான கோஷங்கள் நாட்டில் கிளம்பின. கிருஷ்ணமேனன் பதவி விலகவேண்டும் என்கிற கோரிக்கை வலுத்தது முதலில் நேரு அலட்சியப்படுத்த முயன்றார். பிறகு காங்கிரஸ் கட்சியே தீர்மானம் இயற்றிக் கண்டிக்க மேனன் கழட்டிவிடப்பட்டார்.

\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\


பொக்கிஷம் 






100 கருத்துகள்:

  1. //காலியான கூட்டில்
    கிடக்கின்றன
    இளம் சிறகுகளின்
    சில மிச்சங்கள்..//

    காலியான கூட்டை
    தரிசிக்கின்றன தாம்
    பிறந்த வீடுகளாய்
    பிரத்யேக வாசம் தந்த
    பிரம்மனுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  2. //நேருவின் அபத்த புராணத்தை இந்திய சுதந்திரத்துக்கு முன்பிருந்தே ஆரம்பிக்கமுடியும். பின்னூட்டம் பதிவாகிவிடும். வேண்டாம்..//

    இங்கேயும் ஆரம்பிச்சாச்சா?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹிஹிஹி...    இன்று காலை 'தீதும் நன்றும்' பதிவைப் பார்த்த போதுதான் இன்று நேரு மாமா பிறந்த நாள் என்பது நினைவுக்கு வந்தது.  இன்று இது இங்கு இடம்பெற்றது முற்றிலும் 100 சதவிகிதம் தற்செயல்.

      நீக்கு
    2. ஒருவரின் சிறப்புகளை எழுதும் பொழுது நம் மனமும் மகிழ்ச்சி அடைகிறது. அதற்காகச் சொன்னேன்.

      நீக்கு
    3. புரிகிறது.  தவிர்க்க முயல்கிறேன்.

      நீக்கு

  3. ​பத்தாம் வகுப்பில் தமிழ் கேள்வித்தாளில் கேட்ட யானை பற்றிய கட்டுரைக்கு தற்போது தான் பதில் எழுத நினைவு வந்ததா ? யானை பற்றி எழுதும் பொது வழி மாறி நாய் என்றெல்லாம் சென்றது ஏன்?

    கல்யாணப் பத்திரிகையில் ஒன்று விளங்குகிறது. அப்போதே கல்யாணத்திற்கு பெண் கிடைப்பது கஷ்டம். அய்யங்கார் வரன் அய்யர் பெண்ணைக் கட்டுகிறார்.

    பழைய கூடுகளை திரும்பவும் சரிப்படுத்தி முட்டையிடும் பறவைகளும் உண்டு. கவிதையை சொல்கிறேன்.

    செய்திகள் ஏராளமாய் இவ்வார நியூஸ்ரூமில் இடம் பெற்றுள்ளன. நன்றி. (இது போன்ற செய்திகளை இங்குள்ள பேப்பர்களில் போடமாட்டார்கள்).

    நேரு பற்றிய கட்டுரை வேண்டாத ஒன்று என்பது எனது கருத்து. இதுவரை எ பி அரசியல் சார்பில்லாமல் சென்று கொண்டிருந்தது. அதே போல் தொடர்வதே நலம். எல்லாவருக்கும் இரு பக்கங்கள் உண்டு, அரசியல்வாதிகளுக்கும்.

    இந்த வார பொக்கிஷ ஜோக்குகள் டாப். முதல் ஜோக் படிக்கும்போது பயில்வான் ரங்கநாதன் எட்டிப் பார்த்தார். 500 ரூபாய்க்கு 5 லக்ஷம் நோட்டீஸ் போன்றவை சிறப்பு.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பத்தாம் வகுப்பில் தமிழ் கேள்வித்தாளில் கேட்ட யானை பற்றிய கட்டுரைக்கு தற்போது தான் பதில் எழுத நினைவு வந்ததா ? யானை பற்றி எழுதும் பொது வழி மாறி நாய் என்றெல்லாம் சென்றது ஏன்?//

      ஹிஹிஹி...   ரீல்ஸ், செய்திகள் என்று பார்த்தது எல்லாம் நினைவுக்கு வந்து விட்டது!  ஆனால் அதெல்லாம் சரியல்ல என்கிறீர்களா?!

      சௌராஷ்டிரா சமூகத்தில் இரண்டும் சம அந்தஸ்தாயிருக்கலாமோ என்னவோ...   அது டி எம் சௌந்தரராஜன் கல்யாண பத்திரிகை என்று நினைத்தேன்.

      பழைய கூடுகளை சரிப்படுத்தி...  இது காக்கையிடம் கிடையாது!

      செய்திகள் ஏராளம் என்று அலுப்பு காட்டாமல் ரசித்ததற்கு முதல் நன்றி.  உற்சாகப்படுத்துகிறது.

      நேரு கட்டுரை உண்மையில் இதே எபி தளத்தில் வந்த பின்னூட்டம்தான்!!!

      இந்த வாரம் பொக்கிஷமும் ரசிக்கத்தக்கதாய் இருப்பது சந்தோஷம் தருகிறது.

      நீக்கு
  4. ​பத்திரிகையை திரும்பப் பார்த்தபோது

    பூ முடிப்பாள் இந்த பூங்குழலி.....நிகழும் பார்த்திப ஆண்டு ஆவணித்திங்கள் 20ஆம் நால் .....ஞாபகம் வந்தது., பாடியது சவுந்திரராஜன்.

    இந்த பாடல் ஒரு பத்திரிகையை வைத்தே மொத்த காலயாணத்தையும் காட்சிகளில் விரிவு படுத்தும்.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக அருமையான பாடல் அது. அருமையான டியூனில் அமைந்த பாடல்.

      நீக்கு

  5. ​ஆமாம் கல்யாணம் TMS க்கு தான். T மீனாட்சி ஐயங்காரின் இரண்டாவது புத்திரன் சௌந்தரராஜன். உறுதி
    https://en.wikipedia.org/wiki/T._M._Soundararajan

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் இப்போதுதான் கவனிக்கிறீர்களா, இல்லை முன்னரே தெரிந்துதான் அனுப்பினீர்களா?

      நீக்கு
    2. ​முன்னர் ஊகித்ததை உறுதி செய்தேன்

      நீக்கு
    3. இதுதான் நான் சொன்ன மூன்றாவது விஷயம். இது டி எம் எஸ் கல்யாணப் பத்திரிகை.

      நீக்கு
    4. டி எம் எஸ் பத்திரிகையா அட! டி எம் எஸ் சௌராஷ்ட்ரா சமூகம் இல்லையா? அதிலும் இப்படியான ஐயர், ஐய்யங்கார் உண்டோ?

      கீதா

      நீக்கு
  6. முருகன் திருவருள் முன் நின்று காக்க,

    பதிலளிநீக்கு
  7. இன்றைய கதம்ப மாலை சிறப்பு..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  8. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /// அப்போதைய அரசாங்கத்தினால் விளம்பரக் கட்டமைக்கப்பட்ட 1) சமாதானப் புறாக்களைப் பறக்கவிடுதல் 2) கோட்பாக்கெட்டில் நித்ய ரோஜாப்பூ 3) குழந்தைகளை தூக்கிக் கொஞ்சுதல் என்ற // /

      பத்தாம் வகுப்பு வரை என்மனதிலும் இப்படியான கட்டமைப்பு தான்...

      இத்தனை வருடங்கள் ஆகியும் 2571 பதிவுகள் வெளியாகியுள்ள நிலையிலும் ஜவஹர்லால் நேரு அவர்களைப் பற்றி
      எந்த ஒரு பதிவையும் வெளியிடத் தோன்றியதே இல்லை..

      நீக்கு
    2. முதலிலிருந்தே ப்ளஸ், மைனஸ் இரண்டையும் சொல்லிக் கொடுத்திருந்தால் அவர் பெயருக்கான  பாதிப்பே குறைவாய் இருந்திருக்கும்.

      நீக்கு
  9. அந்த பிரம்மாண்ட உயிரை மனிதன் மிகவும் கேவலப்படுத்திக் கொண்டிருக்கிறான் என்றே தோன்றும். //

    டிட்டோ.

    ஆனைகளைக் கோவில்களில், சர்க்கஸ்களில் பயன்படுத்துவது உட்பட என்பது என் தனிப்பட்டக் கருத்து.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம். தடை செய்யப்பட வேண்டும் என்பதைவிட தானாக நிறுத்தப்பட வேண்டும்

      நீக்கு
  10. முதல் பாராவை கன்னாபின்னான்னு ஆதரிக்கிறேன் ஸ்ரீராம். நான் அடிக்கடி சொல்வது. ஹைஃபைவ்!

    //அதற்குத் தெரியாத கடவுளை கும்பிடுவதாக ஆக்ஷன் செய்யப் பழக்கி...//

    ஆஹா நானும் மகனும் இன்று கூட இதைப் பற்றிப் பேசினோம் பாருங்க இங்க பதிவுக்கு வந்தா அதே கருத்து!!!! ஹைஃபைவ்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதற்குத் தெரியாத.... இதை எதை வைத்துச் சொல்கிறார்கள்? வளர்க்கும் செல்லங்களுக்கு நம்மைப் பற்றி எல்லாம் தெரியுமாம். ஆனால் விலங்குகளுக்கு கடவுள் தெரியாதாம். நல்ல கண்டுபிடிப்பு

      நீக்கு
    2. காடுகளில் இருக்கும் நாயும் பூனையும் தயிர் சாதம் பால் சேமியா பாயசம் சாப்பிட்டு வளர்கின்றன என்று எழுதினாலும் எழுதிடுவாங்க போலிருக்கு. நம் சுயநலத்திற்குச் செய்யும் அனைத்துமே தவறுதான்.

      நீக்கு
    3. :))

      ​கடவுள் மனிதனைப் படைத்தானா? மனிதன் கடவுளை படைத்தானா?

      நீக்கு
  11. இரண்டு நாட்களுக்கு முன்பு யானையைக் கோவிலில் உபயோகப்படுத்துவது தவறு என்று, குடும்ப வாட்சப்பில், நாயை வளர்ப்பது எவ்வளவு பாவம் என ஆரம்பித்து எழுதியபோது குறிப்பிட்டிருந்தேன். அதிலேயே நமக்குப் பிடிக்கும் என ஒரு குழந்தெயை கழுத்தில் கயிறிட்டு ஆயுள் முழுவதும் வளர்த்தால், படிப்பு திருமணம் ஒன்றும் செய்யாமல் அடிமையைப் போல் வளர்த்தால் அதில் என்ன பெருமை இருக்கமுடியும் என்று குறிப்பிட்டிருந்தேன். அதில், யானையை இறைவனுக்குச் சேவை புரிய வைப்பதால் அடுத்த பிறவியில் நற்கதி அடையும், ஆனால் மனிதன் செய்வது தவறு எனக் குறிப்பிட்டிருந்தேன்.

    இன்றைய பதிவின் சாரம் மனதைக் கவர்ந்தது.

    போர், காவல் என்று வரும்போது அதற்குரிய சட்டங்கள் வேறு. யானை, குதிரை, நாய், கைதிகள் என்று அதையும் இதையும் குழப்புக்கொள்ளக் கூடாது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யானைக்கு நற்கதி எங்கேயும் கிடைக்கும் - அது வனத்தில் வாழ்ந்தாலும்.  அறிந்து செய்வதில்லை அவை பாவங்களை!


      // போர், காவல் என்று வரும்போது அதற்குரிய சட்டங்கள் வேறு. யானை, குதிரை, நாய், கைதிகள் என்று அதையும் இதையும் குழப்புக்கொள்ளக் கூடாது //

      அபுரி!

      நீக்கு
    2. போர் புரிய யானைகளை குதிரைகளை வளர்த்ததும், கொட்டடிகளைப்்பாதுகாக்க நாய்களை வளர்த்ததும், கடித அஞ்சலுக்காக புறாவை வளர்த்ததும் தேவை கருதி

      நீக்கு
    3. //அறிந்து செய்வதில்லை அப் பாவங்களை//- நான் மறுபிறவு, கர்ம வினைகளில் நம்பிக்கை உடையவன். நான் படித்த ஸ்கிரிப்டுகள், வரலாறுகள் அப்படிச் சொல்லவில்லை. அவையவைகளின் பாவ புண்ணியத்துக்கு ஏற்ப மறுபிறவி அமைகிறது.

      பிராணிகளின் குணங்களே அதற்குச் சாட்சி

      நீக்கு
    4. // போர் புரிய யானைகளை குதிரைகளை வளர்த்ததும், கொட்டடிகளைப்்பாதுகாக்க நாய்களை வளர்த்ததும், கடித அஞ்சலுக்காக புறாவை வளர்த்ததும் தேவை கருதி //

      அதுவும் சுயநலம்தானே?  மனிதனால் அவற்றை அடக்கி ஆளமுடியும் என்பதனால்தானே?  

      வரவர இந்த ஊடகங்களை பார்த்து எனக்கும் இப்படி எல்லாம் பேச தோன்றுகிறது!

      நீக்கு
    5. //அதுவும் சுயநலம்தானே//- இந்த விவாத்த்திற்கு (விதண்டா...) முடிவு கிடையாது. அப்படி நினைத்தால் நமக்கு வாழ்க்கையும் இருந்திருக்காது. மனிதன் வளர்ந்திருக்கவே மாட்டான். செடி கொடி மரங்கள் குன்றுகளுக்கு உயிரில்லையா?

      நீக்கு
    6. ஜெ ச போஸைத்தான் கேட்கணும்! 

      ஓகே...  சரி...  கையைக் குடுங்க...  குலுக்கிடலாம்! 

      ப்ரெண்ட்ஸ்...  ஓகே?

      நீக்கு
    7. ஶ்ரீராம்... ஒவ்வொருத்தருக்கும் அவங்க அனுபவம், பூர்வ ஜென்மத் தொடர்பு, படித்த கேட்ட விஷயங்கள்னால ஒரு கருத்து நம்பிக்கை இருக்கும். நான் நம்புவதுதான் சரி என்று எப்படிக் கூற முடியும்? நம்முடைய வீட்டிலுள்ளவர்கள ஒத்த கருத்துடையவர்களாக இருப்பதில்லை. அவரவர் நம்பிக்கைக்கு ஒத்த கருத்துடையவர்கள்னா நண்பர்கள் என்று கருதுவதும் இல்லையென்றால் எதிரிகள் என்று கருதுவதுமே நகைச்சுவை அல்லவா? நம் கருத்தில் நமக்கு நம்பிக்கை இருந்தால் நாம் பாதிக்கப்பட மாட்டோம் (wont get influenced)

      நீக்கு
    8. உண்மை நெல்லை. ஒருவருடைய நம்பிக்கைகளை அடுத்தவர் விமர்சிப்பது தவறு.

      நீக்கு
  12. இந்தப் பத்திரிகையை முன்னமே பார்த்திருக்கிறேன். கூடவே நாங்கள் கடிதங்கள் என்பவற்றை இரும்புக் கம்பியில் கோர்த்து (இரண்டு மூன்று கம்பிகள், ஆயிரத்தில் இருக்கும், 1900 அல்லது அதற்கு முந்தைய காலம்). அவற்றைப் பாதுகாக்காமல் தொலைத்ததும் நினைவுக்கு வரும்.சமீபத்தில் என் சரித்திரம் இரண்டாவது முறையாகப்்புத்தக வடிவில் படித்தேன்.

    1850களுக்கு முன்பு, மணமகன் பொருளீட்டி பெண் வீட்டாருக்குக் கொடுத்துத்தான் திருமணம் செய்யும் முறை இருந்தது. காசு அதிகமாகப் புழங்காத காலம். அதனை சுயநலத்தால் மாற்றி, திருமணம் என்பதே வீணீன ஆடம்பரச் செலவாக மாற்றியதுதான் நம் வளர்ச்சி என நினைத்துக்கொண்டேன். அதுமட்டுமன்றி பல நூற்றாண்டுகளாகவே பெண்ணை அடிமைப்படுத்தி வைத்திருந்து, இன்று அவர்கள் படித்து ஆண்களைவிட நன்றாக முன்னுக்கு வரும்போது, பெண்ணே கிடைக்கலை என்று லபோ திபோ என அடித்துக்கொள்வதும் நாம்தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திருமண முறைகள் இனி மாறுமா?  ஒரு பெரிய மாற்றத்துக்கான காரணம் வந்தாலொழிய மாறாது.

      நீக்கு
    2. மாற்றவேண்டும் என்பது என் எண்ணம். திருமணங்களால் பயன் பெறுவது வீட்டுக்காரர்களைத் தவிர மற்றவர்கள்தாம் (கடைவிரித்திருப்பவர்கள்). திருமணத்தில் ஒரே பயன், உறவினர்களை ஒரே இடத்தில் சந்திப்பதும், எல்லோரும் (அனேகமாக) சேர்ந்து சாப்பிடுவதும்தான். அதை கடைவிரித்திருப்பவர்கள் விடுவார்களா?

      நீக்கு
  13. பத்திரிகை யில் உள்ளது
    ஐயர் பெண் ஐயங்கார் பையன்

    கே. சக்ரபாணி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பத்திரிகை டி எம் சௌந்தரராஜன் - டி எம் எஸ் கல்யாணப் பத்திரிகை.

      நீக்கு
    2. //ஐயர் பெண் ஐயங்கார் பையன்// இது பற்றி எழுத நினைக்கிறேன். ஆனால் யோசனையா இருக்கிறது. இது கலப்புத் திருமணம் கிடையாது.

      நீக்கு
  14. நேருவைப் பற்றிய பதிவை ரசிக்கவில்லை. அரசியல் பதிவுகள் நமக்கெதற்கு?

    எந்த ஒரு மனிதனும் நல்ல கெட்ட குணங்களால் கட்டப்பட்டிருக்குறான். அவனுடைய செயல்களினாலேயே அவனைப் பற்றி நமக்குப் புரிந்துவிடும். அதனை ஆய்வு செய்வதில் என்ன பயன்? அதிலும் காலையில் அரசியல் பதிவுகளில் விருப்பமில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // எந்த ஒரு மனிதனும் நல்ல கெட்ட குணங்களால் கட்டப்பட்டிருக்குறான். அவனுடைய செயல்களினாலேயே  //

      மிகைநாடி மிக்க கொளல் என்று சொல்லியிருக்கிறாரே தா தா...  

      அரசியல் பதிவுகளில் விருப்பமில்லையா?  எதில்தான் அரசியல் இல்லை?  ஜெமோ எழுத்தைச் சொல்வதில் அரசியல் இல்லையா?  நடிகர்களை பாராட்டுவதில் திட்டுவதில் அரசியல் இல்லையா? 

      (ச்சே...   ஸ்ரீராம்..  அடங்கு...  உனக்கு இன்று சந்திராஷ்டமம்!)

      நீக்கு
    2. அரசியல் என்று நீங்கள் சொல்வது, நான் நம்புவதை நீயும் விரும்பணும் நம்பணும் என்று திணிக்கும் தன்மை. நேரு கடைசிவரை மதச்சார்பு என்ற போர்வையில் ஒருசாராருக்கு அநியாயம் செய்தவர்தான். சொல்லி, நினைத்து என்ன பயன்? எனக்கு நடிகர் விஜயைப் பார்த்தால் சின்னப்புள்ளை மாதிரித் தெரியுது. அவர் இப்போ அரசியல்வாதி ஆகி பரப்புரையை ஆரம்பித்துவிட்டார், குடியை விற்று பணம் சம்பாதித்துப் பணக்காரனாகி, "வள்ளலார் மடத்தை" ஆரம்பிப்பதுபோல

      நீக்கு
    3. இதெல்லாம் தமிழ்நாட்டின், ஏன், இந்தியாவின் தலைவிதி.  இப்பப்பவே இப்படின்னா...  இன்னும் போகப்போக எப்படி இருக்குமோ...

      நீக்கு
  15. அப்படிதான் நாம் நாய், கிளி, பூனை உட்பட எல்லாவற்றையும் வதை செய்கிறோம் என்றார். உண்மைதான்.//

    பசு, எருது எல்லாமுமே சேர்த்துக் கொள்ளலாம். டிட்டோ. வீட்டு விலங்குகள் என்று வரும் போது நாம் அவற்றை எப்படி வளர்க்கிறோமோ அதைப் பொருத்து. அவர் சொல்வது போல் அடைத்துப் போட்டு என்பதை நானும் ஏற்பேன் ஆனால் இவற்றை ஃப்ரீயாக விட்டும் வளர்க்கலாம் பறவைகளைச் சொல்லவில்லை.

    பைரவர்கள் மனிதர்களின் நட்பு வேண்டுபவை. அவற்றிற்கும் நாம் சில பயிற்சிகள் தர வேண்டும் அதாவது அவற்றின் நலனுக்காக அந்தந்தவகைக்கு ஏற்ப. சிப்பிப்பாறைக்கு எனர்ஜி கூடுதல் எனவே அவற்றை ஓட விட வேண்டும். அது போல லாப்ரடார் வகையை நடக்க வைக்க வேண்டும் சிப்பிப் பாறை, அல்சேஷன்/ஜெர்மன் ஷெப்பர்டின் பாதுகாக்கும் குணத்தைத் தகுந்த பயிற்சிகள் மூலம் கொடுக்க வேண்டும் அவற்றின் எனர்ஜி அப்படி. அழகுக்கென்று சில இருக்கின்றன அவை வேறு.

    காட்டு விலங்குகளை நாம் நாட்டிற்கேற்ப பயிற்சி கொடுப்பதுதான் சரியில்லை. அவற்றிற்கான எனர்ஜியை காட்டில் அவை பார்த்துக் கொண்டுவிடும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அடைத்துப் போட்டு, ஃப்ரீயாக// என்னாங்கோ... நம்ம பசங்களைக் கட்டுப்படுத்தி பயிற்சி கொடுத்து, இத்தனை மணிக்கு எந்திரி, குளி, டிரெசை மாற்று, இப்படி இப்படி நடந்துகொள், இத்தனை மணிக்குத் தூங்கு, இவங்கள்ட பேசாதே, இவங்களை நண்பரா வச்சுக்காதே... பெண்ணைத் தொட்டுப் பேசினா காது அறுந்துடும், நண்பியை வெளியிடங்களில் சந்தி, கதவைத் தாளிட்டுப் படிக்காதீங்க.... இதெல்லாம் கட்டுப்பாடுகளில் வராதாங்கோ?

      நீக்கு
    2. பிள்ளைகளும் நாமும் மனிதர்கள்தானே?  நம் வாழ்க்கை முறை என்பது ஒன்றுதானே?  விலங்குகள் ஐந்தறிவுள்ள ஜீவன்கள் வாழ்க்கை முறை வேறல்லவா?

      நீக்கு
    3. நெல்லை, இதற்கு ஸ்ரீராமின் பதிலோடு....அதை வேறு விதத்தில் சொல்ல வந்தேன் இதே அர்த்தம் தான் ஸ்ரீராம் சொல்லிவிட்டதால்
      6 அறிவு 5 அறிவு...

      நீங்கள் சொல்லியிருப்பது போல் அதைச் செய் இதைச் செய்யாதே என்று அறிவுத்தியதில்லை. நம் வீட்டில். அடிப்படை ஒழுக்கங்கள் வாழ்க்கைப் புரிதல்கள் வாழ்க்கையை எப்படி நோக்க வேண்டும் என்ற ரீதியிலான விஷயங்களைக் கூட அறிவுரை என்றில்லாமல், கதைகள், ஒரு சினாமாவோ வேறு ஏதே நும் வாசித்தாலோ, பார்த்தாலோ அதை வைத்து டிஸ்கஷன், ஒரு நட்பு ரீதியிலான முறையில் தான் சென்றது. ஃப்ரீ சைல்ட். நாம் எப்படி இருக்கிறோமோ அப்படி வந்துவிடும். எனக்குச் சொல்லப்பட்ட அறிவுரைகளோ, கட்டுப்பாடுகளோ எதுவுமே நான் அவனுக்குச் சொன்னதில்லை, நெல்லை. அனுபவங்களில் கற்றவைதான் பெரும்பாலும் பேசுவோம். என் கணவரும் அப்படியே அவனிடம். இப்பவும் அப்படியேதான்.

      கீதா

      நீக்கு
    4. //விலங்குகள் ஐந்தறிவுள்ள ஜீவன்கள் வாழ்க்கை முறை வேறல்லவா?// என்னவெல்லாம் வளர்ப்புப் பிராணிகளிடம் பேசுகிறார்கள், பயிற்சி கொடுக்கிறார்கள். பாவம் நாய், பூனை. ஆங்கிலம், ஹிந்தி, தமிழ் என்று பல மொழிகளும் அது கற்றுக்கொள்ள வேண்டும். அதிலும் இரு மொழிகளும் கலந்தும் பேசுகிறார்கள்.

      கீதா ரங்கன்(க்கா) - கருத்துகள் பொதுவானவை. தனிப்பட்ட முறையிலானவை அல்ல. சிலர் விதிவிலக்குகள் என்பதால் பொதுவானதை, எங்கள் வீட்டில் இப்படி இல்லை என்று எடுத்துக்கொள்ள வேண்டாம்.

      நீக்கு
  16. கோவிலில் உங்களுக்கு ஆசி வழங்கும் யானை அங்கு வருவதற்கு முன் பயிற்சி என்கிற பெயரில் என்னென்ன கொடுமைகளை அனுபவித்திருக்கும் என்பதை அறிவீர்களா? பார்த்தால் மனம் பதறும், கண் கலங்கும். அது என்ன பாவம் செய்தது என்று தோன்றும். அதன் மனதில் பதிந்து விடும் பயம் அப்புறம் அதை அமைதியாக்கி, அடிமையாக்கி விடுகிறது. அந்தக் கோபம் ஒருநாள் வெடிக்கும் போது மனிதன் கூழாகி விடுவான்//

    அதேதான்...இயற்கைக்கு முரணான ஒன்று.

    அது போல வீட்டு விலங்குகளையும் அவை இயற்கையாகவே மனிதரோடு இருப்பதை விரும்பினாலும் கூட நட்புடன் வளர்க்க வேண்டும் நாம் அதிகாரம் செலுத்தினால் அவையும் ஒரு கோபத்தில் என்ன வேண்டுமானாலும் செய்யும்.

    மனிதர்களைப் போல விலங்குகள் உளவியலும் உண்டே! தனிப்பாடமாக இருக்கிறது

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம், கட்டாயப்படுத்தக் கூடாது, துன்புறுத்தக் கூடாது.

      நீக்கு
  17. ஆமாம் நானும் பார்த்தேன் ஸ்ரீராம் பறவைகளை மொத்தமாக வாங்கிப் பறக்க விடுவதை. அது பார்க்க நன்றாக இருந்தாலும் பறந்து சென்றால் அவற்றிற்கு இப்படித்தான் இருக்க வேண்டும் நம் வாழ்க்கை இதுதான் என்று தெரியுமோ என்று தோன்றியது அந்த இயல்பு வர நாளெடுக்கும் இல்லையா! பழகிய இடத்துக்கே வரத்தான் தோன்றும் மூளை அதற்குப் பழக்கப்பட்டிருப்பதால்

    வேர்டில் அடித்து காப்பி பேஸ்ட் பண்ணி இங்க போட வந்தப்ப அடுத்ததையும் பார்த்துவிட்டேன்....அட! நீங்களும் அடுத்து அதைத்தான்சொல்லியிருக்கீங்க...ஹைஃபைவ்!

    கீதா

    பதிலளிநீக்கு
  18. மங்களா யானை ஆடி ஆடி வந்து கொண்டிருக்கிறது!!! மணி ஓசை கேட்டுவிட்டது!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மணியோசை கேட்டு எழுந்தேன்...   நெஞ்சில் ஆசை கோடி சுமந்தேன்...

      யானை வரும் முன்னே மணியோசை வரும் பின்னே....

      நீக்கு
    2. சூப்பர் பாட்டு ஸ்ரீராம்.....

      யானை வரும் முன்னே மணியோசை வரும் பின்னே....// அது போன வாரம் ஹாஹாஹாஹா.(படம் போட்டிருந்தீங்களே!)...ஸோ மணியோசைகேட்டாச்சு...

      கீதா

      நீக்கு
    3. // சூப்பர் பாட்டு ஸ்ரீராம்..... //

      பின்னே? இளையராஜாவாக்கும்!

      நீக்கு
  19. பத்திரிகை விஷயம் - ஸ்ரீராம், எங்கள் வீட்டிலும் கூட பூணல், கல்யாணம் எல்லாம் வீட்டு வாசலில் பந்தல் போட்டு நடந்தது. அதன் பின் மண்டபம் ஆனது.

    வீட்டில் நடக்கும் போது, உறவுகள் அவரவர் வீட்டில் இருப்பவற்றைக் கொண்டு வந்துவிடுவார்கள். உதாரணம் சாம்பார் பொடி, ரசப்பொடி, மிளகாய்ப்பொடி...இப்படி. அரிசி விளைந்திருந்தால் அரிசியும். உளுந்து பருப்புகள் என்று. அது போல எல்லாரும் சேர்ந்துதான் வேலைகள் செய்வார்கள் சீர் முறுக்கு, லட்டு, இனிப்புகள் கொடுக்க வேண்டியவை என்று. அப்போதெல்லாம் வருபவர்கள் எல்லாருக்கும் கொடுத்து நான் பார்த்ததில்லை. ஆனால் வருபவர்கள் பெரும்பாலும் உறவுகள் மட்டுமே தானே இப்ப போல எல்லாரையும் அழைக்கும் பழக்கம் இல்லையே. நான் சொல்வது ஊர் மக்களுக்குத் தாம்பூலம் மட்டும் தான் பட்சணம் கொடுத்ததில்லை. அவை சும்மா இலையில் கையில் கொடுத்து விடுவாங்க. பாக்கெட் எல்லாம் போட்டுப் பார்த்ததில்லை.

    வாழை இலை கூட அவர்கள் வீட்டுக் கொல்லையில் வளர்ந்திருந்தால் பறித்துக் கொண்டு வந்துவிடுவாங்க. எவர்சில்வர் தட்டோ, இப்போது போல பேப்பர் ப்ளேட்டோ கிடையாதே.

    அது போல முக்கிய உறவுகள் எக்ஸ்ட்ரா பாத்திரங்கள் கொண்டுவருவது என்று கூட்டாகச் செய்வதாக இருக்கும்.
    உறவுகளுக்கு சீர்பட்சணம் விநியோகம் உண்டு.

    எல்லோரும் சேர்ந்துதான்எல்லாஉம் செய்வாங்க. இலைகள் கொல்லைப்புறத்தில் ஒரு குழி வெட்டி போடப்படும் இயற்கை உரம்.

    உணவு மீந்தால் அருகில் இருக்கும் மக்கள் எடுத்துக் கொள்வார்கள். சொல்லிவிட்டால் போதும் அக்கம்பக்கத்தில் ஏழ்மையில் இருப்பவர்கள் பாத்திரத்துடன் வந்துவிடுவார்கள்.

    இப்படிப் பல நன்மைகள்.

    அடுத்த கருத்தில் இப்போதைய திருமணங்களுக்கு வரேன்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் இந்த மாதிரி பகிர்வுத் திருமணங்களை பார்த்ததில்லை, அல்லது நினைவில் இல்லை!

      நீக்கு
    2. இந்த மாதிரி விஷயங்களை அனுபவித்துத் தெரிந்துகொண்டிருப்பதால்தான் எங்களுக்கெல்லாம் அக்கா நீங்க. ஹா ஹா ஹா

      நீக்கு
    3. ஹாஹாஹாஹா நெல்லை காத்திட்டிருக்கார் அக்கான்னு விளிக்க!!!! ம்ஹூக்கும்....இது சின்னப்புள்ளை அனுபவமாக்கும்!! சின்னப் புள்ளைங்கள் இப்படிப் பேசினா என்னவோ பெரிய மனுஷி மாதிரி பேசறன்னு சொல்வோமே அப்படி எடுத்துக்கிடுகேன்!!!!!!

      கீதா

      நீக்கு
  20. அந்த மூன்றாவது விஷயம் என்ன என்று யோசிக்கிறேன். தண்ணீர்? அதுக்குத்தான் குளம் கிணறு ஆறு உண்டே நடந்து போய் கூட குளிச்சிட்டு வந்திடுவாங்க.

    இன்னொன்னு சொல்ல மறந்து போச்சு மேலே....அப்பலாம் மொய் பத்தி கவலைப்பட மாட்டாங்க அதான் வீட்டிலுள்ளதை கொடுத்து உதவுவாங்களே. நெருங்கிய உறவினர்கள் தங்கம் எல்லாம் கூட போட்டு சமாளிச்சுடுவாங்க

    ஒரு காலத்தில பெண்கள் வீட்டு செலவு கம்மி பிள்ளை வீட்டில்தான் ஸ்ரீதனம் கொடுத்து பெண்ணை திருமணம் செய்வாங்க பிள்ளை வீட்டுச் செலவாகத்தான் இருக்கும்.

    இப்பவும் கூட ஒரு சில சமூகங்களில் பிள்ளை வீட்டுச் செலவுதான் கல்யாணச் செலவு.

    இப்போதைய கல்யாணங்களில், வாழ்க்கை முறை மாறிவிட்டதால் பலரும் நகரங்களில் வசிக்க வேண்டி வந்ததால் மண்டபங்கள், கான்ட்ராக்ட் என்று போயிருக்கலாம்...ஸோ அது கூட என்னைப் பொருத்தவரை ஓகே...

    ஆனால் வேறு சில செலவுகள் இழுத்துவிடறாங்க பாருங்க....பசங்க....பெற்றோர், உட்பட....அவங்க வீட்டுல இந்த அன்பளிப்பு கொடுத்தாங்க ஸோ நாமும், வந்தவங்களுக்கு இது கொடுக்கணும் அது கொடுக்கணும் என்று...ஃபோட்டோ ஷூட்...இப்படிப் பல விஷயங்கள் ஆடம்பரமாக நடத்துவது பல்லக்கில் வந்து இறங்குவது என்று பல..செலவுகள் முழியைப் பிதுக்க வைக்கின்றன.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிள்ளை வீட்டு சீதனம் என்பது ரொம்பப் பழைய முறை.  அப்புறம்தான் ஆண்கள் வரதட்சிணை வாங்க ஆரம்பிச்சாங்களே...  இப்போ அதுவும் ஓரளவுக்கு கடந்த காலமாகி வருகிறது.

      கல்யாணம் பிள்ளை வீட்டுச் செலவா, பெண் வீட்டுச் செலவா என்பது சமூகத்துக்கு சமூகம் மாறுபடுகிறது.

      நீக்கு
    2. 1870 வரை பிள்ளை வீட்டுச் சீதனம். பிறகு பெண் வீட்டில் கறப்பது. இப்போ சமீப காலமாக, திருமணத்திற்கு எதையும் கேட்பதில்லை, திருமணம் நல்லா பண்ணித்தரணும் என்பதைத் தவிர. பெண்களும் படித்துச் சம்பாதிப்பதால் எவ்வளவு போடுவீர்கள் என்றும் வெளிப்படையாகக் கேட்பதில்லை. இன்னும் இரண்டு மூன்று தசாப்தங்களில் இந்தச் செலவு இன்னும் குறையும். ஒரு 70-80 ஆண்டுகளில் பசங்களே செலவழிக்கும் காலம் (மேற்கத்தைய நாடுகள் போல) வரும் என்று நினைக்கிறேன் (அப்போ அப்பா அம்மா பார்த்துப் பெண் தேடும் வேலையும் இருக்காதோ என்று தோன்றுகிறது ஹி ஹி)

      நீக்கு
  21. செய்திகள் - முதல் செய்தி சூப்பர்.

    திருப்பதி தனி மாநிலமாகவா...ஓ இப்படி வேறயா...

    மூன்றாவது செய்தி மிகவும் நியாயமான கேள்வி

    துப்பறியும் சுக்கு - சிரித்துவிட்டேன்

    மதுரை - வழிப்பறிக் கொள்ளையனைப் பிடிச்சதுக்கு....ம்ம்ம்ம் இங்க பகல் கொள்ளையரையே யாரும் பிடிக்க மாட்டேன்றாங்க

    கொச்சி - சம்பந்தப்பட்ட இருவரின் பெற்றோரைத்தான் முதலில் கண்டிக்கணும்

    பாக்தாத் - அடப்பாவிங்களா...
    இது முன்னரே இப்படி ஒரு செய்தி வந்த நினைவு..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வழிப்பறி கொள்ளையனை 27 ஆண்டுகளுக்குப் பிறகு தனிப்படை அமைத்து பிடித்திருக்கிறார்கள். வழிப்பறி எவ்வளவு ரூபாய் என்று பார்த்தீர்களா?

      நீக்கு
    2. பார்த்தேன் ஸ்ரீராம்...இதுக்குப் போய்...ஹூம் என்ன சொல்ல? கொள்ளை கொள்ளையா அடிக்கறாங்கப்பா நம்ம கண்ணு முன்னாலே செய்திகளும் ஆதாரத்தோடு வருகின்றன ஆனா பாருங்க...எனக்கென்னவோ பாவம் அந்த வழிப்பறி!! அப்படித்தான் தோன்றியது

      கீதா

      நீக்கு
  22. இணையப்படம் - என்னென்னவோ தோன்றுகிறது.

    தலைப்புக்கானதைக் காணலையே என்று யோசிச்சுட்டே வந்தா ஆ கவிதை கவிதை!

    இரண்டாவதும் மூன்றாவதும் சூப்பர்.

    ஆனால் பாருங்க பலத்த புயல் காற்றில் குஞ்சுகள் அல்லது முட்டை இருக்கும் கூடுகள் கூட விழுந்துவிடும் ஸ்ரீராம். சில சமயம்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவிதைக்கு கைவிடப்பட்ட கூடுகள்னே தலைப்பு வச்சிருக்கலாமோ?  ஒரே கவிதைதான்.  தொடர்ச்சி!

      நீக்கு
    2. யெஸ் கைவிடப்பட்ட கூடுகள்னே வைச்சிருக்கலாம்!!

      கீதா

      நீக்கு
  23. நேரு கட்டுரை - எழுதியது எங்கள் ப்ளாக் ஸ்‌ரீராம் என்று அறியப்படும் ஸ்ரீராம் பாலசுப்ரமணியம் என்று நினைக்கிறேன்!!! சரியா?

    நேருவின் இந்தப் பக்கங்கள் ஆங்காங்கே வாசித்ததுண்டு. எனக்கென்னவோ தெரியவில்லை, படிக்கும் காலத்தில் நமக்குச் சொல்லிக் கொடுக்கப்பட்டவை அந்த ரோஜா, மாமா எல்லாம்.... மிடில் ஸ்கூல் வரை இருந்த எண்ணங்கள். ஹை ஸ்கூல் ஹையர் செகண்ட்ரி, கல்லூரி என வரும் போது மாறிக் கொண்டே வந்தது. அப்போது கட்டுரைப் போட்டி பேச்சுப் போட்டி என்பதில் அப்படித்தானே சொல்லியாக வேண்டும் வீர தீரச் செயல்கள் என்று!!!! ஆனால் என் தனிப்பட்டக் கருத்து வேறாக இருந்தது.

    கல்லூரியில் என் தனிப்பட்டக் கருத்து வலுவாகிவிட்டது. நான் படித்தது பொருளாதாரம். இவரின் ஆட்சிக் காலத்தில் வந்த ஐந்தாண்டு திட்டங்கள் 1951 ல் இவரால் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டங்கள் நம் பொருளாதாரத்தைச் சிதைத்த ஒன்று. அப்போது எனக்கு எழுந்த கேள்விகள் பல பல. ஆனால் எனக்குத் தகுந்த விடை அளிக்கும் ஆசிரியர்கள் அப்போது இல்லை.

    எம் ஏ படித்த போது எஸ் எஸ்பி என்ற professor அறிவு ஜீவி அசாத்தியமாகப் பாடம் நடத்தும் மாற்றுச் சிந்தனைகளை வரவேற்கும் ஆசிரியர் அவர் தான் என் கேள்விகளைப் புரிந்து கொண்டு பாராட்டி விடையளித்தவர். ஆனால் தேர்வில் எழுதிவிடாதே என்றும் அறிவுறுத்தினார் என்பதும் வேறு விஷயம். அந்த ஸாரோடு எனக்கு மேலும் discuss செய்து அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசை நிறைவேறவில்லை. காரணம் பொதுவெளியில் சொல்ல முடியாத ஒன்று. அவருடைய அறிவை இப்போதும் மெச்சுவேன். ஆனால்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நேரு கட்டுரை எழுதியது நானா?

      நமக்கு இந்த அளவு விவரம் எல்லாம் தெரியாது சாமி..

      நீக்கு
    2. அப்ப எனக்குத் தெரியலையே யாருன்னு...ஜெ கே அண்ணா சொல்லிருப்பாரே பார்க்கிறேன் கருத்தில்

      கீதா

      நீக்கு
  24. எங்கள் அம்மா அப்பாவின் கல்யாணப் பத்திரிகையில் கூட கீழே, 'அவரவர் தங்கள் ரேஷன் கொண்டு வரவும்' என்று அச்சிடப்பட்டிருந்தது. அப்போது 2nd world war time. அதனால் சாமான்களுக்கு தட்டுப்பாடு. வந்த விருந்தினர்கள் தங்கள் ரேஷன் கொண்டு வந்து அதைத்தான் சமைக்க கொடுத்தார்கள் என்று அரசாங்கத்தை ஏமாற்ற இப்படி. மேலும் அந்த சமயத்தில் கெஸ்ட் கண்ட்ரோல் இருந்ததால் சாப்பிட்ட இலைகளை வீதியில் எறியாமல் குழி வெட்டி புதைத்தார்களாம்.

    பதிலளிநீக்கு
  25. பொக்கிஷத்தில் - ஆடு - மனம் என்னவோ செய்தது.

    தலைமுடி - புன்சிரிப்பு

    கடைசி ஜோக் இங்கு ஏற்கனவே வந்த நினைவு . அதனால என்ன பரவால்ல!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆடு பற்றி யாராவது சொல்வார்கள் என்று எதிர்பார்த்தேன் நீங்கள் சொல்லிவிட்டீர்கள்.

      கடைசி ஜோக் ரிப்பீட்டா ...
      அப்படி போடு.

      நீக்கு
  26. இந்து மத்த்தின் பலமே சுய சிந்தனைகளின் வடிவில் காலத்திற்கேற்றபடி மாறுதல்கள் அடைந்துகொண்டு ஆனால் ஆழ்ந்த கருத்தியலை விடாமல் பற்றிக்கொண்டிருப்பதுதான். அதனால்தான் நேற்று ஒரு வாட்சப் பகிர்வைப் படித்தபோது, கொள்ளுத்தாத்தா காலத்தில் ஆண் 12 வயதில் திருமணம், பெண்ணுக்கு ஐந்து வயது என்று (ஏன்.. இராமாயண காலத்திலேயே இராமருக்கு பதினொரு வயது, சீதைக்கு ஆறோ எட்டோ) அதைவைத்து இந்துமணச் சட்டம் போடவேண்டும் என்று சிந்திக்காமல் காலத்துக்கேற்ற நிலையைக் கைக்கொள்கிறோம். காலம் ஒன்றைக் கண்டுபிடித்தால் அது சரி என்று தோன்றும் பட்சத்தில் உபயோகித்து அதற்கு முன்னிருந்த நடைமுறையை மாற்றிவிடுகிறோம். (செருப்பு, ஆண் பெண் மேலாடை, .... என்று பலவும்)

    அதனால்தான் கிறித்துவ மதமும் நம் நடைமுறைகளை அப்படியே காப்பியடிக்கிறது. வளர முயல்கிறது. இஸ்லாமும் பதினாலாம் நூற்றாண்டில் நடந்ததையே சட்டம் என்று சொல்லி பழைமைப்படக் கூடாது என்று சௌதி மற்றும் துபாய் மன்னர்கள் நினைத்துச் செயல்படுகின்றனர்.

    பதிலளிநீக்கு
  27. ஆறு வயது சீதையும், 14 வயது ராமனுமா அண்ணலும் நோக்கினான்... அவளும் நோக்கினாள் என்று பார்த்துக் கொண்டார்கள்? இதையா கம்பர் அப்படி சொல்கிறார் என்று சிலர் கேட்டிருந்தார்கள் என்று இதற்கு துஷ்யன் ஸ்ரீதர் ஒரு ப்ரவசனத்தில் சில பதில்கள் சொல்லியிருந்தார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வால்மீகி நடந்ததை இதிஹாசமாக எழுதியிருந்தார். கம்பர் அதனை தமிழ் கலாச்சாரத்துடன் ரசனையாக எழுதியிருந்தார். கம்பர் பார்வை ஒரு கவிஞனின் அழகுணர்ச்சி சூழந்த பார்வை என்றே நாம் எடுத்துக்கொள்ளவேணும். துளசி ராமாயணத்திலா என்பது நினைவில்லை, இராவணன் சீதையை எடுத்துச் செல்வதை, இராவணன், அவள் இருந்த குடிசையைச் சுற்றி அம்பால் போட்டிருந்த காப்புடன் பூமியுடன் தூக்கிச் சென்றான் என்று சொல்கிறார். இதெல்லாம் கவிஞர்களின் பார்வை. ஆனால் வால்மீகியின் எழுத்துதான் இதிஹாசம், இது இப்படி நடந்தது என்பதற்கான ஆதாரம்

      நீக்கு
  28. மிருகங்களை அவற்றின் வழியில் வாழ விடாது செய்வது துன்புறுத்தல்தான்.

    நியூஸ்ரைம் பலவித செய்திகளையும் சொல்கிறது.

    பறவைக் கூடு கவிதை நன்றாக உள்ளது.

    திருமணப்பத்திரிகை அக்காலப் பஞ்சத்தை எடுத்துக் காட்டுகிறது. அத்துடன் முதலில் பெண்ணின் பெயர் கார்ட்டில் அச்சடித்திருப்பதையும் கண்டோம்.

    ஜோக்ஸ் மேடையில் "நாற்காலியே போடலை "ரசனை.

    ஆடு.......அய்யோ என்று இருந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மணமகன் யார் என்று பார்த்தீர்களா?

      நன்றி மாதேவி.

      நீக்கு
  29. வணக்கம் சகோதரரே

    இன்றைய வியாழன் கதம்பம் எப்போதும் போல் அருமை.

    முதல் பகுதியில் தங்கள் எண்ணங்களை ரசித்தேன். கிளிகளின் வளர்ப்பு முறைகளை சொன்னது நன்றாக உள்ளது. அது வளர்ப்பவர்களை மறப்பதில்லை மனிதர்களைப் போல.

    செய்தியறை செய்திகள் அனைத்தும் அறிந்ததில்லை. அறிந்திராத சுவாரஸ்யமான செய்திகளை தந்தமைக்கு நன்றி.

    கவிதைகள் அருமை. பறவைகள் இல்லாத கூடுகள். மனிதர்கள் இல்லாத வீடு போல வெறிச்சென உள்ளது. அளவுள்ள அன்பு, பாசம், பற்று..இவை இறைவன் அதற்களித்த வெகுமதி.

    டி.எம் எஸ் அவர்களின் திருமண பத்திரிக்கை. பழைய காலங்களின் சாட்சியாக... இருக்கிறது. அதை பாதுகாத்தவருக்கு பாராட்டுக்கள்.

    நேரு பற்றிய உண்மைகளை அறிந்தேன். பொக்கிஷ பகிர்வுகளை அனைத்தையும் ம் ரசித்துப் படித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா... வழக்கம் போல அனைத்து பகுதிகளையும் படித்து ரசித்து கருத்து சொல்லி இருப்பதற்கு நன்றி. நேற்றே நீங்கள் பின்னூட்டமிட்டும் நான் தாமதமாக பதில் சொல்வதற்கு மன்னிக்க வேண்டுகிறேன்!

      :))

      நீக்கு
  30. நான் லேட்டாக வந்திருப்பதால ஓவராக அலட்ட விரும்பவில்லையாக்கும்:)..
    என்னதான் பழக்கினாலும், நல்லவிதமாக இருப்பினும் நான் கடசிவரை யானைக்குக் கிட்டப் போகவே மாட்டேன்.. எனக்குக் ஹார்ட் நின்றுவிடும்....

    சமீபத்தில் குருவாரூரில் யானைச் சரணாலயமும் போய்ப் பார்த்தோம்... சிலது அமைதியாக இருந்தது, சிலது பொல்லாததாக இருந்தது.. கிட்டத்தட்ட 40 பேர்வரை இருந்த நினைப்பு... சங்கிலியால் கட்டியிருக்கு எனும் தைரியத்தில் சுற்றிப் பார்த்து வந்தோம்..

    பூனை நாய் வீட்டு விலங்குகள்தானே, அவற்றை வளர்ப்பது அவர்களுக்கு நல்லதுதானே... வேளாவேளைக்கு உணவு, மருந்து எல்லாம் கிடைக்குதெல்லோ மனிதரைப்போல...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வீட்டு விலங்குகளை வளர்ப்பதில் தவறில்லை.  தவிர்க்கவும் முடியாது.  ஆனால் அவற்றுக்கும் போதிய சுதந்திரம் கொடுக்க வேண்டும்.  எங்கள் பக்கத்து வீட்டில் ஒரு நல்ல ஜாதி நாயை நான்கடிக்கு இரண்டடி கூண்டில் நாள் முழுவதும் அடைத்து வைத்திருக்கிறார்கள்.  கக்கா, சூச்சூ போவதற்கு மட்டும் அதற்கு விடுதலை.  

      இந்தப் பக்கம் இன்னொரு பொமரேனியனை வீட்டுக்குப் பின்னே இடைகழியில் வெளியில் கட்டி வைத்திருக்கிறார்கள்.  அதற்கும் அதே கதிதான்.  வெய்யிலிலும், மழையிலும் அது வாடுவதைப் பார்க்க பாவமாக இருக்கும்.  

      இந்த இரண்டுமே பரிதாபமாக குரல் கொடுத்துக் கொண்டே இருக்கும்.

      நீக்கு
  31. நியூஸ்ரூம் கருணைக்கொலை மனதை என்னமோ செய்கிறது. இங்கு ஒரு சட்டம் இருக்கிறது, நாம் நல்லபடி இருக்கும்போதே, லோயரிடம் சென்று முறைப்படி எழுதி வைக்கலாம்... அதாவது, எனக்கு சுயநினைவின்றி டிமென்சியா போன்றோ அல்லது உடல் இயங்காமல் போனாலோ , மீள முடியாத நிலைமை எனில் கருணைக்கொலை பண்ணி விடுங்கோ என... அப்படி இருந்தால் பண்ணி விடுவினமாம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கடினமான தருணங்கள். சட்டத்துக்கு வளையத்தெரியாது.

      நீக்கு
  32. கைவிடப்பட்ட கூடுகளில்தானே குயில் முட்டை இடுகிறதாம்.

    பறவைகள்கூட, புதிதாகப் பிறக்கும் குழந்தைக்காக, ஒவ்வொரு தடவையும் புது வீடு கட்டுகிறது, ஆனா மனிசரோ... பரம்பரை வீடு எனும் பெயரில்... பழைய வீட்டிலேயே குழந்தையைப் பெறுகின்றனர் ஹா ஹா ஹா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கைவிடப்பட்ட கூடுகளிலா   குயில் முட்டை இடுகிறது?  காக்கை முட்டைகளுடனே கலந்து இட்டு விட்டு ஓடி விடுகிறது என்றல்லவா படித்திருக்கிறேன்!

      நமக்கெல்லாம் ஆகிவந்த பழைய, பாரம்பர்ய வீடுதான் சரி.  கிடைக்காத சொத்து, சொர்க்கம்.

      நீக்கு
  33. திருமணப் பத்திரிகை, அது யாரோ சும்மா கொம்பியூட்டரில் செய்து பிரிண்ட் பண்ணியிருப்பதுபோல இருக்கு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. OMG... இங்கு இருக்கும் பின்னூட்டங்களை நீங்கள் படிக்கவில்லை என்று தெரிகிறது.  நேரமிருந்திருக்காது.  

      அது TMS அவர்களின் திருமணப் பத்திரிகை.

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!