உளுந்தூர்ப்பேட்டை ஷண்முகம் பாடலுக்கு குன்னக்குடி ஆர் வைத்தியநாதன் இசை அமைக்க, சூலமங்கலம் சகோதரிகள் பாடி இருக்கும் பாடல்.
இதே டியூனை குன்னக்குடி தான் இசை அமைத்த படமொன்றிலும் உபயோகித்திருக்கிறார். மனிதனும் தெய்வமாகலாம் என்கிற படத்தில் சீர்காழி கோவிந்தராஜன் குரலில் வரும் 'காவலுக்கு வேல் உண்டு' என்னும் பாடல்தான் அது. பாடல் வரியைச் சூட்டினால் அதையும் கேட்கலாம்!
வேல் வந்து வினை தீர்க்க மயில் வந்து வழிகாட்ட
கோவிலுக்குள் சென்றேனடி
குமரன் கொலுவிருக்கக் கண்டேனடி
வேல் வந்து வினை தீர்க்க மயில் வந்து வழிகாட்ட
கோவிலுக்குள் சென்றேனடி
குமரன் கொலுவிருக்கக் கண்டேனடி
பால் கொண்டு நீராட்டி பழம்தந்து பாராட்டி
பால் கொண்டு நீராட்டி பழம்தந்து பாராட்டி
பூமாலை போட்டேனடி
பூமாலை போட்டேனடி
திருப்புகழ் மாலை கேட்டேனடி பூமாலை போட்டேனடி
திருப்புகழ் மாலை கேட்டேனடி (வேல் வந்து )
பங்குனியின் உத்திரத்தில் பழனிமலை உச்சியினில்
பங்குனியின் உத்திரத்தில் பழனிமலை உச்சியினில்
கந்தன் எனைக் கண்டானடி கந்தன் எனைக் கண்டானடி
எந்தன் சிந்தையில் நின்றானடி
கந்தன் எனைக் கண்டானடி
எந்தன் சிந்தையில் நின்றானடி
வேலழகும் மயிலழகும் வீற்றிருக்கும் பேரழகும்
வேலழகும் மயிலழகும் வீற்றிருக்கும் பேரழகும்
காலமெல்லாம் இருக்குமடி அந்த காட்சி என்றும் இனிக்குமடி
காலமெல்லாம் இருக்குமடி அந்த காட்சி என்றும் இனிக்குமடி (வேல் வந்து )
=========================================================================================
மஹாகவி காளிதாஸ் மஹாகவி காளிதாஸ் னு ஒரு படம்ங்க... 1966 ம் வருஷம் வெளியானது. சிவாஜி, சௌகார் ஜானகி, முத்துராமன், நாகேஷ்னு பெரிய நடிகர் பட்டாளமே நடிச்ச வாழ்க்கை வரலாற்றுப் படம்.
இதிலிருந்து ஏற்கெனவே இரண்டு பாடல்கள் பகிர்ந்திருக்கிறேன். இன்று கு மா பாலசுந்தரமணியம் எழுதிய கல்லாய் வந்தவன் கடவுளம்மா என்னும் பாடல் கே வி மகாதேவன் இசையில் T M சௌந்தரராஜன். பாடியது.
கல்லாய் வந்தவன் கடவுளம்மா
அதில் கனியாய்க் கனிஞ்சவ தேவியம்மா
புல்லாய் மொளைச்சவ சக்தியம்மா
அதில் பூவாய் மலர்ந்தவ காளியம்மா
மந்தையில் மேய்கிற வெள்ளாடு
அந்தி சந்தைக்கு வந்தால் சாப்பாடு
பந்திக்கு முந்துற பெரும்பாடு
அது படிச்சவன் வகுத்த பண்பாடு
பந்திக்கு முந்துற பெரும்பாடு
அது படிச்சவன் வகுத்த பண்பாடு
கல்லாய் வந்தவன் கடவுளம்மா
அதில் கனியாய்க் கனிஞ்சவ தேவியம்மா
புல்லாய் மொளைச்சவ சக்தியம்மா
அதில் பூவாய் மலர்ந்தவ காளியம்மா
ஆண்டியின் கையில் திருவோடு
தினம் அவனுக்கு வேலை தெருவோடு
இருப்பவன் சண்டை பொருளோடு
இந்த ஏழையின் சண்டை வயிறோடு
இருப்பவன் சண்டை பொருளோடு
இந்த ஏழையின் சண்டை வயிறோடு
கல்லாய் வந்தவன் கடவுளம்மா
அதில் கனியாய்க் கனிஞ்சவ தேவியம்மா
புல்லாய் மொளைச்சவ சக்தியம்மா
அதில் பூவாய் மலர்ந்தவ காளியம்மா
காக்காய் உண்டு நரியுண்டு
வரிக்கழுதைகள் உண்டு புலியுண்டு
மனிதரில் இத்தனை வகையுண்டு
அவர் வாக்கினில் தெரியும் யாரென்று
கல்லாய் வந்தவன் கடவுளம்மா
அதில் கனியாய்க் கனிஞ்சவ தேவியம்மா
புல்லாய் மொளைச்சவ சக்தியம்மா
அதில் பூவாய் மலர்ந்தவ காளியம்மா
காலை வணக்கம்.
பதிலளிநீக்குவாங்க ஜீவி ஸார்... வணக்கம்.
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா அக்கா... வணக்கம், நன்றி.
நீக்குஇரண்டாவது பாடல் அடிக்கடி கேட்ட ஒன்று.
பதிலளிநீக்குபுதுமைப்பித்தன் வரிகள் மாதிரி வார்த்தைப் பகடிகளை அங்கங்கே தூவியிருக்கிறார்.
அவற்றில் 'காக்காய் உண்டு, நரியுண்டு, வரிக் கழுதைகள் உண்டு, புலி உண்டு.. மனிதரில் இத்தனை வகை உண்டு--- the top one!
அவர் வாக்கினில் தெரியாது யாரென்று -
என்று இருந்திருந்தால் இன்னும் அழகாய் இருந்திருக்கும்!
நன்று.
நீக்குஅதேபோல TMS பாடலைத் தொடங்கி எடுக்கும்போதே மேலே உயரத்தில்தான் எடுப்பார்.
உளுந்தூர்பேட்டை ஷண்முகம் என்றால் கேட்க வேண்டுமா?
பதிலளிநீக்குதிருமுருகனின் திருவருளின் பெருமையை இனிக்க இனிக்க சொன்ன பாடல் கேட்ட பாக்யம் பெற்றோம். நன்றி.
நன்றி ஜீவி ஸார்.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய வெள்ளி பாடல் பகிர்வில் முதல் பாடல் அடிக்கடி கேட்டு ரசித்திருக்கிறேன். பாடலின் முதல் வரிகளை படித்ததும் பாடல் மனதிற்குள் ஓடியது. அந்தளவு பிரபலமடைந்த பாடல்தான். சூலமங்கலம் சகோதரிகள் சேர்ந்து பாடிய இனிமையான பாடல்களில் அற்புதமான பாடல் இது. கேட்டு ரசித்தேன். அதிலேயே அது போலவே மற்றொரு பாடல் அதையும் கேட்கிறேன்.
இரண்டாவது திரைப்பட பாடலும் கேட்டது போலத்தான் உள்ளது. பாடலின் வரிகள் நன்றாக உள்ளது.
/காக்காய் உண்டு நரியுண்டு
வரிக்கழுதைகள் உண்டு புலியுண்டு
மனிதரில் இத்தனை வகையுண்டு
அவர் வாக்கினில் தெரியும் யாரென்று/
அருமையான வரிகள். இரண்டையுமே மற்றொர் முறை மறுபடி கேட்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி கமலா அக்கா.
நீக்குமுருகன் திருவருள் முன் நின்று காக்க..
பதிலளிநீக்குவாங்க செல்வாண்ணா.. வணக்கம்.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்கு. /மஹாகவி காளிதாஸ் மஹாகவி காளிதாஸ் னு ஒரு படம்ங்க... /
இல்லையே.. இரு படமாயிற்றே...! ஹா ஹா ஹா. (சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்.) இன்றைய அருமயான பாடல்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ஹா... ஹா... ஹா...
நீக்குஒருவகையில் சரிதான். இரண்டு படம்தான். தெலுங்கிலும் அதே சமயம் எடுத்தார்களாம்! மஹாகவி காளிதாஸுடு!
வேல் வந்து வினை தீர்க்க மயில் வந்து வழிகாட்ட
பதிலளிநீக்குகோயிலுக்குள் சென்றேனடி
குமரன் கொலுவிருக்கக் கண்டேனடி...
இன்றைய சூழலில் இப்படித்தான் வேண்டும்..
முருகா முருகா
முருகா... முருகா...
நீக்கு///காக்காய் உண்டு நரியுண்டு
பதிலளிநீக்குவரிக்கழுதைகள் உண்டு புலியுண்டு
மனிதரில் இத்தனை வகையுண்டு
அவர் வாக்கினில் தெரியும் யாரென்று..///
அந்தக் காலத்திலேயே இப்படியெனில்
இப்போது சொல்ல வேண்டியதே இல்லை..
சிறப்பு..
சில சமயங்களில் உங்கள் பதிவில் படிக்கும்போதோ, பதில் செல்லும்போதோ அடுத்த வாரம் இந்தப் பாடலைப் பகிரவேண்டும் என்று மனதில் படும். அப்படியான ஒரு பாடல்தான் இன்றைய கல்லாய் வந்தவன்
நீக்குமுதல் பாடல் ரொம்ப பிடித்த பாடல் நிறைய கேட்டிருக்கிறேன் ஸ்ரீராம்...இப்பவும் கேட்டுக் கொண்டே ஒரு ஃபைல் செய்தேன்.
பதிலளிநீக்குகீதா
நன்றி கீதா. சீர்காழி பாடல் க்ளிக் செய்து கேட்டீர்களோ...
நீக்குஇரண்டாவது பாடலும் ரசித்த பாடல் அந்த ஆரம்ப இசை, டி எம் எஸ்ஸின் ஆரம்பமே ஹை பிச்....முழுவதுமே இசை அந்த டமுக்கு சத்தம் போல் வருமே அது சூப்பரா இருக்கும்...
பதிலளிநீக்குகீதா
நன்றி கீதா.
நீக்குஓ மை வள்ளியின் வலப்பக்கம் இருக்கும் முருகா....:), முதல் பாடல் என் பாடல்ல்ல்ல்ல் அதை ஆருக்கும் விட்டுக் குடுக்கவே மாட்டேன்ன்.. நான் சின்னனிலிருந்தே, அப்பாடலைப் பாடுவது வழக்கம்... இப்போகூட நினைச்சுக் கொண்டிருக்கும், அப்பாட்டைப்பாடி வீடியோ எடுத்து யூ ரியூப்பில் போடோணும் என, ஆனா "இருப்பதையும் இழந்தாய் போற்றி":)).. என இருக்கிற கொஞ்சநஞ்ச மானமும் போய்விடுமோ எனும் பயத்தில அடக்கொடுக்கமாக இருக்கிறேன் ஹா ஹா ஹா..
பதிலளிநீக்குஎனக்கு மிகவும் பிடிச்ச பாடல்...
2 வது நினைவில்லை கேட்டதாக...
எனக்கு சூலமங்கலம் சகோதரிகள், எல் ஆர் ஈஸ்வரி, சீர்காழி சவுந்...... இவர்களில் பக்திப் பாடல்கள்தான் அதிகம் பிடிக்குது
சூலமங்கலம் சகோதரிகளின் பக்திப் பாடல் பல தடவை கேட்டிருக்கிறேன். பக்தி சொட்டும் பாடல்.
பதிலளிநீக்குஅடுத்தபாடலும் கேட்டிருக்கிறேன். நல்லகருத்துள்ள பாடல்.