திங்கள், 4 நவம்பர், 2024

"திங்க"க்கிழமை  :  கதம்ப இட்லி    -  துரை செல்வராஜூ ரெஸிப்பி 

 கதம்ப இட்லி 

*** *** *** ***

தேவையானபொருள்கள்:

வழக்கம் போல வீட்டிற்கான இட்லி மாவு

பாசிப்பயறு 200 கி
கேரட், பீன்ஸ், 
முட்டைக் கோஸ் இலைகள், பூண்டு, இஞ்சி அனைத்துமாக 200/250 கி
  
மல்லித் தழை சிறிது
கறிவேப்பிலை ஒரு இணுக்கு
கல் உப்பு தேவையான அளவு.


செய்முறை:

ஒருநாள் முன்னதாக பச்சைப் பயறை ஊற வைத்து முளை கட்டி வைக்கவும்..

வழக்கம் போல வீட்டிற்கான இட்லி மாவு தயாராக இருக்கட்டும்..

முளை கட்டிய பச்சைப் பயறை மிக்ஸியில் இட்டு ஒரு சுற்று சுற்றி இட்லி மாவுடன் கலந்து கொள்ளவும்..

கேரட், பீன்ஸ், முட்டைக் கோஸ் இலைகள், பூண்டு இஞ்சி  இவற்றையும், 
மல்லித் தழை கறிவேப்பிலை இலைகளையும்  மிக மிக சன்னமாக நறுக்கிக் கொள்ளவும்..

இவை அனைத்தும் 250 கிராமிற்கு மிகாமல் இருப்பது நல்லது..

இவற்றையும் இட்லி மாவுடன் நன்றாகக் கலந்து தேவை எனில் உப்பு சேர்த்து  இட்லித் தட்டில்   ஊற்றி பக்குவமாக அவித்தெடுத்து வற மிளகாய் இல்லாத தக்காளிச் சட்னி தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.
 
இது காய்கறிகளுடன் அவிக்கப்பட்ட  உணவாதலால் இதயத்துக்கு  இதமானது.. 

பச்சைப் பயறை தோலுடன் அரைத்திருப்பதால் கூடுதலாக நார்ச்சத்தும் புரதச் சத்தும் கிடைக்கும்..

ஃஃஃ

29 கருத்துகள்:

  1. பாசிப்பருப்பு இட்லி சாப்பிட்டிருக்கேன். காய்கறிகளுடன் கூடிய இந்த இட்லியில் ஃபைபரும் இருக்கிறது. உடலுக்கு நல்லது.

    நல்ல செய்முறைக் குறிப்பு, படங்கள் இல்லாமல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் நெல்லை அவர்களுக்கு நல்வரவு..

      தங்களது வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. முரூகன் திருவருள் முன் நின்று காக்க..

    பதிலளிநீக்கு
  3. இன்று இக்குறிப்பினை பதிவு செய்த ஸ்ரீராம் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி..

    பதிலளிநீக்கு
  4. குறிப்பினை மின்னஞ்சலிலும் தொகுப்பு படத்தை வாட்ஸப்பிலும் அனுப்பியிருந்தேன்...

    ஏதோ தவறிவிட்டது போல் இருக்கின்றது..

    பொறுத்துக் கொள்க..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதற்கு படம் வரவில்லை. இதற்கு படம் இல்லை என்று நான் உங்களுக்கு பதிலில் குறிப்பிட்டிருந்தேன் செல்வாண்ணா

      நீக்கு
  5. பதில்கள்
    1. தங்களது வருகையும்
      கருத்துரையும்
      மகிழ்ச்சி.. நன்றி சகோ..

      நீக்கு
  6. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  7. இப்போது படம் இணைக்கப்பட்டு புதிய பொலிவுடன் கதம்ப இட்லி....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படத்தில் உள்ளது ரவா இட்லியா இல்லை பாசிப்பருப்பு இட்லியா என்று கீதா ரங்கன் தெளிவுபடுத்தவேண்டும். ஒருவேளை ராகம் பற்றிய கேள்விகளுக்குத்தான் அவர் பதிலளிப்பாரோ?

      நீக்கு
  8. அருமையான குறிப்பு சத்தான இட்லி, துரை அண்ணா. விளக்கங்கள் குறிப்பாக கிராம் கணக்கில் சொல்லியிருப்பது சூப்பர்!

    நானும் செய்கிறேன் அவ்வப்போது. சிறு தானியங்கள் இட்லியிலும் செய்கிறேன்.

    படமும் நல்லாருக்கு

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது
      அன்பின்
      வருகையும்
      கருத்துரையும்
      மகிழ்ச்சி..

      நன்றி சகோ..

      நீக்கு
  9. சுவையான குறிப்பு. பாசிப்பருப்பு கொண்டு இங்கே சீலா என்று ஒரு பதார்த்தம் தயாரிப்பார்கள். நன்றாக இருக்கும். இட்லி சுவைத்துப் பார்க்கத் தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில்லா கடலை மாவில் செய்யப்படுவது தானே.. டயட்டில் இருக்கும் எனக்கு செய்முறை கொடுத்திருக்கிறார்களே

      நீக்கு
  10. சீலா பற்றிய செய்தி புதிது...

    அன்பின்
    வருகையும்
    கருத்துரையும்
    மகிழ்ச்சி..

    நன்றி வெங்கட்

    பதிலளிநீக்கு
  11. உடல் நலனுக்கு ஏற்ற சத்தான இட்லி செய்முறை அருமை.

    முளைகட்டிய பாசிப்பயறு கலந்திருப்பது சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது
      அன்பின்
      வருகையும்
      கருத்துரையும்
      மகிழ்ச்சி..

      நன்றி மாதேவி

      நீக்கு
  12. பாசிப்பருப்பும் உளுத்தம்பருப்பும் சேர்த்து அரைத்துக் கலந்து இதே போல் காய்கள் சேர்த்து இட்லி பண்ணுவேன். ஆனால் சாப்பிடறவங்க ரசிக்கணும்! :) நம்மவர் இதுக்கெல்லாம் பெப்பே சொல்லிடுவார். மற்றபடி வரகு, கம்பு, சாமை, தினை போன்றவற்றில் இட்லி அடிக்கடி பண்ணுகிறேன். இட்லி மாவிலேயே கேழ்வரகு மாவு கலந்தும் பண்ணிக் கொடுக்கிறேன். அதுக்குக் கொஞ்சம் மதிப்பெண்கள் கிடைக்கும். இன்னிக்குக் கேழ்வரகு மாவிலேயே மோர்க்களி பண்ணினேன். சாப்பிட்டுவிட்டார் ஏன் மோர் மிளகாய் போடலைனும் கேட்டார். தினம் தினம் இது ஒரு பரிக்ஷை. :)))) சில நாட்கள் முழுசாக ஃபெயில் ஆயிடுவேன். :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அக்கா அவர்களுக்கு வணக்கம்..

      நல்வரவு..

      நீக்கு
    2. தங்களது
      அன்பின்
      வருகையும்
      கருத்துரை மற்றும்
      மேல் விவரங்களும்
      மகிழ்ச்சி..

      நன்றியக்கா

      நீக்கு
    3. //இன்னிக்குக் கேழ்வரகு மாவிலேயே மோர்க்களி பண்ணினேன்.// ஒருவேளை கீதா சாம்பசிவம் மேடம், பளிச் என்று ரூமில் லைட் போடாமல், மங்கல் வெளிச்சத்திலேயே கொடுத்துவிட்டதால் அது அரிசி மாவில் பண்ணியதல்ல வேறு ஏதோ திப்பிசம் என்று மாமா கண்டுபிடிக்கமுடியவில்லை போலிருக்கு. அல்லது சாப்பிடும்போது பேச்சுக்கொடுத்துக்கொண்டே இருந்திருப்பாரோ?

      நீக்கு
  13. முளைக்கட்டிய பச்சைப்பயறை அதிகமா சாலடாகக் கொடுக்கிறேன். இல்லைனா தயிரில் போட்டுக் கொடுப்பேன். இந்த இட்லியும் செய்து பார்க்கணும். தம்பி சமையலில் வெளுத்து வாங்கறார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ///முளை கட்டிய பச்சைப் பயறை அதிகமா சாலடாகக் கொடுக்கிறேன்.//

      மிகச்சிறந்த உணவு..

      இங்கே தயிர் மட்டும் சேர்த்துக் கொள்வது இல்லை...

      குவைத்தில் 12 வருடங்களுக்கு மேல் சொந்த சமையல் ஆரோக்கிய சமையல் தான்..

      நீக்கு
  14. வணக்கம் துரை செல்வராஜ் சகோதரரே

    இன்றைய திங்கள் சமையல் பதிவில் தங்களது செய்முறையாகிய கதம்ப இட்லி நன்றாக உள்ளது. நாங்கள் இதுவரை பாசிப்பருப்பு சேர்த்து இவ்விதமான இட்லி சாப்பிட்டதில்லை. இதைப்போல் ஒரு முறை செய்து பார்க்கிறேன். தங்கள் செய்முறை பக்குவத்தை குறித்துக் கொண்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது
      அன்பின்
      வருகையும்
      கருத்துரையும்
      மகிழ்ச்சி..

      நன்றி

      நீக்கு
  15. கதம்ப இட்லி பார்த்ததும் பசிக்கிறது, ஆனா நான் கந்தசஷ்டி பால் பழம் மட்டுமே, அதனால பாரணை முடியட்டும் ஒரு தடவை செய்திடலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //கந்தசஷ்டி பால் பழம் மட்டுமே,//

      முருகா
      முருகா

      நான்
      மிகவும் நலிந்திருக்கின்ற நிலையில் எளிய உணவு தான் எடுத்துக் கொள்கின்றேன்...

      விரதம் என்று இல்லை.

      தங்களது
      அன்பின்
      வருகையும்
      கருத்துரையும்
      மகிழ்ச்சி..

      நன்றி அதிரா..

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!